· ஒன்றே
குலம்! ஒருவனே தேவன்! ( திருமந்திரம்)
· தனக்குவமை
இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால் மனக்கவலை
மாற்றல் அரிது (திருக்குறள்)
· ஏகம் ஏவாதித்யம்
( (அவன் ஒருவனே, அவனுக்குப்
பிறகு எவருமில்லை) - சாந்தோக்ய உபநிஷத்- Chandogya Upanishad, Chapter 6, Section 2,
Verse 1
· நா
சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) - ஸ்வேதஸ்வதாரா உபநிஷத்-Svetasvatara Upanishad, Chapter 6,
Verse 9
· நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ
கடவுளோ இல்லை) – நாதஸ்ய ப்ரதிம அஸ்தி ( அவனைப்போல்
எதுவுமில்லை) -
ஸ்வேதஸ்வதாரா உபநிஷத் மற்றும்
யஜூர் வேதம்- Svetasvatara
Upanishad, Chapter 4, Verse 19 & Yajurveda, Chapter 32, Verse 3
· யா ஏக இத்தமுஸ்துஹி (நிகரில்லாதவனும்
தனித்தவனும் ஆகிய அவனைத் துதிப்பீராக) – ரிக்
வேதம்- Rigveda, Book No VI,
Hymn 45, Verse 16
· மேலும், 'ஏகம்
ஸத்வம் பஹூதா கல்பயந்தி' (இறைவன் ஒருவன்தான், அவனை
ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். - ரிக் வேதம் (1:164:46) -Rigveda, Book No.1, Hymn No. 164, Verse 46
'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது இஸ்லாத்தின்
மூலமந்திரம்-
வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் தவிர
வேறு யாருமில்லை' என்பது இதன் பொருள்.
இதை எந்த ஒரு கருத்துச் சிதைவும் இல்லாமல் 'பிரம்ம சூத்திரம்' சொல்லித்தருவதைப் பாரீர்:
ஏகம் பிரஹம் தவித்யே
நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஐன்.
பொருள்: இறைவன் ஒருவனே வேறு இல்லை.
இல்லவே இல்லை
பைபிளில் இறை ஏகத்துவம்
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -
கர்த்தரே மெய்யான
தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்.
அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.
(பழைய ஏற்பாடு – எரேமியா 10:10)
· “இஸ்ரவேலே,
கேள்: நம்முடைய
தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)
· “நானே
அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை
அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச்
சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன்
ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின்
இருப்பதும் இல்லை. நான், நானே
கர்த்தர்; என்னையல்லாமல்
ரட்சகர் இல்லை” (ஏசாயா 43:10-11)
· “நான்
முந்தினவரும்,
நான்
பிந்தினவருந்தானே; என்னைத்தவிர
தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின்
ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின்
கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -
· “அப்பொழுது
ஒருவன் வந்து,
அவரை
நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்
என்று கேட்டான்; அதற்கு அவர்:
நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)
· “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர்
அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)
· “அப்பொழுது
இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று
எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10)
· “இயேசு
அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்:
இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
· “தேவன் ஒருவரே தேவனுக்கும்
மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (I தீமோத்தேயு 2:5)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக