ஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள்
அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த
ஒரு கூச்சமோ குற்ற உணர்வோ இன்றி பெண்கள் நடமாடுவது வெட்க உணர்வு அழிந்து வருகிறது
என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உடலின் எந்த பாகங்களை மணமுடித்த
தங்கள் கணவனுக்கு மட்டும் காட்டினார்களோ அந்த பாகங்களை இன்று குடும்பப்பெண்கள்
இலைமறைக்காயாகவோ இறுக்கமான உடை அணிந்தோ அல்லது திறந்தோ கூடப் பொதுமக்களுக்கு
காட்சிப்பொருளாக வைப்பது திருமணம் என்ற புனித ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
விலைமாதர்கள் தங்கள் உடலைக் காட்சிப் பொருளாக்குவது வாடிக்கையாளர்களைக்
கவருவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களை ஷோகேஸில் வைத்து எப்படி
வெளிச்சம்போட்டுக் காட்டி வாடிக்கையாளர்களை ஈர்கிறார்களோ அவ்வாறு குடும்பப்
பெண்கள் தங்களின் உடலின் பாகங்களை காட்சிப் பொருளாக்க வேண்டியதன் அவசியம் என்ன?
ஆண்களின்
ஆடையும் பெண்களின் ஆடையும்
ஆண்களின்
உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம்
உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் காண்கிறோம். ஆனால் ஆண்களை விட பலவீனமானதும்
மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள்
பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும்
கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். சிறுவயது குழந்தைகளின் உடையில்
உட்பட, ஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இந்த
ஆடைக்குறைப்பு பின்பற்றப்படுவதைக்
கண்டுவருகிறோம். குறிப்பாக சில ஆன்மீக அல்லது மத அமைப்புகள் நடத்துகின்ற
கல்விக்கூடங்களில் பெண்களின் ஆடைகுறைப்பை சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்
என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று! இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்?
காற்றோட்டத்திற்கான
ஜன்னல்களா?
இவை உஷ்ணத்தைத் தாங்கமுடியாததால்
காற்றோட்டத்திற்காக திறக்கப்பட்ட ஜன்னல்களா? துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா? அல்லது வறுமை காரணமா? ...இப்படி
இதற்கான பதிலை எப்படி சிந்தித்தாலும் இவை எதுவுமே அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால்
நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.... அது என்ன?
ஆம், பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது
அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில்
உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை! பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது
அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக
வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான
ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம்
தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை
உறுதிப்படுத்துகின்றன.
ஸ்ரீ
தேசிய குற்றவியல் பதிவகத்தின் (NCRB) தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு
நாளும் 95 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். அதாவது ஒவ்வொரு ஒரு மணிக்கு சுமார்
நான்கு பெண்கள் வீதம் இதற்கு பலியாகிறார்கள். (இது காவல் நிலையத்தில் பதிவு
செய்யப்பட்ட கணக்குப்படி. பதிவுக்கு வராத கணக்கை நீங்களே ஊகிக்க முடியும்.) இந்த
குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு
முக்கிய காரணமாக உள்ளது.
பெண்ணுரிமைவாதிகள்
மௌனம்
ஸ்ரீ
நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய
மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம். நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில்
ஒவ்வொருவரதும் விருப்பம். நமது குடும்பத்து பெண்கள் யாரும் அந்நியரால் காதலிக்கப்
படுவதையோ அவர்களோடு ஓடிப் போவதையோ கற்பழிக்கப்படுவதையோ அந்நியனின் கர்ப்பத்தை
சுமப்பதையோ நம்மில் பொறுப்புணர்வு கொண்ட யாருமே விரும்பமாட்டோம். 'விருப்பம்போல் ஆடை அணிவது பெண்களின் உரிமை!' என்று வாய்கிழியப் பேசும் பெண்ணுரிமை வாதிகளாக இருந்தாலும் மாதர்
சங்கங்களின் பொறுப்புதாரிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினர் விடயத்தில் இதை
விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாகவே நாம் அறிவோம். ஆக, யாருமே இது நம் குடும்பத்தில் நடைபெறுவதை விரும்பாவிட்டாலும்
இத்தீமைக்கு முக்கிய காரணமான ஆடைக்குறைப்பை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்?
ஸ்ரீ
பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ
வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல்
இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள்
வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இங்கு நம் அன்புக்குரியவர்களின்
உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது
பெண்களின் ஆடை? இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின்
கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?
இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும்
சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக்
கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த ஏன் சமூக ஆர்வலர்கள் யாரும் முன்வருவதில்லை? பொதுமக்களும் அரசாங்கமும் சரி யாருமே இதில் அக்கறை காட்டுவதில்லை? தனிமனிதர்களும் ஆன்மீக தலைவர்களும்கூட மவுனம் சாதிக்கிறார்கள்?
உண்மையில்
பெண் என்பவள் ஆணைவிட பாதுகாப்பாக ஆடை அணியவேண்டியவள். ஆனால் புதுமைக்
கலாச்சாரத்தின் பெயரிலும், கவர்ச்சி மாயை ஊட்டியும் போலியான 'பெண்ணுரிமை' என்ற பெயரிலும் மூளைசலவை செய்து அவளை
துகிலுரித்து காட்சிப்பொருளாக்கியும் கடைச்சரக்காக்கியும் மாற்றுகிறான் ஷைத்தான்! அதற்கு ஏற்ப பத்திரிகைகளும்
தொலைக்காட்சிகளும் சினிமாக்களும் பெண்ணின் ஆடைகளுக்கான இலக்கணங்களை வடித்துக்
கொடுகின்றன. வெட்க உணர்வுகளும் நீதி நியாயங்களும் மழுங்கடிக்கப்பட்டு அவற்றை
அப்படியே மறுகேள்வி கேட்காமல் மக்கள் பின்பற்ற குடும்பத்தின் புனிதம் காற்றில்
பறக்கின்றது.... சமூகத்தில் கள்ளக்காதல்களும் கற்பழிப்புகளும் கொலைகளும்
கருக்கொலைகளும் தந்தைகள் இல்லா தலைமுறைகள் வளர்வதும் சகஜமாகின்றன. அவனது சதிவலையில் சமூகமும் தம்மையறியாமலே வீழ்ந்து
மக்கள் தங்கள் இம்மை வாழ்வின் மகிமையையும் தொலைத்துவிட்டு மறுமை வாழ்வையும்
கேள்விக்குறியாக்கி வருகிறார்கள்.
உலகின்
விபரீதப் போக்கை மாற்றுவோம் வாரீர்!
மக்களின் இந்த விபரீதமான போக்கை மாற்றி
அமைக்கவேண்டிய பொறுப்பு இறைவிசுவாசிகளை சார்ந்தது. ஆம் அன்பர்களே, இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக
இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன.
அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம்
இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ
சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம்
அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று
நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான
தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.
நாளை
நரக வாசிகளின் ஆடையும் நிலையும் எப்படி இருக்கும் என்பதை சற்று நினைவு கூர்தல்
இங்கு நலம்:
= .... எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ
அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள்
தலைகளின் மேல் ஊற்றப்படும். அதைக் கொண்டு
அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும். இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
(இந்த)
துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம்,
அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும்
வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்). (திருக்குர்ஆன் 22:19- 22)
அதேவேளையில் இறைநம்பிக்கை
கொண்டு இறைவனுக்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட நன்மக்களின் நிலை நேர்மாறாக
இருக்கும்:
22:23. இறைநம்பிக்கை கொண்டு
யார் நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே
புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்;
அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும்
ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும்
பட்டாக இருக்கும்.
இவ்வுலக வாழ்வு அமைதிமிக்கதாக
அமைய வேண்டுமானால் இறைவன் நமக்கு பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறிப்படி நாம் வாழ
முற்படவேண்டும். அதில் தனிமனித நல்லொழுக்கம், ஆண்
பெண் உறவு வரம்புகள், திருமணம் உறவு, கணவன்
மனைவி,தாய், தந்தை, குழந்தைகள், உறவினர் போன்றோரின் கடமைகள் மற்றும் உரிமைகள் என
அனைத்தும் வரையறுக்கப்பட்டு வழங்கப்
பட்டுள்ளன. இதுவே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இறைவன் வழங்கும்
இந்த நெறிமுறைகளை மீறினால் இவ்வுலக வாழ்வில் குழப்பங்களும் கலகங்களும் நிறையும்
என்பது மட்டுமல்ல... இவற்றை மீறுவோருக்கு அவர்கள் இவ்வுலகில் விளைவித்த
குழப்பங்களுக்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்கும்.
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html