இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 நவம்பர், 2012

பெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி


ஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்ந்த காலம் தொட்டே திராவிடக்கழக இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர். கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் காட்டு மிராண்டி என்ற பெரியாரின் வாசகங்களை நாடு முழுக்க நாற்பது வருடங்களாக முழங்கி வந்தவர் அவர். அவரை திசை மாற்றியது எது?

பேராசிரியர் பெரியார் தாசனின் பள்ளிப் பருவ நண்பன் சிராஜுதீன். பல வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். துபாயில் வைத்து நடந்த இந்த சந்திப்பின் இறுதியில் இருவரும் கட்டித் தழுவி பிரியும் போது சிராஜுதீன் கூறினார், ஏன் நண்பன் ஷேஷாச்சலம் இறக்கும்போது இறைமறுப்பாளனாக இறந்து விடக்கூடாது என்று.

தன் அறைக்குத் திரும்பிய பெரியார்தாசனுக்கு அன்று இரவு கடுமையான காய்ச்சல் கண்டது. அப்போது அக்கேள்வி அவரது மனதை துளைத்து எடுத்தது. கடவுள் இருக்கிறானா? இல்லையா? இருந்துவிட்டால்....? மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன...? நாம் பிரச்சாரம் செய்து வருவதுபோல் கடவுள் இல்லை என்றால், எந்த விபரீதமும் எனக்கு ஏற்படாது. நான் தப்பித்துக் கொள்வேன்,  என் பிரச்சாரத்தினால் திசை திருப்பப் பட்டவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் கடவுள் இருந்துவிட்டால்... ஆத்திகர்கள் சொல்வதுபோல் மரணத்துக்குப் பின் விசாரணை உண்டாகும்  தீர்ப்புநாள் உண்டாகும், சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கும் ,.......நம் நிலை....? இவ்வாறு சிந்திக்க ஆரபித்தார் பெரியார்தாசன்.

இச்சிந்தனை அவரை தான் கற்றிருந்த இந்து மத புத்தமத வேதங்களை எல்லாம் அலசி ஆராய வைத்தது. அங்கு யார் கடவுள் என்ற தெளிவு ஏற்படாததால் அடுத்ததாக பைபிளை ஆராய்ந்தார். அங்கும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவ கடவுள் கொள்கை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தவே, மீண்டும் நாத்திகமே சரி என்ற எண்ணத்துக்கு தள்ளப் பட்டார். அவ்வாறு இருக்கையில் தான் ஒருநாள் திருக்குர்ஆன் தமிழ் வெளியீடு பற்றிய விளம்பரம் ஒன்றை அவர் காண நேர்ந்தது.    

திருக்குர்ஆனை வாங்கி முழு ஈடுபாடோடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடும் படிக்க ஆரம்பித்தார். படிக்கப் படிக்க அவருக்கு படைத்தவனைப் பற்றிய சரியான தெளிவு  ஏற்பட்டது. பிறகு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஹதீஸ் நூல்களையும் படித்து தெளிவு பெற்றார். இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்று முழுமையாக புரிந்து கொண்ட பின் தன்னை அதில் இணைத்துக் கொண்டதாக கூறுகிறார் டாக்டர் பெரியார்தாசன். தன் பெயரை இன்று அவர் டாக்டர் அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

ஆம், உண்மையான பகுத்தறிவுத் தேடல் அவரை சத்தியத்தின்பால் கொண்டு சென்றிருக்கிறது!
52:35 அல்லது அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லுத அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36 அல்லது வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
 மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

2 கருத்துகள்:

 1. இவர் மட்டுமல்ல குர்ஆனை யார் ஆரயமுற்பட்டாலும் அவர்கள் இஸ்லாத்தை கண்டிப்பாக வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் இது மனிதனால் படைக்கப் பட்டதல்ல ஏக இறைவனால் அருளப் பட்டது

  பதிலளிநீக்கு
 2. பிஸ்மில்லாஹ்
  அஸ்ஸலாமு அலைக்கும்!
  உண்மைதான். திருக்குர்ஆனை யார் படித்தாலும், ஆம் யார் படித்தாலும், இஸ்லாத்தின் பக்கம் வருவார்கள். இஸ்லாத்தை நிச்சயம் வாழ்க்கை நெறியாக கொள்வார்.
  அப்படித்தான் ஒரு அமெரிக்கரை இஸ்லாத்திற்கு கொண்டு வந்த அனுபவம் எனக்கு உண்டு.
  -அமீன், ஆம்பூர்

  பதிலளிநீக்கு