இந்த வலைப்பதிவில் தேடு

நாட்டுப்பற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டுப்பற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்!

பாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். 
 மன்னர்களும் மன்னர்களின் பரம்பரைகள் மட்டுமல்ல, திறமையுள்ள எந்தப் பாமரனும் ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்பதை உலகில் முதன்முதலாக விதியாக்கியது இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாயகமே என்பதை ஆராய்வோர் அறியலாம்!  

அரசியலுக்கு புது இலக்கணம் 

நாடும் மக்களும் நாட்டு வளங்களும் அனைத்தும் மன்னனுக்கே சொந்தம் என்ற எழுதப்படாத விதியையும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ என்ற மரபுகளையும் மாற்றி அமைத்தது இஸ்லாத்தின் வரவு! நாடும் மக்களும் மட்டுமல்ல, உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்றும் மனிதனிடம் தற்காலிகமாக வழங்கப்படுவதே ஆட்சியதிகாரம் என்று அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம். அரசனாயினும் ஆண்டியாயினும் அவரவர்க்கு இவ்வுலகில் இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்ற உண்மையை நினைவூட்டி அதை அரசியலுக்கு அடிப்படையாக்கியது இஸ்லாம்! 

நபிகளார் நிறுவிய சமத்துவ அரசாங்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆன்மீகத் தலைமையும் ஆட்சித் தலைமையும் அன்னாரது இறுதிக் காலத்தில் கைவந்தது. அன்றுவரை இருந்து வந்த அரசர்களின் அல்லது ஆட்சியாளர்களின் நடைமுறைகளை இஸ்லாமிய நடைமுறை மூலம் மாற்றிக் காண்பித்தார் நபிகளார். 

= பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே அரபு நாட்டு அரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன.  அரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங்களில் பெருமைமிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதை இஸ்லாம் ஆட்சிக் கட்டில் ஏறியபின் தடுத்து நிறுத்தப் பட்டது.

= அரசவைக்கே அணிகலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும் இல்லாது போயின. 

= ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடைமுறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின. 

= ஆட்சியாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர். 

= அரசன் விதிப்பதே சட்டம் என்ற நிலைமாறி இறைவன் விதிப்பதே சட்டம் என்ற நிலை அமுலுக்கு வந்தது.

= கோத்திரத்துத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, அல்லது அவர்களிடம் இருந்த வீரமறம், வள்ளல் குணம் போன்றவற்றை முன்வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆயினும்கூட, மற்ற மக்களுக்கு இல்லாத ஏராளமான சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.  கோத்திரத்துத் தலைவர்களின் கால்நடைகளுக்கென்று தனி மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் யாரும் அதில் காலைக்கூட வைக்க முடியாது.  இந்த சடங்கையும், தவறான மரபையும் அடியோடு ஒழிப்பதற்காகத்தான் இறைத்தூதர் (ஸல்) கீழ்வருமாறு அறிவித்தார்கள். “இறைவனையும் இறைத்தூதரையும் தவிர மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை!” 

= போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்ற மக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக்கென்று சிறப்புப்பங்கு இருந்தது. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஐந்தில் ஒரு பங்கு என்ற நடைமுறையை இஸ்லாம் கடமையாக்கியது. 

= பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப்படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இக்குறையைப் போக்க ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர். 

சட்டத்திற்கு முன் சமநிலை: 

அந்த காலகட்டத்தில் ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரசவையை சார்ந்தவர்களும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல எந்த சட்டத்திற்கும் எட்டாத தூரத்தில் இருந்தார்கள். சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது.  ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூதர் இடத்திலும் அவருடைய வீட்டார்களிடத்திலும் தான் முதன் முதலில் சட்டம் செயல்படத் தொடங்கும். இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான். 

உதாரணமாக, வட்டி வியாபாரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட போது தன்னுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு வரவேண்டிய வட்டி நிலுவைத் தொகை அனைத்தையும் இறைத்தூதர் தள்ளுபடி செய்து விட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்து தொடரும் மோதல்களுக்காக இனிமேல் யாரும் பழிதீர்க்கக் கூடாது என்கின்ற ஆணை அமுல்படுத்தப் பட்டபோது தம்முடைய சொந்த கோத்திரத்தின் சார்பில் எல்லா வகையான வழக்குகளிலும் பழி வாங்குதலை கைவிடுவதாக இறைத்தூதர் அறிவித்தார்கள்.

"என் மகள் பாத்திமாவே திருடி இருந்தாலும் அவளது கையையும் வெட்டுவேன்" என்று சூளுரை பகர்ந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்).

------------------------ 

நாட்டைக் காப்போம்நாட்டு மக்களை நேசிப்போம்!
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

செவ்வாய், 23 ஜூன், 2020

ஆட்சியாளர்களுக்கு விசாரணை உறுதி!


நாட்டுப்பற்று என்பது என்ன?
Petition to PM Modi to take responsibility of transporting migrant ...

உண்மையான நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்பது அந்நாட்டில் வாழும் மக்களை ஜாதி,மத, மொழி, நிற பேதமின்றி அவர்களை உளமாற நேசித்தலும் அவர்களுக்கு நேரும் இடுக்கண்களைக் களையப் பாடுபடுதலும் ஆகும். இதைச் செய்யாமல் அந்நாட்டின் மண்ணை முத்தமிடுவதிலோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறை கொடிஏற்றி வணக்கம் செலுத்துவதிலோ அல்லது சில கவிதை வரிகளை அல்லது பாடல்களை உரக்கப் பாடுவதிலோ துளியும் இல்லை என்பதை அறிவோம். இதை உறுதிப்படுத்தியது கொரோனா தொற்றின்போது நம் நாட்டு ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட விதம்.

கொரோனா தோலுரித்துக் காட்டிய நாட்டுப் பற்று
அந்த வகையில் கொரோனா தொற்று நம் நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் மீது எவ்வளவு பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியதை அறிவோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் நாட்டின் கடைநிலையில் உள்ள தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக நாம் அறிந்தோம். பிழைக்க வந்த இடத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வாகன ஏற்பாடுகளை செய்து தர எந்த மத்திய மாநில அரசுகளும் ஆதிக்கம் படைத்தவர்களும் எவரும் முன்வராததால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தங்கள் பயணச் சுமைகளையும் குழந்தைகளையும் முதியோரையும் சுமந்துகொண்டு நடை பயணமாகவே சென்றார்கள் அவர்கள். உண்ணவும் பருகவும் ஏதுமின்றி உயிரை இழந்தவர்களும் அவர்களில் உண்டு. நோயுற்று இறந்தோரும் அவர்களில் உண்டு. வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொண்டோரும் அவர்களில் உண்டு.
 ஆட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர்
India racked by greatest exodus since partition due to coronavirus ...

நாட்டுமக்களின் நலன் காப்பதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரியணை ஏறியவர்கள் இந்த ஆட்சியாளர்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள்  பாமரர்கள்தானே என்ற அலட்சியத்தால் அவர்களின் துன்பங்களை மாநில அரசுகளும் மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கைவசம் இருப்பதால் தங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருக்கலாம். அல்லது அடுத்த தேர்தலுக்குள் மக்களை மீண்டும் மூளைச்சலவை செய்து மீண்டும் அரியணை ஏறலாம் என்றும் அவர்கள் எண்ணி இருக்கலாம். எது எப்படியானாலும் அவர்களுக்கு மேலே அனைத்தையும் கண்டு கொண்டும் பதிவு செய்துகொண்டும் இருப்பவன் ஒருவன் உள்ளான் என்பதை நினைவூட்டுவது நம் கடமையாக உள்ளது.

ஆம், அவன்தான் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன்.   
அவன் தற்காலிகமாக தந்திருப்பதே இந்த ஆட்சியதிகாரம், இதுபற்றி இறைவன் என்னை விசாரிக்க உள்ளான் என்ற பொறுப்புணர்வு இருந்தால் நாட்டை ஆள்வோர் எவரும் பொதுமக்கள் படும் இன்னல்களைக் கண்டு அலட்சியமாக இருக்கவும் மாட்டார்கள். நாட்டின் சொத்துக்களை தனதாக்கும் முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். ஏன், இரவில் நிம்மதியாக தூங்கவும் மாட்டார்கள்!
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்....    அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)  நூல்:புகாரி, முஸ்லிம்)

ஆட்சியாளர்களே, இறைவனிடம் விசாரணை என்றால் சாதாரணமானது அல்ல. இவ்வுலகில் வலுவான வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிப்பதோ அல்லது நீதிபதிகளை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் தண்டனையில் இருந்து தப்பிப்பதோ எல்லாம் அங்கு நடக்காது. இவ்வுலகில் உங்கள் ஆட்சியின்போது நிகழ்த்தப்பட்ட அனைத்து அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உங்கள் மோசமான ஆட்சியின் காரணமாக குடிமக்கள்  அனுபவித்த அனைத்து இடையூறுகளுக்கும் இன்னல்களுக்கும் இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணைக்கு வரும். தொடர்ந்து அதற்கான தண்டனையும் வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி நடக்க உள்ள நிகழ்வு இது. வினை விதைத்தவன் அதை அறுவடை செய்யாமலா போவான்?
உறுதியான இறுதியான விசாரணை
= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)
= எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் பாருங்கள்:
= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)
= .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘(திருக்குர்ஆன் 18:29) 
-----------------------------
ஒப்பிலா இறைமறை திருக்குர்ஆன்
https://www.quranmalar.com/2015/07/blog-post_25.html