இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மரம் என்ற இறைவரம் காப்போம்!


கடுமையான வெயிலில் நடைபயணம் செய்து ஒதுங்க இடமில்லாது துடிக்கும் ஒரு பயணியிடம் கேட்டால்தான் மரநிழலின் அருமை என்னவென்று தெரியும். 
காடுகளில்
, வீடுகளில், தோட்டங்களில், சாலை ஓரங்களில், பூங்காக்களில் நின்றுகொண்டு அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை மரங்கள்; ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் அன்றாடங் காய்ச்சிகளுக்கும் கூட ஆறுதலும் அரவணைப்பும் தருவதே மரங்கள். 
மரங்கள் நிழலைத் தருகின்றன; மரங்கள் மழை மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கின்றன; மரங்கள் இருக்கும் இடத்துக்கு அழகூட்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மரங்கள் மனித இனம் உயிர் வாழத்தேவையான பிராண வாயு என்கிற ஆக்சிஜனை உற்பத்தி செய்து, மனித இனம் வெளியாக்கும் கரியமிலவாயுவை (கார்பன்-டை-ஆக்சைடை) உறிஞ்சி சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்துகின்றன.

செயல்படாமல் நிற்கும் மனிதர்களைப் பார்த்து "மரத்தை மாதிரி நிற்காதே!என்ற வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துவதை நாம் அடிக்கடி செவியுறுகிறோம். ஆனால் உண்மையில் அந்த வார்த்தைகளில் பொருள் இருக்கிறதா? மரம் என்றால் அது செயல்படாததா? ஒன்றுக்கும் பயனற்றதா? இப்படி மரத்தைக் கேவலமாக எடுத்தெறிந்து பேசுவது முறைதானா? உண்மையில் மரம் பயனற்றதா? மரம் என்றால் அது வெறும் கட்டை மட்டும்தானா?
மரங்களின் மறுபக்கம்
இந்தக் கேள்விகளை நாம் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு கேட்டுப் பார்த்தால் மரங்களின் மறுபக்கங்கள் நமக்குப் புரியவரும். இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் விலங்குகள், மனிதர்கள் போலவே, மரங்களுக்கும் உயிர் உண்டு என்கின்றன. சுவாசித்தல்,  உணவு உட்கொள்ளுதல், உணவை ருசித்தல், மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவை உண்டு என்பவை புலனாகின்றன
= மரங்கள் தம் வேர்களின் மூலம் பூமிக்கடியிலுள்ள மண்ணிலிருந்து உணவை உறிஞ்சிப் பெறுகின்றன. தாவரங்களின் இலைப்பகுதிகள் காற்றைச் சுவாசிக்கின்றன.
= நம் உடலில் இரத்தம் ஓடுவது போலவே, 'தாவரச் சாறு' (Sap -சாப்) என்னும் ஒருவகைச் சாறு மரங்களின் உடல்முழுவதும் வியாபித்துள்ளது. இந்தத் தாவரச் சாற்றை, மரத்தின் உயிரணுக்கள் மரத்தின் உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றன.
= விலங்குகளால் மரங்களுக்கு ஏற்படும் காயங்களைத் மரங்களிலுள்ள ‘புண்திசு' (Layers of Wound Tissue - லேயர்ஸ் ஆஃப் வுண்ட் டிஷ்யூ) என்னும் அடுக்கு காக்கிறது.
மொத்தத்தில், மரங்களும் நம்மைப் போலவே வாழ்கின்றன என்பதே உண்மை! காலம் கடந்து அறிவியல் ஆராய்ச்சிகள் இவற்றை சொன்னாலும் இறைவன் மரங்களைப் பற்றி நமக்கு முன்னரே கூறியுள்ளான்:
= வானங்களிலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் பிராணிகளும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? (திருக்குர்ஆன் 22:18)
=  (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு சிரவணக்கம் செய்கின்றன.  (திருக்குர்ஆன் 55:6)

சுற்றுப்புற சூழலில் மரங்களின் பங்கு:
இயற்கை என்ற சொல்லைக் கேள்விப்படும் போதே நம் கண்முன் நிற்பது மரங்களே! அந்த இயற்கையின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரியும் பரஸ்பரம் ஒன்றோடொன்று இனணந்து செயற்படுகின்றது. மனிதனும் அவனது வாழ்வும் இந்த இயற்கையோடு பின்னிப் பினைக்கப்பட்டே காணப்படுகின்றது. அவனால் ஒரு கணப்பொழுதும் இதனை விட்டு விலகி வாழ முடியாது. நமது சுற்றுப்புற சூழல் பல இயற்கைச் சமநிலைகளால் இயங்குகிறது. ஆக்சிஜன் வட்டம், கார்பன் வட்டம்,  நைட்ரஜன் வட்டம் போன்றன இவற்றுள் சிலவாகும். உணவுச் சங்கிலி ஒழுங்கு, சக்தி வட்டம் என்பனவும் இயற்கையின் அற்புதங்களாகும் .இந்தக் கட்டமைப்பில் ஏற்படும் சிறியதொரு மாற்றமும் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நன்கு திட்டமிடப்பட்ட மிக நுணுக்கமான அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும். சூழலின் பிரிக்க முடியாத மிக முக்கிய அங்கமாக மனிதன் இருக்கிறான்.

பரீட்சைக்காகவே உலகம்
மனிதனே அனைத்துக்கும் மையமாக விளங்குகிறான். ஆம், அனைத்தையும் இறைவன் அவனுக்காகவே படைத்துள்ளான். ஆனால் இது தற்காலிகமான ஒன்று. காரணம் இந்த ஏற்பாட்டின் நோக்கம் அவனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே.
 = (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம். (திருக்குர்ஆன் 18:7, 8)
இந்த தற்காலிகப் பரீட்சைக்கூடம் ஒருநாள் முடிவுக்குக் கொண்டு வரப்படும். அதன்பின்னர் இறைவனின் கட்டளை வரும்போது மக்கள் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று மனிதர்கள் செய்த வினைகளின் அடிப்படையில் சொர்க்கமோ நரகமோ விதிக்கப்படுவார்கள். அதுவே அவர்களின் நிரந்தர வாழ்விடமாக அமையும். சொர்க்கம் செல்ல முக்கியமாக நம்மைப்படைத்த இறைவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றியறிதலோடு வாழ்வதும் அவனுக்கு செய்நன்றி கொல்லாதிருப்பதும் ஆகும்.
= அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (திருக்குர்ஆன் 2:22) 


நன்றி:  நூ. ஜமீல் முஹம்மது
-----------------------------  
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

சனி, 15 செப்டம்பர், 2018

திருடனுக்கும் காலம் வரும்!


அது ஒரு நள்ளிரவு நேரம்...
ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது...
நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்...

திடீரேன உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது...
திடுக்கிட்டு எழுகிறீர்கள்..
இன்னும் பலமாக கதவு தட்டப்படுகிறது...
பயந்து போய் "யாருப்பா அது?" என்று கேட்கிறீர்கள்..
"போலீஸ்!" கண்டிப்பான குரலில் பதில் வருகிறது..
மேலும் பயம் உங்களைக் கவ்விக்கொள்கிறது. 

போலீஸ் எனும்போது கதவை திறக்காமல் இருக்க முடியுமா? விடுவார்களா?
கதவைத் திறந்தால்.. அங்கே...

நான்கு போலீஸ்காரர்கள்... நடுவே ரவுடியின் கோலத்தில் ஒருவன்..கையில் துப்பாக்கி ஏந்தியபடி... 
போலீஸ்காரர்களும் துப்பாக்கி வைத்திருந்தார்கள். 
நீங்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ்காரரே பேசினார்..
"அய்யா இவங்கதான் மிஸ்டர் ரங்கன்.. இந்த ஏரியால நீண்டகால திருடர். திருடர்கள் சங்க உறுப்பினர்.  இவங்களோட கோரிக்கைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பது பத்தி டிவியில் செய்தி கேட்டிருப்பீங்க. இவங்களோட தொழில தடங்கல் இல்லாம செய்ய அனைத்து ஒத்துழைப்பும் காவல்துறை குடுக்கனும்னு சொல்லி அரசு உத்தரவு. அதுதான் நாங்கெல்லாம் வந்திருக்கோம்"
உங்கள் தலைசுற்றல் அடங்குவதற்குள் ரங்கன் தன் அடையாள அட்டையை பாக்கெட்டில் இருந்து உருவி எடுத்துக் காட்டினார்..
"அண்ணே இதுதாங்க என்னோட ஐடி கார்டு. கவர்மென்ட் இஷ்ஷு பண்ணது.. பாருங்க கோபுரம் போட்ட சீல்!"
நீங்கள் வாயடைத்து நிற்கவே மிஸ்டர் ரங்கனே தொடர்ந்தார்...
"நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்ணே.. எல்லாம் நானே பாத்துக்கறேன்.. உங்க பீரோ சாவி, பெட்டிச் சாவி எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு நீங்க அந்த சோஃபால ரிலாக்ஸ் பண்ணுங்க. பத்து நிமிஷத்திலே என் சோலிய முடிச்சுடறேன்.. எனக்கு வேணுங்கறத மட்டும்தான் எடுப்பேன்..அதுக்குள்ளாற உங்க மிஸ்ஸிஸ் போட்டிருக்கற நகையெல்லாம் கழட்டி இந்த சுட்கேஸ்ல போட்டுடுங்க"  
போலீஸ் பரிவாரங்கள் வெளியே காவல் நிற்க அதிகார பூர்வமாக ஹாலுக்குள் நுழைந்தார் மிஸ்டர் ரங்கன். 
திடுக்கத்தில் நீங்கள் தயங்கி தயங்கி செய்வதறியாது நிற்கவே மிஸ்டர் ரங்கனின் துப்பாக்கி உங்களை நோக்கி நீள்கிறது... 
"அண்ணே, சொன்ன பேச்ச கேளுங்கண்ணே!" சற்று அதட்டல் தொனியில் ரங்கன். 
-------------------- 
அரண்டுபோய் தூக்கத்தில் இருந்து எழுகிறீர்கள். 
கண்டது கனவுதான் என்று உணர்ந்ததும் பெருமூச்சு ஒன்று உங்களை அறியாமலேயே வெளிவருகிறது.

சரி, இது நனவாக வாய்ப்புள்ளதா? 
ஆம்.. வாய்ப்புள்ளது என்பதைத்தான் இன்றைய நாட்டு நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் பாவங்களாகக் கருதப்பட்டவை மக்களின் வெட்க உணர்வுகள் மக்கிப்போய்விட்ட நிலையில் இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. வெட்கம், நாணம், நீதி, நியாயம் என்பவை வேகமாக தூரமாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகவே அறிகிறோம். மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அலட்சியம் செய்வதன் விளைவாகவும் தங்கள் மனம்போன போக்கில் தாங்களாகவே உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் ஒவ்வொரு பெரும் பாவங்களும் சட்ட அங்கீகாரம் பெற்று வருவது கண்கூடு.

= ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மது, போதைப்பொருட்கள், என இவையெல்லாம் அதற்கு உதாரணங்கள்.  இந்த ஈன செயல்களைச் செய்பவர்கள் இன்று சங்கம் அமைக்கிறார்கள். தங்களுக்கு உரிமை கோரி அரசாங்கங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வக்கீல்களை வைத்து வாதாடி சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து தங்களின் காரியங்களுக்கு சட்ட அங்கீகாரமும் அரசு அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

வன்பாவங்களுக்கும் அங்கீகாரம் விரைவில்..
இதே போக்கு தொடருமானால் நாளை கற்பழிப்பும், திருட்டும், கொலையும் இலஞ்சமும் கொள்ளையும் எல்லாம் சட்ட அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு பலமாகவே உள்ளது. பலமான வக்கீல்களை வைத்து வாதாடுவதன் மூலமும் நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலமும் இவை சாத்தியமே என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு தங்கள் தொழிலை தடையின்றி தொடர உரிமங்கள் (licence) வழங்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.

இன்று எவ்வாறு சினிமாக்களில் காட்டப்படும் ஆபாசமும் அந்நிய ஆண் பெண் தகாத உறவுகளும் கலை என்று போற்றப்படுகின்றனவோ அதேபோல கற்பழிப்பும் திருட்டும் கொலையும் எல்லாம் கலைகளாக மதிக்கப்பட்டு போற்றப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. இந்த வன்பாவங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வோர் நலனுக்காக அரசு நாளை புதுப்புது திட்டங்கள் தீட்டலாம்.

"அக்கலைகளைக்" கற்றுக்கொடுப்பதற்காக தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.

அரசாங்கம் மக்களிடம் இருந்து திரட்டும் வரிப்பணத்தில் இருந்து திரைக் கூத்தாடிகளுக்கு ... மன்னிக்கவும் திரைக் கலைஞர்களுக்கு... உயர்ந்த விருதுகள் வழங்குவதுதான் சகஜமாகி விட்டதே.

ஆள்வோரின் பொறுப்பற்ற போக்கு:
இன்று ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மதுப் புழக்கம் போன்ற பாவங்கள் மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறிபவை. குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் சமூகத்தில் சீர்கேடுகள் பரவவும் தலைமுறைகளை பாதிக்கவும் செய்பவை இவை. மக்கள் வெட்க உணர்வின்றி இப்பாவங்களில் மூழ்கி திளைக்கும்போது இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நாட்டின் அரசாங்கங்களுக்கு உண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவையாக இருந்தால் இப்பாவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை கல்வி நிறுவனங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தப் பாவங்களைத் தடுப்பதற்காக பதிலாக அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் படுமோசமான நிலையை இன்று கண்டு வருகிறோம்.

  தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கை மிகவும் எச்சரிப்பதாக இருக்கிறது. அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. அதாவது மக்கள் உயிர் வாழ்வதற்கே வெறுத்த நிலை அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. நிலைமை திருத்தப் படாவிட்டால் இன்னும் பல விபரீதங்கள் நிகழவே செய்யும். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இதற்காக முன்வந்தால் சீர்திருத்தங்களை நிகழ்த்த வழிகள் பிறக்கும்.

தடுப்பு நடவடிக்கை என்ன? 

மேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்

அதற்கு முதற்கண் தனிநபர் ஒழுக்கத்தை மக்களுக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து அதைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் பேணாவிட்டால் இம்மையில் ஏற்படும் விளைவுகளையும் மறுமையில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் தண்டனைகளையும் பற்றி எச்சரிக்க வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒழுக்கத்தைப் பேணும்போது உலகில் ஏற்படும் ஒழுங்கையும் அமைதி நிறைந்த வாழ்வையும் பேணுவோருக்கு மறுமையில் பரிசாகக் கிடைக்கவுள்ள நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வையும் பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும். இதைக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பள்ளிகளில் இந்த நீதி போதனையை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

அடுத்ததாக குற்றங்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதை எவ்வாறு சட்டங்கள் மற்றும் நீதித்துறை மூலம் தடுப்பது

குற்றவாளிகள் தாங்கள் செய்யும் பெரும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு பதிலாக கவுரவிக்கப் படுவதும் ஆட்சிக் கட்டில்களில் அமர்த்தி வைக்கப்படுவதும் நாட்டில் நடப்பதற்குக் காரணம் நமது வலுவற்ற சட்டங்களே என்பதை அறியலாம். மனிதர்கள் தங்கள் சிற்றறிவு கொண்டு இயற்றிய சட்டங்களே இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன.

நன்மை எது தீமை எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மனிதன் தன்னிடம் உள்ள சிற்றறிவு கொண்டும் தன் ஆசாபாசங்களுக்கு உட்பட்டும் தீர்மானித்து அதன் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். அதே வேளையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே அனைத்து படைப்பினங்களையும் அவற்றின் சூட்சுமங்களையும் அவற்றுக்கு எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன். தன் படைப்பினங்களுக்கு எது எப்போது நல்லது அல்லது தீயது என்பதை அதி பக்குவமாக அறிந்தவனும் அவன் மட்டுமே. எனவே அவன் தரும் சட்ட திட்டங்கள் எவையோ அவை மட்டுமே குறைகள் இல்லாதது. மேலும் இவ்வுலகை மனிதர்களுக்கு ஒரு தற்காலிக பரீட்சைக்கூடமாக உருவாக்கிய இறைவன் நாளை இறுதித்தீர்ப்பு நாளின்போது அவன் வழங்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலேதான் நம்மை விசாரிக்கவும் செய்வான்.

அந்த சர்வவல்லமை பொருந்திய இறைவன் இவ்வுலக மக்களுக்காக வழங்கிய வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. அவன் வழங்கும் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய பெட்டகமே இறுதி வேதம் திருக்குர்ஆன். அந்த திருமறைக் குர்ஆனின் செயல்முறை விளக்கமே இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி! எனவே இறைவன் வழங்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்போமாக!

 மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே இறைவன் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (திருக்குர்ஆன் 5:48)

வியாழன், 13 செப்டம்பர், 2018

இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்

Related image
இறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. அத்துடன் நில்லாமல் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றோரிடையே அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுவதை உலகம் அறியும்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

உலகெங்கும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர் அன்றாடம் ஐவேளை தோளோடு தோள் சேர்ந்து நின்று நிறைவேற்றும் தொழுகைகளில் இதைக் காணலாம். இஸ்லாம் என்ற வாழ்வியலை ஏற்ற மக்களிடையே இனம் நிறம் மொழி நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து உருவாகும் உலகளாவிய சகோதரத்துவமும் இதற்கு சான்று.
சக மனிதன் சகோதரனே தனக்கு சமமே என்ற திருக்குர்ஆன் கூறும் மேற்கண்ட உண்மையை கடவுளின் பெயரால் பிற மக்களைச் சுரண்ட முற்பட்ட ஆதிக்க சக்திகள் மறுக்கவும் மறைக்கவும் செய்தார்கள். ஆத்திகமும் நாத்திகமும் இவர்கள் நிறைவேற்றிய கொடுமைகளுக்குத் துணை நின்றன. 
மனிதகுல ஒற்றுமை மறுக்கப்படுதல் 
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாமறிந்த தொன்மையான முழக்கம். அனைத்து மனித குலமும் ஆதம் என்ற முதல் மனிதர் மற்றும் அவரது துணைவி ஏவாள் (ஹவ்வா) இவர்களின் பின்தோன்றல்களே என்பது அனைத்து ஆப்ரஹாமிய (யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய) மதங்களும்  கூறும் பொதுவான கருத்து. ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் சில இடைத்தரகர்கள் தங்கள் மனம்போன போக்கில் இறைவேதங்களில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவும் திரிக்கவும் செய்தார்கள். மனிதன் சக மனிதனுக்கு சமமே மற்றும் சகோதரனே என்ற கருத்தை வன்மையாக மறுத்தார்கள். சுயநல ஆதிக்க சக்திகளுக்கு துணை போனார்கள்.
அதனால் உலகெங்கும் நலிந்த நாடுகளை தங்கள் ஆயுத பலத்தால் கீழடக்கி அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த காலனி ஆதிக்க சக்திகளுக்கு குற்ற உணர்வே சற்றும் எழுந்ததில்லை. ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வசித்த பழங்குடியினரும் அப்பாவிகளும் சக மனிதர்களே – தங்களைப் போன்ற உணர்வுகள் கொண்டவர்களே- என்ற சகதாபம் அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எனவே நிராயுதபாணிகளாக நின்ற அவர்களை இலட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள்.  ஆப்பிரிக்காவின் அப்பாவிக் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்றார்கள்.  இலாபம் ஈட்டினார்கள்.  

நூற்றாண்டுகளாகத்  தாங்கள் செய்து வந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள் உள்ளன என்ற  அச்சமோ அவர்களுக்கு துளியும் இருக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்ககூடும்?
இறைவேதங்களில் இனவெறி
காலனி ஆதிக்க கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் யூதர்கள். இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது. நமக்குத் தெரிந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company) ரோத்சைல்ட் (Rothchild) என்ற யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.
யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்  என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை. இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய - கண்ணியம் வாய்ந்த - இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே, அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும், யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன  போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். 
யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles)  ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்: