இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஜூலை, 2022

பக்ரீத் பண்டிகையால் நாட்டுக்கு இவ்வளவு நன்மைகளா?


20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். வசதியுள்ள முஸ்லிம்கள் மீது ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகளில் இருந்து ஏதாவது ஒன்றை இறைவனுக்காக பலியிடுவதும் அதை மக்களோடு பகிர்ந்துண்ணுவதும் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் செயல்பாட்டால் நம் நாட்டுக்கு விளையும் நன்மைகள் ஒப்பீடு இல்லாதவை. 

பலியிடுதல் மூலம் விளையும் நன்மைகள்: 

மேற்படி 20 கோடியில் சுமார் 8-10% முஸ்லீம்கள் 10,000/- முதல் 50,000/- வரை விலையுள்ள ஆடு/செம்மறியாடுகளை பலியிடுகிறார்கள் என எடுத்துக் கொள்வோம். 

கணக்கிடுவதற்காக ஒரு ஆட்டுக்கான சராசரி விலை ரூ.  20,000/- என எடுத்துக் கொள்வோம். 

 2 கோடி × ரூ 20000 = ரூ 400,000,000,000. 

# அதாவது (4 லட்சம் கோடி) பக்ரீத் பண்டிகையின் போது இந்திய இஸ்லாமியர்களால் செலவிடப்படுகிறது.  

இதனால் பயனடைவோர் யார்? 

வெறும் முஸ்லிம்கள் அல்ல.. அரபு நாடுகள் அல்ல, நம் பொருளாதாரத்தை குறிவைத்து சுரண்டும் வல்லரசு நாடுகளோ, இதர அண்டை நாட்டினர்களோ, சீனர்களோ, பன்னாட்டு நிறுவனங்களோ (MNC) அல்ல.. பிறகு யார்?

முழுக்கமுழுக்க இதனால் பயனடைவது அனைத்து இந்தியர்களும்தான்! குறிப்பாக இந்தப் பொருளாதார நடவடிக்கையால் அதிக பயன் அடைவது கிராமப்புறத்து மக்களே!

வேலைவாய்ப்பு: 

ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை பராமரித்தால்.. 

2 கோடி ÷ 10 = 20 லட்சம் - அதாவது 20 லட்சம் குடும்பங்களுக்கு இதன் மூலம்  நேரடி வேலைவாய்ப்பு.

விவசாயத்தில் ஏதேனும் குறிப்பிட்ட மதத்தவரோ சமூகத்தவரோ மட்டும் பங்கேற்ப்பதல்ல விவசாயம். எனவே அனைத்து மத மற்றும் சமூகத்தவர்களும் இதன் பயனை அடைகிறார்கள். 

பசி தீர்க்கும் பக்ரீத்:

இவ்வாறு பலியிடப்படும் ஆட்டின் இறைச்சியை பலியிடுபவர் தனக்காக, தன் உறவினர்களுக்காக மற்றும் தன்னைச் சுற்றி வாழும் ஏழைகளுக்காக என 3 பகுதிகளாக பங்கிட்டு விநியோகிக்கிறார். இவ்வாறு  ஒரு ஆட்டிலிருந்து குறைந்தபட்சம் 20 பேர் உண்ணமுடியும். இவ்வாறு பக்ரீத்  பண்டிகை 2 கோடி × 20 பேர் = 40 கோடி மக்களுக்கு உணவு வழங்குகிறது. 

ஆக, பக்ரீத் பண்டிகையால் ஒவ்வொரு வருடமும் நாடு அடையும் பயன்கள் இவை:

# ரூ 4 லட்சம் கோடி மதிப்புள்ள  வணிகம் -

#  40 கோடி மக்களுக்கு இலவச உணவு -

#  20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு -

இவை மிகக் குறைந்த மதிப்பீட்டின் அடிப்படையிலான கணக்கீடு.  உண்மையான கணக்கீடு மேலே உள்ளதை விட இருமடங்கோ மூன்று மடங்கோ இருக்கலாம்.

அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டிய வணிக செயல்பாடு:

கால்நடைகள் என்பவை கிராமப்புற இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க நீர்மைச் சொத்தாக (liquid asset) விளங்குபவை. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு முக்கியமாக இந்த வர்த்தகத்தை ஊக்குவிக்கக் கடமைப்பட்டுள்ளது. மட்டுமல்ல.. மக்கள் நலனில் உண்மையாகவே ஆர்வம் கொண்டவர்களாக அரசாள்வோர் இருந்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் வேலைவாய்ப்பை கணிசமாக உயர்த்தும் இந்த பொன்னான வாய்ப்பை ஊக்குவிக்காமல் இருக்க முடியாது. 

மேற்படி கணக்கீடுகளில் வெறும் ஆடு மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இன்னும் மாடு, எருமை, ஒட்டகம், இவற்றின் தோல் மற்றும் இன்னபிற தயாரிப்புகள் என அனைத்தையும் கணக்கில் எடுத்தால் என்னென்ன நன்மைகள் நாட்டுக்குக் கிடைக்கும் என்பதை நீங்கள் ஊகிக்க முடியும். 

#விவசாயிகளின்_உயிர்காக்கும்_பக்ரீத்:

விவசாயிகளுக்கு அவர்களின் வழக்கமான வயலில் செய்யும் உழைப்புக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ, அவர்கள் இந்த பக்ரீத் பண்டிகையைக் கவனத்தில் கொண்டு ஆடுகளை வளர்த்து விற்பனை செய்தாலே ஆண்டுமுழுக்க அமைதியாக வாழலாம். 

இனி அவர்கள் தற்கொலை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை!

 #விவசாயிகளுக்கு_மறுவாழ்வு_தரும்_பக்ரீத்:
பால்தரும் பசுவும் நிலத்தை உழும் மாடும் வயதாகி விட்டால் அவற்றை விற்று இளம் பசுவையோ மாட்டையோ வாங்கினால்தான் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை பெறமுடியும். வயதான மாட்டை அல்லது பசுவை இறைச்சிக் கடைக் காரர்கள்தான் உரிய விலை கொடுத்து வாங்குவார்கள். குறிப்பாக பக்ரீத் பண்டிகை காலத்தில் இவை அதிகமாக விற்றுப் போகும். உண்மையில் இது அதற்கான சீசன். அந்த வகையில் விவசாயிகளைப் பொறுத்த வரையில் இளம் பசு அல்லது மாட்டைக் கொண்டு தங்கள் தொழிலைப் புதுப்பித்துக் கொள்ள பக்ரீத் உதவுகிறது.

 #கொல்லாமை_விளைவிக்கும்_குழப்பம் !
மேற்படி உதாரணத்தில் உயிர்வதை பாவம் என்று சொல்லி பசுவை அல்லது மாட்டை விற்பதை தடை செய்தால் விவசாயியின் தொழில் தடைபடும். வயதான உதவாத மாட்டை அவிழ்த்துவிட்டால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார். தீனி கொடுக்காமல் கட்டிவைத்து பட்டினி போட்டால் பசிக்கொடுமையால் அது அணுவணுவாக சாகும்.
அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

= நீங்கள் ஒரு விஷயத்தை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) இறைவன் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:216)

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக