இன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவனால் தனது இறுதித் தூதராகத் அனுப்பப்பட்டரும் ஆன முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப் படங்களோ உருவச்சிலைகளோ எங்குமே இல்லை. அவரைக் கண்ணால் காணாமலே அவர் மீது பேரன்பும் நேசமும் கொள்வது மட்டுமல்ல, அவர் வாழ்ந்திருந்த போது கூறிய ஒவ்வொரு அறிவுரைகளையும் கட்டளைகளையும் செவிசாய்த்துக் கேட்பதோடு அவற்றை அப்படியே பின்பற்றத் துடிப்பவர்கள் இந்த மக்கள்! அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?
இதோ, இவ்வுலகின் அதிபதியின் கூற்றிலிருந்தே அறிவோமே!
அவரைப் பற்றி அவரைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய இறைவன் எதைச் சொல்கிறானோ அதுதானே உண்மையிலும் உண்மை! நியாயத் தீர்ப்புநாளின் அதிபதியும் அவனல்லவா?
= நற்குண வேந்தர் நபிகளார்!
இதோ, இவ்வுலகின் அதிபதியின் கூற்றிலிருந்தே அறிவோமே!
அவரைப் பற்றி அவரைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய இறைவன் எதைச் சொல்கிறானோ அதுதானே உண்மையிலும் உண்மை! நியாயத் தீர்ப்புநாளின் அதிபதியும் அவனல்லவா?
= நேரான பாதையில் உள்ளார்
36:1-4 .யாஸீன். ஞானம் நிறம்பிய இக்
குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில்
உள்ளவராவீர். நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
= இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்
7:158 .(நபியே!) நீர் கூறுவீராக ''மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் இறைவனின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி
அவனுக்கே உரியது, அவனைத்தவிர
(வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, இறைவன்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரும் இறைவன் மீதும் அவன் வசனங்களின் மீதும் நம்பிக்கை கொள்கிறார் - அவரையே
பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி
பெறுவீர்கள்.''
68:4 .மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
= அகிலத்தாருக்கு ஓர் அரிய அருட்கொடை
21:107. (நபியே!) நாம் உம்மை
அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
3:164 .நிச்சயமாக இறைவன்
இறைநம்பிக்கையாளர்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ
நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
= மனிதகுலத்தை உய்விக்க வந்தவர்
7:157 .எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத
நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும்
இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான
ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை
அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான
சுமைகளையும், அவர்கள் மீது இருந்த
விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்)
இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே
நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும்
ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி
பெறுவார்கள்.
= மனிதர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி
33:21 .இறைவன் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து,
இறைவனை அதிகம்
தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு
இருக்கிறது.
= மக்களின் துன்பப்படுவது கண்டு வருந்துபவர்
9:128 .(இறை விசுவாசிகளே!) நிச்சயமாக
உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க
வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர்
பெரிதும் விரும்புகிறார்; இன்னும்
இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
= திருந்தாத மக்களுக்காக அதிகம் வருந்தியவர்
18:6 . (நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக்
கொள்வீர்கள் போலும்!
26:3 .(நபியே!) அவர்கள்
இறைநம்பிக்கையாளர்கள் ஆகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே
அழித்துக்கொண்வீர் போலும்!
= இறை நேசத்திற்கும் பாவ மன்னிப்புக்கும் வழியாக இருப்பவர்
3:31 .(நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் இறைவனை நேசிப்பீர்களானால்,
என்னைப் பின்பற்றுங்கள்;. இறைவன் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக
மன்னிப்பான்; மேலும், இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும்
இருக்கின்றான்.
4:80 .எவர் (இறைவனின்) தூதருக்குக்
கீழ்படிகிறாரோ, அவர் இறைவனுக்குக்
கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு
கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
= அவரை எதிர்ப்போர் இழிவடைவர்
58:5 .எவர்கள் இறைவனையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப் பட்டதைப் போல் இழிவாக்கப்ப
படுவார்கள் - திடமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். சத்தியத்தை மறுப்பவர்களுக்கு
இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
= அவர் வழியை ஏற்க மறுத்தால் நரகம்
4:115 .எவனொருவன் நேர்வழி இன்னது என்று
தனக்குத் தெளிவான பின்னரும், (இறைவனின்)
இத்தூதரை விட்டுப் பிரிந்து, இறைநம்பிக்கையாளர்கள்
செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை
அவன் செல்லும்; (தவறான)
வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக