இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 டிசம்பர், 2020

உலகளாவிய சுயமரியாதை இயக்கம்!


 கடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு சிலர் ஒன்று சேர்ந்தால் உடனே அதை "சுயமரியாதை இயக்கம்" என்று பெயரிட்டுக் கொள்வதை நாம் காண்கிறோம். உண்மையில் பெயரளவில்தான் அவர்களிடம்  சுயமரியாதை பேணுதல் உள்ளதே தவிர நடைமுறையில் அதைக் காண முடிவதில்லை. மறைந்த தலைவர்கள் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்தல், தன்னைவிட உயர்பதவியில் அல்லது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலில் விழுந்த வணங்குதல் போன்றவை அவர்களிடம் சகஜமாக இன்றும் இருப்பதை நாம் காண முடிகிறது.  ஆனால் இஸ்லாம் என்ற உலகளாவிய வாழ்வியல் கொள்கை அதனை ஏற்றவர்களை எவ்வாறு பண்படுத்தி வருகிறது என்பதை இங்கு காண்போம். 

மனிதனை மனிதன் வணங்கத் தடை!

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்று கற்பிக்கும் இஸ்லாம் அவன் அல்லாதவற்றுக்கு தலைவணங்குவதையோ பூஜைகள் செய்வதையோ அறவே கூடாது என்கிறது. எல்லாக் காலங்களிலும் இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் இக்கொள்கையையே தத்தமது மக்களுக்கு போதித்தார்கள். ஆனால் பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்கு உருவப்படங்களும் சிலைகளும் உருவாக்கி அவற்றையே கடவுளாக வணங்க ஆரம்பித்தார்கள். நபிகளாருக்கு முன்னர் வந்த இயேசு (அலை) அவர்களும் இதற்கு விலக்கல்ல! ஆனால் இறுதி இறைத்தூதராக இப்பூமிக்கு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பதினான்கு நூற்றாண்டுகள்  ஆகியும் உலகில் எங்குமே உருவப் படமும் சிலையும் கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கலாம். அவரே இறுதித் தூதர் என்பதால் தன்னை மக்கள் ஆராதிக்கக் கூடாது என்பதற்காகக் அதற்குண்டான எல்லா வாசல்களையும் தன் வாழ்நாளிலேயே அடைத்துவிட்டுச் சென்றார்.

காலில் விழத் தடை

 நபிகள் நாயகம் (ஸல்) ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்த நேரம் அது.

  கைஸ் இப்னு ஸஅத் என்றொரு நபித்தோழர், வெளிநாடு ஒன்றிற்கு விஜயம்  செய்திருந்தார்.  தங்களுடைய தலைவருக்கு முன்னால்  அந்நாட்டு மக்கள் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்துவதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.  இப்படி கூட மரியாதை செலுத்தலாம்  என்றிருந்தால்  அதற்கு  மிகவும் தகுதியானவர் இறைத்தூதர் மட்டும்தான் என்று அவர் மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டார்.  ஊர் திரும்பியவுடன் இறைத்தூதரை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். 

ஒரு போதும் அவ்வாறு செய்யலாகாது.  ஒரு வேளை, யாருக்காவது சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்யுமாறு நான் ஆணையிடுவதாக இருந்தால்  பெண்களிடம் தங்கள் கணவர்களுக்கு ஸஜ்தா  செய்யுமாறு  ஆணையிடுவேன்! என்று இறைத்தூதர் கூறினார்.

இன்னோர் அறிவிப்பின் படி, “என்னுடைய அடக்கஸ்தலத்தின் வழியாக நீங்கள் சென்றால் என் கல்லறைக்கு ஸஜ்தா செய்வீர்களா? என்று இறைத்தூதர் கேட்டார்கள்.  இல்லை, மாட்டோம் என்று அவர் பதிலளித்தார்.  அப்படியென்றால் இப்போதும் நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்று இறைத்தூதர் கூறினார்கள்.

இன்னுமொரு சம்பவம்

 இன்னொரு நபித்தோழர் மஆத் சிரியா நாட்டுக்குச் சென்று திரும்பிய போது இறைத்தூருக்கு முன்னால் சிரவணக்கம் செய்தார்கள்.  இறைத்தூதர் திகைப் போடு  மஆதே என்ன இது? என்று கேட்டார்கள். ரோம தேசத்து மக்கள்   தங்கள்   தலைவர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் முன்னால் இவ்வாறு சிரம் தாழ்த்திப் பணிவதை நான் கண்டு வந்துள்ளேன்.  ஆகையால், அது போன்றே தங்களுக்கும் நான் ஸஜ்தா செய்ய ஆசைப்பட்டேன்  என்று அவர் கூறினார்.  அதற்கு அண்ணலார் இறைவனுக்குத் தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது.  அப்படி செய்ய அனுமதி இருந்திருந்தால் தங்களுடைய கணவர்களுக்கு மனைவிகள் சிரம் பணியட்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்எனக் கூறினார்கள்.

 மரணவேளையிலும் எச்சரிக்கை:

அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள் என்று எச்சரித்தார்.

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.

 எழுந்து நிற்கவும் தடை!

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள்.

"எவனொருவன் தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

 இது அவரது எச்சரிக்கை சரி,  நடைமுறை எவ்வாறு இருந்தது? இதோ அதையும் ஒரு நபித்தோழர் கூறுகிறார்கள்:

 'நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட மிக விருப்பத்துக்குரிய எந்த ஒரு மனிதரும் இருக்கவில்லை. இருப்பினும் நபியவர்களைக் கண்டால் அவர்கள் (மரியாதைக்காக) எழுந்து நிற்க மாட்டார்கள். நபியவர்கள் இதனை வெறுப்பதனாலேயே அவ்வாறு எழுந்து நிற்க மாட்டார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

 இவ்வாறு  சுயமரியாதை பேணும் கலாச்சாரத்தை உலகெங்கும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே உருவாக்கிச் சென்றார்

--------------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

அழகிய அறிவுரையால் அடங்கிய வாலிபன்!

 


-    படைத்தவனே இறைவன்,

-    வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை,

-    இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன.

-    இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம்,

-    அங்கு இறுதி விசாரணை நடக்க உள்ளது.

-    நமது புண்ணியங்களுக்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும்.

-    பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்க உள்ளது.

இந்த உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக மனிதனுக்குள் விதைத்து உண்டாக்கப்படும் பொறுப்புணர்வுதான் இறையச்சம் என்று அறியப்படுகிறது.

இந்த உண்மைகளை வெறுமனே போதிப்பதோடு நில்லாமல் அவற்றை சதா நினைவூட்டும் வண்ணமாக ஐவேளைத் தொழுகைதிருக்குர்ஆன் ஓதுதல்வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள்ரமளானில் விரதம் போன்ற இறையச்சம் வளர்ப்பதற்கான பல வழிமுறைகளையும் இஸ்லாம் கற்பித்து நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம் என்பது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு முழுமையான வாழ்வியல் வழிமுறைகளின் தொகுப்பு. இவற்றை ஏற்று வாழும்போது தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் பேணப்படும். அதன் காரணமாக ஒழுக்கம் நிறைந்த சமூகமும் உருவாகும். அவ்வாறு சமூகம் அமையும்போது அங்கு மக்களை குற்றங்கள் செய்வதில் இருந்து தடுப்பதும் எளிதே!

அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நபிகள் நாயகம்(ஸல்) தன் வாழ்நாளில் உருவாக்கிக் காட்டினார்கள். இறையச்சம் கொண்ட ஒரு வாலிபரை எவ்வாறு நபிகள் நாயகம் திருத்தினார்கள் என்பதைக் கீழ்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்:

நபித்தோழர் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று “இறைவனின் தூதரே! எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.

அங்கிருந்த நபித்தோழர்கள் வெகுண்டெழுந்து அவரைத் தாக்கிட முனைந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்” என்பது போன்று சைகை செய்தார்கள்.

பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்தால் அதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.

 ”இல்லைஇறைவனின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார் அவ்வாலிபர்.

 மீண்டும் நபிகள் நாயகம் {ஸல்அவர்கள் “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள்.

பதறித்துடித்தவராக, “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார் அவ்வாலிபர்.

அப்போது நபிகளார் ”அப்படித்தான்நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள்.

மீண்டும் அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயாஉனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.

அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை இறைத்தூதரிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.

அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, “இல்லைஇல்லைஇறைத்தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார்.

அதன் பின்னர்நபிகளார் அவரை நோக்கி சீர்திருத்தும் தொனியில் “உமக்கு எதை நீ விரும்புகின்றாயோஅதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!” என்று கூறினார்கள்.

இதைக் கேட்டதும்அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் “இறைவனின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார்.

அவரை அருகில் அழைத்த நபிகளார்தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, “இறைவா இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

இறுதியாக அந்த வாலிபர் நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது…. “இந்தச் சபையில் நான் நுழைகிற போதுவிபச்சாரம்தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால்இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டது” என்று சொல்லியவாறே சென்றார்.

இந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழர் அபூ உமாமா {ரலிஅவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.” (நூல்: முஸ்னத் அஹ்மத்,)

இது நீதிபோதனை என்ற பெயரில் புனையப்பட்ட கதையல்ல. நிஜம்! மனிதகுலத்திற்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளார் நடத்திய கவுன்செலிங் இது. பாலியல் இச்சைகளைத் தவறான முறையில் தீர்க்க விரும்பும் இளைஞர்களை நபிகளார் நினைவூட்டிய அந்த உண்மைகளை நினைவூட்டி யாரும் திருத்த முயற்சி செய்யலாம்.

செவ்வாய், 29 டிசம்பர், 2020

விமர்சகர்களுக்கு விருந்தாக அழுகிய மாமிசம்!


மாயிஸ் என்ற ஒரு மனிதரை அவர் புரிந்த விபச்சாரக் குற்றம் உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வுலகில் செய்யப்படும் பெரும்பாவங்களுக்கு இவ்வுலகிலேயே அதற்கான தண்டனையைப் பெறாவிட்டால் மறுமையில் இறைவனால் கடுமையாக –நரகத்தில்- தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அவரை மிகவும் வாட்டி எடுத்தது. எனவே தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளும் நோக்கில் நபிகளாரிடம் வந்து முறையிட்டார். தனது குற்றத்தை தானே ஒப்புக்கொண்டு அதற்கான இறை தண்டனையை - அதாவது கல்லெறி தண்டனையை – தன்மீது நிறைவேற்றுமாறு கோரினார். நபிகளாரும் அவரை தீர விசாரித்த பின்னர் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதில் அவர் கொல்லப்பட்டார்.   

இந்நிலையில் தோழர் இருவர் பேசிக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களின் செவிகளில் விழுந்தது.. ஒருவர் சொன்னார் , பார்த்தீரா அவரை! இறைவனே அவரது குற்றத்தை மறைத்து விட்டான். (வேறு யாரும் அவர் செய்ததை காணவில்லை) எனினும் அவர் மனம் விடவில்லை. தாம் நடந்து கொண்டதை பகிரங்கமாக எடுத்துக் கூறியதால் இப்போது நாயை அடிப்பது போல அடித்து சாகடிக்கப்பட்டார் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.

சற்று நேரம் சென்றது. வழியில் ஒரு கழுதை செத்துப்போய் அதன் வயிறு ஊதிய வண்ணம் காலைத் தூக்கிக் கொண்டு பார்ப்பதற்கே அவலட்சணமாகக் காட்சியளித்தது. அதைக்கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னாரும் இன்னாரும் எங்கே? என்று சற்று முன் பேசிக் கொண்டிருந்த அவ்விருவரையும் அழைத்தார்கள். இருவரும் அருகில் வந்தவுடன், ''நீங்கள் இருவரும் அந்தப் பள்ளத்தில் இறங்கி அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தைத் திண்ணுங்கள்!'' என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதும், அதிர்ந்து போன அவ்விருவரும், ''நாயகமே! ((ஸல்)) இதை யாராவது சாப்பிடுவார்களா? என்று பதறிப்போய் கேட்டார்கள்.

 நபி(ஸல்) அவர்கள் அமைதியாக அவர்களிடம், ''நீங்களிருவரும் சற்று முன்னர் உங்களின் சகோதரரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது, அந்த கழுதையின் பிணத்தை திண்பதை விடவும் மிகக் கொடியதாகும். எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது அணையாக இப்பொழுது அவர் (விபச்சாரம் செய்ததற்குப் பரிகாரமாக கொல்லப்பட்டவர்) சுவனத்தின் ஆறுகளில் மூழ்கி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பு: அபூஹுரைரா (அபூதாவூது)

கவனிக்க வேண்டிய விடயங்கள்:

1.      விபச்சாரத்திற்குரிய தண்டனை பெற்றவர் உலகின் கண்களுக்கு கேவலமாகவும்,  இழிவாகவும் காட்சியளிக்கலாம். ஆனால், அவர் தவறிலிருந்து தூய்மை பெற்று விடுகின்றார். மரணத்திற்குப்பின் சுவர்க்கவாசியாகி விடுகிறார் என்பது இங்கே ஒரு முக்கியமான விஷயமாகும்.

2.      ஒருவரைப்பற்றி இழிவாகப் பேசுவது கழுதையின் அழுகிப்போன பிணத்தை திண்பதைவிட கேடுகெட்டதாகும். 

-------------------------------- 

திருக்குர்ஆன்  நற்செய்தி மலர்- 2021 ஜனவரி இதழ் 

htwww.quranmalar.com/2020/12/2021.html


குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அற்புதம்

நபிகளார் இஸ்லாம் கற்பிக்கும் தெளிவான ஏக இறைக் கொள்கையையும் மறுமை கோட்பாட்டையும் மக்களிடையே போதிக்க போதிக்க மக்கள் இவ்வுலக வாழ்வை மறுமை வாழ்வோடு இணைத்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக மக்கள் தாங்கள் வழக்கமாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்து கொண்டிருந்த தீய செயல்களில் இருந்தும் பாவங்களில் இருந்தும் விலகி வாழ்ந்தார்கள். இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான், தங்களின் செயல்கள் பற்றி இறுதித்தீர்ப்பு நாளில் விசாரணையும் புண்ணியங்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட உள்ளன என்ற உணர்வு அவர்களை முழுமையாக ஆட்கொண்டது.

அப்படியே பாவங்கள் செய்தாலும் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி அவற்றிலிருந்து மீண்டார்கள். ஆனால் பெரும்பாவங்களுக்கு பாவமன்னிப்பு கோருவதோடு அதற்காக இறைவன் விதித்துள்ள தண்டனைகளை இவ்வுலகிலேயே பெற்றால்தான் மறுமை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது! உதாரணமாக திருட்டுக்கு கைவெட்டுதல், விபச்சாரத்திற்கு சாட்டையடி அல்லது கல்லெறி தண்டனை, கொலைக்குக் கொலை, உறுப்புக்கள் சிதைப்பவனுக்கு உறுப்பு சிதைதல் போன்ற தண்டனைகளை இஸ்லாம் அரசுக்கு பரிந்துரைக்கிறது. மறுமை தண்டனைகள் இவற்றைவிட மிகக் கடுமையானவை என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கின்றன. உதாரணமாக..

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30.

= .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்: (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்.  மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

இந்நிலையில் பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்தார்கள்? கீழ்கண்ட நிகழ்வு அதற்கான ஓர் உதாரணம்:

மனிதநேய நீதிபதியாக நபிகளார்

நபிகள் நாயகம் மதீனாவில் இறைத்தூதராக இருந்து அரசாட்சி செய்த காலகட்டம் அது.  

நபி (ஸல்) அவர்களின் திருச்சபையில் மாயிஸ் என்ற தோழர் வந்து, தான் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாகச் சொன்னார். அவரின் சொல்லை நபிகளார் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள். எனவே அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். நான்கு தடவை சொல்லி முடித்தார். அப்பொழுதும் நபிகளார் எதுவும் பேசவில்லை.

ஐந்தாவது முறை அவர் சொல்லும்போது அவரிடம் நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா? என்று கேட்டார்கள்.

ஆம்! என்றார் அவர். 

உன்னில் நின்றும் அது அவளின் நின்றும் அதிலே மறையுமளவுக்கு நடந்தீரா? என்று மீண்டும் வினவினார்கள்.

மறுபடியும் ஆம்! என்றார் அவர்.

அப்பொழுதும் அவரை குற்றவாளி என்று ஒப்ப நபி(ஸல்) அவர்களுக்கு மனம் வரவில்லை. மேலும் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள்.

சுர்மா புட்டியிலே சுர்மா குச்சி மறைவது போலவும், கிணற்றுக்குள்ளே கயிறு மறைவது போலவும் மறைந்ததா? என்று கேட்டார்கள்.

ஆம்! என்றே மறுபடியும் அவர் கூறினார்.

விபச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா? என்று கேட்டவுடன், அவர் விஷயத்தை படு பயங்கரமாக வெளிப்படுத்த விரும்பியவராக, ஆம்! ஓர் ஆண்மகன் தன் மனைவியுடன் ஹலாலாக(சட்டாபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில்) நடந்து கள்வானே அதே காரியத்தை அப்பெண்ணுடன் நான் ஹராமாக(சட்டவிரோதமாக) நடத்தி விட்டேன் என்றார்.

இவ்வாறு சல்வதன் மூலம் உமது நக்கம் யாது? என்று இறுதியாகக் கேட்டார்கள்.

(இக்குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றுவதன் வாயிலாக) என்னை தூய்மைப்படுத்திக் கள்ள விரும்புகின்றேன் என்று அவர் பதிலளித்தார்.

தாம் செய்த குற்றத்தை தாமே மனமுவந்து விண்ணப்பித்து, தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அவருக்கு விபச்சாரத்திற்குரிய கல்லெறி தண்டனையை நிறைவேற்ற அண்ணலார் (ஸல்)அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி நிறைவேற்றப்பட்டது.

அறிவிப்பு: அபூஹுரைரா (அபூதாவூது)

கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

1.      இறைவனின் இறுதித் தூதர் என்ற முறையில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் மனித குலத்திற்கு வாழ்க்கை முன்மாதிரியாக கற்பிக்கப் படவேண்டியவையாக உள்ளன. குறிப்பாக இந்த நிகழ்வில் ஒரு நீதிபதி எவ்வாறு வழக்கை விசாரிப்பது என்பதற்கும் மனம்திருந்தி வந்த குற்றவாளிகளோடு எவ்வாறு நடந்துகொள்வது என்பதற்கும் முன்மாதிரிகள் உள்ளன. எனவே அவை தெளிவான முறையில் பதிவு செய்யப்பட்டு நபிமொழித் தொகுப்புகளில் பாதுகாக்கப்பட்டு வருவதை நீங்கள் காணலாம். இது இறைவனின் ஏற்பாடு.

2.      மேற்படி சம்பவம் ஒரு மனிதரின் வாழ்வா சாவா என்பது தொடர்பானது. ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்பதாலும் மனம் திருந்தி வந்த தோழரை எப்படியாவது மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தன் ஆர்வத்தாலும் கருணை நபிகளார் முழு விவரத்தையும் துருவித்துருவி விசாரித்ததை நாம் கவனிக்கலாம்.

3.      இனி சிலருக்கு இப்படியும் ஒரு சந்தேகம் எழலாம். ‘மனம்திருந்தி வந்த குற்றவாளியை மன்னித்து தண்டனையிலிருந்து நபிகளார் விலக்கு அளித்து இருக்கலாமே? ஏன் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்?’. இதற்கான விளக்கம் இதுதான்: பூமியில் மக்களிடையே ஒழுக்க வாழ்வை நிலைநாட்டுவதற்காக இறைவன் விதித்தவையே அவன் தரும் சட்டங்கள். அதை முன்னுதாரணமாக நின்று நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இறைத்தூதர் என்ற முறையில் நபிகளாருக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஒருவேளை நபிகளார் சுயவிருப்பத்தின் அடிப்படையில் விலக்கு அளித்திருந்தால் அதையே மேற்கோள்காட்டி பிற்கால தலைமுறையினர் விபச்சார குற்றவாளிகளை தண்டனையிலிருந்து விடுவித்து இருப்பார்கள். இறைசட்டங்கள் வீரியம் இழந்தவையாகி விபச்சாரக் குற்றங்கள் பெருக வாய்ப்பாகி விடும்.

-------------------------------------------