இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 அக்டோபர், 2023

பெண்ணினத்திற்கு எதிரான ஊடக முதலைகள்!

 

இஸ்லாம் என்றவுடனேயே அது பெண்களை அடிமைப்படுத்தும் மார்க்கம் என்கின்ற தவறான சித்தரிப்பை ஊடகங்கள் இன்றுவரை வஞ்சகமாகவும் தீவிரமாகவும் செய்து வருகின்றன. அறவே மனசாட்சியற்ற, அற்பமும் நீதி என்பதே இல்லாத ஒரு போக்கு இது என்பதை சுட்டிக் காட்டவே இப்பதிவு! ஆபாசங்களையும் திரையுலக கிசுகிசுக்களையும் பரபரப்பூட்டும் கட்டுக்கதைகளையும் மக்களிடையே பரப்பி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட ஊடக முதலைகளிடம் நியாயம் நீதி இவற்றை எதிர்பார்ப்பது தகாத ஒன்றுதான். இருந்தாலும் நடுநிலையாக சிந்திக்கும் மக்களிடம் உண்மையை கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளதல்லவா?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்ட காலகட்டத்தில் - அதாவது கிபி 625 இல் - அரேபியாவில் பெண்ணடிமைத்தனமும், பெண்கள் போகப்பொருளாக நடத்தப்படும் அவலமும் இருந்து வந்தது. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கக்கூடிய கொடூரமான நடைமுறை கேட்பாரின்றி நடந்து கொண்டிருந்தது! மறுபுறம் உலகின் வேறு பல பாகங்களில் பல்வேறு வடிவில் பென்ணடிமைத்தனங்கள் அரங்கேறிக் கொண்டு இருந்தன.
= பெண்ணுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சை நடத்தி பெண் இகழப்பட்டாள்!
= முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்!
= திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை!
= கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள் பெண்!
= அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்!
= மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள்!
= விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்!
= கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் மதுபோதை வெறிக்கும் பெண்ணின் கற்பு விலைபோனது!
= கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கு ஆளானாள் பெண்!
= இன்னும் பல வடிவங்களில் பெண்ணினத்துக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கும் நிகழ்ந்து கொண்டு இருந்தன.
உலகம் இவ்வாறு இருக்கையில்தான் இஸ்லாம் என்ற கண்ணியமான வாழ்வியல் கொள்கையை அரபு நாட்டு மக்களுக்கிடையே அறிமுகம் செய்து அதன் வாயிலாக பெண்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை சமூகத்திலிருந்து அகற்றி அவர்களை மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் நிலையை உருவாக்கினார்கள் நபிகளார்!
அதற்கான அடித்தளங்களை அன்றே பலமாக இட்டுச் சென்றார்கள் அவர்கள். ஆன்மீக உபதேசம் என்பதோடு நில்லாமல் பெண் விடுதலைக்கும் பெண்ணுரிமைகளுக்குமான உரிய சட்டங்களும் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் உயர்ந்த சமூகத்தையும் நிறுவிச் சென்றார்கள் அண்ணலார்! அதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை கோடிக்கணக்கான பெண்களை – தலைமுறை தலைமுறையாக இஸ்லாம் காப்பாற்றி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை! உண்மையில் எந்த பெண்களைக் குறிப்பிட்டு இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என்று ஊடக முதலைகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனவோ அந்த கோடிக்கணக்கான பெண்கள் உயிர் வாழ்வதே இஸ்லாத்தின் வரவால்தான் என்பதை அறிவார்களா அவர்கள்?
இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
புள்ளிவிவரங்களை கவனியுங்கள்:
சர்வசாதாரணமான பெண் கருக்கொலைகள்:
= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!
= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)
இவ்வாறு உலகெங்கும் பெண்சிசுக்களை அடையாளம் கண்டு இவ்வுலகிற்கு வரவிடாமல் தடை செய்யும் இக்கொடுமை இடையறாது தடுப்பாரின்றி நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் சமூகத்தில் ஏற்பட இருக்கும் விபரீதங்கள் கடுமையானவை. ஆயினும் அரசுகள் எதையுமே கண்டுகொள்ளாமல் வெறும் கண்துடைப்பு அறிக்கைகள் விடுவதோடு நிறுத்திக் கொள்கின்றன. காரணம் அவர்களிடம் இப்பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளும் அவர்களிடம் இல்லை!
ஆனால் அதே உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் – அதாவது முஹம்மது நபிகளாரைப் பின்பற்றும் மக்களை – இக்கொடுமைலிருந்து அவர்கள் தடுத்து வருகிறார்கள் என்பது நிகரற்ற ஒரு வரலாற்று சாதனை அல்லவா? அதுவும் நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்ட மற்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகின்ற பெண் சிசுக்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள்!
இந்நிலையில் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று நம்பப்படும் ஊடகங்களின் பங்கு என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். மேற்கூறப்பட்ட பெண்சிசுக்கொலைகள் மூலம் உண்டாகக்கூடிய ஆபத்துகள் பற்றியும் இவை நிகழாமல் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவர்களின் தார்மீகக் கடமை அல்லவா? மறுபுறம் இஸ்லாம் இப்பிரச்சினைக்கு தரும் தீர்வைப் பற்றியும் நூற்றாண்டுகளாக இவ்விஷத்தில் அது நிகழ்த்திவரும் சாதனை பற்றியும் மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது அவர்களின் தலையாய கடமை அல்லவா?
அவ்வாறு செய்தால் மேற்கண்ட தீமைகளில் இருந்து பெண்ணினமே காப்பாற்றப்பட்டு இருக்கும் அல்லவா? இது
மனித குலத்துக்கு- குறிப்பாக பெண்ணினத்துக்கு – எதிரான மாபெரும் வஞ்சகம் அல்லவா? இவ்வாறு சத்தியத்தை மக்களில் இருந்து மறைத்த குற்றத்திற்காக இறைவன் உங்களை கண்டிப்பாக தண்டிப்பான்!
= நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. (திருக்குர்ஆன் 85:12)
=============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

நபிகளாரை அழவைத்த நபித்தோழர்!


 நபிகளாரை அழவைத்த நபித்தோழர்!

நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாம் வருவதற்கு முந்தைய காலமான அறியாமைக் காலத்து நிகழ்வுகள் பற்றிய பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்.
“இறைத் தூதரே! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள்.
சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.
நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது.
ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்.
அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம், “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் கூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள்.
நபிகளார் செய்த மாபெரும் புரட்சி!
---------------------------------
நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அன்று அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக பதினான்கு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கான பெண் சிசுக்களும் கருக்களும் பெண் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். மானுட வரலாற்றிலேயே ஒரு ஈடிணையில்லாத புரட்சியல்லவா இது!
= மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று திருக்குர்ஆன் வசனம் (81:7-9) எச்சரிக்கிறது.
= "நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்." (திருக்குர்ஆன் 6:151)
===================

வெள்ளி, 13 அக்டோபர், 2023

நபிகள் நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் மின்னூல்


நபிகள் நாயகம்
- வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் 
பொருளடக்கம்:
இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? -43
இறுதி இறைத்தூதரே முஹம்மது நபி (ஸல்) -6
மனங்களை வென்ற மாமனிதர்! -7
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் சுருக்கமான வரலாறு- 8
போதனைகள்:
நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை -20
நபிகளார் போதித்த மார்க்கம் - 27
இறுதித் தூதருக்கு அருளப்பட்ட இறைமறை -30
திருக்குர்ஆனின் மாறாத்தன்மை 31
திருக்குர்ஆனின் தனித்தன்மைகள் 32
இறைத்தூதர்களிடையே நபிகளாரின் தனிச்சிறப்புகள் -35
சாதனைகள்
உலக வரலாறு போற்றும் ஒப்பிலா சாதனையாளர் !-38
நபிகளார் நிகழ்த்திய உலக சாதனைகள்!-340
ஆன்மீக சுரண்டலிலிருந்து உலகைக் காக்கும் சாதனை!-41
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகை இணைத்தவர்!-43
கோடிக்கணக்கான பெண் சிசுக்கொலைகளைத் தடுத்த சாதனையாளர்! -45
பெண்ணுரிமைகளைப் பெற்றுத்தந்த உலக சாதனை!-48
முடியாட்சிக்கு முடிவுகண்ட மாமனிதர்!-51
விமர்சனங்கள்
சத்தியத்துக்கு எதிரான பரிகாசங்கள் – அன்றும் இன்றும்! 53
நூற்றாண்டுகள் கடந்த விமர்சனங்களின் பின்னணி -55
அதர்மவாதிகளின் தொடரும் பயம்- 59
குறை காண முடியாத வாழ்க்கை!-61
விமர்சகர்களைப் புரிந்து கொள்வோம்!-63
சரி எது? தவறு எது? – பிரித்தறியும் அளவுகோல்! -65
நபிகளாரின் மணவாழ்க்கை 
    -குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள் -68
================ 

வியாழன், 12 அக்டோபர், 2023

தற்கொலையில் தவறுண்டா?


 #தற்கொலையில்_தவறுண்டா?

இன்று படித்தவர்களும் பட்டதாரிகளும் உழைத்து பாடுபட்டு உயர் பதவி அடைந்தவர்களும் திடீரென்று அல்லது பொசுக்கென்று தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதை சகஜமாகக் கண்டு வருகிறோம்.
இவர்களை நம்பிய பெற்றோர்களை, உறவினர்களை, பிள்ளைகளை, இவர்களைச் சார்ந்த மக்களை, வேலைசெய்யும் நிறுவனங்களை, வாடிக்கையாளர்களை, மாணவர்களை எல்லாம் துச்சமாக அலட்சியப் படுத்திவிட்டு இவர்கள் செய்துகொள்ளும் தற்கொலை அனைவரையும் சங்கடத்திலும் மீளாத்துயரிலும் ஏமாற்றத்திலும் ஆக்கி விடுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர் இவை ஒவ்வொன்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவற்றை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு அவர் பொசுக்கென போய்விட்டாலும் படைத்தவன் அவரை விடுவதாயில்லை.
மற்ற கொள்கைகளும் மதங்களும் இதை அலட்சியமாகக் கருதக்கூடும். ஆனால் உண்மை இறை மார்க்கம் இஸ்லாம் இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டலைக் கொண்டிருக்கிறது. தற்கொலை கண்டிப்பாக பெரும் பாவம் என்றும் அதற்கு தண்டனைகள் உண்டென்றும் கூறுகிறது.
தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்?
= உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! (அல்குர்ஆன்2:195)
= உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!- (குர்ஆன் 4:29)
இறைவனின் எச்சரிக்கையையும் மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
மட்டுமல்ல, #இறுதித்தீர்ப்பு_நாள் இல் அவற்றுக்கான முழு தண்டனையை அவர் அடைவார்.
"மரணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு...செத்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும்" என்ற மூடமான சிந்தனைதான் இதற்கு காரணம்.
உண்மையில் மரணம், முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள் தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும்.
இடிதாங்கிகளாக வாழும் முஸ்லிம் சமூகம்!
---------------------------------------------------------
முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள்...வசதியாக வாழ்ந்தவர்கள் துரத்தப்பட்டு அகதிகளாக்கப் படுகின்றனர்..பொருட்கள் சூறையாடப் படுகின்றன.. இருந்தும் முஸ்லிம்களில் பெரும்பாலோர் தற்கொலைகளில் தஞ்சம் புகுவதில்லை! .. காரணம்?
இந்தக் குறுகிய வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இந்தத் தற்காலிக உலகத்தை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான் என்ற அடிப்படை உண்மை சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நிச்சயம் சோதிக்கப்படுவோம். இறுதி வெற்றி பொறுமையுடன், சோதனைகளை எதிர்கொண்டவர்களுக்கே என்ற சிந்தனை தாய்ப்பாலோடு சேர்த்து உள்ளத்தில் விதைக்கப் படுகிறது.
"மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (திருக்குர்ஆன் 2:155)
இறைவனிடமே மீளுதல் என்ற அஸ்திவாரம்
---------------------------------------------------------
இறைவன் மீதும் மறுமை மீதும் கொள்ளும் உறுதியான நம்பிக்கையின் காரணமாக வாழ்க்கையில் எத்தனை பெரிய ஆபத்துகள் நேரிட்டாலும் சோதனைகள் அலைக் கழித்தாலும் இவர்கள் மனம் தளருவதில்லை. மறுமையில் இறைவனிடம் மீள இருக்கிறோம், இவற்றிற்கான பரிசுகள் நிரந்தரமான சொர்க்கச்சோலைகளின் வடிவில் காத்திருக்கின்றன என்ற ஆழமான நம்பிக்கை வாழ்க்கையை மன உறுதியோடு எதிர்கொள்ளத் துணைபோகின்றது.
"அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! (திருக்குர்ஆன் 2: 156, 157
==============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 9 அக்டோபர், 2023

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - ப்ரோமோ

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை போன் நம்பர் சேர்த்து பதிவு செய்யுங்கள்.. இந்தியாவில் மட்டுமே இந்த சலுகை.. இலங்கைவாசிகள் www.quranmalar.com என்ற இந்த தளத்தில் இதழின் pdf அவ்வப்போது வாசிக்கலாம்

வியாழன், 5 அக்டோபர், 2023

மனிதகுல ஒற்றுமையை மறுக்கும் ஆத்திகர்கள்


=
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம், இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான், நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) நன்கறிந்தவன், நன்குணர்பவன். (திருக்குர்ஆன் 49:13)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாமறிந்த தொன்மையான முழக்கம். அனைத்து மனித குலமும் ஆதம் என்ற முதல் மனிதர் மற்றும் அவரது துணைவி ஏவாள் (ஹவ்வா) இவர்களின் பின்தோன்றல்களே என்பது அனைத்து ஆப்ரஹாமிய (யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய) மதங்களும் கூறும் பொதுவான கருத்து. ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் சில இடைத்தரகர்கள் தங்கள் மனம்போன போக்கில் இறைவேதங்களில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவும் திரிக்கவும் செய்தார்கள். மனிதன் சக மனிதனுக்கு சமமே மற்றும் சகோதரனே என்ற கருத்தை வன்மையாக மறுத்தார்கள். சுயநல ஆதிக்க சக்திகளுக்கு துணை போனார்கள்.

அதனால் உலகெங்கும் நலிந்த நாடுகளை தங்கள் ஆயுத பலத்தால் கீழடக்கி அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த காலனி ஆதிக்க சக்திகளுக்கு குற்ற உணர்வே சற்றும் எழுந்ததில்லை. ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வசித்த பழங்குடியினரும் அப்பாவிகளும் சக மனிதர்களே – தங்களைப் போன்ற உணர்வுகள் கொண்டவர்களே- என்ற சகதாபம் அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எனவே நிராயுதபாணிகளாக நின்ற அவர்களை இலட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். ஆப்பிரிக்காவின் அப்பாவிக் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்றார்கள். இலாபம் ஈட்டினார்கள்.

நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்து வந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள் உள்ளன என்ற அச்சமோ அவர்களுக்கு துளியும் இருக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்ககூடும்?

இறைவேதங்களில் இனவெறி

காலனி ஆதிக்க கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் யூதர்கள். இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது. நமக்குத் தெரிந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company) ரோத்சைல்ட் (Rothchild) என்ற யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.

யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை. இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய - கண்ணியம் வாய்ந்த - இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே, அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும், யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

தல்முத் (Talmud)
யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles) ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

“All children of the ‘goyim’ (Gentiles) are animals.” (Yebamoth 98a)
= புற ஜாதியினரின் மக்கள் அனைவரும் விலங்குகளே (Yebamoth 98a)

= ஒரு புறஇனத்தான் யூதனைத் தாக்கினால் அவனுக்கு மரணமே தண்டனை. ஒரு யூதனை தாக்குவது என்பது கடவுளின் பார்வையில் கடவுளை தாக்குவது போன்றதாகும். (Sanhedrin 58b).

= புறஇனத்தினர் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் இஸ்ரேலுக்கு இறைவன் வழங்கிய தனி சிறப்பே காரணமாகும். (Yebamoth 63a).

= ஒரு யூதன் புறஇனத்தான் செய்யும் வேலைக்குக் கூலி கொடுக்க வேண்டியதில்லை. (Sanhedrin 57a)

= புறஇனத்தான் ஒருநாள் முழுக்க ஓய்வெடுத்தால் அவன் கொல்லப்படவேண்டும். (Sandendrin 58b).

= புற இனத்தானை உபசரிப்பது கடவுளை அதிருப்திப் படுத்தும் செயலாகும் (Sanhendrin 104a).

= புறஇனத்தானுக்கு சட்டம் கற்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். (Hagigah 13a).

= சட்டம் கற்கும் புறஇனத்தான் கொல்லப்பட வேண்டியவன். (BT Sanhedrin 59a)


================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

புதன், 4 அக்டோபர், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 23 இதழ் PDF


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 23 இதழ்

இதழ் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை எண்ணுக்கு SMS மூலம் அனுப்புங்கள் - தனி இதழ் விலை ரூ. 10 - நான்கு மாத சந்தா இலவசம்.   

பொருளடக்கம்:

மானுட சமத்துவத்தை பறைசாற்றும் வேதம்-2

கட்டாயம் படிக்க வேண்டிய வேதம்! -4

சிறுவருக்கு நபிகளாரின் அறிவுரை! -6

எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே? -7

திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா? -9

கருணையாளனின் அரவணைப்பில் நபிகளார் -11

நபியவர்களின் அழகிய செயல்பாடு -15

குழந்தைகளுக்குத் தேவை வாழ்க்கை பற்றிய கல்வி! -17

மனிதகுல ஒற்றுமையை மறுக்கும்  ஆத்திகர்கள் ! -21

மனஅழுத்தமும் தற்கொலையும் -22

செவ்வாய், 3 அக்டோபர், 2023

அதர்மப் போரும் தர்மத்திற்கான போரும்!

 காட்சி ஒன்று

"ஜனாதிபதி அவர்களே...! நேற்று இரவு நன்றாகத் உறங்கினீர்களா?" - இது செய்தியாளர்களின் கேள்வி.

"ஆமாம்...! எப்போதையும் விட நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள்தான் இப்போது பலம் வாய்ந்தவர்கள்." - இப்படி பதில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன்.

இதற்கு முதல் நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. நாகசாகி, ஹிரோஷிமா எனும் இரு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தோம் என்று அறியாமலேயே இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்.

எல்லா வகையான போர் தர்மங்களையும், சர்வதேச சட்டங்களையும், மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்கு தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரம் இது...!

அன்று வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சுக்களால் இன்றைக்கும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய், பிறவியிலேயே ஊனம் போன்ற பல நோய்கள் வாட்டி வருகின்றன.

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பிறகுதான் ஜனாதிபதி நிம்மதியாக உறங்கினாராம்...!

===================

காட்சி இரண்டு:

அது ஒரு போர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துடித்துப் போய் விட்டார்கள்.

அந்த இடத்துக்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்கள். "இவள் போர் செய்யவில்லையே! பிறகு ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்? "இவ்வாறு கேட்டு, போர் சமயத்திலும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் கொடூரப் போர்க்களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான போர் ஒழுங்கு முறைகளை

வகுத்துத் தந்து விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் கூறினார்கள்:

* போரில் பங்கு கொள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொள்ளாதீர்கள்.

* மடங்களில் உள்ள துறவிகளையும், வணக்கத்தலங்களில் இருக்கும் மக்களையும் கொல்லாதீர்கள்.

* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

* விளை நிலங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.

இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள்!

இவை எல்லாவற்றையும் விட திருக்குர் ஆனில் ஓர் அருமையான வசனம் உண்டு. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

" நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கொலை செய்து விட்டால் அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். எவன் ஒருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போலாவான்!"

(திருக்குர் ஆன் - 5:32)

அநியாயமாக மனித இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் போர் மேகங்கள் சூழுமேயானால் அப்போதும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - அக்டோபர் 23 இதழ்



திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- அக்டோபர் 23 இதழ்  

Qnm October  2023

மானுட சமத்துவத்தை பறைசாற்றும் வேதம்-2

கட்டாயம் படிக்க வேண்டிய வேதம்! -4

சிறுவருக்கு நபிகளாரின் அறிவுரை! -6

எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே? -7

திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா? -9

கருணையாளனின் அரவணைப்பில் நபிகளார் -11

நபியவர்களின் அழகிய செயல்பாடு -15

குழந்தைகளுக்குத் தேவை வாழ்க்கை பற்றிய கல்வி! -17

மனிதகுல ஒற்றுமையை மறுக்கும்  ஆத்திகர்கள் ! -21

மனஅழுத்தமும் தற்கொலையும் -22

======================

மானுட சமத்துவத்தை பறை சாற்றும் வேதம்

வேதம் என்றால் அது இறைவனின் வார்த்தைகள் அடங்கிய புத்தகம் என்றறிவோம். இவ்வுலகைப் படைத்தவன் மனிதர்களோடு உரையாடும் வசனங்களின் தொகுப்பைக் கொண்டதாக இருக்கும்.   

= ஆனால் வேதம் என்ற பெயரில் அறியப்படும் சில புத்தகங்கள் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றதாழ்வுகளை கற்பிப்பதை நாம் அறிவோம்.

= மனிதர்களில் ஒரு சாராருக்கு மட்டுமே வேதம் படிக்கும் உரிமை வழங்கி மறுசாராருக்கு அவ்வுரிமை மறுக்கப்படுவதையும் நாம் அறிவோம்.

= அவ்வாறு உரிமை மறுக்கப்படும் சிலரில் யாராவது அந்த வேதத்தை ஓதி விட்டால் அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற  சட்டங்களை அவை கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

அவை வெற்று புத்தகங்களாக இருந்தால் நாம் அவற்றைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவற்றின் அடிப்படையில் ஆதிக்க சக்திகள் சட்டங்கள் வகுத்து நலிந்தோர் மீதும் பொதுமக்கள் மீதும் அநீதி இழைக்கும்போது அவை வெறும் புத்தகங்கள்தானே என்று கடந்து செல்ல முடிவதில்லை.  

இறைவன் இப்படிப்பட்ட சட்டங்களை வழங்கி இருக்க வாய்ப்பே இல்லை. மாறாக மனிதர்களில் ஒரு சாரார் இறைவனின் பெயரால் மற்ற மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக திணிக்கப்பட்டவை என்றே நாம் ஊகிக்க முடிகிறது.

 

இவ்வுலகைப் படைத்த இறைவனின் உண்மை வேதம் அவ்வாறு மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கவோ தீண்டாமை கற்பிக்கவோ அநீதிக்கு துணைபோகவோ செய்வதில்லை. 

உண்மை வேதத்தின் முக்கிய தன்மைகள்:

  1. அது முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளை மட்டுமே கொண்டிருக்கும்.
  2. மனித வார்த்தைகளோ இடைச்செருகல்களோ கலக்காதிருக்கும்.
  3. மூல மொழியிலேயே பாதுகாக்கப் பட்டிருக்கும்.
  4. மனித வாழ்கையின் நோக்கம், இம்மை மற்றும் மறுமை வாழ்கைக்கான தெளிவான வழிகாட்டுதல்கள் அங்கே கிடைக்கும்.
  5. நன்மை எது தீமை எது என்பதை பிரித்தரிவிக்கக் கூடியதாக இருக்கும்.
  6. அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான வாழ்வியல் வழிகாட்டுதலையும் சட்டங்களையும் கொண்டதாக இருக்கும்.
  7. ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற அடிப்படையையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்று மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவதாக இருக்கும்.
  8. பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அது சொல்லித்தரும்.

அந்த வகையில் இன்று இறுதி வேதமாக வந்துள்ள திருக்குர்ஆன் மேற்படி அனைத்து தன்மைகளையும் கொண்டதாக விளங்குவதை நீங்கள் காணலாம்.

சமத்துவத்துக்கான அடிப்படை

இறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. அத்துடன் நில்லாமல் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றோரிடையே அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுவதை உலகம் அறியும்.

=
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(
அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

உலகெங்கும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர் அன்றாடம் ஐவேளை தோளோடு தோள் சேர்ந்து நின்று நிறைவேற்றும் தொழுகைகளில் இதைக் காணலாம். இஸ்லாம் என்ற வாழ்வியலை ஏற்ற மக்களிடையே இனம் நிறம் மொழி நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து உருவாகும் உலகளாவிய சகோதரத்துவமும் இதற்கு சான்று.

ஒன்றே மனித குலம்ஒருவனே இறைவன்அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம்நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே திருக்குர்ஆன் விழைகிறது.

மேற்படி அடிப்படையில் மக்கள் சுய சீர்திருத்தம் மேற்கொண்டு கொலை,  கொள்ளைவிபச்சாரம்மதுசூதாட்டம்மூடநம்பிக்கைகள்தீண்டாமைமனித உரிமை மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி அங்கு தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் பேணக்கூடியதீமைகளில் இருந்து விலகி வாழக்கூடியஇனநிறமொழி,நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து  மனித சமத்துவம்சகோதரத்துவம் பேணக்கூடியபரஸ்பர அன்புதியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள் அமைந்த சமூகம் உருவானால் இவ்வுலகமே அமைதிப் பூங்காவாகாதா?  

=================

கட்டாயம் படிக்க வேண்டிய வேதம்!

தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவன் வேதத்தைப் படிக்கக் கூடாது. மீறி அவன் படித்தால் அவனது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுகிறது ஒரு சாராரால் வேதமாக மதிக்கப் படும் புத்தகம்! அதை சட்டமாக்கி நாட்டில் அமுல் படுத்தவும் செய்ய துணை போனது அது. ஆனால் உண்மை இறைவேதம் அதற்கு நேர் மாற்றமாக அனைவரும் இதைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது.

ஏன் படிக்க வேண்டும் என்பதை அறியும் முன் அதன் சிறப்புகளை கவனியுங்கள்:

உண்மை இறைவேதத்தின் சிறப்புகள்:

·        உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1445 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது!

·        மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம் நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி வேதம் அது!

·        உலகில் வேறெந்த நூல்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்!

·        மிக மிக உயர்ந்தவனே தனது ஆசிரியன் என்று வாதிடுகிறது அது!

45:2. இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது.

·        நூறு சதவீதம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!

2:2 இது (இறைவனின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

·       முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!

4:82  அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

·       மனிதகுலம் அனைத்தையும் அழைத்து உபதேசிக்கிறது அது!

10:57 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் இறைவிசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது.

·       பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது அது!

38:29 (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
45:20. இது மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும் உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கிறது


·       ஏற்காதவர்களை எச்சரிக்கவும் செய்கிறது!

2:23-24 இன்னும் நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது இதை மறுப்பவர்களுக்காக சித்தப்படுத்தப்பட்டுள்ளது.


ஆம் அன்பர்களே! பகுத்தறிவுக்கு சவால் விடுத்து தன்னை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்நூல்தான் திருக்குர்ஆன்! இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் நம் அனைவருக்காகவும் அனுப்பிய இறுதி வேதமே அது! 

·       இந்த வேதத்தை நாம் யாரும் அலட்சியம் செய்ய முடியாதுஒவ்வொருவரும் கட்டாயமாக படித்தே ஆக வேண்டும்!

கட்டாயமாக படிக்க வேண்டுமாஏன்?
ஆம்ஏனெனில் இது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனிடமிருந்து நமக்கு அனுப்பப்பட்ட கடிதம்! நம்மை எதற்காக அவன் படைத்தான்நாம் எப்படி இங்கு வாழ வேண்டும்அவ்வாறு வாழ்ந்தால் அதன் பயன்கள் என்னவாழாவிட்டால் என்ன விளைவுகள் உண்டாகும்என்பன பற்றியெல்லாம் உறுதியான மொழியில் சந்தேகத்துக்கு இடமில்லாத முறையில் நம் இறைவனே எடுத்துரைக்கும் வேதம் இது!
மேலும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை தற்காலிகமானது என்றும் இங்கு இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் அவர்களுக்கு பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்றும் கட்டுப்படாமல் தான்தோன்றிகளாக வாழ்வோருக்கு தண்டனையாக நரக வாழ்வு உண்டு என்றும் எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அவை இறைவனுக்குப் பொருத்தமானவையாக இருந்தால் அவை புண்ணியங்களாகவும் அவன் தடுத்தவையாக இருந்தால் அவை பாவங்களாகவும் பதிவாகின்றன.
இறுதித் தீர்ப்பு நாளின்போது புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே புண்ணியம் எது பாவம் எது என்பதை இன்று தெளிவாக பிரித்தறிவிக்கும் வேதமாக வந்துள்ளது திருக்குர்ஆன்.

 

  மேற்கண்ட காரணங்களால் இன்று இப்பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இதைக் கட்டாயமாக படித்தால் மட்டும் போதாது பின்பற்றி வாழவும் கடமைப்பட்டுள்ளான்!

===============

எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே?


எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே அவற்றைப் பின்பற்றினால் போதாதா? ஏன் திருக்குர்ஆனை நாங்கள் படிக்க வேண்டும்? என்ற கேள்வி மாற்றுமத அன்பர்களின் உள்ளங்களிலும் எழும் ஒன்று. அதற்கான விடை இதுவே:
எங்கள் வேதம் உங்கள் வேதம் என்று ஏதும் இல்லை. அனைத்துமே நம் வேதங்களே! ஏனெனில்நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப் பட்டு உலகெங்கும் பல்கி பெருகியவர்களே.

திருக்குர்ஆன் திட்டவட்டமாக இதைச் சொல்கிறது:

= “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்இன்னும்ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான்நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) நன்கறிந்தவன்நன்குணர்பவன். (திருக்குர்ஆன் 49:13)

நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறதுஅதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளதுஅந்த மார்க்கத்திற்குப் பெயர்தான் ‘இஸ்லாம்’ என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறதுமாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.

முன்னர் வந்தவை பின்னர் வந்தவை

ஆக, வேதங்களைப் பொறுத்தவரையில் முன்னர் வந்தவை பின்னர் வந்தவை என்று மட்டுமே பிரிக்கலாம். ஏனெனில் அனைத்துமே ஒரே இறைவனால் அருளப்பட்டவையே! முந்தைய இறைவேதங்கள் அக்காலத்து மக்களுக்காக அருளப்பட்டவையாதலால் அவை காலாவதியாகிவிட்டன. அது மட்டுமல்ல அவ்வேதங்கள் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் பிற்கால மக்களால் மாற்றப்பட்டன. இன்று முந்தைய வேதங்கள் என்று அறியப்படும் நூல்களில் மூலமொழியில் கிடைப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்!

இன்று நாம் இவ்வேதங்களில் எது இறுதியாக வந்ததோ அதை அறிந்து நாம் அனைவரும் பின்பற்றியாக வேண்டும்.

உதாரணமாக ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் சாசனங்கள் (constitution) இருப்பதை அறிவீர்கள். புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும்போது பழையது காலாவதியாகி விடும். நாட்டின் சட்டங்களும் அதன் அடிப்படையிலேயே அமையும்.

இன்னொரு உதாரணமாக ஒரு நகரத்தின் சாலைவிதிகளை எடுத்துக் கொள்வோம். போக்குவரத்து அதிகாரிகள் இருவழிப்பாதையாக இருந்த ஏதேனும் ஒரு சாலையை போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று முதல் ஒருவழிப் பாதையாக அறிவித்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வோம். அந்த சாலையில் இனிமேல் அனுமதிக்கப்பட்ட வழியில்தான் செல்ல வேண்டி வரும். யாரும் இனி எதிர் வழியில் செல்ல முடியாது. சென்றால் அது சட்டப்படி குற்றமும் தண்டனைக்கு உரியதுமாகும். “கடந்த 10 வருடமாக நான் இப்படித்தான் செல்கிறேன். என்னை அனுமதியுங்கள்’ என்று யாரும் வழக்காட முடியாது. அதைப் போன்றதுதான் இறைவேதம் என்பதும். இறைவனிடமிருந்து எது இறுதியாக வந்ததோ அதை அனைத்து மக்களும் பின்பற்றியாக வேண்டும். அதுதான் மோட்சத்துக்கு உரிய வழியாகும்! அதன் அடிப்படையிலேயே இறுதித்தீர்ப்பு நாளன்று நமது நன்மைகளும் தீமைகளும் புண்ணியங்களும் பாவங்களும் தீர்மானிக்கப் படும்.

= மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்இன்னும் அந்த (இறுதிநாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாதுநிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும். (திருக்குர்ஆன் 31:33) 

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரேஇறைவன் என்பது பொருள்.)

 

==================
திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா?
இல்லை. சுமார் 1445 வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் மக்கா நகரில் வாழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு அவரது 40 வயது முதல் அவர் மரணித்த 63-வது வயது வரைப்பட்ட காலகட்டத்தில் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. தனது கவிதையும் உரையும் கலந்த ஒரு ஒப்பற்ற நடையால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலம் முதலே மக்கள் மனங்களைக் கவர்ந்தது. இறைவிசுவாசிகளால் அது அடிக்கடி ஒதப்படலானது.


திருக்குர்ஆனின் வசனங்கள் மூலமொழியிலேயே உலகெங்கும் முஸ்லிம்களால் அவர்களது ஐவேளைத் தொழுகைகளிலும் தொழுகைக்கு வெளியேயும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதை நீங்கள் காணலாம். குறிப்பாக ரமலான் திங்களில் பெரும்பாலோர் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பர். 'குர்ஆன்என்ற பதத்தின் பொருளே 'ஓதப்படும் ஒன்றுஎன்பதுதான்.
பக்குவமாகப் பாதுகாக்கப்படும் வேதம்
இறங்கிய காலம் முதல் இன்று வரை உலகெங்கும் எண்ணற்ற மக்களால் மனனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருக்குர்ஆனின் மூலவசனங்கள் ஒலி வடிவிலேயே உலகெங்கும் மனித மனங்களிலும் திருக்குர்ஆன் பிரதிகளிலும் பாதுகாக்கப் படுகிறது. உலகில் எந்த மூலையில் எம்மொழியில் நீங்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை எடுத்துப் பார்த்தாலும் அதில் அரபு மொழி மூலத்தையும் காணலாம்.

இறைவனே ஏற்றிருக்கும் பாதுகாப்பு


உலகம் அழியும் நாள் வரை உலக மக்களுக்கு இதுதான் வேதம் என்பதால் இறைவனே இதன் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்றிருக்கிறான்.
= திண்ணமாக இந்த நல்லுரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம். (திருக்குர்ஆன் 15:9)


இன்று காணக்கிடைக்கும் முந்தைய வேதங்களின் பிரதிகளை நீங்கள் எடுத்துப் பார்பீர்களானால் வெறும் மொழி பெயர்ப்புகளைத்தான் பார்க்க முடியும் மூலத்தைக் காண முடியாது. அதற்கு மூல வசனங்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதும் மூல மொழிகளே இன்று இறந்துபோன மொழிகளாக உள்ளன என்பதுமே காரணம்!


திருக்குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதா?
இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. இவ்வேதத்தில் முஹம்மது நபி உட்பட எந்த மனிதர்களின் வார்த்தையும் எள்ளளவும் கலக்காமல் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மற்றும் அவரைப் பற்றிய செய்திகள் அவரது தோழர்களால் பதிவு செய்யப்பட்டு 'ஹதீஸ்என்று தனி தொகுப்பாக விளங்குகின்றன.

 ================

''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்)அவர்கள் அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: முஸ்லிம்அஹமத்அபூதாவூத்திர்மிதி)

==================

அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

“ ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில் அவன் தனக்கு அவசியம் இல்லாத்தை விட்டு விடுவது ஒன்றாகும் “ என்று நபி ஸல் கூறினார்கள் ( திர்மிதீ

====================  

கருணையாளனின் அரவணைப்பில் நபிகளார்   

திருக்குர்ஆன் அத்தியாயம் ளுஹா (93),

இறை வசனங்களின் பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) முற்பகலின் மீது சத்தியமாக!

(2) இரவின் மீதும் சத்தியமாக.அது அமைதியாக வந்தடையும்போது!

(3) (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை! உம்மைக் கோபிக்கவும் இல்லை.

(4) மேலும் திண்ணமாக பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட உமக்குச் சிறந்தது.

(5) மேலும் விரைவில் உம் இறைவன்நீர் திருப்தி கொள்ளும் அளவு உமக்கு வழங்குவான்.

(6) அவன் உம்மை அநாதையாகக் காணவில்லையாபிறகு புகலிடம் தந்தானல்லவா?

(7) மேலும் அவன் உம்மை வழியறியாதவராகக் கண்டான்.பிறகு நேர்வழி காண்பித்தான்.

(8) மேலும் அவன் உம்மை ஏழையாகக் கண்டான்.பிறகு செல்வந்தராய் ஆக்கினான்.

(9) ஆகவே நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்.

(10) மேலும் யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.

(11) மேலும் உம் இறைவனின் அருட்கொடை பற்றி எடுத்துரைப்பீராக!

இந்த இறைவசனங்கள் அருளப்பட்டதன் பின்னணி:

நபிகளாருக்கு அவரது நாற்பதாவது வயதில் இருந்து மரணிக்கும் வரை உள்ள கால கட்டத்தில் அவருக்கு சிறிது சிறிதாக இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் மூலமாக இறக்கியருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்புதான் திருக்குர்ஆன் என்பதை அறிவீர்கள். இவ்வாறு இறைவசனங்களின் பகிர்வுக்கு வஹி என்று வழங்கப்படும்.

ஆரம்ப காலங்களில் நபிகளார் ஹிரா குகையில் தங்கியிருந்த ஒரு நாள் இரவில் வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி வஹி எனும் இறையருட் செய்தியை அறிவித்தார். அதுதான் “ஓதுவீராகபடைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு..” என்று தொடங்கும் ஐந்து வசனங்கள். இவை திருக் குர்ஆனில் சூரத்துல் அலக் எனும் 96 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. அன்று முதல் வானவர் தலைவர் ஜிப்ரீல்வஹியின் மூலம் இறைவனின் வேத வாக்குகளை நபி(ஸல்) அவர்களுக்கு அருளிக் கொண்டிருந்தார்.

மக்களின் இதயங்களில் அறிவுச் சுடரைப் பரவச் செய்த பாக்கியமிக்க அந்நேரம் முதற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். இப்பேரண்டத்தின் அதிபதியாகிய அல்லாஹ்குர்ஆன் வசனங்கள் மூலம் அவர்களுடன் உரையாடியதே அதற்குக் காரணம்.

அப்போதிருந்து சதாவும் ஜிப்ரீலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நபியவர்கள். ஆனால் ஜிப்ரீல் வருகை தருவதும் வஹி அருளுவதும் திடீரெனத் தாமதமானது. அதனால் சில நாட்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனம் துயரத்திற்குள்ளானது.

கேலிபேசும் இறைமறுப்பாளர்கள்

வஹி தாமதமான செய்தியை அறிந்த மக்கத்து இறைமறுப்பாளர்கள் நபியவர்களின் தூதுத்துவத்தை அலட்சியமாகக் கருதினார்கள். கேலி பேசத் தொடங்கினார்கள்: "முஹம்மதை இறைவன் கைவிட்டு விட்டான்.வெறுத்து விட்டான்போல் தெரிகிறதே. அதனால்தான் வஹி வருவது நின்று விட்டதோ?" என்றெல்லாம் கூறி எள்ளி நகையாடினார்கள்.

இந்நிலையில்தான் இறைவன் இந்த அத்தியாயத்தை இறக்கியருளி நிராகரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏளனப்பேச்சுக்கும் மறுப்பளித்து முற்றுப் புள்ளி வைத்தான். அதனால் நபியவர்களின் தூய மனத்திற்கு ஆறுதல் கிடைத்தது. இறைவனிடத்தில் அவர்களுக்கு இருந்த உயர் பதவிஉன்னத அந்தஸ்து பற்றிய விளக்கமும் அதில் அளிக்கப்பட்டது.

வசனங்களின் விளக்கம்:

(1) முற்பகலின் மீது சத்தியமாக!

(2) இரவின் மீதும் சத்தியமாக.அது அமைதியாக வந்தடையும்போது!

(3) (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை! உம்மைக் கோபிக்கவும் இல்லை.
பகலின் ஆரம்ப சில மணி நேரங்கள் மனத்திற்கு மகிழ்ச்சியாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்! இதுபோன்றே இப்புவி மீது கருகருவென இருள் படர்ந்து வரக்கூடிய இரவும் அமைதிக்குக் கட்டியங் கூறக்கூடிய அருமையான நேரம்தான்!

இவ்விரு கால நேரத்தின் மீதும் சத்தியம் செய்வதன் நோக்கம் பின்வரும் ஒரு பேருண்மையை உணர்த்துவதற்காக இருக்கலாம்.  தொடங்கியிருக்கும் பகலுக்கும் அடர்ந்துவரும் இரவுக்கும் பின்னடைவு இல்லை என்பது போன்று வஹியும் இனி தொடரத்தான் செய்யுமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பறுந்து போகாது! கருணைமிக்க இறைவன் காருண்ய நபியவர்களை வெறுத்திடவில்லை.அவர்கள் மீது அவனுக்கு எந்தக் கோபமும் இல்லை.

நபிகளாருக்கு கிடைக்க இருக்கும் பாக்கியங்கள்

(4) மேலும் திண்ணமாக பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட உமக்குச் சிறந்தது.

(5) மேலும் விரைவில் உம் இறைவன்நீர் திருப்தி கொள்ளும் அளவு உமக்கு வழங்குவான்.

நபியவர்களுக்காக இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் பாக்கியங்களை இறைவன் தயார் செய்து வைத்துள்ளான். மனித குலம் முழுவதற்கும் அவர்களை தன் தூதராக அனுப்பி வைத்து அவர்களுக்கு இறைவன்  அளித்த கண்ணியத்திற்கும் மேன்மைக்கும் அளவே இல்லை!
மறுவுலகமும் நபியவர்களுக்கு இன்னும் சிறப்பாகவே அமையும். இறைவன் தன் தூதருக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அருட் பாக்கியங்களையும் அங்கு வழங்குவான். அவர்களைப் பின்பற்றக்கூடிய முஸ்லிம்களுக்கும் நிறைவாகவே அருளுவான். இவ்வாறு இறைவன் வழங்கும் மகத்தான அருட்கொடைகளை நபி (ஸல்) அவர்கள் பொருந்திக் கொள்வார்கள்.

இறைவனின் கருணை பற்றி நிராசை வேண்டாம்!

(6) அவன் உம்மை அநாதையாகக் காணவில்லையாபிறகு புகலிடம் தந்தானல்லவா?

குழந்தைப் பருவம் முதற்கொண்டே நபியவர்களை இறைவன் கைவிட்டு விடவில்லை. ஆம்அநாதையாகப் பிறந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பராமரித்து வளர்ப்பதற்கென அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபை இறைவன் ஏற்பாடு செய்தான். அவர் மரணம் அடைந்தபொழுது எட்டு வயதுச் சிறுவராக இருந்த நபியவர்களைபெரிய தந்தை அபூ தாலிப் தனது பராமரிப்பில் ஏற்றார்.

(7) மேலும் அவன் உம்மை வழியறியாதவராகக் கண்டான்.பிறகு நேர்வழி காண்பித்தான்.

அதன் பிறகு நபியவர்கள் சத்திய நெறி குறித்து சீரிய சிந்தனையில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் நபியவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சிலைகளை வணங்கியதில்லை. அவற்றை நம்பியதும் இல்லை.

பிறகு நபியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சத்திய பாதையின் பக்கம் இறைவன் அவர்களுக்கு வழிகாட்டினான். அதன் பக்கம் மனித குலத்திற்கு அழைப்பு விடுக்கும் தூதராகவும் அவர்களை அனுப்பிவைத்தான்.

(8) மேலும் அவன் உம்மை ஏழையாகக் கண்டான்.பிறகு செல்வந்தராய் ஆக்கினான்.

ஏழையாக இருந்த நபியவர்களுக்கு இறைவன் உதவினான். ஆம்அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபின் செல்வத்தின் மூலம் தேவைகள் நிறைவேறச் செய்தான். பிறகு அவர்களின் அன்பு மனைவி கதீஜா (ரலி)அவர்கள் தம் செல்வம் முழுவதையும் அவர்களிடம் அளித்தார்கள். இதேபோல் பைத்துல் மால் எனும் முஸ்லிம்களின் பொதுநிதியை இறைவன் நபியவர்களின் அதிகாரத்தில் ஒப்படைத்தான். நபியவர்கள் தம்மிடம் இருந்த எல்லாச் செல்வங்களையும் ஏழை எளிய மக்களுக்காகவே செலவு செய்தார்கள்.

தூதருக்கு மூன்று அறிவுரைகள்

(9) ஆகவே நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்.

(10) மேலும் யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.

(11) மேலும் உம் இறைவனின் அருட்கொடை பற்றி எடுத்துரைப்பீராக!

இந்த அருட்கொடைகளுக்கு பதிலாகத் தன் தூதருக்கு மூன்று அறிவுரைகள் கூறுகிறான் இறைவன் :

1) நபியே! அநாதைகள் மீது இரக்கம் காட்டுங்கள். கிருபை செய்யுங்கள். அவர்களுடன் அன்பாக நடக்குமாறு முஸ்லிம்களுக்கு ஆணையிடுங்கள்.

2) யாசகம் கேட்பவருடன் மென்மையைக் கடைப்பிடியுங்கள். அவர்களை விரட்டாதீர்கள். அத்தகைய உயர் பண்பைக் கடைப் பிடிக்குமாறு முஸ்லிம்களை ஏவுங்கள்.

3) இறைவன் வழங்கிய அருட்கொடைகள் பற்றி எடுத்துக் கூறுங்கள். அதற்காக இறைவனுக்கு நன்றிசெலுத்துங்கள்இறையருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் உயர் பண்பாட்டை முஸ்லிம்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.

====================

நபியவர்களின் அழகிய செயல்பாடு

(9) ஆகவே நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்.

(10) மேலும் யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.

(11) மேலும் உம் இறைவனின் அருட்கொடை பற்றி எடுத்துரைப்பீராக! (திருக்குர்ஆன் 93: 9-11)

இறை கட்டளைகளை நபியவர்கள் எப்படி செயல் படுத்தினார்கள் என்பதை அவர்களின் அழகிய வரலாற்றில் காணலாம்.

    1. அனாதைகள் அரவணைப்பு

நபி (ஸல்) அவர்கள் அநாதைகளை அரவணைத்துப் பாதுகாத்தார்கள் என்பது மட்டுமல்ல அநாதைகளுக்கு ஆதரவு நல்குமாறு பிற மக்களையும் ஏவினார்கள்.

= நபியவர்கள் நவின்றார்கள்: "நானும் அநாதைகளைப் பாதுகாப்பவரும் சுவனத்தில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம். அந் நிலையைதம் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டி விளக்கினார்கள்;" (நூல்: புகாரி)-

இது அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கூலியாகும்.

    1. நபியவர்களின் தர்மம்

யாசகமோ உதவியோ கேட்டு வந்த எல்லோருக்கும் நபியவர்கள் வழங்கி மகிழ்ந்தார்களே தவிர எதுவும் இல்லை என்று சொல்லி யாரையும் திருப்பி அனுப்பியதில்லை.

நபிகள் நாயகம் மதீனா நகரில் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடந்தவை சில சம்பவங்களைப் பாருங்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோகோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.

'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாதுஎன்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண்ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்குவேன்என்று கூறுவதிருந்து புகழையும்மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

= ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், ‘சாதரணமாக இருப்பீராக’ உலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன் தான் நான்’ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா 3303)

 3. இறைவனுக்கு நன்றி செலுத்துதல்

இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலும் நபியவர்களின் வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது. நாவினால் மட்டுமல்ல இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தும் அழகிய வணக்க வழிபாட்டின் மூலமும் அவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

ஆம்இரவு நேரங்களில் கால் கடுக்க நின்று வெகு நேரம் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தபோதுஏன் இவ்வாறு உடலை வருத்துகிறீர்கள் என்று கேட்டதற்குநான் நன்றி செலுத்தக்கூடிய அடியானாகத் திகழ வேண்டாமாஎன்று பதில் சொன்னார்கள் பூமான் நபியவர்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

=========================

குழந்தைகளுக்குத் தேவை வாழ்க்கை பற்றிய கல்வி

 

நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும்நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115)

தற்கொலை செய்துகொள்ளும் நபரைப் பொறுத்தவரையில் அவர் எதையுமே இழப்பதில்லை என்று அவர் கருதலாம். ஆனால் அந்த ஒரு  ஆளுமையை உருவாக்க வேண்டி அவ்வளவு காலம் இரவுபகலாக உழைத்த பெற்றோர்கள் சந்திக்கும் அதிர்ச்சியை அல்லது இழப்பை அவ்வளவு இலேசாக எடுத்துக்கொள்ள முடியுமாஅப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு ஏற்படாமல் இருக்க அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?

தற்கொலை உணர்வு:

தோல்விகள் அல்லது இழப்புக்கள் அல்லது அவமானங்கள் வரும்போது தனக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வுமனிதனில் நிராசையையும் விரக்தியையும் தூண்டும் காரணியாகும். தொடர்ந்து வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்வும் தன் வாழ்வை முடித்துக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் என்ற அறியாமை உணர்வும் எல்லாம் சேர்ந்து தற்கொலைகளாக அரங்கேறுகின்றன. 

 ஆனால் அதேவேளையில் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை மனிதனுக்கு நினைவூட்டினால் அவனுள் தற்கொலை உணர்வே எழாமல் பாதுகாக்கலாம். 

படைத்தவனையும் அவன் நெருக்கத்தையும் அறிதல் 

நம்மை இவ்வளவு பக்குவமாக படைத்ததோடு நில்லாமல் நம்மை சற்றும் கைவிடாமல் அயராது பரிபாலித்து வரும் அவனது இறைவனைப் பற்றிய அறியாமையே நமக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வுக்குக் காரணம். 

இறைவனைப்பற்றிய தவறான கருத்துக்கள் 
ஒருபுறம் இறைவனே இல்லை என்று சொல்லும் நாத்திகமும் மறுபுறம் இறைவன் அல்லாத அற்பமான படைப்பினங்களைக் காட்டி அவைகளே கடவுள்கள் என்ற தவறான சித்தரிப்பும் இறைவனைப் பற்றிய அறியாமையை மக்களிடையே வளர்க்கின்றன. பகுத்தறிவை பயன்படுத்தி நம்மைப் பற்றியும் நமது நிலையைக் குறித்தும் சற்று சிந்தித்தால் மட்டுமே இந்த அறியாமை விலகும். இல்லாமையில் இருந்து இபேரண்டத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் அளவற்ற ஆற்றல்களும் கொண்டவனையே இறைவன் அல்லது 'அல்லாஹ்என்கிறது இஸ்லாம்.  மாறாக மனிதர்கள் சித்தரித்து உருவம் கொடுக்கும் அளவுக்கு அற்பமானவல்ல இறைவன் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள உடல் என்ற பேரற்புதமும் நம்மைச்சூழ்ந்து நிற்கும் இந்தப் பேரண்டம் என்ற அற்புதமும் தானாகவோ தற்செயலாகவோ தோன்றவும் முடியாது. தானாகவோ தற்செயலாகவோ அதி பக்குவமான முறையில் இயங்கவோ முடியாது என்கிறது பகுத்தறிவு! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு உரக்கவே எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.
இந்த விசாலமான பிரபஞ்சமும் அது உட்கொண்டுள்ளவற்றின் பேரமைப்பும் நமது உடல் என்ற அற்புதமும் இவற்றின் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களாஅதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)
= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28) 

இறைவனின் நெருக்கத்தை உணருதல் 
ஆம் அன்பர்களேஅந்த தன்னிகரற்ற சர்வவல்லமை கொண்ட இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கிறான்நம் அழைப்பை ஏற்று நமக்கு உதவக் காத்திருக்கிறான் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களாஇதோ இறைமறைக் குர்ஆனில் அவன் கூறுவதைக் காணீர்:
நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். (திருக்குர்ஆன் 50:16) 
= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186) 

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நெருக்கத்தில் இருக்கிறான்நம் அழைப்பை ஏற்கக் காத்திருக்கிறான் என்ற ஆழமான புரிதல் யாருக்காவது உண்டாகிவிட்டால் அந்த மனிதனின் ஆளுமைக்கு மிக உறுதியான அஸ்திவாரம் அமைகிறது. அவனுக்குள் நிராசையும் மனச் சோர்வும் ஏற்பட வழியே இல்லை.

மேற்படி இறைநம்பிக்கையோடு இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும்போது வாழ்க்கையில் கட்டுப்பாடும் (discipline) அமைதியும் உண்டாகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டோடு வாழ்ந்ததற்காக மறுமை வாழ்வில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பமும் நித்திய வாழ்வும் பரிசாகக் கிடைக்கிறது. 

=  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

தேவை வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கல்வி

உண்மையில் மரணம்முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள்தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும். கல்விக்கூடங்களில் வெறுமனே உயர்ந்த பதவியும் வருமானமும் பெறுவதற்கான கல்வி அறிவு மட்டும் போதிக்கப்பட்டால் போதாது. அவர்கள் கல்விக்கூடங்களில் செலவிடும் அவர்களின் இளமைக் காலம்தான் அவர்களின் உண்மையான ஆளுமைகளை வடிவமைக்கும் காலகட்டமாகும்.  மாணவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் மரணம் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் ஆராய்தலை ஊக்குவிக்கும் முகமாக பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். குறைந்தபட்சம் அவற்றைப்பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன என்பது பற்றியாவது பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

= அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும்அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 67:2)

 

==================

மனஅழுத்தமும் தற்கொலையும்

இளமனங்களில் முறையான இறை உணர்வும் மறுமை உணர்வும் விதைத்து இஸ்லாம் கற்பிக்கும் தொழுகை முறையை பழக்கி விட்டால்  அந்த மனங்களில் எப்போதும் கடமை உணர்வும் இறையச்சம் என்ற பொறுப்புணர்வும் நிறைந்திருக்கும்.

உண்மைக் கடவுளைக் கற்பித்தல்:

இம்மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு நுண்ணிய துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அதன் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஏதேனும் மற்றொரு நுண்ணிய பொருளைக் காட்டி அதுதான் கடவுள் என்று கற்பிக்கப்படும் போது மக்களின் உள்ளத்தில் – குறிப்பாக இளைஞர்கள் அல்லது குழந்தைகளுக்கு கடவுளைப்பற்றிய மதிப்பு (seriousness) உண்டாவதில்லை. நாளடைவில் அது அவர்களை நாத்திகத்திற்கு இட்டுச்சென்று விடுகிறது. எனவே இவ்வுலகைப் படைத்தவன்தான் உண்மை இறைவன் என்பதையும் அவனது தன்மைகளையும் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)

ஏகனான தன்னிகரற்ற இறைவனின் தன்மைகளை மேற்கண்டவாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்கும்போது உண்மையான இறை பக்தியும் இறைவனின் கண்காணிப்பில் இருக்கிறோம்அவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வும் மக்களில் உண்டாகும்.

அதற்கான முக்கிய செயல்பாடுதான் இஸ்லாம் கற்பிக்கும் தினசரி ஐவேளைத் தொழுகை என்பது. 

 = உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்தால்தொழும்படி ஏவுங்கள்பத்து வயதை அடைந்தால்தொழுகையை விட்டுவிடுவதின் மீது மிருதுவாக அடியுங்கள்மேலும்குழந்தைகளுக்கிடையில் படுக்கைகளை பிரித்து வையுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அம்ர்பின் சுஅய்ப் (ரலி)அபூதாவூத்)

அதாவது தொழுகையைக் கட்டாயமாகக் கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக உள்ளது.

தந்தை தன் தனயனுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் நல்லொழுக்கக் கல்வியை விட வேறு எந்த சிறந்த அன்பளிப்பையும் வழங்கிட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அய்யூப் பின் மூஸா (ரலி)திர்மிதி)
குழந்தை வளர்ப்பு குறித்து நபிகளாரின் அறிவுரைகளில் முதன்மையானவை இவை.

பசுமரத்தாணி போல் இளம் வயதில் இதயத்தில் பதிக்கப்படும் இறைநம்பிக்கையும் இறைப்பற்றும் குழந்தைகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கும்.

தன் தேவைகளை நிறைவேற்ற ஒரு மாபெரும் சக்தி தனக்குத் துணை இருக்கிறது எனும் உணர்வு அவர்களின் ஆளுமையை வலுப்படுத்தும். ஆற்றலை அதிகரிக்கும்.

படுக்கையைத் தனியாக்குவதன்” பொருள் பிள்ளைகளின் தனித்தன்மைகளுக்குஅந்தரங்கத்திற்குப் பெற்றோர் மதிப்பு அளிக்க வேண்டும் என்பது மட்டுமல்லகண்காணித்து வழிகாட்ட வேண்டும் என்பதும்தான்.

பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுதல்... இறைவனிடம் மனம்விட்டுப் பேசுதல்... இந்த இரண்டு வழக்கங்களும் உள்ள பிள்ளைகளின் மனங்களில் தற்கொலை எண்ணம் எழுவது அரிதினும் அரிது.

பெற்றோரின் அரவணைப்பும் கிடைக்காமல்வழிபாடு எனும் வடிகாலும் இல்லாமல் போனால் நிலைமை என்ன ஆகும்?

மனஅழுத்தம் அதிகமாகும்...தற்கொலையை மனம் நாடும்.

இன்றைய பதின்பருவப் பிள்ளைகளுக்குக் கட்டாயத் தேவை தொழுகை. தொழுகையை ஒரு சடங்காக இல்லாமல் இறைத்தொடர்புக்கான பாலம் ஆக்கிக்கொண்டால் எந்த மனஅழுத்தமும் பிள்ளைகளைத் தீண்டாது.

-சிராஜுல்ஹஸன்

======================

மனிதகுல ஒற்றுமையை மறுக்கும் ஆத்திகர்கள்  

= “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்இன்னும்ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான்நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) நன்கறிந்தவன்நன்குணர்பவன். (திருக்குர்ஆன் 49:13)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாமறிந்த தொன்மையான முழக்கம். அனைத்து மனித குலமும் ஆதம் என்ற முதல் மனிதர் மற்றும் அவரது துணைவி ஏவாள் (ஹவ்வா) இவர்களின் பின்தோன்றல்களே என்பது அனைத்து ஆப்ரஹாமிய (யூதகிருஸ்தவஇஸ்லாமிய) மதங்களும்  கூறும் பொதுவான கருத்து. ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் சில இடைத்தரகர்கள் தங்கள் மனம்போன போக்கில் இறைவேதங்களில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவும் திரிக்கவும் செய்தார்கள். மனிதன் சக மனிதனுக்கு சமமே மற்றும் சகோதரனே என்ற கருத்தை வன்மையாக மறுத்தார்கள். சுயநல ஆதிக்க சக்திகளுக்கு துணை போனார்கள்.

அதனால் உலகெங்கும் நலிந்த நாடுகளை தங்கள் ஆயுத பலத்தால் கீழடக்கி அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த காலனி ஆதிக்க சக்திகளுக்கு குற்ற உணர்வே சற்றும் எழுந்ததில்லை. ஆப்பிரிக்காஆசியாஆஸ்திரேலியாஅமெரிக்கா போன்ற கண்டங்களில் வசித்த பழங்குடியினரும் அப்பாவிகளும் சக மனிதர்களே – தங்களைப் போன்ற உணர்வுகள் கொண்டவர்களே- என்ற சகதாபம் அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எனவே நிராயுதபாணிகளாக நின்ற அவர்களை இலட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள்.  ஆப்பிரிக்காவின் அப்பாவிக் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்றார்கள்.  இலாபம் ஈட்டினார்கள்.  

நூற்றாண்டுகளாகத்  தாங்கள் செய்து வந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள் உள்ளன என்ற  அச்சமோ அவர்களுக்கு துளியும் இருக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்ககூடும்?

இறைவேதங்களில் இனவெறி

காலனி ஆதிக்க கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் யூதர்கள். இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது. நமக்குத் தெரிந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company) ரோத்சைல்ட் (Rothchild) என்ற யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்துபிரான்ஸ்ஜெர்மனிஆஸ்திரியாஇத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.

யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்  என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை. இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய - கண்ணியம் வாய்ந்த - இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையேஅவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும்யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன  போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles)  ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

“All children of the ‘goyim’ (Gentiles) are animals.” (Yebamoth 98a)

= புற ஜாதியினரின் மக்கள் அனைவரும் விலங்குகளே (Yebamoth 98a)

ஒரு புறஇனத்தான்  யூதனைத் தாக்கினால் அவனுக்கு மரணமே தண்டனைஒரு யூதனை தாக்குவது என்பது கடவுளின் பார்வையில் கடவுளை தாக்குவது போன்றதாகும். (Sanhedrin 58b).

புறஇனத்தினர் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் இஸ்ரேலுக்கு இறைவன் வழங்கிய தனி சிறப்பே காரணமாகும். (Yebamoth 63a).

ஒரு யூதன் புறஇனத்தான்  செய்யும் வேலைக்குக் கூலி கொடுக்க  வேண்டியதில்லை. (Sanhedrin 57a)

புறஇனத்தான்  ஒருநாள் முழுக்க ஓய்வெடுத்தால் அவன் கொல்லப்படவேண்டும். (Sandendrin 58b).

புற இனத்தானை உபசரிப்பது கடவுளை அதிருப்திப் படுத்தும் செயலாகும் (Sanhendrin 104a).

புறஇனத்தானுக்கு சட்டம் கற்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். (Hagigah 13a).

சட்டம் கற்கும் புறஇனத்தான்  கொல்லப்பட வேண்டியவன். (BT Sanhedrin 59a)

==================

சிறுவருக்கு நபிகளாரின் அறிவுரை!

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் :

நான் நபி ஸல் அவர்களின் பின்னே ( குதிரையில் ) அமர்ந்திருந்தேன் அப்போது அவர்கள் “ சிறுவரே ! நிச்சயமாக நான் உனக்கு சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை நீர் பேணுவீராக ! உம்மை அவன் பாதுகாப்பான். அல்லாஹ்வை நீர் நினைவு கூர்ந்து வருவீராக ! உமக்கு முன்னே அவனை நீர் அறிவீர் . நீர் கேட்டால் அல்லாஹ்விடம் கேட்பீராக ! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவிதேடுவீராக ! இந்த சமுதாயம் ஏதேனும் உமக்கு நன்மை செய்ய ஒன்று சேர்ந்தாலும் உமக்கு அல்லாஹ் எழுதி வைத்ததைத் தவிர எதையும் அவர்களால் கொடுக்க முடியாது மேலும் ஏதேனும் உமக்கு தீமை செய்ய அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் எழுதி வைத்திருந்தாலே தவிர அவர்களால் உமக்கு தீங்கிழைக்க முடியாது எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்ட்து பதிவு ஏடுகள் சுருட்டப்பட்டு விட்டது என்பதை நீர் அறிந்து கொள்வீராக !” என நபி ஸல் கூறினார்கள். ( நூல் : திர்மிதீ )

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரேஇறைவன் என்பது பொருள்)