ஏன் இஸ்லாம் தேவை என்பதற்கான 12 காரணங்கள்
💥1- தெளிவான கடவுள் கொள்கை
இஸ்லாம் கடவுளைப் பற்றிய தர்க்கரீதியான மற்றும் எளிமையான கொள்கையை வழங்குகிறது - அவன் ஒரு முழுமையான கடவுள் - அவன் ஒரு மனிதனோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு சிலையோ அல்லது ஒரு மூவரில் ஒருவனோ (திரித்துவம்) அல்லது வரையறுக்கப்பட்டவனோ அல்லது உருவாக்கப்பட்டவனோ அல்ல! - அவன் முற்றிலும் ஒப்பிடமுடியாதவன், தனித்துவமானவன். அனைத்து நல்ல குணங்கள், பெயர்கள், பண்புக்கூறுகள் மற்றும் ஏகத்துவம் ஆகியவற்றைக் கொண்டவன்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
💥2- அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
இஸ்லாம் இறைவனின் அனைத்து தூதர்களையும் நபிமார்களையும் ஏற்றுக்கொள்கிறது - சுமார் 124000 தூதர்கள் மற்றும் நபிமார்கள், (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.)
இஸ்லாத்தில், நாம் இறைவனின் அனைத்து தீர்க்கதரிசிகளையும் நேசிக்கிறோம், அவர்களில் எவரையும் நாம் மறுக்க முடியாது - உதாரணமாக யூத மதம் போன்ற மற்ற மதங்களில் - அவர்கள் இயேசுவையும் முஹம்மதுவையும் நிராகரிக்கிறார்கள் - கிறிஸ்தவத்தில் அவர்கள் முஹம்மதுவை நிராகரிக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் அனைத்து தீர்க்கதரிசிகளும் பாகுபாடு இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
💥3- இடைத்தரகர் இல்லை
இஸ்லாத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லை -- நீங்கள் நேரடியாக இறைவனை வணங்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்யலாம் - இடையில் ஒரு இறைத்தூதரோ, புண்ணியவான்களோ என யாரும் தேவையில்லை. நீங்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறீர்கள்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
💥4- இஸ்லாம் என்பது பண்பின் பெயர்
இஸ்லாம் ஏதேனும் ஒரு நபரின் அல்லது குலத்தின் அல்லது கோத்திரத்தின் அல்லது ஒரு நாட்டின் அல்லது குழுவின் பெயரால் அறியப்படவில்லை. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான ஏக இறைவனுக்கு அடிபணிதல் என்பதாகும். யாரேனும் எந்த நேரத்திலும் உண்மையான இறைவனுக்கு மட்டுமே பணிந்து வாழ்ந்தால் அவர் ஒரு ஒரு முஸ்லிம் (கீழ்படிபவர்) என்று அழைக்கப்படுகிறார். கீழ்படிந்து வாழும்வரைதான் அவர் முஸ்லிம். கீழ்படிவதை நிறுத்திவிட்டால் அவர் முஸ்லிம் அல்ல.
💥5- அனைத்து நற்செயலும் வழிபாடே!
இஸ்லாத்தில் வணக்கம் அல்லது வழிபாடு என்பது வெறும் சடங்குகளைப் பற்றியது அல்ல. இறைவன் பொருந்திக்கொள்ளும் எந்தவொரு செயலையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சொல். எல்லா நற்செயல்களும் வழிபாட்டின் வகைகளாகும்: புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தைகளைக் கூறுதல், தன் துணையை மென்மையாக நடத்துதல், குடும்பத்துக்காக உழைத்தல், குடும்பத்துக்காக சமையல் செய்தல், துணி துவைத்தல் இவை போன்ற அனைத்தும் இறைவனால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. புண்ணியங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மாறாக இறைவன் பொருந்திக்கொள்ளாத எந்தவொரு செயலும் பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. பொய் சொல்வது, அவதூறு பேசுதல், புறம்பேசுதல், ஏமாற்றுவது, அப்பாவி மக்களை தாக்குதல், திருட்டு, விபச்சாரம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது போன்ற அனைத்தும் பாவச்செயல்களே!
💥6- தெளிவான பாவமன்னிப்புக் கொள்கை
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பாவம் செய்தவர்கள், செய்த பாவத்தை இறைவனிடம் வருந்தி நேரடியாக முறையிட்டு அவனிடம் அதை மன்னிக்குமாறு கோருவது ஒன்றே பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கான வழி. வேறு குறுக்கு வழிகள் கிடையாது. ஏதேனும் ஒரு இறைத்தூதரை அல்லது மகானை விசுவசிப்பதாலோ, ஏதேனும் புண்ணிய நீரில் நீராடுவதாலோ, அதை உடலில் தடவிக் கொள்வதாலோ, ஏதேனும் புண்ணியத்தலங்களுக்கு காணிக்கை அல்லது அர்பணிப்புகள் செய்வதாலோ பாவமன்னிப்பு என்பது கிடைக்காது.
இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக உள்ளான் - நீங்கள் எப்போதும் மனந்திரும்பினால் (மரணத்திற்கு முன்). நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும் அவன் உங்களை ஏற்றுக்கொள்கிறான். அவன் தன் கிருபையால் நம்மை மன்னிக்கிறான் - அவன் மன்னிக்க எந்த விலையும் கொடுக்கப்படாது. எந்த ஒரு மனிதரின் அல்லது இறைத்தூதரின் அல்லது புண்ணியாத்மாவின் இரத்தமும் பாவமன்னிப்புக்கு
விலைபேசப்படுவது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது.
💥7- இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்வியல் கொள்கை -
அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்கமைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து கட்டங்களிலும் வாழ்வியல் துறைகளிலும் பக்குவமான வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது இஸ்லாம். மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இறைவனின் வேதத்திலும் இறைத் தூதரின் நடைமுறைகளிலும் இருந்து நாம் பெற முடிகிறது. உதாரணமாக மனிதன் யாரைத் திருமணம் முடிக்கலாம் அல்லது முடிக்கக் கூடாது என்பதையும் ஒருவர் இறந்த பின் அவரது சொத்துக்கள் எவ்வாறு நீதமான முறையில் அவரது வாரிசுகளுக்கும் ஏனைய உறவினர்களுக்கும் இடையே பங்கிடப்பட வேண்டும் என்பதற்கான பக்குவமான இறை வழிகாட்டுதலை திருக்குர்ஆனில் நீங்கள் காணமுடியும்.
💥8- பாதுகாக்கப்படும் இறை ஆவணங்கள்
இஸ்லாத்தின் அறிவு ஆதாரங்களான இறைவேதம் திருக்குர்ஆனும் இறைத்தூதரின் நடைமுறைகளை உள்ளடக்கிய ஹதீஸ் தொகுப்புகளும் பக்குவமான முறையில் பதிவு செய்யப்பட்டு அவ்வாறே உலகெங்கும் பாதுகாக்கப்படுகின்றன. அவை அப்படியே உள்ளன, ஒருபோதும் சிதைக்கப்படவில்லை. உலக வரலாற்றில் எந்த புத்தகங்களுக்கும் இப்படி நடந்ததில்லை. உதாரணமாக திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் உலகெங்கும் மூல்மொழியிலேயே முழு நூலும் எந்த மாற்றங்களுக்கும் சிதைவுகளுக்கும் ஆளாகாமல் அச்சுவடிவத்திலும் ஒலி வடிவத்திலும் கோடிக்கணக்கான மனித உள்ளங்களிலும் அப்படியே பாதுகாக்கப் படுகிறது. உலக இறுதிவரை அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் இறைவன் வாக்குறுதி அளிக்கிறான்:
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து படியுங்கள்:
💥9- கண்மூடிப் பின்பற்றுதல் இல்லை!
இஸ்லாம் அறிவு இல்லாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை தடைசெய்கிறது, மேலும் அது உண்மையை அறிய மூளையைப் பயன்படுத்த நம்மை அழைக்கிறது, அது ஆதாரம் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையிலானது. படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை அறியுமாறு மக்களை திருக்குர்ஆன் அழைக்கிறது:
88:17 .(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-88:18 .மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19 .இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
3:190 .நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
பகுத்தறிவு மனப்பான்மை மத பொறுப்பு மற்றும் பொறுப்புக்கான அடிப்படையாகும்.
திருக்குர்ஆன் 6236 வசனங்கள் மனதை மதிக்கவும், பகுத்தறியவும், சிந்திக்கவும், புத்தியின் சக்தியைப் பயன்படுத்தவும் நம்மை அழைக்கிறது. எதற்கும் ஆதாரம் தருமாறு எல்லாம் வல்ல இறைவன் கேட்கிறான்.
💥10- நடைமுறையில் பயன்தரும் வாழ்வியல் சட்டங்கள்:
இஸ்லாத்தின் தார்மீக அமைப்பு மிகவும் உயர்ந்தது மற்றும் பக்குவமானது. தனிநபர் வாழ்வுக்கும் குடும்ப வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் முழுமையாக பயனளிக்கும் விதமாக அது கூறும் வாழ்வியல் சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் அமைந்துள்ளன. எனவே இஸ்லாமிய சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தும் நாடுகளில் குறைவான குற்றங்கள் உள்ளன.
💥11- மறுமை மாயை அல்ல, உண்மை வாழ்க்கை:
ஏனைய மதங்களில் சொர்க்கம் அல்லது நரகம் என்பவை ஒரு மாயையாக கற்பிக்கப்படுகின்றன. சொர்க்கம் அல்லது நரகம் என்பதெல்லாம் இங்கேதான் என்று கூறக் கேட்டிருப்போம். இது ஆன்மீக வாழ்க்கை மட்டுமே என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மறுமை என்பது இன்று எவ்வாறு உடலும் ஆன்மாவும் கலந்து அனுபவிக்கிறோமோ அதேபோல உண்மையான வாஸ்த்தவமான வாழ்க்கையாக இருக்கும். உதாரணமாக ஒரே ஒரு வசனத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்:
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? அதாவது சொர்க்கம் என்பது என்றும் நிலையான இளமையும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த இன்பகர வாழ்வாக அமையும். மாறாக நரகம் என்பது தீரா வேதனைகள் நிறைந்த தண்டனைகள் வழங்கப்படும் இடமாக இருக்கும்.
💥12- இஸ்லாத்தை ஏற்பதால் முந்தைய இறைத்தூதர்களை இழப்பதில்லை
உதாரணமாக நீங்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் இயேசுவை இழக்க மாட்டீர்கள், அதேபோலவே ஒரு யூதராக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மோசேவை இழக்க மாட்டீர்கள். ஆனால் இங்கு அவர் மீதான உங்கள் நம்பிக்கையை நீங்கள் திருத்திக் கொள்வீர்கள்.
இஸ்லாமில் இயேசு, (அவருக்கு சாந்தி உண்டாகட்டும்) இஸ்லாத்தில் அவர் சிறப்பு வாய்ந்த 5 இறைத்தூதர்களில் ஒருவர் (நோவா, ஆபிரகாம், மோசஸ், இயேசு மற்றும் முஹம்மது), அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும். மற்ற தூதர்களுடன் சேர்ந்து, அவர்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள், அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்கள். அவர்களில் யாரும் வணங்கப்படக்கூடாது; அவர்களை அனுப்பிய இறைவனை மட்டுமே நாம் வணங்குகிறோம். இயேசு ஒரு உன்னதமான இறைத்தூதர் என்று நாம் நம்புகிறோம், ஆனால் கடவுள் அல்ல; நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம், அவருடைய உண்மையான போதனைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
=============
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
==========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக