இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 மார்ச், 2016

"அல்லாஹ்" ஆணா?

"அல்லாஹ்" ஆணா?

தூத்துக்குடி சகோதரர் பர்னபாஸ், அவர்களின் கேள்வி:

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு ஆண்பாலும் பெண்பாலும் கிடையாது என்றால், திருக்குர்ஆன் ஏன் அல்லாஹுவை பற்றி பேசும் போது, ஆண் பாலாகவே பேசுகிறது?

பதில்:

அல்லாஹ்" என்ற வார்த்தையின் அறிமுகம்:

படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ்என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது.. இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தையின் சிறப்பு என்னவென்றால், இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது என்பதே. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.

 "அல்லாஹ்" என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய சொல் என்று நினைத்து விட வேண்டாம்.  "இறைவன்" அல்லது "கடவுள்" என்கிற தமிழ் சொல் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ, அதே போல் "அல்லாஹ்" என்கிற சொல்லும் எல்லோருக்கும் பொதுவானதுதான். அரபு மொழி பேசும் கிறிஸ்துவர்களும், யூதர்களும் கூட தங்கள் தாய் மொழியான அரபியில், இறைவனை "அல்லாஹ்" என்றுதான் அழைப்பார்கள்.

இதை புரிந்து கொள்ள அரபிக் பைபிளை புரட்டினால் போதும். ஆதியாகமம் 1:1 அரபியில் கீழே:
في البدء خلق الله السموات والارض
الله enbadhu thaan "அல்லாஹ்".

அடுத்ததாக உங்கள் கேள்விக்கு இன்னும் தெளிவான விடை அறிய, அரபு மொழி இலக்கணம் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். "அல்லாஹ்" என்பது ஒரு அரபி வார்த்தை என்பதை அறிந்தோம். ஆங்கிலத்தில் மூன்று பாலினங்கள் உள்ளன, ஆண்(Masculine), பெண் (Feminine),  ஆண், பெண் அல்லாத பொதுவானது (Neutral Gender). இதனை குறிக்க he, she, it போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். ஆண், பெண் வகையில் சேராதவைகளை "it" என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள்.

அரபு மொழியில், இரண்டே இரண்டு பாலினங்கள் தான் உள்ளன. ஆண்(Masculine) மற்றும் பெண் (Feminine). எந்த வார்த்தையாக இருந்தாலும் சரி, அது ஒன்று ஆண் பாலினமாகவோ, அல்லது பெண் பாலினமாகவோ தான் பயன்படுத்தப்படும்.

அரபு இலக்கணத்தில், ஒரு வார்தையை பெண் பாலினத்தில்  சொல்ல சில விதிகள் உள்ளன. இது அரபு மொழிக்கே பொதுவான விதி.  அவை:
1) இயற்கையிலேயே அந்த வார்த்தை பெண் பாலினத்தை குறிக்கக் கூடியதாக இருத்தல். உதாரணம்: தாய். அரபு மொழியில் "உம்முன்" என்ற தாயை குறிக்கும் சொல், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.

2) "இருமையை" குறிக்கும் சொற்கள் பெண் பாலினத்தில் சொல்லப்படும். உதாரணம்: இரண்டு கண்கள். அரபு மொழியில் "ஐனைன்" என்ற இரண்டு கண்களை குறிக்கும் சொல், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.

3) வார்த்தை "தா" என்ற அரபி எழுத்து கொண்டு முடிந்தால், அந்த வார்த்தை பெண் பாலினத்தில் சொல்லப்படும். உதாரணம்: அரபியில் மின்விசிறியை குறிக்கக் கூடிய  "மிர்வதுன்." என்ற சொல் "தா" என்ற அரபி எழுத்து  கொண்டு முடிவதால், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.

4)  "பெரிய அலிப்" எழுத்து ஒரு வார்த்தையின் இறுதியில் வருதல்.  இந்த வார்த்தைகளும் பெண் பாலினத்தில் சொல்லப்படும்.

இப்போது அல்லாஹ் என்கிற சொல், மேலே கூறிய விதிகளுக்கு கட்டுப்பட்டால்தான், பெண் பாலினத்தில் சொல்ல இயலும். 
அல்லாஹ் என்கிற சொல் இயற்கையிலேயே பெண் பாலினத்தை குறிக்கக் கூடியதாக இல்லை.

அல்லாஹ் என்கிற சொல் இருமையை குறிக்காது. மாறாக அது ஒருமைக்குரிய சொல்.
அல்லாஹ் என்கிற சொல் "தா" என்ற அரபி எழுத்து கொண்டு முடியவில்லை.
அல்லாஹ் என்கிற சொல்  "பெரிய அலிப்" என்ற எழுத்து கொண்டு முடியவில்லை.

எனவே, அல்லாஹ் என்கிற சொல் பெண் பாலினத்திற்குரிய எந்த விதிக்கும் கட்டுப்படவில்லை. அரபு மொழியில், இரண்டே இரண்டு பாலினங்கள் மட்டும் உள்ள காரணத்தினால், பெண் பாலில் சொல்ல முடியாத சொல்லை, ஆண் பாலில்தான் சொல்ல முடியும்.

ஆகவே, அல்லாஹ் என்கிற சொல் ஆண் பாலில் பயன்படுத்தப்படுகிறது. திருக்குர்ஆன் அரபு மொழியில் அருள்ளப்பட்டதால், மொழிபெயர்க்கும் போது, அரபியில் உள்ளபடி ஆண் பாலிலேயே மொழிபெயர்த்துள்ளனர். எனவே தான், திருக்குர்ஆனில் இறைவனை குறிப்பிடும் போது "அவன்" என்ற ஆண் பால் பதம் பயன்படுத்தப்பட்டும்.

அரபிக் பைபிளின் ஆதியாகமம் 1:31 வசனத்தை வாசித்தாலும் இந்த விதி குறித்து அறிய முடியும்.

ورأى الله كل ما عمله فاذا هو حسن جدا (ஆதியாகமம் 1:31)  (http://www.arabicbible.com/ot-text/79-genesis/167-genesis-1.html)

மேலே உள்ள அரபு பைபிள் வசனத்தில் الله (அல்லாஹ்) என்கிற வார்த்தை இடம் பெறுவதை நீங்கள் காணலாம். அல்லாஹ் செய்த செயல் என்பதை குறிக்க عمله (அமலுஹு) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுள்ளது. "عمله"  என்ற வார்த்தைக்கு, "அவன் செய்த செயல்" என்று பொருள். அவன் என்ற பொருளை தரக் கூடிய ه (ஹு) என்ற சொல் பயன்படுத்தி இருப்பதை நீங்கள் காணலாம். இதை பெண் பாலில் சொல்லவேண்டும் என்றால், அமலுஹா என்று சொல்ல வேண்டும். அல்லாஹ் என்கிற சொல் ஆண் பாலில் தான் சொல்ல முடியும் என்பதால் அமலுஹு (அவன் செய்த செயல்) என்று ஆண் பாலில் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி:www.invitetogod.com

வியாழன், 24 மார்ச், 2016

டைம்ஸ் நவ் ஜாதிக் கலவரம் பற்றிய வீடியோhttp://quranmalar.blogspot.com/2012/11/blog-post_12.html

செவ்வாய், 22 மார்ச், 2016

இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் I


சதிவலைக்குள் உழலும் உலகம்  
இன்று உலகம் எப்படிப்பட்ட பயங்கரமான சதிவலையில் சிக்குண்டு கிடக்கிறது  என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே இஸ்லாம் ஏன் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்பதையும் இஸ்லாமியர்கள் ஏன் கடுமையான நேரடித் தாக்குதல்களுக்கும் கடுமையான ஊடகத் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறார்கள் என்பதையும்  நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
உலகத்தின் செல்வ வளங்களின் சரிபாதி வெறும் 62 கோடீஸ்வரர்களால் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று நாம் வாழும் உலகின் 10 சதவீத மக்கள் உலக வளங்களின் 87.7 சதவீத வளங்களை அநியாயமாகக் கையகப்படுத்தி உள்ளதால் உலகின்  666 கோடி மக்கள் எஞ்சியுள்ள 12.3  சதவீத வளங்களைத் தங்களுக்கிடையே பங்கீடு செய்யவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். (Report by the Swiss bank Credit Suisse-). கோடிக்கணக்கான மக்கள் உணவுநீர்வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடுவதற்கும் உண்ண உணவின்றி அன்றாடம் செத்து மடிவதற்கும் மூல காரணம் இந்தக் கொடியோர்களின் சுயநல வேட்கையே! சிறு நாடுகள் தங்கள் கைவசம் செல்வ வளங்கள் பல இருந்தும் இடைவிடாமல் போர்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் மூல காரணம் இக்கொடியோர்கள் தங்கள் வருமானங்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களே! இக்கொடியோர்களின் பிடியில் இருந்து உலகை விடுவிக்கப் போராடும் ஒரே மக்கள் சக்தியாக இஸ்லாம் உருவெடுத்து வருவதால்தான் இன்று அது தாக்குதல்களுக்கு உள்ளாகிறது என்பதை நடுநிலையாக ஆராய்வோர் உணரலாம்.
இன்று உலக மக்களில் 25% த்திற்கும் அதிகமானோரை இஸ்லாம் என்ற உலகளாவிய இயக்கம் ஏற்கனவே ஈர்த்திருப்பதும்  இன்னும் அதிகமானோரை தொடர்ந்து அது இடைவிடாது ஈர்த்து வருவதையும் கண்ணுறும்போது தவறு இஸ்லாத்திடம் அல்ல, மாறாக வேறெங்கோ இருக்கிறது என்பதை நீங்கள் கணிக்கவும் முடியும்.

உலகைப் பின்னியுள்ள வஞ்சக வலை!
அகில உலகத்தையும் பின்னி இருக்கும் அந்த மோசக்கார சதிவலையைப்பற்றி மிகச் சுருக்கமான முறையில் அறிய முற்படுவோம். . நம்மைச்சுற்றி எவ்வளவோ சதிவலைகள் பின்னப்பட்டிருந்தாலும் நாம் வலுவாக சிக்கியுள்ள பொருளாதார அமைப்பைப்பற்றி மட்டும் ஒரு உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்.
  உங்கள் சட்டைப்பைகளில் நீங்கள் உயிர் போல பாதுகாக்கும் ரூபாய் நோட்டுகளை சற்று நோட்டமிடுங்கள். இந்த முக்கியமான தாள்களின் பின்னணியை நீங்கள் அறிவீர்களா? உங்கள் கைகளில் இன்று புழங்கும் காகிதப் பணத்தின் தாள்கள் ஒவ்வொன்றும் ஒரு உறுதிப் பத்திரம் என்பதை அறிவீர்கள். அதாவது உங்கள் பணத்தின் மதிப்பு கொண்ட தங்கம் அல்லது பொருள் எங்கோ பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அதன் ரசீதுதான் இந்தத் தாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் உங்களால் அதைக்கொண்டு பொருள்களை வாங்க முடிகிறது. பரிமாற முடிகிறது. ஆனால் இந்த பத்திரங்களை விநியோகித்தவர்கள் உங்களை ஆள்பவர்களின் துணையோடு நம்பிக்கை துரோகம் செய்தால்....? 
சற்று சிந்தித்துப்பாருங்கள்!

உங்கள் பர்ஸில் நீங்கள் பாதுகாக்கும் காகிதப் பணமே நீங்கள் மோசடிக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதற்கான சான்றிதழாக இருக்கிறது. யார் நம்மை மோசடி செய்கிறார்கள் என்பதை அறிய இந்தக் காகிதப்பணம் வந்த கதையை நீங்கள் தெரிந்தாக வேண்டும். மிகமிக சுருக்கமாக அதைப் பார்ப்போம்....
------------------- 

காகிதப்பணம் வந்த கதை:
பண்டைக்காலத்தில் பண்டமாற்று முறையில் சந்தைகளில் வியாபாரம் நடந்து வந்தது.  போகப்போக தங்கக் காசுகள் புழக்கத்திற்கு வந்தன. தங்கக் காசுகளின் பாதுகாப்பு, அவற்றின் போக்குவரத்து இவை மக்களுக்கு சிரமம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்க நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சில செல்வந்தர்கள் முன்வந்து பெரும் பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவி மக்களிடம் இருந்த தங்கத்தை பெற்று அவற்றுக்கான பத்திரங்களை வழங்கினார்கள். அவற்றைத் திருப்பிக் கொடுக்கும்போது அதற்கான சேவைக் கட்டணங்களையும் வசூலித்தார்கள். பிற்காலங்களில் மக்கள் அந்த பத்திரங்களையே தங்க நாணயங்கள் போல் வியாபாரங்களில் பரிமாறும் பழக்கத்திற்கு மாறினார்கள். இந்தப் பழக்கம் பிரபலமாக ஆக மக்கள் பெட்டகக்காரர்களிடம் நம்பிக்கையோடு கொடுத்திருந்த தங்க நாணயங்களில் பெரும்பாலானவை திரும்பப் பெறாமல் பெட்டகங்களிலேயே உறங்கின. இதை கவனித்த பெட்டகக்காரர்கள் ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டினார்கள். ‘நம் பெட்டகங்களில் உறங்கும் இந்த நாணயங்களை நாம் ஏன் இரகசியமாகக் மக்களுக்கு கடன் கொடுக்கக்கூடாது? அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து தங்கள் நாணயங்களைத் திருப்பக் கேட்பது என்பது நடவாத ஒன்று. அதனால் நாம் தாராளமாகக் கடன் கொடுத்து வட்டியை ஈட்டலாமே.” என்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்ய முடிவெடுத்து அதை செயல்படுத்தினார்கள். என்ன நடந்தது?.... அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட பெட்டகக் காரர்களின் பத்திரங்களையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். அவ்வாறு கொடுத்த பத்திரங்களைத் திரும்பப் பெறும்போது வட்டியும் வசூலித்தார்கள்.
வருமானத்தை ஈட்டும் வெற்றுக் காகிதம்
இப்போது பெட்டகக் காரர்களுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி! தாங்கள் வழங்கும் பத்திரங்கள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட பெட்டகக்காரர்கள் தங்கள் இச்சை போல பத்திரங்களை அச்சடித்து அதை விநியோகித்தார்கள். வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அதைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள், நினைத்ததை நடத்தினார்கள்... சமூகத்தின் மீது அசைக்கமுடியாத அதிகாரத்தைப் பெற்றார்கள்! ஆம், அந்த பத்திரங்களின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் பணத்தாள்கள்(currency)! அந்தப் பெட்டகங்களின் பரிணாமமே வங்கிகள்.
இப்போது யாரால் நாம் யாரால் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம்  என்பதை உங்களால் ஊகிக்க முடியும்! மனித வரலாற்றில் நாணயங்களும் வங்கி முறைகளும் முன்பே இருந்திருக்கின்றன. ஆனால் இன்று நாம் வாழும் உலகை கையகப்படுத்தி நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வங்கி அமைப்பைப் பற்றி மட்டும் தற்போது கவனிப்போம்.
 ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு  நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது. அரசாங்கமும் ரவுடிகளும் இந்தத் தனியார் முதலாளிகளுக்கு துணையாக இருந்தால் அவர்களால் செய்யமுடியாதது ஏதும் இருக்குமா?  
இதே சதித் திட்டத்தை உலக அளவில் செய்தால்... ?
ஆம், டாலர் என்ற வெற்றுக்காகிதத்திற்கு பெட்டிப்பாம்பாக உலகம் கட்டுண்டு கிடப்பது அதனால்தான்! 

பெடரல் ரிசர்வ் வங்கியும் டாலரும்
இந்த வங்கி உரிமையாளர்களின் வஞ்சகச் செயலுக்கு வல்லரசு அரசாங்கமும் வலிமையான ஊடகங்களும் உலக மாஃபியாவும் (ரவுடிகளும்) துணையாக இருந்தால் என்ன நடக்கும்? அவர்களால் எதைத்தான் செய்ய முடியாது? உலகில் எதைத்தான் அல்லது யாரைத்தான் வாங்க முடியாது? உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத்  ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு உலகின் எந்த மூலையில் உள்ள சொத்துக்களையும் நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் வணிக அமைப்புகளையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முடியாதா ? அதற்குப் பணியாதவர்களை பணிய வைக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களும் மாஃபியாக் கும்பல்களும் துணையிருக்கும்போது அவர்களுக்கு என்ன தடை?
அந்த வகையில் இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலக வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், என உலகின் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவை ஒரு பதிமூன்று யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?
பெடரல் ரிசர்வ் வங்கியின் உருவாக்கம்
இன்று அகில உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுக்குள் அடக்கிவைத்து நிர்வகித்து வரும் வங்கி அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. 1910ம் ஆண்டு அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் (Jekyll Island) ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு ரகசியமாக சந்தித்தார்கள். சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான உட்ரோ வில்சனை வஞ்சகமாக நிர்ப்பந்தித்து அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி. இந்த தனியார் வங்கி அச்சடித்து வெளியிடுவதுதான் டாலர் என்னும் உலகின் மிக சக்தி வாய்ந்த காகிதப்பணம்!
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம். முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று  உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

ஆக, மேலே கூறப்பட்ட 13 யூத குடும்பங்களின் வம்சாவளியினரின் கூட்டமைப்பின் கைகளால்தான் உலகத்தின் மொத்த பொருளாதாரமும், உலக நாடுகளின் வளங்களும், நிறுவனங்களும் ஊடகங்களும் கட்டுப்படுத்தப் படுகின்றன. இவர்கள் தங்கள் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தையும் உலக நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் இவர்களின் ஆணைப்படியே நியமிக்கப் படுகிறார்கள். நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். (உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர்).
---------------------- 
உலகை எவ்வாறு கட்டுக்குள் வைக்கிறார்கள்?
உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள்,   ஏவுகணைகள்நீர்மூழ்கிக்  கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது.  ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவருக்கொருவரை அடித்துக் கொள்ள வைப்பது அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுதல் போன்றவை இவர்களுக்கு வாடிக்கை. ஆயுத விற்பனைக்காகவும் ஆயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும் என்பதற்காகவும் ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகைடிவிரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள்! காரணம்.. உலக ஊடகங்களில் பெரும்பாலானவை இவர்களால் வாங்கப் பட்டவையே!  
இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ;யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)

ஒரே ஒரு நம்பிக்கை ஒளி
ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது! அது இனம் சார்ந்ததல்லமாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம்அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் சக்தி! எந்த மக்களை அல்லது சமூகங்களை ஆட்கொள்கிறதோ அவர்களை சீர்திருத்தி அவர்களையே உலகில் நடக்கும் அநியாயங்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக முன்னிறுத்துகிறது இந்த சீர்திருத்த சித்தாந்தம்!
இவ்வுலகைப் படைத்தவனே வகுத்து வழங்கும் இந்த சீர்திருத்தக் கொள்கை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கும் பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டும் என்பதற்கும் அவனே தனது திருமறை மூலம் உத்தரவாதம் வழங்குகிறான்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட  அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)


செவ்வாய், 15 மார்ச், 2016

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?


திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா
?

"
திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே!" என்று பலரும் இணையத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

1.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)

2.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகள் அரபி மொழியில் பெயர்க்கப்படவில்லை. இஸ்லாம் உலகெங்கிலும் வியாபித்த பிற்காலகட்டத்திலேயே அரபி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிளின் பழய ஏற்பாட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏர்ணஸ்ட் உர்த்வின் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். "இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பின்னர் அரபு மொழியும் வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் மொழியாக அரபு மொழி மாறிவிட்டது. அரபு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவது அவசியமாகி விட்ட இக்கால கட்டத்தில்தான் பைபிளின் ஏராளமான பதிப்புகள் அரபியில் வெளிவரத் துவங்கின" (Ernst Wurthewin: Text of The Old Testament Page 104)
ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பழைய ஏற்பாடு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என கிடைத்த கையெழுத்துக் குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. (Ibid Page 224-225) பெரும்பாலும் இக்காலகட்டத்தில் தான் புதிய ஏற்பாடும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிரபல ஆய்வாளர் சிட்னி எச் க்ரிஃபின் என்பவர் கூறுகிறார்: "அரபு மொழியில் சுவிசேஷங்களைக் கொண்ட மிகப் புராதனமான கையெழுத்து ஆவணம் சினாய் கையெழுத்துப் பிரதி 72 (Sinai Arabic MS72) ஆகும். ஜெருசலேம் சபையின் பிரார்த்தனை காலண்டரின் கால அட்டடவணைப் படி வரிசைப்படுத்தப்பட்ட நான்கு கானானிய சுவிவேஷங்களும் இதில் அடங்கும். இக்குறிப்பானது ரம்லா என்னுமிடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (Stephen of Ramlah) என்பவரால் அரபு வருடம் 284 (கி.பி 897) ல் எழுதப்பட்டது என்று இதன் இறுதியில் அமைந்த குறிப்பு தெளிவாகக் கூறுகிறது. (Sidney H Griffith: The Gospel in Arabic: An Enquiry Into its Appearance In the First Abbasi Century Page 132) அதே புத்தகத்தின் இன்னொரிடத்தில் அன்போஸ்தலர்களின் நடபடிகள்,பவுலின் நிருபங்கள் மற்றும் கத்தோலிக்க நிருபங்களை உள்ளடக்கிய Sinai Arabic MS151 என்ற கையெழுத்து ஆவணம் ஹிஜ்ரி 253 (கி.பி 867) ல் பிஸ்ருப்னு ஸிர்ரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இதில் சுவிசேஷங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Ibid Page 131)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அரபியில் இல்லாத ஒரு புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டனர் என்பது அறிவீனமன்றோ?

3.
இறை தூதர்களைக் குறித்து அவர்களைப் பாவிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் பைபிளின் வரிகள் சித்தரிக்கின்றன. நோவா மது அருந்தி போதையில் புரண்டதாகவும், லோத்து மது அருந்தி சொந்தப் புதல்விகளுடன் சல்லாபித்ததாகவும், யாக்கோபை சதியனாகவும், தாவீதை தந்திரமாக ஏமாற்றக் கூடியவனாகவும், இயேசுவை மதுபானம் விளம்பியவராகவும் பைபிள் சித்தரிக்கின்றது. இத்தகைய குற்றங்கள் யாவும் மக்களை நன்மையின் பால் வழி நடத்தவேண்டிய இறைதூதர்களின் பண்புகளுக்கு உகந்ததல்ல என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். இதுபோன்ற அபத்தங்களை விட்டு குர்ஆன் பரிசுத்தமாக உள்ளது. இத்தகைய எந்த கற்பனைகளும் குர்ஆன் கூறும் வரலாறுகளில் எள்ளளவும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து காப்பியடித்தார்கள் என்பது உண்மையாயின் இறைதூதர்கள் மீது பைபிள் இட்டுக் கட்டியுள்ள பாவங்கள் குர்ஆன் வசனங்களிலும் இடம் பெற்றிருக்கும் (அல்லாஹ் மிகப் பரிசுத்மானவன்!) அவ்வாறு எதுவும் அபத்தங்கள் குர்ஆனில் இல்லை என்பது மட்டுமல்ல, திருக்குர்ஆன் கூறும் இறை தூதர்களின் வரலாறுகள் அவர்களை தூயவர்களாகவும் மகான்களாகவும் மிகப்பெரிய தியாகிகளாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. இது பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்ற குற்றச்சாட்டின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.

4.
வரலாற்றைப் பொறுத்த வரையில் அதன் அடிப்படைக்கு எவ்வகையிலும் பொருந்தாத பல செய்திகளும் வரலாறு என்ற பெயரில் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. பைபிள் பண்டிதர்களே இதனை அங்கீகரித்துள்ளனர். "பல உறுதியற்ற வரலாற்றுத் தகவல்களும் பைபிளில் உள்ளன" (பார்க்க: பைபிள் வித்ஞான கோஷம் பக்கம் 12) உண்மையில் பைபிளிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்திருந்தால் அத்தகைய பல உண்மைக்கு முரணான செய்திகள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் குர்ஆன் கூறும் சரித்திரங்களை நிரூபிக்கும் புவியியல் ரீதியான சான்றுகள் கூட இன்று உலகுக்கே வெளிச்சமாக உள்ளன.

5.
அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது என்று ஆதியாகமத்தின் வரிகள் கூறுகின்றன. இன்னும் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிப்பதால் இரவு பகல் மாற்றம் ஏற்படுகிறது, (யோசுவா 10: 12,13) பூமி விலகிச் செல்லாமால் நாட்டி வைக்கப்படுள்ளது (சங்கீதம் 104:5) முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றன. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தகைய தகவல்கள் தீர்க்கதரிசிகளின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பதாகும். பைபிளைத் தழுவியே குர்ஆன் உருவாக்கப்பட்டது என்ற கூற்று உண்மையாயின் விஞ்ஞான முரணான இத்தகை தகவல்கள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கவேண்டும். இத்தகை தகவல்கள் விஞ்ஞான முரணானவை என்பதைத் தெரிந்து கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை நீக்கியிருப்பார்களா என்று கருதவும் இடமில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்த காலம் இத்தகைய உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறியக்கூடிய காலகட்டமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. ஒருவேளை நூற்றாண்டுகள் கழிந்து கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்ட காரணத்தால் முரணான தகவல்களை நீக்கியிருப்பார்கள் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் இறைவசனமல்ல என்பதை நிரூபிக்க ஆதாரம் தேடியவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் வருங்காலத்தை அறியக் கூடியவராக இருந்தார் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதனால் அவர்களுக்கு கடவுள்தன்மையை வழங்கி இன்னும் அதிகமான வழிகேட்டில் விழுந்துவிடுவர்.

6.
பைபிளில் காணப்படாத இறைத்தூதர்கள் மற்றும் சமூகங்களின் வரலாறுகளும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணம்: ஆது மற்றும் ஃதமூது சமூகங்கள், அவர்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட தூதர்கள் ஹ¨து (அலைஹிஸ்ஸலாம்), மற்றும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம். இவர்களைக் குறித்த எந்த தகவலும் பைபிளில் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்றிருப்பின் பைபிளில் கூறப்படாத இந்த இரண்டு பெரும் சமூகங்களின் வரலாறுகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்ததாம்?

7.
இறைதூதர்களின் வரலாறுகளில் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவற்றைப் பற்றிய எந்த தகவலும் பைபிளில் இல்லை. உதாரணமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூறலாம்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களை நிராகரித்த அவர்களின் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் (அத்தியாயம் 11 வசனங்கள் 42 முதல் 46 வரை) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நம்றூது மன்னனுடன் நடத்திய விவாதம் (அத்தியாயம் 2: வசனம் 258) அவர்களின் தந்தை ஆஸருடன் நடந்த உரையாடல் (6:74, 19:41-49, 43: 26-27) மரணத்தவர்களை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதற்கு நான்கு பறவைகளப் பிடித்து பின்னர் அவற்றைத் துண்டுகளாக ஆக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டுப் பன்னர் அழைத்தால் அவை ஓடி வரும் என்று அல்லாஹ் அவர்களுக்கு விளக்கிக் காட்டியமை (2:260) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் ஆற்றலால் அற்புதமாக மீட்கப்பட்டது (21: 69,70) போன்ற சம்பவங்களைக் குறித்த எந்தத் தகவலும் பைபிளில் இல்லை.
இன்னும் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட அதனை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீல் சந்ததிகளிடம் கூறுகையில் அவர்கள் பசுவை அறுக்க மனமின்றி அதன் தன்மைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது, (2:67-71) கொலைக் குற்றம் நிரூபிக்க அறுக்கப்பட்ட பசுவின் மாமிசத் துண்டைக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டது (2: 72-73) முதலானவை குறித்த தகவல்களும் பைபிளில் இல்லை.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. தனது குழந்தைப் பருவத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுப்பில் புனிதப் பள்ளியில் தங்கியிருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் உணவளித்தமை! (3:37) பிரசவ காலத்தில் மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தனிப்பட்ட அருட்கொடைகள் (19: 23-26) ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதோ மர்யமின் வரலாற்றை விவரிக்கும் இடத்தில் திருக்குர்ஆன் கூறியது எத்துணை உண்மை!

(
நபியே!) இவை (அனைத்தும்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3: 44)

8.
திருக்குர்ஆன் விவரிக்கும் இறைதூதர்களின் வரலாறுகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் தெளிவான விளக்கங்களை உடையதும் ஆகும். இறைதூதர்களின் வலாற்றை விவரிக்கும் தன்மை பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மோசே (மூஸா அலைஹிஸ்ஸலாம்) ஸினாய் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் வணங்குவதற்காக பொன்னால் ஆன ஒரு காளைக் கன்றை உருவாக்கிக் கொடுத்தது மோசேயின் சகோதரனும் தீர்க்கதரிசியும் ஆன ஆரோன் (ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளின் வரிகள் கூறுகின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்ல பைபிள் கூட இறை தூதராக அறிமுகப்படுத்தும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் சிலைவணக்கத்துக்கு துணைபோனார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதே சம்பவத்தை திருக்குர்ஆன் விவரிக்குமிடத்து காளைக் கன்றை உருவாக்கி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் சிலைவணக்கத்தைத் தூண்டியவன் இஸ்ரவேல் சமூகத்தில் உள்ள சாமிரி என்ற வழிகேடன் என்றும் அதன் காரணமாக அவன் இறைகோபத்திற்கு ஆளாகி நோயினால் பீடிக்கப்பட்டான் என்று கூறுகிறது (20: 85-97)

முடிவுரை

இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களிலிருந்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்கள் பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது முழுக்க முழுக்க இறைவேதம் என்பதும் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்குமிடங்களில் பைபிளில் காணப்படும் அபத்தங்கள், அறிவுக்குப் பொருந்தாதா விஷயங்கள், முரண்பாடுகள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை. திருக்குர்ஆன் கூறும் வரலாறு படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாகவும் இறையச்சத்தையும் சிறந்த படிப்பினையை வழங்குவதாகவும் உள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனையல்ல. அல்லாஹ் இறக்கிய உண்மை வேதம் என்பதற்கான சான்றுகளாகும்.
"
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை." (அல்குர்ஆன் : 53: 1-4)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

புதன், 9 மார்ச், 2016

புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!


இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை  இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் இறைவனின் சான்றுகள் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித்தோழர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபியவர்களின் மகன் மரணித்த நேரமும், கிரகணம் தோன்றிய நேரமும் ஒன்றாக இருந்ததினால் மக்கள் நபியின் மகனின் மரணத்திற்குத்தான் கிரகணம் தோன்றியது என கூறிக்கொண்டிருந்தார்கள்.
 அப்போது  நபியவர்கள் தனது ஆழ்ந்த துக்க வேளையிலும் அதைப் பொருட்படுத்தாது மக்களிடம் வந்து 'கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும்நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு' என்பதை உணர்த்தி அவர்களின் மூடநம்பிக்கையை துடைந்தெறிந்தார்கள்.

இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.
"நபியின் மகன் இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது" என்று மக்களேபேசிக் கொள்ளும்போது அதைக்கண்டு பெருமிதம் கொள்ளவோ தன புகழை உயர்த்திக்கொள்ளவோ செய்யவில்லை  நபிகளார்.

இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லாவாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அவ்வாறுதான் இறைத்தூதர்கள் யாருமே இயற்கையாக  நிகழும் அற்புதங்களாயினும் சரி, இறைவனின் அனுமதி கொண்டு அவர்களே நிகழ்த்தும் அற்புதங்களாயினும் சரி, அவற்றைக் காட்டி தங்களுக்கு தெய்வீகத் தன்மை உள்ளதாக வாதிடவில்லை.  இவற்றை நிகழ்த்துபவன் இறைவனே என்று கூறி அவனுக்கு நன்றி கூறி அவனுக்கு கட்டுப்பட்டு வாழுமாறு மக்களை அழைத்தார்கள்.  அவ்வாறு கட்டுப்பட்டு வாழுதலுக்கு அரபு மொழியில் 'இஸ்லாம்' என்று வழங்கப்படுகிறது.

நபிகளாருக்கு முன்னர் வந்த இறைத்தூதரான இயேசு நாதரும் (அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக) தன் வாழ்நாளில் பல அற்புதங்களை செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (இயேசுவை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)
இயேசு அவர்களின் பிறப்பும் இவ்வுலகிலிருந்து அவரது மறைவும் எல்லாம் அற்புதமே! ஆயினும் ஒருபோதும் தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவோ தன்னை வணங்கச் சொல்லியோ இயேசு மக்களுக்குக் கூறவில்லை என்பதை ஆராய்வோர் அறியலாம்!
=================
இஸ்லாம் என்றால் என்ன?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html

நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!

https://www.quranmalar.com/2019/09/blog-post_23.html

இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு

https://www.quranmalar.com/2014/12/blog-post_15.html