இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

பிரபஞ்சத்தின் ஆரம்பக் கரு என்ற பேரற்புதம்!


= நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள் (திருக்குர்ஆன் 56:63)

உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை – ஒரு கடுகோ, பூசணி விதையோ, மாங்கொட்டையோ - எடுத்து நோட்டமிடுங்கள். அந்த விதையைப் பொறுத்தே அதிலிருந்து முளைக்கும் தாவரம் அமையும். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை – அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலைதண்டுகாம்பு போன்றவற்றின் இயல்புகள்நிறங்கள்வடிவங்கள்போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  - அவற்றின் DNA வில் பதிவு செய்யப்பட்டுள்ளதை நவீன அறிவியல் நமக்கு அறிவிக்கிறது. இந்த அதிநுட்பம் வாய்ந்த தகவல்களை அவற்றில் பதிவதற்கு  சர்வஞானமும் நுண்ணறிவும் அளவிலா ஆற்றலும் கொண்ட ஒரு படைப்பாளன் தேவை என்பதை பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தருகிறது. அந்த படைப்பாளனையே அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.

 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன்  எத்தகையவன் எனில்,  அவன்தான் படைத்தான்பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்;   மேலும்அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான்.  (திருக்குர்ஆன் 87:1-3)

பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை:

இனி இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒரு நுண்ணிய கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது.  கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான்  'பிக்பாங்க்' (Bigbang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.

பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:

= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை? (திருக்குர்ஆன் 21:30)

பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவனின் கூற்றையும் நாம் இங்கு நினைவு கூருவோம்:

= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)

இல்லாமையில் இருந்து உள்ளமைக்கு வந்த ஆரம்பக் கரு!

ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து பாகங்களின் இயல்பும் மென்பொருளும்  ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும் விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை நாம் அறிகிறோம். இதே போல இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். அதற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து கூறுகளின் பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும் மென்பொருளும் எல்லாம் அந்த ஆரம்பக் கருவில் எழுதப்பட்டு இருக்கவேண்டும். இந்தக் கட்டுரையை நாம் எழுதுவதும் நீங்கள் வாசிப்பதும் எல்லாம் அதில் அடக்கம்! அக்கருவை இல்லாமையில் இருந்து தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.

= படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்களையும்பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

 அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி)முஸ்லிம்திர்மதி.

அற்பமானவனல்ல இறைவன்

இன்னொரு உண்மையும் நாம் இங்கு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்பொருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச் சொல்லும் பாடமாகும்.

= சொல்வீராகஇறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லைஅவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை.அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

ஆம், அந்த இறைவன்தான் உங்கள் மீது அளவிலா அன்பும் நிகரிலா கருணையும் கொண்டு அரவணைப்பவன் எனும்போது உங்களால் கவனமற்று அலட்சியமாக உணர்வற்று இருக்க முடிகிறதா? நீங்களும் அக்கருணையாளனை நேசிக்க வேண்டாமா?

= அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 1:2,3)

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - ஆகஸ்ட் 22 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்திமலர் - ஆகஸ்ட் 22 இதழ்  

பொருளடக்கம்:

வாழ்க்கை என்னவென்று புரிந்தோருக்கு கவலைகளில்லை! -2

வாசகர் எண்ணம் - 3

வாழ்க்கையைப் புரியாதோரின் நிலை கவலைக்கிடமானது! -4

பசியோடு கழித்த பொழுதுகள்! -5 55

தியாகத்தின் ஆண்டுவிழா பக்ரீத்! -6 6

உயிர்பலி பற்றிய ஐயங்களும் தெளிவும்-88 8

புலால் உணவு விஷயத்தில் இறைவழிகாட்டுதல் -10 1

பக்ரீத் பண்டிகையால் நாட்டுக்கு இவ்வளவு நன்மைகளா?-11 12

தட்சணை பெறவேண்டியவள் பெண், ஆணல்ல!-1 115

நாய்வளர்ப்பு- அபாயகரமானது! -17

தீமைகளில் இருந்து நாட்டைக் காப்பதும் வழிபாடே!  -20

ஓரினச்சேர்க்கை எனும் ஆபத்திலிருந்து  நாட்டைக் காப்போம்! -23 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

மதம் மாறித்தான் இஸ்லாத்தை பின்பற்ற முடியுமா?

 #என்_கேள்விக்கென்ன_பதில்?

கேள்வி: நீங்கள் கூறுவதுபோல் உங்கள் மார்க்கத்தின் கொள்கைகள் எனக்குப் பிடித்துள்ளன. அதைப் பின்பற்ற வேண்டுமானால் மதம் மாறித்தான் ஆக வேண்டுமா

புனீத்,  கோரமங்களா, பெங்களூர்

 


பதில்:  முதலாவதாக உங்கள் மார்க்கம் எங்கள் மார்க்கம் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது என்பதை உணருங்கள். நாம் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே தாய் தந்தையில் இருந்து உருவாகி பூமியெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளினான். அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தான் 'இஸ்லாம்' என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது.

#இஸ்லாம்_என்றால்_என்ன?

இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன் வைக்கும் தத்துவம்.

#முஸ்லிம்_என்றால்_யார்?

முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

 முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம, செடி, கொடி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல உங்கள் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது நீங்கள் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் உங்கள் உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  ஆம் இவ்வுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்லிம்களாகவே இருக்கின்றன.

 சரி, ஒரு மனிதன் எப்போது அல்லது எவ்வாறு ஒரு முஸ்லிமாக முடியும்?

 எப்போது மனிதன் படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு அவனது கட்டளைகளைப் புரிந்து கொண்டு அதன்படி வாழத் துவங்குகிறானோ அப்போதுதான் அவன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது படைத்தவனோடு 'இறைவா உன்னை என் வணக்கத்துக்குரியவனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ அனுப்பிய தூதரை ஏற்றுக் கொள்கிறேன். இன்று முதல் உன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறேன்.' என்று ஒரு உடன்படிக்கை செய்து அதன்படி நிலைத்து நிற்கும்போதுதான் ஒரு மனிதன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி வாழத் துவங்க வேண்டும்.

 அது என்ன வாழ்க்கைத் திட்டம் ?

 அதற்கு இஸ்லாத்தின் தூண்கள் என்று கூறப்படும். 

1.         கொள்கைப் பிரகடனம்: 'வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல்.

2.         ஐவேளைத் தொழுகை: இந்த வாழ்க்கைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டுமானால் நாம் படைத்தவனோடு தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் தீமை செய்யத்தூண்டும் மன சஞ்சலங்களும் ஷைத்தானின் ஊசலாட்டங்களும் நம்மை வழி தவறச் செய்யாது. அதற்காக விடியற்காலை, மதியம், மாலை, சூரியனின் மறைவுக்குப் பிறகு, உறங்கும் முன் என ஐவேளைகளில் இறைவன் தன தூதர் மூலமாக கற்றுத் தந்த தொழுகைகளை நிறைவேற்றுதல்.

3.         கட்டாய தருமம்: பொருள் மற்றும் செல்வம் என அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவையே. இவை நம்மை பரிசோதிப்பதற்காகத் தரப்படுபவையே. நமக்கு தரப்படுபவற்றில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஏழைகளுக்கு உரியது. எனவே அவற்றை கட்டாயமாகக் கொடுத்து விட வேண்டும்.

4.         ரம்ஜான் மாத விரதம்: திருக்குர்ஆன் இறங்கிய ரம்ஜான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணுதல், பருகுதல், உடலுறவு இவற்றிலிருந்து தவிர்த்திருத்தல்.

5.         ஹஜ் எனும் புனித யாத்திரை: பொருள் வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்கா நகரிலுள்ள கஅபா என்ற இறையில்லத்தை தரிசிக்கச் செல்லுதல்.

 இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்.  மேற்கூறப்பட்ட கொள்கையும் வாழ்க்கைத்திட்டமும் உங்களுக்குப் பிடித்து இருந்து அதைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் யாருடைய தயவும் உங்களுக்குத் தேவை இல்லை. அது உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் இடையிலானது. நீங்கள் ஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து நீங்கள் முஸ்லிமாகி விட்டீர்கள்.  எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை! உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் அங்கு இல்லை!

 ஆம் இம்மார்க்கத்தை ஏற்க  மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது! நீங்கள் இக்கொள்கைப் பிரகாரம் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ அதுவரை மட்டுமே நீங்கள் முஸ்லிமாக இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! அதே நிலையில் நீங்கள் மரணத்தைத் தழுவுவீர்களானால் உங்களுக்கு சொர்க்கம் உறுதி! இறைவன் தன திருமறையில் கூறுகிறான் :

 'ஓ இறைவிசுவாசிகளே! நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள்! (திருக்குர்ஆன் 3:102)

 =============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

மரணத்தை மறந்து வாழலாகுமா?


  • அலுவல்களிலோ தொழிலிலோ எவ்வளவுதான் ஆழமாக மூழ்கி  இருந்தாலும் அது வரும்போது அதற்கு முன்னுரிமை அளிக்காதவர்களே கிடையாது.
  • எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரெனவும் அது வரும்!
  • சில சமயம் சிலருக்கு சிறு முன்னறிவிப்போடும் வரும்!
  • நாம் பிறந்தது முதல் நம்மோடு ஒட்டிக்கொண்டு வருவது அது!
  • நமது கண்களுக்குப் புலப்படாதது அது!
  • பிறருக்கு அது வரும்போதுதான் அப்படி ஒன்று இருப்பதையே நாம் உணர்கிறோம்!
  • நாம் எவ்வளவு வெறுத்தாலும் நம்மை விட்டுப் பிரியாதது!
  • அது வந்துவிட்டால் நமது உறவினர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார்கள்.
  • நமது செல்வம் நம்மிடம் இருந்து பறிபோய்விடும்.

ஆம் அன்பர்களே அது வேறு ஒன்றும் அல்ல , நமக்கு அனைவருக்குமே கசக்கும் தவிர்க்க முடியாத உண்மை - மரணம் என்ற உண்மை!

அதைப்பற்றி பேசுவது அபசகுனம் என்று பலரும் வெறுப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் மிக மிக முக்கியமாக அனுதினமும் அடிக்கடி நினைவு கூற வேண்டிய ஒரு வாஸ்தவம் அது! அந்த அன்னியோன்யமான உண்மையை எந்த அளவுக்கு மனிதன் மறக்கிறானோ  அந்த அளவுக்கு அதர்மம் தலைவிரித்தாடும், கலவரங்களும் அமைதி இன்மையும் பெருக்கெடுத்தோடும். மனிதன் இந்த மாபெரும் உண்மையை மறந்து போவதால்தான் அவனை அகங்காரமும் தலைக்கனமும் ஆட்டிபபடைக்கின்றன.  எனவேதான் நம்மைப் படைத்தவன் இந்த உண்மையை தன் திருமறையில் அடிக்கடி நினைவூட்டுகிறான்.

4:78 'நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்¢ நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! .....”

நான் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிகமான வாழ்வுதான். மரணம் வந்தால் நான் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டியுள்ளது. என்னைப் படைத்து பரிபாலித்து வருபவன் என்னை மீணடும் உயிர்கொடுத்து எழுப்புவான், அவனுக்கு நான் என் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும், எனது புண்ணியங்கள் பாவங்களை விட அதிகமாக இருந்தால் எனக்கு நிரந்தர சொர்க்க வாழ்வு கிடைக்கும், எனது பாவங்கள் புண்ணியங்களை மிகைத்தால் என் நிரந்தர வாழ்வு நரகத்தில்தான் என்ற உண்மை ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் விதைக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எனது இந்த தற்காலிக வாழ்வு என்பது ஒரு பரீட்சை போன்றது, இதில் நான் என்னைப் படைத்தவன் விரும்பும் செயல்களைச் செய்து அதிகமதிகமாக புண்ணியங்களை சம்பாதிக்க வேண்டும். இறைவன் தடுத்துள்ள மற்றும் வெறுக்கும் காரியங்களைச் செய்து பாவங்களைச் சம்பாதிக்கக் கூடாது என்ற கடமை உணர்வு பிஞ்சு மனங்களில் அவை சிந்திக்கும் பருவம் முதலே ஊட்டப் படவேண்டும்.

மரணம் பற்றிப் பேசுவது அபசகுனம் அல்லது சந்தோஷத்தைக் கெடுக்கும் அல்லது மூட் அவுட் ஆக்கிவிடும் என்றெல்லாம் சொல்லி இந்த மாபெரும் உண்மையை மறக்கச் செய்தோமானால் அது நீதி உணர்வற்ற மற்றும் குற்ற உணர்வில்லாத தலைமுறைகளைத்தான் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் மனிதன் புனிதனாக வளர வேண்டுமானால் அவனுக்கு மரணம் பற்றிய சிந்தனையும் மறுமை வாழ்வு பற்றிய சிந்தனையும் படைத்தவனின் வார்த்தைகளைக் கொண்டு நினைவூட்ட வேண்டும். இதோ இறைவனின் இறுதி வேதத்திலிருந்து சில வரிகள்:

21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢ பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

62:8 'நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்¢ பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

63:10 உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாழ்க்கை என்ற  பரீட்சையின் இறுதி வெற்றி சொர்க்கத்தை அடைவதிலேதான் உள்ளது என்ற உணர்வு ஊட்டப்ப்படும்போது மனிதன் கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்க்கும் தியாகங்களை மேற்கொள்வதற்கும் தயாராகிறான்.

3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

இம்மரணம் பற்றியோ மறுமை பற்றியோ கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். மாறாக பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரச் சொல்கிறான் இறைவன். மரணம் என்பது நாம் அன்றாடம் அனுபவித்து வரும் ஒன்று. மரணத்தின்போது மனிதனின் ஆத்மா  கைப்பற்றப்படுவது போலவே தினமும் நாம் உறங்கும்போது நமது ஆத்மா இறைவனால் கைப்பற்றப்ப்டுகிறது என்பதுதான் உண்மை. எனவேதான் நாம் உறங்கும்போது நம்மால் நம்மைச்சுற்றி நடப்பவைகளைக் குறித்து அறிய முடிவதில்லை. கீழ்கண்ட இறைவரிகள் இதை உணர்த்துகின்றன:

39:42 அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்¢ மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

ஆம் அன்பர்களே, அனுதினமும் நமது உயிர்கள் இறைவன்பால் போய்வருகின்றன. ஒருநாள் போன உயிர் திரும்பாமலும் போகலாம்! எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) இரவில் படுக்கைக்கு செல்லும்போது கீழ்கண்டவாறு பிரார்த்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்:

இறைவா, உன் பெயரால் நான் மரணிக்கவும் வாழவும் செய்கிறேன்

அதேபோல் காலையில் கண்விழித்தால் போன உயிர் திரும்பிக் கிடைத்ததற்காக நன்றி சொல்லக் கற்றுத் தருகிறார்கள் நபிகளார்:

என்னை மரணிக்கச் செய்த பின் உயிர் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அவனிடமே நமது மீட்சியும் உள்ளது.      

மரணத்திற்க்குப் பின் இறைவனிடம் மீட்டப்படுவது பற்றி சந்தேகத்திலிருப்போரை  அவர்களின் சுற்றும்முற்றும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துப் பாடம் பெறச் சொல்கிறான் இறைவன்

7:185 வானங்கள் பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?

43:11 அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர் அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.

23:80 அவனே உயிர் கொடுக்கிறான்¢ இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்¢ மற்றும் இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!


வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஓரினச்சேர்க்கை எனும் பேராபத்து!


மனித இயற்கைக்கு மாறான ஓரினச்சேர்க்கை எனும் ஈனச்செயல்  ஒரு பேராபத்துதான் என்பதை இன்று வந்துகொண்டிருக்கும் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன..

குரங்குக் காய்ச்சலும் ஓரினச்சேர்க்கையும்: 

# குரங்கம்மை தொற்று உள்ளவர்களில் குறைந்தது 98% பேர் ஓரின சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள் என்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (New England Journal of Medicine ) சமீபத்திய இதழில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. (news18.com)

(https://www.news18.com/news/india/98-patients-with-monkeypox-infection-were-gay-or-bisexual-men-new-england-journal-of-medicine-study-5606767.html)

# உலக சுகாதார அமைப்பின் (WHO ) கூற்றுப்படி, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் தற்போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

# WHO அதிகாரி ரோசாமுண்ட் லூயிஸின் (Rosamund Lewis) கூற்றுப்படி, சுமார் 99% வழக்குகள் ஆண்கள் மத்தியில் உள்ளன, மேலும் அந்த நோயாளிகளில் குறைந்தது 95% மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள். (செய்தி ஆதாரம்:cnbc.com)

https://www.cnbc.com/2022/07/27/monkeypox-who-recommends-gay-bisexual-men-limit-sexual-partners-to-reduce-spread.html

அரசும் நீதித்துறையும் ஒத்துழைக்கும் விபரீதம்; 

நம் தாயகத்தைப் பீடித்துள்ள ஒரு பேராபத்து இது! அண்மையில் விபச்சாரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஓரினச்சேர்க்கைக்கும் சட்ட ரீதியாக அங்கீகாரங்களை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இப்போக்கு நீடிக்குமானால் திருட்டும் கொலையும் எல்லாம் சட்ட அங்கீகாரம் பெறும் வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. சரி எது தவறு எது அல்லது பாவம் எது புண்ணியம் எது என்பதை அற்ப அறிவு கொண்ட மனிதர்கள் தாங்களாகவே தீர்மானித்து தீர்ப்புகள் வழங்கும்போது ஏற்படும் விபரீதங்களைத்தான் நாமின்று கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

சமீபத்தில் ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஈனச்செயலை மறைமுகமாக செய்துகொண்டு இருந்தவர்கள் தங்கள் வெட்கத்தை விட்டு அவர்களின் ஊரறிய பேரணி நடத்தியதை சென்னையில் கண்டோம். அதைத் தொடர்ந்து ஊடகங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ஈனச்செயல் புரிபவர்களை பேட்டி கண்டு செய்திகளாக வெளியிட்டு திட்டமிட்டு பரப்பி வருவதையும் காண்கிறோம். என்னவொரு சோகம்!

இந்த போக்கு நீடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் சிந்திப்பது இல்லையா? சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையே தகர்த்தெறியும் இந்த பேராபத்தை தடுக்க மக்கள் திரண்டெழ வேண்டாமா?

தொடர் விபரீதங்கள்:

நாளை பள்ளிக் கூடங்களில் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மிகப்பெரும் கேள்விக் குறியாக ஆகிவிடும். பெண் குழந்தைகள் விஷயத்தில் எதற்காக பயப்படுகிறோமோ அது ஆண்குழந்தை விஷயத்திலும் ஆகிவிடும். இந்த ஈனச்செயலை செய்வதில் தவறில்லை என்று பரப்புரை நடந்தால் ஒரே பாலினக் குழந்தைகளையும் சரி இளைஞர்களையும் சரி அருகருகே அமர வைப்பதும்கூட பாதுகாப்பற்றதாக மாறிவிடும். இனி அந்த வகுப்பறைகளில் பாடம் நடக்குமா? தொழிற் சாலைகளில் தொழில் நடக்குமா? இன்னும் சங்கிலி போல பல விபரீதங்கள் அங்கு தொடரும். 

இறைவனின் எச்சரிக்கை:

மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்களோ இல்லையோ, சமூக நலன் கருதி இந்த செயலை செய்பவர்களையும் இதை ஊக்குவிப்பவர்களையும் எச்சரிப்பது நம் மனிதநேயக் கடமையாகும்.

எனவே சம்பந்தப்பட்டவர்களே தெரிந்து கொள்ளுங்கள்..

இந்த உலகுக்கு சொந்தக்காரனான இறைவனின் பார்வையில் ஓரினச்சேர்க்கை என்பது கடுமையான குற்றமாகும். இதைச் செய்வோர் பலரும் இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்தெறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் கண்களே cctv போல செயல்படுகிறது என்பதை மறவாதீர்கள். .

அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

=மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் ( தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)


மனித மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும். விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)

= ...அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (திருக்குர்ஆன் 18:29)


எந்த உடலை இறைவன் விதித்த வரம்புகளை மீறி அனுபவித்தார்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நாளை நடக்கவிருக்கும் உண்மை! இது வேண்டுமா? இல்லை சொர்க்க வாழ்வு வேண்டுமா என்பதை சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
====================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?