இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஏப்ரல், 2026

இளமையை எவ்வாறு கழித்தாய்?

https://www.facebook.com/reel/3831557226937264


ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் விளங்குபவர்கள்
  இளைஞர்கள் . அவர்களின் ஒழுக்கத் தரத்தைப் பொறுத்துதான் அந்த சமூகம் உயர்ந்த அல்லது உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெறுகிறது. 

இளமைப் பருவம் என்பது தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் (Development of human personality) மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், ஒழுக்க ரீதியான பக்குவப்படுத்தப்படல் மிக அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படல் வேண்டும். 
அதேவேளையில் இதில் கவனக்குறைவோ அலட்சியமோ நிகழ்ந்தால்  அந்த இளைஞர்களின் ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்படும். அவர்கள் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு முழு சமூகத்திற்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல, அதுவே முழு மனித இனத்திற்கும் கூட அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.
இன்று, உலகெங்கும் பரவலாகக் காணப்படும் ஒழுக்கக் கேடான நடவiடிக்கைகள், பாலியல் வன் கொடுமைகள், மது மற்றும் போதைபொருள் புழக்கங்கள், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் போன்ற அனைத்தும் இளைஞர்களை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. இவ்வாறு சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள், அதன் அழிவு சக்தியாக மாறுவதற்குக் காரணம் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பற்றிய அலட்சியமே. 

இறையச்சம் விதைப்போம்!
இந்த இளமைப்பருவம் பயனுள்ளதாக ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் அதற்கு மனித மனங்களுக்குள் இறையச்சம் என்ற விதையை ஆழமாக விதைக்க வேண்டும். 
இறையச்சம் என்றால் என்ன?
1. இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை போன்றது, இந்த உலகம் அதற்கான பரீட்சைக் கூடம் போன்றது.
2. இங்கு எனது செயல்கள் இறைவனால் கண்காணிக்கப் படுகின்றன. 
3. நான் செய்யும் நற்செயல்கள் புண்ணியங்களாகவும் தீய செயல்கள் பாவங்களாகவும்  பதிவாகின்றன. 
4.  ஒருநாள் இந்த பரீட்சைக் கூடம் இழுத்து மூடப்படும். அதற்குப் பிறகு இந்த பூமியில் (இந்த பரீட்சைக் கூடத்தில்) தோன்றி மறைந்த -முதல் மனிதனில் இருந்து இறுதி மனிதன் வரை- அனைவரும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப் பட உள்ளார்கள்.
5. விசாரணைக்குப் பிறகு நம்முடைய நற்செயல் அல்லது தீய செயல்களின் எடையைப் பொறுத்து நமக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ விதிக்கப்பட உள்ளது. 
6. மறுமை வாழ்விடம் - சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ - அதுதான் மனிதனின்  நிரந்தர மற்றும் உண்மையான வாழ்விடம் ஆகும். 

மேற்கண்ட உண்மைகளை  கருத்தில்கொண்டு அதற்கேற்ப வாழும்போது உண்டாகும் பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். அதாவது பூமியில் மனிதன் ஒழுக்கம் பேணி வாழ்வதற்கான அடிப்படையே இறையச்சம்!
இளமைப்பருவம் கேள்விக்குரியது:
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் அவை:
1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.
2. நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.
3. அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.
4. முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.
5. வறுமை வரமுன் செல்வநிலையையும்' 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்  : நஸாயீ.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?
4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' என 
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரழி)
நூல்  : தபரானி.

===============   
இளமைப் பருவம்:
மனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுறுகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும்.
இளமையின் பண்பு:
இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். முpக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இலட்சியக் கனவு காணும் பருவம்:
இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர்
பயனுள்ள பருவம்:
எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன. சுpல இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும் ; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.
இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்:
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று, செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆதிமீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது.
அந்தஸ்தும் மகத்துவமும்:
இஸ்லாம் ஆற்றல் மிக்க இளைஞர்களை எந்நேரமும் வரவேற்றுக் கொண்டே இருக்கிறது; பண்பாடும், சீரிய சிந்தனையுமுள்ள வாலிபர்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது; அவர்களுக்கு உரிய இடத்தையும், அந்தஸ்தையும் வழங்கி மகிமைப் படுத்துகிறது. உலகிலுள்ள எந்தமதமும், சித்தாந்தமும், தலைவனும் வழங்காத இடத்தை, இஸ்லாம் இளைஞர்களுக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது மனித, வாழ்வின் பருவங்களைப் பற்றி அறிவுறுத்திய அண்ணல் நபியவர்கள் 'ஐந்து விடயங்களுக்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறி, முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக்கொள்ள பணித்துள்ளார்கள். மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாக இருக்கும் இளமையை வீணாகிவிடாது, மிகக் கவனமாக, அவதானத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழுமிய கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவா;கள் கூறினார்கள்.
அவர்கள்:
01.  நீதமிகு தலைவர்
02. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு  வாலிபர்
03. மஸ்ஜித்களுடன் இதய புர்வத் தொடர்பு கொண்ட மனிதர்
04.   அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதா;கள்.
05. அழகும், கவா;ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக)  அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை   அஞ்சுகின்றேன்  என்றுரைக்கும் மனிதன்.
06. தனது வலக்கரம் தா;மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது,  (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்.” அறிவிப்பவா;: அபு+ஹுரைறா (ரலி) நூல்: புகாரி 
=========== 
1. மரணத்திற்குப் பின் 

2. நோய் நிவாரணம்- 10 உண்மைகள் 

3. இதயங்களை வென்ற இறைத்தூதர் 

4. போதை ஒழிப்போம் பெண்ணினம் காப்போம்!
https://www.quranmalar.com/2022/09/blog-post_10.html

5. தொழுகை நடத்திவரும் அற்புதங்கள்
https://www.quranmalar.com/2024/09/blog-post_92.html

புதன், 1 ஏப்ரல், 2026

உலக ஊடகங்களின் நயவஞ்சகம்


உலக ஊடகங்களின் நயவஞ்சகம்

1970-களில் எட்வர்ட் சயீத் என்ற அறிஞர் Orientalism என்ற ஒரு முக்கியமான புத்தகத்தை எழுதினார். அதில் அவர் சொன்னது விஷயம்: மேற்கத்திய உலகம் இஸ்லாமைப் பற்றி சொல்லும் பல குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. அவர்கள் தங்களுடைய தவறுகளை மறைக்க, அதையே முஸ்லிம்கள்மீது சுமத்துகிறார்கள்.

முஸ்லிம்கள் பகுத்தறிவற்றவர்கள், பிற்போக்கானவர்கள், பெண்கள் மீது அடக்குமுறை செய்பவர்கள், பாலியல் சீர்கேடு கொண்டவர்கள் என்று பல குற்றங்கள் சாட்டப்பட்டன. ஆனால் வரலாற்றை பார்த்தால், இந்த குற்றங்கள் எல்லாம் அதிக அளவில் மேற்கத்திய சமுதாயத்தில்தான் நடந்துள்ளன. இதுதான் எட்வர்ட் சயீத் நிரூபித்த உண்மை.

இன்று எப்ஸ்டீன் பைல்ஸ் மூலம் சமீப காலத்தில் வெளிவந்த பெரிய ஆவணங்கள் இதையே மீண்டும் வலுவாக நிரூபித்துள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் மற்றும் இசைத்துறை பிரபலங்கள் போன்ற அதிகாரம் உள்ளவர்களின் கூட்டணி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் ரீதியாக அதிபயங்கரமாக பலாத்காரம் செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமல்ல அவர்கள் மீது நரபலி, மனித மாமிசம் உண்ணுதல் போன்ற கொடூர குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு உள்ளன். எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் அவர்களில் பலரும் இன்னும் தண்டிக்கப் படாமலே இருக்கிறார்கள்.

ஆனால் ஊடகங்கள் நாளும் பொழுதும் குற்றவாளிக் கூண்டில் யாரை நிறுத்துகிறார்கள்? – இஸ்லாமியர்களை!

முஸ்லிம்கள் பெண்கள் மீது அடக்குமுறை செய்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகளை மறுக்கிறார்கள், பர்தா அணிய நிர்பந்திக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் மீது அடுக்குகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களை மூளைச்சலவை செய்து, நாடு கடந்து கடத்தி, சந்தைப் பொருளாக்கி பணத்துக்காக பயன்படுத்தியதும் கொன்று குவித்ததும் யார் என்று இப்போது தெளிவாகிறது.  

இஸ்லாம் பெண்களை இத்தகைய கொடூரர்களிடம் இருந்து பாதுகாக்க கடுமையான விதிகளை வைத்திருக்கிறது. அந்த விதிகள் இல்லையென்றால், பெண்கள் இன்று எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

அன்றைய நடைமுறைப்படி பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இஸ்லாமியர் செய்த குழந்தைத் திருமணங்களை இக்கால நடைமுறையோடு ஒப்பிட்டு முஸ்லிம்களைத் தாக்குகிறார்கள். அதேவேளையில் இன்றைய உலகில் அதிகாரம் படைத்த கொடியவர்கள் சிறுவயது பெண்குழந்தைகளை பணம் கொடுத்து நாடுகடத்தி பாலியல் ரீதியாக சுரண்டி கொன்று குவித்ததும் அவர்களையே உணவாக உண்டதும் ஊடகங்களின் கண்களுக்கு தெரியவே இல்லை! என்ன ஆச்சரியம்?

தீவிரவாத/ பயங்கரவாதக் குற்றச்சாட்டு

இஸ்லாமியர்கள் மீது மிகப்பரவலாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு இது.

முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள், உலகைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள், தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளால் உலகை அச்சத்தில் ஆழ்த்துகிறார்கள், சதா போர்களில் தங்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.

ஆனால் உண்மையான இரகசிய சதி வலையங்கள் யாருடையவை? பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பணக்காரர்கள், அதிகாரிகள் இணைத்து செயல்பட்டது யார்? என்பவை தெளிவாகி வருகின்றன.

உலக ஊடகங்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்த வல்ல அனைத்து நிறுவனங்களும் பேரழிவு ஆயுத விற்பனை நிறுவனங்களும் இக்கொடியோர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் உலகில் நாடகங்கள் அரங்கேறுகின்றன. மக்களும் அவற்றை உண்மை என நம்பி வருகிறார்கள்! விளைவு?

இறையச்சம் கொண்டு ஒழுக்கவாழ்வு வாழும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள். கொடூர பாலியல் மற்றும் கொலைக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். உலகை ஆள்கிறார்கள்!

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html