மனித இனத்தின் துவக்கத்திலிருந்து வரலாற்றை நாம் ஆராயும்போது சமூகம் படிப்படியாக முன்னேறியது அதற்கு தலைமுறை தலைமுறையாகக் கிடைத்த அறிவினால்தான் என்பது புலனாகிறது. மனிதனுடைய வரலாறே அறிவுடன் தொடர்புள்ள நிலையிலேயே ஆரம்பமாகின்றது என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இறைவன் ஆதம் (அலை) என்ற முதல் மனிதரைப் படைத்து, அவரிலிருந்து அவரது
மனைவியை உருவாக்கினான். அந்த இருவர் மூலம் மனித இனத்தைப் பல்கிப் பெருகச்
செய்தான். ஆதம் (அலை) அவர்களை, இறைவன் படைத்த பின்னர், அவன் ஆரம்பப் பணியாக
ஆதமுக்கு அறிவு புகட்டியதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.
= ‘…ஆதமுக்கு எல்லாப்
(பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்தான்.’ (திருக்குர்ஆன் 02:31)
= அவனே மனிதனைப் படைத்தான்; அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான். (திருக்குர்ஆன் 55:3-4)
மனிதன்
ஆரம்பகாலத்தில் அறிவற்ற மிருக நிலையில் இருந்தான் என்ற நாத்திக ஊகத்தை இஸ்லாம் அப்பட்டமாக
மறுக்கிறது. முதல் மனித ஜோடியே வாழ்க்கையைத் துவங்குவதற்குத் தேவையான அறிவோடும்
பகுத்தறிவோடும் இயற்கையோடும் வசதிகளோடும்தான் படைக்கப்பட்டது என்பதை மேற்படி
வசனங்களில் இருந்து அறியலாம்.
மிருகத்தில்
இருந்து மனிதனை வேறுபடுத்தும் மிக முக்கியமான ஆற்றல் பேச்சாற்றல். மனிதன் தான்
பெற்ற அறிவையும் தான் பகுத்து அறிந்தவற்றையும் தன் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுக்க தேவையான
முக்கியமான ஆற்றல் இது. அதை ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்கு வழங்கி இருந்ததாக
இறைவன் மேற்படி வசனத்தில் கூறுகிறான்.
இங்குதான்
கல்வி – அதாவது அறிவைப் பகருதல் – என்பது உருவெடுக்கிறது.
அடிப்படைக்
கல்வி:
மனித
இனத்துக்கு முதன்முதலாக கற்பிக்கப் பட்ட விஷயம் இறைவனைப் பற்றியும் இந்த தற்காலிக
உலக வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கல்வியே.
முதல் மனித
ஜோடி சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பூமியில் குடியேற்றம்
செய்யப்பட்ட பின் அவர்களிடம் இறைவன் கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது:
= நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும்
இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி
கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித
அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும்
மாட்டார்கள். அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப்
பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும்
வீழ்ந்து கிடப்பார்கள்!” (திருக்குர்ஆன் 2:39, 38)
அதாவது..
= இந்த பூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக
இறைவன் அமைத்துள்ளான்.
= இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப
வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும்
சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள்.
= இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும்
புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது.
இந்த உண்மைகளை மனித சந்ததிகளுக்கு கற்றுக்
கொடுப்பதற்காகவே இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது தூதர்களையும் வேதங்களையும்
அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் முதல் மனிதரே முதல் இறைத்
தூதராகவும் இருந்துள்ளார். மனித குலத்துக்கான முதல் ஆசிரியரும் அவரே.
இந்த அடிப்படைக்
கல்வியை மக்களுக்குப் புகட்டாததன் காரணமாக அதர்மம் உலகெங்கும் படர்ந்து பரவுகிறது.
இன்றைய இளைஞர்களிடையே என்னென்ன விபரீதங்கள் நடக்கின்றன என்பதைக் காட்ட இரு
உதாரணங்கள் போதுமானதாகும்:
= பெற்ற
பிள்ளைகளுக்காகவே இரவுபகல் பாராமல் உழைக்கும் பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள்
வளர்ந்து ஆளானதும் முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விடுகிறார்கள். சொத்துக்கு
ஆசைப்பட்டு கருணைக் கொலை என்ற பெயரில் பெற்றோர்களை பிள்ளைகள் கொல்கிறார்கள்.
= SSLC முதல் IAS வரை
நடக்கும் தேர்வுகளில் தோல்வியுற்றாலோ அல்லது மதிப்பெண்கள் குறைந்தாலோ மாணவர்கள்
உடனே தற்கொலை செய்து கொள்வதை நித்தம் காண முடிகிறது.
வள்ளுவர் அன்றே கூறினார்
இதுபற்றி:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்.
(அதிகாரம்:கடவுள்
வாழ்த்து குறள் எண்:2)
பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும்
இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய
பயன் என்ன? (மு வரதராசனார் உரை)
=================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக