இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 25 ஏப்ரல், 2016
சனி, 23 ஏப்ரல், 2016
தனி மனித சீர்திருத்தம் எவ்வாறு?
மனிதன் தன்னைப்பற்றிய சில மறுக்கமுடியாத உண்மைகளை
அடிக்கடி மறந்து விடுவதே அவன் பாவங்கள் செய்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதில் மிக முக்கியமானவை மூன்று. இவற்றை உரிய முறையில் அவனது பகுத்தறிவு ஏற்கும்
வகையில் அவனுக்கு நினைவூட்டினால் அவனை சீர்திருத்த முடியும். நபிகளாரின்
முன்மாதிரியில் இருந்தும் அதைத்தான் நாம் காண்கிறோம்.
இஸ்லாம் இந்த
மூன்று உண்மைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில்
இருந்து தடுக்கிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில்
இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும்
நாடுகளிடையே ஒற்றுமையையும் நிலைநாட்ட வழிகோலுகிறது.
1.
ஒன்றே குலம்:
அனைத்து
மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற உண்மையை திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு
நினைவூட்டுகிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த
உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து
ஏராளமான ஆண்களையும்,பெண்களையும்
பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை
வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!)
அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ்
என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நாம்
அனைவரும் ஒரே குடும்பத்தினரே என்ற உணர்வு மேலோங்கும்போது சக மனிதனை தனது சகோதரனாக
சகோதரியாகப் பார்க்கும் பண்பு மனிதனுக்கு வந்துவிடுகிறது. அங்கு நிறத்தின்,
இனத்தின், மொழியின், நாட்டின் பெயரால் உடலெடுக்கும் பிரிவினைவாதங்களும் உயர்வு
தாழ்வுகளும் கிள்ளி எறியப்படுகின்றன. மாற்று மொழியினரும் நிறத்தவரும் அண்டை
மாநிலத்தவரும் நம் சகோதரர்களே என்ற உணர்வு மக்களை ஆட்கொண்டால் இன்று நடக்கும்
பெரும்பாலான மனித உரிமை மீறல்களையும் கலவரங்களையும் இல்லாமல் ஆக்கிவிடலாம்.
2.. ஒருவனே
இறைவன்:
ஒன்றே
மனிதகுலம் எனும்போது நம் அனைவருக்கும் இருப்பது ஒரே ஒரு இறைவனே என்பது தெளிவு. அவனது
தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கற்பிக்கிறது:
சொல்வீராக:
இறைவன் ஒருவனே, அவன்
தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும்
இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவன்
என்று ஒருவன் இருந்தால் அவனது தன்மைகள் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதை
பகுத்தறிவோடு சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இறைவனை இவ்வாறு புரிந்துகொண்டு
இடைததரகர்கள் யாருமின்றி அவனை நேரடியாக வணங்க இஸ்லாம் கற்றுத் தருகிறது. இவ்வாறு
வணங்கும்போது கடவுளின் பெயரால் யாரும் யாரையும் ஏமாற்றவோ கடவுள் அல்லாதவற்றைக்
காட்டி இவைதான் கடவுள் என்று கூறி பணம் சம்பாதிக்கவோ முடியாது. இடைத்தரகர்களும்
மூடநம்பிக்கைகளும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் ஒழிகின்றன.
இறைவன்
அல்லாத கற்பனை உருவங்களுக்கோ உயிரும் உணர்வும் அற்ற படங்களுக்கோ சிலைகளுக்கோ எந்த
இறைத்தன்மையும் கிடையாது என்றும் அவற்றை
வணங்குவதோ அவற்றுக்கு மரியாதை செய்வதோ பெரும் பாவமாகும் என்றும் இஸ்லாம்
திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு
சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம்
நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன்
5:72)
3. இறைவனின் நீதிவிசாரனையும் மறுமை
வாழ்வும்.
இன்று நாம்
வாழும் பிரபஞ்சமும் தற்காலிகமானது. இதில் மனிதர்களாகிய நம் வாழ்வும்
தற்காலிகமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணையில் வந்து போகிறோம்.
இந்த குறுகிய வாழ்வில் யார் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறார்களோ
அவர்களுக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வாய்க்கும்.
இந்த உண்மையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
ஒவ்வோர்
ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும்
- இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள்
செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர்
(நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு
செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக
வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
(திருக்குர்ஆன் 3:185)
அதாவது, இவ்வுலகில்
நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும்
புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.
மேற்படி
நம்பிக்கைகளை வெறும் எண்ணத்தளவில் விட்டுவிடாது செயல்முறையில் கொண்டுவர ஐவேளைத்
தொழுகை, ஜகாத் என்னும் கட்டாய தர்மம், ரமஜான் மாதத்தில் விரதம் போன்றவற்றைக்
கடமைகளாக்கியுள்ளது இஸ்லாம். மட்டுமல்ல இவற்றைக் கூட்டாக இணைந்து நிறைவேற்றவும்
பணிக்கிறது. அதனால் சமூக சீர்திருத்தமும் சமத்துவம் சகோதரத்துவம் பேணுவதும்
எளிதாகிறது.
இந்த
நம்பிக்கைகளும் நடைமுறைகளும் சமூகத்தில் வேரூன்ற நாளடைவில் மொழி,நிறம், இடம்,
செல்வம் போன்ற எதுவும் மனித இனத்தைப் பிரிக்கமுடியாது. சமத்துவமும் சகோதரத்துவமும்
தானாகவே சமூகத்தில் மலரும். நாட்டு வளங்களை சகோதர உணர்வோடும் இறைவழிகாட்டுதல்களின்
அடிப்படையிலும் பங்கிட்டுக்கொள்ள மக்கள்
தானாகவே முன்வருவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகளை இறைப்பொருத்தத்திற்காக
மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்! அவ்வாறு மாநிலங்களுக்கு மத்தியில் பகைமை உணர்வுகள்
மறையும். எல்லைக் கோடுகள் மறைந்து அகண்ட பாரதமும் உருவாகும்! காலப்போக்கில் நாடுகளும்
மறைந்து அனைத்து உலகும் ஒன்றாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவு நனவாகும்!
இது ஒரு
மாயையோ அல்லது வெற்றுக்கோஷமோ அல்ல. இந்த நம்பிக்கையின் துளிகளை நீங்கள் உலகெங்கும்
காண்கிறீர்கள். ஆம், உலகெங்கும் இக்கொள்கை பரவப்பரவ அதன் தாக்கத்தினால்
ஒருகாலத்தில் ஜாதி, நிறம் இடம் போன்றவற்றால் பிளவுண்டு கிடந்த சமூகங்கள்
பள்ளிவாசல்களில் அணியணியாக அணிவகுப்பதிலும் ஒரே சீருடையில் ஹஜ்ஜின் போது
சங்கமிப்பதிலும் காண்கிறீர்கள்
நாம் திருந்த நாடும் திருந்தும்!
‘பாருக்குள்ளே
நல்ல நாடு பாரத நாடு’ என்பது கவிதை வரிகளானாலும் அது உண்மையே என்பதை நாம்
ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கிறோம். பல்வேறு மதங்களும், மொழிகளும், இனங்களும்
கலந்துறவாடும் இந்நாடு அவ்வப்போது சுயநல அரசியல் சக்திகளால் கலவர பூமியாக்கப்
பட்டாலும் காலப்போக்கில் அனைத்தையும் மறந்து நாம் மனிதர்கள் என்ற அடிப்படையில்
இணைந்து வாழும் விந்தையை பாரில் எங்குமே காண முடியாது. கருத்து வேறுபாடுகளும்
மொழிகளும், நிறங்களும் நம்மைப் பிரித்தாலும் நாட்டின் நலன் என்பது நாம் அனைவரும்
நாடும் ஒன்று.
இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளான மழை,
காற்று, விளைச்சல்கள் போன்றவற்றை அனுபவிக்கும்போது நமது பேதங்கள் குறுக்கே
நிற்பதில்லை. அதே போல இயற்க்கை சீற்றங்களும், ஆபத்துக்களும் நம்மைத் தாக்கும்போது
நமது பேதங்கள் மறந்தே அவற்றை எதிர்கொள்ளவும் அவற்றில் இருந்து தற்காத்துக்
கொள்ளவும் செய்கிறோம். அவ்வாறே இன்று நாட்டைத் தாக்கி நிற்கும் அரசியல்
சூதாட்டத்தையும் எதிர்கொள்ளவேண்டிய முறையில் எதிர்கொண்டு ஆவன செய்யாவிட்டால் நாம்
அனைவருமே அழிவுக்கு உள்ளாவோம் என்பது உறுதி. அந்த வகையில் நம் நாட்டை பீடித்துள்ள
இந்த நோயில் இருந்து காப்பாற்ற ஒரு அருமையான வழிமுறையை இஸ்லாம் முன்வைக்கிறது.
சீர்திருத்தத்தின் அடிப்படை
அதைப் பகிர்ந்து கொள்ளும் முன்னால் நாம்
முன்வைக்கும் சீர்திருத்த திட்டத்தின் அடிப்படை என்ன என்பதை முதலில் விளக்குவோம்.
நாம் அன்றாட வாழ்வில் மிக்ஸி, துணி துவைக்கும்
இயந்திரம், ஸ்கூட்டர் போன்ற பல கருவிகளையும் உபகரணங்களையும் வாகனங்களையும்
பயன்படுத்துகிறோம். இவற்றை பக்குவமாக பழுதில்லாமல் நீண்ட காலம் பயன்படுத்த
வேண்டுமானால் அவற்றை உண்டாக்கியவர்கள் நமக்கு வழங்கும் கையேட்டில் கூறியுள்ளபடியே
பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்றாக அறிவோம். பொருளை தயாரித்தவர்களுக்கே
அவற்றின் நுணுக்கங்கள் நன்றாக தெரியும் என்பதாலேயே நாம் அவ்வாறு செய்கிறோம் அல்லவா?
ஆனால் மிக்சி,
ஸ்கூட்டர் இவற்றை விட பல்லாயிரம் மடங்கு நுணுக்கங்களை (complications) சுமந்து நடப்பவர்கள்
நாம்! அவற்றை நாம் செய்யவும் இல்லை. உள்ளிருந்து கொண்டு இயக்குவதும் நாமல்ல!
அப்படியிருக்க நம்மைப் படைத்தவனும் நம்மை பரிபாலித்து வருபவனும் ஆன இறைவன் இவற்றை
எப்படி பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்க அப்படி பயன்படுத்துவதுதானே முறை?
நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ நம்மைப் படைத்தவன்
வழங்கிய வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது.
இவ்வார்த்தைக்கு அமைதி என்றும் கீழ்படிதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு.
இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காண
முடியும். மறுமையிலும் அமைதியை –மோட்சத்தை- அடைய முடியும் என்பது இஸ்லாம்
முன்வைக்கும் தத்துவமாகும்.
இந்த சீரிய வாழ்க்கைத் திட்டம் தனிநபர் வாழ்விலும்
குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை இதைப் பின்பற்றுவோர் நன்றாக அறியவும்
அனுபவிக்கவும் செய்கிறார்கள். இது இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனான நம் இறைவன்
தரும் வாழ்க்கைத் திட்டம் என்பதால் இதில் மனிதன் சந்திக்கக்கூடிய அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை நம்மால் காணமுடிகிறது.
திரண்டெழும் மக்கள் சக்தி
தனிமனிதனுக்குள் இஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம்
அவனை நல்லொழுக்கம் உள்ளவனாக ஆக்குவதோடு அவனை சமூகப் பொறுப்புள்ளவனாகவும் ஆக்குகிறது.
அதன் காரணமாக நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் அவன் தயாராகிறான். சக மனிதன்
சகோதரனே என்ற உணர்வும் இறையச்சமும் மறுமை மீது உள்ள நம்பிக்கையும் அவனை சமூகத்திற்காக
தியாகங்கள் மேற்கொள்ளத் தூண்டுகின்றன. வெறும் நம்பிக்கையோடு நில்லாமல் ஐவேளைத் தொழுகைகளைக்
கூட்டாக நிறைவேற்றுதல், ஜக்காத் என்ற ஏழைவரி போன்ற இஸ்லாமியக் கடமைகள் மனித
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலுவாக வளர்க்கின்றன. இவ்வாறு உருவெடுத்து வளரும்
மக்கள் சக்திக்கு முன்னால் தீய சக்திகள் ஆட்டம்கண்டு அழிந்து போகின்றன. சமூகத்தில்
மறுமலர்ச்சியும் உண்மையான சீர்திருத்தங்களும் உண்டாகின்றன. இனம், நிறம், மொழி, இடம் போன்ற தடைகளை மீறி உருவாகும் இந்த மனிதகுல ஒற்றுமை அகில உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.
வாருங்கள் நாம் மேலே பட்டியல் இட்டுள்ள குறைபாடுகளை
இஸ்லாம் எவ்வாறு நீக்குகிறது என்பதைக் காண்போம்:
மேலே பட்டியலில் இடம்பெற்றுள்ளவையும் இன்னும்
இடம்பெறாதவையும் ஆன அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய முதன்மையாக இஸ்லாம்
தனிமனித நல்லொழுக்கத்தை அடிப்படையாக்குகிறது. அதாவது ‘முதலில் உங்களை நீங்கள்
சீர்திருத்திக் கொள்ளுங்கள். நாடு தானே சீர்திருந்தும்!’ என்பது இஸ்லாம்
மனிதகுலத்துக்கு கற்பிக்கும் முதல் பாடமாகும். இறைதூதர்களை அவ்வப்போது இறைவன்
அனுப்பி வந்ததன் நோக்கமும் இதுவேயாகும். தர்மத்தை பூமியில் நிலைநாட்ட வந்த அனைத்து
இறைதூதர்களும் கடைப்பிடித்த வழிமுறை இதுவேயாகும். அந்த தூதர்கள் வரிசையில் இந்த
பூமிக்கு இறுதியாக வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் இவ்வாறுதான்
கொடூரர்களாக வாழ்ந்துகொண்டு இருந்த அரபு நாட்டு மக்களை பண்படுத்தி ஒழுக்க
சீலர்களாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்த ஒரு
வளமான பேரரசையும் நிறுவிக் காட்டினார்கள். அதோடு நில்லாமல் இறைவனுக்கு பதில்
சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மிக்க ஜனாதிபதிகள் பிற்காலத்தில் உருவாக
வழிவகை செய்தார்கள்.
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
வெள்ளையன் வெளியேறவில்லை
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html
தனிநபர் நல்லொழுக்கம் எவ்வாறு?
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_42.html
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
வெள்ளையன் வெளியேறவில்லை
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html
தனிநபர் நல்லொழுக்கம் எவ்வாறு?
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_42.html
வெள்ளி, 22 ஏப்ரல், 2016
வெள்ளையர் வெளியேறவில்லை!
‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்
பாரதநாடு’ என்று பாடியவரும் பொய்யுரைக்கவில்லை.
சாரே ஜஹான்ஸே அச்சா என்று பாடியவரும்
பொய்யுரைக்கவில்லை. அந்த அளவுக்கு அது உண்மை! நாம் அனைவரும் அதை அனுபவபூர்வமாகவே
அறிவோம். ஆனால் இன்று இந்த வளங்கள் நிறைந்த நாட்டின் நிலை எவ்வாறு உள்ளது? இயற்கை
வளத்தாலும் மனிதவளத்தாலும் அறிவு வளத்தாலும் ஆன்மீக வளத்தாலும் உயர்வு பெற்ற நாடாக
உள்ள பாரதத்தின் நிலை எவ்வளவு அவலம் நிறைந்ததாக மாறியுள்ளதைப் பாருங்கள்:
= தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின்
சமீபத்திய அறிக்கைப்படி இந்தியாவில் ஒவ்வொரு 4
நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார்.
= உலகவங்கி
வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கைப்படி, பணக்காரர்கள் கோடிகளை
குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏழைகளின் நிலை மிகமிக மோசமாக உள்ளது. உலகிலுள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர்
இந்தியாவில் தான் உள்ளனர். இந்திய மக்களில் 77 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும்
குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.
வளங்கள்
நிறைந்த நம் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு வேறுபல உள்நாட்டுக் காரணங்கள்
இருந்தாலும் முக்கியமாக நம்மை நெருக்குவது இவைதான்:
தொடரும் மறைமுகக் காலனி ஆதிக்கம்:
வியாபாரிகளாக நம் நாட்டிற்குள்
நுழைந்த ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் மூலம் நம்மை அடிமைப்படுத்தி நம்
நாட்டுவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து நாட்டை விட்டு
வெளியேறும்போது பெயரளவில் சுதந்திரத்தைக் கொடுத்தாலும் இன்னும் அவர்களின்
தந்திரமான வியாபார ஒப்பந்தங்களின் மூலம் நம்மை அடிமைப்படுத்தியே வைத்துள்ளார்கள்
என்பதே உண்மை. அவர்களின் பிரித்தாளும் (divide and rule) சூழ்ச்சிக்கு
இரையாகியுள்ள நாமும் சரி நம் அண்டை நாடுகளும் சரி ஏனைய உலக நாடுகளும் சரி
அவர்களின் வியாபாரத் தந்திரங்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில் இருப்பதையே
காண முடிகிறது. அவர்கள் தயாரிக்கும் ஆயுதங்களை இந்நாடுகள் வாங்கவேண்டும்
என்பதற்காகவே
இந்நாடுகளிடையே தந்திரமாகப் பகைமை
மூட்டப்படுகிறது. இதனால் இந்நாடுகள் தங்களின் மூன்றில் ஒரு பங்கு வருமானத்தை
போர்களுக்காகவும் இராணுவத்துக்காகவும் இராணுவத் தளவாடங்களில் முதலீடு
செய்வதற்காகவும் செலவிடும் நிர்பந்தங்களுக்கு ஆளாகிறார்கள்.
உலக வருமானங்களை உறிஞ்சும் வல்லரசு
அமைப்புகள்
= தாங்கள் அச்சடிக்கும் டாலர் என்ற
வெற்றுக் காகிதத்தை தந்திரபூர்வமாக உலகெங்கும் திணித்து தங்களின் அடக்குமுறை மூலம்
உலக நாடுகளையும் அவற்றின் வளங்களையும் தங்களது ஆதிக்கத்தின் கொண்டுவந்துள்ள ஏகாதிபத்திய
வாதிகள் உலகத்திலுள்ள கொழுத்த வருமானங்கள் ஈட்டும் அனைத்து வியாபார,
உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு (entertainment), கட்டுமான
(infrastructure), நிறுவனங்களையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன்
மூலமும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். மட்டுமல்ல, வருமானங்கள் கொழிக்கும் துறைகளான மருத்துவம், கல்வி, மதம் இவற்றையும்
இவர்கள் தங்களின் திட்டங்களின் மூலமும் கையாட்கள் மூலமாகவும் திறம்பட நிர்வகித்து
வருகிறார்கள்.
துணைபோகும் கார்பரேட் நிறுவனங்களும்
கையாட்களும்:
எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்களை ஒருபுறம் ஆசை காட்டியும் மறுபுறம் மாபியாக்கள் மூலம் மிரட்டியும் மேற்படி
நோக்கங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஒத்துழைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்க தாராளமாக
பணமும் பொருட்களும் வாரி வழங்கப் படுகின்றன. உரிய முறையில் தந்திர உத்திகள்
கையாளப்படுகின்றன.
இந்த வஞ்சகச் செயல்பாடுகள் காரணமாகவே
பிறக்கும் ஒவ்வொரு குடிமகனும் கடனாளியாகவே பிறக்கிறான். வரிச்சுமையும் விலைவாசி
உயர்வும் வறுமையும் தற்கொலைகளும் அப்பாவி நாட்டுமக்கள் மீது அநியாயமாகத் திணிக்கப்
படுகின்றன.
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் 1
http://quranmalar.blogspot.com/2016/03/blog-post_22.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் 1
http://quranmalar.blogspot.com/2016/03/blog-post_22.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்!
இயற்கை வளங்களும், நிலத்தடி வளங்களும் மனித வளமும் அறிவு வளமும் ஆன்மீக வளமும் ஒருசேரப் பெற்ற நாடு நம் பாரதத்தைப் போல் உலகெங்கிலும் காண முடியாது. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்பது கவிதை வரிகளானாலும் மறுக்க முடியாத உண்மையே! இப்படிப்பட்ட பெருமைமிக்க நாடு தொடர்ந்து அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி இன்னல்களைத் தொடர்ச்சியாக அனுபவிப்பதற்குக்
அடிப்படையாக திகழும் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவது நாட்டுப்பற்று மிக்க ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமையாகும்.
அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்...
அ) தனிநபர் ஒழுக்க சீர்கேடு
நாட்டில் குற்றங்களும் பாவசெயல்களும் மோசடிகளும்
நாளுக்கு நாள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய
குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இல்லாமையாகும். தனி நபர் வாழ்விலும் குடும்ப
வாழ்விலும் சமூக வாழ்விலும் தன் செயல்பாடுகளுக்காக தன்னைத் தட்டிக்கேட்க யாரும்
இல்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் காணலாம். நாடே குற்றம்
செய்யும்போது நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது என்ற உணர்வும் சிறிய குற்றம்
செய்பவன் பெரிய குற்றம் செய்பவனைக் காரணம் காட்டி தன் செயலை நியாயப்படுத்திக்
கொள்ளும் போக்கும் குற்றங்கள் பற்றிய பொறுப்புணர்வையும் வெட்க உணர்வையும் சமூகத்தில் இல்லாமல் ஆக்கி விடுகின்றன..
ஆ) சரியும் தவறும் வரையறுக்கப்படாமை
மக்களின் செயல்பாடுகளில் சரி எவை தவறு எவை நல்லவை
எவை தீயவை எவை என்றோ நாட்டில் நியாயம் எது அநீதி எது என்பதையோ தீர்மானிக்க தெளிவான
உறுதியான எந்த அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல்
இருப்பதற்கு முக்கிய காரணமாகும். சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும்
என்பது ஆளுக்கு ஒரு நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது
இதன் காரணத்தினால்தான்!
இ) மிக பலவீனமான தொலைநோக்கு இல்லாத சட்டங்கள்
= பலவீனமானவையும்
சிறிதும் தொலை நோக்கில்லாதவையும் ஆன சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன்
காரணமாக விபச்சாரம், மது, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை போன்ற சமூகத்திற்கு தீங்கு
விளைவிக்கும் கொடிய குற்றங்கள் கூட சட்ட அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள்
பெருகவும் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்து திருட்டும் கொள்ளையும் கற்பழிப்புகளும்
கூட எதிர்காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறக்கூடிய அபாயமும் நாட்டில் உள்ளது.
ஈ) தவறான ஆன்மீகம்.
பொதுவாக ஆன்மிகம் என்பது மனிதனை பண்புள்ளவனாக
ஆக்கக் கூடியது. ஆனால் கடவுளைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக மக்கள் உள்ளங்களில்
இருந்து கடவுள் நம்பிக்கையும் இறையச்சமும் விலகிப் போகின்றன. உதாரணமாக சர்வ
வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட கடவுளுக்கு பதிலாக உயிரும் உணர்வும் இல்லாத
பொருட்களையும் இறந்துபோனவர்களின் சமாதிகளையும் காட்டி அவற்றையெல்லாம் கடவுள்கள்
என்று கற்பித்தால் அங்கு மக்களிடம் இறையச்சம் என்பது விலகி பாவங்கள் செய்யும் போது
உண்டாகும் குற்ற உணர்வு உண்டாகாமல் போகிறது. எந்த ஒரு பாவத்தையும் தயக்கமின்றி
செய்யும் துணிச்சல் வந்துவிடுகிறது.
உ ) கற்பனைப் பாத்திரங்களின் ஆதிக்கம்
= நாட்டின் சுமார் 44 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்துவரும் நிலையில் நாட்டுக்கு அறவே
பயனில்லாத பல கற்பனைப் பாத்திரங்களுக்காக நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகின்றன.
தலைவர்களின் சிலைகளுக்கும் மொழித்தாய்களுக்கும் நினைவிடங்களுக்கும் இவற்றைத்
தொடரும் மூடநம்பிக்கைகளுக்கும் வீண்சடங்குகளுக்கும் பெருவாரியான செல்வம் அரசால்
செலவிடப்படுகிறது. இவற்றின் பெயரால் மூளும் கலவரங்களும் உயிர் மற்றும் உடமை
சேதங்களும் பாமரர்களை தொடர்ந்து வறுமையிலும்
வாட்டத்திலும் நீடிக்க வைக்கின்றன.
ஊ) தகுதியற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு
= நாட்டின் உற்பத்திக்கோ மேம்பாட்டுக்கோ எந்தவித
பங்களிப்பும் செய்யாததும் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கவும் செய்கின்ற திரைப்படம்
மற்றும் கிரிக்கெட் போன்ற கேளிக்கைகளுக்கு ஊடகங்களும் அரசும் வீண் முக்கியத்துவம்
கொடுத்து ஊக்குவிப்பதால் நாட்டு மக்கள் இதன் பெயரால் வெகுவாக கொள்ளை அடிக்கப்
படுகிறார்கள். இவர்கள் நாட்டு மக்களின் உழைப்பின் கனிகளை சுரண்டி வாழ்கிறார்கள்.
அவர்களின் நேரங்களை பாழ்படுத்துகிறார்கள். ஆனால் மக்களின் அறியாமையால் நாட்டை
ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத நடிக நடிகையர்களின் காலடிகளில் நாட்டின் ஆட்சிபீடமும்
ஒப்படைக்கப் படுகிறது.
எ) ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளை
இறைவழிபாடு
என்ற பெயரில் எல்லா மதங்களையும் சார்ந்த இடைத்தரகர்கள் நாட்டு மக்களிடையே
மூடநம்பிக்கைகள் பலவற்றைப் பரப்பி இவற்றின் பெயரால் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள்.
இதன்மூலம் பொருட்செலவு இல்லாத எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப்படுகிறது.
நாட்டுமக்களின் சேமிப்பும் உழைப்பும் இவர்களால் கறக்கப்பட்டு இவர்கள் நடத்தும்
நிறுவனங்களிலும் ஆசிரமங்களிலும் பதுக்கப்படுகிறது.
ஏ) கடவுளின் பெயரால்
மனிதகுலத்தில் பிரிவினைகள்
= மதங்களின் பெயரால் திணிக்கப்படும்
மூடநம்பிக்கைகளின் விளைவாக மனித இனம்
கூறுபோடப்பட்டு மனித சகோதரத்துவமும் சமத்துவமும் மறுக்கப்படுகிறது. அதனால் மனிதகுலத்தில் தீண்டாமையும் வெறுப்பும்
விதைக்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு சுயநலமிகள் அரசியல் ஆதாயங்கள் தேடுவதால் இனக்
கலவரங்களும் மதக்கலவரங்களும் கற்பழிப்புகளும் படுகொலைகளும்
தொடர்கதைகளாகின்றன.
ஐ) முறையற்ற பொருளாதாரக் கொள்கை:
முறையற்ற வரிவிதிப்பு, வட்டி சார்ந்த வங்கி முறை,
சுரண்டல்காரர்களின் அரசியல் ஆதிக்கம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு போன்றவற்றின்
காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சியும் வணிகமுறைகளும் விபரீதமான முறையில்
பாதிக்கப்படுகின்றன. அதனால் கறுப்புப்பணம், பதுக்கல், வரி ஏய்ப்பு, இலஞ்ச ஊழல்கள்
போன்றவை மலிந்து நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன.
ஒ) குறைபாடுகள் மலிந்த கல்வித் திட்டம்
கல்வியின் முதல் நோக்கம் மனிதனை பண்புள்ளவனாக
ஆக்குவதே. அதற்கான எந்த பாடத்திட்டங்களும் நமது கல்வி முறையில் இல்லை. பொருள்
சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி கற்பிக்கப்படுவதால்
தங்களுக்காக உழைத்த பெற்றோர்களைப் புறக்கணிக்கவும் முதியோர் இல்லங்களில்
சேர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் மக்கள். மேலும் வாழ்க்கையில் எந்தவகையிலும்
பயன்படாத பலவற்றையும் பாடத்திட்டத்தில் உட்படுத்தி மாணவர்களின் நேரங்கள் கணிசமான
அளவில் வீணடிக்கப்படுகிறது.
ஓ) ஊடக வஞ்சனை
இன்று ஊடகங்களின் மூலம் வதந்திகள் மற்றும் பொய்யான
செய்திகளை பரவவிட்டு பொதுமக்களை ஏமாற்றி அதன்மூலம் பகல் கொள்ளைகளையும்
இனக்கலவரங்களையும் சுயநல சக்திகள் நிகழ்த்துகின்றன. இதனால் நாடு சந்திக்கும்
பொருட்சேதங்களும் உயிர் சேதங்களும் அளவிட முடியாதவை. ஆதாரம் ஏதுமின்றி இவ்வாறு பரப்பப்படும்
தகவல்கள் திட்டமிட்டு பரப்பபடுபவையே என்று பின்னர் நிரூபணம் ஆனாலும் இந்த
வஞ்சகர்களையும் ஊடகங்களையும் தண்டிக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் தொடர்ந்து
நாடு இக்கொடுமைக்கு பலியாகிறது.
பட்டியலிட இன்னும் பல குறைபாடுகள் இருந்தாலும்
விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
இந்த தொடரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து
நாட்டைக் காப்பாற்ற வழியேதும் உண்டா? விழி பிதுங்கி நிற்கும் நம் நாட்டுக்கு
இனியோர் விடுதலை என்று பிறக்கும்? ....ஏங்காத உள்ளங்கள் கிடையாது என்பதை அறிவோம்.
வெள்ளையர் வெளியேறவில்லை!
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html
வெள்ளையர் வெளியேறவில்லை!
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே?
உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கொண்டது நம் நாடு. இன்று ஜனநாயகம் என்ற
பெயரில் நம் மனதுக்கு விருப்பமானவர்களை ஆட்சித்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறோம். சுயநலமற்றவர்கள்,
நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்கள்,
பொறுப்புணர்வு மிக்க தொண்டர்கள் என்றெல்லாம் அவர்கள் கூறும்
வாய்வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறோம். ஆனால் இவ்வாறு ஆட்சிப்
பொறுப்பை ஏற்றவர்கள் நமக்களித்த வாக்குறுதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல் தாங்கள்
ஏற்றெடுத்த பொறுப்பை நிறைவேற்றாததோடு நமக்குப் பலவிதத்திலும் மோசடி செய்கிறார்கள்.
அவர்களின் முழு நோக்கமும் பணமும் பதவியும்தான் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை
என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். தங்களின் மற்றும் தங்கள் வாரிசுகளின் பொருளாதார
மேம்பாடு மற்றும் புகழ் என்பவை மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது.
இது நமது
கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக்
கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும்
எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி, இடம் இவற்றின்
அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன உணர்வுகளையும் மத
உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால் தங்கள் வாக்கு
வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். இணக்கத்தோடு வாழநினைக்கும் பன்மை
சமூகங்களுக்குள் வீண்பகை மூட்டி வன்முறைகளுக்கு மக்களை பலியாக்குகிறார்கள். சட்டம்
ஒழுங்கு நீதி இவற்றை கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக
இவற்றை அப்பட்டமாக மீறுகிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது
அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில்
அமர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள்
இவர்களின் அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள்
ஏதும் இல்லாத காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில்
உள்ளோம்.
ஒரு கொடுங்கோலனிடம்
இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும் அவலம்! ஆள்வதற்கு அறவே
தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும்
நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம்!
மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம் வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக்
கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை!
ஒருபுறம் தேசத்தை நேசிப்பவர்களாகக்
காட்டிக்கொண்டு மறுபுறம் நாட்டுமக்களுக்கு வஞ்சகம் இழைக்கும் வண்ணம்
நாட்டுவளங்களையும் நீர்நிலைகளையும் அப்பாவிகளின் உடமைகளையும் அந்நிய முதலாளித்துவ
சக்திகளுக்கு தாரை வார்க்கிறார்கள். அதன் காரணமாக ஏழை விவசாயிகளின் அல்லது
வியாபாரிகளின் பிழைப்பில் மண்விழுந்து அவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை
அன்றாடம் கேட்கிறோம்.
செழிப்பான
நாட்டு வளங்களும் மனித வளங்களும் அறிவு வளமும் பாரெங்கும் காணாத அளவு நம் நாட்டில்
இருந்த போதும் இவை அனைத்தும் இன்று நடக்கும் அரசியல் சூதாட்டத்துக்கு பலியாகும்
நிலை. தொடர்ந்து மக்கள் வறுமையிலும் அச்சத்திலும் நீடிக்கும் நிலை. கொலை கொள்ளை
விபச்சாரம் சூதாட்டம் மது போதைப்பொருள் போன்ற தீமைகளின் ஆதிக்கத்தில் இருந்து
விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மட்டுமல்ல, இவற்றை சட்டபூர்வமாக்கி
இவற்றைக் கொண்டே நாட்டின் வருவாயையும் ஆளுபவர்களின் வருவாயையும்
பெருக்கிக்கொள்ளும் அவலம். அவலங்களின் பட்டியல் இன்னும் நீளும் என்பது யாரும்
அறிந்த உண்மை!
ஏன் இந்த
அவலங்கள்? ஏன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் படுகிறோம்? காரணங்களையும் தீர்வுகளையும் அறிய கீழ்கண்ட தலைப்புகளைப் படியுங்கள்:
நாட்டின் அவல நிலைக்குக் காராணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
வெள்ளையர் வெளியேறவில்லை!
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html
நாம் திருந்த நாடும் திருந்தும்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_23.html
தனிமனித சீர்திருத்தம் எவ்வாறு?
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_42.html
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
வெள்ளையர் வெளியேறவில்லை!
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html
நாம் திருந்த நாடும் திருந்தும்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_23.html
தனிமனித சீர்திருத்தம் எவ்வாறு?
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_42.html
வியாழன், 21 ஏப்ரல், 2016
மரணம் நெருங்கும்போது நிதானம்
மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள். முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனையும் செய்து விடுவார்கள்.
வாழ்க்கை எனும் பரீட்சை
ஆனால் ஒரு இறைவிசுவாசியைப் பொறுத்தவரை இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை எனவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடம் என்பதையும் எப்போதும் மறந்துவிடக்கூடாது. இறைவன் தன் திருமறையில் ஒரு விசுவாசி எப்படி இருக்கவேண்டும் என்பதை இவ்வாறு கூறுகிறான்:
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
மரணத்தை இறைவனிடம் வேண்டக்கூடாது
எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது. மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
= தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5671, 6351
இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
= ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319
= இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறைவனைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521
எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதன், 20 ஏப்ரல், 2016
வாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்
இன்று நாம் வாழும் வாழ்க்கை என்பது என்ன? இதன்
நோக்கம் என்ன? தற்காலிகமான இவ்வாழ்வுக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது? இங்கு நாம்
எப்படி வாழவேண்டும்? இதுபோன்ற கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான மற்றும் உறுதியான
பதில்களையும் வழிகாட்டுதல்களையும் இறுதிவேதமான
திருக்குர்ஆனில் இருந்தும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களில்
இருந்தும் நாம் பெறலாம்
அதை சுருக்கமாகக்
கூறுவதென்றால்........
v இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது ஒரு
பரீட்சை போன்றது.
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும்
வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன்
(யாவரையும்) மிகைத்தவன்; மிக
மன்னிப்பவன்.
18:7. (மனிதர்களில்)
அழகிய செயலுடையவர்கள் யார்என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக
பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள்
ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால்
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
v இங்கு நமது வினைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன.
36:12 .நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே
உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்)
அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள்
விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம்
ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
நமது செயல்கள் பதிவாகின்றன என்பதை உணர மிகப்பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவை இல்லை. சற்று நம் மூளையைப் பற்றி சிந்தித்தாலே போதும். நாம் கவனித்து செய்யும் செயல்கள் மட்டுமல்ல கவனம் செலுத்தாமல் செய்யும் செயல்கள் (conscious and subconscious) என அனைத்தும் அங்கு பதிவாகின்றன. இவை போக ஒலி, ஒளி வாசம் போன்ற அனைத்துமே மின்காந்த அலைகள் என்பதை நாம் அறிவோம். அவை தன் பாதையில் எதிகொள்ளும் திடப் பொருட்களின் மீது தங்கள் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த அடிப்படையில்தான் ஆடியோ, வீடியோ பதிவுகள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
v இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது
ஒருநாள் இவ்வுலக அழிவு ஏற்படும். தொடர்ந்து மீண்டும் இறைக் கட்டளை வரும்போது
அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்.
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக்
கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது
அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50. அப்போது அவர்கள் மரணசாசனம் சொல்ல சக்தி
பெறமாட்டார்கள்; தம்
குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
78:17-20 .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே
இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
இன்னும், வானம்
திறக்கப்பட்டு பல வாசல்களாகி விடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
v மீண்டும் ஒரு இறைக் கட்டளை வரும்போது
இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் ஒருவர் விடாமல் மீண்டும்
உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள்.
64:7 (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே
மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல! என்னுடைய
இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக
எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக
அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர்
கூறுவீராக.
36:51- 52 .மேலும் ஸூர் ஊதப்படடதும் உடனே அவர்கள்
சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். ''எங்களுடைய துக்கமே!
எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று அவர்கள்
கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும் (அவனுடைய) தூதர்கள்
உண்மையெனக் கூறியதும் இதுதான்'' (என்று அவர்களுக்குக்
கூறப்படும்).
(அர்ரஹ்மான் என்றால் கருணையாளனான இறைவனைக் குறிக்கும் சொல்)
v ஒவ்வொரு மனிதர்களும் அவரவர்களின்
வினைப் பட்டியல் அவர்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள்
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது
முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக்
கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும்
சாட்சி சொல்லும்.
99:7-8 .எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை
செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை
செய்திருந்தாலும், அ(தற்குரிய
பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
v யாருடைய நன்மைகள் அதிகமோ அவர்களுக்கு
சொர்க்கச் சோலைகளில் இருப்பிடம் வழங்கப்பட்டு அங்கு நிரந்தரமாக இன்ப வாழ்வு
வாழ்வார்கள்.
10:9
நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு
அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான
சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71
பொன் தட்டுகளும், கிண்ணங்களும்
அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்¢ இன்னும்
அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு
இன்பம் தருவதும் அதிலுள்ளன¢ இன்னும், 'நீங்கள்
இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என
அவர்களிடம் சொல்லப்படும்.)
v யாருடைய தீமைகள் அல்லது பாவங்கள்
அதிகமோ அவர்களுக்கு தண்டனையாக நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தொடர் வேதனைகளை
அனுபவிப்பார்கள்.
20:74 நிச்சயமாக எவன் தன்
இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக
இருக்கிறது, அதில்
அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
7:41 அவர்களுக்கு
நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு
மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம்
கூலி கொடுப்போம்.
நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்க இருக்கிறோம்
என்பதும் இன்று நாம் காணும் இவ்வுலகம்
என்பது தற்காலிகமானது என்பதும் மிகத் தெளிவான உண்மைகள். நமது
நாளைய இருப்பிடம் சொர்க்கமா இல்லை நரகமா என்பதை முடிவு செய்யும் பரீட்சைக் கூடமே
இந்தத் தற்காலிக உலகம் என்னும் பாடத்தைப் பெறுவோர்தான் உண்மையில் அறிவாளிகள்.
அதன்படி இந்தப் பரீட்சை வாழ்வைப் புரிந்துகொண்டு அதை உறுதியான உள்ளத்தோடு
எதிர்கொண்டால் இம்மை வாழ்வும் அமைதியாக இருக்கும். மறுமையில் மோட்சமும் அதாவது
சொர்க்கமும் கிடைக்கும். ஆக, இறைவன்
அமைத்த இந்தப் பரீட்சையை உரிய முறையில் வெல்ல இறைவனே வடிவமைத்து தந்த வாழ்க்கைத்
திட்டத்திற்குப் பெயர்தான் இஸ்லாம் என்பது. (இறைவனுக்குக் கீழ்படிதல் என்பதே
இவ்வார்த்தையின் பொருள்). அதற்கான முழுமையான வழிகாட்டிகளே திருக்குர்ஆனும் நபிகள்
நாயகமும் (அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)