இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 செப்டம்பர், 2014

ஏனிந்த வெறுப்புப் பிரச்சாரம் ?

இஸ்லாம் என்ற இந்த சுயசீர்த்திருத்தக் கொள்கையை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இது ஒரு நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் எப்படி நாத்திகத்தையோ அல்லது ஆத்திகத்தையோ யார்மீதும் திணிக்க முடியாதோ அதேபோல இஸ்லாத்தையும் யார்மீதும் திணிக்க முடியாது.
இஸ்லாம் என்ற கொள்கையை ஒருவர் பின்பற்றி அதன்படி வாழும்வரைதான் அவர் முஸ்லிமாக இருப்பார். எப்போது அதை விட்டுவிட்டாரோ அப்போதே இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியேறியும் விடுகிறார். எனவே ஒருவர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே முஸ்லிமாக முடியும். யாரும் யாரையும் நிர்பந்தித்து முஸ்லிமாக்க முடியாது என்பது தெளிவு.

ஆனால் எந்த ஒரு திணிப்புக்கோ  ஆசைவார்த்தை அல்லது சலுகை பிரயோகத்துக்கோ அவசியமில்லாத வகையில் இம்மார்க்கம் உலகில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்  இதை ஏற்றுக்கொண்டவர்கள் எதிரிகளின் சித்திரவதைகளுக்கு ஆளானாலும் சற்றும் தொய்வில்லாமல் தொடர்கிறது இறைவனின் மார்க்கத்தின் வெற்றிப்பயணம்!
அது கற்பிக்கும் தெளிவான பகுத்தறிவு பூர்வமான கடவுள் கொள்கையும் மறுமை நம்பிக்கையும் மனித சமத்துவமும் வாழ்வியலும் மக்களை அதிகமதிகம் ஈர்த்து வருகிறது. சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும், அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களும், நலிந்தவர்களும் தங்கள் துன்பங்களில் இருந்து தீர்வுகாண இஸ்லாத்தில் இணைகிறார்கள். படித்தவர்களும் பாமரர்களும் ஆண்களும் பெண்களும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மொழியினருக்கும், நாட்டினருக்கும் ஒரேபோல வாழ்வியல் தீர்வுகள் இஸ்லாம் கூறுவதால் இதில் இணைவோரின் எண்ணிக்கை என்றும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இது குறித்து இறைவன் கூறும் வாக்குறுதி பொய்யாக வாய்ப்பில்லையல்லவா?
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
உங்கள் கவனத்திற்காக சில புள்ளிவிவரங்கள்
= 1990 இல் இருந்து 2010 வரையில் உலக முஸ்லிம் மக்கள்தொகை வருடத்திற்கு 2.2 சதவீதம் உயர்வு கண்டு வருகிறது.
= 2030 இல் மொத்த உலக 7.9பில்லியன் மக்கள்தொகையில் முஸ்லிம் மக்கள்தொகை  26.4 % இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
= மதமாற்ற விகிதத்தைக் கணக்கிலெடுத்தால் உலகிலேயே அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்று கின்னஸ் புக் ஒப் ரெகார்ட்ஸ்  கூறுகிறது. 
= சவுதி அராபியாவில் அது துவங்கினாலும் 2002 இல்  80% முஸ்லிம்களும் அரபியர் அல்லாதவரே. 
= 1990-இலிருந்து 2000 க்கு  இடைப்பட்ட காலகட்டத்தில் கிருஸ்துவத்தை விட   சுமார் 12.5  மில்லியன் மக்கள் இஸ்லாத்துக்கு மாறியுள்ளனர்.
( தகவல்: Guinness world records book 2003 p 142)
தவறான சித்தரிப்பின் பின்னணி
ஆனால் இன்று ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் செய்திகளுக்கு பின்னணி என்ன? இஸ்லாத்தை பற்றிய இந்த மட்டகரமான சித்தரிப்புக்குக் காரணம் என்ன?
இதைப் புரிந்து கொள்ள கீழ்கண்ட உண்மைகளை நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்...
1. ரவுடிகள் தன் கையாட்களை வைத்துக் கொண்டு தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஊரை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளைகளை நடத்தி வருகிறார்களோ அதே விதமாக முன்னாள் காலனி ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே தங்கள் கைப்பாவை அரசுகளையும் கையாட்களையும் அமர்த்தி உலகின் நலிந்த நாடுகளைக் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
2. அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் எண்ணெய் வளங்களையும்  தங்கள் இராணுவ பலத்தால் கையகப்படுத்தியது மட்டுமல்ல, ஆங்காங்கே தங்கள் கம்பெனிகளை நிறுவி அந்தந்த நாட்டுமக்களின் உழைப்பின் கனிகளையும் கறந்து வருகிறார்கள் அவர்கள். முக்கியமான நுகர்வுப்பொருட்களின் (உதாரணமாக தேநீர், பற்பசை, சோப்பு, மருந்துகள்) விநியோகம் இவர்களின் பணமுதலைகளின் ஆதிக்கத்தில் இருப்பதைக் காணலாம்.
3. உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. (உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன)
4. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம்.
5. தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
6. இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)
7. அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
இஸ்லாத்திற்கு ஏன் இவர்கள் எதிரியாகிறார்கள்? ஏன் இவர்கள் இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிக்கிறார்கள்?
இன்று உலகெங்கும் இஸ்லாம் அதிவேகமாகப் பரவிவருவது இவர்களின் சுயநல திட்டங்களுக்கு தடைகளை உண்டாக்கி வருகின்றது. இஸ்லாம் நீதியும் தர்மமும் பரவுவதை ஊக்குவிக்கும் அதேவேளையில் அதர்மத்துக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் இவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசர்களுக்கும் எதிராக திரும்புவது இந்த சுயநல சக்திகளின் உறக்கத்தைக் கெடுத்துவருகிறது.
மட்டுமல்ல இவர்களின் சொந்த நாடுகளிலும் (அமெரிக்கா, கானடா இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் போன்றவை) இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமாக இருப்பதால் அதைத் தடுக்கவும் இவர்கள் பாடுபடவேண்டியுள்ளது. அதற்காக ஊடகங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்படியெல்லாம் தவறாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சித்தரிக்கிறார்கள்.
இன்று ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் கொடூரங்களும் இஸ்லாத்தை உலகுக்கு முன் தவறாக சித்தரிப்பதற்காக இவர்களின் கைப்பாவை அமைப்புகளின் மூலம் நடத்தப்படுபவையாகவே தென்படுகின்றன. ஏனெனில் இஸ்லாம் எப்போதுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதை சிந்திப்போர் அறிவார்கள்.

அண்மையில்  வெளியான கார்டூன் ஐஎஸ்ஐஎஸ் அவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் நடவடிக்கையை சித்தரிக்கிறது. 

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2014

இஸ்லாத்தை கட்டாயமாக திணிக்கமுடியுமா?

இராக் மற்றும் மற்றும் சிரியா நாட்டைக் கைப்பற்றியுள்ள ISIS என்ற அமைப்பு முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களாக மதம் மாறும்படி வற்புறுத்தி வருவதாகவும் அவ்வாறு மாறாதவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிவோம். இதைக் காணும் பொது மக்களில் பலரும் இஸ்லாமியர்களை வெறுப்புடன் காணும் சூழல் உண்டாகி வருகிறது. இது பற்றிய உண்மைதான் என்ன?
1.இஸ்லாம் என்பது ஒரு கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்தலே இஸ்லாம் என்ற அரபுமொழி சொல்லால் அறியப்படுகிறது. இனம், நாடு, மொழி, நிறம் இவற்றின் வரம்புகளைக் கடந்து இதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதன் படி தன்னை சீர்திருத்திக் கொண்டு வாழலாம். அவ்வாறு மனிதன் தன்னை இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காணமுடியும் என்பதும் மறுமையில் அதற்குப் பரிசாக சொர்க்கம் என்ற நிரந்தர வாழ்விடம் கிடைக்கும் என்பதும் இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும். நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் எப்படி நாத்திகத்தையோ அல்லது ஆத்திகத்தையோ யார்மீதும் திணிக்க முடியாதோ அதேபோல இஸ்லாத்தையும் யார்மீதும் திணிக்க முடியாது.
2. முஸ்லிம் என்பது பண்பை ஒட்டிய பெயர்- பிறப்பினால் வருவது அல்ல!
யார் அவ்வாறு இறை கட்டளைகளுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறாரோ அவரே ‘முஸ்லிம்’ (பொருள்- கட்டுப்பட்டவர்) என்று அறியப்படுகிறார். அவ்வாறு கட்டுப்பட்டு வாழும் வரைதான் அவர் முஸ்லிமாக இருப்பார். எப்போது அதை விட்டுவிட்டாரோ அப்போதே இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியேறியும் விடுகிறார். எனவே ஒருவர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே முஸ்லிமாக முடியும். யாரும் யாரையும் நிர்பந்தித்து முஸ்லிமாக்க முடியாது என்பது தெளிவு.
3. சடங்குகள் இல்லை: ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள விரும்பினால் இறைவனிடம் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டால் போதுமானது. அதாவது ‘வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர யாரும்  இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் தூதர் ஆவார் என்றும் ஒப்புக்கொள்கிறேன், அதற்கு சாட்சியம் கூறுகிறேன்” என்று மனதார ஏற்று வாய்மொழியாகக் கூறுவதே அந்த உறுதிமொழி. அதற்கு எந்த சடங்குகளும் கிடையாது. யார் முன்னிலையிலோ  அல்லது பள்ளிவாசலிலோ இதை கூறவேண்டும் என்பதும் கிடையாது. இஸ்லாத்தை ஏற்பது என்பது ஏற்பவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலான ஒரு உடன்படிக்கை. அதை எழுத்துமூலமாக்க வேண்டும் என்பதோ ஏதாவது நீதிமன்றத்திலோ அலுவலகத்திலோ தாக்கல் செய்யவேண்டும் என்பதோ கிடையாது.
4. இஸ்லாத்தில் கட்டாயம் என்பதும் கிடையாது:  இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனில்  யார் மீதும் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற கட்டளை தெளிவாக உள்ளது.
 = இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 256)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

= இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளதுஎன்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 18 : 29)

= (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா? (அல்குர்ஆன் 10 : 99)

= எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது. அல்குர்ஆன் (88 : 21)
ஒருவேளை இங்கு இறைவனின் வசனங்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு மறுமையில் நேரகூடிய பாதிப்புகளைப் பற்றி எச்சரிப்பதால் இதுவும் ஒரு கட்டாயப் படுத்துதல் அல்லவா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்குரிய விளக்கம் இதோ....
ஒரு நகரத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்காக அங்கு காவல் துறையினர் சில சட்டங்களை விதிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக வாகனங்கள் சாலையின் இடதுபுறமாகச் செல்லவேண்டும் என்பது, சிவப்பு விளக்கு எரியும்போது நிற்றல், பச்சைவிளக்கு எரியும்போது செல்ல அனுமதி போன்றவற்றை கூறலாம். அதேவேளையில் அவற்றை மீறுவோருக்கு தக்க தண்டனைகளையும் அபராதங்களையும் அவர்களே குறிப்பிடுவார்கள். அவை போன்றதே இறைவனின் வசனங்களும்! இவ்வுலகுக்கு சொந்தக்காரன் அவன். இம்மையும் மறுமையும் அவனுக்கே சொந்தம். அந்தவகையில் தான் விதித்த சட்டங்களையும் பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறியையும் ஏற்காதவர்கள் சந்திக்க இருக்கும் விளைவுகளை நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த சந்தேகம் விலகும்.

ஏனிந்த வெறுப்புப் பிரச்சாரம்?

இஸ்லாம் என்ற இந்த சுயசீர்த்திருத்தக் கொள்கையை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு திணிப்புக்கோ  ஆசைவார்த்தை அல்லது சலுகை பிரயோகத்துக்கோ அவசியமில்லாத வகையில் இம்மார்க்கம் உலகில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்  இதை ஏற்றுக்கொண்டவர்கள் எதிரிகளின் சித்திரவதைகளுக்கு ஆளானாலும் சற்றும் தொய்வில்லாமல் தொடர்கிறது இறைவனின் மார்க்கத்தின் வெற்றிப்பயணம்!
அது கற்பிக்கும் தெளிவான பகுத்தறிவு பூர்வமான கடவுள் கொள்கையும் மறுமை நம்பிக்கையும் மனித சமத்துவமும் வாழ்வியலும் மக்களை அதிகமதிகம் ஈர்த்து வருகிறது. சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும், அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களும், நலிந்தவர்களும் தங்கள் துன்பங்களில் இருந்து தீர்வுகாண இஸ்லாத்தில் இணைகிறார்கள். படித்தவர்களும் பாமரர்களும் ஆண்களும் பெண்களும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மொழியினருக்கும், நாட்டினருக்கும் ஒரேபோல வாழ்வியல் தீர்வுகள் இஸ்லாம் கூறுவதால் இதில் இணைவோரின் எண்ணிக்கை என்றும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இது குறித்து இறைவன் கூறும் வாக்குறுதி பொய்யாக வாய்ப்பில்லையல்லவா?
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
தவறான சித்தரிப்பின் பின்னணி
ஆனால் இன்று ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் செய்திகளுக்கு பின்னணி என்ன? இஸ்லாத்தை பற்றிய இந்த மட்டகரமான சித்தரிப்புக்குக் காரணம் என்ன?
இதைப் புரிந்து கொள்ள கீழ்கண்ட உண்மைகளை நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்...
1. ரவுடிகள் தன் கையாட்களை வைத்துக் கொண்டு தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஊரை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளைகளை நடத்தி வருகிறார்களோ அதே விதமாக முன்னாள் காலனி ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே தங்கள் கைப்பாவை அரசுகளையும் கையாட்களையும் அமர்த்தி உலகின் நலிந்த நாடுகளைக் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
2. அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் எண்ணெய் வளங்களையும்  தங்கள் இராணுவ பலத்தால் கையகப்படுத்தியது மட்டுமல்ல, ஆங்காங்கே தங்கள் கம்பெனிகளை நிறுவி அந்தந்த நாட்டுமக்களின் உழைப்பின் கனிகளையும் கறந்து வருகிறார்கள் அவர்கள். முக்கியமான நுகர்வுப்பொருட்களின் (உதாரணமாக தேநீர், பற்பசை, சோப்பு, மருந்துகள்) விநியோகம் இவர்களின் பணமுதலைகளின் ஆதிக்கத்தில் இருப்பதைக் காணலாம்.
3. உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. (உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன)
4. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம்.
5. தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
6. இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)
7. அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
இஸ்லாத்திற்கு ஏன் இவர்கள் எதிரியாகிறார்கள்? ஏன் இவர்கள் இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிக்கிறார்கள்?
இன்று உலகெங்கும் இஸ்லாம் அதிவேகமாகப் பரவிவருவது இவர்களின் சுயநல திட்டங்களுக்கு தடைகளை உண்டாக்கி வருகின்றது. இஸ்லாம் நீதியும் தர்மமும் பரவுவதை ஊக்குவிக்கும் அதேவேளையில் அதர்மத்துக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் இவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசர்களுக்கும் எதிராக திரும்புவது இந்த சுயநல சக்திகளின் உறக்கத்தைக் கெடுத்துவருகிறது.
மட்டுமல்ல இவர்களின் சொந்த நாடுகளிலும் (அமெரிக்கா, கானடா இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் போன்றவை) இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமாக இருப்பதால் அதைத் தடுக்கவும் இவர்கள் பாடுபடவேண்டியுள்ளது. அதற்காக ஊடகங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்படியெல்லாம் தவறாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சித்தரிக்கிறார்கள்.
இன்று ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் கொடூரங்களும் இஸ்லாத்தை உலகுக்கு முன் தவறாக சித்தரிப்பதற்காக இவர்களின் கைப்பாவை அமைப்புகளின் மூலம் நடத்தப்படுபவையாகவே தென்படுகின்றன. ஏனெனில் இஸ்லாம் எப்போதுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதை சிந்திப்போர் அறிவார்கள்.

அண்மையில்  வெளியான கார்டூன் ஐஎஸ்ஐஎஸ் அவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் நடவடிக்கையை சித்தரிக்கிறது. 

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்!

விபச்சாரம் என்பது இன்றுவாழும் சமூகத்தையும் அதன் தலைமுறைகளையும்  சீர்கெடுக்கும் கொடிய பாவம். அதில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. இவ்வுலகில் யாராவது இதைச் செய்து இதன் பாவத்தைக் கழுவிக் களைய விரும்பினால் கசையடி, கல்லெறி தண்டனை போன்றவைகளை எதிர்கொண்டாலே முடியும் என்னும் அளவிற்கு இறைவனின் பார்வையில் இது மிகவும் கொடிய பாவமாகும்.
அந்த விபச்சாரத்தை நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா?
உங்களை நீங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்....
= சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற காட்சிகளை நீங்கள் பார்ப்பதுண்டா?
= சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாச செய்திகள், விளம்பரங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதுண்டா?
= இரட்டை அர்த்தமுள்ளதும் இல்லாததுமான சினிமா பாடல்கள் உங்கள் காதுக்கு மகிழ்ச்சி அளிப்பதுண்டா?
= உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் மேற்கண்டவாறு உள்ள பாடல்களையும் உடல் சேட்டைகளையும் காட்சிகளையும் குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றாக அமர்ந்து ரசிக்கின்றீர்களா?

‘உண்டு’ என்பது உங்கள் பதிலானால்... விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியில் கால்வைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது? என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிட மனம் முயலும். ஷைத்தான் அதற்கான நியாயங்களையும் கற்பித்து உங்களை கவிழ்த்துவிடவும் வாய்ப்புண்டு!
முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் இதைக் கூட்டாக குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பார்க்கும்போது அதற்கு அங்கு அங்கீகாரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.
= இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்:
''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது இறைநம்பிக்கையின்  பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
= விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.  (அல்குர்ஆன் 17:32) என்கிறது இறைவனின் வசனம்.
விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.
கணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று இறைவன் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.
அதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே! அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.
"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!    
(அல்குர்ஆன் 7:33)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)
இந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லையாயினும் விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.
= அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (அல்குர்ஆன் 25:68)
ஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.
ஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்துள்ளார்கள். அவரது வாழ்நாளில் அவருக்கு மறுமையில் நரகத்தின் காட்சிகள் காட்டப்பட்டன. அதை இவ்வாறு நமக்கு விளக்குகிறார்கள்:
நேற்றிரவு கனவு கண்டீர்களா? என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள், “நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரித்தார்கள்.
...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் "இவர்கள் யார்?' எனக் கேட்டேன்..... "அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்'' என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386
(இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.)
சட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்..

எனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள்.
================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

வாழ்வே மாயமா?

நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இறைவன் இரத்தினச்சுருக்கமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில்  கூறுவதைப் பாருங்கள்.....
18:45.மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ''அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
ஆம், இந்த வாழ்வின் தற்காலிகமான நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்டு அதன்படி மறுமை என்னும் நிலையான நிரந்தர வாழ்விற்கு எது தேவையோ அதை தேடுவதிலும் சேகரிப்பதிலும் முனைவார்கள் அறிவுடையோர். அவை எவையென கற்றுத் தருகிறான் இறைவன்....

18:46.
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
நிலையற்ற இவ்வுலகு எவ்வாறு அழியும் என்பதை திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு பலகோணங்களிலும் படம்பிடித்துக்காட்டுகின்றன..... இதோ இங்கும்.... இன்று பூமிக்கு உறுதிநிலையை கொடுத்துக் கொண்டிருக்கும் மலைகள் அன்று  பெயர்த்தெடுக்கப்பட்டு தூள்தூளாக்கப்பட்டு பரத்திவிடப்படுமாம்.....! இது இதை நிகழ்த்தக் கூடியவனின் வாக்குமூலம்.... புறக்கணிக்க முடியுமா?

18:47.(
நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
அனைத்து மனிதர்களும்- இந்த பூமியில் தோன்றிய முதல் மனிதனில் இருந்து இதில் வாழப் போகும் இறுதி மனிதன் வரை- அவர்கள் எந்த நாட்டில் பிறந்து இருந்தாலும் சரி, எந்த மொழியைப் பேசி இருந்தாலும் சரி, எந்த மதத்தில் பிறந்து வாழ்ந்து இறந்து இருந்தாலும் சரி, அவ்வாறு இறந்தவன் ஆணாயினும் பெண்ணாயினும் பாமரன் ஆயினும், படித்தவன் ஆயினும், ஏழை ஆயினும், செல்வந்தன் ஆயினும் சரி, அவர்களின் உடலைப் புதைத்து இருந்தாலும், எரித்து இருந்தாலும், பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து இருந்தாலும் கடலிலோ நீரிலோ கரைத்து இருந்தாலும் சரியே..... அவர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் இறுதி விசாரணைக்காக எழுப்பப் படுவார்கள்!

18:48.
அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்).
எது நடக்காது, நடக்கவே நடக்காது என்ற இறுமாப்பில் இன்று மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ, சத்தியத்தை சொல்லவந்த இறைத்தூதர்களையும் வேதங்களையும் புறக்கணித்து ஏளனம் செய்தார்களோ அவர்கள் அனைவரும் அந்த சம்பவத்தை நேரடியாக ஒளிவுமறைவு இன்றி காண்பார்கள்! சத்தியத்தைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்து வந்தவர்கள் குற்றவாளிகளாக அன்றைய நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். உலக நீதிமன்றங்களில் இருந்ததைப்போல குற்றவாளிகளுக்கு பரிந்துரைக்க எந்த வழக்கறிஞர்களோ அரசியல் சக்திகளோ குறுக்கு வழிகளோ எதுவும் அங்கு இருக்காது! குற்றவாளிகளை  தப்பவைக்க சட்டங்களை வளைத்து ஓடிப்பதற்கும் சாத்தியமில்லை. அவர்கள் தப்பியோட ஏதும் புகலிடங்களும் அங்கு காணமாட்டார்கள். ஆம், அதுதான் நூறு சதவீதம் நீதி நடப்பாகும் நாள்!
18:49.இன்னும் (வினைச்சுவடியாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ‘’எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.

ஒவ்வொருவரும் தத்தமது சுயசரிதையை எந்த ஒரு சிதைவும் இன்றி முழுமையாகக் காண்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களது வாழ்வில் சாதித்த அனைத்தையும் அணுவணுவாக விவரிக்கப்பட்ட பதிவேடாக அது இருக்கும். இங்கு இறைவன் எதை செய் என்று கூறினானோ அவை புண்ணியங்களாகவும் எதைவிட்டும் தடுத்தானோ அவற்றை செய்திருந்தால் அவை பாவங்களாகவும் அங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாருக்கும் எந்த அநியாயமும் செய்யப்படமாட்டாது. நல்லோர்க்கு இறைவன் வாக்களித்திருந்த சொர்க்கத்தையும் தீயோர்க்கு புகலிடமான நரகமும் மனிதனுக்கு அன்று வெளிப்படுத்தப்படும். அவரவர் சாதனைகளுக்கு உரியதை அன்று பெற்றுக்கொள்வார்கள்!