இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 நவம்பர், 2012

இணைவைப்பவை சிறந்தவையா? இல்லை இறைவனா?


இவ்வுலகைப் படைத்த இறைவன் எவனோ அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். ஆனால் இன்று மக்கள் மூதாதையர்களின் வழக்கம் என்றும் நாட்டு வழக்கம் என்றும் சொல்லி உயிரற்ற உணர்வற்ற படைப்பினங்களை எல்லாம் கண்மூடித்தனமாக வணங்கி வருகின்றனர். இப்பாவமே இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. இவர்கள் சிந்தித்து திருந்தும் பொருட்டு தன் திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கேட்கிறான்:

27:60 (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
(குறிப்பு: படைத்த இறைவன் அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது குர்ஆன். அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)  
27:61. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
27:62. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!
27:63. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழி காட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
27:64. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? ''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக