இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 டிசம்பர், 2014

இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்- பாகம் -1



இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம் - பாகம் 1 
(கீழ்காணும் சுட்டிகளை 'க்ளிக்' செய்து படிக்கவும்) 
 = இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
https://www.quranmalar.com/2014/12/blog-post_23.html
-----------------------------------------------
= தனக்குப்பின் இவ்வுலகுக்கு தூதராக வர இருந்த முஹம்மது நபியவர்கள் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் செய்துள்ளதை பைபிளிலும் குர்ஆனிலும் காணமுடிகிறது.
---------------------------------------------
= வாழ்நாள் நெடுகிலும் அதாவது பிறப்பு முதல் அவரது விண்ணேற்றம் நடந்ததுவரை இயேசுவின் மூலம் பற்பல அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக்காட்டியுள்ளான். இன்னும் பல அவரது இரண்டாம் வருகையின்போது நிகழவுள்ளன.
--------------------------------------------
= இன்று இயேசுநாதர் பற்றிய சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனையும் சேர்த்தே அணுக வேண்டும். ஏன் என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராயும்போது  தெளிவாகிறது:
அ) திருக்குர்ஆன் இறங்கிய சூழலும் பாதுகாக்கப் படுவதும்   
--------------------------------------
ஆ) முந்தைய வேதங்களோடு ஒப்பிடும்போது எவ்வாறு திருக்குர்ஆன் இன்னும் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது
---------------------------------
இ) அது எல்லாவித முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது
--------------------------------------
ஈ) அற்புதகரமாக அது தாங்கி நிற்கும்.அறிவியல் உண்மைகள்
-------------------------------------------
= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்... 
-----------------------------------------
= எல்லா இறைத்தூதர்களும் போதித்தது போன்றே இயேசு நாதரும் முஹம்மது நபிகளும் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதோடு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது அதாவது அவனுக்கு இணைவைத்தலை - பெரும்பாவம் என்றும் கண்டித்தனர்.
-----------------------------------
= தனக்குப்பின் வரவிருக்கிற தேற்றவாளர் என்று ஏசுவால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஹம்மது நபியவர்களை இன்று நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? முந்தைய தூதர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு உள்ள வித்தியாசங்கள் இவை
அ). தேற்றவாளர் முஹம்மது நபிகள் அவருக்கு  முன்னர் வந்த இறைத்தூதர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ மக்களுக்கோ அனுப்பப்பட்டவர் அல்ல, மாறாக அனைத்துலகுக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதராக இருக்கிறார்
ஆ) அவர் மூலம் அனுப்பப்பட்ட வேதம் குர்ஆனும் நபிமொழிகளும் இன்றளவும் சிதையாமல் பாதுகாக்கப்படுவது.
இ) உலகெங்கும் கால்வாசி மக்களுக்கு மேல் அவரை நேசிப்பவர்கள் இருந்தும் உலகில் எங்குமே அவரது சிலையோ உருவப்படமோ காணப்படாதது
ஈ) மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் பின்பற்றத்தக்கதாக அவரது வாழ்க்கை முன்மாதிரி காணக் கிடைப்பது.
இவை அனைத்தும் அவரே இன்று மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைவர் என்பதை எடுத்துக்கூறுவதாக உள்ளது.
-------------------------------
= ஆண்துணையின்றி அற்புதமான முறையில் இயேசுவைக் கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றெடுத்ததும்  மக்களால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டார்கள் அன்னை மரியாள். அப்போது  அற்புதமான முறையில் குழந்தை இயேசு மக்கள் முன் பேசியதையும் அதன் காரணமாக அன்னை மரியாள் கல்லெறி தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டதையும் திருக்குர்ஆன் துணை கொண்டு தெளிவான உண்மைகளை அறியலாம்.
--------------------------
இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில்.. தொடர இருப்பவை

= இயேசுவிடம் இருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள்

= இயேசுவின் இரண்டாம் வருகை... 

புதன், 24 டிசம்பர், 2014

இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு

Image result for jesus birth
இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு
திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:
= இறைவன் வானவர் ஜிப்ரீலை (காப்ரியல்) அன்னை மரியாளிடம் அனுப்பி அவரை அற்புதமாகக் கருத்தரிக்கச் செய்ததைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
19: 16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
17.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (பரிசுத்த ஆவியை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
18. '
நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று (மர்யம்) கூறினார்.
19. '
நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'என்று அவர் கூறினார்.
 20. 'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?' என்று (மர்யம்) கேட்டார்.
21. '
அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்' (என்று ஜிப்ரீல் கூறினார்.)
திருமணம் ஆகாமலே கருவுற்றதைத் தொடர்ந்து அன்னையவர்கள் கடுமையான மனவேதனைக்கும் சமூகத்தில் சோதனைகளுக்கும் ஆளாகிறார்கள். திருமணமாகாத ஒரு கன்னிப்பெண் திடீரென கர்ப்பிணியானால் மக்கள் வெறுமனே விட்டுவிடுவார்களா? அவரது தர்மசங்கடமான அனுபவத்தை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
24. '
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. '
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்)
26.
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக!
இவ்வாறு அற்புதமான முறையில் எந்த ஆணின் துணையுமின்றி ஏசு என்ற அற்புத மகனைக் கற்பம் தரித்துப் பெற்றேடுக்கிறார்கள்  அன்னை மரியாள் அவர்கள்!
இனி அந்த மகவைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு முன்னால் சென்றாக வேண்டுமே! அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப்  பாருங்கள்! ‘எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன்? எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொள்வேன்? குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும்?’ .... ஆம் அவர் எதிர்பார்த்தபடியே மக்கள் கடுமையாக அவரை ஏசினார்கள்.

27. (
பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளை யைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். 'மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?' என்று அவர்கள் கேட்டனர்.
28. '
ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை' (என்றனர்)
கல்லெறி தண்டனையில் இருந்து அன்னையைக்  காப்பாற்றியது எது?
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அன்னை மரியாள் அவர்கள் என்ன செய்தார்கள்? அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள்? அன்றைய காலகட்டத்தில் யூதர்களின் வழக்கப்படி விபச்சாரத்திற்குரிய தண்டனை குற்றவாளியை கல்லால் எரிந்து கொல்வதுதான் என்பதை அறிவோம். இதில் இருந்து அன்னை மரியாள் எப்படி தப்பித்தார்கள்? பிறகு எப்படி அவர்களைப் புனித மங்கையாக ஏற்றுக் கொண்டார்கள்? குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்த நிகழ்வு எது? ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்....
(படிக்கும் முன் இதற்கான விடை இறுதி ஏற்பாடாம் திருக்குர்ஆனில் மட்டுமே உண்டு என்பதையும் கவனியுங்கள்)
29.
அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! 'தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?' என்று அவர்கள் கேட்டார்கள்.
30.
உடனே அவர் (அக்குழந்தை), 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.
31, 32.
நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.  என்னை துர்பாக்கிய சாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
33.
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் (இறை சாந்தி) இருக்கிறது' (என்றார்)
ஆம் அன்பர்களே, இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். மரியாளைத் தூற்றிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அந்த அற்புதத்தைக் கண்கூடாகக் கண்டது. குழந்தை ஏசு வாய்திறந்து பேசிய அற்புதத்தை! இந்த அற்புதம்தான் கர்புக்கரசியான மரியாளை மக்களின் அவதூறுகளில் இருந்து காப்பாற்றியது. அந்த நிமிடம் வரை மரியாளைத் தூற்றிய மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அன்னையவர்களின் தூய்மையைப் போற்ற ஆரம்பித்தார்கள். இறைவன் மிகப் பெரியவன்! இந்த மாபெரும் அற்புதம்தான் அங்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  கைக்குழந்தை ஏசு பேசிய வார்த்தைகளும் இங்கு நாம் கவனிக்க வேண்டியவை.
= இதுதான் ஏசு செய்த முதல் அற்புதம்!
= இவைதான் ஏசுவின் முதல் வார்த்தைகள்! 
இவ்வாறு இறைவனின் முந்தைய வேதம் பைபிள் விட்டுச் சென்ற புதிரை தொடர்ந்து வந்த இறுதி வேதம் குர்ஆன் அவிழ்க்கிறது. 

34.
இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.
(அத்தியாயம் 19 – ‘மரியம் வசனங்கள் 16 முதல்  34 வரை )
ஆண்துணையின்றி குழந்தை பிறப்பது அசாத்தியமானது என்று சொல்லி ஏசுவின் பிறப்பைப் பற்றி நம்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உறைக்கும் வண்ணம் திருக்குர்ஆன் ஒரு அழகிய வாதத்தை முன்வைக்கிறது:
3: 59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!
அதாவது  முதல் மனிதர் ஆதம் தாயும் தந்தையும் இன்றி மண்ணிலிருந்து படைக்கப் பட்ட ஓர் அற்புதம். அதை நீங்கள் நம்புகிறீர்கள். அதை நிகழ்த்திய அதே இறைவனுக்கு தந்தையில்லாமல் ஒரு மனிதரை உருவாக்க முடியாதா? ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா? என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்துணர வைக்கிறான் இறைவன்!

ஆம் அன்பர்களே பைபிளை மெய்ப்பிக்க வந்ததே திருக்குர்ஆன் பழைய ஏற்பாட்டையும் பின்னர் புதிய ஏற்பாட்டையும் தொடர்ந்து இறைவன் அருளிய இறுதி ஏற்பாடுதான் திருக்குர்ஆன்! வாருங்கள் நாம் இணைந்து சத்தியத்தை அறிவோம்! ஒன்றுபடுவோம்! நம் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்! 

இஸ்லாம் என்றால் என்ன?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

தேற்றரவாளரை ஏன் பின்பற்றவேண்டும்?


தேற்றரவாளரின் சிறப்புக்கள்

பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார் (யோவான் 15:26)
 இயேசு முன்னறிவித்தபடி அவரைத் தொடர்ந்து வந்துள்ளதாலும் இயேசுவை மகிமைப்படுத்தி உலக சரித்திரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களே அந்த தேற்றரவாளர் என்பதை அறிகிறோம். அதை உறுதிப்படுத்தும் விதமாக அமையும் கீழ்காணும் சிறப்புகள் அமைகின்றன.

= அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதர்
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,
7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) ...
7:85. மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்).....
தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் இயேசு(அலை) அவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.
43:59.அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
மேற்கூறப்பட்ட உண்மை இன்று நம்மிடையே காணக்கிடைக்கும் பைபிளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
அப்பொழுது அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்குப் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லக் கூப்பிட்டாள் அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் ஊன்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள் அவர் அவனை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். (மத்தேயு 15:22 26 )
  அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள். இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.
=  வேதம் சிதையாமல் பாதுகாக்கப்படுதல்:
 முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர் மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது. (மேலே இதுபற்றி விவாதிக்கப்பட்டு உள்ளது)
= சிலையில்லா மாமனிதர்:
 முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபடுவதைப் போல் இவரை யாரும் வழிபடுவதில்லை. இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!.
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்என்று எச்சரித்தார்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.
= மனித வாழ்க்கைக்கு முன்மாதிரி:
இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.
இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள் அவர் செய்த செயல்கள்  பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.
அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது. அவர் மூலமாக இறைவன் அறிவித்துள்ள செய்திகள்தான் ஹதீஸ் அல்லது நபிமொழிகள் என்று அறியப்படுகின்றன.

இறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும்

இங்கு இயேசு நாதரை கண்ணியமான முறையில் உலகுக்கு அறிமுகப்படுத்தி இயேசுவின் மீது சுமத்தப்பட்ட களங்கங்களை துடைத்தெறிந்த முஹம்மது நபி அவர்களைப் பற்றிய சில உண்மைகளையும் நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். (அவர்கள் இருவர் மீதும் இறைசாந்தி உண்டாவதாக!)
= இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக அனுப்பப்பட்டவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.  இயேசு(அலை) அவர்கள் இறைவனால் வானிற்க்கு உயர்த்தப்பட்ட பின் சுமார் 560 வருடங்களுக்குப்பின் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்.
= நம் ஆதிபிதா ஆதம் நபி(அலை) முதல் இயேசு (அலை) வரை எந்த ஓரிறைக் கொள்கையை வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள்.
= இயேசு(அலை) எக்கொள்கையை போதித்தாரோ அதையே முஹம்மது நபி(ஸல்) போதித்தார்கள். முஹம்மது நபி(ஸல் ) எக்கொள்கையை போதித்தாரோ அதையே இயேசு(அலை) போதித்தார்கள் எனபதை இங்கு தெளிவாக விளங்கிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் திருக்குர்ஆன் கூறுவதை அறிவீர்கள்:
= நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
அதேபோல் இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை –அதாவது இறைவனுக்கு இணைவைத்தலை – திருக்குர்ஆனும் நபிமொழிகளும் பெரும்பாவம் என்று கண்டிப்பதையும் நீங்கள் அறிவீர்கள்:
' .....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்......        (திருக்குர்ஆன் 31:13)
 'நிச்சயமாக இறைவன் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.'  (திருக்குர்ஆன் 4:48)
பைபிளில் இறை ஏகத்துவம்
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -
= கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.       (பழைய ஏற்பாடு எரேமியா 10:10)
=இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)
= நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -
= அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)
= ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)
= இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)

இறைவனுக்கு இணைவைத்தலை கண்டிக்கும் பைபிள்::
= எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது. (யாஸ்ராகாமத்திலே 1-5)
= ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும்  நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (தீமோத்தேயு 6:16) 
         ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகும். ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ,
·            அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே  தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே  அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லைஅக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.(மத்தேயு 7:21)
இவை எல்லாம் எதை நமக்கு எடுத்துரைக்கின்றன?....
தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதைத்தானே?
=  (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ  (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை.  (திருக்குர்ஆன் 21:25)

= கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும்  இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதும் தெளிவு.

இயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்

உலக மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர் இன்று முஹம்மது நபி அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றி வருவதை அறிவீர்கள். இயேசுநாதர் அவர்கள் பற்றி யூதர்கள் சுமத்திய களங்கங்களில் இருந்து இத்தனை போரையும் காப்பாற்றிய பெருமை தேற்றறவாளர் என்று இயேசுவால் முன்னறிவிப்பு கூறப்பட்ட முஹம்மது நபி அவர்களையே சாரும்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்,  எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.  (திருக்குர்ஆன் 61:6)

= நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)
= சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)

யூதர்கள் இயேசுவின் அற்புதைப் பிறப்பை சந்தேகித்தார்கள். அவரது தாயார் தூய மரியாளை விபச்சாரி என்றும் - இயேசு நாதரை விபச்சாரியின் மகன் என்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்றும் அவதூறு கூறிப் பரப்பினர். திருக்குர்ஆனும் முஹம்மது நபியவர்களின் கூற்றுக்களும் இந்த தவறான பரப்புரையை உலகெங்கும் முறியடித்தன.
4:156.இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (யூதர்கள் சபிக்கப்பட்டனர்).

4:157.
இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்"" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

4:158.
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 இயேசுவின் அற்புதப் பிறப்பையும் நபித்துவத்தையும் அன்னை மரியாளின் புனிதத் தன்மையையும் நம்பாமல் எவரும் முஸ்லிம் ஆக முடியாது என்ற அளவுக்கு இது இஸ்லாத்தில் கட்டாயமான ஒன்று. 


ஆண்துணையின்றி குழந்தை பிறப்பது அசாத்தியமானது என்று சொல்லி ஏசுவின் பிறப்பைப் பற்றி நம்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உறைக்கும் வண்ணம் திருக்குர்ஆன் ஒரு அழகிய வாதத்தை முன்வைக்கிறது:
3: 59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!
அதாவது  முதல் மனிதர் ஆதம் தாயும் தந்தையும் இன்றி மண்ணிலிருந்து படைக்கப் பட்ட ஓர் அற்புதம். அதை நீங்கள் நம்புகிறீர்கள். அதை நிகழ்த்திய அதே இறைவனுக்கு தந்தையில்லாமல் ஒரு மனிதரை உருவாக்க முடியாதா? ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா? என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்துணர வைக்கிறான் இறைவன்!

ஆம் அன்பர்களே பைபிளை மெய்ப்பிக்க வந்ததே திருக்குர்ஆன் பழைய ஏற்பாட்டையும் பின்னர் புதிய ஏற்பாட்டையும் தொடர்ந்து இறைவன் அருளிய இறுதி ஏற்பாடுதான் திருக்குர்ஆன்! வாருங்கள் நாம் இணைந்து சத்தியத்தை அறிவோம்! ஒன்றுபடுவோம்! நம் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்!
தொடர்புடைய ஆக்கங்கள்:
தேற்றவாளரை ஏன் பின்பற்ற வேண்டும்?
http://quranmalar.blogspot.com/2014/12/blog-post_11.html
வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள் - அவரே இயேசு(அலை)
கற்புக்கரசியை கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்றிய அற்புதம்