இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 அக்டோபர், 2019

தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!

Image result for கீழடி
மண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று
மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று..
அறிவியலும் பொறியியலும்
உன் காலடியில் அன்று
அழியாத சுவடுகளாய் கீழடியில் இன்று
தன்னிறைவாய் தலைநிமிர்ந்து நீ நடந்தாய் என்று
கீழடிச் சுவடுகள் கூறுதே இன்று..

தலைவனுக்கும் தலைவிக்கும் சிலை வடித்து அன்று
காலடியில் நீ வீழ்ந்த கதையில்லை அங்கு.
சிலைவணக்கம் சாதி வழக்கம் எதுமில்லை அன்று
சிரவணக்கம் இறைவனுக்கு மட்டுமே என்று
தன்மான உணர்வோடு வாழ்ந்தாய் நீ என்று
கீழடிச் சுவடுகள் கூறுதே இன்று

தனக்குவமை இல்லாதான் தாள்தனையே பணிந்தாய்..
உனைப் படைத்த இறைவன் ஒருவனையே தொழுதாய்..
தன்மான உணர்வோடு தலை நிமிர்ந்து வாழ்ந்தாய்
தரணியாளும் தமிழனாய் நீ வலம் வந்த வேளை
சிலை வணக்கம் புகுத்தியது யார் செய்த வேலை?
தலை குனிந்தாய் தரம் தாழ்ந்தாய்
அடிமையாய் நின்றாய்!
தலை குனிந்தாய் தரம் தாழ்ந்தாய்
அடிமையாய் நின்றாய்!

உலகாளப் பிறந்தவனே உடன்பிறப்பே..
உனைப் படைத்த இறைவன் ஒருவனன்றி
உனையாள ஒருவருக்கும் உரிமையில்லை..
உயிரிலா உருவங்கள் கடவுளாகா
உணர்விலா வடிவங்கள் கடவுளாகா
தான்தோன்றித் தலைவர்களும் கடவுளாகார்
திரை தோன்றி நடிகரும் கடவுளாகார்
மறைந்திட்ட மனிதரும் கடவுளாகார்
மண்ணடியில் சவங்களும் கடவுளாகா
கீழடிக்கும் கீழாக நீ புதைபடும் முன்
உனை உணர்ந்து செயல்பட நீ வா!

‘இன உணர்வு கொள்’ என்று அழைத்தோர்கள்
‘இல்லை கடவுள்’ எனக்கூறி பிழைத்தோர்கள் –
புலிகள் சிறுத்தைகள் பூச்சாண்டிகள்
கொள்கை இல்லா கும்பல்களின்
தொல்லை இனிவேண்டாம் புறப்படு நீ வா!

தரை ஊரும் படர்கொடியா தமிழா நீ?
தலை நிமிர்ந்து தனிமரமாய் நின்றிட நீ வா!
திரைமோகம் உனைக் கெடுத்த விதமிதுவே
கட்சிகள் உனை வளர்த்த கதை இதுவே!
புரை முற்றி மண்மூடி புதைத்திடும் முன்
கரை சேர வழியுண்டு புறப்படு நீ வா!

திரையுலகம் உனைத் தின்று கொழுத்தது போதும்
கட்சிகள் உனை மென்று உமிழ்ந்தது போதும்.
தீண்டாமைத் தீயில் நீ வெந்தது போதும்
சாதிக் கொடுமைகளை சகித்தது போதும்
சாதிக்கப் பிறந்தவனே புறப்படு நீ வா!

தனிமனித உரிமையும் உனக்குண்டு
தரணியாளும் தகுதியும் உனக்குண்டு.
தன்மான உணர்வொன்று இல்லையெனில்....
தனி நாடும் ஈழமும் உனக்கெதற்கு?
தரமான கொள்கையேதும் இல்லையெனில்
தனி நாடே கைவரினும் என்ன பயன்?

தனி இனம் தனி மனிதப் புகழ்பாடி
தரணியாளப் பிறந்தவனே தாழ்ந்து விட்டாய்
தமிழன் என்ற வட்டத்தில் குறுகி விட்டாய்
தரணியெங்கும் வாழ்வது நம் இனமே
தமிழதன் மொழிகளிலே ஓர் மொழியே
தவறுணர்ந்து திருந்திடவே தமிழா நீ வா!

ஒன்றே குலமென்று ஒலித்ததும் தமிழேதான்
ஒருவனே தேவன் என்று ஓதியதும் தமிழேதான்
யாதும் ஊரென்று பாரென்றதும் தமிழேதான்
யாவரையும் கேளிரென்று அணைத்ததும் தமிழேதான்!
பாரெங்கும் உன்னுறவுகள் காத்திருக்க
யார் சொல்லி நீ பிரிந்தாய் தமிழனென்று?

இனியோர் விதி செய்வோம் புறப்படு நீ!
தனியே தமிழனென்று பிரியாமல்
தரணியே நமதென்று வாழ்ந்திடுவோம்!
தனக்குவமை இல்லாதான் தாள் பணிவோம்!
இணையில்லா இறைவன் ஒருவனன்றி
இனி யார்க்கும் தலைவணங்க மறுத்திடுவோம்.
தன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்!
கண்போல மானுடம் காத்திடுவோம்!
உனக்கிழிவு நீங்கிடுமே இமைப்பொழுதில்..
இன இழிவும் நீங்கிடுமே எமைப் போலே!

- உன் இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் 
--------------------- 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 

பொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்!


Image result for பொறுமை

பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலாம். இன்றும் உலக மக்கள்தொகையில் கால்வாசி அவரைக் கண்ணில் காணாமலேயே உயிருக்குயிராக நேசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்வதுதான் – அதாவது இஸ்லாம்தான்- இம்மைக்கு அமைதியையும் மறுமையில் மோட்சத்தையும் பெற்றுத்தரும் என்பதை உறுதியாக அறிந்த நபிகளார் மக்களை எப்பாடுபட்டேனும் காக்கவேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டார்கள். அவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அல்லும் பகலும் சத்தியப் பிரச்சாரத்திற்காகப் பாடுபடலானார்கள். மக்களின் புறக்கணிப்பு அவரைக் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் மக்கள் புறக்கணித்த போதும் பரிகாசம் செய்தபோதும் துன்புறுத்தியபோதும் தன் சத்தியப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அவரது ஆர்வத்தைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
 (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால்இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! (திருக்குர்ஆன் 18:6) 

நபிகளாரின் தொலைநோக்கு
பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதியோடு பாடுபடுபவர்களுக்கு நபிகளாரின் வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது. 
"எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்."(திருக்குர்ஆன் 7:199எனும் இறைக் கட்டளைக் கேற்ப நபிகளார் பொறுமையையும் மன்னித்தலையுமே தன் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள்.  
அவரது இலக்கு மக்களைக் காத்து அவர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கான முயற்சியின்போது அந்த மக்கள் எப்படிப்பட்ட கடுமையான தாக்குதல்கள்  நிகழ்த்தினாலும் அவர் தம் குறிக்கோளில் இருந்து பின்மாறவில்லை.  
உதாரணமாக கீழ்கண்ட சம்பவத்தைப் பாருங்கள்:
= மக்காவிற்கு அருகே இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த தாயிப் நகரில் தனது சத்தியப் பிரச்சாரத்திற்காக சென்ற போது மிக மிகக் கடுமையாக கல்லால் அடித்துத் துரத்தப் பட்டார்கள் நபிகளார். இரத்தம் தோய்ந்த உடலோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்தார் நபிகளார். உடனே தனது வானவர்களை அனுப்பிவைத்தான் இறைவன். ஆணையிடுங்கள் நபியேஉங்களை வேதனைக்குள்ளக்கிய இவ்வூர் மக்களை இம்மலைகளுக்கிடையில் நசுக்கிவிட நாங்கள் தயார்!” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இன்று இவர்கள் ஏற்காவிட்டாலும் இவர்களின் தலைமுறைகளில் இருந்து நாளை நல்லோர் உருவாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள்.
இதை வெறும் பொறுமை என்றால் போதாது. அதி தீவிரமான மனித நேயம் என்றல்லாவா சொல்ல வேண்டும்!
மக்களை அழிப்பதல்ல திருத்தி எடுப்பதே நோக்கம் 
நபிகளார் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்னவென்றால் இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான்தான் நமக்கு எதிரி. பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான்  இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார்.
 தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்துநபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமாஇதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்:  
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களாஎங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா என்று கேட்டோம்.
 அதற்கு அவர்கள்“உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏக இறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டுஅவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டுஅவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும்.
ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும்நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிரழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள்தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி)
ஆம்தர்மத்தை பூமியில் நிலைநாட்ட உறுதியான கொள்கைப் பிடிப்பும் அளவுகடந்த பொறுமையும் தேவை என்பதையே எடுத்துரைக்கிறார்கள்.
------------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
அல்லாஹ் என்றால் யார் ?

செவ்வாய், 22 அக்டோபர், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.
பொருளடக்கம்:
வாழ்க்கை வாழ்வதற்கே.. அடிபணிந்து வாழ்வதற்கே!-2
உயிர்களை நேசிப்போம்-5
நாளைய இருப்பிடம்?  - உங்கள் சாய்ஸ் ! -6
ஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்!-9
 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் -12
இறைவன் ஏன் குறுக்கிடாமல் இருக்கிறான்?-14
வாசகர் எண்ணம் -15
தர்மத்தை நிலைநாட்ட பொறுமையே ஆயுதம் -16
இஸ்லாமிய ஹிஜ்ரீ ஆண்டு எப்படிக் கணக்கிடப்படுகிறது? -18
முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது?-19
முஹர்ரம் பத்தாம் நாள் பண்டிகையா? -22
செங்கடல் பிளந்த சம்பவம்  - திருக்குர்ஆன் தரும் நிரூபணம் – 23

வெள்ளி, 18 அக்டோபர், 2019

இயற்கை வணக்கத்துக்குரியதா?


Image result for கீழடி அகழ்வாராய்ச்சி
கீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ  ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இயற்கையைத்தான் வழிபாட்டு வந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் சிலர்.  சரி, இன்று இஸ்லாம் கற்பிப்பது போல இறைவனுக்கு உருவமேதும் சமைக்காமல் அம்மக்கள் நேரடியாக வழிபாட்டு வந்திருந்தாலும் அங்கும் அதுபோன்று தடயங்கள் கிடைக்க வாய்ப்பில்லைதானே!
எது எப்படியோ... அம்மக்கள் எதை அல்லது யாரை வழிபாட்டு வந்தார்கள் என்ற விவாதத்தை விட்டுவிட்டு எதை அல்லது யாரை வழிபடுதல் அறிவுடைமை என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஆம், வணக்கத்திற்குரியது இயற்கையா அல்லது இயற்கையை உருவமைத்து இயக்கிவரும் இறைவனா என்பதுதான் விவாதப் பொருள்! இயற்கை என்பது தன்னைத்தான் உருவாக்கிக் கொண்டதோ அல்லது தானியங்கியோ அல்ல என்பதை நாம் கவனிப்போமேயானால் இயற்கை அல்ல இறைவனே வணங்குவதற்குத் தகுதியானவன் என்பது புரிந்து விடும். மேலும் இயற்கைக்கு நம் வணக்கத்தை புரிந்துகொள்ளும் சக்தியோ அறிவோ கிடையாது என்பதும் நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் இயல்பும் கிடையாது என்பதும் மிகத் தெளிவான விடயங்கள்.  
இயற்கை என்ற நாத்திகர்களின் ‘கடவுள்’!
இல்லாமையில் இருந்து இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவாயிற்று? இதை இயக்குவது யார்? பரிபாலிப்பது யார்? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் நாத்திகர்கள் அளிக்கும் பதில் "இயற்கை" என்பதே!
'
இயற்கை' என்றால் என்ன என்று பகுத்தறிவு பூர்வமாக விளங்க முற்படாமையே இப்படிப்பட்ட பதிலுக்குக் காரணம். உண்மையில் இயல்புகளின் தொகுப்புக்கே இயற்கை என்று கூறப்படும். எந்த ஒரு பொருளுக்கும் இயல்பு என்பது தானாக வருவதல்ல. பொருட்களின் இயல்பு என்பது அவற்றின் மூலக்கூறுகளின் அளவு, விகிதம், வடிவம், கால அளவு, சூழல், போன்ற பல அளவைகள் (parameters) மற்றும் அவற்றை உருவாக்கும் சக்தியின் அறிவு, திறன், நோக்கம், திட்டமிடுதல், கட்டுப்பாடு போன்ற பலவற்றையும் பொறுத்தே அமைகிறது. அவ்வியல்புகள் அப்பொருளில் நீடிக்க உரிய திட்டமிடுதலும் கட்டுப்பாடும் பரிபாலனமும் (planning, control, maintenance...) போன்ற பலவும் தேவை. எனவே இதை நிகழ்த்த இதற்குப்பின் ஒரு அறிவார்ந்த மதிநுட்பமும் சர்வ வல்லமையும் நிறைந்த சக்தியும் தேவை என்பது தெளிவு.
அறிவியல் இன்றுவரை கண்டுபிடித்துள்ள மிக நுண்ணிய பதார்த்தம் (smallest particle of matter known... eg. quarks, leptons bosons etc) ஆனாலும் சரி இந்த விசாலமான இப்பிரபஞ்சம் ஆனாலும் சரி. இவற்றில் காணப்படும் ஒழுங்கும் கட்டமைப்பும் கட்டுப்பாடு நிறைந்த இயக்கமும் தானாக வரமுடியாது என்பதே பகுத்தறிவு உறுதிப்படுத்தும் பாடம்.
இயற்கையை இயக்கும் தன்னிகரில்லா சக்தி
இதைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை  அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள்,  நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  -  முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்? இதை சிந்தித்தால் சர்வவல்லமை கொண்ட இறைவனே அவன் என்பது புலப்படும். திருக்குர்ஆன் கூறுகிறது:
=  (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன்  எத்தகையவன் எனில்,  அவன்தான் படைத்தான்;  பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்;   மேலும்,  அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)
இல்லாமையில் இருந்து இயற்கையை உருவாக்கியவன்
ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும்  உருவாக்கியவனும்  இல்லாமல் உருவாக முடியாது என்றும் இவை இயங்க தொடர்ச்சியான மின்சாரம் போன்ற இயங்கு சக்தி தேவை என்பதையும் உறுதியாகச் சொல்லும். ஏற்கெனவே கிடைக்கக் கூடிய பொருட்களை சிதைத்து அல்லது உருமாற்றி அவற்றை ஒன்று சேர்த்து முறைப்படிப் பொருத்தி உருவாக்கப் படுபவையே மேற்கண்ட பொருட்கள். இந்த தயாரிப்புக்களுக்குப் பின்னே என்னென்ன அறிவு சார்ந்த நடவடிக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு அறிவார்ந்த உருவாக்குபவன் அல்லது குழு இல்லாமல் இவை உருவாக முடியாது என்றே உறுதியாகச் சொல்வீர்கள்.
ஆனால் அறவே இல்லாமையில் இருந்து அதிபக்குவம் வாய்ந்த பொருட்கள் உருவாகி இயங்கி வரும் அற்புதத்தை மட்டும் தானாக உருவானவை என்று அறிவுள்ள எவராலும் சொல்ல முடியுமா? உருவாகுவது மட்டுமல்ல, தானியங்கியாக அவை தாங்களாகவே இனப்பெருக்கமும் செய்வதைக் கண்டால் இவற்றின் பின்னுள்ள நுண்ணறிவாளனை சர்வ வல்லமை கொண்டவனை எவ்வாறு மறுக்க இயலும்?
= இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19) 
 
= இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)
--------------------
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html

புதன், 16 அக்டோபர், 2019

தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!


Image may contain: one or more people and outdoor

மண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று
மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று..
அறிவியலும் பொறியியலும்
உன் காலடியில் அன்று
அழியாத சுவடுகளாய் கீழடியில் இன்று
தன்னிறைவாய் தலைநிமிர்ந்து நீ நடந்தாய் என்று
கீழடிச் சுவடுகள் கூறுதே இன்று..

தலைவனுக்கும் தலைவிக்கும் சிலை வடித்து அன்று
காலடியில் நீ வீழ்ந்த கதையில்லை அங்கு.
சிலைவணக்கம் சாதி வழக்கம் எதுமில்லை அன்று
சிரவணக்கம் இறைவனுக்கு மட்டுமே என்று
தன்மான உணர்வோடு வாழ்ந்தாய் நீ என்று
கீழடிச் சுவடுகள் கூறுதே இன்று

தனக்குவமை இல்லாதான் தாள்தனையே பணிந்தாய்..
உனைப் படைத்த இறைவன் ஒருவனையே தொழுதாய்..
தன்மான உணர்வோடு தலை நிமிர்ந்து வாழ்ந்தாய்
தரணியாளும் தமிழனாய் நீ வலம் வந்த வேளை
சிலை வணக்கம் புகுத்தியது யார் செய்த வேலை?
தலை குனிந்தாய் தரம் தாழ்ந்தாய்
அடிமையாய் நின்றாய்!
தலை குனிந்தாய் தரம் தாழ்ந்தாய்
அடிமையாய் நின்றாய்!

உலகாளப் பிறந்தவனே உடன்பிறப்பே..
உனைப் படைத்த இறைவன் ஒருவனன்றி
உனையாள ஒருவருக்கும் உரிமையில்லை அறிவாய்..
உயிரிலா உருவங்கள் கடவுளாகா
உணர்விலா வடிவங்கள் கடவுளாகா
தான்தோன்றித் தலைவர்களும் கடவுளாகார்
திரை தோன்றி நடிகரும் கடவுளாகார்
மறைந்திட்ட மனிதரும் கடவுளாகார்
மண்ணடியில் சவங்களும் கடவுளாகா
கீழடிக்கும் கீழாக நீ புதைபடும் முன்
உனை உணர்ந்து செயல்பட நீ வா!

‘இன உணர்வு கொள்’ என்று அழைத்தோர்கள்
‘இல்லை கடவுள்’ எனக்கூறி பிழைத்தோர்கள் –
புலிகள் சிறுத்தைகள் பூச்சாண்டிகள்
கொள்கை இல்லா கும்பல்களின்
தொல்லை இனிவேண்டாம் புறப்படு நீ வா!

தரை ஊரும் படர்கொடியா தமிழா நீ?
தலை நிமிர்ந்து தனிமரமாய் நின்றிட நீ வா!
திரைமோகம் உனைக் கெடுத்த விதமிதுவே
திராவிடங்கள் உனை வளர்த்த கதை இதுவே!
புரை முற்றி மண்மூடி புதைத்திடும் முன்
கரை சேர வழியுண்டு புறப்படு நீ வா!

திரையுலகம் உனைத் தின்று கொழுத்தது போதும்
திராவிடங்கள் உனை மென்று உமிழ்ந்தது போதும்.
தீண்டாமைத் தீயில் நீ வெந்தது போதும்
சாதிக் கொடுமைகளை சகித்தது போதும்
சாதிக்கப் பிறந்தவனே புறப்படு நீ வா!

தனிமனித உரிமையும் உனக்குண்டு
தரணியாளும் தகுதியும் உனக்குண்டு.
தன்மான உணர்வொன்று இல்லையெனில்....
தனி நாடும் ஈழமும் உனக்கெதற்கு?
தரமான கொள்கையேதும் இல்லையெனில்
தனி நாடே கைவரினும் என்ன பயன்?

தனி இனம் தனி மனிதப் புகழ்பாடி
தரணியாளப் பிறந்தவனே தாழ்ந்து விட்டாய்
தமிழன் என்ற வட்டத்தில் குறுகி விட்டாய்
தரணியெங்கும் வாழ்வது நம் இனமே
தமிழதன் மொழிகளிலே ஓர் மொழியே
தவறுணர்ந்து திருந்திடவே தமிழா நீ வா!

ஒன்றே குலமென்று ஒலித்ததும் தமிழேதான்
ஒருவனே தேவன் என்று ஓதியதும் தமிழேதான்
யாதும் ஊரென்று பாரென்றதும் தமிழேதான்
யாவரையும் கேளிரென்று அணைத்ததும் தமிழேதான்!
பாரெங்கும் உன்னுறவுகள் காத்திருக்க
யார் சொல்லி நீ பிரிந்தாய் தமிழனென்று?

இனியோர் விதி செய்வோம் புறப்படு நீ!
தனியே தமிழனென்று பிரியாமல்
தரணியே நமதென்று வாழ்ந்திடுவோம்!
தனக்குவமை இல்லாதான் தாள் பணிவோம்!
இணையில்லா இறைவன் ஒருவனன்றி
இனி யார்க்கும் தலைவணங்க மறுத்திடுவோம்.
தன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்!
தன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்!
உனக்கிழிவு நீங்கிடுமே இமைப்பொழுதில்..
இன இழிவும் நீங்கிடுமே எமைப் போலே!

- உன் இஸ்லாமிய உடன்பிறப்புக்கள்
-------------------------
#இஸ்லாம்_என்றால்_என்ன?

www.quranmalar.com/2012/10/blog-post_25.html