இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூலை, 2023

நபிகளாரின் மணவாழ்க்கை -விமர்சனங்கள்


 நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மணவாழ்க்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில்:

நபிகளாரின் மணவாழ்க்கை  பற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் இவை:
=
அண்ணல் நபிகளார் பல திருமணங்கள் செய்தார்.
அண்ணல் நபிகளார் ஆயிஷா (ரலி) அவர்களை ஆறு வயதில் மணமுடித்தார்.
=
அவரது மணவாழ்க்கை குறித்த இன்ன பிறக் குற்றச்சாட்டுகள்.
குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள்:
நபிகளாரின் கடந்தகால வாழ்க்கையைப்பற்றிய குற்றச்சாட்டுகள் அவர்களது நபிமொழித் தொகுப்புகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றன என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். நபிமொழித் தொகுப்புகள் என்பவை நபிகளாரின் ஆதாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை குறிப்புக்கள் ஆகும். இவை 1440 வருடங்கள் ஆகியும் இன்றளவும் துல்லியமாக, விவரமாக பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நபிகளாரின் உள் வாழ்க்கையும் வெளி வாழ்க்கையும் அனைத்து மக்களுக்கும் முன்பாக ஒரு சிறந்த புத்தகமாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். உலகத்தில் இதுவரை வாழ்ந்த எந்த தலைவர் விஷயத்திலும் சரித்திர நாயகர்கள் விஷயத்திலும் இதை நீங்கள் காணமுடியாது.

நீங்கள் மதிக்கும் உங்கள் மிகப்பெரும் கொள்கைத் தலைவரையோ அல்லது ஆன்மீக தலைவரையோ, இறைத்தூதரையோ எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக இராமர், கிருஷ்ணர், விவேகானந்தர், இயேசுகிறிஸ்து அல்லது தந்தை பெரியார் அல்லது அம்பேத்கர் உட்பட யாருடைய வரலாறும் இவ்வளவு துல்லியமாக பதிவு செய்யப்படவில்லை.. முடிந்தால் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களால் அவர்களது வரலாற்றை துல்லியமாக திரட்ட முடியுமா பாருங்கள்.

 குற்றச்சாட்டுக்கான மறுப்பு இங்கிருந்தே துவங்குகிறது - அதாவது நபிகளார் மனிதகுலத்திற்கே ஒரு முன்மாதிரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாறு திரித்தல், மறைத்தல் ஏதுமின்றி - ஒளிவுமறைவின்றி - நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப் படுகிறது என்பதை நீங்கள் கவனிக்கலாம். 

 குற்றச்சாட்டை அணுகும் முறை:

எந்தவொரு நபரைப் பற்றியும் குற்றச்சாட்டு கூறப்படுமானால் இந்தப் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை சற்று கவனிப்போம் வாருங்கள்:

1. குற்றத்தால் பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு: ஒரு நபர் மீது (அதாவது குற்றவாளி மீது) பாதிக்கப்பட்டவர் 'எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது' என்று குற்றம் சாட்ட வேண்டும்.

2 . 
சாட்டப்படும் "குற்றம்" குற்றம்தானாதொடர்ந்து இன்ன நபர் மீது சாட்டப்படும் குற்றம் குற்றம்தான் - அதாவது தவறுதான் - என்பது உறுதிப்படுத்தப்படும். இங்கு எந்த அடிப்படையில் அது குற்றம் (உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனப் படி அல்லது உலக நாடுகளின் பொதுவான சாசனப் படி) அதாவது எந்த சட்டத்தின் எந்த பிரிவின்படி குற்றம் என்பதெல்லாம் உறுதிப்படுத்தப்படும்.

3. குற்றம் செய்ததை உறுதிப் படுத்துதல்: அந்த நபர் அதை செய்தாரா இல்லையா என்பது விசாரணை அடிப்படையில் உறுதிப்படுத்தப்படும்.

4.
குற்றவாளிக்கு தண்டனை: குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டால் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும். குற்றவாளி மரணித்து இருந்தால் அவரைக் கெட்டவர் என்று தீர்மானித்து ஒதுக்கப்பட்டு விடுவார் அல்லது புறக்கணிக்கப்படுவார்.

5.
குற்றச்சாட்டு பொய் ஆனால்குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆனால் குற்றம் சாட்டியவர் மீது அவதூறுக் குற்றம் சாட்டப்படும். அதற்கான தண்டனைகளும் வழங்கப்படும்.

இனி குற்றச்சாட்டு விஷயமாக மேற்குறிப்பிடப்பட்ட அணுகுமுறைப் படி அணுகுவோம் வாருங்கள்: 

  1. பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டு:

இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்படும் யாருமே -ஆயிஷா (ரலி) அல்லது  ஜைனப் (ரலி) உட்பட  நபிகளாரின் மனைவியர் யாருமே  - நபிகள் நாயகத்தின் மீது தங்கள் மணவாழ்கையைக் குறித்து குற்றம் சாட்டியதாக எந்த வரலாறுமே கிடையாது. மாறாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்கையையே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அறியவரும் உண்மையாகும். 

2. சாட்டப்படும் "குற்றம்" குற்றம்தானா?
2.1:
நபிகளார் ஊரறிய - முறையான- சட்டபூர்வமான - சம்பந்தப் பட்டவர்களின் முழுமையான ஒப்புதலோடு கூடிய  - திருமணங்கள்தான் செய்தாரே தவிர எந்த ஒரு  பெண்ணோடும் தகாத உறவு கொள்ளவில்லை என்பது இங்கு வெளிப்படை உண்மையாகும். 

 2.2: அண்ணலார் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடித்திருந்தார்கள் என்பதோ குழந்தைத் திருமணம் செய்திருந்தார்கள் என்பதோ நபிகளார் வாழ்ந்த காலத்தில் நபிகளாரின் பரம விரோதிகளும் கூட இந்த விடயங்களைக் கூறி அவரை குறை கூறியதில்லை. ஏனெனில் இவை இரண்டும் அன்றைய கால நடைமுறைகளாக இருந்தன. அன்றைய அரபு சமூகத்தில் வணிகப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தங்களின் சிறுவயதுப் பெண்களை அவர்களின் பாதுகாப்பு அல்லது அரவணைப்புக் கருதி தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பது அன்றைய நடைமுறையாக இருந்து வந்துள்ளது.

 2.3: நபிகளார் செய்தது சட்டபூர்வமான திருமணங்கள்தான் என்பதும் அன்றைய நடைமுறையில் பலதார மணமும் சரி, சிறுவயதுப் பெண்ணை மணமுடிப்பதும் சரி, தவறு அல்ல எனும்போது குற்றச்சாட்டு வலுவிழக்கிறது. 

 எந்த அடிப்படையில் தவறு?

 சரி, இனி எந்த அடிப்படையில் இதைத் தவறாகக் காண்கிறார்கள் என்பதைக் குற்றம் சாட்டுவோரிடம் கேட்போம். 
அதாவது நன்மை – தீமை அல்லது சரி- தவறு என்பவற்றைப் பிரித்தறிய உங்களிடம் உள்ள அளவுகோல் (criterion) என்ன? மேலும் உங்கள் அளவுகோல் சரியானதுதான் என்பதற்கான காரணமும் (justification) கூறுங்கள் என்ற கோரிக்கையை அவர்களிடம் முன்வைப்போம். 

ஏனெனில் அவர்களின் அடிப்படை அல்லது அளவுகோல் எது எனத் அறியாமல்  நாம் எந்த விளக்கம் அல்லது பதில் கொடுத்தாலும் அதில் தவறு காணவே செய்வார்கள்.

இந்த அளவுகோல் என்பது ஒரு சிலருக்கு இந்திய அரசியல் சாசனமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு மனுசாஸ்திரமாகவோ பைபிள் ஆகவோ குருகிரந்த் ஆகவோ  இருக்கலாம். இன்னும் சிலருக்கு கம்யுனிஸ அறிக்கை (communist manifesto) ஆகவும் இருக்கலாம். இன்னும் சிலர் "எங்கள் மனசாட்சி அது தவறு என்று கூறுகிறது" என்பார்கள். “உங்கள் மனசாட்சி உலகின் அனைத்து விஷயங்களும் அறியக்கூடியதா? கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது உண்மையாக இருக்கும்போது மனசாட்சி கூறுவதே இறுதியானது என்று முடிவெடுக்க முடியுமா?” 

"மட்டுமல்ல, மனசாட்சி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடக் கூடியது. அதற்கேற்ப ஏதேனும் விஷயத்தை முடிவு செய்ய முடியுமா? அப்படியானால் எதிர்தரப்பாரின் மனசாட்சி உங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?"  என்றெல்லாம் கேட்டால் அவர்கள் தடுமாறுவார்கள். 

ஆக, இவை எவையுமே பொதுவான அளவுகோலுக்குத் தகுதியற்றவை என்பது தெளிவு. மற்றபடி மனித சமூகத்தைச் சார்ந்த எந்தப் பிரிவினரும் அவர்களாக உருவாக்கிய அளவுகோல் அனைவருக்கும் பொதுவானதாக ஆக முடியாது என்பதை நாம் இங்குப் புரிந்துகொள்ள வேண்டும்.   

மனித சமூகத்தைச் சார்ந்த  பெரும்பான்மையினர்  அல்லது சிறுபான்மையினர் அல்லது ஆதிக்கம் படைத்தவர்கள் அல்லது  ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் அல்லது பிரிவினர் அல்லது மக்களில் அரசியல் தலைவர்கள் அல்லது ஆன்மீகத் தலைவர்கள் என எவருமே சரி எது தவறு எது  என்பவற்றைப் பிரித்தறியும் அளவுகோலைத் (criterion) தரமுடியாது. காரணம், இங்கு அனைவருமே மனிதன் என்ற அற்ப நிலையில் இருப்பதால் அனைத்தையும் பிரித்தறியும் சக்தி அவர்களுக்குக் கிடையாது. அதற்கான அதிகாரமும் வல்லமையும் கிடையாது!  மேலும் இவ்வுலகத்தைப் பொறுத்தவரையில் மனிதனுக்கும் உரிமைகள் உள்ளன. விலங்கினங்களுக்கும் தாவரங்களுக்கும் இன்ன பிற படைப்பினங்களுக்கும் அவற்றுக்கே உரிய உரிமைகள் உள்ளன். அவற்றை நியாயமான முறையில் பங்கிடக் கூடிய அறிவும் ஆற்றலும் அதிகாரமும்  அவற்றையெல்லாம் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவனுக்கே உரியன. 

ஆக, இவ்வுலகைப் படைத்தவனும் சர்வ வல்லமையும் சர்வஞானமும் கொண்ட இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உலகில் சரி அல்லது தவறு எதுநியாயம் அல்லது அநியாயம் எது என்பவற்றைப் பிரித்தறிவிக்கும் அதி பக்குவமான ஆற்றலும் அதிகாரமும் உள்ளது என்பதை நாம் இங்கு அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மாற்றாக உங்களிடம் வேறு எந்த அதிபக்குவமான அளவுகோல் உள்ளதைக் காரணத்தோடு பதிவிடுங்கள்.  

(இதுபற்றி இன்னும் விரிவாக அறிய முற்படுபவர்கள் கீழ்கண்ட லிங்கை நாடலாம் : https://www.quranmalar.com/2023/07/blog-post.html )

இனி மீண்டும் நபிகளாரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு வருவோம்:

மேற்படி  அடிப்படையில் பார்க்கும்போது அண்ணல் நபிகளாரின் அனைத்து திருமணங்களும் இவ்வுலகைப் படைத்தவனின் ஏவலின் படி நடந்துள்ளவை என்பதனால் இவை எவையுமே தவறு என்றோ குற்றம் என்றோ தீர்மானிக்க எந்த முகாந்திரமும் இல்லை என அறியலாம். இறை ஆணைக்கு முன் எந்த மனித சட்டங்களோ அல்லது எந்த  நாட்டினதும் சட்டங்களோ நிற்க வலுவற்றவை என்பதை ஆராய்வோர் அறியலாம்.  

 ஆக, சாட்டப்படுவது குற்றமே அல்ல எனும்போது அணுகுமுறை எண் 3 மற்றும் 4 - அதாவது  குற்றம் செய்ததை உறுதிப் படுத்துதல் மற்றும்  குற்றவாளிக்கு தண்டனை என்பவை தேவையற்றவை என்றாகிறது. 

குற்றம் சாட்டியவர்களின் நிலை:

அடுத்ததாக அணுகுமுறை எண் 5 இன் படி சாட்டப்படும் குற்றம் குற்றமே அல்ல மாறாக அவதூறு என்பதால் குற்றம் சாட்டியவர்கள்தான் இங்கு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதும் உறுதியாகிறது. 
இவ்வுலகில் குற்றம் சாட்டியவர்கள் ஆதிக்க சக்திகளின் ஆதரவோடும் ஊக்குவித்தலோடும் அந்த தண்டனையில் இருந்து தப்பித்து வாழக் கூடும். ஆனால் மறுமையில் இறைவனின் நீதிமன்றத்தில் அவர்களுக்கான விசாரிப்பும் தண்டனையும் உண்டு என்பதை இங்கு நினைவு கூருவோம்.

= நிச்சயமாக, எவர்கள் விசுவாசிகளான ஆண்களையும், விசுவாசிகளான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு (திருக்குர்ஆன் 85:10) 

===================== 

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

வெள்ளி, 21 ஜூலை, 2023

சரி எது? தவறு எது? – பிரித்தறியும் அளவுகோல்!

பொதுவாகவே நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்துத் தரபினருக்கும் ஏற்புடைய வகையில் பாவ - புண்ணியங்களை நாம் எவ்வாறு தீர்மானிப்பது?
பொதுவான அளவுகோலின் முக்கியத்துவம்:

உதாரணமாக புலால் உண்பது ஒரு சாராரால் பாவமாகக் கருதப்படும் செயல். ஆனால் அதேநேரத்தில் மற்ற பலருக்கு பிராணிகளை அறுத்துப் பலியிடுவதும் அதன் மாமிசங்களை உண்பதும் ஒரு புண்ணியமான மார்க்கக் கடமையாக உள்ளது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவம் என்பது முதல் தரப்பினரின் வாதம். ஆனால் மறு தரப்பினர் தாவரங்களும் உயிர் வாழ்பவையே, அவைகளுக்கும் உயிரும் உணர்வும் உண்டு என்ற வாதத்தை முன்வைக்கும்போது முதல் தரப்பாரிடம் முறையான வாதங்கள் இருப்பதில்லை. அல்லது புலால் உண்ணாது போனால் உணவுச்சங்கிலி தடைபடுமே, இதன் மூலம் பூமியில் குழப்பம் உண்டாகுமே என்ற வாதத்தை முன்வைத்தாலும் முதல் தரப்பாரிடம் பதில்கள் இருப்பதில்லை!

இன்னும் இவைபோன்று பல முரண்பாடுகளை பல சமய மக்களும் கொள்கை வாதிகளும் கலந்து வாழும் சமூகத்தில் எழுவதை நாம் அறிவோம். இப்படிப்பட்ட சூழலில் சரி எது? தவறு எது? நியாயம் எது ? அநியாயம் எது? புண்ணியம் எது? பாவம் எது? என்பதை அனைத்து மக்களுக்கும் பொதுவாக எவ்வாறு தீர்மானிப்பது? பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால் இதுபற்றிய தெளிவு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றால் சரி / தவறைப் பிரித்தறிவதற்கான அளவுகோல் மிகவும் முக்கியமானதாகும்.
எவ்வாறு தீர்மானிப்பது?
= பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலைப் பாவமாகவோ புண்ணியமாகவோ தீர்மானிக்க முடியுமா? அல்லது..
= ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா? அல்லது..
= நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா? அல்லது..
= நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா?
= king is always right! –(அரசன் எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா? அல்லது..
= நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா?
இப்படி எந்த வழியில் நாம் நன்மை – தீமை அல்லது பாவம் – புண்ணியம் பற்றி ஆராய்ந்தாலும் நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். எனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்:
படைத்தவன் தருவதே அளவுகோல்!
யார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும் உண்மை. அவன்தான் இப்பேரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. எந்த உயிரினத்துக்கு எவ்வளவு உரிமை உள்ளது என்பதை நீதிபூர்வமாக தீர்மானிக்கும் ஆற்றல் அவனுக்கே உள்ளது.

எனவே நம் பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை. அதுவே ஈருலக வெற்றியையும் ஈட்டித்தரும்!

வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை!
ஆம், இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான களமாகவும் இறைவன் அமைத்துள்ளதையும் நாம் மறந்து விடக்கூடாது.

= உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 62:2)
இந்தப் பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது! மாறாக எந்த மனிதனும் மனிதர்களின் குழுக்களும் நீதிமன்றங்களும் சட்டசபைகளும் பாராளுமன்றங்களும் இன்ன பிற ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களும் பாவ - புண்ணியங்கள் எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. காரணம் இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி இறைவன் மட்டுமே. அன்று அவனே நமது வாழ்க்கையில் நாம் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ விதிக்க இருக்கிறான்.
= இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி (இறைவனே) (திருக்குர்ஆன் 1: 4)

ஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம். மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம். இவ்வுண்மையை மறுத்து நம் மனோ இச்சைகளுக்கும் முன்னோரின் பழக்கவழக்கங்களுககும் இன்னபிற சக்திகளுக்கும் செவிசாய்த்து நாம் வாழ்ந்தால் மிஞ்சுவது இவ்வுலகில் குழப்பமும் அமைதியின்மையும் கலவரங்களுமே. மறுமையிலோ இறைவனின் கோபத்தையும் அவனது தண்டனையாக நரகத்தையுமே அடைய நேரிடும்.
= உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 25:1)

வாழ்வில் வெற்றி அடைய ஒரே வழி
எனவே இறைவனின் பார்வையில் எது நன்மை எது தீமை என்பதை அறிந்து அதன்படி வாழ விழைபவர்கள் இறைவனின் இறுதி வேதத்தையும் அவனது இறுதித் தூதரின் அறிவுரைகளையும் அணுக வேண்டும் ஏகனாகிய இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது வேதத்தையும் தூதரையும் வாழ்வின் வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். ஏனெனில் இறுதித் தீர்ப்பு நாளின் போது அவன்தான் நீதி வழங்குவான்.
============ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 14 ஜூலை, 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -JULY 2023 இதழ் PDF


QNM JULY 2023

பொருளடக்கம்:
அற்ப ஜீவிகளுக்குள் அளவிலா அற்புதங்கள் -2
அற்ப ஜீவிகளில் காணும் அதியற்புத படைப்பாற்றல்! -3
சிலந்தி வலையும் பொறியியல் கலையும் -5
தேனீக்கள் கணித மேதைகளானது எவ்வாறு?-7
குழப்பங்களுக்கு வித்தாகும் பெரும்பாவம்!-11
சிந்திக்கவேண்டிய சிலந்தி உவமை!-13
கொசுவுக்குள் இறை அற்புதங்களின் குவியல்!-15
உறங்க முடியா இரவுகளில் ஒன்று!-18
ஈயிடம் இழந்ததை மீட்க வழியுண்டா?-21
திருக்குர்ஆனில் எறும்புகள் பள்ளத்தாக்கு-23