இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 டிசம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 2022 இதழ்

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – ஜனவரி 2022 இதழ் 

பொருளடக்கம்:

இல்லாமையில் இருந்து உருவாகும் இயந்திரங்கள் -2

வாசகர் எண்ணம் -3

இனப்பெருக்கம் என்ற அற்புதம் -4

உங்கள் முதல் அறை கருவறை  -6

இனப்பெருக்க உறுப்புக்களின் அற்புதம்! -10

பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம்! --10

கரு உருவாகும் அற்புதம் -12

அலக் எனும் அற்புதம் -14

பூமியின் மீது நாம் எப்படி வந்தோம்?

அறிவியலும் ஆய்வுகளும் பதில் சொல்லுமா? -18

படைத்தவனே சொல்லித்தரும் வரலாறு! -20

பின்னணி அறியுமுன் நம் நிலை அறிவோம் -21

இப்பதங்களை அறிவது நலம் -22

மனிதப் படைப்புக்கு முன் நடந்தவை -23

------------- 

இந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம் 


வியாழன், 9 டிசம்பர், 2021

நபிகளாரே இறுதித்தூதர் - ஏன்?


வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள் வேற்று நாட்டவர் அல்லது வேற்று மொழியினர் வேற்று காலத்தவர்கள் என்று கூறி புறக்கணிக்கவோ தரம்
  தாழ்த்தவோ இறைவிசுவாசிகளுக்கு அனுமதியில்லை, ஏனெனில் நம் மனிதகுலம் என்பது ஒரே தாய் மற்றும் ஒரே தந்தையில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களால் ஆனதே. அனைத்து இறைத்தூதர்களும்  நம்மவரே, அனைவரும் நமது மனித குடும்பத்துக்காக, நமது சகோதர சகோதரிகளை நேர்வழிப் படுத்த நமது இறைவனால் அனுப்பப்பட்ட சான்றோர் பெருமக்களே என்ற மனப்பாங்கோடு அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.

ஆனால் யாரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை எப்படி தீர்மானிப்பது?
இறைத்தூதர்களின் வரிசையில் நம் மூதாதையருக்கு அனுப்பப் பட்டவர்களும் அடங்குவர், நம் நாட்டினருக்கு, நம் மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர். வேற்று நாட்டினருக்கு, வேற்று மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர்.  ஒரே கொள்கையையே அவர்கள் போதித்து இருந்தாலும் அந்தந்த காலகட்டங்களில் மக்களின் மனமுதிர்ச்சிக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நடைமுறைச் சட்டங்களும் வணக்க வழிபாட்டு முறைகளும் அந்தந்த இறைத்தூதர்களால் போதிக்கப் பட்டன. இன்று வாழும் நாம் மறுமையில் வெற்றி அடைய வேண்டுமானால் அல்லது மோட்சம் பெற வேண்டுமானால் இறைவன் யாரை நமக்காக அனுப்பியிருக்கிறானோ அவரையே நாம் பின்பற்றியாக வேண்டும். அதை விடுத்து நாம் நம் இனத்துக்கு அல்லது நம் நாட்டுக்கு அல்லது நம் மொழிக்கு அனுப்பப்பட்ட தூதரையோ அல்லது வேதத்தையோ மட்டுமே பின்பற்றுவோம் என்று பிரிவினை வாதம் பேசினால் நஷ்டம் நமக்குத்தான். அதுவும் சாதாரண நஷ்டம் அல்ல  நிரந்தர நரகம் அது!
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி!
அந்த வகையில் இன்று நமக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள்தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில தகவல்களை முன் உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்வதற்காக முன்வைக்கிறோம்:

முஹம்மது நபி அவர்களுக்கும் அவருக்கு முன் வந்து சென்ற இறைத்தூதர்களுக்கும் இடையே நாம் கண்கூடாக காணக்கூடிய ஒரு சில வேறுபாடுகளை நாம் சற்று ஆராய்ந்தாலே இன்றைய காலகட்டத்துக்காக அனுப்பப்பட்டவர் இவர்தான் என்ற முடிவுக்கு வந்து விடுவோம்:

1. அகில உலகுக்கும் பொதுவான மற்றும் இறுதி இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக ஹூத், ஷுஹைப் போன்ற இறைத்தூதர்கள் 7:65 7:85 குர்ஆன் வசனங்கள்)
 இயேசுநாதர் பற்றி: 
இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் ஏசு என்றழைக்கப் படும் ஈஸா (அலை) அவர்கள்அவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.
43:59 mtH (<]h ek;Kila) mbahNu md;wp Ntwpy;iy. mtUf;F ehk;
mUl;nfhiliar; nrhhpe;J ,];uhaPypd; re;jjpahUf;F mtiu ey;Yjhuzkhf Mf;fpNdhk;.
ஏசுநாதரின் முன்னறிவிப்பு:
ஏசுவும் இஸ்ராயீலின்  மக்களை நோக்கி தனக்குப் பிறகு வரவிருக்கும் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பும் செய்தார்கள்:
61:6 NkYk;> kHakpd; FkhuH <]h: ',];uhaPy; kf;fNs! vdf;F Kd;Ds;s jt;uhj;ij nka;g;gpg;gtdhfTk; vdf;Fg; gpd;dH tutpUf;Fk; 'm`kJ" vd;Dk; ngaUila J}jiug; gw;wp ed;khuhak; $WgtdhfTk; ,Uf;Fk; epiyapy; my;yh`;tpd; J}jdhf cq;fsplk; te;Js;Nsd;" vd;W $wpa Ntisia (egpNa! ePH epidT $HtPuhf!)......

இறுதி காலகட்டம் இறுதித் தூதர் 
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

7:158 (egpNa!) ePH $WtPuhf: 'kdpjHfNs! nka;ahf ehd; cq;fs; midtUf;Fk; my;yh`;tpd; J}juhf ,Uf;fpNwd;> thdq;fs;> G+kp Mfpatw;wpd; Ml;rp mtDf;Nf chpaJ> mtidj;jtpu (tzf;fj;jpw;Fhpa) ehad; NtWahUkpy;iy -
அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.

2. முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர் மூலமாக அனுப்பப்பட்ட வேதம் அழியாமல் பாதுகாக்கப் படுகிறது.
முந்தைய இறைத்தூதர்கள் மூலம் அனுப்பப்பட்ட வேதங்கள் பிற்கால மக்களால் கூட்டப்படவோ குறைக்கப்படவோ செய்யப்பட்டுள்ளன. அருளப்பட்ட காலத்தில்  கலப்படமின்றி தூய்மையான நிலையில் இருந்த அவ்வேதங்கள் இன்று மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்ட நிலையில் காணப் படுகின்றன. அதுவும் அவற்றின் மொழிபெயர்ப்புகளைத்தான் நாம் காண முடிகிறதே தவிர அவற்றின் மூல மொழி வசனங்களை நாம் எங்கும் காண முடிவதில்லை. அதுமட்டுமல்ல, அவை அருளப்பட்ட மொழிகளே இன்று பேச்சுவழக்கில் இல்லை என்பதெல்லாம் நிதர்சனமான உண்மைகள்.

ஆனால் இறுதித் தூதர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்தும் எந்த விதமான மாற்றங்களுக்கும் இரையாகாமல் அருளப்பட்ட மொழியிலேயே அட்சரம் பிசகாமல் அப்படியே உலகின் எல்லா மூலைகளிலும் கிடைக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதைப் பரிசோதிக்க உங்களுக்கு அருகாமையில் உள்ள பொது நூலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்புகளை எடுத்து பாருங்கள். எல்லாவற்றிலும் மூல(அரபு) மொழி வசனங்கள் அப்படியே இருப்பதைக்  காண்பீர்கள்.
இதுபற்றிய விவரங்களை நீங்கள் இங்கே காணலாம் :
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திருக்குர்ஆனுக்கு முன்னர் வந்த இறைவேதங்களின் இன்றைய நிலையை சற்று ஆராய்ந்தால் உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். அவற்றிலும் திண்ணமாக இறைவசனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுடன் இறைத்தூதர்களின் வார்த்தைகளும் அவர்களுக்கு பின்னர் வந்த மனிதர்களின் கூற்றுக்களும் இறைத்தூதர்கள் பற்றிய சரித்திர பதிவுகளும் கலந்து காணப்படுகின்றன. அதனால் அவற்றை 100 சதவிகிதம் இறைவாக்குகள் என்று சொல்ல முடிவதில்லை. ஆனால் திருக்குர்ஆனின் நிலை இவ்விஷயத்தில் தனித்து விளங்குகிறது. அதில் பதிவாகியள்ளவை 100 சதவிகிதமும் இறைவாக்குகளே. (திருக்குர் ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப் படும் முறையும் என்ற குறிப்பைப் படிக்கவும்) .இந்த வேதத்தில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ மற்ற மனிதர்களின் வார்த்தைகளோ கலக்கவில்லையா? இல்லை, நிச்சயமாக இல்லை. எவ்வாறு எனில் நபிகள் நாயகம் அவர்களின் கூற்று மற்றும் அவர் செய்த செயல்கள் பற்றிய செய்திகள் ஹதீஸ் எனப்படும் நூல்களாக தனித்து தொகுக்கப் பட்டுள்ளன. இவை இறைவாக்குகளோடு கலக்கவில்லை. அரபி இலக்கியத்தில் திருக்குர்ஆனும் ஹதீஸும் வெவ்வேறு இலக்கியத்தரத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இரண்டும் ஒன்றோடு ஒன்று கலவாமல் தனித்தனியாகவே விளங்குகின்றன.

3. முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபட்டார்கள்.
இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!
அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள் என்று எச்சரித்தார். 

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும் என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.

4. முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.
இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப் பட்டு அவை பரிசோதிக்கப் பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் , பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.

அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப் படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், அமர்ந்தார், எவ்வாறு உணவு உண்டார், என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார், இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி கூறுகிறான் இவ்வாறு:

33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 
-------------------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?


வெள்ளி, 3 டிசம்பர், 2021

பாலியல் விஷயத்தில் இறைவழிகாட்டுதல்

 


மனிதகுல இனப்பெருக்கத்தின் ஒரு முக்கியமான காரணியாக விளங்குபவை மனிதனுக்குள் அமைந்துள்ள பாலியல் உணர்வுகள். இந்த பாலியல் உணர்வுகளை எவ்வாறு மக்கள் தணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மனித வாழ்வில் அமைதியும் அமைதியின்மையும் உண்டாகின்றன. இவற்றைத் தான்தோன்றித்தனமாக தணிக்கும்போது அங்கு குழப்பங்களும் கலகங்களும் உருவாகின்றன. அதேவேளையில் கட்டுப்பாட்டோடும் நல்லோழுக்கத்தொடும் இந்த இயற்கையான உணர்வுகளைத் தணிக்கும்போது அங்கு அமைதியான கட்டுக்கோப்பான சமூகம் உருவாகிறது. எனவே பாலியல் கொடூரங்கள் திடீரென நிகழும்பொழுது சமூகம் ஒட்டுமொத்தமாக விழித்தெழுந்து குற்றவாளிகளை சபிப்பதாலோ அரசையும் காவல்துறையையும் நீதித்துறையையும் திட்டித் தீர்ப்பதாலோ பிரச்சினை தீரப்போவதில்லை. உண்மையான தீர்வு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து இறைவன் விதிக்கும் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதில்தான் உள்ளது.

அதற்காக மனித மனங்களைப் பண்படுத்தி நம்மைப் படைத்த இறைவன் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை விதைத்து தனி மனித நல்லொழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம். இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும் அப்படிப்பட்ட நம்பிக்கையை ஆழமாக விதைக்கின்றன.

= பெண்கள்ஆண் மக்கள்பொன்னிலும்வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடுமாடுஒட்டகை போன்ற) கால் நடைகள்சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறதுஇவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்இறைவனிடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமாதக்வா - பயபக்தி - உடையவர்களுக்குஅவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டுஅவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றனஅவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டுஇன்னும் இறைவனின்  திருப் பொருத்தமும் உண்டு. இறைவன் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன்  3:14,15)

அதாவது இந்தக் குறுகிய வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் நம் இச்சைகளைக் கட்டுப்படுத்தி நெறியோடு வாழ்ந்தால் அவற்றுக்காக அளவிலா இன்பங்கள் நிறைந்த சுவனப்பதியில் அமர வாழ்வு வாழும் வாய்ப்பை இறைவன் வழங்க உள்ளான். மாறாக நிலையற்ற இந்தத் தற்காலிக வாழ்வில் இறைவனையும் மறுமையையும் மறுத்து தான்தோன்றித்தனமாக வாழ்பவர்களுக்கு இப்பூவுலகிலும் அமைதியின்மையே. மறுமையில் நரக தண்டனையும் காத்திருக்கிறது.

மனித வாழ்வின் இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துக்கொண்டு அனைவரும் பேணுதலோடு வாழ்ந்தால் இந்த பூமியில் ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் சமூக உறவுகள் செழிக்கும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகம் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறு ஒரு ஆரோக்கியமான சமூகம் அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளைக் கைகொள்ளவேண்டும். அதற்கு ஒன்றே மனித குலம் என்ற சகோதர உணர்வு, படைத்தவனே அனைவருக்கும் இறைவன், அவனது கண்காணிப்பில் உள்ளோம்,  அவனிடமே நம் மீழுதல், மறுமையில் இறைவனது விசாரணையும் சொர்க்கமும் நரகமும் உண்டு என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்து இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

ஞாயிறு, 28 நவம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- டிசம்பர் 21 இதழ்

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- டிசம்பர் 21 இதழ்

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு sms செய்யுங்கள் 

--------------------------------------

பொருளடக்கம்:

வீரியமாக வளரும் பாலியல் வன்கொடுமைகள் -2

தீர்வு இருந்தும் கண்டுகொள்ளாத அரசுகளும் மக்களும்! -3

உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் பேதைகள் -4

காமுகனே கொஞ்சம் நில்! -6

பாலியலும் இறைவழிகாட்டலும் -10

வாசகர் எண்ணம் -11

பாலியல் ஆசைகளை எப்படித்தான் தணிப்பது? -12

பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்? -14

விபச்சாரம் செய்ய அனுமதி கேட்ட வாலிபர் -17

பொறுப்புணர்வோடு பாலியல் -அதுவே திருமணம்! -19

பெண்ணை இழிவு படுத்தும் மடமையை ஒழிப்போம்! -21

பாலியல் கொடூரங்களில் இருந்து நாட்டைக் காப்போம்!-23

செவ்வாய், 23 நவம்பர், 2021

பாலியல் சட்டங்களை மனிதனே இயற்ற முடியுமா?


 பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் பாராமல் பொது இடங்களில் தூக்கில் இடவேண்டும், குற்றவாளியின் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும், அவனைக் கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்றெல்லாம் குமுறுவதை நாம் காண்கிறோம். மெல்லமெல்ல இந்தக் குமுறல் அடங்குகிறது. சிறிதுகாலம் கடந்த பின் மீண்டும் எழுகிறது. மீண்டும் அடங்குகிறது... மீண்டும் எழுகிறது... அதாவது பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. இந்நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முறையான பாலியல் தொடர்பான விதிமுறைகளும் சட்டங்களும் இல்லாமையே!

பாலியல் தொடர்பான விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உருவாக்கியவனைப் புறக்கணிக்கலாமா?

நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின்,  ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன் என்பதை நாம் முதற்கண் உணரவேண்டும். எந்த ஒரு தனிநபரும் சரி, மனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும்  பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும். சமூகத்தில் உண்டாகும் ஏதேனும்  ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட ஏதேனும் மக்கள் இயக்கங்களும் உதாரணமாக கம்யுனிச இயக்கம், மனித உரிமை இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் போன்றவைகளும் இதற்குத் தகுதி பெற்றவை அல்ல என்பது தெளிவு.

படைத்தவன் மட்டுமே தகுதிபெற்றவன்

ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்தவன் அவர்களின் படைப்பாளன் மட்டுமே. அவன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களை இயற்ற முடியும். அவன் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைத்து மனிதகுலத்துக்கும் பொருத்தமானவை. அனைத்து படைப்பினங்களோடும் இணக்கமானவை. அந்த இறைவன் ஒருவனே அனைத்துலகுக்கும்  சொந்தக்காரன்  என்பதால் அவன் மட்டுமே அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மிருகங்களின் மற்றும் இன்ன பிற படைப்பினங்களின் உரிமைகளையும் பக்குவமான முறையில் பங்கீடு செய்து நிர்ணயிக்கவும் தகுதியானவன். அந்த இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் சட்டங்களின் ஒரு பிரிவே பாலியல் தொடர்பான சட்டங்கள்.

சரி, இந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான்?

இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான்.  இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும். 

பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:

மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின.  அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன். இறைவனின் ஏவல்- விலக்கல்களுக்கு கட்டுப்பட்டு வாழும் முறையே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது.

ஆக, ஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.

சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?

இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.

= அவனே அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும்அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 28:70)

(அல்லாஹ் என்றால்  வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

====================== 

தொடர்புடைய ஆக்கங்கள்:

 காமுகனே கொஞ்சம் நில்! (quranmalar.com)

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

சனி, 20 நவம்பர், 2021

பெண்ணை இழிவு படுத்தும் மடமையை ஒழிப்போம்!


 பாலியல் குற்றங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த சமூகம் பெண்களின் மீது கொண்டுள்ள தவறான பார்வை. நமது  சமூகம்  பெண்களை ஒரு போகப் பொருளாகவும்
அற்பமானவளாகவுமே  பார்க்கிறது கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவளை களங்கப்பட்டவளாகப் பார்க்கும் இந்த சமூகத்தின் பார்வை  மாறவேண்டும். தலைகுனிவும்குற்ற உணர்வும்அவமானமும்  எவன் இக்குற்றத்தைப் புரிந்தானோ  அவன்தான் பெற வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவள் அல்ல. தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கநாம் முதலில் நமது சமூகம் பெண்களின் மீது கொண்டுள்ள தவறான  பார்வையை மாற்ற வேண்டும்.

பெருமதிப்புக்குரியது பெண்ணினம் என்ற உண்மையை சமூகம் உணரவேண்டும்.
குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள் எனபதையும் அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும். தாய்மை என்ற புனிதமான பொறுப்பு பெண்கள் மீதுதான் சார்ந்திருப்பதால் அதைப் பாதுகாப்பதும் அவசியம் அதை மதிப்போடு நடத்துவதும் அவசியம்.
பெண்களுக்கு மதிப்பு அளிக்கவும் மரியாதை செய்யவும்  கற்றுக்கொடுக்கிறான் இறைவன்.  பெண்களுக்கு உரிமைகளையும்கண்ணியத்தையும் உரிய முறையில் வழங்க தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் நீங்கள் காணலாம்.
பெண்குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதம்
பெண் குழந்தை பிறந்தால் இழிவாகக் கருதும் பெற்றோர்களிடம்தான் பெண்ணை  இழிவு படுத்தும் செயல் முதன் முதலில் துவங்குகிறது. திருக்குர்ஆனில் இறைவன் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறான்.:
= இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால்அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது! துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கிறது..இந்தக் ‘கேவலமான’ செய்தி கிடைத்துவிட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களைவிட்டு ஒதுங்கிச் செல்கின்றார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்துணைக் கெட்டது!"  - (திருக்குர்ஆன் 16:58,59).
பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது.  அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:
 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
பெண்களுக்கு அனைத்திலும் உரிமை
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் ஏற்றவாறு இறைவன் உரிமைகளும் கடமைகளும் வழங்கியிருப்பதை நீங்கள் காணமுடியும்: எந்த பெண்ணுரிமை அமைப்புகளும் போராடமலேயே கீழ்கண்ட உரிமைகளை இஸ்லாமிய பெண்கள் பதினான்கு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருவதை நீங்கள் காணலாம்:
படிப்பதற்கு உரிமை,
# பொருள் சேர்க்கும் உரிமை. தான் சம்பாதித்ததை தானே வைத்துக்கொள்ளும் உரிமை.
மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை
வரதட்சணைக்கு நேர்மாற்றமான மஹர் (வதுதட்சணை) பெறும் உரிமை, 
விவாக ரத்து உரிமை
பெற்றோர்கணவன்சகோதரன்மகன் இவர்களின் சொத்துகளில் இருந்து வாரிசுரிமை.
மட்டுமல்ல கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோருக்கு கடுமையான தண்டனைகள், முதிய வயதில் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு கடுமையான எச்சரிகைகள் இவை போன்ற பல நடவடிக்கைகள் மூலம் பெண்ணினத்தின் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் இஸ்லாம் பாதுகாப்பதை நாம்  காணலாம்.
இல்லறத்தில் சம உரிமை
= "அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்." – (திருக்குர்ஆன் 2:187)
= "உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரிபெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே!" – (திருக்குர்ஆன் 3:195)
= "பெண்களைக் குறித்து இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு அவர்களின் மீது சில உரிமைகள் உள்ளனஅவ்வாறே அவர்களுக்கும் உங்களின் மீது சில உரிமைகள் உள்ளன" – நபிமொழி
"உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடத்தில் சிறந்தவரே" – நபிமொழி

அதாவது யார் பெண்களிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்பதை மிக அழகாக இங்கு போதிக்கிறார்.