இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 நவம்பர், 2018

சபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா?


Image result for mosques in chennai flood
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்பியுள்ளது. அதைத் தொடந்து சில வகுப்புவாத சிந்தனையாளர்கள் பள்ளிவாசலுக்குள் ஏன் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில், கேரளாவில் உள்ள பள்ளிவாசல்களில் பெண்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்து மகாசபை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரள உயர் நீதிமன்றம் இம்மனுவை தாக்கல் செய்தவர்களுக்கு இவ்வாறு கோருவதற்கான உரிமை இல்லை என்று கூறி அதை தள்ளுபடி செய்தது.  இது தொடர்பாக முஸ்லிம் பெண்கள் யாரும் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும்  சில பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவே செய்கின்றனர் என்றும் கூறியது உயர்நீதிமன்றம்.
இஸ்லாத்தின் நிலைப்பாடு
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் அவர்கள் குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கும் தகுந்தவாறு கடமைகளையும் உரிமைகளையும் பகிர்ந்தளிக்கிறது இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதை ஆண்களைப் பொறுத்தவரையில் முடிந்தவரை கூட்டாக நிறைவேற்ற ஊக்குவிக்கிறது. அதற்காக கட்டப்படுபவைதான் பள்ளிவாசல் என்ற தொழுகைக் கூடங்கள். கூட்டுத் தொழுகையினால் உண்டாகும் தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற சமூகப் புரட்சிகள் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.
இன்னும் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை என்பது மக்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று நிறைவேற்றப்படுவது. ஆணும் பெண்ணும் அவ்வாறு அருகருகே கலந்து நின்றால் அங்கு வழிபாடு நடைபெறாது. என்ன நடக்கும் என்பதை யாரும் ஊகிக்க முடியும். ஆண்களும் பெண்களும் அவ்வாறு கலக்காமல் உரிய தடுப்பு ஏற்பாட்டோடு பள்ளிவாசல்கள் இருந்தால்தான் அங்கு பெண்களும் தொழுகையை நிறைவேற்ற முடியும்.
தடை இல்லை   
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு விருப்ப உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கடமையான தொழுகைகளில் கலந்து கொள்வதற்கு இஸ்லாத்தில் எந்தவிதமான தடையும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.
= 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 
= உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம். (நூல் : முஸ்லிம்)
= பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் : புகாரி) 
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல் : புகாரி 
= 'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)  
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.” (நூல் : முஸ்லிம்)
வீடே பெண்களுக்கு சிறந்த தொழுமிடம்  
பெண்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ள அதே வேளையில் அவர்களுக்கு வீடே சிறந்த தொழுமிடம் என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
= உங்கள் பெண்களை பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள்.  எனினும் அவர்களின்  வீடே அவர்களுக்கு  சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)நூல் : அபூதாவூத் 567,  பைஹகீ 5359 )
= பெண்களின் பள்ளிவாசல்களில் சிறந்தது அவர்களுடைய வீடுகளின் ஆழமான (ஓரப்) பகுதியாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.,( நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ 5360)
மூடநம்பிக்கைகளை இறைவன் கற்பிப்பதில்லை
ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமில் மூட நம்பிக்கைகள் கிடையாது. மற்ற மத நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கலாம். இன்னார் நுழைந்தால் வழிபாட்டுத்தலங்கள் புனிதத்தை இழந்து விடும் அல்லது தீட்டாகிவிடும் என்பன போன்ற விடயங்களை இறைவன் நமக்குக் கற்றுத்தரவில்லை. முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல மாற்று மதப் பெண்களும் பள்ளிவாசல்களில் நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அவ்வப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே அறியலாம்.
பேரிடரில் சரணாலயங்களாக   பள்ளிவாசல்கள்
சென்னை பெருவெள்ளம், கஜா புயல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் பள்ளிவாசல்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அனைவரும் ஜாதி மத பேதமின்றி அடைக்கலம் பெறும் இடங்களாக மாறுகின்றன என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்களைப் பொறுத்தவரையில் அங்கு படங்களோ உருவங்களோ சிலைகளோ எதுவும் இருக்காது. நான்கு சுவர்களுக்கு நடுவே அமைந்த ஒரு காலி அறைதான் பள்ளிவாசல். பழைய காலங்களில் வழிப்போக்கர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சத்திரங்கள் போன்றவை பள்ளிவாசல்கள்.  உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் இன்றும் கூட பள்ளிவாசல்களை வழிப்போக்கர்களுக்கான சத்திரங்களாக அவற்றை பயன்படுத்த முடியும்.
-------------- 
இஸ்லாம் என்றால் என்ன?


வெள்ளி, 9 நவம்பர், 2018

நாய் படுத்தும் பாடு!

தீயினால் சுட்ட புண் ஆறலாம்
நாவினால் சுட்ட புண்ணும் ஆறலாம்
மன்னிப்பு கோருவதால்  - ஆனால்
நாயினால் ஆன  புண் ஆறுவது எளிதல்ல,
நோய் கண்டு மரணம் வரும் வரை!
என்று கூறும் அளவுக்கு அது கொடூரமான ஒன்றாக இருக்கிறது என்பதே உண்மை!  (கட்டுரையின் இறுதியில் வீடியோ இணைப்பைக் காண்க)
நாயோடு பழகுதல் நல்லதல்ல!
இறைவன் கற்பிக்கும் எவல்- விலக்கல்களை ஏற்று வாழ்வதே இஸ்லாம் எனப்படும். இறைவன் ஒரு விஷயத்தை வேண்டாம் என்று தடை செய்தால் அது முழு மனிதகுலத்திற்கும் கேடானதாகவே அமையும். இன்றில்லாவிடினும் காலம் அதைத் தெளிவு படுத்தும்.
வீட்டுப்பிராணி போல நாயை வளர்ப்பதற்கும் அது வாய்வைத்த நீரை பயன்படுத்துவதற்கும் இஸ்லாத்தில் தடை உள்ளது. கீழ்கண்ட நபிமொழிகளில் இருந்து இதை அறியலாம்:
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= "எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்
அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி)நூல்கள்: புகாரிமுஸ்லிம்.
= "நாய் வளர்ப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு கீரத் (இரு மடங்கு உஹது மலையளவு) நன்மையை (புண்ணியங்களை) இழக்கின்றனர்
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)நூல்: புகாரி.
=: “உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 
= “நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்”
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்
மேற்கண்ட இரு செய்திகளின் வாயிலாக நாய் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: அதேவேளையில் விவசாயம், வேட்டையாடுதல் போன்ற காரணங்களுக்காக நாயை வளர்த்தல் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
 = "விவசாயம்கால்நடை பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிற்கு மட்டும் நாய் வளர்க்கலாம்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி),  நூல்கள்: முஅத்தா,திர்மீதிநஸயீ)

நாயை நக்க விடாதே!
வீட்டுப்பிராணி போல நாயை வளர்ப்பதற்கும் அது வாய்வைத்த நீரை பயன்படுத்துவதற்கும் இஸ்லாத்தில் தடை உள்ளது. கீழ்கண்ட நபிமொழிகளில் இருந்து இதை அறியலாம்:
= "எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்
அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி)நூல்கள்: புகாரிமுஸ்லிம்.
=: “உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 
உண்மைப்படுத்தும் நவீன மருத்துவ அறிவியல்
நாயின் வாயில் உள்ள கிருமிகள் பற்றிய ஆய்வு செய்த லண்டன் க்வீன் மேரி பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் மற்றும் நுண்மவியல் பேராசிரியர் (Virology and bacteriology) ஜான் ஆக்ஸ்போர்ட் கூறும்போது, " நாய்கள், வாழ்க்கையின் பாதி நாட்களை பல அசுத்தமான இடங்களை முகர்ந்து வருவதால், அதன் வாய் முழுவதும் பல வகையான அசுத்தங்களும் கிருமிகளும் நிறைந்து காணப்படுகின்றன.
நாய்களை முத்தமிடுவது, அவைகளின் நாக்கால் நம்மை நக்க விடுவதின் மூலம் பல கொடுமையான கிருமிகள் மனிதனை பாதிக்கின்றன. நாயின் வாய் மூலம் பரவும் கிருமிகளின் சில:
- Staphylococcus Aureus
- Capnocytophaga Canimorsus
நாய்களைப் பொறுத்தவரை இந்த பாக்டீரியாக்கள் அவற்றின் உடலுக்கு ஊறு செய்வதில்லை. ஆனால் மனித உடலுக்கு அவை பகிரப்ப்படும்போது பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

ஏற்கனவே உள்ள புண்களை நாய்கள் நக்குவதன் மூலம் இன்னும் வீரியமாக தோல் நோய்கள் உருவாகின்றன. அதனால் ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஒருவர்.
படத்தில், இவரின் கையில் உள்ள காயத்தில் நாய் நக்கியதால் ஏற்பட்ட விளைவு.

ஜீவகாருண்ய  அமைப்பினரின் போலித்தனம் 
அற்ப விளம்பரத்துக்காக (cheap publicity) தெருநாய்களுக்கு வக்காலத்து வாங்கும் 'ஜீவ காருண்ய" அமைப்பினர்கள் இந்த வீடியோவில் காட்டப்படும் மரண நிலையில் தங்களையும் அல்லது தங்கள் குழந்தைகளையும் இருத்திப் பார்க்கட்டும்...
இறைவன் நம் அனைவரையும் இப்படிப்பட்ட மரணத்தில் இருந்து காப்பாற்றுவானாக. ஆமீன்

புதன், 7 நவம்பர், 2018

உச்சகட்ட பயங்கரவாதம் !

Related image
சக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். 
  •  மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகளில் மிகப்பெரிய ஒன்று அவர்கள் நடத்திய அடிமை வாணிபம்! 
  •  சுமார் 300 வருடங்களாக தொடர்ந்து  முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்தது இக்கொடுமை!. 
  • இது போன்ற ஒரு பயங்கரவாத செயலை மனித சரித்திரம் என்றுமே கண்டதில்லை. 
  • இதை நிகழ்த்தியவர்கள்தான் இன்றும் உலகை தங்களின் ஆயுத பலத்தால் அடக்கியாள்கிறார்கள் . 
  • அவர்களின் பிடியில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கப் போராடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். 
  • தங்களை சமாதானத்தின் தூதுவர்களாகக்  காட்டிக் கொள்கிறார்கள். 
"மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். ... அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்) 
என்கிறது இறைவேதம். முன்னர் வந்த இறைவேதங்களும் ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தையே போதித்தன. ஆனால் 
ஆனால் தங்கள் இனமே அனைத்து இனங்களையும் விட மேலானது என்ற மனப்பான்மையும் பணத்தை எப்படியாவது சம்பாதித்துக் குவிக்க வேண்டும் என்ற தீராத வெறியும் கொண்டு அலைந்தவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா? தாங்கள் எது செய்தாலும் தட்டிக்கேட்க இவ்வுலகில் யாருமேயில்லை என்ற நிலையை அடைந்த அந்த கொடியவர்கள் அந்நாட்டு அப்பாவி மக்கள் மீது அராஜகங்களை தொடுத்தார்கள். மானிட சரித்திரத்திலேயே அதுபோன்ற ஒரு ஈவிரக்கமற்ற செயலை யாருமே செய்திருக்க முடியாது. ஆம் சற்று படித்துப்பாருங்கள். 
பயங்கரவாதம் என்றால் என்ன?
கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனையில் அப்பாவியை அல்லது அப்பாவிகளை மிரட்டி தனது காரியங்களை அநியாயமாக சாதித்துக் கொள்வது போன்ற நடவடிக்கையே பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது. படித்தபின் நீங்களே முடிவு செய்யுங்கள். எது பயங்கரவாதம் என்று.

ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இலட்சக்கணக்கான கறுப்பின அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காலனி ஆதிக்க கொடூரர்கள். அவ்வாறு பிடித்த அடிமைகளை கப்பல்களில் ஏற்றி ஐரோப்பாவுக்கும் அமெரிக்கா கண்டத்தின் பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்க முனைந்தார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என யாரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. தங்களைப் போலவே அவர்களும் மனித உணர்வுகளும் சிந்தனையும் கலாச்சாரமும் குடும்ப அமைப்புகளும் வாழ்க்கை முறைகளும் கொண்டவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எதையுமே அவர்கள் மதிக்கவில்லை. 
ஆடுமாடுகளை விடக் கேவலமான முறையில் அள்ளிக்கொண்டு சென்றார்கள். பிடித்த இடங்களில் இருந்து கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான மைல்கல் நடக்க வைத்தே கொண்டு சென்றார்கள். 
ஓடிப்போகாமல் இருக்க ஒருவரையொருவர் சங்கிலி போல பிணைத்தார்கள். கர்ப்பிணிகளையும் நோயாளிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. 
Related image
படு மோசமான நிலைகளில் கப்பல்களில் ஏற்றி அட்லாண்டிக் கடல் மார்க்கமாக கடத்தினார்கள். கப்பலின் கொள்ளளவு நிறையும் அளவுக்கு அதிகமானோரை நிரப்பினார்கள். அவர்களை தேக்கரண்டிகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவது போல அடுக்கினார்கள். 
கொடுமைகளை சகிக்க முடியாத பலர் கடலில் குதித்து தற்கொலையில் தஞ்சம் புகுந்தார்கள். 
அதைத் தடுப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவைகளின் கை கால்களில் விலங்கிட்டு ஒருவரோடு ஒருவர் சங்கிலிகளால் பிணைத்தார்கள்.
அவ்வப்போது அற்ப உணவை அவர்களுக்கு ஊட்டினார்கள். இரக்க உணர்வினால் அல்ல. தங்களின் “வியாபார சரக்கு’ கெட்டுப்போகாமல் இருப்பதற்காக. 
ஆம், அதே நிலையில் அவர்கள் உண்டார்கள், மலஜலம் கழித்தார்கள், சுமார் நான்கு மாதங்கள் நீண்ட கடற்பயணத்தை அந்த அப்பாவி அடிமை மக்கள் எவ்வாறு கழித்திருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். 
கடற்பயணத்தில் அவர்கள் எடுத்த வாந்தியிலும் மலஜலங்களிலும் மாதவிடாய் இரத்தத்திலும் கிடந்து புரண்டார்கள். 
கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை அந்தக் கழிவுகளுக்கிடையேயே பெற்றெடுத்தார்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்தை பயந்து தங்கள் குழந்தைகளை வாய்ப்பு கிடைத்தபோது கடலில் வீசி எறிந்தார்கள் அந்தத் தாய்மார்கள்! 
பிணங்களோடு பிணைக்கப்பட்ட நிலையில்!
கப்பலின் அடித்தளத்தில்தான் இவர்கள் அடுக்கப்பட்டு இருந்தனர். அங்கு காற்றோட்டம் கிடையாது. வெப்பமும் கழிவுகளின் நாற்றமும் அவர்களை வாட்டி எடுக்கும். மட்டுமல்ல பிணங்களின் நாற்றமும் கூட்டு சேர்ந்து கொள்ளும் அங்கு! ஆம் தங்களோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள் இறந்து போனால் அவர்களை உடனுக்குடன் அகற்றிவிடுவார்களா என்ன?

கடற்பயணத்தின் போது நோய் பரவினால் நோயாளிகளை மற்றவர்களிடம் இருந்து பிரித்து அவர்களை கடலில் வீசி எறிந்தார்கள். மற்றவர்களுக்கு  நோய் பரவாமல் இருப்பதற்காக!

"சரக்கு"களின் பாதுகாப்பு 
தங்களின் “சரக்குகள்” கெட்டுப்போகாமல் இருக்க கீழ்த்தள மக்கள் மேல்தளத்திற்கும் மேல் தளத்தோரை கீழ்த்தளத்திற்கும் அவ்வப்போது மாற்றுவார்கள். கட்டாய உடற்பயிற்சியும்  செய்விக்கப்பட்டார்கள்

பயண இலக்கு வந்தடையும் முன்பு சில நாட்கள் அவர்களுக்கு அதிக உணவளித்து கொழுக்க வைப்பார்கள். காரணத்தை நீங்களே ஊகிக்க முடியும். ஆம், கடற்கரையில் கூடும் அடிமை சந்தையில் தங்களின் சரக்கு அதிக விலைக்கு விற்க வேண்டுமல்லவா?
யூத அடிமை வியாபாரிகள் பயணத்தில் இழந்த சரக்குகளுக்கு காப்பீடும் (insurance) வசூலித்தார்கள்.
தப்ப முயற்சிக்கும் அடிமைகளின் கால்களை வெட்டினார்கள், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு.

மரணம் ஒன்றே விடுதலை!
இவ்வாறு கரையில் விற்கப்பட்ட அடிமைகள் நாளொன்றுக்கு 19 மணி நேரம் மனிதாபிமானமற்ற நிலைகளில் கடுமையான உழைப்பு செய்ய பணிக்கப்பட்டார்கள். மிகக் குறைவாகவே அவர்கள் உணவளிக்கப்பட்டார்கள்.
90 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியே பத்து இலட்சம் வரை மக்கள் ஆபிரிக்காவில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுகரைகளுக்கு உயிருடன் கடத்தப்பட்டனர் என்று சரித்திர ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். ஆப்பிரிக்காவில் அடிமைகளாக பிடிக்கப்படும்போது தப்பித்தல், காடுகளைக் கடந்து கரைகளை நோக்கிய நடைபயணத்தில் இறப்பு, கப்பலுக்காக காத்திருக்கும்போது கடற்கரையில் அடிமைக் கொத்தளங்களில் இறப்பு, கடற்ப்பயணத்தின்போது இறப்பு ஆகியவற்றில் குறைந்த பட்சம் இரண்டு கோடி மக்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் கணிக்கப்படுகிறது

இறைவனிடம் விசாரணை உண்டு 
இந்த தற்காலிக வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் அனைத்து மனித உரிமை மீறல்களும் இறைவன் முன்னிலையில் விசாரிக்கப்பட உள்ளன என்கிறான்:

சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்