இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 மே, 2017

மறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை!



இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு நாத்திகர்களிடம் இருந்து பதில் கிடைக்காது. ஆனால் இறைவனின் இறுதிவேதம் தெளிவான பதிலைத் தருகிறது. தற்காலிகமான இவ்வுலக வாழ்வின் நோக்கமே மனிதனைப் பரீட்சிப்பதற்காக வேண்டிதான் என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் வண்ணம் திருக்குர்ஆன் தனது வாதங்களை முன்வைக்கிறது.
அதாவது இந்த உலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 

  இவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? மேலும் இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா?
அவ்வாறு பகுத்தறிவால் ஆராயும்போது மழையின் அன்றாட செயல்பாடுகளை ஆராய்வோர் மறுமை வாழ்வு என்பது சாத்தியமே என்பதை அறிவார்கள்:
= 22:63. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
= 41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை)  உயிர்ப்பித்தவனே,  நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக  உயிர்ப்பிக்கிறவன்;  நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
43:11. அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

வெள்ளி, 26 மே, 2017

கடனாளியாக மரணித்த மாமன்னர்!

              Related image                                                  
சமீபத்தில் 113 க்கு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துக்களை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்து அனைத்தையும் கைவிட்டு கல்லறையை அடைந்துள்ள ஒரு ஆட்சியாளரைப் பற்றி அறிவோம். அவர் வகித்து அனுபவித்த அதே பதவியை அடைய இரவுபகலாக பாடுபட்டு வரும் இன்னும் பலரையும் நாம் அறிவோம். ஆம், ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் முழு அதிகாரமும் தன் கைக்கு வருகிறது என்றால் சும்மாவா?
ஒரு ஜனநாயக நாட்டின் நிலையே இதுவென்றால் மன்னராட்சி நடைபெறும் நாடுகளின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம். தான் ஆதிக்கம் பெற்ற நாட்டின் முழு வளங்களுக்கும் தான்தான் அதிபதி என்ற மனோநிலை ஆட்சிப் பொறுப்பில் வருபவர்களுக்கு வந்து விடுவதை நாம் காண்கிறோம். நாட்டு வளங்களுக்கு உண்மை அதிபதி இவ்வுலகைப் படைத்த இறைவனே. அவன் தற்காலிகமாக தந்திருப்பதே இந்த ஆட்சியதிகாரம், இதுபற்றி இறைவன் என்னை விசாரிக்க உள்ளான் என்ற பொறுப்புணர்வு இருந்தால் இவர்கள் நாட்டின் சொத்துக்களை தனதாக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டார்கள்.
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்.... “ 
அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்:புகாரி, முஸ்லிம்)


தனது வாழ்நாளில் ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் ஒருசேரப் பெற்றிருந்தார் நபிகள் நாயகம். அன்றைய உலகில் இருந்த வல்லரசுகளில் மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

= 'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 2068, 2096
அவரது ஆட்சிக்காலத்தில் வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய அந்த மாமன்னர் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது நபிகளார் விட்டுச் சென்ற சொத்துக்கள்:

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள். (நூல் : புகாரி 2739)

நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவைதாம்.

வியாழன், 25 மே, 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2017 இதழ் மின்பதிப்பு


இந்த இதழின் மின்பதிப்பைக் கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் வாசிக்கலாம்:
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusVS1nNndheXhKU1U/view?usp=sharing
பொருளடக்கம்
மழை எனும் பரீட்சைக் கருவி-2
நீர்சுழற்சியும் குர்ஆனும் -4
சொல்லிக்கட்டப்படும் தானதர்மங்கள் வீண்! -5
மறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை -6
மழை நின்று போனால்..? -8
அண்ணல் நபிகளும் அருள்மழையும் -10
மழை போல வாழ்வு -11
கடனாளியாக மரணித்த மாமன்னர்  -12
செல்வசெழிப்பில் நாடு
மன்னர் வீட்டில் வறுமை! -14
ஏழையாகவே வாழந்ததேனோ எங்கள் நபியே? -16
அரசியல்வாதிகளுக்கு ஓர் இலட்சிய முன்மாதிரி  -18
தனது சொத்துக்களையும் அரசுடமையாக்கிய ஆட்சியாளர் -21
தலித் மக்களும் இடமாற்றமும் -22

நோன்பின் மாண்புகள் -24

வெள்ளி, 19 மே, 2017

மழை நின்று போனால்... ?

Image result for prayer for rain
இவ்வுலகம் என்ற பரீட்சைக்கூடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனிதன் மறந்து விடும்போது அவனுக்கு உண்மையை நினைவூட்டி அவன் இறைவன்பால் திரும்புவதற்காக இறைவன் அவ்வப்போது மழையை தடுத்து வைப்பதும் உண்டு.  ஆனால் கருணையுள்ள இறைவன் விரைவிலேயே அவர்களின் நிராசையைப் போக்கியும் விடுகிறான்.
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
பாவமன்னிப்பு கோரல் – மழைக்கான திறவுகோல்
பண்டைக்காலத்தில் வாழ்ந்த ஆது என்ற கூட்டத்தாரின்பால் அனுப்பப்பட்ட ஹூத் என்ற இறைத்தூதர் தனது மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறியதை திருக்குர்ஆன் கூறுகிறது:
= 11:52. என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
ஹூத் நபிக்கு முன்னதாக வந்த நூஹ் நபியும் தம் மக்களுக்கு இவ்வாறே உபதேசித்து உள்ளதைக் குர்ஆனில் காண முடிகிறது:
= 71:10-12. மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். 

நபிகளார் நடத்திய மழைத் தொழுகை

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல இறைவனிடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது முன்னுதாரணம் மூலம் காட்டித் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் (சுற்றுக்கள்) தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
= மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் மழைப் பஞ்சத்தைப் பற்றி முறையிட்டார்கள்.  ஒரு மிம்பரை (சிறு சொற்பொழிவு மேடை) ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாளை மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள்  அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (இறைவன் பெரியவன்) என்று கூறி இறைவனைப் பெருமைப் படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘மக்களே! உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழிய வேண்டும் ஆரம்ப காலத்தை விட்டும் மழை தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள்  முறையிட்டீர்கள்.  நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான்.  உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான்’’ என்று கூறினார்கள்.
பின்னர்  பின்வருமாறு கூறினார்கள்:
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.
(பொருள்: எல்லாப் புகழும் இறைவனுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)
பிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.
பிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
இறைவன் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. இறைவன்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள்  நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள்.  பிறகு இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் இறைவனின் அடிமையும், அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: அபூதாவூத் (992)
----------
மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை
= அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.
(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய செழிப்பான உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: அபூதாவூத் 988
= அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா
(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1013

ஞாயிறு, 14 மே, 2017

திருந்திவாழ்வோர் இயக்கம்


தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. இதைப்பற்றி நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கவலையே இல்லை. சுயநல அரசியல்வாதிகளுக்கும் அறவே கவலையில்லை. ஆனால் நாட்டுமக்களின் நலனில் நாளைய நமது தலைமுறைகளின் நலனில்  உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மக்கள் இவ்வாறு வாழ்க்கையை வெறுக்கும் நிலை எப்படி உருவானது?
முக்கியமாக மனிதன் சகமனிதனுக்கு செய்யும் அநியாயங்களே இதற்கு முக்கியமான காரணம் என்பதை நாம் அறியலாம். சட்டம்ஒழுங்குநீதிமன்றம்காவல்துறைசட்டமன்றம்பாராளுமன்றம்ஆன்மீக போதனைகள்வழிபாட்டுத்தலங்கள்போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன. எதைச்செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருப்பதால் நம்மைச்சுற்றி என்னென்ன கொடுமைகள் நடக்கிறது பாருங்கள்:
= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள். பெருகிவரும் கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலைகள்.
= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்... பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,
= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.
= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.
= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள். 
= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.
= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும்! (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு)
= மதுபோதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.
என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!
---------------------------- 
இந்த தீமைகளும் பாவங்களும் அநியாயங்களும் தட்டிக்கேட்கப் படாமலும் தடுக்கப் படாமலும் தொடருமானால் மனித வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.  இவற்றின் முற்றிய நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். மனிதன் வாழ்வதற்கே வெறுத்த நிலையை அடைந்து வருவதைத்தான் மேற்படி தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் (NCRB) அறிக்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

மக்கள் நலனில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் – குறிப்பாக இறைநம்பிக்கை கொண்டவர்கள் -  இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. இதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் ஆவன செய்யவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ‘உலகம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?’ என்ற அலட்சியப் போக்கு ஆபத்தானது. ‘இறந்த பின் நாம்  மண்ணோடு மண்ணாகத் தானே போகிறோம்’ என்று நம்புவோர் வேண்டுமானால் அவ்வாறு மெத்தனமாக உலகின்  விபரீதப் போக்கைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இறைவனையும் மறுமையையும் நம்பும் இறைநம்பிக்கையாளர்கள் அவ்வாறு இருக்க முடியாது.

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
எனவே தீமைகளைத் தடுத்து நன்மைகளை  ஏவும் பணியில் இறைநம்பிக்கை கொண்டோர் களமிறங்கியாக வேண்டும். அத்தகையவர்களைப் பற்றி இறைவன் சிறப்பித்துக் கூறுகிறான்:
= மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)

அமைதி திரும்ப மனமாற்றம் தேவை
தீமைகள் கட்டுகடங்காமல் பெருகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகக் கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:
அ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம் மக்களிடையே பெருகி வருவது.
 குற்றங்களைப் பற்றிய வெட்க உணர்வு மழுங்கி வருவது. தீமைகளைக் காண்போர் அவற்றை சொல்லாலோ செயலாலோ தடுக்காமல் இருப்பது அத்தீமைகளுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.
இ) சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மக்கள் சொந்த மனோ இச்சைப்படி முடிவு செய்வதால் அவரவர் செய்யும் தவறுகளையும் நியாப்படுத்தும் போக்கு.

சமூகத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் கீழ்கண்டவை நடைபெறவேண்டும்:
அ) மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். அவற்றிற்கு வாழ்க்கையின் முக்கியமான உண்மைகளை உணர்த்தி அவற்றை நல்வழிப்படுத்த வேண்டும். 
ஆ) சீர்திருத்தங்களை வெறும் போதனைகளோடு நில்லாமல் அன்றாட வாழ்வில் நடைமுறைப்  படுத்த வழிவகை செய்யவேண்டும். 
இ) அவ்வாறு திருந்துவோர் கட்டுப்பாட்டோடும் பொறுப்புணர்வோடும் வாழ்வதற்கு   ஒருவருக்கொருவர் உறுதுணையாக இயக்கமாக செயல்பட வேண்டும்.
ஈ) சரி எது தவறு எது, பாவம் எது புண்ணியம் எது, நியாயம் எது அநியாயம் எது என்பவற்றை வரையறுக்கும் தெளிவான உறுதியான அளவுகோல் அல்லது சட்டங்கள் தேவை.  
உ) தீமைகள் மீண்டும் சமூகத்தில் ஊடுருவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நம்மைப் படைத்த இறைவன் வழங்கும் வாழ்வியல் கொள்கையான இஸ்லாம் நிறைவு செய்வதை ஆராய்வோர் அறியமுடியும்.
----------------------- 
மனங்களின் சீர்திருத்தம் 
முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான்அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.
இறையச்சம் என்ற பொறுப்புணர்வு
 இந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும்  விபச்சாரம் உட்பட எந்த பாவங்களிலும் கூச்சமின்றி ஈடுபடுவான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.
இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..
அறவே நிரூபிக்கப்படாத வெற்று மனித ஊகங்களைத் தொகுத்து பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுதல்.
இறைவனின் தூதர்கள் போதித்தபடி  படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டுகுழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் உன் கடவுள்’ என்று போதிக்கப்படுதல்.
 அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.
இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். மேலே கூறப்பட்ட தீமைகளில் இருந்து மனிதன் விலகி நிற்பான்.
இறையச்சம் விதைக்க...
இந்த இறையச்சம் மனித மனங்களில் நிலைத்து இருக்கவேண்டுமானால் இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும். அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கற்பிக்கிறது:
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனது தன்மைகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை பகுத்தறிவோடு சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இறைவனை இவ்வாறு புரிந்துகொண்டு இடைததரகர்கள் யாருமின்றி அவனை நேரடியாக வணங்க இஸ்லாம் கற்றுத் தருகிறது. இவ்வாறு வணங்கும்போது கடவுளின் பெயரால் யாரும் யாரையும் ஏமாற்றவோ கடவுள் அல்லாதவற்றைக் காட்டி இவைதான் கடவுள் என்று கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கவோ முடியாது. இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் ஒழிகின்றன.  இடைத்தரகர்களுக்கு இடம்கொடாமல் படைத்த இறைவனை நேரடியாக வணங்கும்போது இனம்நிறம்இடம்மொழி இவற்றால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு இடையே பிணைப்பும் ஒருமைப்பாடும் சமத்துவமும் சகோதரத்துவமும் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.

இறைவன் அல்லாதவற்றை இறைவனுக்கு ஒப்பாக்கி வழிபடும் செயல் இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. சமூகத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் இந்தப் பாவத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கின்றது என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்று பொருள்)
மறுமை நம்பிக்கை 
தெளிவான இறைநம்பிக்கைக்கு அடுத்தபடியாக  இந்த வாழ்க்கையைப்பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் பகுத்தறிவு பூர்வமான மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும் கற்பிக்கிறது இஸ்லாம்.
இன்று நாம் வாழும் பிரபஞ்சமும் தற்காலிகமானது. இதில் மனிதர்களாகிய நம் வாழ்வும் தற்காலிகமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணையில் வந்து போகிறோம். இந்த குறுகிய வாழ்வில் யார் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வாய்க்கும். இந்த உண்மையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவதுஇவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.
மறுமை சாத்தியமா?
மறுமை வாழ்க்கை சாத்தியமா என்று மனிதனின் உள்ளத்தில் எழும் கேள்விக்கும் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது. மனிதன்  இல்லாமையில் இருந்து இந்திரியத்த துளியாகி தொடர்ந்து அவன் கடந்துவந்த கட்டங்களை நினைவூட்டி இறைவன் மனிதனை சிந்தித்து உணர வைக்கிறான்:
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79) 
மேலும் தொடர்ந்து இறைவனின் வல்லமைகளை நினைவூட்டி மறுமைவாழ்வு என்பது சாத்தியமே என்பதை நிறுவுகிறான்:
''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனேஅதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். வானங்களையும் பூமியையும் படைத்தவன்அவர்களைப் போன்றவர்களப்  படைக்கச் சக்தியற்றவனாஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவேஅவனே (பல வகைகளையும்) படைப்பவன்யாவற்றையும் நன்கறிந்தவன்.
எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால்அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 36:80-82)  

நமது வினைகள் பதிவாகின்றனவா?
இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம்.  அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்லநமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

=
மேலும்இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில்அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில்அவர்கள்(அத்தீயை) அடையும் போதுஅவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும்அவர்களுடைய கண்களும்அவர்களுடைய தோல்களும் அவை செய்துகொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)
வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம்  செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்று மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:
41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு  எதிராக  நீங்கள்  ஏன் சாட்சி  கூறினீர்கள்?” என்று  கேட்பார்கள்அதற்கு அவை: எல்லாப் பொருட்களையும் பேசும்படிச் செய்யும் அல்லாஹ்வேஎங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல்  தடவையும் படைத்தான்பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள் என்று கூறும்.
41:22உங்கள் காதுகளும்உங்கள் கண்களும்உங்கள் தோல்களும்உங்களுக்குஎதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டுஉ(ங்கள் பாவ)ங்களை நீங்கள்மறைத்துக் கொள்ளவில்லைஅன்றியும்நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில்மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள்எண்ணிக்கொண்டீர்கள்.

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காதுகண்தோல் இவற்றை மறைத்துக் கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இவை மறுமைநாளில் நமக்கெதிரான சாட்சிகளாக வரும் என்பதைத் திருக்குர்ஆனில் இறைவன் எச்சரிக்கிறான். இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப்  பாவங்கள் அண்ட வாய்ப்புகள் குறைவு. 
நடைமுறை வழிகாட்டுதல்
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்கியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
இறைவன் கூறும் இந்த வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று வாழ்பவர்களுக்கே அரபு மொழியில் முஸ்லிம்கள் (பொருள்: கீழ்படிபவர்கள்) என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு வாழ முற்படுபவர்களுக்கு ஐவேளைத் தொழுகைஜகாத் எனும் கட்டாய தானம்நோன்புஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் சமூக நல்லொழுக்கத்தை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
ஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது.  இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது. மக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அங்கு ஏற்படுவதால் சமூக உறவு வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானதுஅது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!
இவ்வாறு இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளோடு இணைந்த நடைமுறைக்கு  மக்களை – குறிப்பாக குழந்தைகளைப் - பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை பாவச் செயல்களில் இருந்து தடுக்கும். உதாரணமாக அவர்கள் இணையம் செல்பேசிகள் தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். இறை பொருத்தத்திற்க்காகவும் மறுமையில் வாய்க்க இருக்கும் இன்பங்களுக்காகவும் வாழ்வில் தானதர்மங்கள்தியாகங்கள்எளியோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல்தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் என்பனவற்றை சுயமாக முன்வந்து செய்வார்கள். நல்லொழுக்கம் வாய்ந்த சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்புவார்கள்.