இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஜூன், 2020

ஆட்சியாளர்களுக்கு விசாரணை உறுதி!


நாட்டுப்பற்று என்பது என்ன?
Petition to PM Modi to take responsibility of transporting migrant ...

உண்மையான நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்பது அந்நாட்டில் வாழும் மக்களை ஜாதி,மத, மொழி, நிற பேதமின்றி அவர்களை உளமாற நேசித்தலும் அவர்களுக்கு நேரும் இடுக்கண்களைக் களையப் பாடுபடுதலும் ஆகும். இதைச் செய்யாமல் அந்நாட்டின் மண்ணை முத்தமிடுவதிலோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறை கொடிஏற்றி வணக்கம் செலுத்துவதிலோ அல்லது சில கவிதை வரிகளை அல்லது பாடல்களை உரக்கப் பாடுவதிலோ துளியும் இல்லை என்பதை அறிவோம். இதை உறுதிப்படுத்தியது கொரோனா தொற்றின்போது நம் நாட்டு ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட விதம்.

கொரோனா தோலுரித்துக் காட்டிய நாட்டுப் பற்று
அந்த வகையில் கொரோனா தொற்று நம் நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் மீது எவ்வளவு பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியதை அறிவோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் நாட்டின் கடைநிலையில் உள்ள தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக நாம் அறிந்தோம். பிழைக்க வந்த இடத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வாகன ஏற்பாடுகளை செய்து தர எந்த மத்திய மாநில அரசுகளும் ஆதிக்கம் படைத்தவர்களும் எவரும் முன்வராததால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தங்கள் பயணச் சுமைகளையும் குழந்தைகளையும் முதியோரையும் சுமந்துகொண்டு நடை பயணமாகவே சென்றார்கள் அவர்கள். உண்ணவும் பருகவும் ஏதுமின்றி உயிரை இழந்தவர்களும் அவர்களில் உண்டு. நோயுற்று இறந்தோரும் அவர்களில் உண்டு. வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொண்டோரும் அவர்களில் உண்டு.
 ஆட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர்
India racked by greatest exodus since partition due to coronavirus ...

நாட்டுமக்களின் நலன் காப்பதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரியணை ஏறியவர்கள் இந்த ஆட்சியாளர்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள்  பாமரர்கள்தானே என்ற அலட்சியத்தால் அவர்களின் துன்பங்களை மாநில அரசுகளும் மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கைவசம் இருப்பதால் தங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருக்கலாம். அல்லது அடுத்த தேர்தலுக்குள் மக்களை மீண்டும் மூளைச்சலவை செய்து மீண்டும் அரியணை ஏறலாம் என்றும் அவர்கள் எண்ணி இருக்கலாம். எது எப்படியானாலும் அவர்களுக்கு மேலே அனைத்தையும் கண்டு கொண்டும் பதிவு செய்துகொண்டும் இருப்பவன் ஒருவன் உள்ளான் என்பதை நினைவூட்டுவது நம் கடமையாக உள்ளது.

ஆம், அவன்தான் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன்.   
அவன் தற்காலிகமாக தந்திருப்பதே இந்த ஆட்சியதிகாரம், இதுபற்றி இறைவன் என்னை விசாரிக்க உள்ளான் என்ற பொறுப்புணர்வு இருந்தால் நாட்டை ஆள்வோர் எவரும் பொதுமக்கள் படும் இன்னல்களைக் கண்டு அலட்சியமாக இருக்கவும் மாட்டார்கள். நாட்டின் சொத்துக்களை தனதாக்கும் முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். ஏன், இரவில் நிம்மதியாக தூங்கவும் மாட்டார்கள்!
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்....    அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)  நூல்:புகாரி, முஸ்லிம்)

ஆட்சியாளர்களே, இறைவனிடம் விசாரணை என்றால் சாதாரணமானது அல்ல. இவ்வுலகில் வலுவான வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிப்பதோ அல்லது நீதிபதிகளை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் தண்டனையில் இருந்து தப்பிப்பதோ எல்லாம் அங்கு நடக்காது. இவ்வுலகில் உங்கள் ஆட்சியின்போது நிகழ்த்தப்பட்ட அனைத்து அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உங்கள் மோசமான ஆட்சியின் காரணமாக குடிமக்கள்  அனுபவித்த அனைத்து இடையூறுகளுக்கும் இன்னல்களுக்கும் இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணைக்கு வரும். தொடர்ந்து அதற்கான தண்டனையும் வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி நடக்க உள்ள நிகழ்வு இது. வினை விதைத்தவன் அதை அறுவடை செய்யாமலா போவான்?
உறுதியான இறுதியான விசாரணை
= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)
= எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் பாருங்கள்:
= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)
= .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘(திருக்குர்ஆன் 18:29) 
-----------------------------
ஒப்பிலா இறைமறை திருக்குர்ஆன்
https://www.quranmalar.com/2015/07/blog-post_25.html

மனிதனோடு ஷைத்தான் ஏனிங்கு வந்தான்?


http://coolvibe.com/wp-content/uploads/2010/10/NOS-1600x1200.jpg ...
கூடவே வந்த ஷைத்தான்: 
இறைவன் இந்தத் தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதை நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது அறியமுடியும். அந்தப் பரீட்சையின் ஒரு பாகமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்ற ஷைத்தான் என்ற மனித கண்களுக்குப் புலப்படாத இனமும் கூடவே அனுப்பட்டுள்ளது. மனித இனத்தின் ஆதம் எப்படி முதலாமவரோ அதே போல ஷைத்தானின் பரம்பரைக்கு முதலாமவன் இப்லீஸ்.
ஆக, முதல் மனித ஜோடி இந்த பூமியில் வசிக்க ஆரம்பித்த போது அவர்களோடு கூடவே வந்தவர்கள் இப்லீசும் அவனது சந்ததியினரான ஷைத்தான்களும்.
திருக்குர்ஆன் கூறும் சுருக்கமான வரலாறு :
திருக்குர்ஆன் இது பற்றிய வரலாற்று நிகழ்வுகளை பின்வருமாறு கூறுகிறது:
 7:11நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை.
7:12சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்என்று பதில் கூறினான்.
7:13அதற்கு அல்லாஹ் கூறினான்: நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.
7:14(இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!
7:15அதற்கு நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!என்று அல்லாஹ் கூறினான்.
7:16அதற்கு இப்லீஸ் கூறினான்: என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். 
மேற்படி ஒரு சம்பவத்தை முழு வீச்சில் நாம் புரிந்து கொள்ள இயலாவிடினும் இது உறுதியாக நடந்த ஒன்று  என்பதை திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.

இன்றைய நம் வாழ்க்கை, நாம் வாழும் இந்த பூமி, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நம் அற்ப நிலை, நம் வாழ்க்கையின் நோக்கம்  ஆகியவற்றை ஆராயும்போது பகுத்தறிவு பூர்வமாக ஆராயும் எவரும் 
இந்த குறுகிய வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இந்த பூமியை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான் என்பதை உறுதியாக உணருவார்கள். இதை மறுப்பவர்களிடம் நீங்கள் இக்கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்:
1.      மனித இனம் இந்த பூமியில் தோன்றுவதற்கான பின்னணி என்ன?
2.      மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?
3.      உங்கள் வாதத்திற்கு நீங்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன?
கண்டிப்பாக அவர்களால் இதற்கான உறுதியான – பகுத்தறிவு பூர்வமான - பதிலை தரவே முடியாது. அவ்வாறு நீங்கள் பதில் பெற்றால் எங்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனிதனுக்கான பரீட்சையில் ஷைத்தானின் பங்கு
எந்த ஒரு பொருளையும் அதற்காக முயற்சி செய்து பெறும்போதுதான் அதன் அருமையை உணரமுடியும். மேலும் வெயிலில் சென்று கஷ்டப்பட்ட பின்தான் நிழலின் அருமை புரியும். தாகித்தவனுக்குத்தான் நீரின் அருமையும் புரியும். எந்த ஒரு உழைப்போ முயற்சியோ செய்யாமல் இலவசமாகக் கிடைத்த சொர்க்கம் என்ற அறிய பொக்கிஷத்தைப் பெற்றிருந்தார்கள் நம் ஆதி தந்தையும் தாயும் என்பதை முந்தைய கட்டுரையில் (மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு)
நாம் கண்டோம். அதே பொக்கிஷத்தை அதற்காக உழைத்து அதன்பின் பெறுவதற்காக இறைவன் செய்த ஏற்பாடாகவும் இந்தப் பரீட்சை வாழ்க்கை  இருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன். 

=   இங்கு நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி  மட்டும்   இருந்து  அதற்கு  எதிரான  ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான் என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி மனிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளதை நாம் காணமுடிகிறது. யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ அவன் உண்டாக்கும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள். அதைப்பற்றி இறைவன் நமக்கு எச்சரிக்கவும் செய்துள்ளான்:
= இறைவிசுவாசிகளே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை  ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; ...  (திருக்குர்ஆன் 24:21)
= ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (திருக்குர்ஆன் 7:27
================== 

மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?திங்கள், 22 ஜூன், 2020

மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு


நம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும்? 

மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த விஷயத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் சொல்வதாக இல்லை. அதே நேரத்தில் அதிநுட்பங்கள் வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு அதிநுட்பங்கள் வாய்ந்த ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு 'எல்லாமே தற்செயல்' என்று பிதற்றுவது அறியாமையின், சிந்தியாமையின் சிகரம்!

இனி பூமியின் மீது மனித தோற்றம் பற்றி வேறு யார் எதைக் கூறினாலும் நம்பினாலும் அவை உறுதியற்ற ஊகங்களாகவே அமையும். இந்நிலையில் இவ்வுலகையும் மனிதர்களையும் இன்னபிற ஜீவிகளையும் படைத்தவன் எவனோ அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை. இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும் அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.
அந்த வகையில் நாம் பூமிக்கு வந்த வரலாற்றை இன்று உறுதியான முறையில் அறிய  நமக்குத்  துணை  நிற்பது  இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மட்டுமே. அதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன: 
= இறைவனிடமிருந்து அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் மூலமாக வந்த திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் மூல மொழியிலேயே உலகெங்கும் ஒரே போல பாதுகாக்கப்பட்டு வருகிறது.
=  இலட்சக்கணக்கான மக்களால் மூலமொழியிலேயே அந்த வசனங்கள் மனப்பாடமும் செய்யப்பட்டு உள்ளதால் எந்த ஒரு மாற்றங்களுக்கும் அது இரையாவதில்லை.
=  நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடும் வரலாற்று உண்மைகளோடும் அற்புதமான முறையில் பொருந்திப் போகிறது.
= அரபு மொழியில் அதன் உயர்ந்த இலக்கியத் தரம், அதன் தீர்க்கதரிசனங்கள் மெய்ப்பிக்கப்பட்டு வருதல், வசனங்களின் முரண்பாடின்மை, அறிவியல் வளர்ச்சியால் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படாமை  இன்னும் இவைபோன்ற பல அற்புத குணங்களால் திருக்குர்ஆன் தன்னை ஒரு முழுமையான நம்பத்தகுந்த இறைவேதம் என்பதை நிரூபித்து வருகிறது. இது பற்றிய ஐயம் நீங்க இதைப் படியுங்கள்: 
நமது பின்னணியை அறியும் முன்..
இறைவேதம் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறியக் கிடைக்கும் பூமியில் நமது தோற்றத்தின்  வரலாற்று சுருக்கத்தினை நாம் கீழே காண இருக்கிறோம்.  இது தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:
மனிதனின் அற்ப நிலை
= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே. ஒரு அற்பமான இந்திரியத்துளியிலிருந்து உடல் பெற்று உருவாகி வளர்ந்து மறையக் கூடியவர்கள் நாம்.
= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை. மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
= நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
= மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை. அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே!
திருக்குர்ஆன் வசனங்களின் இயல்பு
= அடுத்ததாக திருக்குர்ஆன் வசனங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்தவனால் அவனது  பரந்த அறிவில் இருந்து பகிரப்படுபவை. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் அற்பமான தோற்றமும் அற்பமான ஆயுளும் கொண்ட மனிதர்களாகிய நமக்கு இந்தக் குறுகிய பரீட்சை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கூறுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் நமக்கு வாய்த்துள்ள அற்ப அறிவுக்கு எட்டாத பல விடயங்களும் இங்கு கூறப்படும் போது அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. மாறாக நமது அற்ப அறிவைக் கொண்டு இவ்வுலக நடைமுறையோடு ஒப்பிட்டு அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்று வாதிடுவது வாதியின் அறிவீனத்தையே பறைசாற்றும் என்பதை நாம் அறியவேண்டும்.
மீண்டும் நினைவு கூருவோம். கீழ்கண்ட நிகழ்வுகள் நமது அறிவு எல்லைக்கு அப்பால் நடந்தவை. நமக்குப் பழகிய நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து அல்லது நமக்கு எட்டிய அற்ப அறிவைக் கொண்டு இவற்றை ஒப்பீடு செய்து அணுகினால் அது குழப்பத்தையே தரும்.
பதங்கள் விளக்கம்:
வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கீழ்கண்ட வசனங்களில் இடம்பெறும் சில பதங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வருமாறு: 
அல்லாஹ்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல். இதன் பொருள் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்பது.
வானவர்கள் அல்லது மலக்குகள் : வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். (அரபு மொழியில் மலக்குகள் என்று வழங்கப்படும்) அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் இறைவனின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.
ஜின்கள்: மனிதர்களைப் போலவே பகுத்தறிவும் விருப்ப உரிமையும் கொடுக்கப்பட்ட இனம். நெருப்பின் சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள்.  மனிதர்களைப் போலவே ஆண் பெண் மற்றும் சந்தானங்கள், நல்லவர்கள் கெட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் என இவர்களுக்குள்ளும் உள்ளனர்.
= வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)
இப்லீஸ் மற்றும் ஷைத்தான்:
ஷைத்தான்கள் என்பவை ஜின் இனத்தைச் சேர்ந்தவை. இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள் தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம் உருவான கெட்ட சந்ததிகள்தாம் ஷைத்தான்கள். மனித மற்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஷைத்தான்கள்.
ஆதம்: முதல் மனிதரின் பெயர்.
மேற்கூறப்பட்ட எந்த இனங்களும் மனிதனின் தற்போதைய நிலையில் அவனது கண்களுக்குப் புலப்படாதவை என்பதையும் அவை அனைத்தும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் படைப்பதற்கு முன் நடந்த உரையாடலை நாம் கீழ்கண்டவாறு திருக்குர்ஆனில் காண்கிறோம்:

மனிதனின் படைப்புக்கு முன்னர்
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்எனக் கூறினார்கள்.
2:33. ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34. பின்னர் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் சத்தியமறுப்பாளர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து முதல் மனிதர் ஆதமுக்கு இறைவன் மற்ற இனங்களுக்கு வழங்காத அறிவை வழங்கி அவரை சிறப்பித்ததையும் அவருக்கு மரியாதை செய்யுமாறு மற்ற இனங்களை ஏவியதையும் இப்லீஸைத் தவிர மற்றவர்கள் யாவரும் சிரம் பணிந்ததையும் நாம் அறிகிறோம். வானவர்கள் எவ்வாறு மனிதர்கள் குழப்பம் விழைவிப்பவர்கள் அல்லது இரத்தம் சிந்துபவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள் என்ற விடயம் நமக்குப் புதிராக இருக்கலாம். ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த ஜின் இனங்களின் செயல்பாடுகளைக் கண்டும் அவர்கள் அக்கேள்வி எழுப்பி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் இறைவனால் அவர்களுக்கு அதுபற்றிய அறிவு கொடுக்கப்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு. (இன்றுதான் ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் கம்ப்யுட்டர் ப்ரோடோடைப் செய்து அதைப் பற்றி கம்பெனிகள் விவாதிக்கும் முறையை அறிவோமே). இறைவனே மிக அறிந்தவன்.
சொர்க்கத்தில் குடியிருத்தல்
தொடர்ந்து நடந்தவற்றை கீழ்கண்ட வசனங்களில் காண்கிறோம்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லைஎன்று கூறினான்.
7:21. நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
 சொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அவை என்ன வார்த்தைகள் என்பதை கீழ்கண்ட வசனம் கூறுகிறது:
7:23. அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்  என்று கூறினார்கள்.
இறைவன் மன்னித்ததைத் தொடர்ந்து மனித இனம் பூமியில் குடியேற்றப்பட்டது. ஒரு தற்காலிகமான குறுகிய கால வாழ்க்கையை ஆதம் - ஹவ்வா தம்பதியினரும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கு கழிக்க இறைவன் பணித்தான்.
7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டுஎன்று கூறினான்.
7:25. அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்என்றும் கூறினான்.
பூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான். இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது. 
2:38. நாம் கூறினோம்: நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
2:39. அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!
 இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு!
================= 

மனிதனோடு ஷைத்தான் ஏனிங்கு வந்தான்?

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.

 இந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்கு ஒருவருட சந்தா இலவசம்
--------------------------------
பொருளடக்கம்: 
ஆட்சியாளர்களுக்கு விசாரணை உறுதி! -2
உங்கள் பரீட்சைக் கூடத்தைப் புரிந்து கொள்ளுங்கள் -5
கொள்ளை நோயே கருணையாக வந்தால்? -7
நோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்! -8
கருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை -10
நோய் நிவாரணப் பிரார்த்தனைகள் -12
நோய் - இறைவன்பால் திரும்புவதற்கான அழைப்பு! -13
ஜனாதிபதி மாளிகையில் பாமரர்கள்!  -15
கொரோனா தற்கொலைகளில் தவறு உண்டா?  -19
நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள் -22

கொள்ளைநோய் பரவும்போது.. 24

வியாழன், 18 ஜூன், 2020

கொரோனா தற்கொலைகளில் தவறு உண்டா?


Covid 19 Patients Commits Suicide - ஓமந்தூரார் ... = ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகள் தற்கொலை -  கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தால், மருத்துவமனையில் தற்கொலை செய்துக் கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. May 28, 2020  (இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்)
= திருவனந்தபுரம்: கணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தீக்குளித்துத் தற்கொலை (தினகரன் 2020-06-01)
= கொரோனா பாதித்த நபர் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். (தினமலர் Apr 27, 2020, பெங்களூரு)
= அகமதாபாத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..(சமயம்தமிழ்.காம்)
= கரோனா ஊரடங்கு காரணமாக சரிவர வருமானம் இல்லாமல் குடும்பத்தினரை பட்டினி போட வேண்டிய சூழ்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பிஹார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். (தமிழ் இந்து நாளிதழ் செய்தி)
 ---------------------------- 
கொரோனாவால் இந்தியாவில் கணிசமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மன அழுத்தத்தால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. சாமானியர்கள் முதல் அரசு அதிகாரிகள், பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கொரோனா தொற்று கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த கூலித் தொழிலாளர்கள், ஐ.டி ஊழியர்கள், நஷ்டம் சந்தித்த சிறியது முதல் பெரிய வியாபாரிகள் எனப் பலர் தற்கொலை செய்துள்ளனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாகவும் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 தற்கொலைகள் காவல் நிலையங்களில் பதிவாகின்றன! அவ்வாறு பதிவாகாத தற்கொலைகள் இதைவிட ஆறு மடங்கு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்!
கல்வி கற்றவர் நிலையும் கல்லாதவர் நிலையும் இங்கு ஒன்றாகவே இருப்பதைப் பார்க்கலாம். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் மூழ்கியுள்ள ஒருவருக்கு துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் இனியும் வர இருக்கின்றன என்று உணரும்போது அவர், ‘இனி எதற்காக வாழவேண்டும்?’ ‘வாழ்ந்து என்ன பயன்?’ ‘வாழ்க்கையை முடித்துக் கொள்வதே நல்லது’ என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் உணர்வுகள் மேலிட அவர் தன் வாழ்க்கையை முடித்திட  தற்கொலையில் சரணடைகிறார்.
தற்கொலையில் தவறு உண்டா?
இதில் என்ன தவறு? என்று நீங்கள் கருதலாம். சூழ்நிலைகளைக் காரணம் காட்டி ஏதாவது தற்கொலையை நியாயப் படுத்தவும் கூடும். தற்கொலையில் தவறு இல்லை என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்களானால் கீழ்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்பது பற்றி யோசியுங்கள்:
= நீங்கள் சிறுவயது முதல் இறைவுபகலாக உழைத்து கஷ்டப்பட்டு ஆளாக்கிய உங்கள் மகன் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்து போனதற்காக தற்கொலை செய்து கொண்டால் சரி என்பீர்களா?
= உங்களை வளர்த்து ஆளாக்கும் முன் திடீரென்று ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டு உங்களை நிர்கதியாக  விட்டுச்சென்ற பெற்றோரின் செயலை நீங்கள் சரி என்று கூறமுடியுமா?
= நீங்கள் விற்ற சரக்குக்கு பணம் தரவேண்டிய ஒரு வியாபாரி உங்களுக்கு பணம் தராமல் தற்கொலை செய்து கொள்கிறார்..
= ஒரு நாட்டின் முக்கியமான பொறுப்பை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு நபர் திடீரென தற்கொலை...
இவ்வாறு எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம்.
ஆக, தற்கொலைகளில் தவறில்லை என்ற முடிவுக்கு மக்களோ அல்லது சமூகங்களோ வருமானால் அங்கு வாழ்க்கையில் கட்டுப்பாடு, சட்டம், ஒழுங்கு என்பவை அர்த்தமற்றதாகிவிடும் என்பதை உணரலாம். மேலும் தற்கொலை என்பது தனிநபரை மட்டுமல்ல, அவர் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கக் கூடியது என்பதையும் நாம் அறியலாம்.
ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளும் நபர் நினைக்கலாம் ‘என் தற்கொலையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, நான் இவ்வுலகை விட்டுப் போகிறேன் அவ்வளவுதான், இதில் என்ன தவறு?” என்று. ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டால் அவராக வந்து தன் உடலை அடக்கம் செய்வது இல்ல. அவரது உடல் அழுகினாலும் நாற்றமடித்தாலும் அவராக வந்து அதை அகற்றுவதில்லை. எல்லாம் அவர் சார்ந்த குடும்பமோ சமூகமோதான் செய்ய வேண்டிய உள்ளது.  
எனவே என் உயிர், எனது உரிமை, என்னுயிரை போக்கிக் கொள்வது என் விருப்பம் என்ற வாதம் அனைவருக்கும் ஆபத்தானது. இன்னும் பொய்யானது என்பதே உண்மை!
‘என்னுயிர்’ உண்மையில் எனதா?
என் உரிமை என் உரிமை என்று மனிதன் எதைக் கோர முடியும்அதை அறிவதற்கு முன்னால் அவனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இவ்வுலகில் அவனுடையது  என்று என்ன இருக்கிறதுமற்றும் அவனது அதிகாரத்தின் பலம் எவ்வளவு  என்பதை அறிந்த பின்னரே அவனது உரிமை அல்லது சுதந்திரம் பற்றி தீர்மானிக்க முடியும். மனிதன் தனது என்று எதை சொல்லிகொண்டாலும் உண்மையில் அவனது உடல்பொருள்ஆவி அல்லது உயிர் என அனைத்துமே அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளவை அல்ல என்பதை அறிவோம். அவை யாவும் இவ்வுலகைப் படைத்தவனால் அவனுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டவையே. அந்த இறைவன் அவன் நாடும்போது இவற்றைக் கொடுக்கவும் பறிக்கவும் செய்கிறான் என்பதுதான் உண்மை. எனவே மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் இவ்வுலகுக்கும் அதில் உள்ளவற்றுக்கும் உண்மையான சொந்தக்காரன் எவனோ அவன் மட்டுமே இதைத் தீர்மானிக்க முடியும். எனவே மனிதன் தானாக தன் உரிமையை தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
 அடுத்ததாகஇறைவன் மட்டுமே அவனது படைப்பினங்களையும் அவர்களின் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகமிக நுணுக்கமாகவும் அறிந்தவன். முக்காலத்தையும் முழுமையாக உணர்ந்தவன். யாருக்கு எவ்வளவு உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு ஞானம் அவனுக்கு மட்டுமே உள்ளது,
அடுத்ததாகஇந்தத் தற்காலிக உலகம் என்பது ஒருநாள் அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய தவணையில் இங்கு வந்து போகிறான் என்பதும் அனைவரும் புரிந்துகொண்ட ஓர் உண்மை. அதாவது இவ்வுலகை ஒரு பரீட்சைக் களமாகப் படைத்துள்ளான் இறைவன். மறுமையில் இறுதித் தீர்ப்புநாள் அன்று அவரவர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பற்றியும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பற்றியும் அவன் முழுமையாக விசாரிக்கவும் உள்ளான். அவற்றைப் பேணி நடப்போருக்கு  வெகுமதியாக சொர்க்க வாழ்வையும் பேணாமல் தான்தோன்றிகளாக நடப்போருக்கு தண்டனையாக நரகத்தையும் அவன் வழங்கவுள்ளான்.
 எனவே அந்த இறைவன் தரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனிமனித உரிமைகளைத் தீர்மானிப்பதே அனைவருக்கும் சிறந்தது என்பதை நாம் அறியலாம். அந்த இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே சரி அல்லது நன்மை அல்லது புண்ணியம் என்பதையும் அவன் எதை செய்யக்கூடாது என்று தடுத்துள்ளானோ அதுவே தவறு அல்லது தீமை அல்லது பாவம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
தற்கொலை இறைவனால் தடுக்கப் பட்டது
இறைவனின் அளவுகோல் படி தற்கொலை என்பது தடுக்கப்பட்டது. எனவே இது ஒரு பாவச்செயல் ஆகும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இறைவன் புறத்தில் இருந்து வந்துள்ள இறுதி வேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் மொழிகளும் அவற்றை கூறி நிற்கின்றன.
தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்?
= உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் !  (அல்குர்ஆன்2:195)
= உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!- (குர்ஆன் 4:29)  
இறைவனின்    எச்சரிக்கையையும் மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி