இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஆகஸ்ட், 2018

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018

பொருளடக்கம்
ஆளுவோருக்கும் ஆளத்துடிப்போருக்கும் எச்சரிக்கை -2
நம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்? -3
அற்பமானவைகள் எவ்வாறு இறைவனாகும்? -7
உலகின் கவர்ச்சியில ;ஏமாறவேண்டாம ;-6
அற்பமானவைகள் எவ்வாறு இறைவனாகும்? -7
எதிரிகள் ஏசினாலும் பொறுமை -9
ஜீவகாருண்யம் என்ற பெயரில் அராஜகம்  -10
சைவமே அசைவமானால் எதை உண்பேன்?-12
வாசகர் எண்ணம் -14
மரம் என்ற இறைவரம்!-15
மரம் நடுதல் இறைவிசுவாசியின் கடமை -18
இறைவன் கூறும் நல்லமரமும் கெட்டமரமும் -20
உணவு என்ற அருட்கொடைக்கு நன்றி மறக்கலாமா?  -22

மறுமையை நினைவூட்டும் இயற்க்கைக் காட்சிகள் -24

சனி, 18 ஆகஸ்ட், 2018

அற்பமானவைகள் எவ்வாறு இறைவனாகும்?

Related image
அறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது, 8800000….....000 (22 பூஜ்ஜியங்கள்) கிலோமீட்டர் தூரம் கொண்டது அறிவியலின் பார்வைக்கு எட்டிய உலகு. எட்டாத உலகோடு ஒப்பிடும்போது இது வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது அறிவியலின் கணிப்பு. எட்டாத மீதியை கரும்பொருள் என்றும் கருஞ்சக்தி (dark matter, dark energy) என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள் அறிவியலாளர்கள். அவ்வளவும் திருக்குர்ஆன் கூறும் ஏழு வானங்களில் முதல் வானத்தில் ஒரு மிகச்சிறு அங்கமே.  அப்படியானால் அவற்றுக்கு அப்பாலுள்ள வானங்கள் எவ்வளவு பிரம்மாண்டமானவை என்பதை நீங்கள் சிந்திபோர் உணரலாம். இவற்றையெல்லாம் படைத்து அதிபக்குவமாக இயக்கிவரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன்! 
அப்படியானால் ஒரு மாபெரும் தூசுப்படலத்தில் ஒரு சிறு துகள் போன்றது நாம் இன்று வாழும் பூமி. அதன் மேல் ஒட்டிக்கொண்டு வாழும் ஒரு நுண்ணிய துகள் போன்றவன் மனிதன். அந்த மனிதனுக்கு இருக்கும் பார்த்தல், பேசுதல், கேட்டல் போன்ற ஆற்றல்கூட இல்லாத பொருட்களை  மனிதர்கள் கடவுள் என்று பாவித்து வணங்கி வருவதை நாம் பரவலாகப் பார்க்கிறோம். 
= வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.  இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:19,20)
மிக அற்பமான ஆறடி உயர மனிதன் தன்னைத் தான் பெரியவனாக நினைத்துக் கொண்டு அகங்காரம் கொள்வதற்குக் காரணம் அவனது பார்வைக்கு எட்டியது மட்டுமே உலகு என்ற  அவனது குறுகிய சிந்தனையும் அவற்றுக்கு அப்பாற்பட்டவற்றைப் பற்றிய அறியாமையும் ஆராயாமையும்தான். அவனைவிட பிரம்மாண்டமான படைப்பினங்கள் அவனது புலன்களுக்கு எட்டாது வாழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வானவர்கள் என்ற இனம். அவர்கள் இவனைப் போல பெருமை அடிப்பதில்லை என்கிறான் இறைவன்.  தொடர்ந்து இந்த அற்பமான பூமியில் இருந்துள்ளவற்றை கடவுளாக பாவித்து வணங்கும் மனிதனிடம் அவற்றின் பலவீனம் பற்றிய சிந்தனையை தூண்டுகிறான்:
= பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா? (திருக்குர்ஆன் 21:21)
உண்மை இறைவனைத் தவிர வேறு தெய்வங்கள் சாத்தியமா?
அற்பமான பூமியில் மட்டுமல்ல வானங்களிலும் அவற்றுக்கு அப்பாலும் வேறு கடவுள்கள் இருப்பது சாத்தியமல்ல என்பதை உணர சாமானிய அறிவே போதுமானது. சாதாரணமாக ஒரு பேருந்துக்கு இரண்டு ஓட்டுனர்கள் இருந்தாலோ ஒரு கல்லூரிக்கு இரு முதல்வர்கள் இருந்தாலோ அங்கு என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம். பூமி மற்றும் சூரிய குடும்பத்தின் இதர கோள்கள் இன்னும் அவற்றுக்கப்பாலுள்ளவற்றில் காணப்படும் ஒழுங்கான  கட்டமைப்பையும் அதிபக்குவமான இயக்கங்களையும் சிந்திப்போர் இவ்வுலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் சாத்தியமே இல்லை என்பதை அறிவார்கள்.
= (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். 21:22) 
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)
பல தெய்வங்கள் உண்மையில் இருந்திருந்தால் அவர்களுக்குள் போட்டி, பொறாமை ஏற்பட்டு அவரவர்களுக்கு சொந்தமானதை வசப்படுத்திக் கொண்டு அவற்றின்மீது ஆட்சி செய்துகொண்டு இருப்பார்கள். ஒன்றையொன்று வெல்ல முற்பட்டு அழிவும் நாசமுமே நிகழ்ந்து இருக்கும் என்பதை சற்று சிந்தித்தால் அறியலாம். எனவே உண்மை என்னவெனில் இறைவன் என்பவன் ஒரே ஒருவன் மட்டுமே அவன் மட்டுமே அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். முழுமையான ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவன் ஏகன், தனித்தவன், அவனைப் போன்றதோ அவனுக்கு நிகரான சக்தியோ அறிவோ ஆற்றலோ கொண்ட எதுவும் எங்கும் இல்லை என்பதே உண்மை!
= அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 21:23) 

இணை தெய்வங்களை வணங்க இறைவன் சொல்லவில்லை!
இறைவன் அல்லாதவற்றை வணங்கும் பழக்கம் இறைவனின் பெயரால் மக்களை சுரண்ட முனையும் இடைத்தரகர்களாலும் ஆதிக்க சக்திகளாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு இறைவன் வழங்கிய அங்கீகாரமோ அத்தாட்சிகளோ அறவே இல்லை என்பது உண்மையான இறைவேதங்களை ஆராயும்போது அறியவரும் உண்மையாகும்.
= அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றனஎன்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (திருக்குர்ஆன்  21:24) 
ஆதிமுதலே போதிக்கப்படும் உண்மை இது!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதும் அவனல்லாத எதுவும் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவை அல்ல என்பதும் ஆதிமுதலே காலாகாலமாக போதிக்கப்பட்டு வரும் உண்மையாகும்.

 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (திருக்குர்ஆன் 21:25
-------------------- 
இஸ்லாம் என்றால் என்ன?
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

வீடுவரை ரகு! (உரையாடல்)


Image result for taxi driver india “ஹலோ ஓலா டாக்சிங்களா? ஸ்டேட்பான்க் ஏடிஎம் முன்னாடி நிற்கிறேன். வெள்ளை ஜுப்பா, தொப்பி, கறுப்பு சூட்கேஸ்தான் எனது அடையாளம்.” ...
தாமதியாமல் வந்து சேர்ந்தது ஓலா டாக்சி. ஏறி அமர்ந்தேன்.
ரயில்நிலையத்தில் இருந்து வீடுவரை டாக்சி புக் செய்திருந்தேன். அன்றைய முதல் ஓட்டமோ என்னவோ,  டாக்சி ஓட்டுனர் டாக்சியில் இருந்த அவரது இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு டாக்சியைக் கிளப்பினார். கூடவே எஃப் எம் ரேடியோவும் இசையை ஒலிக்கத் துவங்கியது.
“தம்பி,  ரெடியாவைக் கொஞ்சம் குறைக்கிறீங்களா, நானும் எனது பிரார்த்தனையை செய்துக்கறேன்..”
“ரொம்ப சாரி பாய், தாராளமா செய்ங்க பாய்” .. கூறியவாறு ரேடியோவை அணைத்து வைத்தார் டாக்சி ஓட்டுனர் ரகு.
நானும் வாகனத்தில் பயணிக்கும்போது வழக்கமாக செய்யும் துஆவை மொழிந்தேன் ”சுப்ஹானல்லதீ சஹ்ஹர லனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன்.” (இந்த வாகனத்தை நமக்கு வசப்படுத்தித் தந்த (இறைவன்) மிகத் தூயவன். இதற்கு முன் இதற்கு சக்தியற்றவர்களாக இருந்தோம். மேலும் அவனிடமே நமது மீளுதலும் உள்ளது.)
இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது டாக்சி நாற்பது நிமிட நேரம் பயணம். மெதுவாக ஓட்டுனரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
“என்ன தம்பி, இது உங்க சொந்த வண்டீங்களா?”
“ஆமா பாய், போன வருடம்தான் வாங்கினேன்”
“ரொம்ப சந்தோஷம், கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்... உங்களுக்கும் கடவுள் மேலே ஆழமா நம்பிக்கை இருக்குன்னு நினைக்கிறேன்”
“கண்டிப்பா பாய், கடவுள் இல்லாட்டி நாமும் இல்லைதானே பாய்?”
“ ரொம்ப சந்தோஷம் ரகு... ரகுதானே உங்க பேர் தம்பி?”
“ஆமா பாய் ரகுவரன், ரகுன்னே கூப்பிடுங்க”
“இன்னைக்கு பார் ரகு, மக்களுக்கு நிறைய பேருக்கு கடவுள் மேலே நம்பிக்கையே இல்ல, பக்தியுள்ளவங்கள பார்ப்பதே ரொம்ப அபூர்வமாயிருச்சு”
“ஆமா பாய், இன்னைக்கு கடவுள்னு சொன்னாலே ரொம்ப கேலியாப் பாக்கறாங்க இளைஞர்கள்”
“ஆமால்ல, கடவுள் பயம்கறது ஒன்னு இல்லாததால் நாட்டுலே என்னெல்லாம் நடக்குது பாருங்க ரகு.. குடும்பத்துல அம்மாவும் அப்பாவும் ராத்திரி பகலா வேல செய்யறாங்க.. யாருக்கு வேண்டி? அவங்களோட பிள்ளைகளை நல்லா வளர்க்கணுங்கறதுக்காக... ஆனா என்ன நடக்குது பாருங்க.. பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்து பெருசானதும் காதல் கீதல்னு யாரையாவது சேத்துகிட்டு பெற்றோரையே தூக்கி எறிஞ்சிட்டுப் போயிர்றாங்க.. சரி, ஒழுங்கா கல்யாணம் பண்ணி வச்சாக்கூட அந்தப் பெத்தவங்கள ஒரு பாரமாவே நினைக்கிறாங்க... நடக்குதா இல்லையா ரகு?”
“ஆமா பாய், ரொம்ப கரெக்டா சொன்னீங்க... அது மட்டுமா அவங்கள முதியோர் இல்லத்துல கொண்டுபோய் சேர்க்கவும் செய்யறாங்க.... இன்னும் சொத்துக்கு ஆசைப்பட்டு கருணைக் கொலைன்னு சொல்லி ஆளையே க்ளோஸ் பண்ணவும் செய்றாங்க பாய்”
“நான் சொன்னது ஒரு உதாரணம் மட்டும்தான் ரகு. இன்னும் பாருங்க, மக்களிடம் குடிப்பழக்கம், போதை மருந்து, விபச்சாரம், கள்ளக்காதல், இலஞ்சம், கொலை, கொள்ளை இதெல்லாம் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே போகுது.”
“இப்படியே போனா இது எங்க போய் முடியும்னே தெரில பாய்”
“இப்பவே மக்கள் வாழ்க்கைய வெறுக்க ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா ரகு. இந்தியால டெய்லி  சுமார் 370 பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு தெரியுமா ரகு?”
“அப்படியா பாய்?”
“ஆமா ரகு... இப்படி பாவங்கள் கட்டுக்கடங்காம பெருகுவதற்கு என்ன காரணம்னா, என்ன செஞ்சாலும் தட்டிக்கேட்க யாரும் இல்ல அப்படீங்கிற தைரியம் மக்களுக்கு ஜாஸ்தியாயிட்டே வருது”
“ஆமா பாய், நிலைமை ரொம்ப மோசமாயிட்டே வருது. கடவுள் பயமே சுத்தமா இல்லாம போயிருச்சுங்கறது உண்மைதான் பாய். நாங்கெல்லாம் சின்னதா இருந்தப்போ பள்ளிக்கூடத்திலே  நீதி போதனைன்னு கடவுளப்பத்தியெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. இப்ப அதெல்லாம் இல்ல. பணம் சம்பாதிக்கறதுக்கு என்ன வழியோ அதமட்டும் சொல்லிக்குடுத்துட்டு இருக்காங்க.”
“ஆமா ரகு, டாக்டராக இன்ஜினியராக என்ன தேவையோ அதைமட்டும் பிள்ளைகளுக்குக் கத்துக் குடுக்கறாங்க, ஆனா மனுஷனாகறது எப்படின்னு கத்துக்குடுக்கறதே இல்ல... பெத்தவங்களுக்கும் அதைப்பத்தி கவலயே இல்ல. அவங்களும் பிள்ளைகள் இஞ்சினியராகி டாகடராகி கைநிறைய சம்பாதிச்சாப் போதும்னு கண்ணைமூடிக்கிட்டு ஆலாய்ப் பறக்கிறாங்க. கடைசீல யாருக்காக அத்தன பாடு பட்டாங்களோ அவங்களே இவங்கள தூக்கி எறியறாங்க...”  
“பாய், ஆனா நீங்க சொல்ற மாதிரி கடவுள் பக்தி அப்படி சுத்தமா இல்லேன்னு சொல்லமுடியாதே... நிறையபேரு கடவுள வணங்கீட்டுதானே இருக்காகங்க. பின்னே எப்படி கடவுள் பயம் விட்டுப்போச்சுன்னு சொல்றீங்க?”
“கடவுள் பயம்னா கடவுள் நம்ம பாத்துகிட்டு இருக்கான், கடவுள்கிட்டே நம்ம செயல்களுக்கு பதில் சொல்லியாகணும் அப்படீங்கற பொறுப்புணர்வு ரகு... அதுதான் இல்லாம போச்சுன்னு சொல்றேன்”
“அது எப்படி பாய்? அதுக்கு என்ன காரணம்?”
“கடவுள்னா யாருங்கறத சரியானபடி கத்துகுடுக்கணும் ரகு. கடவுள்னா இந்த உலகத்தையெல்லாம் படைச்சு பரிபாலிப்பவன்தானே ரகு... ஆனா என்ன நடக்கிறது பாருங்க... அந்த கடவுள் அல்லாதவற்றை எல்லாம் காட்டி கடவுள், கடவுள்னு சொல்லிக் கத்துக் குடுக்கறாங்க. அதனால என்னாகுது? மக்களுக்கு உண்மையான கடவுள் பற்றிய மரியாதை அல்லது சீரியஸ்னஸ் அப்படீங்கறதே இல்லாம போயிருது... ஏதாவது உருவத்தைக் காட்டி இதுதான் கடவுள் அப்படீன்னு குழந்தைகளுக்கு கத்துக் குடுக்கும்போது ‘ஒ இவ்வளவுதானா கடவுள்!’ அப்படீங்கற மனோபாவம் வந்துருது..”
“புரியுது பாய்... கடவுளைப் பத்தி ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விட்டாலே பாவம் செய்ய மக்கள் தயங்க மாட்டாங்க... உண்மைதான்...”
“சின்னச்சின்ன விஷயங்களக் காட்டி அதையெல்லாம் கடவுள்னு கற்பிப்பத விட்டுட்டு உலகத்தைப் படைத்தவன்தான் உண்மைக் கடவுள் அவன் நம்மையெல்லாம் கண்காணிச்சிட்டு வர்றான், மரணத்துக்குப் பிறகு  அவன்கிட்ட விசாரணை இருக்குது, விசாரணைக்குப் பிறகு சொர்க்கம்  நரகம் எல்லாம் இருக்குது அப்படீங்கற உண்மையெல்லாம் நம்ம குழந்தைகளுக்கு கத்துகுடுத்து பாருங்க அவங்களுக்கு பயஉணர்வு வந்துரும். நள்ளிரவு நேரத்தில தனிமைல இருக்கும்போது கூட மொபைல்ல ஆபாசங்கள அவங்க பார்க்கமாட்டாங்க... ஏன்னா கடவுள் நம்மப் பாத்துகிட்டு இருக்காங்கற உணர்வு அவங்கள தடுக்கும்.”
“கரெக்ட் பாய், ஆனா இன்னைக்கு மக்கள் யாருமே அப்படி யோசிக்கிறதே இல்லையே. எங்களுக்கு எங்க அம்மா அப்பா எதை சொல்லிக் குடுத்தாங்களோ அதத்தான் வணங்கீட்டு வர்றோம். நீங்க கூட தர்கான்னு சொல்லி சமாதீலதானே போய் பூவெல்லாம் வெச்சு வணங்கறீங்க...”
“ஆமா ரகு, இந்த வழக்கத்தை விட்டுட்டு நாம எல்லோரும் படைத்தவன நேரடியா வணங்க ஆரம்பிக்கணும். அப்பதான் உண்மையான கடவுள் பயம் உண்டாகும். முன்னோர்கள் சொன்னாங்களேன்னு சொல்லி உண்மையான கடவுளை விட்டுட்டு எதை எதையோ வணங்கினா மக்களை திருத்தவே முடியாது. தனிநபர் வாழ்க்கைலேயும் சரி, குடும்ப வாழ்க்கைலேயும் சரி ஒழுக்கம் அப்படீங்கறதேயெ கொண்டுவர முடியாது. அப்படி படைத்தவனை வணங்கறதுக்கு நமக்கு எந்த ஒரு புரோக்கருடைய தேவையும் இல்லை. நேரடியாவே வணங்கலாம். எந்த செலவும் இல்லாம வழிபாடு செய்யலாம். நமக்கு வேண்டியதை நேரடியாகவே நம்மைப் படத்தவன்கிட்ட கேட்டு பிரார்த்திக்கலாம். இப்படி அவன வணங்கும் முறையைத்தான் கடவுளே நமக்கு கற்றுக் குடுத்தான்.”
“என்ன பாய் சொல்றீங்க? கடவுளே கத்துக் கொடுத்தானா? எப்படி?”
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
வீடுவரை ரகு
(தொடர்ச்சி)
ரயில்நிலையத்தில் இருந்து வீடுவரை ஓலா டாக்சியில் பயணித்துக்கொண்டிருந்தேன். சிக்னல்கள், நிறுத்தங்கள், ஹம்ப்கள் இவற்றைக் கடந்து சென்னை வீதிகளில் சென்று கொண்டிருந்தது டாக்சி. ஓட்டுனர் ரகுவரனோடு என் உரையாடல் தொடர்ந்தது....
“படைத்தவனை வணங்கறதுக்கு நமக்கு எந்த ஒரு புரோக்கருடைய தேவையும் இல்லை. நேரடியாவே வணங்கலாம். எந்த செலவும் இல்லாம வழிபாடு செய்யலாம். நமக்கு வேண்டியதை நேரடியாகவே நம்மைப் படத்தவன்கிட்ட கேட்டு பிரார்த்திக்கலாம். இப்படி அவன வணங்கும் முறையைத்தான் கடவுளே நமக்கு கற்றுக் குடுத்தான்.” என்றேன் நான்.
“என்ன பாய் சொல்றீங்க? கடவுளே கத்துக் கொடுத்தானா? எப்படி?”
“ஆமா ரகு, மனிதனை படைச்சு பூமியில வாழவிட்ட கடவுள் ஆரம்பம் முதலே அவனோட வாழ்க்கையின் நோக்கம் என்ன, பிறப்பு இறப்பெல்லாம் எதுக்காக, இந்த பூமில எப்படி வாழனும், நல்லது எது, கெட்டது எது, புண்ணியம் எது, பாவம் எது, மரணத்திற்குப் பின்னாடி என்ன நடக்கும், இறுதித் தீர்ப்பு நாள், சொர்க்கம், நரகம் இதப் பத்தியெல்லாம் கற்றுக்கொடுத்தே வந்துள்ளான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பூமியோட எல்லா பாகங்களுக்கும் அவனோட தூதர்கள் வந்திருக்காங்க... அவங்க மூலமா வேதங்களும் வந்திருக்கு”
“நீங்க சொல்றதப் பார்த்தா எல்லா மதங்களுக்கும் இடைல சம்பந்தம் இருக்குன்னு தோணுது பாய்” 
“கண்டிப்பா ரகு, இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் நம்மையுமெல்லாம் படச்சவன் ஒரே ஒருத்தன்தானே, மனித குலம் அப்படீங்கறதும் ஒண்ணு எனும்போது அவன் நமக்கு காட்டித்தரக்கூடிய வாழ்க்கை நெறியும் ஒண்ணாகத்தானே இருக்க முடியும்? அதத்தான் நாங்க இஸ்லாம் அப்படீன்னு சொல்றோம்.”
“இஸ்லாம்னா அர்த்தம் என்ன பாய்?”
“இஸ்லாம்ங்கற அரபு  வார்த்தைக்கு ஒரு அர்த்தம் அமைதி. இன்னொரு அர்த்தம் கீழ்படிதல். அதாவது இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்றதுக்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழ்ந்தா இந்த பூமி வாழ்க்கைலேயும் அமைதி கிடைக்கும் மறுமைலேயும் அமைதி கிடைக்கும் – அதாவது சொர்க்கம் கிடைக்கும் அப்படிங்கறதுதான் இஸ்லாத்தோட தத்துவம்.”
“அப்போ இறைவனுடைய கட்டளைகள் என்னான்னு கத்துக் குடுக்கறதுக்குதான் இறைத் தூதர்கள் வந்தாங்கன்னு சொல்றீங்க பாய்.. அப்படித்தானே?”
“ஆமா ரகு, இறைவன் அந்தந்த காலத்திலே வாழ்ற நல்ல மனிதர்கள தேர்ந்தெடுத்து அவங்கள தன்னுடைய தூதர்களா நியமிக்கிறான். அவங்களுக்கு தன்னுடைய செய்திகள வானவர்கள் மூலமா சொல்லி அனுப்பறான். இந்த இறைத்தூதர்கள் அவங்க வாழ்ற சமுதாய மக்களுக்கு அந்த இறைச்செய்திய போதிப்பாங்க... அது மாத்ரமில்ல அவங்களே அந்த இறைவழிகாட்டுதல்படி ஒரு முன்மாதிரியா நின்னு மக்களுக்கு வாழ்ந்தும் காட்டுவாங்க. அப்படி இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள்ள  கடைசியா வந்தவர்தான் முஹம்மது நபி அவங்க. இவருக்கு முன் சுமார் 600 வர்ஷம் முன்னாடி வந்து போன இறைத்தூதர்தான் இயேசு. அவருக்கும் முன்னாடி மோசே,டேவிட், ஆபிரகாம்னு பலரும் வந்திருக்காங்க... இந்தியாலே ரிஷிகள் முனிவர்கள்னு பலரும் வந்தத கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா ரகு?”
“ஆமா பாய்.. அப்ப இவங்கெல்லாம் ஒரே விஷயத்ததான் போதிச்சு இருப்பாங்களோ?”
“ஆமா ரகு, இவங்கெல்லாம் போதித்தது மூணு முக்கியமான அடிப்படைகளை.... முதல் விஷயம் நம்ம மனிதகுலம்ங்கறது ஒண்ணே ஒண்ணு. அதாவது மனிதர்கள் எல்லோருமே... அவங்க ஆப்ரிக்காலே பொறந்திருந்தாலும் சரி, அமெரிக்காலே, ஆசியாலே, இந்தியாலே, தமிழ்நாட்லே இப்படி எங்க பொறந்திருந்தாலும் சரி, கருப்பானாலும் செவப்பானாலும் சரி, என்ன மொழி பேசுனாலும் சரி இவங்க எல்லாத்துக்குமே மூலம் ஒண்ணுதான் அப்படீங்கற சத்தியம்.... அதாவது எல்லோருமே ஆதி தாய் ஆதி தந்தைன்னு சொல்லுவாங்க இல்லையா அவங்களோட பரம்பரைகள்தான்...”  
“ரொம்ப கரெக்ட் பாய்... ஒன்றே குலம் ஒருவனே தேவன் அப்படீன்னுதானே நாமளும் சொல்லக் கேட்டிருக்கோம்”
“ஆமா ரகு... அதேதான்... இரண்டாவது விஷயமும் அதுதான்... அதாவது நமக்கு இருப்பது ஒரே ஒரு கடவுள்தான்.”
“ஆமா பாய் அதுவும் உண்மைதான்... எல்லாக் கடவுளும் ஒண்ணுதான் இல்லையா பாய்”
“இல்ல ரகு... இங்கெதான் கொஞ்சம் நிதானமா யோசிக்கணும் ரகு. எல்லாக் கடவுளும் அப்படீன்னு சொல்லும்போது பல கடவுள்கள் இருக்காங்கன்னு மக்கள் நினைக்கறாங்க.. எதையெல்லாம் மக்கள் கடவுள் கடவுள்னு சொல்றாங்களோ அவையெல்லாமே கடவுள்தான் அப்படீன்னும் நினைக்கிறாங்க. அதனாலே என்னாகுது பாருங்க ரகு... நான் ஆரம்பத்திலே சொன்ன மாதிரி உண்மையான கடவுளப்பத்தி மரியாதை மனசுல தோன்றதில்ல. அதனால பாவங்களும் ஜாஸ்தியாகுது.  உண்மை என்னான்னா இந்த உலகத்தைப் படைத்தவன் எவனோ அவன் மட்டும்தான் கடவுள்... அவனைத்தவிர எதுவுமே கடவுள் கிடையாது அப்படீங்கறது தான் உண்மை. இல்லையா ரகு?”
“புரியுது பாய்.. ஒருவனே தேவன் அப்படீன்னா படைத்தவன் ஒருவன் மட்டும்தான் கடவுள்.. அவனைத்தவிர எதையும் கடவுள்னு சொல்லக்கூடாது அப்படித்தானே பாய்?”
“கண்டிப்பா ரகு, இதுதான் பூமியிலே தர்மத்த நிலைநாட்டனும்னா பேணவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயம்.. இதைத்தான் அடிக்கடி பள்ளிவாசல்ல இருந்து வர்ற பாங்கோசைல கேக்கறீங்க..’அஷ்ஹது அன் லாஇலாஹா இல்லல்லாஹ்’ அப்படீன்னு... வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் அப்படிங்கறதுதான் இதோட அர்த்தம் ரகு”
“ எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளிவாசல் இருக்குது. டெய்லி கேப்பேன். ஆனா இப்பதான் இதோட அர்த்தம் புரியுது பாய். அல்லாஹ் அப்படீன்னா கடவுள்னு அர்த்தமா?”
“ஆமா ரகு. வணக்கத்திற்கு உரிய ஒரே கடவுள் அப்படீங்கறதுதான் இந்த அரபு வார்த்தையோட அர்த்தம். இந்த வார்த்தைக்கு ஆண்பால் பெண்பால் பன்மை இதெல்லாம் கிடையாது. அதனாலதான் உலகத்துல முஸ்லிம்கள் எல்லோரும் இந்த வார்த்தைய பயன்படுத்தறாங்க”
“சரி பாய், எல்லா தூதர்களும் ஒரே கடவுளைப் பத்திதான் சொல்லிருக்காங்க அப்படீன்னா எப்படி இவ்ளோ மதங்கள் வந்துச்சு?”
“சரியான சந்தேகம் ரகு. பூமிக்கு வந்த எல்லா உண்மையான இறைத்தூதர்களும் படைத்தவன மட்டும் வணங்குங்க படைப்பினங்களையோ எங்களையோ அல்லது வேறு எதையுமோ வணங்கீறாதீங்க அப்படீன்னுதான் மக்களுக்கு சொன்னாங்க. மக்களோடு மக்களா கடவுள் சொல்லிக்குடுத்த மாதிரி முன்மாதிரி வாழ்க்கையும் வாழ்ந்தாங்க. தர்மத்தை சமூகத்துல நிலைநாட்டினாங்க. ஆனா அவங்களோட இறப்புக்குப் பின்னாடி ஷைத்தான் மக்கள வழிகெடுத்து அந்த இறைத்தூதர்களையே வணங்க வெச்சுட்டான்.”
“அதெப்படி பாய், புரில”
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
------------------------
வீடுவரை ரகு! (தொடர்ச்சி)
ஓலா டாக்சி ஓட்டுனர் ரகுவரனோடு என் உரையாடல் தொடர்ந்தது...
 “பூமிக்கு வந்த எல்லா உண்மையான இறைத்தூதர்களும் படைத்தவன மட்டும் வணங்குங்க படைப்பினங்களையோ எங்களையோ அல்லது வேறு எதையுமோ வணங்கீறாதீங்க அப்படீன்னுதான் மக்களுக்கு சொன்னாங்க. மக்களோடு மக்களா கடவுள் சொல்லிக்குடுத்த மாதிரி முன்மாதிரி வாழ்க்கையும் வாழ்ந்தாங்க. தர்மத்தை சமூகத்துல நிலைநாட்டினாங்க. ஆனா அவங்களோட இறப்புக்குப் பின்னாடி ஷைத்தான் மக்கள வழிகெடுத்து அந்த இறைத்தூதர்களையே வணங்க வெச்சுட்டான்.”
“அதெப்படி பாய், புரில”
“ ஷைத்தான்னா புரியுதில்லையா ரகு? அது ஒரு மறைவான கெட்ட சக்தி.. நம்ம மனசுக்குள்ள ஊடுருவி நம்மை வழிகெடுக்கும் அது. இந்த வாழ்க்கைங்கறது ஒரு பரீட்ச்சைதானே. அதனாலே ஷைத்தானுக்கும் சில சக்திய கடவுள் குடுத்து வச்சிருக்கான். இறைத்தூதர்கள் இறந்த பிறகு ரொம்ப காலத்துக்கு மக்கள் தர்மத்துலேயே நீடிச்சு இருப்பாங்க. இறைத்தூதர் ஒரு முன்மாதிரி மனிதராதானே இருந்தார்.. அவர்மேலே மக்களுக்கு ஒரு பாசம் இருக்கும். ஷைத்தானுடைய தூண்டுதலால சில மக்கள் நம்ம இறைத்தூதருக்கு ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு ஒரு ஓவியம் வரஞ்சு வெப்பாங்க. அதுக்கு முன்னாடி மரியாதையா நிப்பாங்க. கொஞ்ச காலத்துக்குப் பின்னாடி அவருக்கு உருவச்சிலய வெச்சு வணங்கவும் ஆரம்பிச்சிருவாங்க. நிறைய பேர் சேர்ந்தா அதைச்சுற்றி கோவிலும் கட்டீருவாங்க...”
“புரியுது பாய்”
“இப்ப என்னாகுது பாருங்க. கடவுள மட்டும் வணங்குங்கன்னு சொன்ன இறைத்தூதரையே மக்கள் வணங்க ஆரம்பிச்சிருவாங்க. சிலை வழிபாடு ஆரம்பிக்கும்... இடைத்தரகர்கள் உள்ளே நுழையறாங்க.. கடவுள் பெயரால மூடநம்பிக்கை சுரண்டல் எல்லாமே ஆரம்பிக்கும். கடவுள நேரடியா வணங்கியபோது இருந்த இறையச்சம் மெல்லமெல்ல மறஞ்சு மக்கள் பாவத்துல மூழ்க ஆரம்பிச்சிருவாங்க.... இப்படி அதர்மம் தலைதூக்க ஆரம்பிக்கி கொடிகட்டிப் பறக்கும். இப்ப இறைவன் மறுபடியும் ஒரு புதிய தூதரை அனுப்பறான். அப்படி வர்றவர் மறுபடியும் மக்கள நேரான பாதைக்கு அழைப்பார். என்ன நடக்கும் தெரியுமா ரகு?”
“புரியுது பாய்... சில மக்கள்  சத்தியத்த ஏத்துக்குவாங்க.. மத்தவங்க ஏத்துக்க மாட்டாங்க.. அப்படித்தானே பாய்?”
“ஆமா ரகு சிந்திக்கிற மக்கள் சத்தியத்த ஏத்துகிட்டு இறைத்தூதருக்கு பக்கபலமா இருப்பாங்க. ஆனா பெரும்பாலானவங்க அத ஏத்துக்க மாட்டாங்க. எங்க முன்னோர்கள் என்ன செஞ்சாங்களோ அதுதான் சரி. எங்களுக்கு பழைய மதமே போதும்னு சொல்லி அந்த மூடநம்பிக்கைலயே நீடிப்பாங்க. கொஞ்ச காலத்துக்குப் பின்ன புது இறைத்தூதரும் தருமத்த நிலைநாட்டிவிட்டுப் போவார். அவரோட மரணத்துக்குப் பின்னேயும் அதே கதைதான். இவரையும் மக்கள் கடவுளாக்கி வழிபட ஆரம்பிச்சிருவாங்க. இப்படித்தான் ஒவ்வொரு காலத்திலேயும் வர்ற இறைத்தூதர்கள பிற்கால மக்கள் கடவுளாக்கிடறாங்க... இப்படித்தான் பலமதங்கள் உருவாச்சு ரகு. புரியுதா இப்ப?”
“புரியுது பாய்... இப்ப எது சரியானதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?”
“இத பாருங்க ரகு. அதர்மம் வந்து அந்த தூதர்கள் பெயராலயோ நாட்டுடைய பெயராலோ அறியப்படும். தர்மம் அதோட பண்பின் பெயரால் அறியப்படும்...  தர்மம் படைத்தவன மட்டுமே வணங்கச் சொல்லும்.. அவன நேரடியா வணங்கச் சொல்லும்.. இடைத்தரகர் வேண்டாம்னு சொல்லும்.. மூட நம்பிக்கைகள் இருக்காது..  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைல உறுதியா இருக்கும்.. அந்த அடிப்படைல எல்லா மனிதர்களையும் சமமா சகோதரனா பாவிக்கச் சொல்லும். எல்லா இறைத்தூதர்களையும் ஏத்துக்கணும், யாரையும் மறுக்கக் கூடாதுன்னு சொல்லும்... இன்னொண்ணு ரகு... உண்மை தர்மம் அப்படீங்கறது மதம் மதம்னு சொல்லி வெறும் சடங்கு மாதிரி இருக்காது. அது ஒரு மார்க்கம்... வாழ்க்கைநெறி... வாழ்க்கையோட எல்லா துறைகளிலேயும் வழிகாட்டும்.. சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும்.. இன்னும் இப்படியா அடுக்கிகிட்டே போலாம்..”
‘புரியுது பாய்.. நிறைய யோசிக்க வெச்சிட்டீங்க..”
“ஆமா ரகு நிதானமா யோசிச்சுப்பாருங்க... அதுமட்டும் பத்தாது நேரான மார்க்கத்த எனக்கு காட்டுன்னு கடவுள்கிட்ட, அதாவது படச்சவன் கிட்ட ஆத்மார்த்தமா கேளுங்க. கண்டிப்பா அவன் வழிகாட்டுவான் பாருங்க”
“ஆமா பாய்.. மூணு விஷயங்கள்னு சொன்னீங்க. ரெண்டுதான் ஆச்சு.. இறைத் தூதர்கள் போதிச்ச மூணாவது விஷயம் என்ன?”
“மூணாவது விஷயம் இந்த உலக வாழ்க்கையோட நோக்கம் என்ன? இதுக்குப் பிறகு என்ன நடக்கும்? நாம எங்கே போறோம்? அப்படீங்கறது பற்றி ரகு.... இது பற்றி தெளிவில்லாம இருக்கறதும் பூமில பாவம் அதிகரிக்கறதுக்கு முக்கிய காரணம். மரணத்துக்குப் பின்னாடி ஒண்ணுமேயில்லன்னு மனுஷன் நினைக்கறதுனாலதான் பாவம் செஞ்சா தட்டிக் கேக்கறதுக்கு யாரும் இல்ல அப்படீங்கற நினைப்பு அவனுக்கு வருது, இல்லையா ரகு?”
“அதென்னமோ உண்மைதான்”
“தர்மத்தை பூமியிலே நிலைநாட்ட இந்த மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை ரொம்ப முக்கியம். நாம வாழ்ந்துகிட்டு இருக்கிற இந்த தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சை மாதிரி ரகு. இந்த உலகம்தான் அதுக்கான பரீட்சைக் கூடம் மாதிரி. நமக்கு ஒவ்வொருத்தருக்கும் எப்படி மரணம் இருக்கோ அதே மாதிரி இந்த உலகத்துக்கும் ஒரு முடிவு இருக்கு. கடவுள்கிட்ட இருந்து சிக்னல் வந்தா இந்த உலகம் முழுமையா அழிஞ்சிரும். அப்புறம் மறுபடியும் கட்டளை வரும்போது முதல் மனுஷர்ல இருந்து கடைசி மனுஷர் வரைக்கும் ஒருத்தர் விடாம எல்லோரும் மறுபடியும் உயிரோட எழுப்பப்படுவாங்க. அதுக்குப் பிறகு நாம ஒவ்வொருத்தரும் செஞ்ச பாவம் புண்ணியம் எல்லாத்துக்கும் விசாரணை நடக்கும். புண்ணியம் ஜாஸ்த்தி இருந்தா அவங்க சொர்க்கம் போவாங்க.. பாவம் ஜாஸ்த்தி இருந்தா நரகம் போவாங்க.. அதுதான் மனிதனோட நிரந்தரமான இருப்பிடமா இருக்கும். ஆக அதை தீர்மானிக்கறதுக்குதான் இப்போ நாம வாழ்ந்துகிட்டு இருக்கற வாழ்க்கை... புரிஞ்சுதா ரகு?”
“நீங்க சொல்றது புரியுது பாய்... ஆனா மறுபடியும் உயிரோட வர்றது அப்படீங்கறதுதான் நம்பறதுக்கு கஷ்டமா இருக்கு"
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)


திங்கள், 6 ஆகஸ்ட், 2018

இயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்

Related imageஇயேசுவின்  பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும்  இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே இறைவன் என்ற நம்பிகையும் நம்மில் வரவேண்டும் என்பதை இறைவன் மரியாளின் உதாரணம் மூலம் நமக்கு போதிக்கிறான்.
தொடர்ந்து இயேசுவின் அற்புதமான பிறப்பு தொடர்பான பாடங்களை பற்றி திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். 
மரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா? மனம் இடங்கொடுக்குமா? என்பதை நாம் இங்கு சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
கணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை  உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
இந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார். இயற்கையைக் கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் ஜகரிய்யா அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கும் அடங்கி இருந்தன.
மரியாளின் மேன்மை
மரியாளின் மேன்மை பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான். மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன் 3:42-43)
(ஸஜ்தா- சிரம் பணிதல்;, ருகூவு - குனிந்து வணங்குதல்)
தொடர்ந்து இயேசுவைக் கருத்தரிப்பதற்கு முன் நடந்த சம்பவங்களை வல்ல இறைவன் தனது இறுதிமறையில் கூறுவதைப் பாருங்கள்:
= இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். (திருக்குர்ஆன் 19:16)
= அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். (திருக்குர்ஆன் 19:17)
(ரூஹ் - பரிசுத்த ஆவி - ஜிப்ரீல் அல்லது காப்ரியல் என்ற வானவர்)
தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி
வந்தவர் வானவர் என்று அறியாததால் கற்புக்கரசியாகத் திகழ்ந்த மரியாளுக்கு அது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இறைவனிடமே புகலிடம் தேடுகிறார்.
=  'நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். (திருக்குர்ஆன் 19:18)
 இப்படிப்பட்ட எதிர்பாராத ஆபத்துகள் அல்லது பயமூட்டும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் வரலாம். தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும். தன்னந்தனிமையில் தன் எதிரே நிற்கும் ஆடவனுக்கு இறைவனைப் பற்றி நினைவூட்டி இறைவனிடமே தனக்குப் பாதுகாப்பும் தேடுகிறார். அந்த வல்லோனை மீறி என்னதான் சம்பவித்து விடமுடியும்?
---------------- 
இதே உத்தியை சரித்திரத்தில் இன்னொரு பெண் கையாண்டு தன்னைக் கற்பழிக்கவிருந்த ஆடவனிடம் இருந்து தற்காத்துக் கொள்வதை ஒரு நபிமொழி மூலம் அறிகிறோம்
ஒரு குகைக்குள்  சிக்கிக் கொண்ட  மூன்றுபேர் தங்கள் இறைவனுக்கு பயந்து செய்த நற்காரியங்களை முன்னிறுத்தி இறைவனிடம் பாதுகாவல் தேடினார்கள். அந்த மூவரில் ஒருவர் கூறியதைப் பாருங்கள்:
'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்று அவர்களைக் காப்பாற்றினான். இந்த சரித்திர சம்பவம் புகாரி என்ற நபிமொழி நூலில் இடம்பெற்றுள்ளது.
---------------------- 
சரி, இனி மரியாளின் சம்பவத்துக்கு வருவோம். தன்முன் வந்தவர் வானவர்களின் தலைவரான ஜிப்ரீல் என்பதை உணர்ந்து மரியாளின் அதிர்ச்சி நீங்கியது.
'நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்' என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 19:19)
ஒரு அதிர்ச்சியில் இருந்து நீங்கியதும் அதைவிடப் பெரிய அதிர்ச்சி மரியாளைத் தாக்கியது! கன்னிப்பெண்ணான எனக்கு குழந்தையா?”
'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?' என்று (மர்யம்) கேட்டார். (திருக்குர்ஆன் 19:20)
அப்படித் தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். 'இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளையாகும்' என உமது இறைவன் கூறுகிறான்' என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 19:21)

இறைவன் வகுத்ததே இயற்கை விதிகள்
ஆம், இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவன் இறைவன். அவன் வகுத்ததே இயற்கை விதிகள்.
= அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே விதிகளை  நிர்ணயித்தான். வழி காட்டினான்.  (திருக்குர்ஆன் 87:2,3)
அவன் அவ்விதிகளுக்குக் கட்டுப் பட்டவன் அல்ல. அவன் தான் நினைப்பதை எந்த விதிகளுக்கும் உட்படாமல் மிகமிகக் கச்சிதமாக நடத்தி முடிப்பவன்.  அப்படிப்பட்டவனே நமது இறைவன்.  அந்த இறைவனிடமே நாம் நமது பிரார்த்தனைகளை முன்வைக்கிறோம் என்பதை நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. பொதுவாக நாம் நமக்கோ அல்லது மற்ற மனிதர்களுக்கோ சாத்தியமான ஒன்றைத்தான் இறைவனிடம் பிரார்த்தித்துக் கேட்போம். நமக்கு அசாத்தியமாகப்படும் ஒன்றைக் கேட்பதற்கு நமது மனம் இடம் கொடுப்பதில்லை. 
ஸ்ரீ நமக்கு வேண்டியவர்கள் நோயினால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெறும்போது டாக்டர் நாங்கள் எங்களால் முடிந்ததெல்லாம் பார்த்துவிட்டோம், இனி இவர் பிழைக்க வழியில்லை!என்று கூறுவதைச் செவியுற்றிருப்போம்.
ஸ்ரீ நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் கஷ்டப்படும் தம்பதியினரிடம் டாக்டர், “நாங்கள் எல்லாப் பரிசோதனைகளும் சிகிச்சையும் நடத்திவிட்டோம்,  உங்களுக்குக் குழந்தை பிறக்க வழியேதும் இல்லைஎன்று சொல்வதையும் கேட்டிருப்போம்.
ஸ்ரீ நினைத்தவுடன் சென்றடைய முடியாத தூரத்தில் உள்ள நமது உறவினர் ஒருவருக்கு அவசர உதவி ஒன்றை உடனடியாகச் செய்ய வேண்டிய சூழ்நிலையைச் சந்தித்திருப்போம்.
இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளில் மனம் உடைந்து இறைவனிடம் பிரார்த்திப்பதையே விட்டு விடுவது மனித வழக்கம். ஆனால் ஒரு உண்மை இறைவிசுவாசி அப்படி இருக்கக் கூடாது. இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. நமக்கு அசாத்தியமானதையும் இறைவனிடம் கேட்க வேண்டும்.

வயதான காலத்தில் ஜகரிய்யா அவர்கள் பிள்ளைப் பேறு பெற்றதும், தனிமையில் இருந்த மரியாளுக்கு கோடைக்காலப் பழவகைகள் குளிர்காலத்தில் கிடைத்ததும், கன்னிப்பெண் மரியாள் குழந்தைப் பேறு பெறுவதும் எல்லாம் இறைவனின் அசாதாரண வல்லமையை நமக்கு நினைவூட்டும் பாடங்களாகும். பயபக்தியோடு இறைவனை அணுகினால் அதிலிருந்து நாமும் பயன் பெறலாம்!
================= 
தொடர்புடைய ஆக்கங்கள் 

இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
-----------------------------------------------
= தனக்குப்பின் இவ்வுலகுக்கு தூதராக வர இருந்த முஹம்மது நபியவர்கள் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் செய்துள்ளதை பைபிளிலும் குர்ஆனிலும் காணமுடிகிறது.
---------------------------------------------
வாழ்நாள் நெடுகிலும் – அதாவது பிறப்பு முதல் அவரது விண்ணேற்றம் நடந்ததுவரை– இயேசுவின் மூலம் பற்பல அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக் காட்டியுள்ளான். இன்னும் பல அவரது இரண்டாம் வருகையின்போது நிகழவுள்ளன.
--------------------------------------------
இன்று இயேசுநாதர் பற்றிய சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனையும் சேர்த்தே அணுக வேண்டும். ஏன் என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராயும்போது  தெளிவாகிறது:
அ) திருக்குர்ஆன் இறங்கிய சூழலும் பாதுகாக்கப் படுவதும்   
--------------------------------------
ஆ) முந்தைய வேதங்களோடு ஒப்பிடும்போது எவ்வாறு திருக்குர்ஆன் இன்னும் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது
---------------------------------
இ) அது எல்லாவித முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது
--------------------------------------
ஈ) அற்புதகரமாக அது தாங்கி நிற்கும்.அறிவியல் உண்மைகள்
= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்... 
 எல்லா இறைத்தூதர்களும் போதித்தது போன்றே இயேசு நாதரும் முஹம்மது நபிகளும் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதோடு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது – அதாவது அவனுக்கு இணைவைத்தலை - பெரும்பாவம் என்றும் கண்டித்தனர்.
-----------------------------------

தனக்குப்பின் வரவிருக்கிற தேற்றவாளர் என்று ஏசுவால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஹம்மது நபியவர்களை இன்று நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
http://quranmalar.blogspot.com/2014/12/blog-post_11.html 
= அன்னை மரியாள் கல்லெறி தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டது எவ்வாறு?