இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 25 டிசம்பர், 2015
செவ்வாய், 1 டிசம்பர், 2015
ஞானி லுக்மான் தன் மகனுக்கு செய்த உபதேசம்
லுக்மான் என்ற ஒரு இறையச்சம் கொண்ட ஞானி தன் மகனுக்கு செய்த உபதேசத்தை இறைவன் தன் திருமறையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பாடம் பெறுவதற்காக வேண்டி எடுத்துரைக்கிறான்:
31:13. இன்னும் லுஃக்மான் தம்
புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக
இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம்
செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைக் குறிக்கும் அரபுச்சொல்
அல்லாஹ் என்பதாகும். ‘வணக்கத்திற்குத்
தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது இதன் பொருளாகும்.)
இவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று மக்களுக்கு
போதிப்பது பெற்றோரின் முதலாவதும் முக்கியமானதும் ஆன கடமையாகும். படைப்பினங்களைக்
காட்டி அவற்றைப் படைத்தவனை பகுத்தறிவு பூர்வமாக அறிமுகப்படுத்தி அவனோடு நேரடித் தொடர்பை
ஏற்படுத்துவது ஓர் அறிவார்ந்த செயலாகும். அந்த இறைவன் நமக்கு வழங்கிவரும்
அருட்கொடைகளை நினைவூட்டி அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி உள்ளவனும் நம்
பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவனும் ஆவான் என்பதை குழந்தைகளுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர இந்த போதனை
மிகவும் அவசியமானதாகும். மாறாக முன்னோர்கள் நமக்குக் கற்பித்துவிட்டுச்
சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இறைவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றைக் கடவுள்
என்று கற்பிப்பதும் அவற்றை வணங்க அவர்களை நிர்பந்திப்பதும் பற்பல குழப்பங்களுக்கு
வித்திடும் செயலாகும்.
சர்வ ஞானமும் சர்வவல்லமையும் கொண்ட இறைவனுக்கு ஒப்பாக அவன் அல்லாத
பொருட்களை சித்தரிப்பதால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இச்செயல் குழந்தைகளை நாளடைவில்
நாத்திகத்திற்குக் கொண்டு செல்கிறது. மேலும் அதனால் இறைவனைப் பற்றிய மரியாதை
உணர்வு (seriousness) அகன்றுபோய் குழந்தைகள் உள்ளங்களில் இறையச்சமே இல்லாமல் போய்
விடுகிறது. அதன் காரணமாக பாவங்கள் செய்தால் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாருமில்லை
என்ற உணர்வு குழந்தைகளை ஆட்கொள்கிறது. தனிநபர் வாழ்விலும் சமூகத்திலும் பாவங்கள்
மலிந்து பெருக இதுவே மூலகாரணம் ஆகும். ஆளுக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளை
வெவ்வேறு விதமாக சித்தரித்து அவற்றை வணங்கும்போது மனித குலத்திற்கு உள்ளும் பல பிரிவுகள் உண்டாகி ஒருவரையொருவர்
அடித்துக்கொள்ளும் நிலையும் இன்ன பிற குழப்பங்களும் உருவாகின்றன. இடைத்தரகர்கள்
மூட நம்பிக்கைகளைப் புகுத்தி கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டவும் இச்செயல்
காரணமாகிறது.
இறையச்சம் என்ற
பொறுப்புணர்வு ஊட்டப்படாத பிள்ளைகள் இரவுபகல் பாராமல் உழைத்து தங்களை வளர்த்த
பெற்றோர்களை நாளை சற்றும் மதிக்காத அவல நிலை உண்டாகிறது. வயதுக்கு வந்ததும் அந்நியர்களோடு
ஓடிப்போவதையும், இவர்களது வயதான காலத்தில் இவர்களைப்
பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும், (வட
இந்தியாவில்) காசியில் கொண்டுபோய் விட்டு விடுவதையும், கருணைக்
கொலை என்ற பெயரில் கொன்று விடுவதையும் அன்றாட நிகழ்வுகளாகக் கண்டு வருகிறோம். இறைவனைப்பற்றியும்
மறுமையைப் பற்றியும் முறைப்படி இவர்களை கற்பிக்காமல் வளர்த்ததே இவற்றுக்கெல்லாம்
காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவேதான் இறைவன் மேற்படி வசனத்தில் “நிச்சயமாக இணை வைத்தல் மிகப்
பெரும் அநியாயமாகும்” என்று கூறுகிறான். பூமியில் அதர்மம் பரவுவதற்குக் காரணமான
இப்பாவத்திற்கான தண்டனை பற்றி பிறிதொரு வசனத்தில் இவ்வாறு எச்சரிக்கிறான்:
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக
ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த
உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு அடுத்தபடியாக
ஒவ்வொரு மனிதனும் பேணவேண்டிய முக்கிய கடமை தன் பெற்றோருக்கு நன்றி செலுத்துவதாகும்.
அவர்களுக்குக் கீழ்படிதலும் அவர்களின் நலன் பேணுவதும் மக்களின் பொறுப்பாகும்.
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும்
நலம் செய்ய வேண்டியது) பற்றி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை
சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு
வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும்
உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய
மீளுதல் இருக்கிறது.”
ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இறைவன் அல்லாத பொருட்களை வணங்கும்
செயலை அவர்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும்.
இறுதியாக பெற்றோராயினும் சரி பிள்ளைகள் ஆயினும் சரி இந்தத் தற்காலிக
உலக வாழ்வு எனும் பரீட்சையை முடித்துக்கொண்டு இறுதித்தீர்ப்புக்காக அவனிடமே திரும்ப
வேண்டியுள்ளது என்பதை நினைவூட்டுகிறான் இறைவன்:
31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்)
பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால்
அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக
வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக -
பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள்
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்
வியாழன், 26 நவம்பர், 2015
சமூகப் புரட்சிகளுக்கு உயிர்நாடி மந்திரம்
பதினான்கு நூற்றாண்டுகளாக பாரெங்கும் ஊரெங்கும் சமூகப் புரட்சிகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒப்பற்ற சாதனைக்கு சொந்தக்காரர் மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்).
அவர் கொண்டுவந்த திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் எங்கெல்லாம் சென்றடைகிறதோ அந்த இடங்களிலெல்லாம்
= மனித உரிமை மீட்பு,
= இனவெறி ஒழிப்பு,
= ஜாதி ஒழிப்பு,
= நிறவெறி ஒழிப்பு,
= மனித சமத்துவம் நிலைநாட்டல்,
= மனித சகோதரத்துவம் நிலைநாட்டல்,
= பெண்ணுரிமைகள் மீட்பு,
= பெண்சிசுக்கொலை ஒழிப்பு,
= வரதட்சணை ஒழிப்பு,
= பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு
= விபச்சார ஒழிப்பு
= குடும்ப அமைப்பின் பாதுகாப்பு,
= குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம்
= தனிநபர் நல்லொழுக்கம்,
= மது, போதை தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு
= வட்டி ஒழிப்பு
= வறுமை ஒழிப்பு,
= வழிபாட்டு உரிமை மீட்பு
= இடைத்தரகர் ஒழிப்பு
= மூடநம்பிக்கை ஒழிப்பு
= ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு,
= ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு,
போன்ற பற்பல சமூகப் புரட்சிகளை உண்டாக்காமல் இருப்பதில்லை. மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் புரட்சிகள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை.
நபிகளாரைப் பின்பற்றுவோரின் சிறப்பு பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:
"அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்." ( திருக்குர்ஆன் 7:157.
நபிகள் நாயகம் உயிரோடு இருக்கும்போதும் சரி இன்றும் சரி, அவர் நடத்திக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சிகளுக்கு ஆணிவேராக இருப்பது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற அவரது ஓரிறைக் கொள்கை முழக்கமே.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் யாரும் இல்லை என்பதே இதன் பொருள்.
‘அல்லாஹ்’ என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல்லாகும். சமூகத்தில் சீர்திருத்தம் ஏற்படுவதற்கும் ஒழுக்கம், அமைதி போன்றவை திரும்புவதற்கும் இதுவே உயிர்நாடி என்பதை சற்று சிந்தித்தால் உணரலாம்.
நபிகளார் கூறினார்கள்: “லா இலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்கள், வெற்றி அடையுங்கள்” என்று.
இவ்வுலகில்
பாவங்களும் தீமைகளும் அதிகரிப்பதற்கும் அராஜகங்களும் அட்டூழியங்களும் ஆதிக்கம்
செலுத்துவதற்கும் முக்கியக் காரணம் தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற
உணர்வுதான். தனிநபர்களில் இருந்து அரசாள்வோர் இதுவே நியதி.
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக,
நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும்.
அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்,
இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என்
நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம்
நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் - என்ற
பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப்
பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். கடவுள் அல்லாதவற்றை எல்லாம் காட்டி அவற்றை
கடவுள் என்று கற்பிக்கும் போது இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு அகன்று போவதால் மக்களிடம்
இறையச்சமே உண்டாவதில்லை.
இவ்வாறு இறையச்சம் இல்லாத தலைமுறைகள்
உருவாகும்போது பாவம் செய்ய அஞ்சாத சமூகம் உருவெடுத்து அங்கு அமைதியின்மையும்
கலவரங்களும் மேலோங்குகின்றன. இவை ஒருபுறம் நாட்டின் ஒழுக்க வீழ்ச்சிக்கு
காரணமாகும்போது மறுபுறம் தவறான கடவுள் கொள்கை நாட்டில் மிகப்பெரும் இழப்புகளையும்
விபரீதங்களையும் ஏற்படுத்துகிறது.கடவுளின் இலக்கணங்கள்
திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கடவுளின் முக்கிய
இலக்கணங்களை கூறுகிறது:
= 112: 1-4. நபியே நீர் சொல்வீராக: அல்லாஹ் ஒரே ஒருவனே. அல்லாஹ் தேவைகள் ஏதும்
இல்லாதவன். அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை.
அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை
= 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி
உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக
நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை
செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்)
கேட்கட்டும்;, என்னை
நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்"" என்று கூறுவீராக.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு
தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது ஏகனாகிய இறைவன் தேவைகள் ஏதும்
இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து
இராதவன். தாய் தந்தை, மனைவி, மக்கள் என எந்த உறவுகளும் இல்லாத தனித்தவன்.
தன்னிகரற்றவன். அவனை எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கலாம். அவனிடம்
நேரடியாக நம் தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என்ற கருத்துக்களைத் தாங்கி
நிற்கின்றன மேற்படி வசனங்கள். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின்
உண்மை இலக்கணங்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
பிற ஆபத்துகள்:
இவ்விலக்கணங்களை ஆராயாமல் இறைவன்
அல்லாதவற்றையெல்லாம் கடவுள் என்று நம்பி வழிபடும்போது எளிமையான வழிபாடு
வியாபாரமாக்கப் படுகிறது. படைத்த இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை
இல்லை. எந்த தரகர்களும் தேவை இல்லை. எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு
இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது
இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது மாபெரும் வியாபாரமாக்கப்படுகிறது. பாமரர்களின் சம்பாத்தியங்களும் செல்வங்களும் இடைத்தரகர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன
ஒரே இறைவனுக்கு
பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும்
பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை
ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற
கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின்
இறுதித் தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம் உலகெங்கும்
செய்து வருகிறது.
= கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத்
தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத்தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள்
சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம்
வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின்
சம்பாத்தியங்களையும் செல்வங்களையும் கொள்ளை அடிக்கிறார்கள்.
= ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும்
நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள்
ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே
குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே
சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மக்காவில் மறு அறிமுகம் செய்தார்கள்.செவ்வாய், 24 நவம்பர், 2015
சனி, 7 நவம்பர், 2015
கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்
நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும்
இந்த கடிதத்தின் சுருக்கம்:
முஹம்மது நபி(ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது ஒரு சான்று.
பல
ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள்,
St.Catherine (Egypt) நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சில
பதிவுகள், இஸ்லாமிய நீதிபதிகளால் வரலாற்று
நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
துருக்கிய இஸ்லாமிய படைகள், எகிப்தை வெற்றிக்கொண்டபோது, அங்கே உள்ள மடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்புல் அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனுடைய மூல பிரதி, இன்றும் இஸ்தான்புல் அருங்காட்சியத்தில் உள்ளது.
கடிதத்தின் சுருக்கம்:

அப்துல்லாஹ்வின்
மகன் முஹம்மதிடமிருந்து, அருகில், மேலும் தொலைவில் உள்ள கிருத்துவர்களுக்கு இந்த உடன்படிக்கையின் மூலம் சொல்வது என்னவென்றால், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்.
நிச்சயமாக, நான், இறை அடியார்கள், என் உதவியாளர்கள் மற்றும் என்னை பின்பற்றுபவர்கள், கிருத்துவர்களை பாதுகாப்போம், ஏனென்றால் அவர்கள் என் குடிமக்கள்; மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் விரும்பாததை விட்டும் நான் தடுத்துக்கொள்வேன் .
அவர்களின் மீது எந்த கட்டாயமும் இல்லை. அவர்களின் நீதிபதிகள், பொறுப்பிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் . துறவிகள் மடத்திலிருந்து நீக்கப்படமாட்டார்கள். கிறிஸ்துவர்களின் ஆலயங்களை இடிப்பதற்கோ, சேதப்படுத்துவதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை. ஆலயங்களில் இருந்து எதையும் முஸ்லிம்கள் எடுத்துச் செல்லக் கூடாது, யாராவது மீறி செய்தால், அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார். உண்மையிலேயே, கிருத்துவர்கள் என்னுடைய நண்பர்கள், மேலும் அவர்கள் வெறுப்பதிலிருந்து விலகிக்கொள்ள என்னுடைய அனுமதிப் பட்டயத்தை பெற்றுள்ளனர்.
அவர்களை யாரும் நாட்டைத் துறந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள, முஸ்லிம்கள்தான் போரிட வேண்டுமே தவிர, கிறிஸ்துவர்களை தங்களோடு சேர்ந்து போரிடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் அவளை திருமணம் செய்யக்கூடாது, அவள் தன்னுடைய ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை தடுக்கக்கூடாது.
அவர்களுடைய ஆலயங்கள் கண்ணியப்ப்படுத்தப்படவேண்டும். அவைகள் பழுது பார்க்கப்படுவதை விட்டும் தடுக்கக்கூடாது. இறுதி நாள் வரை உள்ள முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையை மீறக்கூடாது.
முழு விபரத்தையும் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://newsrescue.com/letter-to-all-christians-from-prophet-muhammad-sa/#axzz3eOJkMtJF
நன்றி: நாடோடி தமிழன்
நன்றி: நாடோடி தமிழன்
http://quranmalar.blogspot.com/2014/12/1_26.html
ஏசுநாதர் பற்றிய இஸ்லாமிய அறிமுகம்
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்...
ஏசுநாதர் பற்றிய இஸ்லாமிய அறிமுகம்
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
= இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
-----------------------------------------------
= தனக்குப்பின் இவ்வுலகுக்கு தூதராக வர இருந்த முஹம்மது நபியவர்கள் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் செய்துள்ளதை பைபிளிலும் குர்ஆனிலும் காணமுடிகிறது.
---------------------------------------------
= வாழ்நாள் நெடுகிலும் – அதாவது பிறப்பு முதல் அவரது விண்ணேற்றம் நடந்ததுவரை – இயேசுவின் மூலம் பற்பல அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக்காட்டியுள்ளான். இன்னும் பல அவரது இரண்டாம் வருகையின்போது நிகழவுள்ளன.
--------------------------------------------
= இன்று இயேசுநாதர் பற்றிய சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனையும் சேர்த்தே அணுக வேண்டும். ஏன் என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராயும்போது தெளிவாகிறது:
அ) திருக்குர்ஆன் இறங்கிய சூழலும் பாதுகாக்கப் படுவதும்
--------------------------------------
ஆ) முந்தைய வேதங்களோடு ஒப்பிடும்போது எவ்வாறு திருக்குர்ஆன் இன்னும் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது
---------------------------------
இ) அது எல்லாவித முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது
--------------------------------------
ஈ) அற்புதகரமாக அது தாங்கி நிற்கும்.அறிவியல் உண்மைகள்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_5810.html
-----------------------------------------
-----------------------------------------
= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்...
-----------------------------------------
= எல்லா இறைத்தூதர்களும் போதித்தது போன்றே இயேசு நாதரும் முஹம்மது நபிகளும் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதோடு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது – அதாவது அவனுக்கு இணைவைத்தலை - பெரும்பாவம் என்றும் கண்டித்தனர்.
-----------------------------------
= தனக்குப்பின் வரவிருக்கிற தேற்றவாளர் என்று ஏசுவால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஹம்மது நபியவர்களை இன்று நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? முந்தைய தூதர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு உள்ள வித்தியாசங்கள் இவை
அ). தேற்றவாளர் முஹம்மது நபிகள் அவருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ மக்களுக்கோ அனுப்பப்பட்டவர் அல்ல, மாறாக அனைத்துலகுக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதராக இருக்கிறார்
ஆ) அவர் மூலம் அனுப்பப்பட்ட வேதம் குர்ஆனும் நபிமொழிகளும் இன்றளவும் சிதையாமல் பாதுகாக்கப்படுவது.
இ) உலகெங்கும் கால்வாசி மக்களுக்கு மேல் அவரை நேசிப்பவர்கள் இருந்தும் உலகில் எங்குமே அவரது சிலையோ உருவப்படமோ காணப்படாதது
ஈ) மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் பின்பற்றத்தக்கதாக அவரது வாழ்க்கை முன்மாதிரி காணக் கிடைப்பது.
இவை அனைத்தும் அவரே இன்று மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைவர் என்பதை எடுத்துக்கூறுவதாக உள்ளது.
= ஆண்துணையின்றி அற்புதமான முறையில் இயேசுவைக் கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றெடுத்ததும் மக்களால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டார்கள் அன்னை மரியாள். அப்போது அற்புதமான முறையில் குழந்தை இயேசு மக்கள் முன் பேசியதையும் அதன் காரணமாக அன்னை மரியாள் கல்லெறி தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டதையும் திருக்குர்ஆன் துணை கொண்டு தெளிவான உண்மைகளை அறியலாம்.
புதன், 4 நவம்பர், 2015
பர்தா பற்றி அமெரிக்கப் பெண்கள்
Oprah Winfrey talks to Muslims on her show.
Posted by American Muslims on Sunday, November 1, 2015
பர்தா என்பது பெண்ணடிமைத் தனமா?
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் அமெரிக்கப் பெண்கள் பதில் கூறுவதைக் கேளுங்கள்....
" இதை எங்களின் சீருடையாகக் காணுங்கள். ஒரு போலீஸ் காரரோ இராணுவ வீரரோ சமூகம் அவர்களை அவர்களின் பொறுப்பை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக சீருடை அணிந்து செல்கிறார்கள். அதேபோல் நாங்கள் கண்ணியமானவர்கள் என்று மக்களுக்கு அறிவிக்கவே இந்த சீருடை! நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே வரும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வைக்கோ தூண்டுதல்களுக்கோ இரையாக மாட்டோம், எங்களுக்கு அதில் விருப்பமும் இல்லை என்ற வலுவான செய்தியைத் தாங்கி நிற்கிறது இந்த சீருடை."
‘நபியே! நீர்உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கை கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். (திருக்குர்ஆன் 33:59)
http://quranmalar.blogspot.in/2014/07/blog-post.html
பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே ஹிஜாப்!

http://quranmalar.blogspot.com/2014/07/blog-post.html
பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே ஹிஜாப்! http://quranmalar.blogspot.com/2014/07/blog-post.html
சனி, 31 அக்டோபர், 2015
" நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் ....-இயேசு
" நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்" என்று ஏசுநாதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியது போன்றே ஒவ்வொரு காலத்திலும் வந்த இறைத்தூதர்கள் அவரவர் காலகட்டத்து மக்களுக்கு கூறியிருந்ததை நாம் காணலாம்.
ஒவ்வொரு இறைத்தூதரும் தத்தமது மக்களிடம் கீழ்கண்டவாறு கூறினார்கள்:
"மக்களே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். நான் இறைவனிடமிருந்து கொண்டுவந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள், அதன் காரணமாக மறுமையில் மோட்சம் அடைவீர்கள். "
(அந்த கட்டுப்பட்டு வாழ்தலே அரபு மொழியில் இஸ்லாம் என்று அழைக்கப் படுகிறது).
உதாரணமாக
= நூஹ் (Noah) கூறினார் : 26:107. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன்.26:108. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்' என்று பொருள்)
= இறைத்தூதர் ஹூத் கூறினார்: 26:125. நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன். 26:126. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
= சமூத் கூட்டத்தாரின் பால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஸாலிஹ் கூறினார்: 26:143. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.26:144. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
= இஸ்ராயீலின் சந்ததியினர்பால் அனுப்பப்பட்ட ஈசா நபியும் - அதாவது ஏசு நாதரும்- இது போன்றே கூறினார்: 61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் -அதாவது ஏசுநாதர் முன்னறிவிப்பு செய்த - முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
7:158. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் -
முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கொண்டு வரப்பட்ட இஸ்லாம் மார்க்கம், அவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களின் தூதுத்துவத்தையும், அடிப்படை கொள்கைகளையும் உறுதிசெய்கிறது.
“நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான ்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்:
“நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே –
இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது –
தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.” (42:13)
ஒவ்வொரு இறைத்தூதரும் தத்தமது மக்களிடம் கீழ்கண்டவாறு கூறினார்கள்:
"மக்களே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள். நான் இறைவனிடமிருந்து கொண்டுவந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள், அதன் காரணமாக மறுமையில் மோட்சம் அடைவீர்கள். "
(அந்த கட்டுப்பட்டு வாழ்தலே அரபு மொழியில் இஸ்லாம் என்று அழைக்கப் படுகிறது).
உதாரணமாக
= நூஹ் (Noah) கூறினார் : 26:107. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன்.26:108. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்' என்று பொருள்)
= இறைத்தூதர் ஹூத் கூறினார்: 26:125. நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன். 26:126. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
= சமூத் கூட்டத்தாரின் பால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஸாலிஹ் கூறினார்: 26:143. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.26:144. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
= இஸ்ராயீலின் சந்ததியினர்பால் அனுப்பப்பட்ட ஈசா நபியும் - அதாவது ஏசு நாதரும்- இது போன்றே கூறினார்: 61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் -அதாவது ஏசுநாதர் முன்னறிவிப்பு செய்த - முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
7:158. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் -
முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கொண்டு வரப்பட்ட இஸ்லாம் மார்க்கம், அவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களின் தூதுத்துவத்தையும், அடிப்படை கொள்கைகளையும் உறுதிசெய்கிறது.
“நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான
“நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே –
இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது –
தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.” (42:13)
செவ்வாய், 20 அக்டோபர், 2015
வியாழன், 8 அக்டோபர், 2015
ஒரு ஆங்கிலத் தாய் மனம் திறந்து பேசுகிறார்..
The changing world...
ஒரு ஆங்கிலத் தாய் மனம் திறந்து பேசுகிறார்....நான் இசுலாத்தை தழுவப் போகிறேன் என்ற போது என் குழந்தைகள் கேட்ட கேள்விகள்,.."இசுலாத்தை ஏற்ற பின்னும் எங்கள் மம்மியாக தொடர்வீர்களா?""கண்டிப்பாக என் கண்ணுகளே""மது அருந்தும் பழக்கத்தை தொடர்வீர்களா?""இசுலாத்தில் அது முடியாது""உங்கள் மாரை திறந்தபடியே உடை அணிந்து செல்வீர்களா?""அதுவும் முடியாது.. நான் இனி முழு உடை அணிந்தே செல்வேன்"என்று நான் சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினார்கள்... "அப்படி யானால் நாங்களும் இஸ்லாத்தை நேசிக்கிறோம்!"http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
Posted by Mohamed Kasim on Thursday, October 8, 2015
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
சனி, 19 செப்டம்பர், 2015
இறைவனை ஏமாற்ற முடியுமா?
பொதுவாக நம் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருக்கும்போது நமக்கு உண்மை இறைவனைப்
பற்றிய நினைப்பு வருவதில்லை. அவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு
நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம். நாட்டு வழக்கம்
என்றும் முன்னோரின் வழக்கம் என்றெல்லாம் சொல்லி நம்மில் பலரும் இறைவன் அல்லாதவற்றை
எல்லாம் வணங்கி வரும் பழக்கம் உடையவர்களாக உள்ளோம். இதன் விபரீதத்தை உணராமலேயே
காலத்தைப் போக்கியவர்களாக வாழ்ந்து கொண்டு வருகிறோம். இது பற்றி சிந்திக்க நாம்
நேரமும் ஒதுக்குவதில்லை.
ஆனால் திடீரென்று ஒரு நோயின்
காரணமாகவோ விபத்தின் காரணமாகவோ அல்லது வியாபாரம் அல்லது தொழிலில் ஏற்படும் திடீர் இழப்புகளின் காரணமாகவோ
வாழ்க்கை தடம்புரளும்போது நிராசை அடைகிறோம். யாராவது உதவ மாட்டார்களா என்று
ஏங்குகிறோம். அப்போதும் இடைத்தரகர்களை அணுகி மீணடும் இறைவன் அல்லாதவற்றின் முன்னால் சென்று அதிகம்
அதிகமாகக் காணிக்கைகளும் நேர்ச்சைகளும் செய்து மன்றாடுகிறோம். உண்மை இறைவன்பால்
ஏனோ திரும்ப மறுக்கிறோம். ஆனால் உண்மை இறைவனோ நம்மைத் தன்பால் அழைக்கிறான். அதாவது நம்மை அழகிய
உருவத்தில் செம்மையாக வடிவமைத்து நமக்கு வேண்டிய தேவைகளை எல்லாம் குறைவின்றி
வழங்கி பரிபாலித்து வரும் அந்தக் கருணையாளன் தன் அருள்மறையில் கேட்கிறான்:
82:6-8 . மனிதனே!
அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? அவனே
உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான
உறுப்புகளை அளித்தான்.மேலும், தான் நாடிய உருவத்தில்
உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.
அவன் நம்மை நேரடியாக அவனிடமே அழைத்துப் பிரார்த்திக்குமாறு பணிக்கிறான்.
2:186 (நபியே!) என் அடியார்கள்
என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்
பிரார்த்தனை
செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள்
என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது
அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக.
நாம் அவனுக்கு நன்றி கூறி அவனை
நேரடியாக வணங்குவதற்கு பதிலாக அவனது படைப்பினங்களுக்கு தலைசாய்ப்பதும் அவன் அல்லாத
எவற்றையும் கடவுள் என்று அழைப்பதும் இடைத்தரகர்களை நாடுவதும் அவனது கட்டளைக்கு
மாறு செய்யும் செயலாகும். அது சர்வவல்லமை மிக்க அவனை சக்தியற்ற படைப்பினங்களுக்கு
ஒப்பாக்கி சிறுமைப்படுத்தும் செயலாகும். இவ்வாறு இறைவனைப்பற்றிய மதிப்பை
(seriousness) சிதைத்து விடுவதால் மனித உள்ளங்களில் இறையச்சம் அகன்றுபோய் சமூகத்தில்
பாவங்கள் பெருக இது காரணமாகிறது.
பல பாவங்களுக்கு இது தூண்டுகோலாக இருப்பதாலும், கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்ட வழி வகுப்பதாலும் மனிதகுலத்தில் ஜாதி, மதம் என்று பிளவுகள் உண்டாகக் காரணமாவதாலும் இப்பாவம் பாவங்களிலேல்லாம்
மிகப்பெரிய பாவமாகும். இதை மட்டும் இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை என்கிறது
திருக்குர்ஆன்.
போலியான கடவுள்களை வணங்குவோரின் இரட்டை
நிலையை இறைவன் கடலில் பயணம் செய்யும் மனிதர்களின் உதாரணத்தின் மூலம்
விளக்குகிறான். :
10:22. தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச்
செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு
மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான
எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப்
பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால்
சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (மார்க்கத்தை) அல்லாஹ்வுக்கு மட்டுமே
உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக
நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம்
இறைஞ்சுகின்றார்கள்.
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத்
தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
அப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான ஒரு
சூழ்நிலை வரும்போது மக்கள் அன்றாடம் வணங்கி வந்த தெய்வங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.
கரையில் அவர்கள் வணங்கிவந்த படங்களையும் உருவங்களையும் சமாதிகளையும் மனக்கண்முன்
கொண்டுவந்து 'இன்னவரே எங்களைக் காப்பாற்று' என்று மன்றாட முனைவதில்லை. இன்று உண்மை இறைவன் எவனோ அவன் மட்டுமே நம்மைக்
காப்பாற்ற முடியும் எனபதை உளமார உணர்கிறார்கள்.
தூய்மையான உள்ளத்தோடு படைத்தவனை அழைத்துப் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனைகளுக்கு
பதிலளிக்கவும் அவனால் மட்டுமே முடியும் என்பதையும் கரையிலும் கடலிலும் எங்கும்
வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த இறைவன் அவன்மட்டுமே என்பதையும் உளமார அப்போது உணர்கிறார்கள்.
ஆனால் அந்த இறைவன் அவர்களின் மன்றாட்டத்தை ஏற்றுக் கொண்டு அவர்களைக்
காப்பற்றினாலோ கரைசேர்ந்த பிறகு நன்றி மறந்துவிடுகிறார்கள். மீணடும் பழையபடியே
போலி தெய்வங்கள்பால் திரும்பி விடுகிறார்கள். இப்போக்கை இறைவன் தோலுரித்துக்
காட்டுகிறான்:
17:67 இன்னும் கடலில் உங்களை ஏதேனும் சங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து
சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் –இன்னும் மனிதன் மகா நன்றி
மறப்பவனாகவே இருக்கின்றான்.
ஆனால் இறைவனின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து விட்டதாகவும் அவனை ஏமாற்றி
விட்டதாகவும் அவர்கள் கருத வேண்டாம் என்று கூறுகிறான் இறைவன்:
17:68 .(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை
பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றொ அல்லது உங்கள் மீது கல்மாரியை
அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப்
பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
17:69 அல்லது அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக
உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா?
(அப்படி நேர்ந்தால்
ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்)
எவரையும் காணமாட்டீர்கள்.
உங்களைப் பரீட்சிப்பதற்காக ஏற்பாடு
செய்யப் பட்ட குறுகிய வாழ்க்கை இது. இவ்வுலகம் ஒருநாள் அழியும். மீணடும் உங்களை
விசாரிப்பதற்காகவும் உங்கள் வினைகளுக்குக் கூலி கொடுப்பதற்காகவும் இறுதித்
தீர்ப்பு நாள் அன்று நீங்கள் எல்லோரும் எழுப்பப்பட இருக்கிறீர்கள் என்ற உண்மையை இறைவன்
நினைவூட்டுகிறான்.
10:23. ஆயினும்
அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள்
சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள்.
மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக
வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே
திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை
நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
10:24. (எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து
நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப்
போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம்
மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக
வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள்
ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில்
திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு
விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு
இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.
ஆம், நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்வை நிரந்தரம் என்றெண்ணி ஏமாந்து விடாதீர்கள் என்று
எச்சரிக்கிறான் இறைவன். மாறாக சொர்க்கத்திற்குச் செல்லும் நேர்வழி கோரிப்
பிரார்த்திப்போருக்கு அதன்பால் வழிகாட்டக் காத்திருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்:
10:25. அல்லாஹ்
உங்களை அமைதி இல்லத்திற்கு(சொர்க்கத்திற்கு) அழைத்துக்
கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு
அவன் நேர்வழி அளிக்கின்றான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)