இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கருணைக்கொலை எனும் “விருது”!


கருணைக்கொலை எனும் “விருது”!
விக்கிபீடியா இணையதளம் தரும் அதிர்ச்சித் தகவல் இது:
இந்தியாவின் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில், பெண் சிசுக் கொலைபோல் முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ள.  
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளின் இக்கொடூரச் செயலை கருணைக்கொலை என தவறாக குடும்ப உறுப்பினர்களும், சமூகமும் கருதுவதுடன், குற்ற உணர்வற்ற சமூகச் சடங்கு எனக் குறிப்பிடத் தவறுவதில்லை. முதியோர் கொலையை அறிந்தவர்கள் கூட அத்தகவலை காவல் துறைக்கு தெரிவிப்பதில்லை. எனவே காவல்துறையினரால் குற்றம் செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு, முதியோர் கொலைகளை தடுக்க இயல்வதில்லை.
வழிமுறைகள்:
 படுத்த படுக்கையாக உள்ள முதியோர்களின் உயிரை வெகு விரைவில் பறிக்க தமிழ்நாட்டில் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. [9]
1.    தலைக்கு ஊத்தல் எனும் தலைக்கு விளக்கெண்ணெயை நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி பின் இளநீரை குடிக்கச் செய்தல்.
2.    குடும்ப உறுப்பினர்கள் வரிசையாக தொடர்ந்து முதியோரின் வாயில் பால் ஊற்றுதல்.(இதனை ஒரு சடங்காக செய்தல்)
3.    பூச்சிக் கொல்லி மாத்திரைகள் கொடுத்தல்
4.    விஷ ஊசி போடுதல்.
5.    கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுதல்.

இறைவனைப் பற்றியும் அவனுக்கு மனிதன் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது பற்றியும், மறுமை வாழ்வு பற்றியும் மக்களுக்கு முறையாக போதிக்காததன் விளைவாக இன்று முதியோர் இல்லங்களில் அடைக்கலம் தேடும் போக்கு அதிகரித்து வருகிறது. எந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர் இரவுபகலாக உழைத்து சம்பாதிக்கிறார்களோ சம்பாதித்ததை சேமிக்கிறார்களோ அதே குழந்தைகள் பருவமடைந்ததும் இவர்களைத் தரக்குறைவாக பேசுவது, நடத்துவது, யாரையேனும் காதலித்து அவர்களோடு ஓடிப்போய் விடுவது, இவர்களது செல்வங்களை ஊதாரித்தனமாக செலவழிப்பது போன்றவை சகஜமாகிவிட்டன இன்று. முறைப்படி அவர்களை யாருக்கேனும் திருமணம் செய்து வைத்தாலும் வயதான காலத்தில் பெற்றோர்களை ஆதரவற்றவர்களாக விட்டு விடுவது, முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவது என்பவை எந்த குற்ற உணர்வும் இன்றி பிள்ளைகளால் செய்யப் படுகின்றன. நாளுக்குநாள் மங்கி வரும் இந்த குற்ற உணர்வு எங்கு இவர்களைக் கொண்டு சென்றிருக்கிறது தெரியுமா? இதோ பெற்றோரின் தன்னலமற்ற சேவைக்கு விருதாக வழங்கப் படுகிறது... கருணைக்கொலை!

நேற்றைய குழந்தைகளே இன்று வாலிபர்களாக நிற்கிறார்கள்!
இன்றைய வாலிபர்களே நாளை முதியோராக மாறுகிறார்கள்!
வாலிப முறுக்கு என்பதும் நம்மைக் கடந்து செல்லும் ஒன்றுதான்
நாமும் முதுமைக்கு மாறுவோம், நம்மையும் பலவீனம் ஆட்கொள்ளும்...
நாமும் தனிமையில் விடப்படுவோம்...
ஆம், அன்று நம் மீதும் நம் மக்கள் “கருணை” மழை பொழியக் கூடும்!
நாம் விதைத்ததை நாமே அறுவடை செய்யக்கூடும்!

அதற்கு முன் இன்றே விழித்துக் கொள்வோம்!
அனைவர் உள்ளங்களிலும் நல்லொழுக்கம் விதைப்போம்!
முறையான இறையச்சம் விதைப்போம்!
படைத்தவன் மட்டுமே இறைவனென்று கலப்படமின்றிக் கற்றுக் கொடுப்போம்!
அவன் நம்மைக் கண்காணிப்பதை உணர்த்துவோம்!
அவனிடமே நம் மீளுதலும் இறுதி விசாரணையும் உண்டென்பதும்
நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் உண்டென்பதும்
பள்ளிப்பருவத்திலிருந்தே கற்றுக் கொடுப்போம்!


மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன் 36:68)

= நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.(அல்குர்ஆன் 31:14)

முதியோர் இல்லம் தவிர்!  
= பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் 17:23)
பெற்றோருக்காக பிரார்த்தனை
= இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24)

வியாழன், 19 பிப்ரவரி, 2015

காலம் கடந்த ஞானோதயம்!

இன்றைய செய்திகளும் இறைவனின் எச்சரிக்கையும்
இது செய்தி:
குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டாம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்:  - சந்திரபாபு நாயுடு பேச்சு
இது எச்சரிக்கை:
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)


சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த மேற்படி செய்தியை யாரும் மறந்து இருக்கமாட்டீர்கள்.

என்.டி.ராமராவ் நினைவு நாளையொட்டி 18 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் வேலிவேணு கிராமத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் செட்டிவேட்டை, தல்லாபலம், சிங்கவாரா உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பிரமணாகூடம் கிராமத்தில் முடித்தார்.

இந்த கிராமங்களில் சந்திரபாபு நாயுடு பேசியபோது,  ‘’ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெறவேண்டாம். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இன்று படித்தவர்கள் பலர் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவது இல்லை.

நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் சிசு மரணம் நிகழ்கிறது. இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜப்பானை எடுத்துக்கொண்டால் அங்கு முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இங்கும் அந்த நிலைதான் ஏற்படுகிறது. எனவே நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம். அதனால் பலன் இல்லை. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
 என்று தெரிவித்தார். (தினமலர், மாலைமலர், தினபூமி......)
----------------------------------------
இது ஒரு மாநிலத்துக்கு முதல்வராக பலகாலம் இருந்து மீண்டும் அதே பொறுப்பில்  தொடரும் ஒரு பழுத்த அரசியல்வாதியின் அனுபவ வாக்குமூலம். இதே எண்ணம் வேறு சில அமைப்புகளின் தலைவர்களும் வெளிப்படுத்துவதை செய்திகள் மூலம் கண்டு வருகிறோம்.
இந்தியாவில் முதலில் பா.ஜ.க. எம்.பி.யான சாக்ஷி மகாராஜ், ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பத்ரிகாஷ்ரம் சங்கராச்சாரியார் ஸ்ரீ வாசுதேவானந்த் சரசுவதி, பெரும்பான்மை அந்தஸ்தை நிலை நிறுத்த ஒவ்வொரு இந்து குடும்பமும் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். இதையெல்லாம்விட விஸ்வ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், 5 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் பரிசு வழங்க திட்டமிட்டிருப்பதாக பொதுச்செயலாளர் கோபால்ஜி அறிவித்துள்ளார். (தினத்தந்தி ஜனவரி 28,2015,)
 காலம்கடந்த ஞானோதயம்!

இறைவன் மக்களுக்கு வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறி இயற்கையானது. குறைகளற்றது. அதைத் தவற விட்டோர்களின் நிலை இதுதான். மனிதர்களையும் அவர்களுக்காக இவ்வுலகையும் படைத்தவன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே எச்சரித்தான்....
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
தங்கள் உணவு மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று பயந்து சுயநல நோக்கோடு தங்கள் மக்களை தாங்களாகவே கொன்றொழித்தது மிகப்பெரிய பிழை என்று உணர இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது பாருங்கள். இன்னும் அதை வேறு பலர் உணரவில்லை என்பது வேதனை கலந்த வேடிக்கை! ஆம் சந்திரபாபு நாயுடு மேற்கண்டவாறு பேசியதைத் தொடர்ந்து நாட்டில் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் என்பதைக் காணும்போது உண்மையை உணர்ந்தவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!
பல கசப்பான அனுபவங்களையும் ஈடுசெய்ய முடியாத எண்ணற்ற இழப்புகளையும் சந்தித்துவிட்டு இறுதியில் ஞானோதயம் அடைவதால் என்ன பயன்?
இதனால் இனங்களின் இனப்பெருக்கம் தடைபட்டது ஒருபுறம் இருக்கட்டும. ஆனால் இதைத் தவிர உண்டான வேறு பல இழப்புகளை ஈடு செய்வது யார்? மக்களை ஏமாற்றிய அரசாங்கங்கள் இதற்கு ஏதாவது நஷ்டஈடு திட்டங்கள் வைத்துள்ளார்களா?
= பல குடும்பங்களில் தந்தையும் தாயும் முதியோர் ஆன நிலையில் அவர்களைப் பராமரிக்கவோ அன்பு காட்டவோ ஆதரிக்கவோ ஆளில்லாத நிலை. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் அவர்களுக்கு துணை நிற்கவோ ஆதரவளிக்கவோ ஆறுதல் அளிக்கவோ  யாரும் இல்லை. முதியோர் இல்லங்களின் அவலங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
= பல குடும்பங்கள் தங்களுக்கு ஆண் சந்ததி வேண்டும் என்பதற்காக தங்களுக்குப் பிறந்த பெண்சிசுக்களை கொன்றொழித்தன. அதனால் அக்குடும்பங்களில் அந்தப் பெண்குழந்தைகளில் இருந்து கிடைக்கைகூடிய தனிபாசம், மென்மை, போன்ற விலைமதிப்பற்ற பல நன்மைகளும்  இழப்படைந்த நிலை.

 அரசாங்கங்கள் தங்கள் அறியாமையின் காரணமாகவும் தங்கள் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காகவும் நாட்டு மக்களின்மீது திணித்த கொடுமைக்கு பல குடும்பங்கள் தங்கள் ஈடில்லாத பொக்கிஷங்களை தொலைத்து விட்டு நிற்கின்றன. பல உயிர்களை காவு கொடுத்து இறுதியில் அவர்கள் தேடிக் கொண்டது பாதிக்கப் பட்டவர்களின் சாபத்தை மட்டுமல்ல. இவ்வுலகத்தின் உரிமையாளனின் கோபத்தையும்தான்! அது நாளை இறுதித் தீர்ப்பு நாளின் போது நரகத்தின் உருவில் காத்திருக்கிறது!
'உயிருடன் புதைக்கப்பட்டவளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)

புதன், 18 பிப்ரவரி, 2015

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் யாருடையது..?

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் யாருடையது..?
 இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பயங்கரவாதத்தை போதிக்கிறது என்பது ஆகும். உதாரணமாக isis தீவிரவாத அமைப்பை உருவாக்கியது இஸ்லாம்தான் என்று குற்றம்சாட்டுகள் வைக்க படுகிறது......
முதலில் isis அமைப்பு இஸ்லாமிய அமைப்பா..???
ஈராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்
இயக்கம் உண்மையில் யாருடையது..?
அதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்.....?
இஸ்லாம் கூறும் அமைதி மார்க்கத்திற்கு நேர் எதிரான நடவடிக்கைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றிவரும் இந்த காட்டுமிராண்டிகள் யார் என்ற குழப்பம் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்களைப் போன்றே நாமும் குழப்பத்தில்தான் இருந்தோம். இந்நிலையில், குவைத்திலிருந்து
வெளிவரும் அல்முஜ்தமாஎனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோபர் (2014)  பிரதியில் ஓர் ஆய்வுக் கட்டுரை.
கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர் ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார்.
இராக் கிறித்தவர்களும் இனப்படுகொலை பற்றிய ஊகங்களும். கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கம் அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.. நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:

ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக தாஇஷ்எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா ’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். கிலாஃபத்ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் அபூபக்ர் அல்பஃக்தாதியை பஃக்தாது கலீஃபாஎன அவருடைய. ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.
இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது
= பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்தின் கையாள்.
இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர்.
= அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை இஸ்ரேலின் பயங்கரவாத அமைப்பான மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார். அத்துடன், பல்வேறு இராணுவப்
பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர்.கடந்துவந்துள்ளார்.
இதுவெல்லாம் எதற்காக?
அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமிய சிந்தனைகளையும்
அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும். அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா?
= ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 
= 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. 
இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.

= இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. 
இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.
= அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு
வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும். உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும்
படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு  அடையாளம் காட்ட வேண்டும்.
  அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ்எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.
= இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப்பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும்.
யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். 
= இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்து வருகிறது.
சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.

இஸ்லாமிய வெறுப்பை உலக மக்களில் விதைத்து உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்பது தெரிகிறது. ஆனால் இறைவனின் மார்க்கம் அனைத்து சதிகளையும் வென்றே வந்துள்ளது என்பது வரலாறு நமக்கு தரும் பாடமாகும். இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'
தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்
இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)

 
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள
வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள்.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

விரைவில்.... குற்றவாளிகளுக்கும் லைசென்ஸ் !!!

Image result for licence
மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அசட்டை செய்வதன் விளைவாகவும் தாங்களாகவே தங்கள் மனம்போன போக்கில் உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் நாடு அனுபவித்துவரும் அவலங்களை யாரும் மறுப்பதற்கில்லை.
= மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறியும் மகாப்பாவம் விபச்சாரம்! தலைமுறைகளை பாதிக்கவும் குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் செய்யும் பாவம் அது! பொறுப்புணர்வில்லா பெற்றோர்களையும் தந்தைகளில்லா குழந்தைகளையும் அனாதைகளையும் உருவாக்கும் பாவம் அது! இன்று அது பரவலாகி அதில் ஈடுபடுவோர் வெட்கம் மறந்து தங்களை பாலியல் தொழிலாளிகள்என்று அறிவித்து தொழிற்சங்கங்கள் அமைத்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அவலம் நாட்டில் தொடர்கிறது. நாளை இது தொழில்நுட்பமாக சித்தரிக்கப்பட்டு அதற்காக கல்லூரிகளும் பட்டங்களும் பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு மக்களிடையே வெட்க உணர்வும் சுரணையும் மழுங்கிக்  கிடக்கிறது.
இன்னும் இச்செயலை ஊக்குவிக்கும் முகமாக திரை உலகமும் தொலைக்காட்சிகளும் மற்ற ஊடகங்களும் தங்களது பங்கை நிறைவேற்றி வருகின்றன. அனைவருக்கும் மக்களின் காம இச்சையை காசாக்குவது ஒன்றே குறிக்கோளாக உள்ளது.
= அதுபோலவே தீமைகளின் தாய் என்று கூறப்படும் மதுபானமும்! மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து வைத்து மக்களை அதிலும் குறிப்பாக சமூகத்தின் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மதுவருந்தத் தூண்டி வருகிறது. குடும்பங்கள் சீரழிவதும் கலகங்கள் சமூகங்களை அமைதி இழக்கச் செய்வதும் இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல! பள்ளிக்கூடங்களில் சிறு மாணவர்கள் முதல் போதைப்பொருட்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் அவலம்!
= சுயநலத்தின் காரணம் கருக்கலைப்பையும் சிசுக்கொலைகளையும் சர்வ சாதாரணமாகக் கருதி செயல்பட்டதன் மற்றும் தொடர்ந்து செயல்படுவதன் விளைவாக தங்கள் இனங்களை தானாகவே அழித்துக் கொண்டுவரும் அவலம்...
= லாட்டரிச்சீட்டு என்ற சூதாட்டம் ..... இதை வைத்துப் பிழைப்பு நடத்துவோர் தங்கள் உரிமை கோரிப் போராடுகிறார்கள்! ....வெல்கிறார்கள்!!
= பெற்றோரைப் புறக்கணிப்பதால் பெருகிவரும் முதியோர் இல்லங்களும் பெற்ற பிள்ளைகளைப் புறக்கணிப்பதால் பெருகிவரும் அனாதை ஆசிரமங்களும்......
= இன்னும் இலஞ்சம் இன்றி எக்காரியமும் நடக்காது என்ற அளவுக்கு முற்றி நிற்கும் நாட்டின் நிலைமையும் ..... சிறிய ஊழல்வாதி பெரிய ஊழல்காரனைக் காரணம் காட்டி தன்னை நியாயப் படுத்தும் நிலையும்.....
= கொலைக்குற்றவாளிகளும் நடிகர்களும் எந்த தகுதியும் இல்லாதவர்களும் போற்றப்படுவதும் அவர்களின் காலடியில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் அவலமும்......
நாட்டில் நடக்கும் அவலங்களின் பட்டியல் இன்னும் நீளமானது....
எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மக்கள் உள்ளார்கள்! அவர்களுக்கு வெட்கமும் இல்லை! சுரணையும் இல்லை! தடுக்கவோ தட்டிக் கேட்கவோ துணிவும் இல்லை! அப்படி ஒரு எண்ணமும் இல்லை! 

இப்படியே போனால்... இது எங்கே வந்து நிற்கும் என்பதை சற்று பாருங்கள்....

நாளை திருடர்களும் கொள்ளையர்களும் கொலைகாரர்களும் காமவெறியர்களும் சங்கம் அமைத்து தங்கள் உரிமை கோரி போராடலாம். ....
அவர்களுக்கும் உரிமங்கள் (licence) வழங்கப்படுவதும் "அக்கலைகளை" கற்றுக்கொடுப்பதற்காக தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறையில் வரலாம்.

திருடன் ஒருவன் துப்பாக்கியோடு வந்து தன் உரிமத்தைக் காட்டி உங்கள் பீரோவை உரிமையோடு திறக்கச் சொல்லி உங்கள் பொருட்களை வாரிச் செல்லலாம். போலீஸ் பரிவாரங்கள் துணை வரவும் வாய்ப்பு உண்டு!

காமுகன் ஒருவன் நம் வீடுவந்து நமது மகளையோ மனைவியையோ புணர்வதற்கு தக்க உரிமத்தோடு வந்து தன் காரியத்தை நிறைவேற்றிச் செல்லலாம்!

இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா?
 .... இல்லை என்பதற்கு இன்று நம் முன் நடக்கும் வழக்குகளும் நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுமே சாட்சி பகர்கின்றன. விபச்சாரத்துக்கு அரசாங்கங்கள் உரிமங்கள் வழங்கியுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதைக்   காரணம் காட்டி நாளை திருடர்கள் தங்கள் வக்கீல்களின் வாதத் திறமையைக் கொண்டு வெல்வதற்கும் வாய்ப்புகள் தாராளமாகவே உள்ளன! 
சரி, மேற்கூறியவை கற்பனைகளாகவே ஆனாலும் நாம் விழித்தெழ வேண்டிய தருணம் இன்னும் வரவில்லையா அன்பர்களே!

காலம் கடந்துவிட வில்லை...

தடுப்பு நடவடிக்கை என்ன? 

மேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்

அதற்கு முதற்கண் தனிநபர் ஒழுக்கத்தை மக்களுக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து அதைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் பேணாவிட்டால் இம்மையில் ஏற்படும் விளைவுகளையும் மறுமையில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் தண்டனைகளையும் பற்றி எச்சரிக்க வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒழுக்கத்தைப் பேணும்போது உலகில் ஏற்படும் ஒழுங்கையும் அமைதி நிறைந்த வாழ்வையும் பேணுவோருக்கு மறுமையில் பரிசாகக்
கிடைக்கவுள்ள நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வையும் பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும். இதைக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பள்ளிகளில் இந்த நீதி போதனையை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

அடுத்ததாக குற்றங்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதை எவ்வாறு சட்டங்கள் மற்றும் நீதித்துறை மூலம் தடுப்பது

 குற்றவாளிகள் தாங்கள் செய்யும் பெரும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு பதிலாக கவுரவிக்கப் படுவதும் ஆட்சிக் கட்டில்களில் அமர்த்தி வைக்கப்படுவதும் நாட்டில் நடப்பதற்குக் காரணம் நமது வலுவற்ற சட்டங்களே என்பதை அறியலாம். மனிதர்கள் தங்கள் சிற்றறிவு கொண்டு இயற்றிய சட்டங்களே இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன.
நன்மை எது தீமை எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மனிதன் தன்னிடம் உள்ள சிற்றறிவு கொண்டும் தன்  ஆசாபாசங்களுக்கு உட்பட்டும் தீர்மானித்து அதன் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். அதே வேளையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே அனைத்து படைப்பினங்களையும் அவற்றின் சூட்சுமங்களையும் அவற்றுக்கு எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன். தன் படைப்பினங்களுக்கு எது எப்போது நல்லது அல்லது தீயது என்பதை அதி பக்குவமாக அறிந்தவனும் அவன் மட்டுமே. எனவே அவன் தரும் சட்ட திட்டங்கள் எவையோ அவை மட்டுமே குறைகள் இல்லாதது. மேலும் இவ்வுலகை மனிதர்களுக்கு ஒரு தற்காலிக பரீட்சைக்கூடமாக உருவாக்கிய இறைவன் நாளை இறுதித்தீர்ப்பு நாளின்போது அவன் வழங்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலேதான் நம்மை விசாரிக்கவும் செய்வான்.
அந்த சர்வவல்லமை பொருந்திய இறைவன் இவ்வுலக மக்களுக்காக வழங்கிய வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம்என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. அவன் வழங்கும் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய பெட்டகமே இறுதி வேதம் திருக்குர்ஆன். அந்த திருமறைக் குர்ஆனின் செயல்முறை விளக்கமே இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி! எனவே இறைவன் வழங்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்போமாக!

5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம்இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே இறைவன் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகிஅவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்.

இஸ்லாம் என்றால் என்ன? 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html