இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 நவம்பர், 2012

இறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் !

 படைத்த இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களை -  அவை உயிரோடு இருப்பவையாயினும் சரி இறந்தவை ஆயினும் சரி -  வணங்குவதோ அல்லது அவற்றிடம் பிரார்த்திப்பதோ மிகப் பெரும் பாவம் ஆகும்
இறைவன் கேட்கிறான்:
 "அல்லாஹ்வே அவனுடைய அடியானுக்கு போதுமானவனாக இல்லையா?" (அல்குர்ஆன் 39:36)
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த இறைவன் என்று பொருள்)

 இறந்து போன நல்லோர்கள், மகான்கள், நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப்  பிரார்த்திப்பது வீணும் பெரும் பாவமும் ஆகும்.
இறைவன் கூறுகிறான்: “இறைவனை விடுத்து இறுதி நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 46:5)

 சிந்தித்து செயல்படச் சொல்கிறான் இறைவன்: துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (27:62).

 "நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள், மறுமைநாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள், யாவற்றையும் நன்கு அறிந்தவனைப் போன்று அவர்கள் எவருமே உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்". (அல்குர்ஆன்35:14)
 உண்மையான அழைப்பு (பிரார்த்தனை அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் சத்திய மறுப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 13:14)


இறைவனின் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அதை மீறி எவரும் இப்பாவத்தைச் செய்தால் அவர்களின் புகலிடம் நரகமே!

அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.

இறைவனை 
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக