இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

இயந்திரங்களின் அச்சாணி தந்த அல் ஜசாரி!


எல்லா வகை இயந்திரங்களுக்கும் Engine அல்லது Motor என்பது இதயம் போன்ற பாகம். இந்த இதயம் இல்லையென்றால் இயந்திரங்கள் வெறும் இரும்பு கூடுகள்தான்.

இந்த இதயப் பகுதிக்கு உயிரூட்டக் கூடிய பாகம் Crankshaft என்கிற கண்டுபிடிப்பு. Crankshaft இல்லையென்றால் சில வகை Engine கிடையாது. இந்த Engine-கள் இல்லையென்றால் இன்றைய அதி நவீன கார்கள் கிடையாது. Crankshaft-யின் தொழில் நுட்ப விளக்கங்களுக்குள் எல்லாம் நாம் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. இது சக்தியை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றக் கூடிய இயந்திர பாகம்.
Crankshaft-யை முதலில் வெற்றிகரமாக வடிவமைத்து நடைமுறை மனித செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர் இஸ்லாமிய இயந்திரவியல் விஞ்ஞானி Al-Jazari. உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா இவரை The Real Father of Engineering என்று சொல்வார்கள். இவர் பிறந்தது கி.பி. 1136-ல். மனிதர் பலத் திறமைகளை பெற்றிருந்தார். அறிஞர், கண்டுபிடிப்பாளர், கலைஞர், பொறியியளாளர் இப்படி பல்வேறு துறைகளில் இயங்கியவர்.


Leonardo Da Vinci-யை பன்முகத் தன்மை கொண்ட அதிசயப் பிறவி என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மேற்குலம், Da Vinci-க்கு நிகரான சொல்லப்போனால் Da Vinci-யை விடவும் பல விசயங்களில் மேம்பட்டவரான Al-Jazari-யை பற்றி எந்தயிடத்திலும் மறந்தும் மூச்சுக் கூட விட்டுவிடாது. ஏனென்றால் இஸ்லாமியர்கள் காட்டு மிராண்டிகள். அவர்களைத் தலையில் தூக்கி கொண்டாடுவது தீட்டான விசயம் மேற்குலகங்களுக்கு. முடிந்தவரை உலகின் பொதுப் புத்தியிலிருந்து இஸ்லாமிய விஞ்ஞானிகள் குறித்த விசயங்களையும் அவர்கள் மனித சமூக வளர்ச்சிக்கான பங்களிப்பாக செய்த சாதனைகளையும் துடைத்து அழிப்பதில் குறியாக இருக்கின்றன.
இந்த துடைதழிப்பின் ஒரு பகுதிதான் காட்டுமிராண்டிகள் வாதம். ஆதியும் தெரியாமல் அந்தமும் புரியாத நம்மவர்களும் கண்களை மூடிக்கொண்ட பூனைகள் போல திரும்ப திரும்ப மேற்குலகின் காட்டுமிராண்டி வாதத்தை இஸ்லாமியர்களுக்கு எதிரான விமர்சனங்களாக முன்வைத்து வருகிறார்கள்.
Al-Jazari “The Book of Knowledge of Ingenious Mechanical Devices” என்கிற நூலை 1206-ல் எழுதி வெளியிட்டார். இந்த புத்தகத்தில் நூற்றுக்கனக்கான இயந்திரங்களின் வடிவமைப்பு முறைகளையும் அவைகள் இயங்கும் விதங்களையும் மிக விளக்கமாக எழுதியிருக்கிறார்.
ஏரிகளில் இருந்து தண்ணீர் உறிந்து வீடுகளுக்கு வினியோகிக்கும் இயந்திரம், கிணறுகளில் இருந்து தண்ணீர் இரைக்கும் இயந்திரம், வீடுகளில் கை மற்றும் பாத்திரங்கள் கழுவ பயன்படும் இயந்திரம், இசை எழுப்பும் இயந்திரங்கள் என்று இன்றைய நவீன உலகில் மனித பயன்பாட்டில் இருக்கும் இயந்திரங்களின் மூலாதாரமான இயந்திரங்களை 800 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து மனித பயன்பாட்டுக்கொண்டு வந்துவிட்டார்.
இன்றைக்கு ஜப்பான் பல்வேறு இயந்திரன்களை (Robo) வடிவமைத்து தங்கள் பங்குக்கு மேற்குலகை நவீன கண்டுபிடிப்புகளில் பின்னுக்குத்தல்ல முயற்ச்சி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் 800 வருடங்களுக்கு முன்பே இன்றைய இயந்திரன்களின் மூதாதையான இயந்திரனை Al-Jazari வடிவமைத்து வெற்றிகரமாக மனிதர்களைப் போல அந்த இயந்திரனை செயல்பட வைத்திருக்கிறார். தேநீர் பரிமாற அவர் கண்டுபிடித்த இயந்திரன் பயன்பட்டிருக்கிறது. இவரை Father of Robotics என்றும் பெறியியல் உலகம் சிறப்பிக்கிறது.
இன்றைய அதி நவீன் இயந்திரங்களின் இயங்கு பாகங்களாக இருக்கும் Valves, Piston, Pulley, Lever என்று பல பாகங்களின் செயல் திறனை மேம்படுத்தி வடிவமைத்தவர் Al-Jazari.
Al-Jazari –க்கு நன்றி சொல்லும் Crankshaft-யை தன்னுடைய Engine-ல் கொண்ட நவீன கார் வந்துவிட்டது நவீன மனிதனை அழைத்துச்செல்ல. காரில் ஏறி உட்கார்ந்ததும் ஓட்டுனர் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டி நவீன மனிதனின் பெயருக்கு கீழ் கையெழுத்திடச் சொல்கிறார். பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கு இந்த நடைமுறைக் குறித்த பரிச்சயம் இருக்கலாம்.
நவீன மனிதன் தன்னுடைய எழுதுகோலை எடுக்க தன் சட்டைப் பையை தடவும் ஒரு சில வினாடிகளுக்குள் நாம் இன்றைய எழுதுகோல்களுக்கு (Pen) முன்மாதிரியான கண்டுபிடிப்பை பார்த்துவிடுவோம். கி.பி. 953-களில் எகிப்தை ஆட்சி செய்த சுல்தானுக்கு அன்றைய எழுதுகோள்கள் பெறும் பிரச்சனையை கொடுத்தன. கைகளும் உடைகளும் மைக் கரைப்பட்டு சுல்தானை கடுப்பேற்றியது. சுல்தானின் கடுப்பைப் போக்க இஸ்லாமிய அறிஞர்கள் புவியீர்ப்பு விசை மற்றும் கேப்பிலரிய விசையை ஒன்றிணைத்த Fountain Pen-யை கண்டுபிடித்தார்கள்.

கேமராக்களின் தந்தை இப்னு ஹைதம்!


 கைப்பேசி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே ஓர் அடியும் எடுத்துவைப்பதை பெரும் கெட்டக் கனவாக நினைக்கும் இன்றைய மனிதன் உபயோகிக்கும் கைப்பேசியில் இருக்கும் மகா மெகா Mega pixel கேமராக்களின் உயிர் நாடி தொழில் நுட்பம் light தான். வெளிச்சம் இல்லையென்றால் Optics தொழில் நுட்பம் கிடையாது. இந்த தொழில் நுட்பம்தான் நம் கண்கள் செயல்படும் விதத்தை விளக்குகிறது.

வெளிச்சம் நம் கண்களுக்குள் ஊடுருவதால்தான் நம்மால் பார்க்கமுடிகிறது, நிறங்களைப் பிரித்து அறியமுடிகிறது என்பதை முதலில் இந்த உலகிற்கு அறிவித்தது இஸ்லாமிய விஞ்ஞானி Ibn al-Haitham. கண்களின் உட்பகுதிகளான cornea, retina, lens ஆகியவற்றை பிரித்தரிந்த அடையாளம் காட்டி பெயர் சூட்டியவர். இவர் வாழ்ந்தது 10-ஆம் நூற்றாண்டில். இயற்பியல், கணிதம், வானியல் என்று நவீன அறிவியலின் முக்கிய தளங்களில் இயங்கியவர்.
ஆதிகாலம் தொட்டு கிரேக்க அறிஞர்கள் இயற்பியலைத் தத்துவத் துறையோடு இணைத்து பேசிக்கொண்டிருக்க இந்த மனிதர்தான் பேசு பொருளாக மட்டுமே இருந்த இயற்பியலை தத்துவத்திலிருந்து பிரித்து நடைமுறை சாத்திப்படும் சோதனைக் கூடத்திற்கு மாற்றியவர். இன்றைய Digital Camera-க்களுக்கெல்லாம் மூதாதயரான Pin-Hole Camera-வை முதன் முதலில் வடிவமைத்து சோதித்துப் பார்த்திருக்கிறார்.
கேமிராவில் துளை எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்குத் தெளிவாக படம் இருக்கும் என்பதை தன்னுடைய Camera Obscura கருவி மூலம் கண்டறிந்தார். அரபி மொழியில் Qamara என்றால் இருண்ட அறை என்று அர்த்தம். Qamara வார்த்தையில் இருந்துதான் Camera என்கிற ஆங்கில வார்த்தை வந்திருக்கும் என்பது எளிதில் விளங்கக்கூடிய விசயம்.
கட்டுரை:

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்!


 இறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம்!

தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள்
=  (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லைஎனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ  (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை.  (திருக்குர்ஆன் 21:25)

 கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும்  இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதும் தெளிவு.
தர்மத்தை நிலைநாட்ட அடித்தளம்
இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்ததுஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம்மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும்அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான்நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும்.  ஆனால் உண்மை இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவற்றை - மனிதர்களையும், உருவச்சிலைகளையும் இன்ன பிற படைப்பினங்களையும் - வணங்கும்போது இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு அகன்று போவதால் இறையச்சமும் இல்லாமல் போய் விடுகிறது. 
அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:
·  இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே.  அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.
·  அவனை நேரடியாக வணங்க வேண்டும்.  அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லைசடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.
·  அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை. 
·  நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமேஅவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.
·   படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.
என்றெல்லாம் போதித்தார்கள்.  திருக்குர்ஆனில் இருந்து முன்னாள் இறைத்தூதர்களில் சிலரது உதாரணங்களை கீழே காண்கிறோம்:
திண்ணமாகநாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரேஅல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லைமகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.” (திருக்குர்ஆன் 7:59)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்) 
 மேலும்இப்ராஹீமை நாம் அனுப்பினோம்அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்மேலும்அவனுக்கு அஞ்சுங்கள்நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின்இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்(திருக்குர்ஆன் 29:16)
மேலும்‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம்அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரேஅல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவேநீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?” (திருக்குர்ஆன் 7:65) 
மேலும்ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம்அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களேஅல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லைஉங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டதுஇது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளதுஎனவேஅல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்(திருக்குர்ஆன் 7:73)

இவ்வாறு இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதை எடுத்துரைத்த  அவர்கள் அந்த மக்கள் செய்துகொண்டிருந்த தவறுகளைப் பற்றி எச்சரித்தார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ - புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள்நாளடைவில் தர்மத்தையும் நிலைநாட்டின்னார்கள்ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல இக்கட்டளைகளை மீறினார்கள்ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு  உருவப் படங்களை வைக்க ஆரம்பித்தார்கள்நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள்உண்மை இறைவனை மறந்தார்கள்அதன் விளைவு?.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகலஇடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக......  கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறினஇவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது.. 
அற்புத குமாரன் இயேசு (ஈஸா) அவர்கள் 
இதே இறைத்தூதர்கள் வரிசையில் வந்தவர்தான் அன்னை மரியாளுக்கு அற்புதமான முறையில் பிறந்த இயேசுநாதர் என்றழைக்கப்படும் ஈசா நபி. அவரும் மக்களுக்கு ஏகத்துவத்தையே போதித்தார். 
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (திருக்குர்ஆன் 5:72)
மட்டுமல்ல, இறைவன் அல்லாதவற்றை வணங்கினால் ஏற்படும் இறைதண்டனையையும் எடுத்துரைத்தார். ஆயினும் அவரை இறைவன் அற்புதமான முறையில் கைப்பற்றிய பிறகு மக்கள் அவரை இறைவனின் குமாரன் என்றும் அவரையே இறைவன் என்றும் கூறி வழிபடத் தொடங்கினார்கள். 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 
மேற்படி இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக -ஆனால் அனைத்துலகுக்கும் பொதுவாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர்களை இறைவன் பின்வருமாறு ஏகத்துவக் கொள்கையை கற்பிக்கக் கட்டளையிடுகிறான்:
= (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (திருக்குர்ஆன் 7:158)
உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப்பட்டும் கூட இந்த பூமியில் அவருக்கு எங்குமே சிலைகளும் படங்களும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. இறுதித்தூதர் மறைந்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ஆயினும்  அவர் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் சிதையாமல் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன என்பதற்கு இவ்வுண்மை சான்று பகர்கின்றது. 
--------------------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள்:
இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு?

உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்!

பாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். 
 மன்னர்களும் மன்னர்களின் பரம்பரைகள் மட்டுமல்ல, திறமையுள்ள எந்தப் பாமரனும் ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்பதை உலகில் முதன்முதலாக விதியாக்கியது இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாயகமே என்பதை ஆராய்வோர் அறியலாம்!  

அரசியலுக்கு புது இலக்கணம் 

நாடும் மக்களும் நாட்டு வளங்களும் அனைத்தும் மன்னனுக்கே சொந்தம் என்ற எழுதப்படாத விதியையும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ என்ற மரபுகளையும் மாற்றி அமைத்தது இஸ்லாத்தின் வரவு! நாடும் மக்களும் மட்டுமல்ல, உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்றும் மனிதனிடம் தற்காலிகமாக வழங்கப்படுவதே ஆட்சியதிகாரம் என்று அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம். அரசனாயினும் ஆண்டியாயினும் அவரவர்க்கு இவ்வுலகில் இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்ற உண்மையை நினைவூட்டி அதை அரசியலுக்கு அடிப்படையாக்கியது இஸ்லாம்! 

நபிகளார் நிறுவிய சமத்துவ அரசாங்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆன்மீகத் தலைமையும் ஆட்சித் தலைமையும் அன்னாரது இறுதிக் காலத்தில் கைவந்தது. அன்றுவரை இருந்து வந்த அரசர்களின் அல்லது ஆட்சியாளர்களின் நடைமுறைகளை இஸ்லாமிய நடைமுறை மூலம் மாற்றிக் காண்பித்தார் நபிகளார். 

= பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே அரபு நாட்டு அரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன.  அரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங்களில் பெருமைமிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதை இஸ்லாம் ஆட்சிக் கட்டில் ஏறியபின் தடுத்து நிறுத்தப் பட்டது.

= அரசவைக்கே அணிகலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும் இல்லாது போயின. 

= ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடைமுறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின. 

= ஆட்சியாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர். 

= அரசன் விதிப்பதே சட்டம் என்ற நிலைமாறி இறைவன் விதிப்பதே சட்டம் என்ற நிலை அமுலுக்கு வந்தது.

= கோத்திரத்துத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, அல்லது அவர்களிடம் இருந்த வீரமறம், வள்ளல் குணம் போன்றவற்றை முன்வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆயினும்கூட, மற்ற மக்களுக்கு இல்லாத ஏராளமான சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.  கோத்திரத்துத் தலைவர்களின் கால்நடைகளுக்கென்று தனி மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் யாரும் அதில் காலைக்கூட வைக்க முடியாது.  இந்த சடங்கையும், தவறான மரபையும் அடியோடு ஒழிப்பதற்காகத்தான் இறைத்தூதர் (ஸல்) கீழ்வருமாறு அறிவித்தார்கள். “இறைவனையும் இறைத்தூதரையும் தவிர மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை!” 

= போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்ற மக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக்கென்று சிறப்புப்பங்கு இருந்தது. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஐந்தில் ஒரு பங்கு என்ற நடைமுறையை இஸ்லாம் கடமையாக்கியது. 

= பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப்படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இக்குறையைப் போக்க ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர். 

சட்டத்திற்கு முன் சமநிலை: 

அந்த காலகட்டத்தில் ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரசவையை சார்ந்தவர்களும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல எந்த சட்டத்திற்கும் எட்டாத தூரத்தில் இருந்தார்கள். சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது.  ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூதர் இடத்திலும் அவருடைய வீட்டார்களிடத்திலும் தான் முதன் முதலில் சட்டம் செயல்படத் தொடங்கும். இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான். 

உதாரணமாக, வட்டி வியாபாரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட போது தன்னுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு வரவேண்டிய வட்டி நிலுவைத் தொகை அனைத்தையும் இறைத்தூதர் தள்ளுபடி செய்து விட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்து தொடரும் மோதல்களுக்காக இனிமேல் யாரும் பழிதீர்க்கக் கூடாது என்கின்ற ஆணை அமுல்படுத்தப் பட்டபோது தம்முடைய சொந்த கோத்திரத்தின் சார்பில் எல்லா வகையான வழக்குகளிலும் பழி வாங்குதலை கைவிடுவதாக இறைத்தூதர் அறிவித்தார்கள்.

"என் மகள் பாத்திமாவே திருடி இருந்தாலும் அவளது கையையும் வெட்டுவேன்" என்று சூளுரை பகர்ந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்).

------------------------ 

நாட்டைக் காப்போம்நாட்டு மக்களை நேசிப்போம்!
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

இந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்?


 

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும் போலி ஆன்மீகவாதிகளும் அமைதி இழக்கிறார்கள். வல்லரசுகள் வலிமையை இழக்கின்றன. உலக சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.

அவர் போதித்த அறிவார்ந்த கொள்கையின் தாக்கம் உலகெங்கும் பரவப் பரவ அதன் காரணமாக இந்த மண்ணில் தங்களுக்கு பறிபோன மனித உரிமைகளைக் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதுகாறும் தங்களை மதத்தின் பெயராலும் மூடநம்பிக்கைகளின் பெயராலும் வீண்சடங்குகளின் பெயராலும் பிணைத்து வைத்திருந்த  அடிமைத்தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஆதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இப்புரட்சியின் விளைவாக தங்கள் ஆதிக்கம் பறிபோவதை உணரும் சுயநல சக்திகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்வது என்று வழியறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை பாமரர்களையும் உலகத்தின் நலிந்த நாடுகளின் செல்வங்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு சுகம் கண்டிருந்த இந்தக் சுயநலக் கூட்டத்தால் இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

அப்படி என்னதான் போதித்தார் இம்மாமனிதர்? அதை சற்று அறிவோம் வாருங்கள்:
அவர் போதித்த கொள்கை அல்லது கோட்பாட்டின் பெயர்தான் இஸ்லாம் என்பது. இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இக்கோட்பாடு முன்வைக்கும் தத்துவம் ஆகும்.
அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (தமிழில் கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.
 இது அனைவருக்கும் பொதுவான ஓர் கொள்கை!
.இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோநாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.
தலைசிறந்த வாழ்க்கை இலட்சியம்
  யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு – அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில்  சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம்
 இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அவர்கள்  மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரிஅரசர்கள் ஆனாலும் சரிஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.
மனிதகுல ஒற்றுமையும் சகோதரத்துவமும்
   இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும்எந்த மொழியைப் பேசினாலும்எந்த நிறத்தவர் ஆனாலும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே! அவர்களுக்கிடையே நாடுஇனம்மொழிகுலம்ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.
நன்மையை எவுதலும் தீமையைத் தடுப்பதும்
இக்கோட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும்தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.
இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்றும் ஏன் இந்த மாமனிதரை இவர்கள் கடுமையாக அவதூறுகள் கூறி விமர்சிக்கிறார்கள் என்றும்!
 = தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் வெகுண்டெழுகிறார்கள். விபச்சாரம், கொலை, கொள்ளை, வட்டி, இலஞ்சம், ஊழல் பேர்வழிகளுக்கு தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு இது இடையூறாகிறது.
இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது! மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது!
நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.
=  மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக்  கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள்
ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.'
அவனே தன் தூதரை நேர் வழியுடனும்சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – இறைவனுக்கு இணை வைப்பவர்கள்இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும்எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) (அல்-குர்ஆன் 9:32,33)
இந்த இறைவாக்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி புலர்ந்தது வருவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.
தொடரும் பயம் 
அந்த இறைத்தூதரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாதுதங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால்காலம்காலமாக இவர்களால் வழிகேடுக்கப் பட்ட மக்கள் இவரது உபதேசத்தைக் கேட்டபின் சத்தியத்தை உணர்ந்து இவர்களைக் கைவிட்டுவிட்டால் எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும்

இந்த உயர்ந்த போதனைகள் தங்களின் ஆதிக்கத்தில் உள்ள மக்களை வந்தடைந்தால் நம்மையும் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை வெகுவாக கவ்விக்கொண்டுள்ளது. எனவே தங்களிடம் எஞ்சியுள்ள ஆதிக்க பலத்தினால இந்தப் புரட்சியை எப்படித் தடுப்பது என்று இரவுபகலாக யோசிக்கிறார்கள். சதித்திட்டங்கள் தீட்டுகிறார்கள். அவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் காணும் நபிகளாரைப் பற்றிய இழிவான விமர்சனங்களும் தவறான சித்தரிப்புகளும்!
 நபிகளார் கொண்டுவந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்திற்கும் உறுதியான சித்தாந்தத்திற்கும் ஒரு மாற்று இருந்தால் அதை முன்வைத்து வாதாடி இந்த மக்களை தடுத்திடலாம். அவ்வாறு ஒரு மாற்றுத் திட்டம் எதுவும் தங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இதுதான்! கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்றவர்களிடம் உள்ள ஒரே குறுக்கு வழி வசைபாடுவதும் கேலி செய்வதும் அவதூறு கூறுவதும்தான்!
உலகெங்கும் கோடானுகோடி மக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் அளவுக்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்த அவரை காமவெறியன் என்றும் அயோக்கியன் என்றும்  வாய்கூசாமல் வசை பாடுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலமும் கார்டூன்கள் மூலமும் சித்தரித்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இணையதளம்பத்திரிக்கைகள், தொலைக்காட்சிஇன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் எப்படியெல்லாம் அவரை தவறாக இட்டுக்கட்டி சித்தரிக்க முடியமோ அவ்வாறெல்லாம் சித்தரித்தும் இவர்களின் வெறி அடங்குவதில்லை!
குன்றாத வளர்ச்சி காணும் மார்க்கம் 
ஆனால் இவர்களின் இந்த சதித்திட்டங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்பதையே உலகம் நமக்குப் பாடமாக போதிக்கிறது. இந்த மாமனிதர் மறைந்து நூற்றாண்டுகள் பதினான்கு கடந்து விட்டன. இவர் போதித்த மார்க்கத்தின் வளர்ச்சி என்றும் எறுமுகத்தையே கண்டு வருகிறது, உலக மக்கள் தொகையின் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியை இன்றுவரை ஈர்த்துள்ளது எனும் உண்மையே அதற்கு சான்றாக நிற்கிறது! தொடர்ந்து இது உலகின் எந்த ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். காரணம் இது இவ்வுலகின் உரிமையாளனும் பரிபாலகனும் ஆகிய இறைவனின் மார்க்கம்!
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மலர்ந்து வரும் மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 ஆனால் அதேவேளையில் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாதுஏனெனில் தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனியுங்கள்:
நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)
------------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள்;
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html