குழந்தைகள் தினம்...
இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இந்த தினம் கொண்டாடப் படாமலும் போகலாம்! காரணம் குழந்தைகள் அபூர்வமாகி வருவதே!
.மக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும் விடுகிறார்கள். இன்னும் திருமண உறவைவிட தகாத உறவுகள் அதிகரித்து வருவதும் அதற்கான காரணங்களில் ஒன்று

இப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது! - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.
ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:
“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”; (திருக்குர்ஆன் 17:31)
இந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:
“உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! )” (திருக்குர்ஆன் 81:7-9)
எனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக