இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜனவரி, 2020

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்
பொருளடக்கம்:
கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2
ஆணும் பெண்ணும் உறவாட தடைகள் எதற்கு? -6
மறுமை நாள் எப்போது வரும்? -8
பாலியல் கொடுமைகளில் இருந்து காக்கும் கட்டுப்பாடுகள் -9
நபிகளார் செய்த முன்னறிவிப்பு -12
உங்கள் குழந்தைகள் நாளை உங்களை மதிக்க வேண்டுமா? -13
மண்ணறையில் இருந்து எழும் ஓசை -16
இறையச்சம் நிகழ்த்தும் விந்தைகள் இவை! -17
விபச்சாரம் செய்வோருக்கு மறுமையில் என்ன தண்டனை? -19 
இறைமார்க்கத்தின் வளர்ச்சியை முறியடிக்க இயலுமா? -20

நாட்டுப்பற்று - நாடு - தேசத்துரோகம்  -23

https://drive.google.com/file/d/1Kqf7s5hCHwU5JN1GmRHZHAu5Y0C7oy6q/view?usp=sharing

வியாழன், 16 ஜனவரி, 2020

இனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்


= அவர்களிடம் நீர் சொல்வீராக: இறைவனிடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)
=  தம் கைகளினால் சம்பாதித்துள்ள தீவினைகளின் காரணத்தால், அவர்கள் அதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). மேலும், இந்த அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
= எல்லா மனிதர்களை விடவும் ஏன், இணைவைத்து வணங்குபவர்களை விடவும் இவர்களே வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாய் இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் (எப்படியாவது) ஓராயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆயினும், அவனுடைய நீண்ட ஆயுள், வேதனையிலிருந்து அவனை விலக்கிவிடாதே! அவர்கள் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2: 94-96) 
வரலாற்று தகவல்கள்: அல் ரஹீகுல் மக்தும்
==============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

புதன், 15 ஜனவரி, 2020

நற்குண நாயகர் எங்கள் நபிகளார்


Related imageஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து காணலாம்.
கொள்கைக்காக ஊர்விலக்கு, பட்டினி
= அண்ணலாரின் அழைப்பை ஏற்று ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள்  ஏழை-எளிய மக்களே. இக்கால கட்டத்தில் சத்திய மறுப்பாளர்கள்  இறை விசுவாசிகளை  ஊர் விலக்கு செய்து, மூன்றாண்டுகள் மக்காவில் அபுதாலிப் கணவாயில் தங்க வைத்தார்கள். அவர்களோடு மக்கள் தொடர்பு கொள்ளவோ உணவளிக்கவோ கூடாது என்று சட்டம் இயற்றி தடை செய்தார்கள். இச்சூழ்நிலையில் இறை விசுவாசிகள் இலைகளையும், தழைகளையும் உண்ணும் அளவுக்கு வறுமை  அவர்களை வாட்டியது.
= நபிகளாரின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து அடுப்பெரியும் நிலை இல்லாத அளவுக்கு வறுமை  கடுமையாக இருந்தது.
= ஒரு போரின்போது பசியின் காரணமாக அண்ணலார் தன் அடி வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு பணியாற்றினார்கள்.
உழைப்பின் சிறப்பை உரைத்தவர்
= “ஒரு மனிதன் யாசிப்பதைவிட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது” என உழைப்பின் உயர்வை உணர்த்திக் காட்டி யாசிப்பதை வெறுத்தார் அவர்.
= “எந்த இறைத் தூதரும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூற, அவர்களின் தோழர்கள், “இறைத் தூதர் அவர்களே! தாங்களுமா?” என்று கேட்டார்கள்.  அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஆம். மக்காவாசியிடம் சில கீராத் கூலிக்காக நானும் ஆடு மேய்ப்பவனாக இருந்தேன்” எனக் கூறினார்கள்  
கடன் வாங்கிய ஜனாதிபதி
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் கடன் வாங்கியிருந்தார். அம்மனிதர் கடனைத் திருப்பிக் கேட்கையில் நபியிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். அப்போது அருகிலிருந்த நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ”அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்குப் பேசும்  உரிமை உண்டு” எனக் கூறி, அக்கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்திவிட்டு, ”வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என கூறினர்கள் நபிகள் நாயகம்.
கல்லடி வாங்கியும் பழிவாங்காத தலைவர்
= மக்காவின் அருகே உள்ள தாயிஃப் நகர மக்களை இறைமார்க்கத்தின் பக்கம் அழைத்தபோது அம்மக்கள் அண்ணலாரை கல்லால் எறிந்து பலமாகக் காயப்படுத்தினார்கள். இரத்தம் சொட்ட சொட்ட இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது இறைவனின் வானவர்கள் அவரிடம் வந்தார்கள். “நபியே, நீங்கள் அனுமதித்தால் இதோ இந்த இரு மலைகளுக்கு இடையே உள்ள இந்த ஊரை நசுக்கி அழிக்க எங்களால் முடியும்” என்றார்கள். ஆனால் அந்த வேளையிலும் அம்மக்களைப் பழிவாங்க நபிகளார் சம்மதிக்கவில்லை. மாறாக “இம்மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் நேர்வழி பெறக் கூடும்” என எண்ணி அம்மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார் அண்ணலார்.
= மக்காவில் இருந்து அங்கிருந்த ஆதிக்க சக்திகளால் வெளியேற்றப்பட்ட நபிகள் நாயகமும் தோழர்களும் இஸ்லாம் வளர்ந்து ஆதிக்கம் பெற்ற பின்னர் பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மக்காவுக்கு திரும்பி வந்து அதை வெற்றி கொண்டார்கள். அந்த நிகழ்வின் போது நபிகளாருக்கும் அவரது சகாக்களுக்கும் சொல்லொணா துன்புறுத்தல் செய்த எவரையும் பழிவாங்காது அனைத்து மக்களுக்கும் பொது மன்னிப்பு அளித்தார் நபிகளார்.
பொதுப்பணத்தை தீண்டாத ஆட்சித்தலைவர்
= ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார். உடனே தன் பேரரை நோக்கி, “”சீ! சீ! அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு, ”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.  பொதுச் சொத்தை உண்பதை தம் குடும்பத்தினர் மட்டுமல்ல, பின்னர் வரக்கூடிய தம் தலைமுறையினர் அனைவருக்கும் தடை செய்தார் அண்ணலார் அவர்கள். இன்றும் கூட நபிகளாரின் தலைமுறையினர் ஜகாத் என்ற பொது நிதியில் இருந்து தர்மம் பெறுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படியும் ஒரு வள்ளலா?
கேட்கும் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அண்ணலார் விளங்கினார். ஒரு முறை அழகுற நெய்யப்பட்ட சால்வை ஒன்றை ஒரு பெண்மணி அண்ணலாருக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்தச் சால்வையை அண்ணலார் அவர்கள் வேட்டியாக அணிந்திருந்தார். அதனைக் கண்ட நபித்தோழர் ஒருவர் அதைத் தனக்கு வழங்குமாறு கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று அதைச் சுருட்டி எடுத்து, கேட்டவரிடம் கொடுத்து அனுப்பினார். 
கடுஞ்சொல் அறியாதவர் 
= ஒரு முறை நபி அவர்களிடம் ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார். “இவர் அக்கூட்டத்தாரில் மிகவும் கெட்டவர்’ எனக் கூறிய நபிகள், அவர் உள்ளே வர அனுமதி கொடுத்தார். அவர் வீட்டினுள் வந்து உட்கார்ந்தபோது, அவரிடம் நபியவர்கள் முக மலர்ச்சியுடனும், கனிவுடனும் நடந்து கொண்டார். அந்த மனிதர் புறப்பட்டுச் சென்றபின் நபி அவர்களிடம் துணைவியார் ஆயிஷா அவர்கள், ”இறைத் தூதர் அவர்களே! இந்த மனிதர் இப்படிப்பட்டவர் எனத் தெரிந்தும் அவரிடம் முக மலர்ச்சியுடனும், கனிவுடனும் நடந்து கொண்டீர்களே’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷாவே! நான் யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதை எப்போதேனும் நீ கண்டதுண்டா?” என்று மொழிந்தார்.
= நபி(ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனஸ் பின் மாலிக் என்பவர், “அண்ணலார் என்னை ஒரு போதும் திட்டியதோ, கடிந்து பேசியதோ கிடையாது’ எனச் சான்று பகர்கிறார்.
நம்பிக்கைக்கு உரியவர்
= மாற்றுச் சமுதாயத்தவர்கள்கூட தங்களின் பொருட்களை அண்ணலாரிடம் அடைக்கலமாகக் கொடுத்திருந்தனர். மக்காவைத் துறந்து மதீனாவிற்கு குடியேறிய போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அடைக்கலப் பொருட்களை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பை தனது மருமகன் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகளார்.
விரோதிகளாலும் குறைகூற முடியாத செம்மல்
= நபி அவர்கள் பொய் சொல்வதை மிகவும் கடுமையாக வெறுத்தார். அவரின் கொடிய விரோதி அபு ஜஹ்ல் கூட, ”நான் உம்மைப்பொய்யர்’ என்று கூறமாட்டேன். நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் மிகவும் வெறுக்கிறேன்” என்றான்.
இறைவனின் நற்சான்றிதழ் பெற்ற மகான்
 = ”நபியே! நிச்சயமாக நீர் உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (திருக்குர்ஆன் 68:4)
= இறைவன் மீதும், இறுதி நாளின் மீதும், ஆதரவு வைத்து இறைவனை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.” (திருக்குர்ஆன் 33:21)
--------------------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

சனி, 11 ஜனவரி, 2020

இஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்?


உலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன (https://www.pewresearch.org) மறுபுறம் உலகின் பல நாடுகளில் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்ற மக்கள் பல்வேறு விதமான அல்லல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதையும் அறிவோம். இன்று இந்தியாவை ஆண்டுகொண்டு இருக்கும் அரசும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுப்பதில் முனைப்பு காட்டுவதையும் அதற்கெதிராக போராட்டங்கள் நிகழ்ந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தவர்களுக்கும் கூட அவர்கள் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக சட்டங்களும் விதிமுறைகளும் கடினமாக்கப்பட்டு ஒதுக்கப்படும் நிலை உருவாகி உள்ளதையும் நாம் அறியமுடிகிறது.
இனி இந்நாட்டுக்கு வெளியேயும் இஸ்லாமியர்கள் வேறு விதமாக ஆதிக்க சக்தியினரின் தொல்லைகளை சந்தித்து வருகிறார்கள்.  பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப் படுதல், அகதிகளாக வெளியேற்றம், சீனாவில் உக்யூர் முஸ்லிம்களுக்காக தடுப்பு முகாம்கள், அவர்களுக்கு ரமலான் மாதம் கூட நோன்பு வைக்கத் தடை, திருக்குர்ஆன் படிக்கத் தடை, பல்வேறு நாடுகளில் இஸ்லாமியரகளின் வாழ்வாதாரமும் வாழ்விடங்களும் சூறையாடப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து போர்களுக்கு உள்ளாக்கப்படுதல், சொந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேற்றப் படுதல் போன்ற பலவும் நிகழ்வதை அறிவோம். நம் நாட்டிலும் இன்று சில மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருப்பதும் இஸ்லாமியர் உரிமைகளை மறுப்பதும் இஸ்லாமியருக்கு கொடுமை இழைத்தவர்களைக் குற்றமற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்வதும் எல்லாம் நடந்துகொண்டு இருப்பதை அறிவோம்.
என்ன காரணம்?
மேற்படி சம்பவங்களுக்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் இங்கெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாவது யார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அவர்கள் ஏதேனும் இனத்தை அல்லது நிறத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்கள் என்பதாலோ தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. மாறாக இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதால்தான் மேற்படி அநீதி அடக்குமுறைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதை நீங்கள் கவனிக்கலாம். ஆம், இஸ்லாம் என்ற கொள்கையின் பரவுதலுக்கு எதிராகத்தான் ஆதிக்க சக்திகள் திரண்டு போரிடுகிறார்கள்! அவர்கள் ஏன் இஸ்லாம் என்ற இந்த வாழ்வியல் கொள்கை கண்டு பயப்படுகிறார்கள்?
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்   என்பதாகும்.   இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது நம்மைப் படைத்தவனுக்குக் கீழ்படிந்து அவன் வழங்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று  வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். இது மனித இனம் அனைத்துக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் கொள்கை. இதன்படி, இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. அதாவது மனம்போன போக்கில் தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்வதைக் கைவிட்டுவிட்டு கட்டுப்பாடான வாழ்க்கைக்கு திரும்புதலே இஸ்லாம்.
இஸ்லாத்தின் அடிப்படைகள்
இஸ்லாம் முக்கியமாக மனிதன் மறந்துபோயுள்ள சில முக்கிய உண்மைகளை நினைவூட்டி அவற்றை அவன் மனதில் ஆழ விதைத்து அவனை முதற்கண் சீர்திருத்துகிறது.  அவை இவையே:
1.
ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி  உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே. 
= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 

2.
ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.
= சொல்வீராக: அல்லாஹ், அவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும். மேலும் இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ கூடாது என்கிறது இஸ்லாம். இச்செயல் உண்மை இறைவனைப் பற்றிய மதிப்ப்புணர்வையும் (seriousness) அச்சத்தையும் போக்கிவிடுவதால் மக்களிடையே பாவங்கள் அதிகரிக்க ஏதுவாகிறது. இது இறைவனால் மன்னிக்கப்படாத பாவமாகும்.
3.  வாழ்க்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்.
இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்கிறது இஸ்லாம். அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். மறுமையில் புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
4. இறை தூதுத்துவம்: மனிதகுலம் பூமியில் வாழத்தொடங்கிய நாள் முதல் வெவ்வேறு காலகட்டங்களில் பூமியின் பல்வேறு பாகங்களுக்கு மேற்படி உண்மைகளை இறைவன் போதித்து வந்துள்ளான்.  அதற்காக மனிதர்களில் புனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தன் தூதர்களாக நியமித்து மக்களுக்கு வழிகாட்டி வந்துள்ளான். அவ்வாறு வந்த இறைத்தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அவராக தோற்றுவிக்கவில்லை என்பதும் மாறாக அவர்கள் இதை மறு அறிமுகம் செய்து வைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது இஸ்லாம். ஐவேளை தொழுகை, ஜகாத் எனப்படும் கட்டாய தர்மம், ரமலான் மாத நோன்பிருத்தல் போன்ற கட்டாயக் கடமைகள் தனிநபர் ஒழுக்கத்தை பேணுவதோடு சமூகப் பிணைப்பையும் ஒற்றுமையையும் ஒத்தாசையையும் நடைமுறைப் படுத்துபவையாக உள்ளன.
 யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படுகிறது. முஸ்லிம் என்பது ஒரு பண்புப் பெயர். அரபு மொழியில் பெயர் வைத்துக் கொள்வதாலோ அல்லது தாடியோ தொப்பியோ வைப்பதாலோ புர்கா போன்ற ஆடைகளை அணிவதாலோ அல்லது முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்து விடுவதாலோ முஸ்லிம் ஆகிவிட முடியாது. மாறாக முழுக்க முழுக்க பின்பற்றல் மூலமே முஸ்லிம் ஆக முடியும்.
இஸ்லாம் ஏன் தாக்குதலுக்கு உள்ளாகிறது?
ஒரே நாடு, ஒரே இனம் சார்ந்த அல்லது ஒரே மொழி பேசக்கூடிய மக்களில் எவராவது இஸ்லாம் என்ற கொள்கையை ஏற்றவுடன் ஏன் இவ்வாறு சக மக்களின் அல்லது ஆதிக்க சக்தியினரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுகிறது?
= அதுவரை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வோடு பாவங்களில் வாழ்ந்தவர்கள்...
= கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தான்தோன்றித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்...
= நிறபேதம் இன பேதம் மொழிபேதம் பாராட்டி பிரிவினை வாதம் பேசிக்கொண்டு இருந்தவர்கள்..
= விபச்சாரம், குடி, போதைப் பழக்கத்தில் மூழ்கி இருந்தவர்கள்..
= கொலை, கொள்ளை, இலஞ்சம் போன்றவற்றில் மூழ்கி இருந்தவர்கள் மற்றும் இவற்றுக்கு துணை போனவர்கள்..
இப்படிப்பட்டவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்ற உணர்வு மேலிட தன்னைத் தானே திருத்திக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ முற்பட்டால் ஏன் அவர்கள் மீது அடக்குமுறைகளும் வன்முறைத் தாக்குதல்களும் முடுக்கிவிடப்படுகின்றன?
ஆம், அதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
அவற்றை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்று நாம் வாழும் உலகத்தைச் சுற்றி இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ள சதிவலைகளையும் அவற்றின் பின்னணிகளையும் சற்று புரிந்துகொள்ள வேண்டும். சுருக்கமாக விளங்க முயற்சிப்போம் வாருங்கள்.
உலக பயங்கரவாதமும் உண்மைகளும்
கீழ்கண்ட திடுக்கிடும் புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் கவனியுங்கள்: (ஆதாரம் : www.oxfam.org)
= உலகத்தின் செல்வ வளங்களின் சரிபாதி வெறும் 26  மகா கோடீஸ்வரர்களால் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? 
= உலக மகா கோடீஸ்வரர்களின் கடந்த வருட (2018) சொத்து வளர்ச்சி 900 பில்லியன் டாலர்கள். அதாவது நாளொன்றுக்கு இரண்டரை பில்லியன் டாலர்கள். இந்த வளர்ச்சி இயற்கையான ஒன்றாக இருந்தால் கவலை இல்லை. ஆனால் இது ஏழைகளைப் பிழிந்தெடுத்து உண்டாகும் வளர்ச்சி எனும்போது கவலை கொள்ளாமல் இருக்க முடியுமா?  உலகின் மகா செல்வந்தர்கள் மென்மேலும் செல்வந்தர்களாக ஆகிறார்கள். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகி நொந்து மடிகிறார்கள்.
= இன்று நாம் வாழும் உலகின் 10 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள செல்வந்தர்கள் உலக வளங்களின் 85 சதவீதத்திற்கும் மேலான வளங்களை அநியாயமாகக் கையகப்படுத்தி உள்ளதால் உலகின் 700  கோடி மக்கள் எஞ்சியுள்ள  சுமார் 15  சதவீத வளங்களை மட்டுமே தங்களுக்கிடையே பங்கீடு செய்யவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
= செல்வந்தர்களை விட ஏழைகள் மீது வரிச்சுமை அதிகமாக உள்ளது.
திட்டமிட்டு நடத்தப்படும் கொள்ளை
= உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உணவுநீர்வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடுவதற்கும் உண்ண உணவின்றி வாடுவதற்கும் போதிய மருத்துவ வசதிகள் இன்றி அன்றாடம் செத்து மடிவதற்கும் மூல காரணம் ஒரு குறிப்பிட்ட சுரண்டல் வாதிகளின்  சுயநல வேட்கையே!
= சிறு நாடுகள் தங்கள் கைவசம் செல்வ வளங்கள் பல இருந்தும் இடைவிடாமல் போர்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் மூல காரணம் இக்கொடியோர்கள் தங்கள் வருமானங்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களே!
மேற்கூறப்பட்ட செல்வக் குவிப்பு ஏதோ தற்செயலாக நிகழ்கின்ற ஒன்று என்று நீங்கள் தவறாகக் கணக்கிட்டு விடாதீர்கள். இது பெரும் திட்டமிட்டு நடத்தப்படும் அப்பட்டமான கொள்ளை எனும்போது பொதுநல வாதிகள் கவலை கொள்ளாமல் இருக்க முடியுமா? இவர்கள் தயாரித்து வைத்துள்ள ஆயுதங்களும் பேரழிவு ஆயுதங்களும் விற்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் கைக்கூலிகள் மூலமாக போர்களை மூட்டும்போது நாம் அமைதி காக்க முடியுமா? இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாமா? இக்கொடுமையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாமா?
அநீதிக்கு எதிராக இஸ்லாம்
= இஸ்லாம் என்பது இக்கொடியோர்களின் சுயநல சித்தாந்தத்துக்கு நேர் எதிரான பொதுநல சித்தாந்தம். உலக மக்கள் மீது அநியாயமாக திணிக்கப்படும் வறுமைக்கும் நோய்களுக்கும் போர்களுக்கும் காரணமாக விளங்கும் இக்கொடியோர்களின் பிடியில் இருந்து உலகை விடுவிக்கப் போராடும் ஒரே மக்கள் சக்தியாக இஸ்லாம் உருவெடுத்து வருவதால்தான் இன்று அது கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட தாக்குதல்களுக்கும் உள்ளாகிறது என்பதை ஆராய்வோர் உணரலாம்.
மேலும் இஸ்லாம் என்ற இறை தந்த வாழ்வியல் கொள்கையை இன்று உலக மக்கள் அதிகம் அதிகமாக ஏற்று வருகிறார்கள். இஸ்லாம் கூறும் தெளிவான கடவுள் கொள்கை, வாழ்கையின் நோக்கம், மனித உரிமைகள், பெண்ணுரிமை, சமத்துவம், உலக சகோதரத்துவம், வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், நல்லொழுக்கம், கட்டுப்பாடு போன்ற பல விடயங்களும் உலக மக்களை அன்றாடம் ஈர்த்து வருகின்றன. இந்த வளர்ச்சி தங்களின் செல்வக்குவிப்பையும் சுரண்டலையும் அராஜகங்களையும் தடுத்துவிடும் என்று அந்த ஆதிக்க சக்திகள் அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தையும் இக்கொள்கையை ஏற்றோர்களையும் தவறான ஒளியில் சித்தரித்து இந்த மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் பெரும்பாடு படுகிறார்கள். ஆனால் இதைத் தடுக்க முடியாது என்கிறான் இவ்வுலகைப் படைத்தவன்!
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)
சதிவலையில் சிக்கியுள்ள உலகம்  
இன்று உலக மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீது வஞ்சகமாக சுமத்தப்படும் பொருளாதார நெருக்கடி ஒரு மிக முக்கியமான காரணியாகும். இயற்கையாகவே பற்பல வளங்களும் செழிப்பும் நிறைந்த இந்த பூமியில் ஒரு சில மக்களின் அளவுக்கதிகமான பொருளாசை காரணமாக நலிந்த மக்களின் மீது வறுமையும் நோய்களும் போர்களும் தொடர்ச்சியாக திணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வோடும் மக்கள் வாழ முற்பட்டாலும் அவர்களைப் பிரித்து அவர்களுக்கிடையே வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைத்து அவர்களைப் பிரித்தாண்டு தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறது அந்தக் கொடியோர் கூட்டம். அவர்கள் உலகின் மீது எவ்வாறு இந்த ஆதிக்கத்தை அடைந்தார்கள்? ஆம், உலகம் என்றால்  நீங்களும் நானும் அதில் அடக்கம்... எவ்வாறு இக்கொடியோர்களின் பிடியில் மீளமுடியாதவாறு மாட்டிக் கொண்டோம். அதை அறிய நீங்கள் பணம் –காகிதப்பணம்- வந்த வரலாற்றை தெரிந்தாக வேண்டும்.
காகிதத்தில் சுகம் கண்டு ஏமாறுதல் 
ஆரம்பத்தில் பண்ட மாற்று முறையில் நடந்து கொண்டிருந்த வியாபாரம் மெல்ல மெல்ல தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் நடந்தது. அப்போது நாணயங்கள் திருட்டு அல்லது கொள்ளை போவதைத் தடுக்கும் முகமாக சில செல்வந்தர்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள். அவையே பிற்காலத்தில் வங்கிகளாக உருவெடுத்தன. வங்கியாளர்கள் தங்களிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்கு பகரமாக வாக்குறுதிப் பத்திரங்களை கையொப்பமிட்டு - அதாவது ரசீதுகளை நாணயங்களின் உரிமையாளர்களுக்குக்  கொடுத்தார்கள். தங்கள் சேவைக்கு கட்டணமும் வசூலித்தார்கள். நாள் செல்லச்செல்ல மக்கள் அந்த ரசீதுகளையே நாணயங்களுக்கு பதிலாக தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு  வியாபாரம் செய்தார்கள். நாளடைவில் ரசீதுகளைக் கொண்டே காரியங்கள் நடைபெறுவதால் மக்களில் எவருக்கும் வங்கியில் இருந்து நாணயங்களைத் திரும்பப் பெறும் அவசியமே ஏற்படவில்லை. அதைப்பற்றி மக்கள் கவலைப்படவும் இல்லை. தேவைகள் அதிகரிக்கவே வங்கியாளர்கள் ரசீதுப் பத்திரங்களை தேவையான மதிப்புகளுக்கு (denominations) அச்சிட்டு வெளியிட்டார்கள். 
வங்கியாளர்களின் நம்பிக்கை துரோகம் 
இவ்வாறு நீண்ட காலமாக தங்களிடம் தங்க நாணயங்கள் உறங்கிக் கிடப்பதையும் தங்கள் கையெழுத்திட்ட காகிதங்கள் நாட்டில் மதிப்பு மிக்கவையாக மாறியிருப்பதையும் கண்ட வங்கி உடைமைகள் இரண்டு விதமான மோசடிகளை துணிந்து செய்தனர்.
1.      நாணயங்களின் இருப்புக்கு அதிகமான ரசீதுப் பத்திரங்களை வெளியிட்டு தங்களுக்கு தேவையானவற்றை நாட்டில் வாங்கிக் குவித்தார்கள்.
2.      அதே பத்திரங்களை மக்களுக்குக் கடனாகக் கொடுத்து வட்டியும் வட்டிக்கு மேல் வட்டியும் எல்லாம் ஈட்டினார்கள்.
அந்த ரசீதுகளின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் காகிதப் பணத்தாள்கள்! (குறிப்பு: மேற்கூறப்பட்ட காகிதப் பணத்தின் நீட்சிதான் இன்றைய பணமில்லா பணப்பரிமாற்றம் (cashless transaction) என்ற தகவலையும் நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்)
வங்கி உடைமைகள் இவ்வாறு அச்சிட்டு நாட்டில் புழக்கத்தில் விட்ட பணத்தைக்கொண்டு நாட்டின் சொத்துக்களை வாங்கினார்கள், பணம் கொழிக்கும் நிறுவனங்களை, நாட்டு வளங்களை,  என தாங்கள் எதையெல்லாம் விரும்பினார்களோ அவற்றையெல்லாம் வாங்கினார்கள். இந்த பணியில் நேர்ந்த சிக்கல்களை தங்கள் ரவுடிகளை (மாபியாக்களைக்) கொண்டும் குறுக்கு வழிகள் மூலமாகவும் சரிக்கட்டினார்கள்.  இவர்களின் கையெழுத்திட்ட காகிதங்கள் (அதுதான் “பணம்’) இன்றி நாட்டில் எதுவும் அசையாது என்ற நிலையில் அசைக்க முடியாத அதிகாரம் இவர்களை வந்தடைந்தது.  இறுதியில் நாட்டின் அரசனையும் இராணுவத்தையும் தங்கள் ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டு வந்தார்கள். பணமும் பலமும் தந்திரங்களும் கையாட்களும் அவர்களின் நாட்டத்தை எளிதாக்கின. ஒரு நாட்டின் பணம் என்ற ஒன்றின் ஏகபோக உரிமையை கொண்டாடுபவர்களுக்கு மற்றவை அனைத்தும் மண்டியிட வேண்டும்தானே!
நாடுகளைத் தொடர்ந்து கண்டங்கள்
= முதலில் ஒரு நாடு கைவசம் வந்ததும் ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? தொடர்ந்து அடுத்த நாடு, அதற்கடுத்த நாடு... என ஒவ்வொன்றாக வென்றார்கள். தொடர்ந்து கண்டங்களைக் கீழடக்க கடற்பயணங்கள் மேற்கொண்டார்கள். கொலம்பஸ், வாஸ்கோடகாமா இவர்களை உங்களுக்கு நினைவிருக்கும் அல்லவா? கடல் வழிகள் கண்டுகொண்ட பின் இராணுவங்களை அனுப்பி அக்கண்டங்களில் வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவிப் பழங்குடியினரை துப்பாக்கி முனையில் கீழடக்கினார்கள். சித்திரவதைகள் செய்தார்கள். அடங்காதவர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து கடல்வழியாகக் கடத்தி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்று பொருளீட்டினார்கள். (Atlantic slave trade என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.)

வெள்ளையர்களே மேலானவர்கள், மற்றவர்கள் கீழடங்கி வாழக் கடமைப்பட்டவர்கள் என்ற நிறவெறி இவர்களுக்குள் புரையோடி இருந்ததால் குற்ற உணர்வு ஏதும் இல்லாமல் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்தார்கள். ஐரோப்பாவில் தொடங்கிய இந்தக் கொடூர வேட்டை உலகெங்கும் பற்றிப் படர்ந்தது. ஆங்கிலேயக் காலனி ஆதிக்கம் என்ற பெயரில் நம் நாட்டையும் வந்தடைந்ததை அறிவோம்.
வங்கிகள் அமைத்து அதன் மூலம் படிப்படியாக உலகத்தைக் கீழடக்கி தங்கள் ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்த இந்த வஞ்சக நிகழ்வு ஒரு கற்பனையோ கதையோ மாயையோ அல்ல. இன்றைய உலகத்தின் பொருளாதார அடிமைத்துவத்தின் அசல் சரித்திரம் இதுவே.

காலனி ஆதிக்கம் என்ற பயங்கரவாத சாம்ராஜ்ஜியம்
நாம் வாழும் இந்தியாவையும் உலகின் மிகப்பெரும் நாடுகளையும் பெருமளவில் அடிமைப்படுத்தி காலனி ஆதிக்கம் செய்தவர்கள் யார் என்றால் ஆங்கிலேயர்கள் அல்லது பிரிட்டன் என்போம். ஆனால் நம் நாட்டை ஆதிக்கம் செய்த கிழக்கிந்திய கம்பெனி என்ற தனியார் வணிக நிறுவனம்தான் இதை நிகழ்த்திக் கொண்டிருந்தது என்பதே உண்மை. இதன் உரிமையாளர்களாக இருந்தது ரோத்ஸ்சைல்ட் என்ற யூத குடும்பம்.  மேயர் ஆம்செல் ரோத்ஸ்சைல்ட்(1744–1812) (Mayer Amschel Rothschild,) 1760ஆம் ஆண்டு  தனது ஐந்து மகன்கள் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, இத்தாலி நாடுகளின் தலை நகரங்களில் இயங்கக்கூடிய பன்னாட்டு வங்கிக் குழுமத்தை நிறுவினார். இந்தக் குடும்பம் பிற்காலத்தில் இக்குடும்பம் இங்கிலாந்திலும் ரோமப் பேரரசிலும் அரச அந்தஸ்திற்கு உயர்த்தப் பட்டார்கள் என்கிறது விக்கிப்பீடியா. ஒரு நாட்டின் “பணத்தை” யார் உருவாக்குகிறாரோ அவர்தான் அந்நாட்டின் உண்மை அதிபதி என்பதை இங்கு புரிந்து கொள்ளலாம். 
‘சுதந்திர’ இந்தியாவின் நிலை
Image result for east india rupees நம் நாடுதான் சுதந்திரப் போராட்டம் நடத்தி வெள்ளையர்களை வெளியேற்றி விட்டதே, காலனி ஆதிக்கத்தின் கீழிருந்து விடுதலை அடைந்து விட்டதே என்று யாராவது நினைத்தால் அது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடு என்பதை சிந்திப்பவர்கள் அறிவார்கள். நமது வங்கிகளையும் பணத்தாள்களையும் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியை (Reserve Bank of India) கிழக்கிந்திய கம்பெனிதான் நிறுவியது என்பதும் இந்தியாவின் முதல் ரூபாய் நோட்டுகளில் நான்காம் ஜார்ஜ் அரசரின் படம் இடம் பெற்றிருப்பதையும் நீங்கள் கூகுளில் காண முடியும். இன்று படங்கள் மாறினாலும் பணத்தாள்களின் விநியோகமும் பணமில்லா பரிவர்த்தனை நிர்வாகமும் தொடர்ந்து அவர்கள் கையில்தான் உள்ளது. அதாவது, நீங்கள் கொடுக்கும் அல்லது வாங்கும் ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் – அதை நேரடியாகவோ வங்கிகள் மூலமாகவோ இணையம் மூலமாகவோ எவ்வாறு புழங்கினாலும் சரி - கணிசமான பங்கு அவர்களை சென்றடைகிறது என்பது என்னவோ உண்மையிலும் உண்மை!
உலக மகா வங்கி அமைப்பு
எந்த நாட்டிலும் அங்கு வங்கி அமைத்து பணமஉருவாக்க யாரால் முடியுமோ அவர்கள் கைகளிலேயே ஆதிக்கம் சென்றடையும் என்பதை நாம் உறுதியாக அறிகிறோம். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டில் உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டு சேர்ந்து வலுவான வங்கி அமைத்து ஆதிக்கத்தைக் கைப்பற்றினால் நிலைமை எப்படி இருக்கும்? அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது? அந்நாட்டு அரசாங்கமும்  மாஃபியாவும்  இந்தத் தனியார் முதலாளிகளுக்கு துணையாக இருந்தால் அவர்களால் செய்ய முடியாதது ஏதும் இருக்குமா
ஆம்,  அவ்வாறு 1910ம் ஆண்டு ரோத்ஸ்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு சேர்ந்து தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank). இது வெளியிடும் கரன்சிதான் டாலர். இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.  இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World...  https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia,  Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan - இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம். 
உலகளாவிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்
Image result for federal reserve bank octopus .= உலக வல்லரசு அமேரிக்கா உருவாக்கும் டாலர் என்ற இந்த மதிப்பற்ற காகிதப் பணத்தை மதிப்புள்ளதாகக் காட்டி உலக நாடுகளின் மீது திணித்து அந்நாட்டு வளங்களைக் கொள்ளை அடிக்க நடத்தப்படும் அரசியல்தான் இன்று உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது
= அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் தயாரிப்பவர்கள்தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு  இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும்  ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி உள்ளார்கள்.
= உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அந்த நிறுவனங்களின் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். அடங்காதவர்கள் தீர்த்துக்கட்டப்படுகிறார்கள் அல்லது புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை மற்றும் மாஃபியாக்கள் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறார்கள். ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது என்பதுதான் உண்மை. பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா? சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாடு ஏன் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக தன் அராஜகங்களை நிறைவேற்றுகிறது என்ற கேள்விக்கு இங்கே பதில் இருப்பதை நீங்கள் காணலாம்.
= இவர்கள் உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். உலக நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் இவர்களின் ஆணைப்படியே நியமிக்கப் படுகிறார்கள். அமெரிக்காவை தங்கள் இராணுவக் கரமாக பயன்படுத்தி நாடுகளை அடக்கி வைக்கிறார்கள். நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். (உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர்).
= சமீபத்தில் லிபியாவின் அதிபராக இருந்த கத்தாஃபி அவர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெட்ரோலியத்தை டாலருக்கு விற்க மறுத்தார் என்பதும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆப்ரிக்க நாட்டுக் கரன்சியை உருவாக்க முயன்றார் என்பதும்தான். இவை சில வருடங்களுக்கு முன் விக்கிலீக்ஸ மூலம் கசிந்த ஹில்லாரி கிளிண்டன் இமெயில்கள் மூலம் உலகுக்கு தெரியவந்த விடயங்கள் ஆகும். (பார்க்க https://www.youtube.com/watch?v=6O8vM0-6EEE )
ஜனநாயக நாடுகளின் நிலை
=
அரசர்கள் அல்லது சுல்தான்களால் ஆளப்படும் நாடுகளை அவர்கள் நேரடியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஜனநாயக நாடுகளில் – அதாவது தேர்தல் மூலம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கப் படும் இடங்களில் தங்களால் இயன்ற அளவு இருகட்சி அமைப்பை (Two party system) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.  யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கைப்பாவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக தங்கள் கைவசம் உள்ள செல்வங்களையும் ஊடகங்களையும் அடியாட்களையும் உள்ளூர் இயக்கங்களையும் சமூக வலைத்தளங்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVM) எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். உள்நாட்டுத் தலைவர்களை வருமான வரித்துறை, காவல்துறை, CBI போன்ற புலனாய்வுத்துறை மற்றும் மாபியாக்கள் போன்றவற்றைக் கொண்டு சரிக்கட்டுகிறார்கள். தங்கள் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்யும் நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன.
ஆயுத விற்பனைக்காக உருவாக்கப்படும் போர்முனைகள்
= நாடுகளை  எப்போதும் போர் முனையில் நிறுத்துவது இவர்களின் முக்கிய பணி. அதன் மூலம் போரிடும் இரண்டு நாடுகளுக்கும் தேவையான பொருளாதாரத்தை கடனாகக் கொடுத்து வட்டி ஈட்டுகிறார்கள். போருக்கான ஆயுதங்களை - போர் விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இன்ன பிற போர் தளவாடங்கள், பேரழிவு ஆயுதங்கள் என அனைத்தையும் – இவர்களே சப்ளை செய்கிறார்கள். நாடுகள் இக்கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சம் அந்நாடுகளின் வளங்கள் இவர்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் மீது வரிச்சுமை அதிகரிக்கிறது. உலகில்  ஒவ்வொரு நாடும் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக இராணுவத்திற்காக செலவிட வேண்டிய நிர்பந்தமும் இதனால்தான்.
= அமெரிக்க உளவு நிறுவனமான CIA -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
= அதற்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். தங்களுக்குக் கட்டுப்படாத அரசுகளுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை ஊக்குவித்து கலகங்கள் மற்றும் இராணுவப்புரட்சி நிகழ்த்துதல், அந்நிய நாட்டின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பலவந்தமாக உள்நுழைந்து இராணுவத்தளம் அமைத்தல் போன்றவை இவர்களது வாடிக்கை.  மக்கள் கொத்துக் கொத்தாக மடிவது பற்றி இவர்கள் அறவே கவலைப் படுவது இல்லை.         
= மக்களின் ஒத்துழைப்பும் பங்கேற்பும்  வரிப்பணமும் இல்லாமல் போர்களை நிகழ்த்த முடியாது. போர்முனைக்கு மக்கள் செல்லவேண்டுமானால் அதற்காக மக்களை மூளைச்சலவை செய்தாக வேண்டும். அதைத்தான் இன்று ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாக உள்ள ஆட்சியாளர்கள் தத்தமது நாடுகளில் செய்து வருகிறார்கள். தங்களின் கைக்கூலிகளை  ஏவி சக்திவாய்ந்த ஊடகங்கள்  மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடையே பொய்களையும் விஷக் கருத்துக்களையும்  பரப்புகிறார்கள். தாக்குதலுக்கு உள்ளாக இருக்கும் நாட்டின் மீது அல்லது சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்து மக்களை ஆவேசம் கொள்ள வைக்கிறார்கள். உதாரணமாக அதற்கேற்றவாறு இவர்களின் கைக்கூலிகள் மூலம் உலக அரங்கில் நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன.
சில உதாரணங்கள்:
) அமெரிக்காவின் இரட்டை கோபுர இடிப்பை நடத்தியது பின்லேடன்தான் என்று ஊடகத் தந்திரங்கள் மூலம் மக்களை நம்பவைத்து ஆப்கானிஸ்தானத்தின் மீது போர் தொடுத்து அந்த நாட்டைக் கைவசப்படுத்தியது. தாலிபான்கள் தடை செய்து வைத்திருந்த அஷீஷ்’ போதைப் பயிர் நிலங்களை முழுவதுமாக கைப்பற்றி மீண்டும் அதை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது.
) ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பதுக்கப்பட்டு உள்ளன என்று பரப்புரைசெய்து அந்நாட்டைத் தாக்கி சத்தாம் ஹுசைனை கொன்று அந்நாட்டைக் கைப்பற்றியது. எண்ணெய் வளங்களை கைவசமாக்கியது.
கையாட்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகள் உண்டாக்குதல்  
= தங்களின் வஞ்சகத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். பெரும் செலவில் தங்கள் கையாட்கள் மூலம் மதம் சார்ந்த அல்லது இனம் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளை உருவாக்குகிறார்கள். இந்த அமைப்புகள் மூலம் மதவெறி மற்றும் இனவெறியூட்டும் பிரச்சாரங்கள் செய்து ஆதரவாளர்களை உருவாக்குகிறார்கள்.  இவர்களைக் கொண்டு அப்பாவிகளைக் கொல்லும் குண்டு வெடிப்புகள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். இதுபோன்ற ஒரு அமைப்புதான் ஐஎஸ்ஐஎஸ். இது முழுக்கமுழுக்க இஸ்ரேலின் மொசாத் மற்றும் அமெரிக்க CIA வால் உருவாக்கப்பட்ட ஒன்று. 
விடுதலை சாத்தியமா?
உலகளாவப் பின்னப்பட்டுள்ள இந்த வஞ்சக வலையில் இருந்து நாடுகளை விடுவிக்காதவரை அமைதி என்பதனையே நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பொதுவாக சமூகங்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்கள் அமைதியாக வாழவே விரும்புவார்கள். இன்று போர்முனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் கூட எல்லையோர மக்களை அங்குள்ள இராணுவங்களை அகற்றி அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டுப் பாருங்கள், எவ்வளவுதான் முரண்பட்ட இனங்களை அல்லது மதங்களைக் கொண்டோராக ஆனாலும் சிறுசிறு சலசலப்பு அல்லது கலகங்கள் நடந்தாலும் காலப்போக்கில் சமாதானத்தையே விரும்புவார்கள். அவர்களுக்குள் இணைந்து வாழப் பழகிவிடுவார்கள். உதாரணமாக இந்தியா-பாகிஸ்தான்.
ஆனால் இந்த ஈவிரக்கமில்லாத ஆயுத விற்பனை மாபியாக்களின் கொள்ளைத் திட்டங்களுகாகவே இம்மக்களிடையே வெறுப்பு அவ்வப்போது விதைக்கப்படுகிறது. போர்முனை அழுத்தம் (war tension) உண்டாக்கபடுகிறது.. இருதரப்பிலும் கையாட்களும் ஊடகங்களும் முடுக்கிவிடப்படுகின்றன. போர்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவர்களின் அடங்காத பொருளாசை காரணமாக உலகெங்கும் அப்பாவிகள் இலட்சக்கணக்கில் மடிகிறார்கள். தங்கள் உடமைகளை உறவுகளை இழக்கிறார்கள். செழிப்போடு வாழ்ந்த தங்கள் நாடுகளைத் துறந்து அண்டை நாடுகளுக்குப் பிச்சைக்காரர்களாக வெளியேற்றப்படும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவர்களின் ஊடகங்கள் மூலமாக அந்த அவலத்திற்குக் காரணமான குற்றவாளிகளாக அந்த அப்பாவிகளையே சித்தரிக்கவும் செய்கிறார்கள். இவர்களின் கொடுமைகளில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கப் பாடுபடும் மக்களை இவர்கள் பயங்கரவாதிகளாகவும் தங்களை சமாதானப் பிரியர்களாகவும் ஊடகங்கள் மூலம் காட்டிக் கொள்கிறார்கள்.
இருட்டடிப்பு செய்யப்படும் உண்மைக் குற்றவாளிகள்
இப்படி ஒரு வஞ்சக வலை உலகை அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்பதை அறியாதவர்களாகவே பெரும்பான்மை மக்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் சரித்திரத்தில் நிகழ்த்திய கொடுமைகளும் அதிபயங்கரவாத செயல்களும் தந்திரமாக மறைத்து வைக்கப் படுகின்றன.
இவர்கள் விதைக்கும் வெறுப்பு விதைகளால் மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும்போது அவை மட்டுமே உடகங்களின் பேசுபொருளாக ஆகின்றன. இரு தரப்பினருக்கும் ஆயுதங்களும் பொருளாதாரமும் வழங்கி ஆயிரக்கணக்கில் அப்பாவிகளின் இரத்தத்தை ஆறாக ஓட்டி இவர்கள் நடத்தும் கொடூர நாடகங்களே இவை என்பதை மக்கள் சற்றும் உணராத வண்ணம் இவர்களின் கைப்பாவை ஊடகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுமே அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் காரணம் என்று வீரியமாக இவர்களின் ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன. இஸ்லாத்தை இவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்?
கொடுங்கோலர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்கள்:
= இஸ்லாம் தனிமனிதனை மட்டுமல்லாமல் முழு சமூகத்தையும் சீர்திருத்தி அவர்களின் கரங்களாலேயே உலகில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அதன்வழி அமைதியை நிலைநாட்ட முயல்கிறது. ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற அடிப்படையில் உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுகிறது. மக்களை இனம், நிறம், மொழி, நாடு என்ற அடிப்படையில் பிரித்து அவர்களை ஆளவும் சுரண்டவும் நினைக்கும் கொடியோர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு அஞ்சுகிறார்கள்.
= இஸ்லாம் கற்பிக்கும் மறுமைக் கொள்கை - அதாவது இந்த உலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது, ஒரு பரீட்சை போன்றது, மறுமையே நிலையானது என்ற நம்பிக்கை – மக்கள் மனங்களில் தியாகம் மேற்கொள்வதற்கான தூண்டுகோலாக அமைகிறது. அதன்வழி மக்கள் தங்கள் சம்பாத்தியங்களையும் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் சக மக்களோடு பங்கிட்டு வாழும் மனப்பான்மையை வளர்க்கிறது. இது அனைத்தையும் வணிக மயமாக்கி மக்களை சுரண்டி வாழும் இக்கொடியோர்களின் சுயநல சித்தாந்தத்திற்கு நேர் எதிரானது. இஸ்லாம் பரவப்பரவ தங்கள் சுரண்டல்கள் தவிடுபொடியாகி விடும் என்று அஞ்சுகிறார்கள்.
உதாரணமாக நீர் என்ற இறைவனின் அருட்கொடை இலவசமாக தாராளமாகக் கிடைக்கும் ஒன்று, சாலைகள் என்பவை இலவசமாக பயன்பட வேண்டியவை, இன்று இவற்றையெல்லாம் விலைகொடுத்து, கட்டணம் கட்டி பயன்படுத்தவேண்டிய அவலம். இஸ்லாம் வளரவளர இவையெல்லாம் தடைபடும் என்று  அவர்கள் அஞ்சுகிறார்கள். 
மக்களின் கடின உழைப்பையும் அவர்கள் உண்டாக்கும் விளைபொருட்களையும் உற்பத்தியையும் இன்று இக்கொடியோர்கள் உருவாக்கியுள்ள 'பணத்திற்கு' மாற்றுவதால்தான் இக்கொடியோர் கைகளில் அதிகாரம் குவிகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பணத்திற்கு உண்மையான மதிப்பு உண்டாகும் வண்ணம் இப்போக்கை  தடுத்து நியாயமான யாருக்கும் அநீதி நேராத முறையில் இஸ்லாம் தீர்வுகள் காணும். 

= இஸ்லாம் வட்டி, விபச்சாரம், சூதாட்டம் போன்றவற்றுக்கு தெளிவான தடை விதித்து இக்கொள்கையை ஏற்றுக்கொண்ட மக்களை இத்தீமைகளில் இருந்து விலக்கி அவர்களைக் காப்பாற்றுகிறது.  இவற்றைக் கொண்டு சம்பாதிக்கவோ மக்களை சுரண்டவோ முடியாது. இஸ்லாம் பரவினால் வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.
= ஒன்றே மனித குலம், மனிதர்கள் அனைவரும் சரி சமமே ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்பதை இஸ்லாம் அடிப்படையாக போதிப்பதோடு அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறது. அதனால் இனத்தின், நிறத்தின், குலத்தின், ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்ய முடியாது.
= படைத்தவன் மட்டுமே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன், அவனை நேரடியாக பொருட்செலவின்றி வணங்கவும் பிரார்த்திக்கவும் முடியும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதை நடைமுறைப் படுத்தியும் காட்டுகிறது. இந்த செயல் கடவுளின் பெயரால் மக்களை சுரணடும்  இடைத்தரகர்களை அமைதி இழக்கச் செய்கிறது!
= தன்னைச் சுற்றி நன்மையை ஏவுவதையும் தீமைகளைத் தடுப்பதையும் இறைவிசுவாசிகளின் மீது கடமை என்கிறது இஸ்லாம். அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று நாட்டை சுரண்டும் ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை ஆட்சியாளர்களுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
= நாளுக்கு நாள் இஸ்லாத்தை ஏற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் குடும்ப அமைப்பு, திருமணம், சிசுக்கொலைக்குத் தடை போன்ற காரணங்களால் இயற்கையான முறையில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இவ்வாறு இஸ்லாம் இன்று உலகில் நடக்கும் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் உலகளாவிய இயக்கமாக வளர்ந்து வருவது நாட்டு வளங்களைக் கொள்ளையடித்துக் கொழுத்து வரும் ஆதிக்க சக்திகளின் நிம்மதியைக் கெடுத்து வருகிறது.
இக்கொடுமையைத் தடுக்க வேறு யாரால் முடியும்?
இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் அரசுகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
உலகளாவிய மட்டத்தில் அதி சக்தி வாய்ந்த முறையில் நடைபெறும் இந்த வஞ்சக வலையில் இருந்து இவ்வுலகை விடுவிக்க முடியுமா?
வெவ்வேறு நாடுகளில் ஆங்காங்கே இனம், நிறம், மொழி போன்ற அடிப்படையில் மக்கள் ஒன்று கூடி இயக்கங்கள் அமைத்து இவர்களுக்கு எதிராக நடத்தும் போராட்டங்களால் பயனேதும் நிகழ்வதில்லை. அவ்வாறு இணையும் மக்களிடம் வலுவான கொள்கைகளும் இருப்பதில்லை. கொள்கைப் பிடிப்பும் இருப்பதில்லை. உலக மக்களை மேற்படி வேற்றுமைகளைக் கடந்து இணைக்கக்கூடியவையாகவும் அவை இல்லை. இப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவர்கள் ஆதிக்க சக்திகளிடம் எளிதில் விலைபோகவும் செய்கிறார்கள். இவ்வாறு போராடும் மக்களிடையே கொள்கை வெற்றிடம் (ideological vacuum) இருப்பதால் இவர்களிடம் போராட்டத்தில் உறுதியான நிலைப்பாடும் காணப்படுவதில்லை.
நம்பிக்கையூட்டும் இஸ்லாம்!
ஆனால் மேற்படி குறைபாடுகள் இல்லாத அநீதிக்கு எதிரான – வலுவான கொள்கை பின்புலம் உள்ள - இயக்கமாக இருந்து வருவது இஸ்லாம் மட்டுமே என்பதை நீங்கள் காணலாம். இன்று உலகை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொடுங்கோலர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வரும் ஒரே ஒரு மக்கள் சக்தியாக களத்தில் நின்று போராடிக்கொண்டு நிற்பது இஸ்லாம் மட்டுமே என்பதை நீங்கள் கவனிக்கலாம்.  அவர்களின் சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது!
உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மூலைகளில் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடி நீதியை அல்லது தர்மத்தை நிலைநாட்டப் பாடுபடுவோருக்கு அவர்களுக்கு அமைப்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அரசாட்சி இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி உரிய முறையில் ஊக்கமும் விவேகமான வழிகாட்டுதல்களும்  இங்கு கிடைக்கின்றன. இனம், நிறம், மொழி, நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இஸ்லாமே முன் நிற்கிறது.
சுயசீர்திருத்த இயக்கம்
இஸ்லாம் என்பது இடம், நாடு, மொழி அல்லது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம், அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் இயக்கத்தின் தனித்தன்மை! எந்த மக்களை அல்லது சமூகங்களை ஆட்கொள்கிறதோ அவர்களை சீர்திருத்தி அவர்களையே உலகில் நடக்கும் அநியாயங்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக முன்னிறுத்துகிறது இந்த சீர்திருத்த சித்தாந்தம்!
மனிதகுலத்தை அரவணைத்து இணைக்கும் சித்தாந்தம்
அநீதியாளர்களும் அநீதிக்கு உள்ளானோரும் சக மனிதர்களே சகோதரர்களே என்ற உணர்வும் மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல, ஆனால் அவர்களை ஆட்கொள்ளும் ஷைத்தான்தான் உண்மையான எதிரி என்ற உணர்வும் போராடுவோர் மனதில் விதைக்கப் படுவதால் அங்கு தனிமனித மற்றும் இனம்சார்ந்த  பழிவாங்குதல்களும் வீண் உயிர்சேதங்களும் பொருட்சேதங்களும்  தவிர்க்கப் படுகின்றன. போரின் அல்லது போராட்டத்தின் நோக்கம்  சகமனிதனை தண்டிப்பதோ அழிப்பதோ அல்ல, மாறாக அவனை சீர்திருத்துவதே என்ற அடிப்படைக் கொள்கையை இஸ்லாம் கற்பிப்பதால் கடினமான எதிரிகளையும் தன்வயப்படுத்தும் தனித்தன்மையோடு இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் உலகெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.
பொய்யை அழித்து வாய்மையையும் அநீதியை ஒழித்து நீதியையும் பகைமையை ஒழித்து நட்பையும் கலவாரங்களை ஒழித்து அமைதியையும் நிலைநாட்டி அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ்ந்து இம்மை மற்றும் மறுமை நலன்களை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் கருணையுள்ள இறைவன் தன் தூதர்கள் மூலமாக இஸ்லாம் என்ற வழிகாட்டுதலை அருளியுள்ளான். அவ்வாறே பூமியில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படும். மக்கள் சாந்தியோடும் சகோதர உணர்வோடும் இன்ப துன்பங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உலகெங்கும் உருவாகும். இது கண்டிப்பாக நிறைவேறும் என்கிறான் இறைவன்:
= இறைவனின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் இறைவன் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். சத்திய மறுப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 9:32) 
============ 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?