இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 மார்ச், 2023

அறிவியலைக் கூறி படைத்தவனை மறுக்க முடியுமா?அறிவியல் உறுதி செய்யும் வரை நாங்கள் கடவுளை ஏற்க மாட்டோம் என்பது சில நாத்திகர்களின் வாதம். ஒரு கிணற்றில் பிறந்து வளர்ந்த தவளைகள் அந்த கிணற்றின் நீள அகலங்களை கூறி இந்தக் கிணறு எவ்வளவு விசாலமானது என்று பெருமை பேசிக்கொண்டு இருந்தன. அவற்றை அப்படியே ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு வெளியே கொண்டுவந்து போடும்போதுதான் கிணறு என்பது எவ்வளவு சிறியது என்பதையும் தங்களின் அறியாமையையும் உணரும். 

"அறிவியல்தான் அல்டிமேட்" என்றும்  "அறிவியலே அனைத்துக்கும் தீர்ப்பு சொல்லும்" என்றும்  "அறிவியல் சொன்னால்தான் எதையும் ஏற்போம்" என்றும் யாராவது கூறினால் அது அறிவியலைப் பற்றி அறியாதவர்களின் கூற்று  என்பதைப் புரிந்து கொள்ளலாம். அது மேற்கூறப்பட்ட  கிணற்றுத்தவளைகளின் பேச்சு போன்றதே! உண்மையில் இதை ஒருவிதமான மூடநம்பிக்கை என்றே கூறவேண்டும்!

அறிவியலில் எல்லைகள் 

உண்மயில் அறிவியல் என்றால் என்ன, அதன் எல்லைகள் எதுவரை என்பதை அறிய முற்படாமையே மேற்படி தடுமாற்றத்திற்குக் காரணமாகிறது.
அறிவியல் என்றால் என்ன? என்ற அடிப்படைக் கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான விடைகளைத் தரக்கூடும். பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடை, “நம்மைச்சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ளவும், உலகமும் இயற்கையும் எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் மனிதர்கள் மேற்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான, ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே அறிவியல்” என்பதுதான்.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், மனித மூளைதான் அறிவியலின் மையக்கருவாக உள்ளது என்பதுதான்! அதாவது அற்ப ஆயுள் கொண்ட ஆறடி மனிதனின் புலன்களுக்கு நேரடியாகவும் கருவிகள் மூலமாகவும் வந்தடையும் தகவல்களை (sensible data) அடிப்படையாக்கொண்டு உருவாவதே அறிவியல். இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தற்காலிகமாக மின்னி மறையும் ஒரு மிகமிக நுண்ணிய துகள் போன்ற ஒரு ஜீவி அதற்கு மட்டும் விசேஷமாகக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவு என்ற ஆற்றலைக் கொண்டு இப்பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் இரகசியங்களை துருவித்துருவி ஆராய்ந்தறியும் முயற்சியே அறிவியல் என்றும் கூறலாம்.
மனிதமூளையின் ஆற்றல் வரம்புகள்:
உதாரணமாக நீங்கள் கடுமையான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒரு ரோபோவை( Robot) உருவாக்கி அதற்கு செயற்கை சிந்திக்கும் திறனையும் (artificial intelligence) இன்ன பிற திறன்களையும் வழங்கியுள்ளீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். பிறகு அதனிடம் நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்: "எங்கே சொல் பார்க்கலாம்... "என்  அப்பா அம்மா யார்?" "நான் எந்த ஊரில் பிறந்தேன்?"  "என் தாத்தாவுடைய தாத்தாவின் பெயர் என்ன?" ..  சொல் பார்க்கலாம்? இதெல்லாம் எவ்வளவு அறியாமைத் தனமானதோ அது போன்ற ஒரு செயல்தான் அறிவியல் இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனைப் பற்றி சொல்லும் என்று எதிர்பார்ப்பதும்!
நீங்கள் உருவாக்கிய ரோபோவுக்கு நீங்கள் எதைக் கற்றுக் கொடுத்தீர்களோ அதை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை மட்டுமே அதனால் கணித்து சொல்லமுடியும் என்பது தெளிவு! அதற்கப்பால் அதற்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அதேபோல் ஒப்பற்ற படைப்பாளனாகிய இறைவனின்  படைப்பாகிய அற்ப மனித மூளை தன்னைப் படைத்த  இறைவனின் உள்ளமை பற்றி என்ன சொல்ல முடியும்? அவ்வாறு ஏதேனும் பகுத்தறிந்து கூறுவதாக இருந்தால்...
1. தனக்கு ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை உறுதியாக சொல்லும். 
2. ஏனைய படைப்பினங்கள் பற்றி அதற்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுத்தாய்ந்து என்ன  கூறமுடியுமோ அதை மட்டும்தான் கூறமுடியும். 

அறிந்தது கைமண் அளவு!

அறிவியல் எனும் படைப்பினங்களை ஆராயும் இந்த சிறு முயற்சியில் மனித அறிவுக்கு எட்டிய அறிவு என்பது இன்னும் எட்டாத அறிவோடு ஒப்பிடுகையில் கடலில் ஒரு துளி போன்றதே. ஆனால் அதுவே அனைத்துக்கும் இறுதியானது (ultimate) என்று இறுமாந்திருப்பது அறிவின்மை அல்லவா? அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையே ‘அறிந்தது கைமண் அளவு அறியாதது உலகளவு’ என்ற உண்மைதான். அனைத்தையும் அறிந்துவிட்டோம் மேற்கொண்டு அறிவதற்கு எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டால் அறிவியல் ஆராய்ச்சிகள் அர்த்தமற்றவை. நாம் வாழும் பேரண்டத்தைப் பொறுத்த ஆராய்ச்சிகளிலும் சரி அணுகூறுகளுக்கு உள்ளே நிகழும் ஆராய்ச்சிகளிலும் சரி வெளி எல்லையும் உள் எல்லையும் இன்னும்கண்டறியப்படாதவை என்பதை அறிவோம். கண்டறியப்படாதவை என்பதை விட அருகே கூட அறவே நெருங்க முடியாதவை என்பதே உண்மை. ஏனெனில் நமது அறிவாற்றல் என்பதும் மிகமிக அற்பமான ஒன்றே.

அனைத்தையும் அறிய முடியாது
மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஏனைய ஆற்றல்களைப் போல அறிவாற்றலும் இறைவனால் வரையறுக்கப்பட்ட ஒன்றே. இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்கள் சிலர் ரூஹ் (உயிர்) என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்கள் அப்போது இறைவனிடம் இருந்து கீழ்கண்ட வசனம் அருளப்பட்டது:
= நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். (திருக்குர்ஆன் 17:85
நூல்: புகாரி 
அறிவியலாளர் தீர்ப்பு சொல்லமுடியாது 
எவ்வளவுதான் உலகம் போற்றும் அறிவியல் மேதையாயினும் ஒருவர் அற்பமான அறிவை தற்காலிகமாகத்  தாங்கி நின்று மறைந்து போகும் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது அறிவியல் சார்ந்த கருத்தேயானாலும் அது இறுதியானது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். காரணம் இங்கு மேலே குறிப்பிட்டவாறு ஆராய்ச்சி எல்லைகள் வரையறுக்கப் படாதவையாக இருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எப்படி இறுதியானவை என்று கொள்ள முடியும்?

அறிவியலையே முடக்கும் நிலைப்பாடு
புலன்களால் அல்லது கருவிகளால் அறியமுடியாத அல்லது அறியாத எதையும் அப்பட்டமாக ‘இல்லை’ என்று மறுப்பது அறிவியல் ஆராய்ச்சிகளை முடக்கிப்போடும் செயலாகும். மாறாக ‘தெரியாது’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து ‘அது இருக்கக்கூடும்’ அல்லது ‘ அதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்ற நிலைபாட்டை மேற்கொள்வதால்தான் அறிவியல் முன்னேற்றமே சாத்தியமாகிறது. உதாரணமாக அணு என்பதுதான் உடைக்கமுடியாத மிகச்சிறிய பதார்த்தம்என்ற நிலைப்பாட்டுக்கு ஒரு காலத்தில் வந்தது. அப்போது அதுவே இறுதியானது என்று முடிவெடுத்திருந்தால் அதற்குப்பின் நடந்த எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்களை அது முடக்கிப்போட்டு இருக்கும் என்பதை நீங்கள்ஊகிக்க முடியும்.

உதாரணமாக அண்டவியலில் பிரபஞ்ச விரிவாக்கத்தின் பின்னணியில் காலக்சிகளுக்கு இடையே அவற்றைப் பிணைத்து வைத்திருக்கும் சக்தியும் அபாரமான வேக வளர்ச்சியோடு விரிவாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சக்தியும் என்னவென்றே அறியப்படாதவை. அந்தக் காரணத்துக்காக அவற்றை இல்லையென்று மறுக்காமல் அவற்றை கரும்பொருள் மற்றும் கருஞ்சக்தி (dark matter, dark energy) என்று பெயரிட்டு அவற்றின் இருப்பை ஏற்பதைத்தான் அறிவியல் அணுகுமுறையிலும் காண்கிறோம். ஆனால் தன் ஆய்வு எல்லைக்கே தட்டுப்படாதவற்றை இல்லை என்று அப்பட்டமாக மறுத்தால் அது அறிவீனமும் அராஜகமும் அல்லாமல் வேறு என்ன? அந்த அராஜகத்தின் விளைவாக சமூகத்தில் உருவாகும் தான்தோன்றித்தனத்திற்கும் குழப்பங்களுக்கும் ஒழுக்க சீர்கேடுகளுக்கும் இறைவனிடம் தண்டனைகள் காத்திருக்கின்றன.

= அப்படியல்ல; அவர்கள்அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில்பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (திருக்குர்ஆன் 10:39)

ஆன்மீகத்தோடுள்ள அணுகுமுறை
காலம் செல்லச்செல்ல இவ்வுலகில் காணும் படைப்பினங்களைப் பற்றிய அறியாமையை அகற்றும் வேலையை தனது அயராத ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் செய்துவருகிறது. ஆனால் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் அதுவே தீர்வு வழங்கும் என்று நம்பியிருப்பது பெரும் ஏமாற்றத்தையும் இழப்பையுமே கொண்டுவரும். உதாரணமாக மனிதவாழ்வின் நோக்கம், மனிதன் இங்கு வந்ததன் பின்னணி, மனித வாழ்வில் சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது என்பதற்கான அளவுகோல் போன்ற பலவற்றையும் அறிவியல் நமக்கு சொல்லித்தராது. அறிவியல் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று காத்திருந்தால் பல முக்கியமான விடயங்களை நாம் இழக்கவேண்டி வரும். அது இழப்பு என்பதை விட கடுமையான விபரீதங்களையும் சந்திக்க நேரிடலாம். அறிவியல் கூறுவதுதான் இறுதி (ultimate) என்று எடுத்துக் கொண்டு அதற்கு அப்பாற்பட்டவற்றை அப்பட்டமாக மறுத்தால் ஆன்மிகம் கூறும் மறுமை வாழ்வில் நரகத்தையும் ஒருவர் அடைய நேரிடலாம். அதுவும் நிரந்தர வாழ்விடம்!
= (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை இறைவனே நன்கறிகின்றான்! (திருக்குர்ஆன் 53: 29,30) 
=============== 
தொடர்புடைய ஆக்கங்கள்:
படைத்தவனைப் படைத்தது யார் ?
https://www.quranmalar.com/2023/03/blog-post_19.html
இல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன்
https://www.quranmalar.com/2019/02/blog-post.html
படைத்தவன் இல்லாமல் படைப்பினங்களா?
https://www.quranmalar.com/2023/02/blog-post_17.html
பிரபஞ்சத்தின் ஆரம்பக் கரு என்ற பேரற்புதம்!
அடிப்படையில்லா நாத்திகம்
https://www.quranmalar.com/2022/07/blog-post_15.html
அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!
https://www.quranmalar.com/2022/03/blog-post_23.html
இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்
https://www.quranmalar.com/2018/09/blog-post.html

ஞாயிறு, 19 மார்ச், 2023

படைத்தவனைப் படைத்தது யார் ?


இந்த உலகைப் படைத்தவனையே இறைவன் என்கிறோம் என்று ஆத்திகர்கள் கூறும்போது நாத்திகர்கள் அடிக்கடி முன்வைக்கும் கேள்வி இது..

அந்தப் படைத்தவனை படைத்தது யார்?
ஒரு படைபாளன் இல்லாமல் படைப்பினங்கள் எதுவும் உருவாக முடியாது என்ற லாஜிக் மறுக்க முடியாதது. எனவே படைப்பாளன் இருப்பதை ஏற்றால் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டுமே.. இதைத் தவிர்ப்பதற்காக நாத்திகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அர்த்தமற்ற கேள்விதான் இது!
# அந்த தச்சனை உண்டாக்கிய நாற்காலி எது?
# அந்த சிற்பியை செதுக்கிய சிற்பம் எது?
# ஒரு சிற்பியால் சிற்பத்தை உண்டாக்க முடியும் என்றால் ஒரு சிற்பத்தால் ஏன் சிற்பியை உண்டாக்க முடியாது?
# இன்று என் தந்தைக்குப் பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? சொல் பார்க்கலாம்..
என்ற அர்த்தமற்ற பிதற்றல் கேள்விகள் போன்றதுதான் படைத்தவனைப் படைத்தது யார்? என்ற கேள்வி.
"பகுத்தறிவாளர்கள்" அல்லது "முற்போக்காளர்கள்" என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு அர்த்தமற்ற கேள்விகள் கேட்டால் பாமரர்கள் குழம்பிப் போய் விடுகிறார்கள். ஆனால் உண்மையான பகுத்தறிவாளர்கள் இந்தக் கேள்வியின் முட்டாள்தனத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

பகுத்தறிவு பூர்வமாகவும் நீங்கள் யோசித்துப் பாருங்கள்..
ஒன்று இன்னொன்றைப் படைத்தது, அது இன்னொன்றைப் படைத்தது என்று அடுக்குவோமானால் இந்த படைப்பு சங்கிலி ஓர் இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே படைப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இங்கு நம் கண் முன்னே இம்மாபெரும் பிரபஞ்சம் உருவாகி இயங்கிக் கொண்டு இருப்பதால் அந்த படைப்பு சங்கிலி ஒரு புள்ளியில் துவங்கியிருக்க வேண்டும் என்பது பாமரனுக்கும் புரியும் லாஜிக்.. ஆக, அந்த மூலசக்தியின் உள்ளமை என்பது மிகத் தெளிவான ஒன்று! அதை அறியாமைத் தனமான கேள்விகள் கேட்பதன் மூலம் மறுக்க முடியாது என்பதும் தெளிவு!
அந்த மூல சக்தியையே-அல்லது பேராற்றலையே கடவுள் என்கிறார்கள் ஆத்திகர்கள். இதைத் தொடர்ந்து அந்த மூலத்தை - அதன் தன்மைகளை - பகுத்தறிவுபூர்வமாக ஆராயும்போது அது கடவுளா இல்லை வேறு எதுவுமா என்பது நமக்கு தெரியவரும்.

அந்த மூலப் பேராற்றல் எப்படிப்பட்டது?
இனி அந்த மூலத்தை x என்று வைத்துக் கொள்வோம். அந்த x ன் குணாதிசயங்களை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
அ) அதுதான் அனைத்துக்கும் மூலம் என்பதால் அது ஒற்றை. (single)
ஆ) அது எதையும் சார்ந்தது அல்ல (independent), அது எதையாவது சார்ந்திருந்தால் அது x ஆகிவிடும் என்பதை கவனிக்கவும்.
இ) அது ஆதியும் அந்தமும்- ஆக்கமும் அழிவும்- இல்லாத ஒன்று. அதாவது x திடீரென தோன்றாத ஒன்று. 'தோன்றுதல்' என்பது இல்லாத ஒன்றே ஒன்று அது மட்டும்தான். எல்லாக்காலங்களிலும் நிலைநிற்கக் கூடியது.
ஈ) தன்னிகரற்றது, தனக்குவமை இல்லாதது.
உ) இவ்வுலகில் காணும் அனைத்து அறிவுக்கும் மூலம் அது என்பதால் அது சர்வஞானம் (omniscient) கொண்டது
ஊ) அனைத்து ஆற்றலுக்கும் மூலம் என்பதால் சர்வசக்தி (omnipotent) கொண்டது. ...
இன்னும் பல உள்ளன. விரிவஞ்சி சுருக்கிக்கொள்வோம்.
ஆக அந்த x என்பது ஆத்திகர்கள் கூறும் கடவுளுக்குத்தான் பொருந்தும் என்பது தெளிவான உண்மை! இங்கு x இன் இடத்தில் -- இயற்கை/ பதார்த்தம் என்றெல்லாம் சொல்லி - நீங்கள் வேறு எதைக் கற்பனை செய்தாலும் பொருந்துவதில்லை என்பதையும் பகுத்தறிவோடு ஆராய்வோர் அறியலாம்.
இதோ அந்த இறைவனின் தன்மைகளாக திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

அறிவியல் உண்மைகளையே ஆராயுங்கள்:
இன்னும் இறைவனை ஏற்க மறுப்பவர்கள் இன்று அறிவியல் உறுதி செய்துள்ள தகவல்களை சற்று ஆராய்ந்தாலே அதுவும் இறைவனின் உள்ளமையை உணரவைக்கும் சான்றுகளாக விளங்குவதைப் பார்க்கலாம். உதாரணமாக பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைபற்றி அறிவியல் கூறுவதை சற்று சிந்தியுங்கள். இந்த உண்மைகளும் திருக்குர்ஆனில் இறைவனால் கூறப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்:

பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை:
இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒரு நுண்ணிய கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Big bang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. 
= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை? (திருக்குர்ஆன் 21:30)

  மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.
 அதையே கருஞ்சக்தி (dark energy) என்றும் அந்த விரிவாக்கத்துக்கு எதிரான எதிர்சக்தியையே கரும்பொருள் (dark matter) என்றும் அறிவியல் பெயரிட்டு அழைக்கிறது. (அவை இன்னும் முழுமையாக அறிவியலால் அறியப்படாதவை என்பதால்தான் அந்தப் பெயர்கள்!)

கீழ்கண்ட வசனங்களில் இறைவன் இவ்வுண்மைகளை எடுத்துரைப்பதைப் பாருங்கள்:
= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும்  ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)

= நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 35:41)

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

 இல்லாமையில் இருந்து உள்ளமைக்கு வந்த ஆரம்பக் கரு!
அந்தக் கருவும் கூட அதற்குமுன் இல்லாமையில் இருந்தது என்பதும் இன்னும் ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய உண்மை! உருவான அந்தக் கருவின் நிலை பற்றி சிந்தித்துப்பாருங்கள்.. ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து பாகங்களின் இயல்பும் மென்பொருளும் ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும் விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை நாம் அறிகிறோம். அதுபோன்று இப்பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவிற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து கூறுகளின் – பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும் மென்பொருளும் எல்லாம் அந்த ஆரம்பக் கருவில் எழுதப்பட்டு இருக்கவேண்டும்.
 அக்கருவை இல்லாமையில் இருந்து தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம். 
(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்; மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)
ஆம் அந்த இறைவனே அனைத்தையும் படைத்து பக்குவமாகப் பரிபாலித்து வருகிறான். ஒரு அற்ப துகள் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு அற்ப துகள் போன்ற அற்ப மனிதர்கள் நாம். தம் நிலை இவ்வாறிருக்க,  தம் பார்வைக்கு எட்டினால்தான் அந்த இறைவனை ஏற்போம் என்று இறுமாந்து பகுத்தறிய மறுக்கும் கூட்டம் தனது அறியாமையை இறுதித் தீர்ப்பு நாள் அன்று உணரும். ஆனால் அப்போது அவர்கள் கொள்ளும் இறைநம்பிக்கை பயன் தராது. 
அப்படியல்ல; அவர்கள்அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில்பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (திருக்குர்ஆன் 10:39)
================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 17 மார்ச், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 22 இதழ்

 

பொருளடக்கம்:

 சோதனைதான் வாழ்க்கையென்றால் விடிவு?

பேரிடர்களை இறைவன் ஏன் தடுப்பதில்லை?

முழுமையான நீதி நிலைநாட்டப்படும் நாள்

பரீட்சைக் கூடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்?

வாசகர் எண்ணம்

ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைக்கிறான்?

மனஅமைதி தரும் கீழ்நோக்கிய ஒப்பீடு

பரீட்சைக் கூடத்தில் இருந்து தப்பி ஓடினால்?

மன உறுதியோடு சோதனைகளை எதிர்கொள்வோம்!

ஊதியக் குறைவு கேட்டுப் போராடியவர் உண்டா?


வியாழன், 16 மார்ச், 2023

ஒழுக்க வீழ்ச்சியால் அழியும் மனித இனம்!


#மக்கள்தொகை_வீழ்ச்சி_அபாயம்!
பல ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகள் மக்கள்தொகை வீழ்ச்சியால் கடுமையான மனித வள பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளன. . சொந்த மக்கள் சுய இன அழிவுக்கு உள்ளாகிக் குறைந்தும் மறைந்தும் போகும் நிலையில் அவை தங்கள்
தொழில் முன்னேற்றத்தைத் தக்கவைக்க பிறநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளன! அதேவேளையில் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறையும் சூழலில் தங்கள் இனத்தாரின் அழிவைத் தடுக்க வழியேதும் அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. 
இன அழிவுக்குக் காரணங்கள்!
= இறைவனையும் மறுமை வாழ்வையும் பற்றிய நம்பிக்கை இல்லாததால் எப்படியும் வாழலாம், யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என்ற பொறுப்பின்மை மேலிடுகிறது. அதனால் மனம்போன போக்கில் பாலியல் உணர்வுகளை தணித்துக் கொள்ளும் போக்கு! மறைவில் செய்யப்படும் குற்றங்களுக்கும் இறைவனிடம் விசாரணையும் தண்டனையும் உண்டு என்பதை அறியாதவர்களும் இருக்கிறார்கள். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.
= திருமணம் என்ற உறவின் புனிதத்தை அறவே அலட்சியப் படுத்துதல். அதன் மூலம் உண்டாகும் பொறுப்புகளைக் கண்டு வெருண்டோடுதல்.
= திருமணம் இன்றியே முடிந்த வரை ஆண்- பெண் இணைந்து வாழுதல். பாலியல் உறவுகளை மனம்போன போக்கில் தணிக்கும்போது கருவுருவதைத் தவிர்த்தல். அதை மீறி உருவானாலும் அக்கருவை அல்லது சிசுவை ஈவிரக்கமின்றிக் கொல்லுதல். இங்கு விபச்சாரத்திற்கான குற்றமும் கொலைக்கான குற்றமும் இறைவனிடம் பதிவாகிறது என்பது பற்றி அறியாமை!
= ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் மற்றும் இயற்கைக்கு மாறான தான்தோன்றித்தனமான பாலியல் செயல்பாடுகள்.
= திருமணங்கள் நடந்தாலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை. அத்துடன் குழந்தைப் பேற்றை எப்படியாவது தடுக்கப் முனைப்போடு செயல்படும் அரசாங்கங்களும் அவற்றுக்குத் துணைபோகும் ஊடகங்களும் சூழலும். வறுமைக்கு பயந்தும் வசதிகள் குறையும் என்று பயந்தும் சுயநல மனப்பான்மையாலும் குழந்தைப் பேறுகள் தடைபடுகின்றன. கருக்கொலையும் சிசுக்கொலையும் எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
= திருமண வயதைத் தள்ளிப் போடுதல். வரதட்சணைக் கொடுமை, குடும்ப அமைப்பு, உறவுகள் இவற்றை விட பணத்திற்கும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற இன்னும் பல காரணிகள் இந்த அவலத்திற்கு வெகுவாகத் துணைபோகின்றன.
சுயநல "முற்போக்கு" சிந்தனை!
இவ்வளவு நடக்கும்போதும் சிலர் இப்படியும் எண்ணலாம்.... இப்போது இல்லாத சந்ததிகளுக்காக ஏன் கவலைப் படவேண்டும்? இருப்பவர்களைப் பற்றி கவலைப் படுவோமே... என்று.
ஆனால் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை அவர்களுக்கும் இருந்திருக்கிறது. ரயில்வண்டியில் முதல் ஸ்டேஷனில் ஏறியவர்கள் தங்களுக்கே இரயில் சொந்தம் என்று பாவித்து இருக்கைகளில் கால்நீட்டிப் படுத்து சொந்தம் கொண்டாடினால் அதை அனுமதிக்க முடியுமா? அல்லது அவர்கள் பெட்டிகளுக்கு தாழிட்டுவிட்டு அடுத்த ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகளுக்கு அனுமதி மறுத்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!
இவ்வுலகிற்கு நுழைவு மறுக்கப்பட்ட சந்ததிகளின் உரிமைகளை தடுத்ததற்கான குற்றத்திற்காக இவ்வுலக அரசாங்கங்களோ நீதிமன்றங்களோ நம்மை தண்டிக்க மாட்டா. ஆனால் அனைத்தையும் கண்டுகொண்டு இருக்கும் இவ்வுலகின் அதிபதி அனைத்து உரிமை மீறல்களையும் குற்றங்களையும் அழியாத பதிவேடுகளில் ஆழமாகப் பதிவு செய்துள்ளான். இவை இறுதி நாளில் தவறாமல் விசாரிக்கப்பட உள்ளன!
= உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- 'எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?' என்று- (திருக்குர்ஆன் 81: 8,9)
= அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:6-8

பெண்சிசுக்கொலைகள் - தீர்வு எவ்வாறு?


= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (
missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!

= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)

இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியுண்டா?
ஆம் உண்டு ... நபிகளார் காட்டிய வழியில்...
அன்று – அதாவது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் - அரபு நாட்டில் பெண்குழந்தை என்றாலே இழிவு என்று சொல்லி பிறந்த உடனேயே புதைத்து மூடினார்கள். ஒரு சிலர் வளர்ந்த பிறகும் கூட அவர்களை ஈவிரக்கமின்றி குழி தோண்டிப் புதைத்தார்கள். அந்த அளவுக்கு பெண்கள் மீது கருணை என்பதே இல்லாமல் கல்லாக இறுகி இருந்தது அம்மக்களின் மனம். அந்தக் கற்களை எவ்வாறு கரைய வைத்தார்கள் நபிகளார்?

மனமாற்றம் ஒன்றே மாற்றத்திற்கான வழி

சமூகத்தில் பொதுவாக பாவங்கள் பெருகுவதற்கும் பாவங்களில் மக்கள் நிலைத்து இருப்பதற்கும் மூடநம்பிக்கைகளில் காலாகாலமாக மூழ்கி இருப்பதற்கும் முக்கியமான காரணமாக இருப்பது படைத்தவனின் உள்ளமையும் வல்லமையும் பற்றி உணராமல் இருப்பதும் இந்த உலகம்தான் எல்லாமே, இதற்கப்பால் ஒன்றுமே இல்லை என்ற குறுகிய சிந்தனையும்தான். இதன் விளைவாக தான் எதைச் செய்தாலும் தனக்கு மேலே தட்டிக் கேட்க யாருமில்லை என்ற அறியாமை உணர்வு மேலிடுகிறது. அப்படிப்பட்ட உணர்வில் திளைத்து இருந்த மக்களிடையே உண்மை இறைவனைப் பற்றியும் வாழக்கையின் நோக்கத்தைப் பற்றியும், இந்தத் தற்காலிக பரீட்சை வாழ்க்கை பற்றியும் இறுதித்தீர்ப்பு நாள் பற்றியும் மறுமையில் வரவுள்ள சொர்க்கம் நரகம் பற்றியும் பகுத்தறிவு பூர்வமாக – இறைவேதம் திருக்குர்ஆனின் துணையோடு- போதித்தார்கள்.

நபிகளாரின் சீரிய போதனைகள்:

சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்த மக்களுக்கு படைத்த இறைவனை பற்றிய பகுத்தறிவு பூர்வமான அறிமுகத்தை வழங்கி அவர்களை சீர்திருத்தினார்கள். 

= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

ஏகனான, தன்னிகரற்ற, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின் வல்லமையையும் உள்ளமையையும் போதித்ததோடு இந்த தற்காலிக வாழ்க்கைக்கு பிறகு இங்கே நாம் செய்த ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் மறுமையில் விசாரணையும் அதற்கு அதற்கேற்ப வெகுமதியும் தண்டனையும் உண்டு என்ற உணர்வை ஊட்டினார்கள்:

 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்கள்.

மறுமை வாழ்க்கை பற்றிய சந்தேகம்:

ஆயினும் இறந்தபின் மீண்டும் உயிரோடு வருவோம் என்பதில் அம்மக்கள் சந்தேகத்திலேயே நீடித்தார்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப்போன எலும்புகளையெல்லாம் கொண்டுவந்து இவையெல்லாம் மீண்டும் உயிரோடு வர முடியுமா என்று கூறி எள்ளிநகையாடினார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்களே கீழ்கண்டவை:

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)

இன்னும் இவைபோன்ற திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இறைவனின் வல்லமையைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் மக்கள் தெளிவு பெற்றார்கள்.

இறைவனின் ஏவல்- விலக்கல்கள்

தொடர்ந்து இறைவன் வழங்கும் வாழ்வியல் நெறிப்படி வாழவேண்டியதை வலியுறுத்தினார்கள் நபிகளார். இறைவனுக்கு சொந்தமான இவ்வுலகில் நாம் அவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை. ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும்மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.

குழந்தைகளைக் கொல்வது பாவம்!

கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்
; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (திருக்குர்ஆன் 17:31)

இன்று உயிரோடு புதைக்கப்பட்ட பெண்குழந்தைகள் மறுமை நாளில் உயிரோடு வருவார்கள் என்ற இறைவசனங்களை அம்மக்களுக்கு நினைவூட்டினார்கள் நபிகளார். அவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே அவர்களின் பெற்றோர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள் என்றார்.

= உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று- (திருக்குர்ஆன் 81:7-9)

பெண்குழந்தைகளை வளர்ப்போருக்கு நற்செய்தி:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 "ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு இறைவன்  வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" அறிவிப்பாளர்:  நபித்இப்னு ஷுரைத் (ரலி)  ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர்

எவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து 

பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாகி விட்டது’ என்றார்  நபிகளார் 

(ஆதாரம்:அஹ்மத்)

 பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும்போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கம் செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை மக்களுக்குப் புரியவைத்தார்கள்.

============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

சனி, 4 மார்ச், 2023

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்:
– ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவ பேராசிரியர்!


உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுபடுத்துகிறார்.

இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.

மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்த வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார்.

“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.

ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியதாவது: ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.

வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.

ஏசு முஸ்லிமா? இல்லையா? என்பதை ஆராய நீண்ட ஆய்வு இவருக்கு தேவைப்பட்டுள்ளது. ஆனால் பைபிளில் உள்ள சில வசனங்களை கீழே தருகின்றோம். அவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்துப்பார்த்தாலே இயேசு ஒரு முஸ்லிம்தான்; அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக விளங்கிக் கொள்வீர்கள்.

இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு கர்த்தர் அனுப்பிய தூதர்தான்:

நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
(யோவான் 12:49)

 
இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :

20. அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.

22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.

23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

(மத்தேயு 20 : 20 முதல் 23 வரை)

தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :

அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

(மத்தேயு 19 : 16, 17)

நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைக்கொள்ள வேண்டும் என்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை எது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.

29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

(மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை)

 
இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:

21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

(மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை)

மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இதைவிட ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களைப் படித்தாலே இயேசு ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாம் சொல்லக்கூடிய ஓரிறைக்கொள்கையைத்தான் தெள்ளத்தெளிவாக போதித்துள்ளார் என்பது தெரிகின்றதா? இல்லையா?

இதைக் கவனத்தில் கொண்டு கீழே உள்ள திருக்குர்-ஆன் வசனத்தைப் படியுங்கள். இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்தான் என்பது இன்னும் தெளிவாகும். இதைத்தான் நீண்ட ஆய்விற்குப் பிறகு அந்தப் பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இதை முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள். அதுதான் வித்தியாசம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்....

1.அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
2.அல்லாஹ் தேவைகளற்றவன்.
3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4.அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்-ஆன் : அத்தியாயம் : 112.