இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 நவம்பர், 2016

அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்


Image result for video icon

எந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாமரர்களை விட்டுவிடுங்கள், இன்று நாட்டுமக்களில் படித்தவர்களிடம் இந்தக் கேள்விகளை கேட்டுப்பாருங்கள்... விடை கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே கிடைப்பார்கள்.. 

அ) இந்தக் காகிதப்பணம் என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பு கொண்ட வாக்குறுதிப் பத்திரம். இதன் மதிப்புக்கான தங்கம் அல்லது வெள்ளி எங்கே பாதுகாக்கப் படுகிறது?

ஆ) மக்களின் உழைப்பும் உற்பத்தியும் சேமிப்பும் செல்வமும் இந்த காகிதங்களின் மதிப்புக்கு விலைபேசப்படுகிறது எனும்போது அவ்வளவு மதிப்பு கொண்ட பொருள் இக்காகிதத்தை விநியோகித்த வங்கியிடம் இருக்கவேண்டும் அல்லவா? இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்?

உண்மையில் இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கோ அல்லது விடைகளை அறிவதற்கோ யாரும் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்தில் மக்களின் அலட்சியமும் அறியாமையும் தொடரும்வரை அடிமைத்தளையும் தொடரவே செய்யும்! 

காகிதத்தில் சுகம் கண்டு ஏமாறுதல் 

ஆரம்பத்தில் பண்ட மாற்று முறையில் நடந்து கொண்டிருந்த வியாபாரம் மெல்ல மெல்ல தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் நடந்தது. அப்போது நாணயங்கள் திருட்டு அல்லது கொள்ளை போவதைத் தடுக்கும் முகமாக சில செல்வந்தர்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள். அவையே பிற்காலத்தில் வங்கிகளாக உருவெடுத்தன. வங்கியாளர்கள் தங்களிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்கு பகரமாக வாக்குறுதிப் பத்திரங்களை கையொப்பமிட்டு - அதாவது ரசீதுகளை நாணயங்களின் உரிமையாளர்களுக்குக்  கொடுத்தார்கள். தங்கள் சேவைக்கு கட்டணமும் வசூலித்தார்கள். நாள் செல்லச்செல்ல மக்கள் அந்த ரசீதுகளையே நாணயங்களுக்கு பதிலாக தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு  வியாபாரம் செய்தார்கள். ரசீதுகளைக் கொண்டே காரியங்கள் நடைபெறுவதால் மக்களில் எவருக்கும் வங்கியில் இருந்து நாணயங்களைத் திரும்பப் பெறும் அவசியமே ஏற்படவில்லை.

வங்கியாளர்களின் நம்பிக்கை துரோகம் 

இவ்வாறு நீண்ட காலமாக தங்களிடம் தங்க நாணயங்கள் உறங்கிக் கிடப்பதைக் கண்ட வங்கி உடைமைகள் தாங்கள் மக்களோடு செய்துகோண்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக அவற்றை மறைமுகமாக மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்து வட்டியும் ஈட்ட ஆரம்பித்தார்கள். அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட வங்கியாளர்களின் ரசீதுகளையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். தொடர்ந்து தாங்கள் கையெழுத்திட்டு வழங்கும் ரசீதுகள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட வங்கியாளர்களுக்கு அது  அலாதியான தைரியத்தை கொடுத்தது.  தங்கள் இச்சை போல விரும்பிய மதிப்புக்கு விரும்பிய எண்ணிக்கையில்  அச்சடித்து அதை விநியோகித்தார்கள். அந்த ரசீதுகளின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் காகிதப் பணத்தாள்கள்! 

வங்கி உடைமைகள் இவ்வாறு அச்சிட்டு நாட்டில் புழக்கத்தில் விட்ட பணத்திற்கு  வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அவற்றைக்  கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள். சமூகத்தில் மற்றவர் அனைவரையும் அடிமையாக்கும் அந்தஸ்திற்கு உய்ரந்தார்கள். நாட்டை ஆள்வோரையும் அடிமைகளாக்கினார்கள். அல்லது தங்களின் கைக்கூலிகளைக் கொண்டு நாட்டை ஆண்டார்கள். ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். 

இப்போது யோசித்துப்பாருங்கள்... ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு  நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும்? அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது? உலகின் மாபெரும் வல்லரசையும்  மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு  அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாது? ஆம், அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

பெடரல் ரிசர்வ் வங்கியும் நமது ரிசர்வ் வங்கியும் 
  
1910ம் ஆண்டு ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு சேர்ந்து சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அவ்வாறு அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் ஒத்தாசையோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. இந்தத் தனியார் வங்கி  அச்சடித்து  வெளியிடும் வெற்றுத்தாள்தான் டாலர் என்ற உலகக் கரன்சி! 
  அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம். முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.  இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World...  https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia,  Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம். 

 அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு  இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும்  ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது எனலாம். பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?

உலகை ஆளும் வஞ்சக வலை 

உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த இரகசிய சமுதாயம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள்.  அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.

அமெரிக்கா உட்பட உலக நாடுகளை யார் ஆளவேண்டும் என்பதை இவர்களே தீர்மானிப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் ஆங்காங்கே உள்ள இவர்களின் கம்பெனிகளும் நிறுவனங்களும் அடியாட்களும் அந்தந்த நாட்டு வளங்களை சுரண்டும் அல்லது உறிஞ்சிஎடுக்கும் பணிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஆட்சியாளர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்கள். 

= அரசர்கள் அல்லது சுல்தான்களால் ஆளப்படும் நாடுகளை அவர்கள் நேரடியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் மூலம் ஆள்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படும் இடங்களில் தங்களால் இயன்ற அளவு இருகட்சி அமைப்பை (Two party system) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.  யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கைப்பாவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக தங்கள் கைவசம் உள்ள செல்வங்களையும் ஊடகங்களையும் அடியாட்களையும் உள்ளூர் இயக்கங்களையும் சமூக வலைத்தளங்களையும் எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்யும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.

 நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு உலகநாடுகளைக் கட்டுப்பட வைக்கிறார்கள். இதுபோல தங்களின் ஆதிக்கத்திற்கும் உலகைச் சுரண்டும் வஞ்சகப்பணிக்கும் தடையாக எப்பேர்பட்ட கொம்பர்கள் அல்லது மக்கள் இயக்கங்கள் நின்றாலும் அவற்றை எப்பாடுபட்டாவது நிர்மூலமாக்குகிறார்கள் அல்லது உரிய முறையில் அவர்களைக் கையாண்டு பணிய வைக்கிறார்கள். பணிய மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர். இலட்சக்கணக்கான அப்பாவிகள் அல்லது குழந்தைகள் கொல்லப்படுவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. சக்திவாய்ந்த ஆயுதங்களும் கையாட்களும் இவர்களின் பணியை எளிதாக்குகின்றனர். இவர்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மக்களுக்கு முன் இவர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இவர்களை எதிர்போரை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து மூளைச்சலவை செய்கின்றன.

சமீபத்தில் லிபியாவின் கடாபி அவர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெட்ரோலியத்தை டாலருக்கு விற்க மறுத்தார் என்பதும் தங்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஆப்ரிக்க நாட்டுக் கரன்சியை உருவாக்க முயன்றார் என்பதும்தான். இவை சமீபத்தில் விக்கிலீக்ஸ மூலம் கசிந்த ஹில்லாரி கிளிண்டன் இமெயில்கள் மூலம் உலகுக்கு தெரியவந்த விடயங்கள் ஆகும். (பார்க்க https://www.youtube.com/watch?v=6O8vM0-6EEE )

பலியாடாக இந்திய மக்கள் 

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பின் தொடர்ச்சியாக நம் நாடும் மற்ற நாடுகளைப் போல் தொடர்ச்சியாக இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்தான் இருந்து வருகிறது. நமது ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழேதான் உள்ளது எனும்போது நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் இவர்கள் கணிசமான பங்கை உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும்.
இன்று இந்திய மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடும் இந்தக் கயவர்களின் சதித்திட்டத்தின் ஒரு பாகமே என்பதை சிந்திக்க முனைவோர்  அறியமுடியும். பாமர மக்கள் முதற்கொண்டு அனைவரையும் வங்கிகளுக்கு அடிமையாக்கி அவர்களின் உழைப்பிலிருந்தும் சேமிப்பில் இருந்தும் தங்களுக்கு வேண்டியதை உறிஞ்சிஎடுப்பதே அவர்களின் நோக்கம். அதற்காக தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் நாடகங்களே மற்றவை எல்லாம்! 

இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)

நம்பிக்கையூட்டும் இஸ்லாம்!

ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது!

அது இடம், நாடு, மொழி அல்லது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம், அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் சக்தி! எந்த மக்களை அல்லது சமூகங்களை ஆட்கொள்கிறதோ அவர்களை சீர்திருத்தி அவர்களையே உலகில் நடக்கும் அநியாயங்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக முன்னிறுத்துகிறது இந்த சீர்திருத்த சித்தாந்தம்! இந்த இயக்கத்தில் இணைந்து இவர்களின் சதித் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரைத்தான் இவர்களது ஊடகங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றன. இவர்கள் மீது அடக்குமுறைகளையும் அநியாயமான போர்களையும் திணித்து நெருக்கடிகள் கொடுத்து இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்ற தோற்றத்தை உண்டாக்கி வருகின்றன.

உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன?


  இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும்போது உண்டாகும் அமைதியின் பெயரே இஸ்லாம்!

  ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது.
= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விரு வரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஸ்ரீ இஸ்லாம் உலகளாவிய மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது இனத்தின், நிறத்தின், குலத்தின் மேன்மைகளைக் கூறி மக்களைப் பிரித்து சுரண்டி வாழ்வோரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை!
ஸ்ரீ படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!
ஸ்ரீ உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது.
ஸ்ரீ நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.
 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
 இதன் காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள்.   இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.

இஸ்லாம் வலியுறுத்தும் பொருளாதாரப் புரட்சி 
இஸ்லாம் வெறும் பேச்சளவில் மனத்தளவில் சுருங்கிக் கொள்ளும் சித்தாந்தம் அல்ல. மனிதனின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் மிகவும் பக்குவமான வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் சட்டங்களையும் வழங்குகிறது. அவை இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனிடம் இருந்து வந்தவை என்பதால் அவற்றில் மனித சட்டங்களில் காணப்படும் ஓட்டைகள் இருப்பதில்லை. 
 உதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்....

§  = சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.

§  = செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)

§  .= வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.

இஸ்லாத்தின் அபார வளர்ச்சி!

 இன்று உலகில் இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலமாகவும் அது வலியுறுத்தும் தனிநபர் நல்லொழுக்கம், மனித சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமைகள்,குடும்ப கட்டமைப்பு, மனித உரிமைகள், சமூகத் தீமைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றின் மூலமாகவும் அமேரிக்கா, ஐரோப்பா உட்பட  உலகெங்கும் பெருவாரியான மக்களை கவர்ந்து வருகிறது. இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் உலகம் தொடர்ந்து இணைந்து வருகிறது.
இந்த எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் கையாளப் படுகின்றன.
ஸ்ரீ தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவோரை கிளர்ச்சி யாளர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறை களுக்குள் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்துதல்.
ஸ்ரீ இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுத பலமளித்து அவர்களைக் கொண்டே கலவரங்கள் மூட்டியும் பயங்கரவாத தாக்குதல்கள்,குண்டு வெடிப்புகள் போன்றவை நடத்தியும்  இஸ்லாமி யர்களைக் கொல்வது, அதன்மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும்  பற்றி தப்பெண்ணம் உருவாக்குவது.
ஸ்ரீ தன் கையாட்களைக் கொண்டு இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிப்பதற்காக திரைப்படங்கள், கதைகள் புனைந்து அவற்றை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி இஸ்லாத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல்.
  இன்னும் இவைபோன்ற பலதும் செய்யப்பட்டாலும் இந்த இறைவனின் மார்க்கம்  தடைபடாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. (www.pewresearch.org)
 ஆனால் உண்மையில் இஸ்லாம் எந்த ஒரு உயிரையும் அநியாயமாகக் கொல்வதோ துன்புறுத்துவதோ கூடாது என்று வன்மையாகத் தடுக்கிறது. அப்பாவிகளைக் கொல்வதும் துன்புறுத்துவதும் பெரும் பாவம் அதை ஒரு முஸ்லிம் செய்தாலும் முஸ்லிம் அல்லாதவர் செய்தாலும் மறுமையில் அதற்கு நரக தண்டனை உண்டென்று எச்சரிக்கிறது குர்ஆன்:
 = எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)


 மனிதனை மனிதனுக்கு எதிரியாக்கி ஏதேனும் ஒரு நாட்டையோ இனத்தையோ உயர்த்தவோ அழிக்கவோ வந்ததல்ல இஸ்லாம். மாறாக மனித மனங்களை பண்படுத்தி  அதன்வழி உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சுயசீர்திருத்த இயக்கமே இஸ்லாம் என்பதை விளங்கும்போது இன்றைய எதிரிகள் நாளை இதன் சேவகர்களாகவும் காவலர்களாகவும்  மாறுவார்கள் என்கிறது வரலாறு!
============

நாம் ஏன் பிறந்தோம்? 
 http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html

திங்கள், 28 நவம்பர், 2016

இதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்

Image result for mental peace
 இந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டி ருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது. மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும்  சந்திக்க உள்ளார்கள். மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும்  அடைய உள்ளார்கள்.

இது ஒரு பரீட்சைக்கூடம்!
 இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
2:164 நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக் கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப்பட்டிருப்போமா?
இறைவன் கேட்கிறான் பாருங்கள்:
23:115. 'நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?'
இறைவனின் இந்தக் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறை வேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதே. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
ஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
நரகமும் காத்திருக்கிறது
சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட் கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும்.
ஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர் நோக்கியுள்ள உண்மைகள். எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது ........ மரணம் நம்மை வந்து அடையும் வரை!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்
அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!'
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'
மேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து!
 நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ;டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணரா தவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறை நம்பிக்கை யாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்!
13:28. (நேர்வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள்தாம் முழுமையாக இறைநம்பிக்கை  கொண்டவர்கள்; மேலும், இறைவனை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. இறைவனை நினைவு கூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! 
என்னதான் துன்பங்கள், துயரங்கள், அதிர்ச்சிகள், விபத்துக்கள், இழப்புகள்  நம்மை ஆட்கொண்டாலும் நாம் இங்கு கைவிடப்பட்டவர்கள் அல்ல. ஒரு துளியும் நாம் விரக்தி அடையத் தேவையில்லை. நம்மீது அயராது தன் அருட்கொடைகளை சொரிந்துகொண்டு இருக்கும் நம் இறைவன் எப்போதும் நம்மோடு உள்ளான். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், நம்மை நேசிப்பதை கடமையாகக் கொண்டவன் அவன்! அதில் அவன் தளர்ந்து போவதில்லை.  நம் சொந்த பந்தங்கள் அனைவரையுமே ஒட்டுமொத்தமாக இழக்க நேரிட்டாலும் 'என் இறைவன் என்னோடு இருக்கிறான்' என்ற உணர்வு நம்மை மிகைக்க வேண்டும் என்பதனையே மேற்படி இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஏகனான அந்த இறைவனைப் பற்றி திருக்குர்ஆன்:
59:22. அவனே அல்லாஹ் , வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
நமக்கு உயிருக்கு உயிரானவர்கள் என்று இவ்வுலகில் நாம் யாரைக் கருதுகிறோமோ அவர்களை விட எல்லாம் ஒப்பிடமுடியாத அளவுக்கு நம் மீது பாசமும் நேசமும் வைத்திருப்பவன் இறைவன். உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அந்த பாசத்தையும் நேசத்தையும் விதைத்தவனும் அவனே. இதோ இவ்வுலகுக்கு இறுதி இறைத்தூதராக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உண்மையைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்:
ஸ்ரீ அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன் பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் தன்னிடம் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.   (ஹதீஸ் நூல் புகாரி 5312) 
ஆக, நம்மீது யார் எப்படி அன்பு காட்டினாலும் அந்த அன்பின் மூலகாரணம் அவனே என்றும் அவன் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் அது என்பதை நாம் அடிப்படையாக உணர வேண்டும்.
பாவமன்னிப்பு 
மன அமைதி நிலைப்பதற்கு இறைநினைவு எப்படி முக்கியமோ அதைப்போலவே நாம் நம் பாவங்களில் இருந்து மீளுதலும் அவசியமாகும். நாம் எவ்வளவுதான் பாவங்கள் செய்திருந்தாலும் நம் இறைவன் மன்னிப்பு வழங்கக் காத்திருக்கிறான்:
39:53 தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (நபியே நீர்) தெரிவிப்பீராக!

வியாழன், 24 நவம்பர், 2016

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்

 இந்த இதழைக் கீழ்கண்ட இணைப்பிலும் படிக்கலாம்:
 https://drive.google.com/…/0B3OxgRe6lIusQnk0WTIyTzZSN…/view…
= இந்த இதழை அஞ்சலில் பெற விரும்புவோர் தங்களின் முகவரியை 8867971835 / 9886001357 என்ற எண்களுக்கு SMS அனுப்பலாம்.
= முஸ்லிம் அல்லாதோருக்கு ஒருவருட சந்தா இலவசம் . முஸ்லிம்களுக்கு நான்கு மாத சந்தா இலவசம்.
= தனி இதழ் விலை. ரூ. 5-  

வெள்ளி, 18 நவம்பர், 2016

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!

ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம்! அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.

 கடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை! - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்(?) தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.?

எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு!

சரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா..? என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட! அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. 

அப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..

உதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.

அதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த  புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது,  வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.

இப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..

அடுத்து லாம்கு ..?
லாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான்.  அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும்  அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.

இங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம். 

ஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல்  நாட்டிற்கு கூறியதால்  அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே! அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.

ஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான்  அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)இதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.

இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.

கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது..? என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..

அஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை.  கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.

ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்?  கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக  காத்திருக்கிறது.

  •  உலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்?  
  • ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது?  
  • மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?
  •  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..?
  • மருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.?  அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்?
இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...!

மேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

அறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி!

புதன், 9 நவம்பர், 2016

கள்ளப்பணமா நல்ல பணமா?

Image result for 500 rs note


அன்றெல்லாம் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு.. என்று கதை ஆரம்பிக்கும்..
இன்று நடைமுறை வேற மாதிரி...
ஒரு பெரிய ஊர்ல பெரிய ரவுடி இருந்தானாம்..  அவன் கட்டப் பஞ்சாயத்து செஞ்சு அவனோட  சாம்ராஜ்ஜியம் அங்கே நீண்ட காலமாக  நடந்துகிட்டு இருக்கு..
இப்போ புதுசா ஒரு சின்ன ரவுடி அந்த ஊருக்கு வந்தான். அவன் ஒரு ஐடியா பண்ணி பெரிய ரவுடிக்கு சேரவேண்டிய பங்கில  இருந்து தனக்கு வேண்டியதை சுருட்ட திட்டம் போட்டு அத செயல்படுத்த ஆரம்பிச்ச்சான்...
இதத் தெரிஞ்சுகிட்ட பெரிய ரவுடி சின்ன ரவுடிய மடக்க திட்டம் போட்டானாம்... இதுதான் இன்றைய விவகாரம்!
இப்போ இதில நீங்க யார் பக்கம்? யாரு நல்லவரு? யாரு கெட்டவரு?
ஆம் தோழர்களே இதுல யாரு பெரிய ரவுடி யாரு சின்ன ரவுடி என்பதையும் எது நல்ல பணம் எது கள்ளப் பணம் என்பதையும் அறிந்து கொள்ள நீங்கள் பணம் வந்த கதையைத் தெரிந்தாக வேண்டும்...
காகிதப்பணம் வந்த கதை:
பண்டைக்காலத்தில் பண்டமாற்று முறையில் சந்தைகளில் வியாபாரம் நடந்து வந்தது.  போகப்போக தங்கக் காசுகள் புழக்கத்திற்கு வந்தன. தங்கக் காசுகளின் பாதுகாப்பு, அவற்றின் போக்குவரத்து இவை மக்களுக்கு சிரமம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்க நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சில செல்வந்தர்கள் முன்வந்து பெரும் பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவி மக்களிடம் இருந்த தங்கத்தை பெற்று அவற்றுக்கான பத்திரங்களை வழங்கினார்கள். அவற்றைத் திருப்பிக் கொடுக்கும்போது அதற்கான சேவைக் கட்டணங்களையும் வசூலித்தார்கள். பிற்காலங்களில் மக்கள் அந்த பத்திரங்களையே தங்க நாணயங்கள் போல் வியாபாரங்களில் பரிமாறும் பழக்கத்திற்கு மாறினார்கள். இந்தப் பழக்கம் பிரபலமாக ஆக மக்கள் பெட்டகக்காரர்களிடம் நம்பிக்கையோடு கொடுத்திருந்த தங்க நாணயங்களில் பெரும்பாலானவை திரும்பப் பெறாமல் பெட்டகங்களிலேயே உறங்கின. இதை கவனித்த பெட்டகக்காரர்கள் ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டினார்கள். ‘நம் பெட்டகங்களில் உறங்கும் இந்த நாணயங்களை நாம் ஏன் இரகசியமாகக் மக்களுக்கு கடன் கொடுக்கக்கூடாது? அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து தங்கள் நாணயங்களைத் திருப்பக் கேட்பது என்பது நடவாத ஒன்று. அதனால் நாம் தாராளமாகக் கடன் கொடுத்து வட்டியை ஈட்டலாமே.” என்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்ய முடிவெடுத்து அதை செயல்படுத்தினார்கள். என்ன நடந்தது?.... அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட பெட்டகக் காரர்களின் பத்திரங்களையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். அவ்வாறு கொடுத்த பத்திரங்களைத் திரும்பப் பெறும்போது வட்டியும் வசூலித்தார்கள்.
வருமானத்தை ஈட்டும் வெற்றுக் காகிதம்
இப்போது பெட்டகக் காரர்களுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி! தாங்கள் வழங்கும் பத்திரங்கள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட பெட்டகக்காரர்கள் தங்கள் இச்சை போல பத்திரங்களை அச்சடித்து அதை விநியோகித்தார்கள். வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அதைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள், நினைத்ததை நடத்தினார்கள்... சமூகத்தின் மீது அசைக்கமுடியாத அதிகாரத்தைப் பெற்றார்கள்! ஆம், அந்த பத்திரங்களின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் பணத்தாள்கள்(currency)! அந்தப் பெட்டகங்களின் பரிணாமமே வங்கிகள்.
இப்போது யாரால் நாம் யாரால் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம்  என்பதை உங்களால் ஊகிக்க முடியும்! மனித வரலாற்றில் நாணயங்களும் வங்கி முறைகளும் முன்பே இருந்திருக்கின்றன. ஆனால் இன்று நாம் வாழும் உலகை கையகப்படுத்தி நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வங்கி அமைப்பைப் பற்றி மட்டும் தற்போது கவனிப்போம்.
 ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு  நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது. அரசாங்கமும் ரவுடிகளும் இந்தத் தனியார் முதலாளிகளுக்கு துணையாக இருந்தால் அவர்களால் செய்யமுடியாதது ஏதும் இருக்குமா?  
இதே சதித் திட்டத்தை உலக அளவில் செய்தால்... ? 
ஆம், டாலர் என்ற வெற்றுக்காகிதத்திற்கு பெட்டிப்பாம்பாக உலகம் கட்டுண்டு கிடப்பது அதனால்தான்! 
பெடரல் ரிசர்வ் வங்கியும் டாலரும்
இந்த வங்கி உரிமையாளர்களின் வஞ்சகச் செயலுக்கு வல்லரசு அரசாங்கமும் வலிமையான ஊடகங்களும் உலக மாஃபியாவும் (ரவுடிகளும்) துணையாக இருந்தால் என்ன நடக்கும்? அவர்களால் எதைத்தான் செய்ய முடியாது? உலகில் எதைத்தான் அல்லது யாரைத்தான் வாங்க முடியாது? உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத்  ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு உலகின் எந்த மூலையில் உள்ள சொத்துக்களையும் நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் வணிக அமைப்புகளையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முடியாதா ? அதற்குப் பணியாதவர்களை பணிய வைக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களும் மாஃபியாக் கும்பல்களும் துணையிருக்கும்போது அவர்களுக்கு என்ன தடை?
அந்த வகையில் இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலக வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், என உலகின் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவை ஒரு பதிமூன்று யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?
பெடரல் ரிசர்வ் வங்கியின் உருவாக்கம்
இன்று அகில உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுக்குள் அடக்கிவைத்து நிர்வகித்து வரும் வங்கி அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. 1910ம் ஆண்டு அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் (Jekyll Island) ரோத்ச்சைல்டு,ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன்ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு ரகசியமாக சந்தித்தார்கள். சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான உட்ரோ வில்சனை வஞ்சகமாகநிர்ப்பந்தித்து அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி. இந்த தனியார் வங்கி அச்சடித்து வெளியிடுவதுதான் டாலர் என்னும் உலகின் மிக சக்தி வாய்ந்த காகிதப்பணம்!
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம். முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
ஆக, மேலே கூறப்பட்ட 13 யூத குடும்பங்களின் வம்சாவளியினரின் கூட்டமைப்பின் கைகளால்தான் உலகத்தின் மொத்த பொருளாதாரமும், உலக நாடுகளின் வளங்களும், நிறுவனங்களும் ஊடகங்களும் கட்டுப்படுத்தப் படுகின்றன. இவர்கள் தங்கள் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தையும் உலக நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் இவர்களின் ஆணைப்படியே நியமிக்கப் படுகிறார்கள். நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். (உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர்).
---------------------- 
உலகை எவ்வாறு கட்டுக்குள் வைக்கிறார்கள்?
உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள்,   ஏவுகணைகள், நீர்மூழ்கிக்  கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவருக்கொருவரை அடித்துக் கொள்ள வைப்பது அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுதல் போன்றவை இவர்களுக்கு வாடிக்கை. ஆயுத விற்பனைக்காகவும் ஆயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும் என்பதற்காகவும் ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள்! காரணம்.. உலக ஊடகங்களில் பெரும்பாலானவை இவர்களால் வாங்கப் பட்டவையே!  
இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ;யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
ஒரே ஒரு நம்பிக்கை ஒளி
ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது! அது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம், அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் சக்தி! எந்த மக்களை அல்லது சமூகங்களை ஆட்கொள்கிறதோ அவர்களை சீர்திருத்தி அவர்களையே உலகில் நடக்கும் அநியாயங்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக முன்னிறுத்துகிறது இந்த சீர்திருத்த சித்தாந்தம்!
இவ்வுலகைப் படைத்தவனே வகுத்து வழங்கும் இந்த சீர்திருத்தக் கொள்கை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கும் பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டும் என்பதற்கும் அவனே தனது திருமறை மூலம் உத்தரவாதம் வழங்குகிறான்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)அணைத்துவிட  அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால்இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
இஸ்லாம் என்றால் என்ன? http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

செவ்வாய், 8 நவம்பர், 2016

பெண்களே, அழியாத அழகு வேண்டுமா?


Related image ஏக இறைவனின் திருப்பெயரால்
நீங்கள் தினமும் நின்று அழகு பார்க்கும் கண்ணாடியின் முன் ஒருகணம் நின்று பாருங்கள்..... இம்முறை அழகு பார்ப்பதற்காக அல்ல... அதைத்தான் தினமும் பார்க்கிறீர்களே!
இப்போது நீங்கள் நிற்ப்பது... உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக... நீங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பதை அறிந்து கொள்வதற்காக!
உங்கள் கண்கள், மூக்கு, வாய், காதுகள் பற்கள், நாக்கு, தலைமுடி என தொடங்கி அடிமுதல் முடிவரை சற்று பார்வை இடுங்கள்...
எத்தனை எத்தனை அற்புதங்களை நீங்கள் தாங்கி நிற்கிறீர்கள்! கோடிக்கணக்கான செல்கள் வெளியே தோலாகவும் உள்ளே சதையாகவும் ஒரு இடத்தில் கண்ணாகவும் நாக்காகவும் மூக்காகவும் மூளையாகவும் மறு இடத்தின் கல்லீரல் நுரையீரல், கணையம், இதயம் என உங்களை இயக்கிக்கொண்டிருக்கும் உறுப்புக்களாகவும் உருக்கொண்டு நிற்பதை அறிவீர்கள்... இவற்றில் எதற்காகவும் வேண்டி நீங்கள் உழைத்தது கிடையாது. இவற்றை வாங்க நீங்கள் எந்த ஒரு பைசா கூட செலவிட்டது கிடையாது. இவற்றின் அழகும் ஆரோக்கியமும் குன்றாமல் பராமரிக்க எந்த ஒரு முயற்சியும் உங்கள் தரப்பில் இருந்து பெரிதாக ஒன்றும் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு பெரும் பொக்கிஷம் உங்கள் கைவசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பை அளவிட அருகாமையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சென்று பணம் செலுத்தும் இடத்தில் (cash counter) சென்று நின்று பாருங்கள். சிறுநீரகம் பழுதான ஒரு நோயாளிக்கு இரத்தத்தை சுத்தீகரிக்க செய்யப்படும் டயாலிசிஸ் என்ற செயற்கை சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 650 முதல் 1000 வரை வசூலிக்கப்படுவதை நீங்கள் காணலாம். சிறுநீரகம் அறவே செயலிழந்து போனவர்களுக்கு நீங்கள் உங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை விற்க முன்வந்தால் அதை 5 இலட்சம் ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்க வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உடலின் ஒரே ஒரு உறுப்பின் கதை. அப்படியென்றால் உங்கள் உடல் என்ற பொக்கிஷங்களின் தொகுப்பின் மொத்த மதிப்பையும் இதைப் பராமரிப்பதற்கான செலவையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!
எத்தனை அரிய பொக்கிஷம் உங்களுக்கு தரப்பட்டு உங்கள் உழைப்பின்றியே பராமரிக்கப் பட்டு வருகிறது!
உங்கள் ஆடையை வடிவமைத்தது யார் என்று தெரியும். அந்த ஆடைக்கு அஸ்திவாரமான உங்கள் உடலை வடிவமைத்து வழங்கியது யார்? சிந்தித்திருக்கிறீர்களா?
ஆம், சந்தேகமின்றி அது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த கருணையுள்ள இறைவனே. ஏனெனில் அவனைத் தவிர வேறு யாரும் இவ்வாறு கூறக் கேட்டு இருக்க வாய்ப்பில்லை:
அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:6)
உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் 16:78)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
= இது எவ்வளவு நாட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது?
அதை நாம் யாரும் அறிய மாட்டோம். எப்போது நம்மிடம் இருந்து இது பறிபோகும் என்பதை இதைத் தந்தவன் மட்டுமே அறிவான்!
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். (திருக்குர்ஆன் 20:15)
= இது எதற்காக தரப்பட்டுள்ளது?
இதற்கான உண்மையான விடையும் இதைத் தந்தவனிடமிருந்தே அறிய முடியும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35.)
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
ஆம் சகோதரிகளே இதற்காகத்தான் இந்த அறிய பொக்கிஷம் நம்மிடம் தற்காலிகமாக தரப்பட்டுள்ளது. அதாவது இந்த வாழ்க்கை என்ற பரீட்சையில் நமது செயல்களும் நடவடிக்கைகளும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவை மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது பாவங்களாகவும் புண்ணியங்களாகவும் வெளிப்பட உள்ளன. அவற்றின் அடிப்படையில் மறுமையில் நமக்கு சொர்க்கமோ நரகமோ வாய்க்க உள்ளன என்பதே இந்த பொக்கிஷத்தை நமக்கு வழங்கியுள்ள இறைவனின் கூற்று!
எனவே இந்த அரிய பொக்கிஷத்தை முறைப்படி பாதுகாத்து இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களுக்கு ஏற்ப பேணி வந்தால் நாம் நாளை மறுமையில் சென்றடையும் இடம் சொர்க்கச் சோலையாக இருக்கும். மாறாக இதைத் தவறாக பயன்படுத்தினால் நாம் சென்றடையும் இடம் நரகத்தின் எரிகிடங்காக இருக்கும்.
இவ்வாறு நம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழும் வாழ்க்கை நெறிதான் அரபுமொழியில் ‘இஸ்லாம்’ என்று அறியப்படுகிறது. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் மட்டுமே நம் வணக்கத்துக்கு உரியவன் என்பதும் அந்த ஏக இறைவன் நம் அனைவரையும் கண்காணித்து வருகிறான் என்பதும் நமது வினைகளுக்கு ஏற்ப மறுமையில் சொர்க்கமோ அல்லது நரகமோ நிரந்தர வாழ்விடங்களாக விதிக்கப்படும் என்பதும் இஸ்லாம் கற்பிக்கும் அடிப்படைக் கல்வியாகும்.
இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது வரையறைகளை வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆனும் ஆடை மற்றும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை அறிவிக்கின்றன. அதன்படி
= ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்பட வேண்டியவையாகும்.
= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.
= உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.
= பெண்ணைப் பொறுத்தவரை அவளது நெருங்கிய உறவினர் அல்லாத மற்ற ஆண்களுக்கு முன்னர் வரும்போது மேற்படி உடலை முழுமையாக மறைத்துக் கொண்டே வரவேண்டும்
= தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.
.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும்.
=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது இவ்வுலகிலேயே தண்டனைக்குரிய பாவம்.
ஆக, அந்த வகையில் மறைக்க வேண்டிய உடலின் பாகங்களை திறந்தோ மூடியோ வெளிப்படுத்தும் எந்த உடையும் இறைவனால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இதை அணிவதால் சமூகத்தில் உண்டாகும் குழப்பங்களுக்கும் விளைவுகளுக்கும் உரிய தண்டனையை இதை அணிபவர்கள் மறுமையில் பெறுவார்கள் என்பது நிச்சயம்!
உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்
சகோதரிகளே, இப்போது உங்கள் ஆடை இறைவன் விதித்த வரம்புகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணிந்துள்ள ஆடை மேற்படி இறைவனின் வரம்புகளை மீறுகிறதா? அது மறைக்கப்பட வேண்டிய உடலின் பாகங்களை வெளிப்படுத்துகிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் உங்கள் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (National Crime Record bureau) கணக்குப்படி நாளொன்றுக்கு 106 பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப் படுகிறார்கள்.
உங்கள் உடலழகின் தாக்கம்
இவ்வாறு நீங்கள் உங்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும்போது பொது இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது. தொடர்ந்து சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றது. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், பெற்று வளர்த்தவர்களுக்கு நன்றிகேடு, டென்ஷன், கருக்கொலை, சிசுக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன.

= இவற்றைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கக்கூடும்.
= என் உடல், என் உரிமை, என் விருப்பம் என் ஆடை... என்று நீங்கள் உரிமை கொண்டாடக்கூடும்.
= நாட்டு நடப்புதானே, குடும்ப வழக்கம்தானே என்று உங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கூடும்.
= ஆபத்து வரும்போது சமாளிக்க எனக்குத் தெரியும், எனக்கு தற்காப்புக் கலை தெரியும், நான் படித்தவள், புத்திசாலி, எல்லாவற்றுக்கும் தீர்வு காண என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டவராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.
= அப்படியே நான் கற்பழிக்கப் பட்டாலும் அதற்கும் நாட்டில் தீர்வுகள் உண்டு, எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு வாழ்க்கையைத் தொடர என்னால் முடியும் என்றமுற்போக்குசிந்தனை கொண்டவராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.
நீங்கள் எப்படிப்பட்ட பெண்மணியாக இருந்தாலும்......

இதற்குத் தீர்வு உண்டா உங்களிடம்?
ஆனால் மரணம் என்ற ஒன்றை வெல்ல உங்களிடம் தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்!
மற்றவர்களைப்போல நீங்களும் மரணிப்பீர்கள்,
அன்று உங்கள் உடலைவிட்டு பிரிந்து விடுவீர்கள்,
அன்று உங்களை அழகிய பெயர் கொண்டு அழைக்க மாட்டார்கள்!
அனைவரும்இது இன்னாருடைய பிணம்!’ என்றே கூறுவார்கள்!
அன்றோடு உங்கள் கதை முடிவதில்லை, ஆனால் அன்றுதான் நீண்ட பயணமே ஆரம்பமாகிறது!
ஆம், மரணத்தின்போது பிரிந்த உயிர் மீண்டும் உங்கள் உடலுக்குள் நுழையும்!

மீண்டும் நீங்கள் உடலுக்குள் நுழையும்போது உங்களுக்கும் இவ்வுலகுக்கும் தொடர்பு இருக்காது. ஆம், மரணித்தவர்கள் பேசுவதில்லை என்பதை அறிவீர்களே!
தொடர்வது மறுமை வாழ்க்கை....!
அங்கு உங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உடலையும், அழகையும், அருட்கொடைகளையும் பற்றிய இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப் படுவீர்கள்.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும்.
= “ஒரு மனிதர் இறுதி விசாரணை நாளில் தன்னுடைய ஆயுளை எப்படி கழித்தார்? என்றும், அவருக்கு கொடுக்கப்பட்ட கல்வியை எவ்வாறு பயன்படுத்தி னார்? என்பதை பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தார்? எவ்வாறு செலவு செய்தார்? என்பதை பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்ட உடலை எவ்வாறு பயன்படுத்தினார்? என்பதை பற்றியும் கேட்கப்படாத வரை ஒருவரின் பாதம் அது நின்ற இடத்தை விட்டு நகராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ 2341)
எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் ?
முதலில் இறைவனின் பூமியில் இறைவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றம்.
உங்களுக்கு விபரீதங்கள் நேர்ந்திருந்தாலும் சரி, ஒன்றுமே நேராதிருந்தாலும் சரி இறைவனின் வரம்புகளை மீறும் வண்ணம் உடையணிந்து வெளியில் சென்று வரும்போது அந்நிய ஆண்களின் பார்வை உங்கள் மீது பட்டிருந்தாலும் சரி, படாதிருந்தாலும் சரி, குற்றம் குற்றமே! உங்கள் பதிவு புத்தகத்தில் அது பாவமாகப் பதிவாகிறது.
தொடர்ந்து உங்கள் உடலழகை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்ததன் காரணமாக மேலே கூறப்பட்டவாறு சமூகத்தில் உண்டான அனைத்து குழப்பங்களுக்கும் பாதிப்புகளுக்கும் நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோனதன் காரணமாக உண்டான பாவமும் உங்களுக்கு சேரும். ஒவ்வொருவரும் அவரவருக்குரியதை அடைந்தே தீருவார். இறுதித்தீர்ப்பு நாளின்போது அனைத்துமே வெளியாகும். வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பது அன்று நூறு சதவீத உண்மை!
எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும்(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

விசாரணை என்பது எந்த அளவுக்கு முழுமையானது என்றால் இவ்வுலகில் கருக்கொலை அல்லது சிசுக்கொலைக்கு உள்ளான குழந்தையும் அன்று உயிர் கொடுக்கப்பட்டு அதுவும் கூட குற்றவாளிகளைக் காட்டிக் கொடுக்கும்.
'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது)
(திருக்குர்ஆன் 82:8-9)
உங்கள் உடல் உறுப்புகளும் தோல்களும் உங்களைக் காட்டிக் கொடுக்கும்.
= அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்.
அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும்.
உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்களுடைய பாவங்களை அவைகளுக்கு) மறைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவைகளில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.
(திருக்குர்ஆன்41:20- 22)
= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)
= .....அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

கட்டுப்பாடுகள் உங்களின் நன்மைக்கே!

ஆம் சகோதரிகளே, மேற்கூறப்பட்டவை மனித வார்த்தைகளோ ஊகங்களோ அல்ல. இவ்வுலகைப் படைத்தவனின் மறுக்க முடியாத வார்த்தைகள். நாளை நடக்க இருப்பவற்றை இங்கேயே எச்சரிக்கிறான். சமூக நலன் கருதியே அவன் நமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளான். அவற்றைப் பேணி வாழ்ந்தால் இங்கு நமது தனி நபர் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் அமைதி மிக்கதாக மாறும். அந்த கட்டுப்பாடுகளைப் பேணி வாழும்போது ஒரு சில மன இச்சைகளைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை அல்லவா தயார் செய்து வைத்துள்ளான்.
சொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
= விசுவாசிகளான ஆண்களுக்கும் விசுவாசிகளான பெண்களுக்கும் இறைவன் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு இறைவனின் திருப்திதான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)
ஆம் சகோதரிகளே, உங்கள் நன்மை நாடியே உங்கள் இம்மை மற்றும் மறுமை நலன் நாடியே - இறைவன் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ அழைக்கிறான். நீங்கள் புறக்கணிக்கலாமா?
மனிதனே! கொடையாளனான சங்கைமிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். (திருக்குர்ஆன் 82:6- 8) 


ஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்?  http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_7422.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html