இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 நவம்பர், 2012

தடுமாறும் நாத்திகம்.....!

தடுமாறும் நாத்திகம்.....!
 பெரியாரின் வலதுகை போல செயல்பட்டு தமிழகமெங்கும் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வந்த டாக்டர் பெரியார்தாசன் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக நாத்திகத்தைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தை கொண்டதை அனைவரும் அறிவோம்.  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் தெரிவித்
திருந்தார். 

நாத்திகத்தின் தடுமாற்றத்தைக் குறிக்கும் இன்னொரு நிகழ்வாக...

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக  உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், "இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..!
 "I can't be sure God DOES NOT exist..!" accepted Professor Richard Dawkins today and dismissed his hard-earned reputation as a militant atheist - admitting that he is actually 'agnostic' as he can't prove God doesn't exist..!
 "கடவுள் இல்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது" என்று ஒத்துக்கொண்டு விட்டார்..!
 [Agnostic - கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்புபவர்;  Atheist - கடவுள் நம்பிக்கை இல்லாதவர். (நன்றி: Google translation) ]
20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலாளர் என்று பலராலும் பாராட்டப்பட்ட பிரபல விஞ்ஞானி டாக்டர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  இப்படித்தான் சொன்னார்... "இறைமார்க்கம்  அற்ற அறிவியல் நொண்டி; அறிவியல் அற்ற இறைமார்க்கம் குருடு" என்றார்..!  அவர் அறிந்த யூதமதம் அடிப்படையில் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், குர்ஆனை பொருளுணர்ந்து கற்றவர்களுக்குத்தான் தெரியும்... அவ்வாக்கியத்தின் முதல் பகுதியில் உள்ள ஆழம் எவ்வளவு பெரிது என்று..!
 (முஹம்மதே!) 'உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது..! (குர்ஆன் - 34:6)
===========================================

'I can't be sure God DOES NOT exist': World's most notorious atheist Richard Dawkins admits he is in fact agnosticRead more: http://www.dailymail.co.uk/news/article-2105834/Career-atheist-Richard-Dawkins-admits-fact-agnostic.html#ixzz3FrEA3YLH
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக