இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 25 மார்ச், 2015
ஞாயிறு, 22 மார்ச், 2015
எதிர்த்தோரின் குழந்தைகளின் நலன் நாடிய உத்தமர்
மனிதன் சக மனிதனுக்கு
எதிரியல்ல, மாறாக ஷைத்தான் என்ற மனிதகுல விரோதியே மனிதர்களை மற்ற மனிதர்களுக்கு
எதிரியாக முன்வைக்கிறான், பகைமையை மூட்டுகிறான் என்பது இஸ்லாம் போதிக்கும்
அடிப்படை கல்வியாகும்.
நபி(ஸல்)
அவர்கள் தம்மைக் கொடூரமாக எதிர்த்தவர்களின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப்
பிரார்த்தனை செய்துள்ளார்கள். அனைத்து மனித குலத்தின் எதிர்கால சந்ததிகளின்
சீர்திருத்தத்திற்கும் அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த
எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.
நபி(ஸல்)
அவர்கள் தாயிஃப் நகருக்கு சத்தியப் பிரச்சாரத்திற்காகச் சென்றார்கள். அங்கு
மக்களிடம் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு படைத்த இறைவனை நேரடியாக வணங்கி வாழ அழைத்தார்கள். இறைவனின்
பெயரால் மக்களை ஏய்த்துப்பிழைத்து வந்த இடைத்தரகர்களும் ஆதிக்க வர்க்கமும் மக்களை
நபிகளாருக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். முன்னோர்கள் கற்பித்த
மூடநம்பிக்கைகளில் ஊறிப் போயிருந்த அம்மக்களும் நபி(ஸல்) அவர்களைத் துரத்தித்
துரத்தித் தாக்கினர். நபி(ஸல்) அவர்களின் பொன்னான மேனியில் ஏற்பட்ட
காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தால் அவர்களின் பாதணிகள் தோய்ந்து போகும்
அளவுக்குத் தாக்கப்பட்டார்கள்.
அப்போது அவர்கள்
செய்த பிரார்த்தனை உருக்கமானதாகும். அப்போது இறைவன் நபியவர்கள் விரும்பினால் அந்த
மக்களை அழித்து விடலாம் என்பதற்காக அந்த
மலைக்குப் பொறுப்பாளியான வானவரை நபிகளார்பால்
அனுப்பினான்.
எனினும்
நபி(ஸல்) அவர்கள் அம்மக்களை அழிக்க விரும்பவில்லை. மாறாக
‘இவர்கள் சத்தியத்தை ஏற்காவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் இறைவனுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்’ எனக் கூறினார்கள்.
‘இவர்கள் சத்தியத்தை ஏற்காவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் இறைவனுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்’ எனக் கூறினார்கள்.
நபிகளாரின்
நிலையை சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும். எந்த ஒரு சராசரி மனிதனும் தன்னை
தாக்கி அழிக்க வரும் ஒரு கூட்டத்தை திருப்பி அடிக்கவோ அழிக்கவோ வாய்ப்பு
கிடைத்தால் அதைத்தான் விரும்புவான். ஆனால் நபிகளார் அந்த வாய்ப்பை அப்பட்டமாக
மறுத்ததோடு மட்டுமல்லாமல் அதே மக்களின் சந்ததிகளை நினைத்துப் பார்க்கிறார்கள்!
இவர்கள் இன்று சத்தியத்தை ஏற்காவிட்டாலும் இவர்களின் எதிர்கால சந்ததியினர்
சத்தியத்தை ஏற்பவர்களாக மாறவேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். அவர்களுக்காக
உருக்கமாகப் பிரார்த்திக்கிறார்கள். தன் வலிகளை மறக்கிறார்கள்!
ஆம், இந்த
மனிதகுல மாணிக்கத்திடம் மனிதகுலம் பெறவேண்டிய பாடம் இதுதான்... மனிதர்களைக் கண்மூடித்தனமாக கொன்றோதுக்கிவிட்டு அவர்களின் சமாதிகளின் மேல் நிலைநாட்டப் படுவதல்ல தர்மம்
என்பது. மாறாக மக்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே அதர்மத்தை அகற்றி
அங்கு நிலைநாட்டப் படுவதே தர்மம்! ஒவ்வொரு மனிதனும் அவர்களின் சந்ததிகளும் நமக்கு வேண்டியவர்களே ! இஸ்லாம் என்ற சுயசீர்திருத்தக் கொள்கையை
ஏற்றவர்கள் இந்த அடிப்படையில்தான் செயல்பட வேண்டும்!
வெள்ளி, 20 மார்ச், 2015
லெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்
இன்று டெல்லி, மும்பை, சென்னை,
பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதிகமாக அணியப்படும் ஆடை லெக்கின்ஸ். தோலோடு ஒட்டிய, கால்களின் பரிமாணங்களை வெளிப்படுத்தும் படியான காலாடை
அது. ஒருகாலத்தில் உள்ளாடையாக அணியப்பட்ட ஒன்று இன்று வெளியாடையாக
பரிணமித்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் “நாகரீக” வளர்ச்சியில் இதை
அணியாதிருப்பது பிற்போக்குத் தனம் என்று பெருவாரியான பெண்கள் கருதும் அளவுக்கு இது
பிரபலமடைந்து வருகிறது.
சிலர் இதை எதிர் பாலினத்தை
கவருவதற்காக அணிகிறார்கள். சிலர் இது அணிவதற்கு எளிமையானது என்பதற்காகவும் விலை
குறைவானது என்பதற்காகவும் அணிகின்றனர். இன்னும் சிலர் கல்லூரிகளில் அல்லது
அலுவலகங்களில் தனது தோழிகளுக்கு நானும் நாகரீகத்தில் சளைத்தவளல்ல என்பதை
காட்டுவதற்காகவும் அணிகின்றனர். பிற்போக்குத்தனம், பத்தாம்பசலித்தனம் போன்ற
முத்திரைகளுக்கு பயந்து இதை அணிவோரும் உள்ளனர்.
சரி, இதை அணிவதால் கேடுகள்
ஏதாவது உள்ளனவா?
= இதை அணிவதால் இதை
அணிபவர்களுக்கு உடல்நலம் தொடர்பான கேடுகள் ஏதும் பெரிய அளவில் உண்டாகப் போவதில்லை.
துணிகளின் தரத்தைப் பொறுத்து தோல் அரிப்பு அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும்
அவற்றை எளிய மருத்துவம் மூலம் போக்கிக்கொள்ள முடியும்.
வேறு ஏதாவது கேடுகள்...?
= இந்த உடை ஆண்களை எளிதில்
கவரக்கூடியதாக இருப்பதால் அவர்களுக்குள் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடும். அதன்
காரணமாக அவர்கள் வாய்ப்பு வரும்போது அணிபவர்களை
பாலியல் துன்புறுத்தலுக்கு
ஆட்படுத்தக் கூடும். முற்றிய நிலையில் பாலியல் பலாத்காரத்திற்கும் அதைத் தொடர்ந்து
கொலைக்கும் ஆட்படுத்த வாய்ப்புகள் உண்டு. அந்நியன் ஒருவனின் குழந்தையை கருவுறவும்
பெற்றெடுக்கவும் வாய்ப்புகள் உண்டு!
இந்தக் கெடுதியில் இருந்து தப்ப
வழிகள் உள்ளனவா?
ஒருசில வழிகளை சில “முற்போக்கு”
சிந்தனையாளர்களும் பெண்ணுரிமைவாதிகளும் முன்வைக்கிறார்கள். அவையாவன:
= கராத்தே, குங்ஃபூ போன்ற
தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளலாம்.
= எதிரிகளை அண்ணன்- தங்கை உறவை
நினைவூட்டி உபதேசித்து திருத்தப் பார்க்கலாம்
= காவல்துறைக்கு
முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.
= “ஆடை அணிவது எங்கள் உரிமை!
திருந்தவேண்டியது நீங்கள்” என்று ஆணிணத்துக்கு அறிவுரை வழங்கலாம். போராட்டங்கள்,
ஊர்வலங்கள் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
= கற்பம் தரித்தால் கருக்கொலை, சிசுக்கொலை
போன்றவற்றை நாடலாம். மீறி குழந்தை பிறந்தால் அரசுத் தொட்டில்களிலும் அனாதைக்
காப்பகங்களிலும் அடைக்கலம் நாடலாம்!
வேறு ஏதாவது கேடுகள் உண்டா?
ஆம் கண்டிப்பாக உண்டு! அவை
இவற்றை விடக் கடினமானவை!
இவ்வுலக வாழ்வில் எப்படியும்
வாழலாம், நாம் உயிர்வாழும் வரை எப்படியாவது வாழ்ந்து ஆபத்துகளை விட்டு தப்பித்துக்
கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு மேற்கண்ட கேடுகள் மட்டுமே பெரிதாகத் தெரியும்.
அவர்களைப் பொறுத்தவரை இவ்வுலக வாழ்வு என்பது தற்காலிகமானது, இங்கு மனிதன் செய்யும்
செயல்களுக்கு - நல்லதும் தீயதும் ஆன செயல்பாடுகளுக்கு இவ்வுலகைத் தவிர வேறெங்கும்
எந்தவிதமான பாதிப்புகளும் விளைவுகளும் தொடர்வதில்லை என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆனால் நம்பிக்கைகளோ ஊகங்களோ முழுமையாக உண்மையாகிவிடாது.
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தன்
அற்ப நிலையையும் தான் வாழ்ந்து போகும் அற்ப கால அளவையும் உணர்ந்த மனிதர்கள் யாரும்
இவ்வுலகமே எல்லாம் இதை மிஞ்சிய ஒன்று எதுவுமே இல்லை என்று தம்பட்டம்
அடிக்கமாட்டார்கள். ஒரு கிணற்றுக்குள் நீந்திக் களித்துக் கொண்டிருக்கும் தவளைகள்
இக்கிணறுதான் எல்லாமே, இதை மிஞ்சிய ஒன்று எங்கும் எதுவும் இல்லை என்று பிதற்றுவது
போன்றதே அது. உண்மையான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் இறைவேதங்களும்
இறைத்தூதர்களும் கூறும் மறுமை வாழ்வை மறுக்க மாட்டார்கள்.
இவ்வுலகைப் படைத்து
பரிபாலித்துவரும் இறைவன் இங்கு ஒவ்வொரு மனிதனும் செய்த வினைகள் அனைத்துக்கும்
மறுமையில் தீர்ப்பு வழங்குவான். இறைவன் தடுத்த காரியங்களை செய்தவர்கள் அதற்கான
தண்டனையை அனுபவிப்பார்கள். உதாரணமாக, உடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளை
மீறியவர்களும், இறைவன் தடுத்த ஆண்-பெண் உறவு வரம்புகளை மீறியவர்களும், அவ்வாறு
பிறந்த குழந்தைகளைக் கொன்றவர்களும் என அனைவருக்கும் நரக நெருப்பின் தண்டனை அங்கு
உண்டு.
இவ்வுலகின் சொந்தக்காரனான
இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான்
வாழவேண்டும் என்று தனது வரையறைகளை
வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த
வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக
அனுப்பப்பட்ட திருக்குர்ஆனும் ஆடை மற்றும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை
அறிவிக்கின்றன. அதன்படி
= ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்பட வேண்டியவையாகும்.
= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.
= உடலின் பாகங்களை
வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும்
பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.
= பெண்ணைப் பொறுத்தவரை அவளது நெருங்கிய
உறவினர் அல்லாத மற்ற ஆண்களுக்கு முன்னர்
வரும்போது மேற்படி உடலை முழுமையாக மறைத்துக் கொண்டே வரவேண்டும்
= தாம்பத்தியம் அல்லது
உடலுறவு என்பதை திருமணமான ஆணுக்கும்
பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப்
பட்டுள்ளது.
.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும்
தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும்.
= ஒரு அந்நிய ஆணும் அன்னியப்
பெண்ணும் உடலுறவு கொள்வது இவ்வுலகிலேயே தண்டனைக்குரிய பாவம்.
ஆக, அந்த வகையில் லெக்கின்ஸ் மட்டுமல்ல மறைக்க
வேண்டிய உடலின் பாகங்களை திறந்தோ மூடியோ வெளிப்படுத்தும் எந்த உடையும் இறைவனால்
தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இதை அணிவதால் சமூகத்தில் உண்டாகும் குழப்பங்களுக்கும்
விளைவுகளுக்கும் உரிய தண்டனையை இதை அணிபவர்கள் மறுமையில் பெறுவார்கள் என்பது
நிச்சயம்!
இந்த வரம்புகளை மீறி விட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து
எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். ஆனால் அவை
அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன்
பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று
உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின்
மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள்
சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும்
சாட்சி சொல்லும்.
99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை
செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை
செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன்
கண்டு கொள்வான்.
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும்
புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான
அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப்
படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்
உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில்
குளிர்ச்சியையோ, குடிப்பையோ
சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்)
தக்க கூலியாகும்.
18:29 .....அநியாயக்
காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்)
சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள்
(தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக்
கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக்
கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும்
தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘
எந்த உடலைக் கவர்ச்சியாகக் காட்டிகொண்டு நடந்தீர்களோ அதன்
கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்!
இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! உங்கள் ஆடையையும்
வாழ்க்கையையும் திருத்திக்கொள்ளுங்கள்!
அதேவேளையில் இறைவனுக்குப் பொருத்தமான வாழ்வை வாழ்ந்து
செல்வோருக்கு மறுமையில் சொர்க்கச் சோலைகளும் காத்திருக்கின்றன.
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்? http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்? http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
திங்கள், 9 மார்ச், 2015
பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே!
முதியோர் இல்லம் தவிர்!
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இது உண்மை! உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான். இதைப் புறக்கணித்தால் உங்களுக்கு இவ்வுலகிலும் அதற்கான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. மறுமையிலும் நரக நெருப்பின் வேதனை உண்டு.
ஸ்ரீ பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக
முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட
வேண்டாம் இன்னும் அவ்விருவரிடமும் கனிவான
கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் 17:23)
பெற்றோருக்காக பிரார்த்தனை
ஸ்ரீ இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர்
தாழ்த்துவீராக மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு)
அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப்
பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24)
ஸ்ரீ நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி
வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை
சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன்
பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.'
(அல்குர்ஆன் 31:14)
தண்டனை தள்ளிவைக்கப்படுவதில்லை!
ஸ்ரீ "பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன்
இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ
பெற்றோரின் திருப்தி
ஸ்ரீ "பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை இறைவன்
திருப்தியடைய மாட்டான்" என்று நபி "கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா?" என்று
கேட்கப்பட்டதற்கு, "ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான்" என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி
தாயின் காலடியில் சொர்க்கம்!
ஸ்ரீ ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து "இறைத்தூதர் அவர்களே! நான்
போரில் கலந்து கொள்ள நாடுகிறேன்" என்று கூறினார். "உனக்கு தாய் உண்டா?" என்று கேட்டதும் ஆம்
என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். "அவளின் இரு கால்களின் அடியில்
தான் சொர்க்கம் உள்ளது" என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி)
அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)
ஸ்ரீ ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அவன் இழிவடையட்டும்! அவன்
இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்!' என்று கூறினார்கள். மக்கள் வினவினார்கள், 'இறைவனின் தூதரே (இழிவடையட்டும்
என்றீர்களே) யார்?' 'முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ
பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்' என்று பதலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம்.
அன்னையைப் போலொரு செல்வமுண்டோ?
ஸ்ரீ ஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து இறைவனின் தூதர் அவர்களே! நான் நல்ல
விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?' எனக்கேட்டார் அதற்கு நபி
அவர்கள் 'உம்முடைய தாய்' என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது
முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக
அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைத்தூதர் அவர்கள் உம்முடைய தாய் என்றே பதிலளித்தார்கள்.
நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய
தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்
இறைவனின் தூதர் நமக்கு கூறிச்சென்ற
அறிவுரைகளை மனதில் நிறுத்தி இறைவனின் பொருத்தத்தை பெறுவோமாக!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)