இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 டிசம்பர், 2019

பாலியல் கொடுமைகளில் இருந்து காக்கும் கட்டுப்பாடுகள்


 குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள். அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதை நாம் நன்கறிவோம். அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும்.
அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான் இறைவன். இன்று நாட்டில் பரவலாக நடந்து கொண்டு இருக்கும் பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்ணினத்தைக் காக்க இவை ஒவ்வொன்றும் இன்றியமையாதவை என்பதை நீங்கள் உணரலாம்.

1.       ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு,
=  ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் 
மறைக்கப்பட வேண்டியவையாகும்.
= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.
= உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.
(ஆதாரம்: திருக்குர்ஆன் 24:31, 33:59 மற்றும் நபிமொழிகள் )

  1. பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை
= மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது.  (திருக்குர்ஆன் 17:32)

  1. ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு
=  (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்....
 (திருக்குர்ஆன் 24:30,31).
  1. பத்து வயதுக்கு மேல் ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல், (ஹதீஸ்)
நபி (ஸல்) அவர்கள் சொன்னர்கள்:
"
உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும்போது தொழச்சொல்லி ஏவுங்கள். பத்து வயதாகும்போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து (படுக்க) வையுங்கள்." (அபூதாவுத்)
  1. இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி
=  "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" – நபிமொழி (புகாரி)
  1. பெண்கள் நெருங்கிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை,,
= எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் (நெருங்கிய ஆண் உறவினர்) துணை இல்லாமல் ஒரு பரீத் அதாவது 12 மைல் தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா நூல்கள்: பைஹகீ, அபூதாவூத்)
  1. அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப் பழகுவதற்குத் தடை
= மேலும், (இறை விசுவாசினிகளான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், இறைவிசுவாசிகளே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் பிழை பொறுக்கத் தேடுங்கள். நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (திருக்குர்ஆன் 24:30,31).
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

  1. அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை
= . நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (திருக்குர்ஆன் 33:32)
  1. வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை
= “ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர” என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 2611)
= உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 109)

  1. வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணம் கொண்ட உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:32) 
  1. மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை
= ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

  1. வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கோடை கொடுக்க கட்டளை
மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)
  1. குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல.
= ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும் (திருக்குர்ஆன் 4:34)
  1. கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி
= எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (திருக்குர்ஆன் 24:4)
  1. விபச்சாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்
 விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 24:2)
மேலும் விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி திருமணம் முடித்த ஆண் அல்லது திருமணம் முடித்த பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு பொதுமக்கள் முன் மரண தண்டனை வழங்கவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது.
=============== 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
அல்லாஹ் என்றால் யார்?

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஆணும் பெண்ணும் உறவாட தடைகள் எதற்கு?

Related image இன்று ஆண்களும் பெண்களும் – குறிப்பாக இளைஞர்கள் -சுதந்திரம்விடுதலைபெண் விடுதலை மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிரச்சாரங்களால் கவரப்படுகிறார்கள். ஆடைக்குறைப்பே பெண் விடுதலைக்கும் முற்போக்குக்கும்  அளவுகோலாக பார்க்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘ஆணும் பெண்ணும் காதலால் காமத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாமே! கட்டுப்பாடுகள் எதற்கு?’ என்று சிந்திப்போர் அதிகரித்து வருகிறார்கள்.
கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திரம் – அதாவது மனம்போன போக்கும் தான்தோன்றித்தனமும் - எந்த ஒன்றையும் பாழ்படுத்தவே செய்யும் என்பது திண்ணம். அது ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரியே. உதாரணமாக கால்பந்தாட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . வரையறுக்கப்பட்ட ஒரு விளையாட்டு எல்லையும் அதன் விதிகளும் இருந்தால்தான் அது ஒரு அர்த்தமுள்ள விளையாட்டாக அமையும். சற்று கற்பனை செய்து பாருங்கள்விளையாட்டுத் தளத்திற்கான எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை,  அதற்கான விதிகளும் வரையறுக்கப்படவில்லைஆட்டக்காரர்கள் அவரவர் நினைத்தமாதிரி ஆடலாம் என்ற நிலை இருந்தால் கால்பந்து விளையாட்டை ஆடத்தான் முடியுமாஇல்லைஇரசிக்கத்தான் முடியுமா?

கட்டுப்பாடுகளே மகிழ்ச்சிக்கு அடிப்படை
இவ்வாறிருக்க, வாழ்கையின் மிக முக்கியமான விடயங்களில் ஒழுங்கையும் வரையறைகளையும் கட்டுப்பாட்டையும் பேணாமல் இருக்க முடியுமா? அந்த ஒழுங்கைப் பேணுவதற்கான வழிகாட்டுதல்தான் இஸ்லாம் என்ற இறை தந்த வாழ்வியல் கொள்கை. மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் பேணவேண்டிய கட்டுப்பாடுகளை இஸ்லாம் கற்றுத் தருவதை நீங்கள் காணலாம். அந்த வகையில் இஸ்லாம் வாழ்க்கையில் பல விஷயங்களை தடை செய்கிறது. இந்த தடைகள்தான் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குகின்றன என்பதை ஆராய்வோர் அறியலாம்.
உண்மையில் இறைவன் இஸ்லாம் என்ற தன் வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியூட்டும் காரியங்களை அனுமதித்து மகிழ்ச்சியைக் கெடுக்கும் காரியங்களை தடை செய்கிறான்.  உதாரணமாக பொருளீட்டுவது என்பது வாழ்க்கையின் அத்தியாவசியமான பாகமாகும். நேர்மையான வியாபாரம் என்பது  அதன் ஆரோக்கியமான வடிவமாகும். வட்டி என்பது அதனைக் களங்கப்படுத்தும் கறையாகும். அடுத்தவரின் இரத்தத்தை குடித்து கொழுப்பது வட்டி. இஸ்லாம் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளது.
ஆண்-பெண் உறவுகளை ஆரோக்கியமாக்கும் கட்டுப்பாடுகள்  
பாலியல் மற்றும் காதலின் ஆரோக்கியமான வடிவமே திருமணம் என்பது. விபச்சாரமும் தகாத பாலுறவுத் தொடர்புகளும் அதன் களங்கம் நிறைந்த வடிவமாகும். இவற்றுக்குத் தடை விதித்து திருமணம் மூலம் பாலியல் மற்றும் காதல் தேவைகளை நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம்.   
 ஆண்-பெண் ஒருவரோடொருவர் பழகுவதற்கும்   உறவுகொள்வதற்கும்  உடை உடுப்பதற்கும் அவர்களுக்குக் கட்டுப்பாடற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் அங்கு என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். வேட்டைக்காரனாக விளங்கும் ஆண் அங்கு தன் நாட்டத்தைத் தீர்த்துக்கொள்ளவும் நழுவிச் செல்லவுமே முயலுவான். எனவே அந்த சுதந்திரத்தை வரம்பிட்டு கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.  அப்போதுதான் அந்த சுதந்திரம் தனிநபருக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் வண்ணம் அமையும்.  அதைத்தான் இஸ்லாம் திருமணம் என்ற புனித ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள அனுமதித்து, அதற்கப்பாற்பட்ட அனைத்து விதமான பாலியல் அத்துமீறல்களையும் தடை செய்கிறது. மட்டுமல்ல அப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கு இட்டுச்செல்லும் வழிகளையும் முன்னெச்சரிக்கையோடு தடை செய்கிறது.
= மேலும்விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாகஅது மானங்கெட்ட செயலாகவும்மிகத் தீய வழியாகவும் இருக்கிறது.  (திருக்குர்ஆன் 17:32)

வரம்பில்லா சுதந்திரத்தின் விளைவுகள்:
ஆணும் பெண்ணும் வரம்புகளின்றி கலந்து பழகலாம் என்று கூறப்படும் 'சுதந்திரமானதுஆணுக்கு வழங்கப்படும் மோசடி செய்வதற்கான லைசென்ஸ் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆண் - பெண் உடற்கூறு மற்றும் இயற்கை அமைப்பு பின்னணிகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் இந்த சுதந்திரமானது முற்றிலும் இயற்கைக்கு எதிரானது. மீளமுடியாத விபரீதங்களுக்கு இட்டுச் செல்வது. மாறாக பாலியல் உறவு மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஆணையும் பெண்ணையும் பொறுப்பேற்கச் செய்யும் ஒப்பந்தமே திருமணம் என்பது. அப்படிப்பட்ட
ஒப்பந்தம் ஏதும் செய்யாமல் ஆணும் பெண்ணும் மனோ இச்சைக்கு உட்பட்டு உடலுறவில் ஈடுபடுவது அந்த இருவரையும்  அவர்களைச் சார்ந்தவர்களையும் எந்த நேரத்திலும் விபரீதங்களுக்கு உள்ளாக்கி விடும் என்பதை நாம் நன்கறிவோம்.  சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும்  சேர்ந்து அனுபவித்த உடலுறவு இன்பத்தின் விளைவுகளை இறுதியில் பெண் தன்னந்தனியாளாக சுமக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறாள். நிலைமை ஆணுக்கு எதிராகவும் மாற வாய்ப்புண்டு. இதன் மூலம் அவன் அந்தப் பெண்ணால் பிளாக்மெயில் செய்யப்படவும் அது வழிவகுக்கும்.  இதற்குக் காரணம் ஒப்பந்தம் செய்யாமல் உண்டான உடலுறவே!
பாலியல் விபரீதங்கள் நேராமல் இருக்க பார்வைகளைக் கட்டுபடுத்தி கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று முதலில் ஆண்களை நோக்கித்தான் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறான் இறைவன். பிறகுதான் பெண்களுக்கான கற்பைப் பேணும் கட்டளை என்பதை கவனியுங்கள்:
 (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம்அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவேஅவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாகஅல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும்தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்....
 (திருக்குர்ஆன் 24:30,31).

திங்கள், 16 டிசம்பர், 2019

கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம்


Image result for white sheet marginஒரு வெள்ளைக் காகிதத்தில் கடிதம் அல்லது கட்டுரை எழுத முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கடிதத்தின் எல்லைகளை வரையறுக்க கீழும்  பக்கவாட்டிலும் மார்ஜின் போட்டு ஒழுங்குபடுத்துவோம். எழுதத் துவங்கும்போது  கடித வரிகள் ஒன்றன்கீழ் ஒன்று சீராக இருக்க ரூல் போடுகிறோம். எழுத நினைப்பதை வாக்கியங்களாகப் பிரிக்கிறோம். வார்த்தைகளுக்கிடையே ஒரே மாதிரியான ஸ்பேஸ் விட்டு வரிகளை எழுதுகிறோம். ஒரு கட்டுரை எழுத நினைத்தால், முன்னுரை, முக்கிய உரை, முடிவுரை என தரம் பிரித்து பத்திகள் பிரித்து எழுதுகிறோம். இவ்வாறு வரம்புகளும் வரையறைகளும் விதிமுறைகளும் பேணுவது எதற்காக? அப்போதுதான் நாம் எழுதுவது ஒரு அர்த்தமுள்ள கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ அல்லது ஒரு காவியமாகவோ ஆகும். பிறரால் படிக்கவும் இரசிக்கவும் முடியும். மாறாக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மேற்கண்ட வரையறைகள் எதுவுமே பேணாமல் மனம்போன போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்படுபவை எழுத்துக்களே ஆனாலும் அதை கிறுக்கல் என்றும் எழுதியவரை  கிறுக்கன் என்றும்தான் மக்கள் அழைப்பார்கள்!
வீடு கட்டினாலும்..
அதேபோல நீங்கள் ஒரு காலி மைதானத்தில் வீட்டை கட்ட நினைத்தாலும் முதலில் என்ன செய்வீர்கள்?
மைதானத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வீட்டிற்கான எல்லை வகுப்பீர்கள். வரைபடம் வரைந்து வீடு கட்டுவதற்கு தேவையானவற்றை சேகரிப்பீர்கள். தொடர்ந்து தரையில் அஸ்திவாரம் போட கோடு போடுதல்குழி வெட்டுதல், வரையறுக்கப்பட்ட அளவையில் கலவை தயாரித்தல், அஸ்திவாரக் குழியில் கலவை போட்டு  அஸ்திவார  கற்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுக்குதல், கலவை போடுதல், அடுத்த வரிசை கற்களை அடுக்குதல் எனத் தொடங்கி இறுதியில் கூரை போட்டு முடிக்கும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் (do’s and don’ts) ஒழுங்கையும் (order) பின்பற்றியே வீட்டைக் கட்டி முடிக்கிறீர்கள். 
இனி, மேற்கண்ட எந்த எல்லைகளையும் வரையறைகளும் ஒழுங்கையும் எல்லாம் புறக்கணித்துஎன் வீடு இது, என் விருப்பம் எனது உரிமைஎன்று கூறிக் கொண்டு மனம்போன போக்கில் நடந்து கொண்டால் என்ன நடக்கும்? மைதானத்தில் அங்கொரு குழி இங்கொரு குழி அங்கொரு கல் இங்கொரு கல் என ஒரு குப்பை மேடுதான் உருவாகி இருக்குமே தவிர குடியிருக்க ஒரு வீடு அங்கு அமையாது என்பதை அறிவோம். 

எல்லைகளும் கட்டுப்பாடுகளும்
இவ்வாறு நீங்கள் உணவு சமைப்பதாக இருந்தாலும், ஆடை தைப்பதாக இருந்தாலும், ஏதேனும் உபயோகமுள்ள ஒரு பொருளை தயாரிப்பதாக இருந்தாலும் அங்கெல்லாம் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் ஒழுங்கையும்  பின்பற்றினால்தான் அந்த முயற்சி பயனளிப்பதாக இருக்கும் என்பது  திண்ணம்!  மாறாக தான்தோன்றித்தனம் பயனுள்ள எதையுமே விளைவிக்காது என்பதும் தெளிவு! ஆக, எல்லைகளும் கட்டுப்பாடும்  ஒழுங்கும்தான் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கும். 
 இவ்வாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளும் கட்டுப்பாடும்தான் அவற்றை பயனுள்ளதாக ஆக்குகின்றன. 
அதேபோல அவ்வாறு நீங்கள் தயாரித்த உணவானாலும் ஆடையானாலும் வீடானாலும் அவற்றை பயன்படுத்துவதற்கும் விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, மேலாடையைக் கீழாடையாக பயன்படுத்தவோ, சமைத்த உணவை சுவற்றில்  பூசவோ, மனிதர்களுக்காகக் கட்டிய வீட்டை மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தவோ  மாட்டோம். ஆக, பொருட்களின்  தயாரிப்பு  விஷயத்திலும் சரி, பயன்பாட்டு விஷயத்திலும் சரி, நாம் யாருமே
தான்தோன்றித்தனமாக செயல் படுவதில்லை .  காரணம் நான் அதன் தீய விளைவுகளை நன்றாக அறிவோம்.
அப்படியானால் உலகத்திலேயே மாபெரும் தயாரிப்பான மனித உடலைப் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் அதன் பயன்பாட்டு விஷயத்தில்  தான்தோன்றித் தனமாக செயல்பட முடியுமா?
கண்டிப்பாக, இந்த மனித உடலின்  பயன்பாடு ஆக்கபூர்வமாக அமைய வேண்டுமானால் மன இச்சைக்கு அடிபணிந்து செயலாற்றுவதை விட இந்த உடலை வடிவமைத்து உருவாக்கியதோடு நில்லாமல் அதனை இடைவிடாது பரிபாலித்தும் வருபவன் எவனோ அவனது வழிகாட்டுதல்படி- அதாவது அவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல்- விலக்கல்களையும் மதித்து-  செயல்படுவதுதானே முறை?
இதுதான் இஸ்லாம்
அந்த இறைவன் நமக்கு கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களைப் பேணி அவனது வழிகாட்டுதல் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் ஒரு பொருள் அமைதி என்பதாகும், அதன் இன்னொரு பொருள் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்தல் என்பதாகும். அதாவது கீழ்படிதல் ( discipline) மூலம் பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம் என்பதாகும்.
உலகம் என்ற  பரீட்சைக் கூடம் 
இப்போது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி ஒப்புகொண்டாலும் சரி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, நீங்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனமான உண்மை இதுதான். அதாவது இவ்வுலக வாழ்க்கையை  ஒரு பரீட்சையாக அமைத்துள்ள இறைவன் இந்த கீழ்ப்படிதலைத்தான் நம்மிடம் பரீட்சிக்கிறான். அதாவது யாராவது இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் -அதாவது  இறைவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல் - விலக்கல்களையும்  பேணி  அதன்படி வாழ்ந்தால் - அவர்களுக்கு  இவ்வுலக வாழ்க்கையில் ஒழுங்கும் நல்லொழுக்கமும்  கைகூடுகிறது. அதன்மூலம் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது
மேலும் மறுமை வாழ்க்கையில் அதற்குப் பரிசாக நிரந்தரமான சொர்க்கத்தையும் அடைகிறார்கள்.
  மாறாக யாரெல்லாம் இந்த உண்மையைப்  புறக்கணித்து, - அதாவது படைத்தவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை அலட்சியம் செய்து - அவனுக்குக்  கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக இந்த வாழ்க்கையை வாழ்கிறார்களோ   அவர்களுக்கு இம்மை வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் உரிய முறையில் கைகூடுவதில்லை. தனி நபர் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் குழப்பங்கள் நிறைந்ததாக அமைகிறது. படைத்தவனை மதிக்காமல் அவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றத்திற்கு 
தண்டனையாக மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.

இறைவன் தனது இறுதிவேதத்தில் தெளிவாக அறிவிக்கிறான்: 
 = ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதாகவே இருக்கிறது, தீமையை (துன்பங்களை)க் கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம், மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப்படுவீர்கள்.(திருக்குர்ஆன்  21:35)
= திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! (திருக்குர்ஆன் 18:7)
கீழ்படிந்த வாழ்க்கை மட்டுமே ஏற்புடையது 
இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த வாழ்க்கை என்ற  பரீட்சையில்  மனிதர்கள் சுயமாக உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும், முன்னோர் வகுத்த நெறிகளும், நாத்திகர்கள் உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும்  தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறைகளும் எல்லாமே தோல்வியை சந்திக்கும். இறைவன் அவர்களைப் பார்த்து கேட்பதைப் பாருங்கள்:
= இறைவனின்  மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.(திருக்குர்ஆன் 3:83)
இவ்வுலகையும் அவர்களையும் படைத்தவன் பக்குவமான வாழ்க்கை நெறியை வழங்கியிருக்க அதைப் புறக்கணித்து உருவாக்கப்பட்டவை அவனுக்கு ஏற்புடையதல்ல என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறான்: 
= திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே இறைவனிடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி  ஆகும். (திருக்குர்ஆன் 3:19)
அவ்வாறு வாழ்ந்து செல்பவர்களின் மறுமை நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இறைவன் இன்றே எச்சரிக்கிறான் :
= இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85)