இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 நவம்பர், 2024

மறுமையை நீ மறுப்பதெப்படி?

 

நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான்மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப் படுவீர்கள் (திருக்குர்ஆன்  2:28)

இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள்  தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்... கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?

எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?

இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும்பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாகஇறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19)

இன்னும் மனிதன் தன்னுள் அடங்கியுள்ள அற்புதங்களையும் தன்னுள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களின் பக்கமும் தனது சிந்தையைத் திருப்பினாலே இறைவனின் பேராற்றலையும் அளவிலா கருணையையும் உணர முடியும்.

நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை? நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டாஇதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா? நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம். (திருக்குர்ஆன் 56:57-60)

மேற்படி விடயங்களில் எந்த மறுப்பையும் முன்வைக்க நமது பகுத்தறிவு அனுமதிப்பதில்லை. அப்படியானால் நாம் இறுதித்தீர்ப்பு நாள் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுக்கப் படுவோம் என்பதை எவ்வாறு மறுக்க முடியும்?

மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர். உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை? (திருக்குர்ஆன் 56: 61-62) 

உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” (திருக்குர்ஆன் 18:37)

================ 

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

புதன், 13 நவம்பர், 2024

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 24 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 24 இதழ் 

பொருளடக்கம்: 

இஸ்லாமும் பற்பல மதங்களின் உருவாக்கமும்! -2

மக்களின் நன்மதிப்பு - 6

மனித சமத்துவம் பிறமத வேதங்களில்- 7

எழுத்துப்பிழைகள் போட்டி- 9

மனித சமத்துவம் பற்றிய குர்ஆன் செய்தியின் தனித்தன்மை!- 10

மனக்கவலை நீக்கும் தல்பீனா - 13

மனிதகுல சமத்துவத்தை மறுத்த காலனி ஆதிக்கவாதிகள்  -14

காலனித்துவப் படைகளால் நிகழ்த்தப்பட்ட அதிபயங்கரவாதச் செயல்கள்- 17

ஒருசில அதிபயங்கரவாத செயல்கள் - 22

யாசகம் தவிர்ப்போம் தன்மானம் காப்போம்!- 23

சனி, 9 நவம்பர், 2024

பெண் இனத்துக்கு இறைவன் கொடுத்துள்ள அதிகாரமும் அங்கீகாரமும்.

 பெண் இனத்துக்கு அல்லாஹ் கொடுத்துள்ள

அதிகாரமும் அங்கீகாரமும்.
--------------------------
நுண்ணுயிரியலில் (Microbiology) ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுப்பதின் மூலம் அல்லாஹ்வுடைய படைப்புத் திறனை அறிந்து வியந்து அவனது சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து நடக்க முடியும். அல்லாஹ்வுடைய அருகாமையை உணர்வதற்கும் அது காரணமாக இருக்கும்.
குறிப்பாக பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் ஆன்மிக ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள முடியும்.
இல்லற வாழ்வில் ஈடுபடும் கணவனின் விந்தில் 40 லட்சத்திலிருந்து 1.2 கோடி அணுக்கள் (குழந்தைகள்) பெண்ணின் கருமுட்டையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு செல்கின்றன.
இத்தனை லட்சம் அணுக்களும் பாய்ந்து வரும் நிலையில் மனைவியின் கருப்பையும் அதனுள் இருக்கும் கருமுட்டையும் Follicular Fluid என்ற வேதியியல் திரவத்தை பயன்படுத்தி அதிக திறன்வாய்ந்த அணுவை மட்டும் கண்டறிந்து அதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது.
நுண்ணிய படைப்பாளனாகிய அல்லாஹ் பெண் இனத்துக்கு அளித்திருக்கும் இந்த அதிகாரத்தை உயிரியல் ஆராய்ச்சி செய்பவர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
இந்த நடவடிக்கையை முஸ்லிம்கள் இப்படி புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடைபெறாது - இது ஷரீஅத் ரீதியான அதிகாரம்.
கணவனாக இருந்தாலும் பெண் விரும்பாமல் அனுமதிக்காமல் ஆண் இல்லற வாழ்வில் ஈடுபட்டுவிட முடியாது - இது உளவியல் ரீதியான அதிகாரம்.
இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும் கூட செலுத்தப்படும் லட்சக்கணக்கான அணுவில் எந்த அணுவை (எந்த குழந்தையை) தேர்வு செய்வது என்பதும் அந்த பெண்ணின் விருப்பத்தில் தான் இருக்கிறது - இது உயிரியல் ரீதியான அதிகாரம்.
கருமுட்டையில் அனுமதிக்கப்பட்ட அணு படிப்படியாக எப்படி சிசுவாக குழந்தையாக வடிவம் பெறுகிறது என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு பாடம் நடத்துகிறான். (அல்குர்ஆன் 23:12-14)
ஆக....
பெண் படைப்பு இயல்பையும் பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அக புற அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் புரிந்து கொள்வதற்கு முஸ்லிம்களின் கல்விமுறை இப்படி அமைய வேண்டும்.
அல்குர்ஆன்
ஹதீஸ்
தஃப்ஸீர்
ஃபிக்ஹ்
Anatomy
Physiology
Microbiology
Molecular Biology
Genetics
ஒரு கையில் அல்குர்ஆன். மறுகையில் உயிரியல் (படைப்புகளின்) ஆராய்ச்சி. இது தான் முஸ்லிம்களின் பாரம்பரிய கல்விமுறை.
மத்தியகால வரலாறு முழுவதும் ஷரீஅத்தைப் படித்த ஆயிரக்கணக்கான உலமாக்கள் உலகின் தலைசிறந்த உயிரியல் வல்லுனர்களாக மருத்துவர்களாக உருவாகி வந்தது இந்த கல்வி முறையின் மூலமாகத் தான்.
முஸ்லிம்கள் தங்களது மரபுக் கல்வியை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கின்றோம் என்பதையும் அதனால் ஏற்பட்டுள்ள ஆன்மிகப் பின்னடைவுகளையும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
- CMN SALEEM

ஞாயிறு, 3 நவம்பர், 2024

நபிகளாரால் சபிக்கப்பட்டவர்கள் (பிஃர் மஊனா அசம்பாவிதம்)


= அகிலத்தின் இறைவனை  இடைத்தரகர் இன்றி நேரடியாக வணங்குங்கள்,
=  சகமனிதன் சரிசமமே மற்றும் சகோதரனே என்பதால் மனித உரிமைகளை மீறாதீர்கள், 
= இறைவனுக்கும் மறுமை விசாரணைக்கும் பயந்து ஒழுக்கவாழ்வு வாழுங்கள்! என்ற  முழக்கங்களோடு நபிகளார் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். 
மக்களின் ஆதரவோடு இஸ்லாம் வெகு வேகமாக வளர்ந்தது. ஆனாலும் இந்த 
 சத்தியப் பிரச்சாரம் ஆரம்ப காலம் முதற்கொண்டே ஆதிக்க சக்திகளின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வந்தது. எதிரிகளின் விஷமங்களில் இருந்து மக்களைக் காத்து தர்மத்தை நிலைநாட்ட பல போர்களையும் நபிகளார் சந்திக்க நேர்ந்தது. போர்களில் வெற்றியும் தோல்வியும் வந்தன. அவ்வாறு உஹது மலைக்கு அருகில் நடந்த ஒரு போரில் இஸ்லாமிய படை பெரும் இழப்புக்களை சந்தித்து இருந்தது. அப்படிப்பட்ட ஒரு   காலகட்டத்தில்தான் இந்த ஒரு சோககரமான சம்பவமும் நடந்தது.  
 பிஃர் மஊனா அசம்பாவிதம்
அபூபரா என்ற ஆமிர் இப்னு மாலிக் என்பவன் மதீனாவில் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தான். நபியவர்கள் அவனுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுத்தார்கள். அவன் அதை ஏற்கவுமில்லை, அதை மறுக்கவுமில்லை. அவன் நபியவர்களிடம் “இறைத்தூதரே! நஜ்து மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்க என்னுடன் உங்களது தோழர்களை அனுப்புங்கள், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றான். அதற்கு நபியவர்கள் “நஜ்துவாசிகள் எனது தோழர்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்கலாம் என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அதற்கு அபூபரா “நான் அவர்களை பாதுகாப்பேன்” என்றான். எனவே, நபியவர்கள் எழுபது தோழர்களை அனுப்பினார்கள்.

இந்தக் குழுவுக்கு ஸாயிதா குடும்பத்தைச் சேர்ந்த முன்திர் இப்னு அம்ர் என்பவரை நபியவர்கள் தலைவராக்கினார்கள். அனுப்பப்பட்ட தோழர்கள் அனைவரும் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களாகவும், குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர்களாவும் இருந்தனர். இவர்கள் பகலில் விறகு பொறுக்கி அதை விற்று திண்ணைத் தோழர்களுக்கு உணவு வாங்கி வருவர். இரவில் குர்ஆன் ஓதுவதும், தொழுவதுமாக தங்களது வாழ்வைக் கழித்து வந்தனர்.
நபிகளாரின் அழைப்புக் கடிதம் 
இவர்கள் அவனுடன் புறப்பட்டு பிஃரு மஊனா என்ற இடத்தை அடைந்தனர். இந்த இடம் ஆமிர் கிளையினருக்குச் சொந்தமான நிலத்திற்கும் ஸுலைம் கிளையினருக்கு சொந்தமான விவசாயக் களத்திற்கும் மத்தியிலுள்ள நீர் நிலையாகும். அங்கு அனைவரும் தங்கிக்கொண்டு ஹிராம் இப்னு மில்ஹான் என்ற தோழரை நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொடுத்து ஆமிர் இப்னு துiஃபல் என்பவனிடம் அனுப்பினர்.

அவனோ இஸ்லாத்தின் பெரும் எதிரியாக இருந்தான். அவன் அக்கடிதத்தைக் கூட படிக்கவில்லை. அவன் சாடைக்காட்ட, ஒருவன் சிறு ஈட்டியால் ஹிராமைப் பின்புறத்திலிருந்து குத்தினான். தான் குத்தப்பட்டதையும், தனது உடம்பில் இரத்தம் வருவதையும் பார்த்த ஹிராம் “அல்லாஹு அக்பர். அல்லாஹ் மிகப் பெரியவன், கஅபாவின் இறைவின் மீது சத்தியம்! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்.

நபித்தோழர்கள் சுற்றி வளைக்கப்படுதல் 

அந்த வஞ்சகன் எஞ்சிய மற்ற நபித்தோழர்களைக் கொல்வதற்கு ஆமிர் கிளையினரை அழைத்தான். ஆனால், அபூபரா இவர்களுக்கப் பாதுகாப்பு அளித்திருப்பதால் ஆமிர் கிளையினர் அதற்கு மறுத்து விட்டனர். பின்பு ஸுலைம் கிளையினரை அழைத்தான். ஸுலைமினரில் உஸைய்யா, ரிஃல், தக்வான் என்ற மூன்று வகுப்பினர் அவனது அழைப்பை ஏற்று அவனுடன் கிளம்பினர். இவர்கள் அனைவரும் நபித்தோழர்களைச் சுற்றி வளைத்து அவர்களுடன் சண்டையிட்டனர். இதில் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால், கஅபு இப்னு ஜைது இப்னு நஜ்ஜார் என்ற தோழர் மட்டும் படுகாயங்களுடன் பூமியில் சாய்ந்தார். இவர் இறந்துவிட்டதாக எதிரிகள் எண்ணினர். எதிரிகள் சென்ற பிறகு அவ்விடத்தில் இருந்து தப்பித்து மதீனா வந்தார். 

மேய்ப்புக்கு சென்ற தோழர்கள் திரும்புதல் 
மேற்படி குழுவில் சென்ற தோழர்களில் அம்ர் இப்னு உமைய்யா ளம்ரி, முன்திர் இப்னு உக்பா இப்னு ஆமிர் ஆகிய இருவரும் பயணக்குழுவினரின் ஒட்டகங்களை மேய்த்து வருவதற்காகச் சென்றிருந்தனர். அங்கிருந்து குழுவினர் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பிணந்தின்னி பறவைகள் வட்டமிடுவதை பார்த்து திடுக்கிட்டனர். தம் நண்பர்களுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டதை உணர்ந்தனர். உடனே அவ்விருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

எதிரிகள் தங்கள் தோழர்களை வஞ்சித்ததைப் பார்த்து பொங்கி எழுந்தனர். தாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்பதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்த்துப் போராடினார்கள். நீண்ட நேர சண்டைக்குப் பின் முன்திர் எதிரிகளால் கொல்லப்பட்டார். அம்ர் இப்னு உமையா கைதியாக்கப்பட்டார். அம்ர் முழர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று தெரியவந்ததும் அவரின் முன்னந்தலையை சிரைத்துவிட்டு எதிரிகளின் தலைவனான ஆமிர் தனது தாய் செய்திருந்த நேர்ச்சைக்காக அவரை விடுதலை செய்து விட்டான்.

அம்ர் இப்னு உமைய்யா ழம்ரி (ரழி) முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களான இந்த எழுபது தோழர்கள் கொல்லப்பட்ட, மிகக் கவலையூட்டும் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறவதற்காக மதீனா நோக்கி விரைந்தார். இந்நிகழ்ச்சி உஹுத் போரில் ஏற்பட்ட வேதனையை மீண்டும் முஸ்லிம்களுக்கு நினைவூட்டியது. ஆனால் போரில் சண்டையிட்டு இறந்தனர். இவர்கள் வஞ்சகமாகத் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.
அம்ரின் தவறுதலான பழிவாங்கல் 
 அம்ர் இப்னு உமையா (ரழி) மதீனா திரும்பும் வழியில் கனாத் என்ற பள்ளத்தாக்கில் உள்ள கர்கரா என்ற இடத்தில் ஒரு மர நிழலில் தங்கினார். அப்போது கிலாப் கோத்திரத்தை சேர்ந்த இருவரும் அதே இடத்தில் வந்து தங்கினர். அம்ர் அவ்விருவரையும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் என்றெண்ணி அவ்விருவரும் நன்கு கண் அயர்ந்துவிட்ட பின் தனது தோழர்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் அவ்விருவரையும் கொன்று விட்டார். ஆனால், கொன்று முடித்தபின் அவ்விருவரிடமும் நபி(ஸல்) அவர்களின் ஒப்பந்தக் கடிதம் இருப்பதை பார்த்தார். அது அவருக்கு முன்னதாக தெரியாது. மதீனா வந்தடைந்ததும் தனது செயலை நபியவர்களிடம் கூறி வருந்தினார். 
அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீ கொலை செய்த இருவருக்காக நான் நிச்சயம் தியத் (கொலைக் குற்றத்திற்குரிய பரிகாரத் தொகை) கொடுக்க வேண்டியது கடமையாகிவிட்டது எனக் கூறி, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒப்பந்தகாரர்களான யூதர்களிடம் இந்த தியத்தை வசூல் செய்து கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

சில நாட்களுக்குள் நடந்த ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய இவ்விரு நிகழ்ச்சிகள் நபி(ஸல்) அவர்களுக்குப் பெரும் கவலை அளித்தன. நபியவர்கள் மிகுந்த சஞ்சலத்திலும் துக்கத்திலும் ஆழ்ந்தார்கள். தங்களின் தோழர்களுக்கு மோசடி செய்த கூட்டத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்தித்தார்கள். (இப்னு ஸஆது)
நபிகளாரின் சாபம் 
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: தங்களின் தோழர்களை பிஃரு மஊனா வில் கொன்றவர்களை நபி(ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் சபித்தார்கள். அதிகாலைத் தொழுகையில் ரிஃலு, தக்வான், லஹ்யான், உஸய்யா ஆகிய கோத்திரத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை (குனூத் நாஜிலா) செய்தார்கள். மோசடி செய்த ஒவ்வொரு வகுப்பாரின் பெயரை கூறி வரும்போது “உஸய்யா வமிசத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தனர்” என்று கூறினார்கள்.  (ஸஹீஹுல் புகாரி)
===================