இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

குழந்தை செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்?



தொடர்பான செய்திகள்:
= ‘’ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெறவேண்டாம். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்”   - சந்திரபாபு நாயுடு  ((தினமலர், மாலைமலர், தினபூமி..  2015 செய்தி)
= இந்து தம்பதியர் அதிக அளவு குழந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்” - மத்திய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங்  (தினபூமி செய்தி Oct 23, 2016 )
=”இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளை பெறவேண்டும்” - உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். (தினபூமி- Dec 9, 2016)
----------------------------
இறைவன் மக்களுக்கு வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறி இயற்கையானது. குறைகளற்றது. அதைத் தவற விட்டோர்களின் நிலை இதுதான். மனிதர்களையும் அவர்களுக்காக இவ்வுலகையும் படைத்தவன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே எச்சரித்தான்....
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
இந்த எச்சரிக்கையைப்  பாடமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் குழந்தைச் செல்வங்கள் மூலம் உண்டான அருட்கொடைகளை இழக்கவில்லை. மக்கள்தொகைப் பெருக்கமே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்ற அரசாங்கங்களின் பொய்கள் மூலம் அவர்கள் ஏமாறவில்லை. மாறாக தங்கள் உணவு மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று பயந்து சுயநல நோக்கோடு தங்கள் மக்களை தாங்களாகவே கொன்றொழித்தவர்கள் தாங்கள் செய்தது  மிகப்பெரிய பிழை என்பதை இறுதியாக உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது! இன்னும் அதை வேறு பலர் உணரவில்லை என்பது வேதனை கலந்த வேடிக்கை! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  சந்திரபாபு நாயுடு மேற்கண்டவாறு பேசியதைத் தொடர்ந்து நாட்டில் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் என்பதைக் காணும்போது உண்மையை உணர்ந்தவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!
காலம்கடந்த ஞானோதயம்
பல கசப்பான அனுபவங்களையும் ஈடுசெய்ய முடியாத எண்ணற்ற இழப்புகளையும் சந்தித்துவிட்டு இறுதியில் ஞானோதயம் அடைவதால் என்ன பயன்?
இதனால் இனங்களின் இனப்பெருக்கம் தடைபட்டது ஒருபுறம் இருக்கட்டும. ஆனால் இதைத் தவிர உண்டான வேறு பல இழப்புகளை ஈடு செய்வது யார்? மக்களை ஏமாற்றிய அரசாங்கங்கள் இதற்கு ஏதாவது நஷ்டஈடு திட்டங்கள் வைத்துள்ளார்களா?
= பல குடும்பங்களில் தந்தையும் தாயும் முதியோர் ஆன நிலையில் அவர்களைப் பராமரிக்கவோ அன்பு காட்டவோ ஆதரிக்கவோ ஆளில்லாத நிலை. வயதாகி நோயுற்ற நிலையில் மருத்துவமனைகளில் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் அவர்களுக்கு துணை நிற்கவோ ஆதரவளிக்கவோ ஆறுதல் அளிக்கவோ  யாரும் இல்லை. முதியோர் இல்லங்களின் அவலங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
= பல குடும்பங்கள் தங்களுக்கு ஆண் சந்ததி வேண்டும் என்பதற்காக தங்களுக்குப் பிறந்த பெண்சிசுக்களை கொன்றொழித்தன. அதனால் அக்குடும்பங்களில் அந்தப் பெண்குழந்தைகளில் இருந்து கிடைக்கைகூடிய தனிபாசம், மென்மை, போன்ற விலைமதிப்பற்ற பல நன்மைகளும்  இழப்படைந்த நிலை.
அரசாங்கங்கள் தங்கள் அறியாமையின் காரணமாகவும் தங்கள் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காகவும் நாட்டு மக்களின்மீது திணித்த கொடுமைக்கு பல குடும்பங்கள் தங்கள் ஈடில்லாத பொக்கிஷங்களை தொலைத்து விட்டு நிற்கின்றன. பல உயிர்களை காவு கொடுத்து இறுதியில் அவர்கள் தேடிக் கொண்டது பாதிக்கப் பட்டவர்களின் சாபத்தை மட்டுமல்ல. இவ்வுலகத்தின் உரிமையாளனின் கோபத்தையும்தான்! அது நாளை இறுதித் தீர்ப்பு நாளின் போது நரகத்தின் உருவில் காத்திருக்கிறது!
'உயிருடன் புதைக்கப்பட்டவளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
=============
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

பெண் குழந்தை என்ற அருட்கொடை 
http://quranmalar.blogspot.com/2014/06/blog-post_19.html


சனி, 24 பிப்ரவரி, 2018

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2018 இதழ்


 
பொருளடக்கம் 
மக்கள்தொகைப் பெருக்கமும் பாடங்களும் -2
வாசகர் எண்ணம் -3
ரயிலில் ஏற விடாத சகபயணிகள்!- 5
குழந்தைச் செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்? -8
பெண்குழந்தை என்ற அருட்கொடை -10
இறைபொருத்தம் நாடி தர்மம் செய்யுங்கள்! -13
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிக்கிறதா? -14
எதிரலைகளுக்கு எதிராக எழுச்சி பெறும் மக்கள் இயக்கம் -16
இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும் -18
திருக்குர்ஆன் பற்றிய நபிமொழிகள்- 20
இஸ்லாமிய வளர்ச்சி மகிழ்ச்சிக்குரிய விஷயமா? -21
ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய வளர்ச்சி -23
போலீஸ் சீருடையின் அங்கமாகும் ஹிஜாப்! -24

வியாழன், 22 பிப்ரவரி, 2018

இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்


  
சமீபத்தில் பியூ ஆய்வு மையம் (www.pewresearch.org) வெளிப்படுத்தும் தகவல்கள்:
= 2015  - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் இருமடங்காகி விடும். உலக கிருஸ்துவர் எண்ணிக்கையை அது முந்தி விடும்.
= வரக்கூடிய ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 32% என்ற விகிதத்தில் உயரும்போது இஸ்லாமியர் எண்ணிக்கை  70% அதிகரிக்கும். – அதாவது  2015 இல் 1.8 பில்லியன் ஆக உள்ள இஸ்லாமியர் எண்ணிக்கை 2060 இல் சுமார்  3 பில்லியனாக உயரும். 2015 இல் இஸ்லாமியர் மொத்த உலக மக்கள் தொகையில் 24.1% இருந்தார்கள். 45 ஆண்டுகளுக்குப்பின் அது  31.1% ஆக உயரும். 


வளர்ச்சிக்கான காரணங்களாக சொல்லப்படுபவை:
உலகில் இன்றைய இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் 2.9.  இஸ்லாம் அல்லாத ஏனையவர்களின் பிறப்பு விகிதம் 2.2 ஆக உள்ளது இதில் கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் மட்டும் தற்போது 2.6 ஆக உள்ளது. (ஒரு இனம் வளர வேண்டுமானால் தேவைப்படும் குறைந்தபட்ச பிறப்பு விகிதம் 2.1)  இஸ்லாமியர் அதிகமாக வாழும் நாடுகளில் இஸ்லாமியர்களின் கருவுருந்தன்மை (fertility) மற்றவர்களை அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்களின் சராசரி வயது (median age) 2015 இல் 24 ஆக இருக்கையில் மற்றவர்களின் சராசரி வயது 32 ஆக உள்ளது.




= மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப் படுவதால் பாவங்கள் விலகும்மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை உணர்வு மிக்கவனாக அது வார்த்தெடுக்கும் அநீதியும்,அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து அங்கே தர்மங்களும்நல்லறங்களும் நீதியும் நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் நாட்டுவளங்களை நெறியோடு பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே வளர்ந்து வரும்.
= மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப் படுவதாலும் அவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுவதாலும் தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கைசுயமரியாதை உணர்வுவீரம்பாவங்களில் இருந்து விலகியிருத்தல் தியாகமனப்பான்மைபொறுமைபிற உயிர்களிடம் அன்புபணிவு போன்ற நற்பண்புகள் மக்களின் வாழ்வில் தழைக்கும்.
= பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிவதால் கடவுளின் பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும் வீண்சடங்குகளும் ஒழியும்பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுவார்கள்இந்த நிமிடம் வரையும் அயராமல் நடைபெறும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வரும்தொடர்ந்து நாட்டில் செல்வ வளம் செழித்தோங்கும்ஆக்கபூர்வமான வழிகளில் நாட்டின் செல்வம் செலவிடப்படும்.
= ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை மேலோங்க ஜாதிகளும் தீண்டாமையும் ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் ஒழியும்இனத்துக்கு ஒரு நீதிநாட்டுக்கு ஒரு நீதி மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது நடைமுறைக்கு வரும்மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர அன்பும் மலரும்.
  சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.

  = செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)
  . = வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள்    
   வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
= பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளரும்இறையச்சத்துடன் இணைந்து கற்கப்படும் கல்வியும் அறிவியலும் மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ பயன்படுத்தப்பட மாட்டாதுமாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும்இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும் பயன்படும்.
= பகைமைகளும் மோசடிகளும் அகன்று போவதால் பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்து வரும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாடு உண்மையாகப் பின்பற்றப்படும் நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறையும்நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் மறையும்.
= இறை நேசத்துக்காகவும் மறுமை இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால் அவ்வுலகு நிறைந்திருக்கும்
---------------------   

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ரயிலில் ஏற விடாத சகபயணிகள்!



சொந்தத் திருமணத்திற்காக இரண்டு மாத லீவில் ஊருக்கு வந்த ராஜா இன்று மீண்டும் வேலையில் சேர புதுடில்லிக்குப் புறப்படுகிறான். வழியனுப்ப வந்த குடும்பத்தினரோடு ரயில்நிலையம் வந்து சேர்ந்தாயிற்று. 20 நாட்களுக்கு முன்னரே முன்பதிவும் செய்திருந்தான். S6 இல் 32 வது பர்த். தமிழ்நாட்டில் ஒரு சிறிய ஊர் அது. ரயில் வந்து சேரும் நேரம் இரவு 11.30 ... இரண்டு நிமிடத்திற்கு மேல் ரயில் அந்த ஸ்டேஷனில் நிற்காது. அதற்குள் ஏறியாக வேண்டும். எல்லா தயாரிப்புகளோடும் காத்திருந்தான் ராஜா.

மணமான பின்னர் முதல்முறையாக இளம் மனைவியைப் பிரியும் தருணம் அது. மனைவிக்கும் அவள் குடும்பத்தார்க்கும் சோகம்.. ராஜாவுக்கும் சோகம்தான். ஆனால் அவனது டென்ஷன் முழுவதும் இரண்டு நிமிடத்தில் இரயிலுக்குள் ஏறுவதைப் பற்றியே இருந்தது. ரயிலின் வருகைக்கான அறிவிப்பு மணியும் அடித்தாயிற்று. ஸ்டேஷனில் விசாரித்து S6 பெட்டி நிற்கும் குத்துமதிப்பான இடத்தையும் அறிந்து கொண்டான். வழக்கமான கூவுதலோடு ரயில் ஸ்டேஷனை வந்தடைந்து கொண்டிருக்கிறது. SI.. S2... S3….. என ஒவ்வொரு பெட்டியாக ராஜாவைக் கடந்து சென்றன. தான் ஏறவேண்டிய பெட்டியும் கடந்து போய் S9 கோச் அவன் நின்ற இடத்தில் வந்து நின்றது. அவசர அவசரமாக  பயணச்சுமைகளைத் தூக்கிக்கொண்டு S6 கோச்சை நோக்கி ஓடினான். ஒருவழியாக கோச்சை அடைந்து ஏறப்பார்த்தால் அங்கே இரண்டு கதவுகளும் தாழிடப்பட்டிருந்தன. S7 இலும் அதே கதை.

ஓடிவந்து S6 இல் ஜன்னல் வழியாக மற்ற பயணிகளை அழைக்கலாம் என்று பார்த்தால் எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு உள்ளன. கதவருகே உள்ள ஜன்னலைத் தட்டிப்பார்த்தான்.. யாரும் திறக்கவில்லை. உறங்கத் தொடங்கியிருப்பார்கள் போலும். ராஜாவின் டென்ஷன் யாருக்குத் தெரியும்?
கோச்சின் நடுவே ஒரு ஜன்னல் மட்டும் திறந்திருந்தது. ஓடினான் ராஜா.. உள்ளே கல்லூரி  இளைஞர்களின் கும்பல்... குடியும் கும்மாளமுமாக ஆரவாரம் செய்து கொண்டு இருந்தார்கள்.
 “சார் சார், எனக்கு இந்த கோச்தான்.. கொஞ்சம் சீக்கிரமா கதவைத் திறங்க சார்...” கெஞ்சினான் ராஜா.
 ஒரு கேலிப்பொருள் கிடைத்ததைப் போல ராஜாவைப் பார்த்தது கும்பல்...
“யோவ், இந்த ட்ரைன்தான் கெடச்சுதா உனக்கு? இன்னும் எத்தனையோ ட்ரைன் பின்னாடி வருது.. அதுலே எதுலேயாச்சும் ஏறிக்கோ..”
“ஆமா, இந்த ட்ரைன் ஃபுள்ளா எங்களுது... வேணுன்னா அடுத்த ட்ரைன்ல சீட் கெடைக்குமா பாரு...”
இன்னொருவன் இன்னும் என்னவோ சொன்னான்... அதற்குள் கூவிக்கொண்டே நகர்ந்தது ரயில்..
தடக்.. தடக்.. தடக்.. என்று நகரும் ரயிலின் இரும்பு சக்கரங்கள் உண்டாக்கிய சத்தங்கள் ஒவ்வொன்றும் இடியாக இறங்கின ராஜாவின் தலையில்!
அங்கேயே தலையில் கைவைத்துக் கொண்டு  அமர்ந்தான் ராஜா!
-------------------------
ராஜாவுக்கு நேர்ந்த இந்த அவலம்- அநியாயம் - நம்மில் யாருக்கு நேர்ந்தாலும் சகிக்க மாட்டோம். அந்தக் கல்லூரி மாணவர்களின் பொறுப்பற்ற போக்கு கடும் தண்டனைக்குரியது. ஆனால் அவர்களை இங்கு தண்டிக்க வழியும் வாய்ப்பும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதே விதமான பொறுப்பற்ற போக்கும் சுயநலமும் நம்மிடமும் இருப்பதை அறிவோமா? எப்படி?

நமது சுயநலம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாம் ஒரு சமூகமாக நின்று  நடத்திக்கொண்டிருக்கும் அக்கிரமத்தைப்பற்றி சற்று சிந்தித்துப்பார்ப்போம் வாருங்கள். இன்று நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கும் சிசுக்கொலைகளுக்கும்  கருக்கொலைகளுக்கும் முக்கிய காரணம் நமக்குள் புரையேறிப் போயுள்ள சுயநலம்தானே? நாம் இங்கு வசதியாக வாழவேண்டும். அடுத்த தலைமுறை இங்கு வந்து நம்மிடம் உள்ள  உணவை - வாழ்க்கை வசதிகளை – ஆடம்பரங்களைக் - குறைத்துவிடும் என்று கருதி அவர்களைக் கொன்றொழிக்கும் செயல்தானே இந்தக் கொலைகள்? நபிகள் நாயகம்(ஸல்), உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது பெரும்பாவங்களில் ஒன்றுஎன்று அவர்கள் கூறினார்கள்.

மக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும் விடுகிறார்கள். ஒரு ஐநா அறிக்கைப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 7000 பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. இந்த கருக்கொலைகள்  போக குழந்தைகள் பிறந்தபின் கொன்றொழிக்கும் அவலங்கள் நாடுமுழுக்க நடந்து வருவதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். விஷ ஊசிகளும் கள்ளிப்பாலும் அரிசிமணிகளும் பிறந்த குழந்தைகளை பதம் பார்ப்பதை நாம் அறிவோம். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயல் அது! அச்செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதிக்கிறது. நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்கின்றனர்.

இப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது!  - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.


நமக்கென்ன உரிமை உள்ளது?

இன்னொன்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்... இன்று இந்த பூமியின்மீது வாழும் நாமும் இதன் உரிமையாளர்கள் அல்ல. நாமும் தற்காலிக வாசம் செய்ய வந்தவர்கள். ஒரு நாள் இந்த இருப்பிடத்தை விட்டு தூக்கி எறியப்படுவோம். இனி இங்கு வர இருபவர்களைத் தடுக்க எந்த உரிமையும் நமக்குக் கிடையாது. மீறி யாராவது ‘ இனி வரும் தலைமுறை கஷ்டப்படகூடாது என்ற இரக்க உணர்வினாலேயே அவர்களை முளையிலேயே கொல்கிறோம்’ என்று எண்ணினால் அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் தங்கள் இடத்தை விட்டுக்கொடுக்க முன்வருவதுதானே?

 ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:
= வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்;   (திருக்குர்ஆன் 17:31)
இந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு  தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:
= “உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! ) (திருக்குர்ஆன் 81:7-9)

எனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!
---------------------------------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள் 
இஸ்லாம் என்றால் என்ன?

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

மக்கள்தொகை பெருக்கமும் பாடங்களும்!

புதன், 14 பிப்ரவரி, 2018

மக்கள்தொகை பெருக்கமும் பாடங்களும்!


http://www.worldometers.info/world-population/


என்ற இணைய தளம் 16-3-2018 தேதியில் பூமியின் மக்கள்தொகை சுமார் 7.6 பில்லியன் என்று காட்டுகிறது.
1960 ஆம் ஆண்டு பூமியின் மீது 3 பில்லியன் மக்களே இருந்தார்கள் 
------------------------------ 
மக்கள் தொகை அதிகரிப்பு பற்றி பல கண்ணோட்டங்களையும் எதிரொலிகளையும் நாம் மக்களிடையே காண முடிகிறது..
Related image·  நாமே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம், இதில் இவர்கள் வேறா? நமது வறுமை இன்னும் கூடுமே என்ற கவலை சிலருக்கு.
·  .வறுமைக்குக் காரணம் மக்கள் தொகை அல்ல, மாறாக அநியாயமான பொருள் பங்கீடுதான் என எதிர் வாதம் செய்வார்கள் சிலர்.
·  மக்கள் தொகை அதிகரித்தால் மனித வளம் அதிகரிக்கும். நாடு இன்னும் முன்னேற வாய்ப்பு என்று கூறுவார் சிலர்.
·  இத்தனை கோடி மக்களில் எனது இடம் எத்தனையாவது? என்று ஆவல் கொள்வோர் ஒருபுறம்.
·  உலகம் எக்கேடோ கேட்டுப் போகட்டும்! எனக்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்குவோர் ஒருபுறம். 
இவ்வாறு பல எதிரோலிகளுக்கிடையே நாம் அனைவரும் மறந்துபோகும் ஒரு விடயம் உண்டு. அதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று பூமியின் மீது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம் உட்பட 760 கோடி. அதாவது ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி பூமி உருண்டையின் மீது பரவி வாழ்ந்துகொண்டு இருந்தவர்களில் எஞ்சியவர்களின் எண்ணிக்கைதான் 760 கோடி என்பது! சில கணக்கெடுப்புகளின் படி மனிதகுலம் பூமியின்மீது தோன்றிய காலம் கிமு. 8000 எனக் கொண்டால் இதுவரை 10800 கோடி மக்கள் இந்த பூமிப்பந்தின் மீது வந்திருக்கிறார்கள். (கருக்கொலைகளைக்   கணக்கிட்டால் எண்ணிக்கை இன்னும் பூதாகரமாக மாறும் என்பது தெரிந்ததே!) ( தகவல்: Population Reference Bureau, UN  www.livescience.com)
 இவர்களின் ஒரு பகுதி ஏற்கனவே இதன் மீது இருந்து மறைந்து விட்டது.
·  இவர்கள் இங்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன?
·  இங்கு வந்து அவதிப் படுவதற்காகவா?
·  நமது வறுமையைக் கூட்டுவதற்காகவா தொடர்ந்து இங்கு வருகிறார்கள்?
·  அல்லது நமது செல்வ செழிப்பை அதிகரிப்பதற்காகவா?
·  அல்லது இங்கு இந்த அற்பகால சுகத்தையும் துன்பங்களையும் அனுபவித்துவிட்டு அனைத்தையும் துறந்துவிட்டு செல்வதற்காகவா?
·  இங்கு வந்து உழைத்தும் உழைக்காமலும் தனக்குப் பிறகு வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துவிட்டுப் போவதற்காகவா?
இக்கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் எங்கிருந்து பெற முடியும்? இறைவனை மறுக்கும் நாத்திகர்களிடம் இதற்கு பதில் கிடையாது என்பது தெளிவு. வேண்டுமானால் நீங்கள் கேட்டுப்பாருங்கள். அவ்வாறிருக்கும் போது ஆத்திகம் இதற்கு என்ன பதில்களை முன்வைக்கின்றதோ அவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அதன்படி நடப்பதுதானே அறிவுடைமை? காரணம் நாம் இங்கு வந்தபின் ஏன் வந்தோம் எதற்காக வந்தோம் இனி எங்கே போகிறோம் என்பதை அறிவதுதானே நமது வாழ்க்கைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கும்?
எல்லாம் யார் செயல்?
இந்த மனிதர்கள் யாரும் இவர்களாக இங்கு வருவதில்லை என்பதும் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் கொண்ட ஒரு சக்திக்கு உட்பட்டுதான் இவை நிகழ்கின்றன என்பதும் பகுத்தறிவு நமக்கு எடுத்துச் சொல்லும் பாடங்களாகும். அந்த மறைவான சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம். மனிதன் தோன்றிய காலந்தொட்டு அந்த இறைவன் தனது தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் செய்திகளையும் மனிதகுலத்திற்கு அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத் தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். நமது வாழ்க்கையின் நோக்கம் பற்றி பினவருமாறு இறைவன் கூறுகிறான்:
= உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும்,வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
= அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 18:7.)
அதாவது பூமி என்ற பரீட்சைக் கூடத்தில் நாம் விடப்பட்டு நம் வினைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதைத்தான் மேற்படி வசனங்களில் அவன் கூறுகிறான். அதாவது இவ்வாழ்க்கை என்ற பரீட்சையை இப்போது எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கைதான் 730கோடி இதற்கு முன்னர் 10800 கோடி மக்கள் இதை எழுதி முடித்துச் சென்று விட்டார்கள். இன்னும் அன்றாடம் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். அவர்களாகச் செல்வதில்லை, ஆனால் பலவந்தமாக இப்பரீட்சைக் கூடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகிறார்கள். தனித்தனியாகவும் கூட்டம்கூட்டமாகவும் துடைத்தெறியப் படுகிறார்கள்.
·  இவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள்?
·  எத்தனை பேர் தோல்வி கண்டார்கள்?
·  அவர்களின் நிலை என்ன?
·  அவர்களைத் தொடர்ந்து நாளை நாம் இங்கிருந்து தூக்கி வீசப் படுவோம் அல்லவா? நமது நிலை என்னவாக இருக்கும்?
·  நாம் செல்லுமிடம் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால் இன்று நாம் என்ன செய்ய வேண்டும்?
பயனுள்ள ஆராய்ச்சி
இந்த வகையிலான சிந்தனை அல்லது ஆராய்ச்சி மற்றெல்லாவற்றையும் விட நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இதோ நம்மைப் படைத்தவன் பல்வேறு காலகட்டங்களில் இந்த பூமியின் மீது நடந்ததை நமக்கு நினைவூட்டுகிறான் பாருங்கள்:
32:26இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?

19:98
அவர்களுக்கு முன்னர்எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
இப்போது நமது தவணை ... இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.. சொர்க்கம் செல்கிறார்கள். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக வாழ்க்கையைக் கழிப்பவர்கள் நரகம் செல்கிறார்கள்

= 10:14.      நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம். 
------------------ 
தொடர்புடைய ஆக்கங்கள் 
இஸ்லாம் என்றால் என்ன?

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?