இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 மார்ச், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல்2021 இதழ்


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல்2021 இதழ் 

பொருளடக்கம்;

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை!-2
பதவி ஏற்றவர்களுக்கு இறை எச்சரிக்கைகள் -4
அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்! -16
மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர் -18
உத்தம அரசியல் காண்போம்! -6
வளமிக்க நாட்டில் ஏனிந்த அவலம்? -7
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! -10
சீர்திருத்தத்தின் அடிப்படை -10
தனி மனித சீர்திருத்தம் எவ்வாறு? -12
இறையச்சம் ஏற்படுத்தும் புரட்சிகள் -14
ஆட்சியாளர்களுக்கு இறையச்சம் வந்துவிட்டால் ..? -15
ஊதியக் குறைவு கோரிய ஜனாதிபதி! -19
காலிப்பானையும் கலீஃபா உமரும்! -20
சரித்திரம் உமரை நினைத்து ஏன் ஏங்குகிறது?-23
உத்தம அரசியலுக்கு இறை சட்டங்கள்! -24

வெள்ளி, 19 மார்ச், 2021

போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!


இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்புபவர்கள் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்துக்கொள்ள விழைகிறோம். இவை பேணப்படும் பட்சம் இறைநம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மட்டுமல்ல இறைவனின் பொருத்தமும் ஆசியும் நீங்கள் பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு அமையும் என்றும் நம்புகிறோம்.

1) நாடும் அதில் உள்ளதும் இறைவனுடையதே!

நாட்டுக்கும் நாட்டு வளங்களுக்கும் மக்களுக்கும் உரிமையாளன் இறைவனே. இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனே. ஆகவே நம் ஒவ்வொரு செயலுக்கும் அந்த இறைவனுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

= வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன். (திருக்குர்ஆன் 24:64)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

2) குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு:

மனித குலம் அனைத்தும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்ற அடிப்படையில் இங்கு வாழும் குடிமக்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற அடிப்படையை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

அவர்களின் மதம், நிறம், மொழி, பொருளாதார நிலை போன்றவை வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதையும் அவர்கள் அனைவருக்கும் இந்நாட்டு வளங்களிலும் அரசு வழங்கும் வசதிகளிலும் நியாயமான உரிமைகள் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது. முக்கியமாக குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதை சரிவர நிறைவேற்றா விட்டாலோ ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாலோ அத்துமீறினாலோ அவற்றுக்கான தண்டனைகள் நிச்சயமாக இறைவனிடம் கிடைக்கும்.

3) ஏற்றுக்கொண்ட பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவீர்கள்!

ஆட்சிப்பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகும். நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சொந்தமாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்க இருப்பதால் அதிகம் அதிகமாக இப்பொறுப்பு பற்றி இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.

= நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நபிமொழி நூல்: புகாரி )

4) பொது சொத்துக்கள் கையாளுதல்:

நாட்டு வளங்களும் அரசின் வருமானங்களும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலையில் இவற்றை முறையாக கைகாரியம் செய்தால் கண்டிப்பாக அதற்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. மாறாக சுயநலத்துக்கு ஆட்பட்டு இவை வீண்விரையமோ அபகரிப்போ செய்யப்படுமானால் மோசடி செய்யப்பட்ட அந்த பொருட்கள் சகிதம் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (லி) அவர்கள் நூல் : புகாரி (6177)

செவ்வாய், 9 மார்ச், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 21 இதழ்

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 21 இதழ் 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 21 இதழ் 

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்கு ஒருவருட சந்தா இலவசம்.



பொருளடக்கம்:
இறைவழிகாட்டல் ஏன் தேவை? -2

மனிதகுலத்தைக் காக்க வந்தவர்களே இறைத்தூதர்கள்!-4

- நபிகளார் எடுத்த பொறுமை என்ற ஆயதம் -5
https://www.quranmalar.com/2018/07/blog-post_9.html
- முஹம்மது நபி அவர்களின் வாழ்வும் போதனைகளும் -6
https://www.quranmalar.com/2021/03/blog-post.html
-இதற்காகவா அந்த மாமனிதரைத் தாக்குகிறீர்கள்? -10
http://quranmalar.blogspot.com/2013/05/blog-post.html
-தர்மத்திற்கு எதிரானவர்களின் இறுதி நிலை -12
- நபிகளாருக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரமும் சித்திரவதைகளும் -9
-நபிகளார் என்ற நற்குண நாயகர் -13
-திருந்தாத மக்களுக்காக அதிகம் வருந்தியவர் -14
-நபிகளாருக்கு அகிலத்தின் அதிபதியின் நற்சான்றிதழ்! -15
-மனிதகுல பாதுகாப்பே மாமனிதரின் இலக்கு! -16
-ஒப்பிடமுடியாத சாதனையாளர் நபிகளார்! - லாமார்டின் -18
-பதவி வந்தபோது பணிவு!- 19
http://quranmalar.blogspot.com/2014/11/blog-post_20.html
-அண்ணலாரைப் பரிகசித்தவர்கள் என்ன ஆனார்கள்? -20
-இன்றைய நாள் எதிரிகளுக்கும் இறை எச்சரிக்கை 22
-மக்களை அழிப்பதல்ல சீர்திருத்துவதே இலக்கு! -23
-வாசகர் எண்ணம் -24
----------------------- 

இந்த இதழை கீழ்கண்ட லின்கிலும் சென்று வாசிக்கலாம்:

https://drive.google.com/file/d/181ccxrQvzEF_4BJBqgjzeJjfz3-bASwm/view?usp=sharing


முஹம்மது நபி அவர்களின் வாழ்வும் போதனைகளும்

 பிறப்பும் சூழலும்:

சவுதி அரபியாவில் மக்கா நகரில் அன்றைய உயர்குலம் ஒன்றில் கிபி 670 இல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை  சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும்தான் இருந்தார்கள்.   ஆனால் தாம் வாழ்ந்த மக்களிடையே உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள். மக்கள் அவரை அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்)) என்ற பட்டப்பெயர் கொண்டு மதிப்போடு அழைத்தார்கள்.


 ஆனால் அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். மக்காவில் இன்று காணப்படும் சதுர வடிவான கஅபா என்ற இறையில்லம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் இப்ராஹீம் (ஆப்ரஹாம்) என்ற இறைத் தூதரால் ஏக இறைவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். ஆனால் காலப்போக்கில் அதற்குள் 360 சிலைகள் நிறுவப்பட்டு  தினம் ஒரு சிலைக்கு வழிபாடு என்றவாறு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர். குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. 
பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்தல்:
  பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள். பெண்களை வெறும் போகப்பொருளாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் இவைபோன்ற பல அனாச்சாரங்களும் அங்கே தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.

இறைத்தூதராக நியமிக்கப்படுதல்

 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க இவற்றுக்கான தீர்வுகளுக்காக அவரது மனம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். தனிமையில் இறை நினைவில் நாட்களைக் கழித்தார்கள். இப்படிப்பட்ட வேளையில்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.

முதன் முதலாக இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்கள் இவையே:

 (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (திருக்குர்ஆன் 96:1-5)

இவற்றைத் தொடர்ந்து வந்த இறைக் கட்டளைகளின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று மக்களிடையே பிரகடனம் செய்தார்கள். இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

மக்களுக்கு செய்த போதனைகள்:

= இந்த உலகம் இறைவனால் படைக்கப் பட்டது. இங்கு வாழும் மனிதர்கள் யாவரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழக் கடமைப் பட்டுள்ளார்கள் . அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் நீதியும் அமைதியும் ஏற்படும். மறுமையிலும் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும். அவ்வாறு இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்தலே இஸ்லாம் எனப்படுகிறது.

= ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை பிறப்பிக்கப் படும்போது இவ்வுலகின் மீது வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். அன்று ஒவ்வொரு மனிதர்களும் இப்பூமியின் மேல் செய்த ஒவ்வொரு பாவமும் புண்ணியமும் எடுத்துக்காட்டப்பட்டு விசாரிக்கப் படுவார்கள். விசாரணைக்குப் பிறகு புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப் படும். எனவே இறைவனின் கட்டளைகளை ஏற்று அவன் ஏவியவற்றைச் செய்யுங்கள். தடுத்தவற்றில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

= இறைவனின் கட்டளைகளில் முக்கியமானது அந்த ஏக இறைவன் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன் என்று ஏற்றுக் கொள்வதாகும். அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்க வேண்டும். அவன் அல்லாத எதையுமே கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. அவனுக்கு பதிலாக சிலைகளையோ உருவங்களையோ வணங்குதல் பெரும் பாவமாகும்.

= அனைத்து மனித இனமும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே. மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல் சமமானவார்களே. இனத்தாலோ, குலத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் அல்ல.

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

= இறைவனின் பொருத்தத்தைப் பெற்று நாளை மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும். இறைவன் கற்பிக்கும் நற்காரியங்களை செய்யவும் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒத்துழைக்கவும் வேண்டும்.

இவ்வாறு தான் இறைவனிடமிருந்து பெறும் செய்திகளை மக்கள் முன் எடுத்துரைத்து சத்தியப் பிரச்சாரத்தை துவங்கினார் நபிகள் நாயகம் (ஸல்).