இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஆகஸ்ட், 2024

பாலியல் கொடூரங்களுக்கு எதிரான தடுப்பு அரண்கள்


பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் பாராமல் பொது இடங்களில் தூக்கில் இடவேண்டும்குற்றவாளியின் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும்அவனைக் கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்றெல்லாம் குமுறுவதை நாம் காண்கிறோம். மெல்லமெல்ல இந்தக் குமுறல் அடங்குகிறது. சிறிதுகாலம் கடந்த பின் மீண்டும் எழுகிறது. மீண்டும் அடங்குகிறது... மீண்டும் எழுகிறது... அதாவது பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. இந்நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முறையான பாலியல் தொடர்பான விதிமுறைகளும் சட்டங்களும் இல்லாமையே!

பாலியல் தொடர்பான விதிமுறைகளை எங்கிருந்து பெறுவதுஇவற்றை எவ்வாறு நிர்ணயிப்பதுயார் நிர்ணயிப்பதுஇங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உருவாக்கியவனைப் புறக்கணிக்கலாமா?

நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின்வாஷிங் மிஷின்,  ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன் என்பதை நாம் முதற்கண் உணரவேண்டும். எந்த ஒரு தனிநபரும் சரிமனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரிஊர் நிர்வாகமும் சரிஅரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரிஇவர்களில் யாரும்  பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும். சமூகத்தில் உண்டாகும் ஏதேனும்  ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட ஏதேனும் மக்கள் இயக்கங்களும் – உதாரணமாக கம்யுனிச இயக்கம்மனித உரிமை இயக்கம்பெண்ணுரிமை இயக்கம் போன்றவைகளும் – இதற்குத் தகுதி பெற்றவை அல்ல என்பது தெளிவு.

படைத்தவன் மட்டுமே தகுதிபெற்றவன்

ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்தவன் அவர்களின் படைப்பாளன் மட்டுமே. அவன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களை இயற்ற முடியும். அவன் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் அவர்களது பங்குகடமைகள்பொறுப்புக்கள்போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைத்து மனிதகுலத்துக்கும் பொருத்தமானவை. அனைத்து படைப்பினங்களோடும் இணக்கமானவை. அந்த இறைவன் ஒருவனே அனைத்துலகுக்கும்  சொந்தக்காரன்  என்பதால் அவன் மட்டுமே அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மிருகங்களின் மற்றும் இன்ன பிற படைப்பினங்களின் உரிமைகளையும் பக்குவமான முறையில் பங்கீடு செய்து நிர்ணயிக்கவும் தகுதியானவன். அந்த இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் சட்டங்களின் ஒரு பிரிவே பாலியல் தொடர்பான சட்டங்கள்.

சரிஇந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான்?

இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான்.  இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும். 

பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:

மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின.  அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன். இறைவனின் ஏவல்- விலக்கல்களுக்கு கட்டுப்பட்டு வாழும் முறையே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது.

ஆகஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்லவாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.

சரிஇவற்றை பின்பற்றாவிட்டால்......?

இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.

= அவனே அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும்அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 28:70)

(அல்லாஹ் என்றால்  வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

பாலியல் கொடூரங்களுக்கு எதிரான தடுப்பு அரண்கள் 

குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள். அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதை நாம் நன்கறிவோம். அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும்.அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான் இறைவன். இன்று நாட்டில் பரவலாக நடந்து கொண்டு இருக்கும் பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்ணினத்தைக் காக்க இவை ஒவ்வொன்றும் இன்றியமையாதவை என்பதை நீங்கள் உணரலாம்.     

1.ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு,

ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்பட வேண்டியவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.

உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.(ஆதாரம்: திருக்குர்ஆன் 24:31, 33:59 மற்றும் நபிமொழிகள் )

2பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை:

மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது.  (திருக்குர்ஆன் 17:32)

3.ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு

(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்.... (திருக்குர்ஆன் 24:30,31).

4. பத்து வயதுக்கு மேல் ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல்,

  நபி (ஸல்) அவர்கள் சொன்னர்கள்:"உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும்போது தொழச்சொல்லி ஏவுங்கள். பத்து வயதாகும்போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து (படுக்க) வையுங்கள்." (அபூதாவுத்)

  5. இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி:

  "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" நபிமொழி (புகாரி.

 பெண்கள் நெருங்கிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை,,

  எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் (நெருங்கிய ஆண் உறவினர்) துணை இல்லாமல் ஒரு பரீத் அதாவது 12 மைல் தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா நூல்கள்: பைஹகீ, அபூதாவூத்)

   7.அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப் பழகுவதற்குத் தடை

மேலும், (இறை விசுவாசினிகளான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், இறைவிசுவாசிகளே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் பிழை பொறுக்கத் தேடுங்கள். நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (திருக்குர்ஆன் 24:31).

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)8.

8. அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (திருக்குர்ஆன் 33:32).

9. வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை

 ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிரஎன்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.(நூல்: முஸ்லிம்)

உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: அஹ்மத்)10

10.வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)

இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணம் கொண்ட உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:32)

11.  மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை

'கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்' என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.12.

12. வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை கொடுக்க கட்டளை

மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன்  4:4)

13. குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல.

ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும் (திருக்குர்ஆன் 4:34)

14. கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். (திருக்குர்ஆன் 24:4)

15. விபச்சாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்

விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 24:2)

மேலும் விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி திருமணம் முடித்த ஆண் அல்லது திருமணம் முடித்த பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு பொதுமக்கள் முன் மரண தண்டனை வழங்கவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது.

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

மறுஜென்மம் (மீண்டும் மீண்டும் பிறத்தல்) உண்டா?

 


கேள்வி: மறுஜென்மம் (மீண்டும் மீண்டும் பிறத்தல்) உண்டா?

பதில்: மறுஜென்மம் என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு ஜன்மம் என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினைதான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.
இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.
நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.
இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.
அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப்பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை.
உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.
மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.
பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது அயல் இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறுஜென்மம் எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் வரை அதிகமாகியுள்ளது. நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.
புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறுஜென்மம் இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
தத்துவம்
அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பதுதான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அதுதான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.
இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.
அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?
எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.
இறைவன் மிகவும் அறிந்தவன்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

திருக்குர்ஆன் நற்செய்திமலர் – செப்டம்பர் 24

 


திருக்குர்ஆன் நற்செய்திமலர் – செப்டம்பர் 24

பொருளடக்கம்

உயிர்காத்த பள்ளிவாசல் மினாரா ஒலிபெருக்கி - 22

ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள் -5

சுதந்திரம் காப்போம் ! -10

கழுத்தில் தொங்கும் வினைச்சீட்டு -11

மரணத்தின்போது பேணவேண்டிய ஒழுக்கம்- 13

நாடு அவசரமாகத்  தடுக்க வேண்டிய பாவம்! -15

மீண்டும் மீண்டும் நிகழும் பாலியல் கொடூரங்களும்

எட்டாத தீர்வுகளும் -17

பாலியல் கொடூரங்களுக்கு எதிரான தடுப்பு அரண்கள்  -20

வழிபாடு திருமணத்திற்குத் தடை அல்ல!-23

திருமணம் வலியுறுத்தப்பட்ட  வழிபாடு -24

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள்


ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள்

💥1- தெளிவான கடவுள் கொள்கை
இஸ்லாம் கடவுளைப் பற்றிய தர்க்கரீதியான மற்றும் எளிமையான கொள்கையை வழங்குகிறது - அவன் ஒரு முழுமையான கடவுள் - அவன் ஒரு மனிதனோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு சிலையோ அல்லது ஒரு மூவரில் ஒருவனோ (திரித்துவம்) அல்லது வரையறுக்கப்பட்டவனோ அல்லது உருவாக்கப்பட்டவனோ அல்ல! - அவன் முற்றிலும் ஒப்பிடமுடியாதவன், தனித்துவமானவன். அனைத்து நல்ல குணங்கள், பெயர்கள், பண்புக்கூறுகள் மற்றும் ஏகத்துவம் ஆகியவற்றைக் கொண்டவன்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
💥2- அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
இஸ்லாம் இறைவனின் அனைத்து தூதர்களையும் நபிமார்களையும் ஏற்றுக்கொள்கிறது - சுமார் 124000 தூதர்கள் மற்றும் நபிமார்கள், (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.) இஸ்லாத்தில், நாம் இறைவனின் அனைத்து தீர்க்கதரிசிகளையும் நேசிக்கிறோம், அவர்களில் எவரையும் நாம் மறுக்க முடியாது - உதாரணமாக யூத மதம் போன்ற மற்ற மதங்களில் - அவர்கள் இயேசுவையும் முஹம்மதுவையும் நிராகரிக்கிறார்கள் - கிறிஸ்தவத்தில் அவர்கள் முஹம்மதுவை நிராகரிக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் அனைத்து தீர்க்கதரிசிகளும் பாகுபாடு இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
💥3- இடைத்தரகர் இல்லை
இஸ்லாத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லை -- நீங்கள் நேரடியாக இறைவனை வணங்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்யலாம் - இடையில் ஒரு இறைத்தூதரோ, புண்ணியவான்களோ என யாரும் தேவையில்லை. நீங்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறீர்கள்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
💥4- இஸ்லாம் என்பது பண்பின் பெயர்
இஸ்லாம் ஏதேனும் ஒரு நபரின் அல்லது குலத்தின் அல்லது கோத்திரத்தின் அல்லது ஒரு நாட்டின் அல்லது குழுவின் பெயரால் அறியப்படவில்லை. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான ஏக இறைவனுக்கு அடிபணிதல் என்பதாகும். யாரேனும் எந்த நேரத்திலும் உண்மையான இறைவனுக்கு மட்டுமே பணிந்து வாழ்ந்தால் அவர் ஒரு ஒரு முஸ்லிம் (கீழ்படிபவர்) என்று அழைக்கப்படுகிறார். கீழ்படிந்து வாழும்வரைதான் அவர் முஸ்லிம். கீழ்படிவதை நிறுத்திவிட்டால் அவர் முஸ்லிம் அல்ல.
💥5- அனைத்து நற்செயலும் வழிபாடே!
இஸ்லாத்தில் வணக்கம் அல்லது வழிபாடு என்பது வெறும் சடங்குகளைப் பற்றியது அல்ல. இறைவன் பொருந்திக்கொள்ளும் எந்தவொரு செயலையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சொல். எல்லா நற்செயல்களும் வழிபாட்டின் வகைகளாகும்: புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தைகளைக் கூறுதல், தன் துணையை மென்மையாக நடத்துதல், குடும்பத்துக்காக உழைத்தல், குடும்பத்துக்காக சமையல் செய்தல், துணி துவைத்தல் இவை போன்ற அனைத்தும் இறைவனால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. புண்ணியங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மாறாக இறைவன் பொருந்திக்கொள்ளாத எந்தவொரு செயலும் பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. பொய் சொல்வது, அவதூறு பேசுதல், புறம்பேசுதல், ஏமாற்றுவது, அப்பாவி மக்களை தாக்குதல், திருட்டு, விபச்சாரம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது போன்ற அனைத்தும் பாவச்செயல்களே!

💥6- தெளிவான பாவமன்னிப்புக் கொள்கை
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பாவம் செய்தவர்கள், செய்த பாவத்தை இறைவனிடம் வருந்தி நேரடியாக முறையிட்டு அவனிடம் அதை மன்னிக்குமாறு கோருவது ஒன்றே பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கான வழி. வேறு குறுக்கு வழிகள் கிடையாது. ஏதேனும் ஒரு இறைத்தூதரை அல்லது மகானை விசுவசிப்பதாலோ, ஏதேனும் புண்ணிய நீரில் நீராடுவதாலோ, அதை உடலில் தடவிக் கொள்வதாலோ, ஏதேனும் புண்ணியத்தலங்களுக்கு காணிக்கை அல்லது அர்பணிப்புகள் செய்வதாலோ பாவமன்னிப்பு என்பது கிடைக்காது.
இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக உள்ளான் - நீங்கள் எப்போதும் மனந்திரும்பினால் (மரணத்திற்கு முன்). நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும் அவன் உங்களை ஏற்றுக்கொள்கிறான். அவன் தன் கிருபையால் நம்மை மன்னிக்கிறான் - அவன் மன்னிக்க எந்த விலையும் கொடுக்கப்படாது. எந்த ஒரு மனிதரின் அல்லது இறைத்தூதரின் அல்லது புண்ணியாத்மாவின் இரத்தமும் பாவமன்னிப்புக்கு
விலைபேசப்படுவது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது.
💥7- இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்வியல் கொள்கை -
அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்கமைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து கட்டங்களிலும் வாழ்வியல் துறைகளிலும் பக்குவமான வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது இஸ்லாம். மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இறைவனின் வேதத்திலும் இறைத் தூதரின் நடைமுறைகளிலும் இருந்து நாம் பெற முடிகிறது. உதாரணமாக மனிதன் யாரைத் திருமணம் முடிக்கலாம் அல்லது முடிக்கக் கூடாது என்பதையும் ஒருவர் இறந்த பின் அவரது சொத்துக்கள் எவ்வாறு நீதமான முறையில் அவரது வாரிசுகளுக்கும் ஏனைய உறவினர்களுக்கும் இடையே பங்கிடப்பட வேண்டும் என்பதற்கான பக்குவமான இறை வழிகாட்டுதலை திருக்குர்ஆனில் நீங்கள் காணமுடியும்.
💥8- பாதுகாக்கப்படும் இறை ஆவணங்கள்
இஸ்லாத்தின் அறிவு ஆதாரங்களான இறைவேதம் திருக்குர்ஆனும் இறைத்தூதரின் நடைமுறைகளை உள்ளடக்கிய ஹதீஸ் தொகுப்புகளும் பக்குவமான முறையில் பதிவு செய்யப்பட்டு அவ்வாறே உலகெங்கும் பாதுகாக்கப்படுகின்றன. அவை அப்படியே உள்ளன, ஒருபோதும் சிதைக்கப்படவில்லை. உலக வரலாற்றில் எந்த புத்தகங்களுக்கும் இப்படி நடந்ததில்லை. உதாரணமாக திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் உலகெங்கும் மூல்மொழியிலேயே முழு நூலும் எந்த மாற்றங்களுக்கும் சிதைவுகளுக்கும் ஆளாகாமல் அச்சுவடிவத்திலும் ஒலி வடிவத்திலும் கோடிக்கணக்கான மனித உள்ளங்களிலும் அப்படியே பாதுகாக்கப் படுகிறது. உலக இறுதிவரை அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் இறைவன் வாக்குறுதி அளிக்கிறான்:

 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (திருக்குர்ஆன் 15:9) 
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து படியுங்கள்:
💥9- கண்மூடிப் பின்பற்றுதல் இல்லை!
இஸ்லாம் அறிவு இல்லாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை தடைசெய்கிறது, மேலும் அது உண்மையை அறிய மூளையைப் பயன்படுத்த நம்மை அழைக்கிறது, அது ஆதாரம் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையிலானது. படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை அறியுமாறு மக்களை திருக்குர்ஆன் அழைக்கிறது:
88:17 .(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18 .மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19 .இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
3:190 .நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
பகுத்தறிவு மனப்பான்மை மத பொறுப்பு மற்றும் பொறுப்புக்கான அடிப்படையாகும். திருக்குர்ஆன் 6236 வசனங்கள் மனதை மதிக்கவும், பகுத்தறியவும், சிந்திக்கவும், புத்தியின் சக்தியைப் பயன்படுத்தவும் நம்மை அழைக்கிறது. எதற்கும் ஆதாரம் தருமாறு எல்லாம் வல்ல இறைவன் கேட்கிறான்.

💥10- நடைமுறையில் பயன்தரும் வாழ்வியல் சட்டங்கள்:
இஸ்லாத்தின் தார்மீக அமைப்பு மிகவும் உயர்ந்தது மற்றும் பக்குவமானது. தனிநபர் வாழ்வுக்கும் குடும்ப வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் முழுமையாக பயனளிக்கும் விதமாக அது கூறும் வாழ்வியல் சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் அமைந்துள்ளன. எனவே இஸ்லாமிய சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தும் நாடுகளில் குறைவான குற்றங்கள் உள்ளன.
💥11- மறுமை மாயை அல்ல, உண்மை வாழ்க்கை:
ஏனைய மதங்களில் சொர்க்கம் அல்லது நரகம் என்பவை ஒரு மாயையாக கற்பிக்கப்படுகின்றன. சொர்க்கம் அல்லது நரகம் என்பதெல்லாம் இங்கேதான் என்று கூறக் கேட்டிருப்போம். இது ஆன்மீக வாழ்க்கை மட்டுமே என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மறுமை என்பது இன்று எவ்வாறு உடலும் ஆன்மாவும் கலந்து அனுபவிக்கிறோமோ அதேபோல உண்மையான வாஸ்த்தவமான வாழ்க்கையாக இருக்கும். உதாரணமாக ஒரே ஒரு வசனத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்:
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
அதாவது சொர்க்கம் என்பது என்றும் நிலையான இளமையும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த இன்பகர வாழ்வாக அமையும். மாறாக நரகம் என்பது தீரா வேதனைகள் நிறைந்த தண்டனைகள் வழங்கப்படும் இடமாக இருக்கும்.
💥12- இஸ்லாத்தை ஏற்பதால் முந்தைய இறைத்தூதர்களை இழப்பதில்லை
உதாரணமாக நீங்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் இயேசுவை இழக்க மாட்டீர்கள், அதேபோலவே ஒரு யூதராக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மோசேவை இழக்க மாட்டீர்கள். ஆனால் இங்கு அவர் மீதான உங்கள் நம்பிக்கையை நீங்கள் திருத்திக் கொள்வீர்கள்.
இஸ்லாமில் இயேசு, (அவருக்கு சாந்தி உண்டாகட்டும்) இஸ்லாத்தில் அவர் சிறப்பு வாய்ந்த 5 இறைத்தூதர்களில் ஒருவர் (நோவா, ஆபிரகாம், மோசஸ், இயேசு மற்றும் முஹம்மது), அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும். மற்ற தூதர்களுடன் சேர்ந்து, அவர்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள், அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்கள். அவர்களில் யாரும் வணங்கப்படக்கூடாது; அவர்களை அனுப்பிய இறைவனை மட்டுமே நாம் வணங்குகிறோம். இயேசு ஒரு உன்னதமான இறைத்தூதர் என்று நாம் நம்புகிறோம், ஆனால் கடவுள் அல்ல; நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம், அவருடைய உண்மையான போதனைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
=============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
========================== 

சனி, 17 ஆகஸ்ட், 2024

பன்மை சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டுதல் எவ்வாறு?


 இஸ்லாம் என்றாலே இறைவனின் ஏவல்-விலக்கல்களை ஏற்று வாழ்வதனால் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படும் அமைதிமிக்க நிலை என்று அறிவோம். அதற்கான வழிகாட்டுதலாக இன்று நம்மிடையே அனுப்பப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன். அந்த வேதத்தின் கட்டளைகளை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய முன்மாதிரிதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். 

இஸ்லாத்தின் குறிக்கோள் உலகெங்கும் ஒரு அமைதி வாய்ந்த நீதிமிக்க உலகைக் கட்டியெழுப்புவது. அதாவது பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவது. அதற்காக இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு உடன் வாழும் பன்மை சமூகங்களைச் சார்ந்த சக மக்களுடன் எவ்வாறு நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வது என்பது பற்றிய விடயங்கள் கற்றுத் தரப்படுகின்றன.   

திருக்குர்ஆனின் நிழலிலும் நபிகளாரின் நடைமுறை ஒளியிலும் பன்மை சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான கீழ்கண்ட அடிப்படைகளை நாம் காணலாம்:

01. மனித சமத்துவம்

= 'நிச்சயமாக நாம் உங்களை ஒரே பெண்ணிலிருந்தும் ஒரே ஆணிலிருந்தும் படைத்தோம். பின்னர் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் ஆக்கினோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.' (திருக்குர்ஆன் 49: 13)
இந்த வகையில் மனித சமத்துவம் என்ற குர்ஆனிய சிந்தனை அகிலத்துக்கு தந்த மாபெரும் அருட்கொடையாகும். அதுவே இஸ்லாம் வழங்கிய சமூக நல்லிணக்கத்துக்கான பிரதான அடிப்படையாகும். உலகில் காணப்படும் ஆத்திக மற்றும் நாத்திகக் கோட்பாடுகளில் மனித சமத்துவத்தைப் பற்றி பேச்சளவில் இருக்கும். ஆனால் அதற்கான அடிப்படை என்ன என்று கேட்டால் பதில் இருக்காது. திருக்குர்ஆன் மட்டுமே மனிதகுலத்தின் மூலம் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் என்று கூறி மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பறை சாற்றுவதைக் காணலாம். 

02. மனிதம் மதிக்கப்பட வேண்டும்

உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் கண்ணியமானவர்கள். இந்த மனிதம் பற்றிய சிந்தனையை இஸ்லாம் தனியாக பேசுகிறது.
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.   (திருக்குர்ஆன் 17:70)

இங்கு அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி சகவாழ்வு தொடர்வதற்கு மனிதம் மதிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் அறை கூவல் விடுக்கிறது. அந்த சிந்தனைக்கான ஒரு நடைமுறை உதாரணமாக நபிகளார் யூதரொருவரின் பிரேதத்தை கண்டு எழுந்து நின்று மரியாதை செய்த நிகழ்வைக் கூறலாம்.

03. கொள்கைச் சுதந்திரம்

ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் விரும்பும் கொள்கையை அல்லது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எனவே, மாறுபட்ட கொள்கையையோ மதத்தையோ பின்பற்றுகின்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் அல்லர். அதே போன்று ஒருவர் ஏற்றிருக்கின்ற மார்க்கத்தை அல்லது கொள்கையை பிறர் மீது திணிக்கும் உரிமையும் எவருக்குமில்லை.

'மார்க்கத்தில் நிர்பந்தம் கிடையாது' (திருக்குர்ஆன் 2: 256)
அவர்கள் விசுவாசம் கொள்ளவில்லை என்பதால் அவர்கள் மீது எத்தகைய ஆதிக்கமும் செலுத்த முடியாது.

'அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக நீர் இல்லை' (திருக்குர்ஆன் 88:22)

இது போன்ற மத சகிப்புத் தன்மையையும் கொள்கை சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்ற இன்னும் பல வசனங்களை திருக்குர்ஆனில் அதிகமாவே காண முடியும்.

04. மனிதன் அடுத்த சகோதர மனிதனுக்கு பயனுள்ளவனாவான்.

= 'மனிதர்கள் அனைவரும் இறைவனின் குடும்பமே. இறைவனின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களே இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்கள்.' (நூல்: முஸ்லிம்)
சமூக உறவுகளின் மேம்பாடு மனிதர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுவதிலும் உதவுவதிலும் உள்ளது.  அதற்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக சிந்தையை இஸ்லாம் விதைக்கும் மறுமைக் கோட்பாடு வளர்க்கிறது.  

5. மனிதர்கள் யாவரும் சகோதரர்கள்

இஸ்லாம் மனித சகோதரத்துவத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகின்றது. எல்லா மனிதர்களதும் மூதாதையர் ஆதித் தந்தை ஆதமும் ஆதித் தாய் ஹவ்வாவுமே என்று நிறுவி அதனால் அனைவரும் சகோதர சகோதரிகளே என்றும் ஒரே குடும்பத்தவரே என்றும் கூறுகிறது இஸ்லாம்.

சகோதரத்துவம் பற்றிய இஸ்லாத்தின் கருத்து மிகவும் ஆழமானது, யதார்த்தமானது. இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகவும் அது அமைந்துள்ளது. 'இறைவா! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சாட்சி பகர்கிறேன்' என இறைதூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகையின் பின்னரும் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டிருந்தார்கள் என ஸைத் பின் அர்கம் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்)

06. பன்மைத்துவம் பிரபஞ்ச நியதிகளில் ஒன்று

சமூகங்கள், மொழிகள், கலாசாரங்கள், மதங்களிலுள்ள பன்மைத்துவம் இறை நியதிகளில் ஒன்று. இப்பன்மைத்துவம் யதார்த்தமானது, அழகானது, இயல்பானது. இது பிரபஞ்ச விதிகளில் ஒன்று.

= 'உமது இரட்சகன் நாடியிருந்தால் அனைத்து மக்களையும் ஒரே சமூகமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் இறைவன் அப்படி நாடவில்லை. மக்கள் தொடர்ந்தும் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே உள்ளனர்.' (திருக்குர்ஆன் 4:48) மற்றொரு வசனத்தில்

= 'உமது இறைவன் நாடியிருந்தால் உலகிலுள்ள அனைவரும் முஸ்லிம்களாக விசுவாசம் கொண்டிருப்பர். அவ்வாறு உமது இறைவன் விரும்பவில்லை. எனவே மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டும் என விரும்பி நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)

இவ்விரு வசனங்களும் சமூகங்கள் மற்றும் மதங்களில் உள்ள பன்மைத்துவம் இறை நியதிகளில் ஒன்று என்பதை தெளிவு படுத்துகிறது.

பல மதங்களின் இருப்பை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாத்தின் நிலைப்பாடு, இஸ்லாம் மட்டும்தான் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட சத்திய மார்க்கம் என்ற சிந்தனைக்கு முரண்படமாட்டாது. 'நிச்சயமாக இறைவனிடத்தில் மார்க்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இஸ்லாம் மாத்திரமே' ((திருக்குர்ஆன் 3:19) ஆனால் ஏனைய மதங்கள், சமூகங்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை அவற்றுக்கு உண்டு என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது முஸ்லிம்களது கடமையே தவிர அவர்களை முஸ்லிம்களாக மாற்றுவது பொறுப்பல்ல.
இந்த உண்மையை அங்கீகரிக்காமல் சகிப்புத்தன்மை வளராது. சகிப்புத்தன்மை இல்லாமல் சகவாழ்வு என்பதும் இல்லை.

7) பிற சமயத்தவர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதம்

மதீனா அரசில் நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய அரசியல் சாசனம் மனித உரிமைகளை எல்லாக் குடிமக்களுக்கும் உத்தரவாதம் செய்தது. அதில் சிறுபான்மை என்ற பெயரில் யாரும் இருக்கவில்லை. அந்த அரசியல் அமைப்பின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு அமைந்தன.

i) யூதர்களும் முஸ்லிம்களும் தத்தமது சமயத்தை முழுமையாக பின்பற்றலாம்

II) இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் உதவி செய்யப்படுவர். நீதியாக நடத்தப்படுவர்.

III) தாய் நாட்டை காப்பதற்கு சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குடியுரிமை ஒப்பந்தத்தின் கீழ்வரும் தரப்பினரோடு யாராவது போர் புரிந்தால் அவர்களைக் காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் ( அதாவது பிற மதத்தவர்களுக்காக முஸ்லிம்கள் போராடுவர்)

8) சமூக நீதியும் சகவாழ்வும்.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (திருக்குர்ஆன் 60:8) 

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

மேற்கூறிய வசனத்தில் நன்மை என்றால் முஸ்லிம் அல்லாதோரிடையே உள்ள பசித்தவர்களுக்கு உணவளித்தல், நோயாளிகளை தரிசித்தல், ஆடையற்றவர்களுக்கு ஆடை வழங்குதல், கடன் கேட்போருக்கு உதவுதல், அறிவு ரீதியாக வழிகாட்டல், உள ரீதியில் ஆலோசனை வழங்கல் என பல்வேறு உபகாரங்களை குறிக்கும்

9) கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல்

= 'மக்களுடன் கலந்து வாழும் முஃமின் (இறைவிசுவாசி) கலந்து வாழாத முஃமினை விட சிறந்தவன்' என்பது நபிமொழி.  இன்னொரு நபிமொழியில் கலந்து வாழும் முஃமின் உயர்ந்த கூலியை பெறுவான் என்றும் வந்துள்ளது. கலந்து வாழ்வதை இஸ்லாம் தூண்டுகிறது. மூடுண்ட சமூகமாக வாழ்வதை இஸ்லாம் வெறுக்கிறது.
பிற சமூகங்களுடனான உறவை துண்டித்து வாழும் இறுக்கமனப் போக்கு எப்படி ஆபத்தோ அதேபோன்று வரையறைகளின்றி தனித்துவத்தை இழந்து கலந்து பழகுவதும் பெரும் ஆபத்தானதே. இரண்டு தீவிர போக்குகளையும் தவிர்த்து நடுநிலை வகிப்பது இங்கு முக்கியமானது. இஸ்லாம் அந்த சமநிலையை பேணுகிறது.

இஸ்லாமிய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத நிலையில், முஸ்லிம் அல்லாதவர்களோடு இணங்கியும் கலந்தும் வாழ்தல் மிகவும் முக்கியம். தனித்துவத்தைப் பேணல், கலந்து வாழல் ஆகிய இவ்விரு நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாயின், உலகில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் 'கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல்' என்ற வாழ்வியல் சமன்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்

10) சட்டத்தின் முன் அனைவரும் சமம்

இனம், மொழி, பிராந்தியம், தேசம், ஆகிய எல்லைகளைத் தாண்டி மனிதர்கள், மதங்கள், கலாசாரங்கள், நாகரிகங்கள் இணைந்து சமாதானமாக வாழலாம் என்பதற்கு திருக்குர்ஆன் முன்வைக்கும் இன்னொரு விழுமியம் அதன் நீதி பற்றிய கொள்கையாகும். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் நீதத்துடன் நடத்துவது ஏனைய மனிதர்களதும் அதிகாரத்தின் சகல மட்டங்களில் உள்ள தலைவர்களதும் கடமையாகும். இந்தக் கடமை மிகவும் பாரியது. இறையச்சத்திற்கு நிகரானது என்று நீதியின் தாத்பரியத்தை திருக்குர்ஆன் விளக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் அல்லது குழுவினர் மீது ஒருவரோ ஒரு குழுவினரோ கொண்டுள்ள விருப்பு வெறுப்பு நீதி செலுத்துவதில் செல்வாக்கு செலுத்தக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையிடுகிறது திருக்குர்ஆன்.

இறைவிசுவாசிகளே! நீங்கள் நீதி செலுத்தி அல்லாஹ்வுக்கு சாட்சியாளர்களாக இருங்கள். நீங்கள் செலுத்தும் நீதி உங்களுக்கோ உங்களது பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ எதிரானதாக இருந்தாலும் கூட' (திருக்குர்ஆன் 3:35 )

11) மனிதாபிமான உதவிகள்

நபியவர்கள் மக்காவிலிருந்து விரட்டியடிக்கப்பட்;டு, மதீனாவில் வாழுகின்றபோது மக்காவாசிகள் பஞ்சம் காரணமாக பட்டினியால் வாடுகிறார்கள் என்ற செய்தி நபிகளாரின் செவிக்கு எட்டுகிறது. உடனே ஹாதிப் பின் அபீ பல்தஆ என்ற தோழரிடம் 500 திர்கம்களை கொடுத்து மக்கா வாழ் குறைசிக் காபிர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்குமாறு பணித்தார்கள். குறைஷியர்களின் பகையுணர்வும் பலதெய்வ வழிபாடும் சகவாழ்வின் அடிப்படையான மனிதாபிமான உதவிகளுக்கு தடையாக இருக்கவில்லை. மனிதாபிமான உதவிகள் சகவாழ்வின் தோற்றுவாய்.

மேற்கண்ட விடயங்களை  செயற்படுத்தினால் எல்லா மனிதர்களும் நிறம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றைக் கடந்து ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ முடியும். முரண்பாடுகள், முறுகல் நிலைகளைத் தாண்டிச் செல்ல முடியும். இன மோதல்கள் நிகழ்வதைத் தவிர்க்கலாம். இரத்தம் சிந்தலைத் தடுக்கலாம். வேற்றுமைகளுக்கு மத்தியில் மனிதம் என்ற வகையில் ஒற்றுமையாக வாழலாம்.

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!