இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 அக்டோபர், 2012

பைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்!


ஏசு கிறிஸ்து...... (அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக!)
.......உலகின் இரு பெரும் மதங்களான கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றி வரும் அனைவராலும் போற்றப்படும் மகான் அவர்!
......இம்மாபெரும் மதங்களை பின்பற்றுவோரை இணைக்கும் பாலம் அவர்! இரு சாராராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுபவர்!
......மீண்டும் இப்பூமிக்கு வரும்போது இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கப் போகிறவர் அவர்! 
.... அத்தகையதோர் அரிய ஆத்மாவின் வருகையில் யார் தான் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியும்?
நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நம் குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால்  நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.
இறைவனின் தூதர்கள் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்பது இறைக் கட்டளை (திருக்குர்ஆன் 2:285).  அந்த இறைத் தூதர்கள் வரிசையில் வந்தவரே நமது ஏசு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)
ஆம், சத்தியத்தை நிலைநாட்ட இப்பூமிக்கு வந்த மகத்தானதோர் இறைத்தூதர் ஏசு!
பிறந்த நாள் முதலே அற்புதங்கள்  பல நிகழ்த்திய மகான்!
அன்னை மரியாளுக்குப் பிறந்த அந்த அற்புதக்  குமாரன் அயராது  சத்திய போதனை செய்தார்!
அஞ்சா நெஞ்சனாக  அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும்  எதிராகப் போராடினார்! கடவுளின் பெயரால் பொய்யுரைத்து மக்களுக்கு இடையே பிளவுகள் உண்டாக்கும் மதகுருமார்களையும் மக்கள் சுரண்டப் படுவதையும் தீவிரமாக எதிர்த்தார்.
விளைவு ?...........அநீதியாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளானார் ஏசு!  அவரைக் கொன்று சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க சதி செய்தனர் எதிரிகள் !
ஆனால் வல்ல இறைவனால் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்டார்!
ஆம், இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்!

அவரைத் தொடர்ந்து சுமார் 550 வருடங்களுக்கப் பிறகு அதே பாதையில் சத்தியத்தை நிலை நாட்ட வந்தவரே முஹம்மது நபி அவர்கள். அவர் மூலமாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன்! அந்த இறுதி மறையில் நம் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான ஏசுவின் பிறப்பு பற்றி இறைவன் கூறுவதைக் காணலாம். திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:
= இறைவன் பரிசுத்த ஆவியானவரை அன்னை மரியாளிடம் அனுப்பி அவரைக் கருத்தரிக்கச் செய்ததைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
17.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (பரிசுத்த ஆவியை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
18. '
நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று (மர்யம்) கூறினார்.
19. '
நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'என்று அவர் கூறினார்.
 20. 'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?' என்று (மர்யம்) கேட்டார்.
21. '
அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்' (என்று ஜிப்ரீல் கூறினார்.)
திருமணம் ஆகாமலே கருவுற்றதைத் தொடர்ந்து அன்னையவர்கள் கடுமையான மனவேதனைக்கும் சமூகத்தில் சோதனைகளுக்கும் ஆளாகிறார்கள். திருமணமாகாத ஒரு கன்னிப்பெண் திடீரென கர்ப்பிணியானால் மக்கள் வெறுமனே விட்டுவிடுவார்களா? அவரது தர்மசங்கடமான அனுபவத்தை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
24. '
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. '
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்)
26.
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக!
இவ்வாறு அற்புதமான முறையில் எந்த ஆணின் துணையுமின்றி ஏசு என்ற அற்புத மகனைக் கற்பம் தரித்துப் பெற்றேடுக்கிறார்கள்  அன்னை மரியாள் அவர்கள்! இனி அந்த மகவைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு முன்னால் சென்றாக வேண்டுமே! அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப்  பாருங்கள்! ‘எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன்? எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொள்வேன்? குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும்?’ .... ஆம் அவர் எதிர்பார்த்தபடியே மக்கள் கடுமையாக அவரை ஏசினார்கள்.
27. (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். 'மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?' என்று அவர்கள் கேட்டனர்.
28. '
ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை' (என்றனர்)
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அன்னை மரியாள் அவர்கள் என்ன செய்தார்கள்? அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள்? யூத மத சட்டப்படி விபச்சாரக் குற்றத்திற்காக கல்லால் எறிந்து கொன்றிருப்பார்கள்... இதிலிருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டார்கள்? அவரைக் காப்பாற்றிய சம்பவம் எது? பிறகு திடீரென எப்படி அவர்களைப் புனித மங்கையாக ஏற்றுக் கொண்டார்கள்? குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக் கொண்டார்கள்? ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா? http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_27.html இந்தப்  பதிவில் காணுங்கள்.

திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?


ஓரிறைக்கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களை அவை எவ்வளவு புனிதமானவையாக இருந்தாலும் அவற்றை வணங்குவதோ அவற்றிடம் பிரார்த்திப்பதோ பாவமாகும். இறைவனது தன்மைகள் பற்றி திருக்குர்ஆன் கூறுகிறது;
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.(திருக்குர்ஆன் 112: 1-4)
 (அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். அரபு மொழியில் 'வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்பது இவ்வார்த்தயின் பொருள். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)
  அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக இடைத்தரகர்களின்றி வீண் சடங்குகளின்றி  வீண் செலவுகளின்றி வணங்கச் சொல்கிறது குர்ஆன்.
2. வாழ்வின் நோக்கமும் மறுமை வாழ்வும்: இன்று நாம் காணும் உலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப்படும். பிறகு மீணடும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். இறைவனின் முன்  இறுதி விசாரணைக்காக நிறுத்தப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பூமியில் செய்த பாவங்களும் புண்ணியங்களும் முழுமையாக எடுத்துக் காட்டப்படும். அதன்அடிப்படையில் அவனது நிரந்தர இருப்பிடம் தீர்மானிக்கப்படும். சொர்க்கம் அல்லது நரகம்- இந்த இரண்டில் ஒன்றுதான் மனிதனின் நிலையான வீடு. அதைத் தீர்மானிக்கும் பரீட்சைக்களமே இவ்வுலகம்!
திருக்குர்ஆன் கூறுகிறது:
 அவன்தான் உங்களுக்கு மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்உங்களில் யார் நற்செயல்கள் செய்கிறீர்கள் என்று சோதித்து அறிவதற்காக. (திருக்குர்ஆன் 67:2)
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3 : 185 )

 3. இறைத்தூது: மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக இறைவன் தனது போதனைகளை அவ்வப்போது அறிவிக்கிறான். இதுவரை 1,24,000 இறைத்தூதர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இறைவனுக்கு அடிபணிந்து வாழுங்கள் அவனை மட்டுமே வணங்குங்கள் என்ற ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். இந்தத் தூதர்களில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி அவர்கள். இவருக்கு முன் வந்தவர் இயேசு நாதர். அவர்களுக்கு  முன்னர் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் வௌ;வேறு காலகட்டங்களிலும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
  இவுர்கள் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையை போதிக்க அனுப்பப்பட்டவர்கள் என்பதால் இவர்களில் யாரையும் மறுப்பதோ தரக் குறைவாக கருதுவதோ பாவமாகும். அதே வேளையில் இவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பேரில் உருவங்கள் சமைப்பதோ அவற்றை வணங்குவதோ பெரும் பாவமாகும்.
 4. மனித குல ஒற்றுமை:
 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.  பின்னர்  இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4 :1)
மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பது திருக்குர்ஆனின் அடிப்படை போதனைகளில் ஒன்று. இனம் நிறம் நாடு மொழி இவைகளின் அடிப்படையில் மனித குலம் பிளவு படாமலிருக்க ஒரே வழி அனைவரும் படைத்த இறைவனை மட்டுமே வணங்குவதிலும் அவனிடமே பிரார்த்திப்பதிலும் தான் இருக்கிறது.

5. இறைவன் அல்லாதவற்றை அறவே வணங்கக் கூடாது
இன்று மனிதகுலம் பிரிந்து கிடப்பது அவரவர்களின் முரண்பாடான கடவுள் கொள்கையினால்தான். இறைவனுக்கு பதிலாக உயிரற்ற உணர்வற்ற பொருட்களையோஅல்லது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ வணங்குவதும் இறைவனுக்கு கற்பனை உருவங்களை சமைப்பதும் இறைவனால் மன்னிக்கப் படாத பாவங்கள் என்றும் அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
மனிதன் பாவம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் அவனிடம் கடவுளைப் பற்றிய அச்சமும் அவன் என்னைக் குற்றம் பிடிப்பான் என்ற உணர்வும் இருக்கவேண்டும். ஆனால் உயிரற்ற உணர்வற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பிப்பதால் மனிதனிடம் உண்மையான கடவுளைப் பற்றிய பயம் போய் விடுகிறது. அதனால் அவன் எப்பாவத்தையும் தயக்கமின்றி செய்யத் துணிகிறான். அதனால் பூமியில் பாவங்கள் பெருக ஒரு முக்கியக் காரணம் இதுவாகும். 
இந்த ஒரு பாவத்திலிருந்து மனிதன் திருந்தி மீண்டாலே கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப் படுவதும் மக்கள் சுரண்டப்படுவதும் நிற்கும்! உலகில் சகோதரத்துவமும் மனித சமத்துவமும் அமைதியும் திரும்பும்!
  மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை வழங்குகிறது. இல்லறம் திருமணம் ஆண்-பெண் பிரச்சினைகள் குழந்தை வளர்ப்பு தூய்மை உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம் கொடுக்கல்-வாங்கல் பாகப்பிரிவினை குற்றவியல் நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய  தீரவுகளை வழங்குகிறது திருக்குர்ஆன்
அவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு இம்மையிலும் அமைதி கிடைக்கிறது. மறுமையிலும் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அலட்சியம் செய்வோருக்கு இம்மையில் அமைதியின்மையும் மறுமையில் நரகவாழ்வும் காத்திருக்கிறது!

இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!


ஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது!
v  உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது!
v  மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது!
v  உலகில் வேறெந்த இலக்கியங்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்!
v  மிக மிக உயர்ந்தவனே தனது ஆசிரியன் என்று வாதிடுகிறது அது!
 45:2. இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
v  நூறு சதவீதம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!
2:2 இது (இறைவனின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
v  முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
v  மனிதகுலம் அனைத்தையும் அழைத்து உபதேசிக்கிறது அது!
10:57 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் இறைவிசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது.
v  பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஏற்றுக்கொள்ளச்  சொல்கிறது அது!
 38:29 (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள்      இதன்  வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும்  அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
45:20. இது மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும் உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கிறது
v  ஏற்காதவர்களை எச்சரிக்கவும் செய்கிறது!
 2:23-24 இன்னும் நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது இதை மறுப்பவர்களுக்காக  சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
 ஆம் அன்பர்களே! பகுத்தறிவுக்கு சவால் விடுத்து தன்னை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்நூல் வேறு ஏதுமில்லை இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் நம் அனைவருக்காகவும் அனுப்பிய திருக்குர்ஆன்தான் அது! இந்த நூலை நாம் யாரும் அலட்சியம் செய்ய முடியாது, ஒவ்வொருவரும் கட்டாயமாக படித்தே ஆக வேண்டும்!
 கட்டாயமாக படிக்க வேண்டுமா? ஏன்?
  ஆம் ஏனெனில் இது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனிடமிருந்து நமக்கு அனுப்பப்பட்ட கடிதம்! நம்மை எதற்காக அவன் படைத்தான்? நாம் எப்படி இங்கு வாழ வேண்டும்? அவ்வாறு வாழ்ந்தால் அதன் பயன்கள் என்ன? வாழாவிட்டால் என்ன விளைவுகள் உண்டாகும்? என்பன பற்றியெல்லாம் உறுதியான மொழியில் சந்தேகத்துக்கு இடமில்லாத முறையில் நம் இறைவனே எடுத்துரைக்கும் நூல் இது!
  மேலும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை தற்காலிகமானது என்றும் இங்கு இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் அவர்களுக்கு பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்றும் கட்டுப்படாமல் தான்தோன்றிகளாக வாழ்வோருக்கு தண்டனையாக நரக வாழ்வு உண்டு என்றும் எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.
 அன்;றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அவை இறைவனுக்குப் பொருத்தமானவையாக இருந்தால் அவை புண்ணியங்களாகவும் அவன் தடுத்தவையாக இருந்தால் அவை பாவங்களாகவும் பதிவாகின்றன.
  இறுதித் தீர்ப்பு நாளின்போது புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே புண்ணியம் எது பாவம் எது என்பதை இன்று தெளிவாக பிரித்தறிவிக்கும் நூலாக வந்துள்ளது திருக்குர்ஆன்.
  மேற்கண்ட காரணங்களால் இன்று இப்பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இதைக் கட்டாயமாக படித்தால் மட்டும் போதாது பின்பற்றி வாழவும் கடமைப்பட்டுள்ளான்!
எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே அவற்றைப் பின்பற்றினால் போதாதா?
      எங்கள் வேதம் உங்கள் வேதம் என்று ஏதும் இல்லை. அனைத்துமே நம் வேதங்களே! ஏனெனில், நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப் பட்டு உலகெங்கும் பல்கி பெருகியவர்களே. வேதங்களை முன்னர் வந்தவை பின்னர் வந்தவை என்று மட்டுமே பிரிக்கலாம். ஏனெனில் அனைத்துமே ஒரே இறைவனால் அருளப்பட்டவையே! முந்தைய இறைவேதங்கள் அக்காலத்து மக்களுக்காக அருளப்பட்டவையாதலால் அவை காலாவதியாகிவிட்டன. அது மட்டுமல்ல அவ்வேதங்கள் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் பிற்கால மக்களால் மாற்றப்பட்டன. இன்று நாம் இவ்வேதங்களில் எது இறுதியாக வந்ததோ அதை அறிந்து நாம் அனைவரும் பின்பற்றியாக வேண்டும்.
திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா?
  இல்லை. சுமார் 1430 வருடங்களுக்கு முன்னால் அராபியாவில் மக்கா நகரில் வாழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு அவரது 40 வயது முதல் அவர் மரணித்த 63-வது வயது வரைப்பட்ட காலகட்டத்தில் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. தனது கவிதையும் உரையும் கலந்த ஒரு ஒப்பற்ற நடையால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலம் முதலே மக்கள் மனங்களைக் கவர்ந்தது. இறைவிசுவாசிகளால் அது அடிக்கடி ஒதப்படலானது
  திருக்குர்ஆனின் வசனங்கள் மூலமொழியிலேயே உலகெங்கும் முஸ்லிம்களால் அவர்களது ஐவேளைத் தொழுகைகளிலும் தொழுகைக்கு வெளியேயும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதை நீங்கள் காணலாம். குறிப்பாக ரமலான் திங்களில் பெரும்பாலோர் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பர். 'குர்ஆன்' என்ற பதத்தின் பொருளே 'ஓதப்படும் ஒன்று' என்பதுதான்.
பக்குவமாகப் பாதுகாக்கப்படும் வேதம்
  இறங்கிய காலம் முதல் இன்று வரை உலகெங்கும் எண்ணற்ற மக்களால் மனனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருக்குர்ஆனின் மூலவசனங்கள் ஒலி வடிவிலேயே உலகெங்கும்  மனித மனங்களிலும் திருக்குர்ஆன் பிரதிகளிலும் பாதுகாக்கப் படுகிறது. உலகில் எந்த மூலையில் எம்மொழியில் நீங்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை எடுத்துப்  பார்த்தாலும்  அதில் அரபு மொழி மூலத்தையும் காணலாம்.
உலகம் அழியும் நாள் வரை உலக மக்களுக்கு இதுதான் வேதம் என்பதால் இறைவனே இதன் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்றிருக்கிறான்.
15:9 திண்ணமாக இந்த நல்லுரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
 இன்று காணக்கிடைக்கும் முந்தைய வேதங்களின் பிரதிகளை நீங்கள் எடுத்துப் பார்பீர்களானால் வெறும் மொழி பெயர்ப்புகளைத்தான் பார்க்க முடியும் மூலத்தைக் காண முடியாது. அதற்கு மூல வசனங்கள் பாதுகாக்கப்படவில்லை  என்பதும் மூல மொழிகளே இன்று இறந்துபோன மொழிகளாக உள்ளன என்பதுமே காரணம்!
திருக்குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதா?
. இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. இவ்வேதத்தில் முஹம்மது நபி உட்பட எந்த மனிதர்களின் வார்த்தையும் எள்ளளவும் கலக்காமல் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மற்றும் அவரைப் பற்றிய செய்திகள்  அவரது தோழர்களால் பதிவு செய்யப்பட்டு 'ஹதீஸ்' என்று தனி தொகுப்பாக விளங்குகின்றன.
திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
1 ஓரிறைக்கொள்கை :
2. வாழ்வின் நோக்கமும் மறுமை வாழ்வும்: 
3. இறைத்தூது 
4. மனித குல ஒற்றுமை
5. இறைவன் அல்லாதவற்றை அறவே வணங்கக் கூடாது
 மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை வழங்குகிறது. இல்லறம் திருமணம் ஆண்-பெண் பிரச்சினைகள் குழந்தை வளர்ப்பு தூய்மை உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம் கொடுக்கல்-வாங்கல் பாகப்பிரிவினை குற்றவியல் நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய தீரவுகளை வழங்குகிறது திருக்குர்ஆன்
 அவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு இம்மையிலும் அமைதி கிடைக்கிறது. மறுமையிலும் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அலட்சியம் செய்வோருக்கு இம்மையில் அமைதியின்மையும்  மறுமையில் நரகவாழ்வும் காத்திருக்கிறது!

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்

Related image
மனித உறவையும் சமூக அமைதியையும் இடைவிடாது  பாழ்படுத்திக் கொண்டிருக்கும் இன்னும் சில கற்பனைப் பொருட்களையும் உருவங்களையும் மாயைகளையும் மூடத்தனமான நம்பிக்கைகளையும் நாம் அடையாளம் கண்டு அவற்றைக் களைய ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
மொழித்தாய்கள் 
மொழி என்பது ஒரு தகவல்தொடர்புக்கான சாதனம். அதனை நாம் அவ்வாறே புரிந்து கொள்ளவேண்டும். மாறாக இன்ன மொழி பேசும் ஊரில் அல்லது குடும்பத்தில் பிறந்தோம் என்பதற்காக மாற்றார்களை இழிவாகப் பார்க்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்டுமல்ல மொழியைக் கடவுளாக சித்தரிப்பதும் மொழியின் பெயரால் தமிழ்த்தாய் அல்லது கன்னடமாதே என்று கற்பனை உருவங்களும் சிலைகளும் செய்து அவற்றை வழிபடுவதும் வழிபடாதவர்களை மிரட்டுவதும் துன்புறுத்துவதும் எந்த வகையில் நியாயம்? சில கவிஞர்களும் ஓவியர்களும் எப்போதோ புனைந்த இந்த மொழித்தாய்கள் எங்கே வாழ்கிறார்கள்? யாராவது காட்ட முடியுமா? இன்ன இடத்தில் இன்ன மொழிதான் பேச வேண்டும். இல்லையேல் நீ அந்நியன், நீ இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றெல்லாம் கோஷமிடுவதும் அவ்வாறு பாமரர்களை அக்கிரமமாக வெளியேற்றுவதும் இன்று பரவலாகவும் சகஜமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அக்கிரமங்களுக்கு பகடைக்காய்களாக அந்த கற்பனைத் தாய்மார்கள் பயன்படுத்தப் படுகிறார்கள்.
குலதெய்வங்கள் 
இதைப் போலவே நம் நாட்டை வெகுவாக பாதித்து வரும் பெரிய தீமை ஜாதிப்பிரிவினை. யாரோ சிலர் இறைவனின் பெயரால் நம்முள் புகுத்திய சில மூடநம்பிக்கைகள் இன்றும் தொடர்ந்து நம்மில் சிலர் சிலரைத் தாக்கி அழிக்க எதுவாக உள்ளன. இவ்வுலகத்தைப் படைத்துப் பரிபாலிப்பவன் எவனோ அவன் மட்டுமே உண்மை இறைவன் என்பதை பகுத்தறிவு கொண்டு சிந்திப்போர் யாரும் ஐயமின்றி உணரலாம். ஆனால் நம் முன்னோர்களிடம்  சில இடைத்தரகர்கள் அல்லாதவற்றையெல்லாம்  காட்டி அவற்றைக்  கடவுள் என்று கற்பித்தார்கள். நம் முன்னோர்கள் அவற்றை நம்பியதால் ஒவ்வொரு கடவுளர்களையும் வணங்கும் கூட்டாத்தார் ஒவ்வொரு ஜாதிகளாயினர். இந்த இடைத்தரகர்கள் அவற்றை உயர்ந்த ஜாதிகள் என்றும் தாழ்ந்த ஜாதிகள் என்றும் தாமாகத் தரம்பிரித்து அவற்றிற்கிடையே பாகுபாட்டை கற்பித்தனர். இதனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இறைவனை எளிமையாகவும் நேரடியாகவும் வணங்கிவந்த மக்களிடையே பாகுபாடும் பகைமை உணர்வுகளும் குலவெறியும் ஜாதிவெறியும் தோன்றின. முன்னோர்களின் வழிமுறைகள் என்று சொல்லி இவை இன்றும் தொடர்கின்றன.
இது கற்காலமல்ல! கல்லாமை ஒழிந்து மக்களிடையே அறிவு வளர்ச்சியும் அரசியல் விழிப்புணர்வும் பெருகிவரும் காலகட்டம் இது. பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தீர்வுகளைத் தேடி ஆராயும் தலைமுறைகள் உருவாகி வரும் காலம் இது. முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக  நாமும் மேற்படி பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல் நியாயமா? மேற்கூறப்பட்ட கற்பனை வஸ்துக்களும் உருவங்களும் மடத்தனமான நம்பிக்கைகளும் நம்மை அழிவின் விளிம்பிற்க்குக் கொண்டு செல்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. இருந்தும் நம்மில் பெரும்பாலோரும் மௌனம் சாதிப்பது கொடுமையே!
ஆனால் இவ்வுலகின் அதிபதி இந்த மௌனத்தைப் பற்றியும் நாளை மறுமையில் விசாரிப்பான். எனவே நாம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட தீமைகள் நம்மை பாதிக்காமல் இருக்க நம்மைப் படைத்த இறைவன் தன் திருமறை மூலமும் தனது தூதர் மூலமும் நமக்குப் பரிந்துரைக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சமூகத்தைக் கட்டமைக்கப் பணிக்கிறான். அந்த வாழ்க்கைத் திட்டத்திற்குப் பெயர்தான் அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இத்திட்டம் முன்வைக்கும் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைத்தால் மனிதனை மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் நாடுகளிடையே ஒற்றுமையையும் நிலைநாட்டலாம்.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும். இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் அளிக்கக் கூடாது. இறைவன் அல்லாத கற்பனை உருவங்களுக்கோ உயிரும் உணர்வும் அற்ற படங்களுக்கோ சிலைகளுக்கோ எந்த இறைத்தன்மையும் கிடையாது. அவற்றை வணங்குவதோ அவற்றுக்கு மரியாதை செய்வதோ பெரும் பாவமாகும்.
 அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
3.  இறைவனின் நீதிவிசாரனையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது, இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.
இந்த நம்பிக்கைகள் மனித மனங்களில் மெல்ல மெல்ல வேரூன்ற நாளடைவில் மொழி, நிறம், இடம் செல்வம் போன்ற எதுவும் மனித இனத்தைப் பிரிக்கமுடியாது. சமத்துவமும் சகோதரத்துவமும் தானாகவே சமூகத்தில் மலரும். உலக வளங்கள் சகோதர உணர்வோடும் இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையிலும்  பங்கிட்டுக்கொள்ள மக்களே முன்வருவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகளை இறைப்போருத்தத்திற்காக மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்! அவ்வாறு கர்நாடமும் தமிழகமும் மட்டுமல்ல. எல்லைக் கோடுகள் மறைந்து அகண்ட பாரதமும் உருவாகும்! நாடுகள் மறைந்து அனைத்து உலகும் ஒன்றாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவு நனவாகும்!
இது ஒரு மாயையோ அல்லது வெற்றுக்கோஷமோ அல்ல. இந்த நம்பிக்கையின் துளிகளை நீங்கள் உலகெங்கும் காண்கிறீர்கள். ஆம், உலகெங்கும் இக்கொள்கை பரவப்பரவ அதன் தாக்கத்தினால் ஒருகாலத்தில் ஜாதி, நிறம் இடம் போன்றவற்றால் பிளவுண்டு கிடந்த சமூகங்கள் பள்ளிவாசல்களில் அணியணியாக அணிவகுப்பதிலும் ஒரே சீருடையில் ஹஜ்ஜின் போது சங்கமிப்பதிலும் காண்கிறீர்கள் 
 இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

தேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை!


  கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.
 கடவுளும் மறுமையும் கண்ணால் கண்டு நம்பவேண்டிய விஷயங்கள் அல்ல. அவற்றைப் பகுத்துதான் அறிய வேண்டும். இதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. நம்மைச்சுற்றியுள்ள  படைப்பினங்களைப் பற்றி சற்று சிந்தித்தாலே போதும். அவ்வாறுதான் ஆராயத் தூண்டுகிறது இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன்.
12:105. இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்
 படைத்தவனின் உள்ளமையைப் பற்றியும் அவனது ஆற்றல்களையும் பற்றி விளங்க அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளின் பக்கம் சற்று நம் கவனத்தைச் செலுத்தினாலே போதும்.
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்
16:12. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க)அத்தாட்சிகள் இருக்கின்றன.
இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் இயக்குபவனும் அந்த ஏக இறைவனே. அவனையல்லவா நீங்கள் வணங்கவேண்டும்? படைத்தவனை விட்டுவிட்டு போலி தெய்வங்களை வணங்குவோரைப் பார்த்து அவன் கூறுகிறான்:
30:40. அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.  

குழந்தைகளுக்கும் பாமரர்களுக்கும்  கடவுளைப் பற்றி கற்றுக் கொடுப்பது எப்படி?.
 குழந்தைகளும் பாமரர்களும் கடவுளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிலைகளையும் உருவங்களையும் கற்பிக்கிறோம் என்பார் சிலர். ஆனால் திருக்குர்ஆன் மிக எளிதாக இந்தப் பிரச்சினையைத்  தீர்க்க வழிகாட்டுகிறது:
43:9. (நபியே!) நீர் அவர்களிடம்: வானங்களையும், பூமியையும்  படைத்தவன்  யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
 எந்த ஒரு மனிதனிடமும் இக்கேள்வியைக் கேட்டால் அவனிடமிருந்து இயற்கையாகவே வரக்கூடிய பதில் இது. அவரவர் மொழிகளில் அந்த உண்மை இறைவனை  என்ன பெயரில்  குறிப்பிடுவார்களோ அதைத்தான் அவர்கள் பதிலாகச் சொல்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்:
43:87. மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் அல்லாஹ்என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
ஏக இறைவனைக் குறிப்பிட அரபு மக்கள் பயன்படுத்தும் வார்த்தையே அல்லாஹ் என்பது. வணங்குவதற்குத்  தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதே இதன் பொருள் என்பதை மேலே கண்டோம்.
29:63. இன்னும், அவர்களிடம்: வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின்உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: அல்லாஹ்என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) -புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதுஎன்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  

அந்த இறைவன் எப்படிப்பட்டவன்?
படைத்தவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் தெளிவுபடுத்துகிறது திருக்குர்ஆன்:
  112:1-4 நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் - அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.
இடைத் தரகர்கள் தேவை இல்லை  
2:186     .(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;. அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;. என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக.
கடவுளுக்கு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை மனிதன் புரிந்து கொண்டால் அவன் வழிபாட்டுத் தலங்களில் உணவுப் பொருட்களைக் கொட்டி வீணடிக்க மாட்டான் இதைத் தெளிவாக விளங்கிக் கொண்டால் அவனை யாரும் மதத்தின் அல்லது கடவுளின் பெயர் சொல்லி ஏமாற்ற முடியாது. வழிபாட்டுத் தலங்களில் உண்டியல்களுக்கும் காணிக்கைகளுக்கும் வேலை இருக்காது.!
 அவ்விறைவனுக்கு மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று கீழேயும் சந்ததிகள் கிடையாது, தந்தை, பாட்டன் கொள்ளுப் பாட்டன் என்று மேலேயும் சந்ததிகள் கிடையாது. கடவுளுக்குப் பிறப்பு என்பதும்  இறப்பு என்பதும் கிடையாது. அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் திடீரென உருவானவன் அல்ல. அவன் என்றென்றும் வாழ்பவன். கடவுளுக்கு சந்ததி இருக்க முடியாது என்று உணரும் மக்களிடம் யாரும் வந்து தான் கடவுளின் அவதாரம் என்றோ தான் கடவுளின் பிள்ளை அல்லது சந்ததி என்றோ கூறி ஏமாற்ற முடியாது.
இறைவனை நேரடியாக அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்று நம்பும்போது இடைத்தரகர்களும் அவர்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளும் கடவுள் பெயரால் அவர்கள் நடத்தும் கொள்ளைகளும் ஒழிகின்றன.