இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 பிப்ரவரி, 2016

காதலிப்பது தவறா?


காதலிப்பது  தவறா?
ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவிடுவார். ஆனால் அதே நபர் இதே கேள்விக்கு முன்னால் “உங்கள் மகளை நான்..” அல்லது “உங்கள் சகோதரியை நான்...” என்ற வாசகத்தை சேர்த்துக் கேட்டால் கண்டிப்பாக அதே பதிலை சொல்லமாட்டார் என்பது உறுதி. இன்னும் “உங்கள் தாயை..” அல்லது “உங்கள் மனைவியை...” என்று கேட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அங்கு கொலையும் கலகமும் நடக்க வாய்ப்புண்டு!
சினிமாக்களிலோ டிவியிலோ கதைகளிலோ இனிமையாகத் தோன்றும் காதல் சொந்த வாழ்வு என்று வரும்போது கசப்பது ஏன்? அதற்குக் காரணம் அது உண்டாக்கும் விபரீதமான பாதிப்புகளே. காதலும் அதைத் தொடரும் காமமும் குடும்பங்களிலும் சமூகத்திலும் உண்டாக்கும் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல.
கண்மூடித்தனமான காதலாலும் காமத்தாலும் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்த்த பெற்றோர்களை காமுகனுக்காக அல்லது காமுகிக்காக பிள்ளைகள் நிர்க்கதியாக விட்டுச்செல்லுதல். அந்நியனின் கருவைச் சுமந்த பின் அபலைகள் அநியாயமாகக் கைவிடப்படுதல், மன உளைச்சல், தொடர்ந்து நடக்கும் கருக்கொலைகள், சிசுக்கொலைகள், தற்கொலைகள், கொலைகள் என பல கொடுமைகள் நிகழ்கின்றன. சமூகத்தில் தந்தைகள் இல்லாத பிள்ளைகளும், கவனிப்பாரற்ற அநாதைகளும் பெருகி ஒழுக்கமின்மை, விபச்சாரம், திருட்டு, பாலியல் வன்முறை போன்ற பல குற்றங்கள் பெருகுகின்றன. குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலைகிறது. கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளை உறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுக்கின்றன. குற்றங்கள் மலிந்து அறவே ஒழுக்கமில்லாத சமூக சூழல் அமைந்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படுகிறது.
இதை மிகைப்படுத்தியோ கற்பனை செய்தோ நாம் கூறவில்லை. இன்று அந்த நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம் என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தேசிய குற்றவியல் ஆவண அறிக்கை
 தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி  இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை  செய்கிறார். ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும்  ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறாள். இதைத் தவிர வரதட்சணைச் சாவு, மதுபோதையால் ஏற்படும் குற்றங்கள்,  கொலை,  கொள்ளை, திருட்டு இன்னும் இவை போன்று நாட்டில் நடக்கும் பற்பல குற்றங்களின் எண்ணிக்கைகள் ஏறுமுகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள்  நமக்குத் தெரிவிக்கின்றன.
 ஏறத்தாழ 94 விழுக்காடு பாலியல் குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே நேர்கின்றன என்பதுபோன்ற அவமானகரமான விவரங்களையும் அவை தாங்கி நிற்கின்றன.

காதல் புனிதமானதே!
பசி, ருசி போன்று மனிதனுக்குள் பாலியல் உணர்வுகளையும் படைத்துள்ளான் இறைவன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்கு கற்பித்துத் தந்திருக்கிறான். அதுதான் காதலையும் காமத்தையும் பொறுப்புணர்வோடு அனுபவிப்பதற்கான  இல்வாழ்க்கையென்ற இனிய அமைப்பு. இது இறைவனின் ஒரு மாபெரும் அருட்கொடையே!
நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)
ஆம், காதல் என்பது புனிதமானதே!, அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை மட்டுமே புனிதமானது! ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே! ..... அது தண்டனைக்குரிய பாவமே! இது வெறும் வெற்றுப் பேச்சு அல்ல. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் விடுக்கும் எச்சரிக்கை இது!
ஒழுக்கமும் அமைதியும் திரும்ப...
ஆரோக்கியமான மற்றும் அமைதிகரமான குடும்ப வாழ்வும் சமூகவாழ்வும் அமைய வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் ஒழுக்கம் பேணி வாழ முன்வரவேண்டும். காதல் மற்றும் காம உணர்வுகளை கட்டுப்பாட்டோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் மட்டுமே அனுபவிப்பது என்று முடிவெடுக்க வேண்டும். குடும்ப அமைப்பின் புனிதத்தைப் பேணிக் காத்து அவை சீர்குலைவதைத் தடுக்க வேண்டும். திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் அந்நிய ஆண்-பெண் அன்னியோன்னிய உறவுகள் அனைத்தும் பாவம் என்று உணர்ந்து வெறுக்கவும் தடை செய்யவும் வேண்டும்.

‘மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும், எமது புகழும் வருமானமுமே எமக்கு முக்கியம்’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சினிமாத்துறையினரும், டிவி, பத்திரிகை, மற்றும் ஊடகத்துறையினரும் வியாபாரிகளும் நம் மீது செய்து கொண்டிருக்கும் சதியை நாம் உணரவேண்டும்.  தங்கள் வயிறுகளை வளர்ப்பதற்காக நம்மிடையே விதைத்துவரும் விபச்சாரக் கலாச்சாரத்தை முறியடிக்க நாம் முன்வந்தால் மட்டுமே நம்மிடையே ஒழுக்கமும் அமைதியும் மீளும்.

இறைவனின் எச்சரிக்கை
இன்று நாம் வாழும் உலகின் அதிபதி நம்மைப் படைத்த இறைவன் ஆவான். அவனது அருட்கொடைகளை அனுபவித்துவரும் நாம் அவனுக்குக் கீழ்படிந்தே வாழவேண்டும். அதாவது அவன் எவற்றைச் செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்தாக வேண்டும் அவையே புண்ணியங்கள் என்று அறியப்படுகின்றன. எவற்றை செய்யாதே என்று தடுத்துள்ளானோ அவற்றைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவையே பாவங்கள் எனப்படுகின்றன. இறைவனின் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழும் ஒழுக்க வாழ்வே ‘இஸ்லாம்’ என்று அரபு மொழியில் அறியப்படுகிறது.
நாம் ஒவ்வொருவருக்கும் மரணம் என்ற முடிவு காத்திருப்பதை அறிவோம். அதேபோல இந்தத் தற்காலிகமான உலகும் ஒருநாள் முடிவுக்கு வரும். இறைவன் இதை முழுமையாக அழிப்பான். அதன்பிறகு மீண்டும் இங்கு வாழ்ந்து மடிந்த அனைவரையும் ஒருவர் விடாமல் எழுப்பி விசாரணை செய்ய உள்ளான். அன்று பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான். அதுதான் நம்முடைய நிரந்தர இருப்பிடம். (மேலதிக விளக்கங்களுக்கு அவனது இறுதிவேதமான திருக்குர்ஆனைப் படிக்கவும்).
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;.எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

மீறுவோரின் நிலை
இவ்வுலகுக்கு அதிபதியாகிய இறைவன் விதித்த சட்டப்படி, ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் அதுவும் எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக செய்வதற்கு மட்டுமே அவன் அனுமதித்துள்ளான். அதை....
=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் செய்வது தண்டனைக்குரிய பாவம்.
= அதைப் பிறர் பார்க்கச் செய்வது அதைவிடப் பாவம்.
= அதைப் பதிவு செய்வது அதைவிடப் பாவம்.
= அந்தப் பதிவை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதும்
= அதைக்கொண்டு சம்பாதிப்பதும் வயிறு வளர்ப்பதும்
= அவற்றை வருணிப்பதும் விமர்சிப்பதும்
= அவற்றைக் காண்பதும் ரசிப்பதும் என அனைத்துமே பாவமாகும்.

பலரும் இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்தெறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. மனித மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7,8.. எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:
78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
18:29  .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘
எந்த உடலை இறைவன் விதித்த வரம்புகளை மீறி அனுபவித்தார்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நாளை நடக்கவிருக்கும் உண்மை! இது வேண்டுமா? இல்லை சொர்க்க வாழ்வு வேண்டுமா என்பதை சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். 
இன்றே திருந்தி நம் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரவும் பரிகாரம் தேடவும் வாய்ப்பு இன்னும் உள்ளது.
நம்மைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்துள்ளான். திருந்தி மீள்வோரை நேசிக்கிறான்!
39:53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! இறைவனின்  அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அரசாங்கத்தின் பொறுப்பு:
நல்லொழுக்கம் கொண்ட சமூகத்தை அமைப்பது அரசின் பொறுப்பாகும். சமூகத்தை சீரழிவில் இருந்து பாதுகாக்க அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் விபச்சாரம் என்ற பாவத்தைத் தடுக்க அரசாங்கத்திற்கு இறைவன் பரிந்துரைக்கும் தண்டனை இதுவே:


விபச்சாரியும்விபச்சாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்மெய்யாகவேநீங்கள் அல்லாஹ்வின் மீதும்இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்இறைவனின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில்அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைவிசுவாசிகளில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (குர்ஆன் 24:2)