இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2015

சமூகப் புரட்சிகளுக்கு உயிர்நாடி மந்திரம்பதினான்கு நூற்றாண்டுகளாக பாரெங்கும் ஊரெங்கும் சமூகப் புரட்சிகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒப்பற்ற சாதனைக்கு சொந்தக்காரர் மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்).
அவர் கொண்டுவந்த திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் எங்கெல்லாம் சென்றடைகிறதோ அந்த இடங்களிலெல்லாம்
= மனித உரிமை மீட்பு,
= இனவெறி ஒழிப்பு,
= ஜாதி ஒழிப்பு,
= நிறவெறி ஒழிப்பு,
= மனித சமத்துவம் நிலைநாட்டல்,
= மனித சகோதரத்துவம் நிலைநாட்டல்,
= பெண்ணுரிமைகள் மீட்பு,
= பெண்சிசுக்கொலை ஒழிப்பு,
= வரதட்சணை ஒழிப்பு,
= பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு
= விபச்சார ஒழிப்பு
= குடும்ப அமைப்பின் பாதுகாப்பு,
= குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம்
= தனிநபர் நல்லொழுக்கம்,
= மது, போதை தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு
= வட்டி ஒழிப்பு
= வறுமை ஒழிப்பு,
= வழிபாட்டு உரிமை மீட்பு
= இடைத்தரகர் ஒழிப்பு
= மூடநம்பிக்கை ஒழிப்பு
= ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு,
= ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு,

போன்ற பற்பல சமூகப் புரட்சிகளை உண்டாக்காமல் இருப்பதில்லை. மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் புரட்சிகள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை.

நபிகளாரைப் பின்பற்றுவோரின் சிறப்பு பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

"அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்." ( திருக்குர்ஆன் 7:157.
நபிகள் நாயகம் உயிரோடு இருக்கும்போதும் சரி இன்றும் சரி, அவர் நடத்திக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சிகளுக்கு ஆணிவேராக இருப்பது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற அவரது ஓரிறைக் கொள்கை முழக்கமே.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் யாரும் இல்லை என்பதே இதன் பொருள்.
‘அல்லாஹ்’ என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல்லாகும். சமூகத்தில் சீர்திருத்தம் ஏற்படுவதற்கும் ஒழுக்கம், அமைதி போன்றவை திரும்புவதற்கும் இதுவே உயிர்நாடி என்பதை சற்று சிந்தித்தால் உணரலாம்.

நபிகளார் கூறினார்கள்: “லா இலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்கள், வெற்றி அடையுங்கள்” என்று.
இவ்வுலகில் பாவங்களும் தீமைகளும் அதிகரிப்பதற்கும் அராஜகங்களும் அட்டூழியங்களும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் முக்கியக் காரணம் தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வுதான். தனிநபர்களில் இருந்து அரசாள்வோர் இதுவே நியதி.
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக, நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என் நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம் நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் - என்ற பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப் பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். கடவுள் அல்லாதவற்றை எல்லாம் காட்டி அவற்றை கடவுள் என்று கற்பிக்கும் போது இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு அகன்று போவதால் மக்களிடம் இறையச்சமே உண்டாவதில்லை.
இவ்வாறு இறையச்சம் இல்லாத தலைமுறைகள் உருவாகும்போது பாவம் செய்ய அஞ்சாத சமூகம் உருவெடுத்து அங்கு அமைதியின்மையும் கலவரங்களும் மேலோங்குகின்றன. இவை ஒருபுறம் நாட்டின் ஒழுக்க வீழ்ச்சிக்கு காரணமாகும்போது மறுபுறம் தவறான கடவுள் கொள்கை நாட்டில் மிகப்பெரும் இழப்புகளையும் விபரீதங்களையும் ஏற்படுத்துகிறது.

 கடவுளின் இலக்கணங்கள்  
திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கடவுளின் முக்கிய இலக்கணங்களை கூறுகிறது:
= 112: 1-4. நபியே நீர் சொல்வீராக: அல்லாஹ் ஒரே ஒருவனே. அல்லாஹ் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை
= 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்"" என்று கூறுவீராக.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது ஏகனாகிய இறைவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து இராதவன். தாய் தந்தை, மனைவி, மக்கள் என எந்த உறவுகளும் இல்லாத தனித்தவன். தன்னிகரற்றவன். அவனை எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கலாம். அவனிடம் நேரடியாக நம் தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என்ற கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன மேற்படி வசனங்கள். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின் உண்மை இலக்கணங்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
பிற ஆபத்துகள்:
 இவ்விலக்கணங்களை ஆராயாமல் இறைவன் அல்லாதவற்றையெல்லாம் கடவுள் என்று நம்பி வழிபடும்போது எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப் படுகிறது. படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. எந்த தரகர்களும் தேவை இல்லை. எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப்படுகிறது.  பாமரர்களின் சம்பாத்தியங்களும் செல்வங்களும் இடைத்தரகர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன
ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம் உலகெங்கும் செய்து வருகிறது.
= கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத்தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை அடிக்கிறார்கள். 
= ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மக்காவில் மறு அறிமுகம் செய்தார்கள்.

சனி, 7 நவம்பர், 2015

கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்


 நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்:

முஹம்மது நபி(ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது  ஒரு சான்று.
பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt)  நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பதிவுகள், இஸ்லாமிய நீதிபதிகளால் வரலாற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

துருக்கிய இஸ்லாமிய படைகள், எகிப்தை வெற்றிக்கொண்டபோது, அங்கே உள்ள மடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்புல் அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனுடைய மூல பிரதி, இன்றும் இஸ்தான்புல்  அருங்காட்சியத்தில் உள்ளது.

கடிதத்தின் சுருக்கம்:
அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதிடமிருந்து, அருகில், மேலும்  தொலைவில் உள்ள கிருத்துவர்களுக்கு இந்த உடன்படிக்கையின்  மூலம் சொல்வது என்னவென்றால், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்.

நிச்சயமாக, நான், இறை அடியார்கள், என் உதவியாளர்கள் மற்றும் என்னை பின்பற்றுபவர்கள், கிருத்துவர்களை பாதுகாப்போம், ஏனென்றால் அவர்கள் என் குடிமக்கள்; மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் விரும்பாததை விட்டும் நான் தடுத்துக்கொள்வேன் .

அவர்களின் மீது எந்த கட்டாயமும் இல்லை. அவர்களின் நீதிபதிகள்,  பொறுப்பிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் . துறவிகள் மடத்திலிருந்து நீக்கப்படமாட்டார்கள். கிறிஸ்துவர்களின் ஆலயங்களை இடிப்பதற்கோ, சேதப்படுத்துவதற்கோ  யாருக்கும் அனுமதி இல்லை. ஆலயங்களில் இருந்து எதையும் முஸ்லிம்கள் எடுத்துச் செல்லக் கூடாது,  யாராவது மீறி செய்தால், அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார். உண்மையிலேயேகிருத்துவர்கள் என்னுடைய நண்பர்கள், மேலும் அவர்கள்  வெறுப்பதிலிருந்து விலகிக்கொள்ள என்னுடைய  அனுமதிப் பட்டயத்தை பெற்றுள்ளனர்.

அவர்களை யாரும் நாட்டைத் துறந்து  செல்லுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள, முஸ்லிம்கள்தான் போரிட வேண்டுமே தவிர, கிறிஸ்துவர்களை தங்களோடு சேர்ந்து  போரிடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவப் பெண்ணின்  சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் அவளை திருமணம் செய்யக்கூடாது, அவள் தன்னுடைய ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை தடுக்கக்கூடாது.

அவர்களுடைய ஆலயங்கள் கண்ணியப்ப்படுத்தப்படவேண்டும். அவைகள்  பழுது பார்க்கப்படுவதை  விட்டும் தடுக்கக்கூடாது. இறுதி நாள் வரை உள்ள முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையை மீறக்கூடாது.

முழு விபரத்தையும் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.
http://newsrescue.com/letter-to-all-christians-from-prophet-muhammad-sa/#axzz3eOJkMtJF

நன்றி: நாடோடி தமிழன்

http://quranmalar.blogspot.com/2014/12/1_26.html 
ஏசுநாதர் பற்றிய இஸ்லாமிய அறிமுகம்
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
-----------------------------------------------
= தனக்குப்பின் இவ்வுலகுக்கு தூதராக வர இருந்த முஹம்மது நபியவர்கள் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் செய்துள்ளதை பைபிளிலும் குர்ஆனிலும் காணமுடிகிறது.
---------------------------------------------
வாழ்நாள் நெடுகிலும் – அதாவது பிறப்பு முதல் அவரது விண்ணேற்றம் நடந்ததுவரை – இயேசுவின் மூலம் பற்பல அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக்காட்டியுள்ளான். இன்னும் பல அவரது இரண்டாம் வருகையின்போது நிகழவுள்ளன.
--------------------------------------------
இன்று இயேசுநாதர் பற்றிய சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனையும் சேர்த்தே அணுக வேண்டும். ஏன் என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராயும்போது  தெளிவாகிறது:
அ) திருக்குர்ஆன் இறங்கிய சூழலும் பாதுகாக்கப் படுவதும்   
--------------------------------------
ஆ) முந்தைய வேதங்களோடு ஒப்பிடும்போது எவ்வாறு திருக்குர்ஆன் இன்னும் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது
---------------------------------
இ) அது எல்லாவித முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது
--------------------------------------
ஈ) அற்புதகரமாக அது தாங்கி நிற்கும்.அறிவியல் உண்மைகள்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_5810.html
-----------------------------------------

= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்... 
-----------------------------------------
எல்லா இறைத்தூதர்களும் போதித்தது போன்றே இயேசு நாதரும் முஹம்மது நபிகளும் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதோடு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது – அதாவது அவனுக்கு இணைவைத்தலை - பெரும்பாவம் என்றும் கண்டித்தனர்.
-----------------------------------
தனக்குப்பின் வரவிருக்கிற தேற்றவாளர் என்று ஏசுவால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஹம்மது நபியவர்களை இன்று நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? முந்தைய தூதர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு உள்ள வித்தியாசங்கள் இவை
அ). தேற்றவாளர் முஹம்மது நபிகள் அவருக்கு  முன்னர் வந்த இறைத்தூதர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ மக்களுக்கோ அனுப்பப்பட்டவர் அல்லமாறாக அனைத்துலகுக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதராக இருக்கிறார்
ஆ) அவர் மூலம் அனுப்பப்பட்ட வேதம் குர்ஆனும் நபிமொழிகளும் இன்றளவும் சிதையாமல் பாதுகாக்கப்படுவது.
இ) உலகெங்கும் கால்வாசி மக்களுக்கு மேல் அவரை நேசிப்பவர்கள் இருந்தும் உலகில் எங்குமே அவரது சிலையோ உருவப்படமோ காணப்படாதது
ஈ) மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் பின்பற்றத்தக்கதாக அவரது வாழ்க்கை முன்மாதிரி காணக் கிடைப்பது.
இவை அனைத்தும் அவரே இன்று மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைவர் என்பதை எடுத்துக்கூறுவதாக உள்ளது.
ஆண்துணையின்றி அற்புதமான முறையில் இயேசுவைக் கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றெடுத்ததும்  மக்களால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டார்கள் அன்னை மரியாள். அப்போது  அற்புதமான முறையில் குழந்தை இயேசு மக்கள் முன் பேசியதையும் அதன் காரணமாக அன்னை மரியாள் கல்லெறி தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டதையும் திருக்குர்ஆன் துணை கொண்டு தெளிவான உண்மைகளை அறியலாம்.

புதன், 4 நவம்பர், 2015

பர்தா பற்றி அமெரிக்கப் பெண்கள்
Oprah Winfrey talks to Muslims on her show.
Posted by American Muslims on Sunday, November 1, 2015

பர்தா என்பது பெண்ணடிமைத் தனமா?
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் அமெரிக்கப் பெண்கள் பதில் கூறுவதைக் கேளுங்கள்....
" இதை எங்களின் சீருடையாகக் காணுங்கள். ஒரு போலீஸ் காரரோ இராணுவ வீரரோ சமூகம் அவர்களை அவர்களின் பொறுப்பை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக சீருடை அணிந்து செல்கிறார்கள். அதேபோல் நாங்கள் கண்ணியமானவர்கள் என்று மக்களுக்கு அறிவிக்கவே இந்த சீருடை! நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே வரும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வைக்கோ தூண்டுதல்களுக்கோ இரையாக மாட்டோம், எங்களுக்கு அதில் விருப்பமும் இல்லை என்ற வலுவான செய்தியைத் தாங்கி நிற்கிறது இந்த சீருடை."
‘நபியே! நீர்உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கை கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். (திருக்குர்ஆன் 33:59)
http://quranmalar.blogspot.in/2014/07/blog-post.html
பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே ஹிஜாப்!
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் அமெரிக்கப் பெண்கள் பதில் கூறுவதைக் கேளுங்கள்....
" இதை எங்களின் சீருடையாகக் காணுங்கள். ஒரு போலீஸ் காரரோ இராணுவ வீரரோ சமூகம் அவர்களை அவர்களின் பொறுப்பை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக சீருடை அணிந்து செல்கிறார்கள். அதேபோல் நாங்கள் கண்ணியமானவர்கள் என்று மக்களுக்கு அறிவிக்கவே இந்த சீருடை! நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே வரும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வைக்கோ தூண்டுதல்களுக்கோ இரையாக மாட்டோம், எங்களுக்கு அதில் விருப்பமும் இல்லை என்ற வலுவான செய்தியைத் தாங்கி நிற்கிறது இந்த சீருடை."
‘நபியே! நீர்உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கை கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். (திருக்குர்ஆன் 33:59)
http://quranmalar.blogspot.com/2014/07/blog-post.html
பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே ஹிஜாப்!