இந்த வலைப்பதிவில் தேடு

பெற்றோரைப் பேணுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோரைப் பேணுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஜூன், 2020

சுவனத்தின் நுழைவாயில் பெற்றோர்கள்!



# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்...
# சொத்தை எழுதித் தராததால் சொந்த வீட்டை விட்டு தந்தையைத் துரத்திய பிள்ளைகள்.. 
# முதியோர் இல்லம், கருணைக் கொலை, அடிமையாக நடத்துதல் இவை போன்ற பற்பல கொடுமைகள் பெற்று வளர்த்த தாய் தந்தையருக்கு எதிராக நிகழ்ந்தவண்ணம் இருப்பதை அறிவோம். ஆனால் இக்கொடுமைகளை யாரும் தட்டிக்கேட்க ஆளில்லை என்ற படியால் நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருகின்றன. இந்நிலைமை மாற மக்களிடம் இறையச்சத்தை முறைப்படி ஊட்டுவது ஒன்றே வழி...
அதாவது நம்மைப் படைத்த இறைவனிடம் நமது ஒவ்வொரு செயல்களுக்கும் மறுமையில் விசாரணை உண்டு, அதற்கேற்ப சொர்க்கமோ அல்லது நரகமோ உள்ளது என்ற விஷயத்தை பகுத்தறிவு பூர்வமாக விதைத்தால்தான் இந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வு உண்டாகும். 
படைத்தவனின் எச்சரிக்கைகள்: 
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இதுதான் உண்மை.. 
நீங்கள் உங்கள் பெற்றோரோடு எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை இறைவன் இந்த வாழ்க்கைப் பரீட்சையின் பாகமாக அமைத்துள்ளான். பெற்றோரைப் பேணி வாழ்ந்தீர்களானால் நாளை மறுமையில் சொர்க்கம். இல்லையேல் நரகமே. அவை இரண்டில் ஒன்றில்தான் நீங்கள் நிரந்தரமாக வாழ உள்ளீர்கள்.. இது நிச்சயம்! 
உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது இறுதி வேதம் திருக்குர்ஆன் மூலமாகவும் அவனது இறுதித் தூதர் மூலமாகவும் உங்கள் பெற்றோர் விஷயமாக கீழ்கண்டவாறு உங்களுக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்குகிறான்:
பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்  அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம்  இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் 17:23)
தண்டனை தள்ளிவைக்கப்படுவதில்லை!
"பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ
பெற்றோருக்காக பிரார்த்தனை
= இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போதுஎன்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல்நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24)
= நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அல்குர்ஆன் 31:14)
பெற்றோரின் திருப்தி
= "பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை இறைவன் திருப்தியடைய மாட்டான்" என்று நபி "கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா?" என்று கேட்கப்பட்டதற்கு, "ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான்" என்று நபி பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)முப்ரத் அல் புகாரி
தாயின் காலடியில் சொர்க்கம்!
= ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து "இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன்" என்று கூறினார். "உனக்கு தாய் உண்டா?" என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். "அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது" என்று நபி அவர்கள் கூறினார்கள். 
(முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத்நஸயீஹாகிம்தப்ரானீ)
பெற்றோரைப் பேணாதோர் மீது சாபம்: 
= ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்!என்று கூறினார்கள். மக்கள் வினவினார்கள், 'இறைவனின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?' 'முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்என்று பதலளித்தார்கள்.  
  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

அன்னையைப் போலொரு செல்வமுண்டோ?
= ஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து இறைவனின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?' எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் 'உம்முடைய தாய்என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்என கேட்ட போது இறைத்தூதர் அவர்கள் உம்முடைய தாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள் : புகாரிமுஸ்லிம்

மேற்கண்ட அறிவுரைகளை மனதில் நிறுத்தி பெற்றோருக்குப் பணிவிடை செய்து இறைவனின் பொருத்தத்தை பெறுவோமாக! நாளை நம் பெற்றோர், உற்றார் சூழ சொர்க்கம் செல்வோமாக!
============= 
தொடர்புடைய பதிவுகள்: 
இஸ்லாம் என்றால் என்ன?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html

நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!

https://www.quranmalar.com/2019/09/blog-post_23.html

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்!


இரவும் பகலும் இன்று பெற்றோர்கள் உழைப்பது எதற்காக என்று கேட்டால் வரும் பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததே...
ஆம், தமது பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பதற்கே என்பதே!
ஆனால் அந்தப் பிள்ளைகள் நாளை இவர்களை சற்றும் மதிக்காமல் அந்நியர்களோடு ஓடிப்போவதையும், இவர்களது வயதான காலத்தில் இவர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும், (வட இந்தியாவில்) காசியில் கொண்டுபோய் விட்டு விடுவதையும், கருணைக் கொலை என்ற பெயரில் கொன்று விடுவதையும் அன்றாட நிகழ்வுகளாகக் கண்டு வருகிறோம். இவர்களுக்கு முறைப்படி கற்பிக்க வேண்டியவற்றைக் கற்பிக்காமல் வளர்த்ததே இவற்றுக்கெல்லாம் காரணம்!
கல்வியின் நோக்கம் பண்படுத்தலே, சம்பாதிப்பது அல்ல!
 கல்வி கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக  உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.
ஒன்றே குலம், ஒருவனே இறைவன்!
குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டிய முதல் பாடம் ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதாக இருக்க வேண்டும். மனிதகுலம் அனைத்தும் ஒரு ஆண்- ஒரு பெண் ஜோடியில் இருந்து உருவானதே. எனவே அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்ற அடிப்படை உண்மை போதிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து படைத்த இறைவன் ஒருவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவன் நம் மீது அளவிலா அன்பு கொண்டவன், அவன் நம்மைப் பரிபாலிக்கிறான். இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் நமக்காக படைத்த அவனுக்கு நாம் நன்றிக்கடனோடு வாழ கடமைப்பட்டுள்ளோம் என்பவற்றைக் கற்பிப்பதோடு இறைவன் அல்லாத எதுவும் வணக்கத்துக்குரியவை அல்ல என்பதையும் அடிப்படையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  அடுத்து இவ்வுலகின் தற்காலிக தன்மைகளை நினைவூட்டி இது மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடம், இந்த குறுகிய வாழ்வை முடித்துக்கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம், நம் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு, மரணத்திற்குப் பிறகு நமக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பவற்றை அவசியமாகக் கற்பிக்க வேண்டும்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; ..... - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
 இந்த வசனத்தில் கூறப்படுவது போல சதா நாம் இறைவனின் கண்காணிப்பில் உள்ளோம் என்ற உணர்வு குழந்தைகளுக்கு உண்டாக்கப் பட்டால்தான் நற்குணமுள்ள பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.
கடவுள் அல்லாதவற்றை கடவுள் என்று போதித்தலும் ஆபத்தானதே  
  அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. கடவுள் அல்லாதவற்றை காட்டி கடவுள் என்று கற்பிக்கும் போது உண்மை இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு அகன்று போவதால் நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்! 
நன்மை- தீமை பிரித்தறிதல்
 உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும். அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும். அப்போதுதான் வாழ்க்கையில் நல்லொழுக்கம் என்பது ஏற்படும்.
பயனுள்ள கல்வி
குழந்தைகள் தங்கள் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும்.

மேற்கூறப்பட்ட போதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம். அவை இன்று அணுஆயுத தளவாடங்களைக் காட்டி உலகநாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து வருவதும் உலகில் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தி மனித உயிர்களை மிக மலிவாகக் கருதி மாய்த்து வருவதும் தீய கல்வியின் பயன்பாடுகளே!
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?