பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் பாராமல் பொது இடங்களில் தூக்கில் இடவேண்டும், குற்றவாளியின் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும், அவனைக் கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்றெல்லாம் குமுறுவதை நாம் காண்கிறோம். மெல்லமெல்ல இந்தக் குமுறல் அடங்குகிறது. சிறிதுகாலம் கடந்த பின் மீண்டும் எழுகிறது. மீண்டும் அடங்குகிறது... மீண்டும் எழுகிறது... அதாவது பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. இந்நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முறையான பாலியல் தொடர்பான விதிமுறைகளும் சட்டங்களும் இல்லாமையே!
பாலியல்
தொடர்பான விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம்
பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உருவாக்கியவனைப்
புறக்கணிக்கலாமா?
நாம்
வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின், ஸ்கூட்டர் போன்ற
பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction
manual) புறக்கணித்துவிட்டு
தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன
விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.
நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most
complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து
விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று
நாம் அனுபவித்து வருகிறோம்.
அற்ப
அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ
பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன் என்பதை நாம் முதற்கண் உணரவேண்டும். எந்த ஒரு
தனிநபரும் சரி, மனிதர்களின்
குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது
நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும் பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ
சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும். சமூகத்தில் உண்டாகும்
ஏதேனும் ஒரு பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட ஏதேனும் மக்கள் இயக்கங்களும் – உதாரணமாக கம்யுனிச
இயக்கம், மனித உரிமை இயக்கம், பெண்ணுரிமை இயக்கம்
போன்றவைகளும் – இதற்குத் தகுதி
பெற்றவை அல்ல என்பது தெளிவு.
படைத்தவன்
மட்டுமே தகுதிபெற்றவன்
ஆண்
பெண் உடற்கூறுகளையும்
அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும்
உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்தவன் அவர்களின்
படைப்பாளன் மட்டுமே. அவன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களை இயற்ற முடியும்.
அவன் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக
நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமை கொண்டவனும்
நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப்
பக்குவமானவை. அனைத்து மனிதகுலத்துக்கும் பொருத்தமானவை. அனைத்து படைப்பினங்களோடும்
இணக்கமானவை. அந்த இறைவன் ஒருவனே அனைத்துலகுக்கும் சொந்தக்காரன் என்பதால் அவன் மட்டுமே
அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மிருகங்களின் மற்றும் இன்ன பிற படைப்பினங்களின்
உரிமைகளையும் பக்குவமான முறையில் பங்கீடு செய்து நிர்ணயிக்கவும் தகுதியானவன். அந்த
இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் சட்டங்களின் ஒரு பிரிவே பாலியல் தொடர்பான
சட்டங்கள்.
சரி, இந்த வாழ்வியல் சட்டங்களை
இறைவன் எதற்காக வழங்கியுள்ளான்?
இங்குதான்
நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக்
கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு
பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான். இறைவன் நமக்கு
வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக்
கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக
அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும்.
பாலியலே
வாழ்வியலின் ஆதாரம்:
மனித
வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும்.
இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி
நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின்
மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப
உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின. அந்த இறைத் தூதர்களில்
இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே
திருக்குர்ஆன். இறைவனின் ஏவல்-
விலக்கல்களுக்கு கட்டுப்பட்டு வாழும் முறையே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில்
அறியப்படுகிறது.
ஆக, ஆண்- பெண் உறவுகள்
விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப்
பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால்
மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.
சரி, இவற்றை
பின்பற்றாவிட்டால்......?
இவ்வுலக
வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க
வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத்
திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க
நேரும்.
= அவனே அல்லாஹ்!
வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும்
அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியதாகும்.
மேலும், அவனிடமே நீங்கள்
அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 28:70)
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
பாலியல்
கொடூரங்களுக்கு எதிரான தடுப்பு அரண்கள்
குடும்பங்களே
சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள். அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள்
என்பதை நாம் நன்கறிவோம். அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தோடும்
கட்டுப்பாட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும்.
சமூக வாழ்விலும் அமைதி நிலவும்.அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை
உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான்
இறைவன். இன்று நாட்டில் பரவலாக நடந்து கொண்டு இருக்கும் பாலியல் கொடுமைகளில்
இருந்து பெண்ணினத்தைக் காக்க இவை ஒவ்வொன்றும் இன்றியமையாதவை என்பதை நீங்கள்
உணரலாம்.
1.ஆண்களுக்கும்
பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு,
ஆண்களுக்கு
தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்பட வேண்டியவையாகும்.
பெண்களைப்
பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள
வேண்டும்.
உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.(ஆதாரம்: திருக்குர்ஆன் 24:31, 33:59 மற்றும் நபிமொழிகள் )
2பாலியல் வக்கிரத்தைத்
தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை:
மேலும், விபச்சாரத்தின்
அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும்
இருக்கிறது. (திருக்குர்ஆன் 17:32)
3.ஆணுக்கும்
பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு
(நபியே!) இறைநம்பிக்கை
கொண்ட ஆண்களிடம், அவர்கள்
தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப்
பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான
வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக
இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள்
தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப்
பாதுகாக்கட்டும்; தங்களுடைய
அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர!
மேலும்,
தங்களுடைய
மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்.... (திருக்குர்ஆன் 24:30,31).
4. பத்து வயதுக்கு மேல்
ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல்,
நபி (ஸல்) அவர்கள் சொன்னர்கள்:"உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும்போது தொழச்சொல்லி ஏவுங்கள். பத்து வயதாகும்போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து (படுக்க) வையுங்கள்." (அபூதாவுத்)
5. இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி:
"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும்
கட்டாயக் கடமையாகும்" – நபிமொழி (புகாரி.
6 பெண்கள் நெருங்கிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள்
மேற்கொள்ளத் தடை,,
எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் (நெருங்கிய ஆண் உறவினர்) துணை இல்லாமல் ஒரு பரீத் அதாவது 12 மைல் தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா நூல்கள்: பைஹகீ, அபூதாவூத்)
7.அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப்
பழகுவதற்குத் தடை
மேலும், (இறை விசுவாசினிகளான
பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின்
தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள்
அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம்
வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப
முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத
சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை
வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து
வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், இறைவிசுவாசிகளே!
(இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் பிழை பொறுக்கத்
தேடுங்கள். நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின்
பக்கம் திரும்புங்கள். (திருக்குர்ஆன் 24:31).
(அல்லாஹ் என்றால்
வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)8.
8. அந்நிய ஆண்களோடு
பெண்கள் குழைந்து பேசத் தடை
நபியின்
மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க
விரும்பினால்,
(அந்நியருடன்
நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான
நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே
பேசுங்கள். (திருக்குர்ஆன் 33:32).
9. வயது வந்த அந்நிய
ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை
“ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க
வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர” என்று நபிகள் நாயகம்
ஸல் அவர்கள் கூறினார்கள்.(நூல்: முஸ்லிம்)
உங்களில்
எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில்
இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்:
அஹ்மத்)10
10.வயது வந்த
ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
இன்னும், உங்களில் வாழ்க்கைத்
துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத்
துணையில்லா) நற்குணம் கொண்ட உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக
இருந்தால்,
அல்லாஹ்
தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன்.
(யாவற்றையும்) நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:32)
11. மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை
'கன்னிப் பெண்ணாயினும்.
விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம்
தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது
சம்மதமாகும்'
என்று
கூறினார்கள்.அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.12.
12. வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை
கொடுக்க கட்டளை
மேலும், (நீங்கள் திருமணம்
செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து
வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)
13. குடும்பத் தலைமையும்
பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,. குடும்ப நிர்வாகம்
பெண் மீது கடமை,
பொருளாதாரச்
சுமை மீது அல்ல.
ஆண்கள்
பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச்
சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய
செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும் (திருக்குர்ஆன் 4:34)
14. கற்பொழுக்கமுள்ள
பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி
எவர்கள்
கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக்
கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும்
சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள்.
(திருக்குர்ஆன் 24:4)
15.
விபச்சாரக்
குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்
விபச்சாரம்
செய்த பெண்,
விபச்சாரம்
செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின்
மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின்
விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை
அளிக்கும்போது,
இறைநம்பிக்கையாளர்களின்
ஒரு குழு அங்கே இருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 24:2)
மேலும்
விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி திருமணம் முடித்த ஆண் அல்லது திருமணம்
முடித்த பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு பொதுமக்கள் முன் மரண தண்டனை வழங்கவும்
இஸ்லாம் பரிந்துரைக்கிறது.
===================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக