இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

இறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை?

 மதுவை தீமை என்றும் மதுவோடு தொடர்பு கொள்ளும் அனைவரையும் சபிக்கும் இறைவன் அந்த மதுவை அவனே தடை செய்திருக்கலாமே?

 இறைவனிடம் இந்தக் கேள்வியைக் க் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்....
-    இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு துகள் போன்றவர்கள் நாம்.
-    இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு இல்லை.
-    மட்டுமல்ல நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
-    நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது. அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம்.
எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனை கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
 அடுத்ததாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
2:164  .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;  இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்;  வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமாஇதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
23:115. நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும்.அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு  விதிக்கப்பட்ட  தவணையில்  வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்  கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள்  நன்மைகளாகவும் கீழ்படியாமல்  மாறாகச்  செய்யப்படும்  செயல்கள்  தீமைகளாகவும்  பதிவாகின்றன. இவ்வாறு  ஒவ்வொருவருக்கும்  நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
67:2   .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
21:35  .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

கீழ்கண்டவை இந்த பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்:
= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது தூதர்களையும் தன் வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.
= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.
= இங்கு நல்லவையும் தீயவையும்  நியாயமும் அநியாயமும் செல்வமும் வறுமையும்  நம் முன் மாறிமாறி வரும்.  நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு  இன்பமும் மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம்  இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.
= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.
= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.
= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே! மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன்  ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆக இந்த பரீட்சைக் கூடத்தில் ஒரு பரீட்சைப் பொருளாக மதுவைப் படைத்து அதை உட்கொள்வதை பாவம் என்றும் அதை தவிர்ப்பதைப் புண்ணியம் என்றும் தன் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிவித்து உள்ளான். புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் மறுமையில் காத்திருக்கிறது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளான்.

தொடர்புள்ள பதிவுகள்:
இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும் 
http://quranmalar.blogspot.com/2014/11/blog-post.html
மதுஒழிப்புக்கு நடைமுறை சாத்தியமான தீர்வு http://quranmalar.blogspot.com/2014/10/blog-post_22.html

மாமனிதர் மது ஒழித்த வரலாறு

   மது தீமைகளின் தாயாகத் திகழ்கிறது. மதுவற்ற தேசத்தை  நினைத்துக் கூட பார்க்க முடியாதவாறு இன்று எங்கும் அது பரந்து விரிந்து வியாபித்துள்ளது

தனது சிந்தையை மதுவிடத்தில் ஒப்படைத்தவர்கள் அதனை விட்டு மீளவே முடியாதவாறு அது குடிப்பவர்களை ஆளுமை செய்து விடுகிறது. மதுவைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ குடி கொடுக்கும் குடியரசாகத் திகழ்கிறது. உயிர்கள் பலவற்றைக் குடித்தாலும் உறவுகள் பலவற்றை அது முறித்தாலும் குடிகள் பலவற்றை அது கெடுத்தாலும் அந்த கொடிய தீமையை அறவே நிறுத்தமுடியாது எனப் பலர் கூக்குரலிடும் இந்த நேரத்தில் நம்மைப் படைத்த இறைவனால் அனுப்பப்பட்ட அவனது தூதர் தனது பிரச்சாரத்தின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் மதுவை தனது நாட்டில் அழித்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

மது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பித்தல், தீண்டாமை, வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் என அனைத்து சமூகத் தீமைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பது மட்டுமல்ல மாறாக நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளையும் வழங்குவது இஸ்லாமிய மார்க்கம். மதுவின்றி வாழ்கையில் எதுவுமே இல்லை என வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்கள் மது அருந்துதல் என்பது ஒரு தீய பழக்கம் என்ற சிந்தனையே இல்லாது தண்ணீர் குடிப்பது போல் மது அருந்தும் குடிகார மக்களாக வாழ்ந்து வந்தனர்.

திசையற்று பயணித்துக்கொண்டிருந்த அந்த மக்களிடையே நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாம் மார்க்கம் கூறும் மூன்று முக்கிய அடிப்படைகளை நினைவூட்டி மக்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றினார்கள். ஒன்றே மனிதகுலம் ஒருவன் மட்டுமே இறைவன், அவனிடமே நமது மீளுதலும் என்பவையே அந்த அடிப்படைகள். 
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
அனைத்து மனித குலமும் ஒரே குடும்பமே, நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்று உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் அனைவரும் உள்ளோம் என்பதை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்பினார் நபிகளார்.
அதன் விளைவாக மனித சமத்துவத்தையும் சக மனிதனின் உரிமைகளையும் பேணவேண்டியது கடமை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். நல்லொழுக்கத்தைப் பேணுவோருக்கு இறைவனிடம் வெகுமதிகளும் பேணாதவர்களுக்கு தண்டனைகளும் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒழுக்க சீலர்களாய் மாறினார்கள். 

ஆரம்பத்தில் மக்களிடையே இஸ்லாம் தெளிவு படுத்தப்பட்ட பின்னரும் இந்த போதையளிக்கும் மது எதற்கு என்ற ரீதியில் நபியவர்களிடத்தில் மதுவைப் பற்றி பேசினார்கள். ஆனாலும் இறைவனோ நபியவர்களோ உடனடியாக மது தடுக்கப்பட்டு விட்டது அது உங்களுக்கு ஆகுமானதல்ல என்று உத்தரவு விதிக்கவில்லை. அவர்கள் விரும்பி அருந்திக்கொண்டிருந்த மதுவை உடனடியாக நிறுத்துவது இறைவனின் நாட்டமாக இருக்கவில்லை.  
= இறைவன் நபி(ஸல்) அவர்களுக்கு முதல் கட்டமாக திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தை இறக்கினான்....
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது (திருக்குர்ஆன் 2:219)

மதுவில் நன்மையை விட தீமை அதிகமுள்ளது தவிர்ந்திருத்தல் நல்லது என்ற இந்த அறிவுரை வந்தபோது சிலர் தவிர்ந்திருநதனர. ,சிலர் மது அருந்தினார்கள்.
= சிறிது காலம் சென்றது மக்கள் மது குடித்தவாறே தொழுகையில்
ஈடுபட்டார்கள். தொழுகையின்போது குர்ஆனின் வசனங்களை ஓத வேண்டும். தொழுகையில் போதை காரணமாகச் சிலர் தவறாக ஓதினார்கள். இப்போது இறைவன் சற்று கட்டுபடுத்தும் விதமாக நீங்கள் மது அருந்திய நிலையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;”  (திருக்குர்ஆன் 4:43) என்ற வசனத்தை இறக்கினான்.

= இவ்வாறு சிறிது காலம் சென்றது. இப்போது மக்கள் தொழுகையின் போது மட்டும் மது அருந்தாமல் இருந்தனர். இருந்தாலும் நேர்வழி பெற்ற நபித் தோழர்கள் மதுவைத் தடை செய்வது பற்றித் தெளிவான வசனம் இறைவனிடமிருந்து வர வேண்டும் எனப் பிரார்த்தித்தார்கள். சிறிது காலத்திற்குப் பின்னர் மதுவிலக்கு குறித்து முழுமையான வசனம் இறக்கியது.

.நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்அருவருக்கத்தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 5:90)

இவ்வசனம் இறக்கப்பட்டதும் நபித்தோழர்கள் மகிழ்ந்தார்கள். எங்கள் விஷயத்தில் எங்கள் இறைவன் தெளிவான தீர்ப்பளித்து விட்டான் என இறைவனைப் புகழ்ந்தார்கள். இந்த வசனம் இறங்கியதுபோது வினாடிகூட தாமதிக்கவில்லை. அருந்திக் கொண்டிருந்தவர்கள் மதுவைத் துப்பினார்கள். குடித்தவர்கள் வாந்தி எடுத்தார்கள். மதீனா வீதிகளிலே அவர்கள் வீடுகளில் வைத்திருந்த மது பீப்பாய்களைக் கொட்டினார்கள்.

மதுவிலக்கு அங்கு பூரணமாக அமல்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு அது ஒரு பாரமாகவோ, சுமையாகவோ, பின்பற்ற முடியாததாகவோ இருக்கவில்லை அவர்கள் இறைத்தீர்ப்பை பொருந்திக் கொண்டார்கள். மதுவை முழுவதும் விட்டொழித்த சான்றோர்களாய்த் திகழ்ந்தார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று..? இறைவனைக் குறித்த அச்சத்தை முதலில் விதைத்தார்கள். பின்னர் படிப்படியாக மது தடை செய்யப்பட்டது. முதலில் மதுவின் தீங்கைப் பற்றி எடுத்துரைத்துபின்னர் இறைவனை ஐவேளைத் தொழும் போது தடைவிதித்து, பின்னர் மதுவை முற்றிலுமாக தடை செய்த போது அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.


இங்கு நாம் கவனிக்கவேண்டிய ஒரு விடயம் என்ன என்பதைப் பாருங்கள்.... மக்கள் தாங்களாகவே ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு மது தடையாக இருப்பதை உணர்ந்து அவர்களாகவே இது இறைவனால் தடைசெய்யப்பட வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இறைவனும் அதை நிறைவேற்றுகிறான்! தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் இஸ்லாம் பரவப் பரவ இதன் கட்டமைப்புக்கும் வருவோர் எல்லாம் மதுவின் தீங்குகளில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள்!
மதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு

புதன், 22 அக்டோபர், 2014

மதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு

மது மற்றும் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குடும்பங்களின் அமைதியையும் சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதை அந்த போதையாளர்கள் உட்பட யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பது கோடிக்கணக்கான தாய்மார்களின் பிரார்த்தனை. இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இந்தத் தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.

பிறகு என்னதான் வழி?

மேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு  மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் தன் இறுதித் தூதர் மூலமாக காட்டிய வழி இதுவாகும்.

தனிமனித நல்லொழுக்கம்
முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.
 இந்த இறையச்சம் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும்  விபச்சாரம் உட்பட எப்பாவத்தையும் கூச்சமின்றி செய்வான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.
இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..
= அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுவது.
= இறைவனின் தூதர்கள் போதித்தபடி  படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன் என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் உன் கடவுள் என்று போதிக்கப்படுவது.
 அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.
இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். அதற்கு இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும்.

அடுத்ததாக இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்பதை கலப்படம் இல்லாமல் கருத்து சிதைவு இல்லாமல் போதிக்கவேண்டும்.

சரி எது தவறு எது என்பதற்கான அளவுகோல்
மனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரன் எவனோ அவன்தான் பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. அவன்தான் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது நம் செயல்களை விசாரிக்க இருப்பவன். மேலும் அவன்தான் தன் படைப்பினங்களுக்கு எது நல்லது எது தீயது என்பவற்றை நுணுக்கமாக அறிந்தவனும் அவைகளின் உரிமைகளை பக்குவமாக பங்கிட்டு அளிக்கக்கூடியவனும் அவனே.
அவன்தரும் அளவுகோலின்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
= “(நபியே!) மதுபானத்தையும்சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது;மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டுஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2:219)

= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் இறைவன்  சபிக்கிறான் என்று கூறினார்கள்.      அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)      நூல்: இப்னு மாஜா 3371
= போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு மறுமையில் நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் புகட்டப்படும்  என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) - நூல்: முஸ்லிம்)
 மது அருந்துவோருக்கு தண்டனை
மதுவை தீமைகளின் தாய் என்று கண்டித்து தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் கூறிச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். அது என்ன? இதோ நபிகளாரின் ஆட்சியின்போது நடந்த சம்பவங்களில் ஒன்று இது:
நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)  (ஆதார நூல்: அஹ்மத் 18610)

மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா? பாதிக்கப்படும் மக்களுக்கு “குடிமகன்களை” தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை

ஆக, நல்லொழுக்கம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கு மனித மனங்களில்  முறையான இறையச்சம் விதைக்கவேண்டும். அதில் நிலைத்திருக்க படைத்த இறைவனுக்கு அனுதினமும் நன்றிகூறும் வழிபாட்டை கற்பிக்கவேண்டும். அவர்கள் தங்கள் அன்றாடப் பொறுப்புகளை நிறைவேற்ற தடையாக நிற்கும் மதுவை அருந்தினால் இம்மையிலும் மறுமையிலும் உண்டாகும் தீமைகள் குறித்து எச்சரிக்கவேண்டும். அவற்றை மீறுவோரின் தீமைகளில் இருந்து பொதுமக்களைக் காக்க அக்குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கும் பொறுப்பை பொதுமக்களிடமே ஒப்படைத்து அதை சட்டபூர்வமாக்க வேண்டும். இதுவே இஸ்லாம் இத்தீமையை ஒழிக்கக் கூறும் வழி.

வியாழன், 16 அக்டோபர், 2014

இஸ்லாத்தில் பலதார மணம்


இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?
பதில்:
இஸ்லாம் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறி. 
1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:
பலதார மணம் என்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளை கொண்டிருப்பது. பலதார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலிகமி (POLYGAMY) என்பார்கள். இரண்டாவது வகை ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். முதலாவது வகை – அதாவது ஆண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது – இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை – அதாவது பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது – முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
2. உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான்.
இன்று உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். மற்ற எந்த வேதப் புத்தகமும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டு திருமணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தவதில்லை. உலகில் இன்றைக்கு காணப்படும் – இந்துக்களின் வேதங்களான – இராமயணமோ – மஹாபாரதமோ – பகவத் கீதையோ – அல்லது கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளோ – அல்லது யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) கிலோ ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள தடை பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. மாறாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேதங்களின்படி ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமெனிலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த இந்து சாமியார்களும் – கிறிஸ்துவ தேவாலயங்களும் – யூதர்களும்தான் – ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என கட்டளையிட்டு – பலதார மணத்திற்கு தடை விதித்தனர்.
இந்து வேதங்களில் குறிப்பிடப்படுபவர்களான தஸரதன் – கிருஷ்ணன் போன்றோர் – பல மனைவிகளை கொண்டிருந்ததாக – இந்து வேதப்புத்தகங்களே சாட்சியம் அளிக்கின்றது. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்;ட மனைவிகளை கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பல மனைவிகளை கொண்டிருந்தார்.
பைபிளில் ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் – கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.
யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர் பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.
1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் – 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் – இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதில் முன்னனி வகிக்கின்றனர்.
முந்தைய காலங்களில் இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமேத் தவிர. இந்து வேதங்கள் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.
இப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.
2. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.
நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.
குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.
மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் கொள்கைகளில் –  செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:
  1. ’ஃபர்லு’- கட்டாயக் கடமைகள்
  2. ‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை
  3. ‘முபாஹ் ‘- அனுமதிக்கப்பட்டவைகள்
  4. ‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.
  5. ‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.
மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.
3. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.
இயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.
யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.
4. கருவிலேயே பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதாலும் – பெண் சிசுவதைகளாலும் – இந்திய மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களே எண்ணிக்கையே அதிகம். மேற்படி நிகழ்வு இல்லையெனில் இந்தியாவிலும் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.
மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து
கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.
5. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.
6. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.
ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.
உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.
மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.
ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.
இஸ்லாத்தில் ஆண்கள் கூடுதலாக நான்கு பெண்கள்வரை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருந்தாலும் – முக்கியமாக பெண்களின் மானத்தை பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது.
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா