இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இஸ்லாம் புதியது அல்ல!

Related image
 இந்த வீடியோவில் சொல்லப்படும் அனைத்து  மனித குலத்திற்கும் பொதுவான அறிவுரைகளைத்தான்  இன்று இஸ்லாம் மறு அறிமுகம் செய்கிறது. முஹம்மது நபியவர்கள் புதிதாக ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ  போதிக்கவில்லை.  அவருக்கு முன்னர் இந்த பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற அதே இறைநேறியைத் தான் மீண்டும் போதித்து அதன் மூலம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட உலகமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.  ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பது உண்மையானால் அந்த ஒரே இறைவன் ஒரே மார்க்கத்தைத் தானே போதிப்பான்? அதுதான் இன்று இஸ்லாம் என்று அறியப்படுகிறது




ஆனாலும் இன்று ஏன் இஸ்லாம் தவறான ஒளியில் ஊடகங்களில் சித்தரிக்கப் படுகிறது?
ஸ்ரீ  இஸ்லாம் உலகளாவிய மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது இனத்தின், நிறத்தின், குலத்தின் மேன்மைகளைக் கூறி மக்களைப் பிரித்து சுரண்டி வாழ்வோரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை!
ஸ்ரீ  படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!
ஸ்ரீ  உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது.
ஸ்ரீ  நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.

 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
இஸ்லாம் என்ற உலகளாவிய இயக்கத்தில் மக்கள் இணைய இணைய இதன் வளர்ச்சி  வல்லரசு - கலோனிய - ஏகாதிபத்திய- சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.  இந்த  வளர்ச்சியின்  காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த ஆதிக்க  சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள்.   இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கிய நாள் முதலே இந்த நாடுகளின் எண்ணெய் வளங்களையும், நிலத்தடி வளங்களையும் இயற்க்கை வளங்களையும் காலாகாலமாக நடத்திவரும் கொள்ளையும், தங்களின் ஆயுத  விற்பனைக்காக எண்ணைவள நாடுகளுக்கு இடையே வெறுப்பு அரசியல் விதைத்து இவர்கள் நடத்திவரும் போர்களும், வட்டி சார்ந்த பொருளாதார ஏற்பாடுகள் மூலம் உலக நாடுகளின் சம்பாத்தியங்களை உறிஞ்சும் சதியும் என அனைத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியால் தடைபடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். 

இஸ்லாத்திற்கு எதிரான தந்திரங்கள், சூழ்ச்சிகள் 
இந்த இஸ்லாமிய எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் கையாளப் படுகின்றன.
ஸ்ரீ தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவோரை கிளர்ச்சி யாளர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறை களுக்குள் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்துதல்.
ஸ்ரீ இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுத பலமளித்து அவர்களைக் கொண்டே கலவரங்கள் மூட்டியும் பயங்கரவாத தாக்குதல்கள்,குண்டு வெடிப்புகள் போன்றவை நடத்தியும்  இஸ்லாமி யர்களைக் கொல்வது, அதன்மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும்  பற்றி தப்பெண்ணம் உருவாக்குவது.
ஸ்ரீ தன் கையாட்களைக் கொண்டு இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிப்பதற்காக திரைப்படங்கள், கதைகள் புனைந்து அவற்றை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி இஸ்லாத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல்.
  இன்னும் இவைபோன்ற பலதும் செய்யப்பட்டாலும் இந்த இறைவனின் மார்க்கம்  தடைபடாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. (www.pewresearch.org)
 ஆனால் உண்மையில் இஸ்லாம் எந்த ஒரு உயிரையும் அநியாயமாகக் கொல்வதோ துன்புறுத்துவதோ கூடாது என்று வன்மையாகத் தடுக்கிறது. அப்பாவிகளைக் கொல்வதும் துன்புறுத்துவதும் பெரும் பாவம் அதை ஒரு முஸ்லிம் செய்தாலும் முஸ்லிம் அல்லாதவர் செய்தாலும் மறுமையில் அதற்கு நரக தண்டனை உண்டென்று எச்சரிக்கிறது குர்ஆன்:
 = எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)

மனிதனை மனிதனுக்கு எதிரியாக்கி ஏதேனும் ஒரு நாட்டையோ இனத்தையோ உயர்த்தவோ அழிக்கவோ வந்ததல்ல இஸ்லாம். மாறாக மனித மனங்களை பண்படுத்தி  அதன்வழி உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சுயசீர்திருத்த இயக்கமே இஸ்லாம் என்பதை விளங்கும்போது இன்றைய எதிரிகள் நாளை இதன் சேவகர்களாகவும் காவலர்களாகவும்  மாறுவார்கள் என்கிறது வரலாறு!

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்  
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 17 இதழ்

 
திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 17 இதழ்
இதன் மின் பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் வாசிக்கலாம்
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusTlpQMlhpSU1iRjg/view?usp=sharing

புதன், 20 செப்டம்பர், 2017

மீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்!


 ஒரு கார் அல்லது மொபைல் எவ்வளவு நுணுக்கங்களைக் அதன் பின்னால் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை மனிதன் உருவாக்கும் நிலையை அடைவதற்கு மனித குலத்திற்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டது. அதே கார் அல்லது மொபைல் அல்லது ஒரு ரோபோ தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்யும் ஒரு செயலை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?  அப்படியென்றால் எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா? 
= இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனு க்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19) 
 = இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)

நம் உடலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்... முதன்முறைப் படைக்கும்போதே அவை தானியங்கியாகவே தங்கள் சந்ததிகளையும் வழிவழியாக உருவாக்கிக்கொள்ளும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் இன்னும் நம் கண்களுக்குப் புலப்படுவதும் புலப்படாததுமான எண்ணிலாப் படைப்பினங்களும் தங்களைத் தாங்களே இனவிருத்தி செய்து கொள்ளுதல் என்பது தற்செயலான ஒன்றா?
ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை – அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  -  முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்?

 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

இவ்வாறு படைப்பினங்களுக்குரிய இனப்பெருக்கத்திற்கான திட்டமிடலும் நிர்ணயித்தலும் மூலப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில்  ஒன்றுசேர்த்தலும் அளவைகள் மாறாமல் கட்டுப்படுத்துவதும் ... என எவ்வளவோ செயல்பாடுகள் தற்செயலாக நிகழ்ந்து விடுமா? ஆம் என்று நம்பும் நாத்திகர்களை நாம் பகுத்தறிவுவாதிகள் என்று கூற முடியுமா?
இந்தக் கேள்வி ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தச் செயல்பாடுகளில் எதையுமே நிகழ்த்தாத ஆறடி உயரம் கொண்ட அற்பமான மனிதர்களையும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒப்பாக்கும் ஆத்திகர்களை தங்கள் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய அழைக்கிறான் உண்மை இறைவன்.

கடவுளர்களைப் பரீட்சித்துப் பாருங்கள்!
இறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் மனிதர்கள் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்து அவை வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவைதானா என்று ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறான்:
 = “நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும். (அவர்களுக்கு) நீர் கூறும்: அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?”(திருக்குர்ஆன் 10:34)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இப்பிரபஞ்சத்தில் காணும் எண்ணற்ற உயிருள்ளதும் அல்லாததுமான படைப்பினங்களை படைத்தலும் அவற்றை அதிபக்குவமாக இயக்குதலும் அவற்றை மீண்டும்மீண்டும் படைத்தலும் எல்லாம் இறைவன் ஒருவனால் மட்டுமே சாத்தியம் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் மக்கள். எனினும் இந்தப் படைப்புப் பணியில் எந்த ஒரு பங்கையும் செலுத்தாதவற்றை கடவுளாகக் கற்பனை செய்து எப்படி ஏமாறுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான் இறைவன்.