இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 அக்டோபர், 2012

உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?


இக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின் போது நம் பாவபுண்ணியங்களை விசாரித்து  அதன் அடிப்படையில் நமக்கு சொர்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.
இறைவனின் பார்வையில் இது பாவமல்ல!
அந்த அடிப்படையில் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமல்ல என்று இறைவேதங்கள் மூலம் உணரலாம். குறிப்பாக இறுதி இறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
'இறைவிசுவாசிகளே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன” ( திருக்குர்ஆன் 5:1)
'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21) 
ஒரு காலத்திலும் புலால் உண்பதை இறைவன்  தடுத்ததாக எங்கும் நீங்கள் காண முடியாது. உண்மையில் இந்து மதத்தின் சட்ட நூலாகக் கருதப்படும் மனுசாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது

'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'. (ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம்)


'மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'. (5:39)

'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'(5:40)

கொல்வதும் ஓர் கடமை 
ஆக, இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே! ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.

நமது அற்ப அறிவுக்கு ஒருவேளை இது பாவமாகத் தோன்றி கால்நடைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டால் அந்த விலங்கினத்துக்கு எதிராகச் செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடும். உதாரணமாக, ஒரு ஏழை விவசாயி தன் வயதான மாட்டை விற்றால்தான் வேறு காளையை வாங்கமுடியும். தன் தொழிலைத் தொடரவும் முடியும். அதை விற்கச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். ஒரு இறைச்சிக்கடைக் காரர் வாங்கவும் தயாராக உள்ளார். அப்போது .’பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும்? அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா? அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் மனிதாபிமானமா?....... இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனைத்து அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் மறுமையில் இறைவனின தண்டனையும் கிடைக்கும். அது நரக நெருப்பல்லாமல் வேறு என்ன?

சட்டம் இயற்றும் அதிகாரம் நம்மிடம் இல்லை!     
இயற்கையில் செடிகொடிகள் புல்பூண்டு முதல் வளர்வன அனைத்தும் உயிரினங்களே. பலவீனமான உயிரினங்களை பலமான உயிரினங்களுக்கு உணவாக இறைவன் படைத்திருக்கிறான் என்பதை சற்று சிந்தித்தாலே அறியலாம். இந்த ஏற்பாட்டின் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான். புலியிடம் ‘இன்று முதல் நீ புல்லை மட்டும்தான் உண்ணவேண்டும்!’ மானிடம் ‘நீ நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்!’ என்றோ கட்டளையிட நமக்கு அதிகாரமில்லை என்பதை அறிவோம். நம் அற்ப அறிவின் அடிப்படையில் இதில் தலையிட்டு மாற்றங்கள் செய்ய நினைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
2; 216. ….ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
========= 
தொடர்புடைய ஆக்கங்கள்: 
சரி எது? தவறு எது? பாவம் எது ? புண்ணியம் எது? 

http://quranmalar.blogspot.com/2013/02/blog-post_10.html 


7 கருத்துகள்:

  1. தாவரங்கள் அசையும் விலங்கினம் அல்ல. அதுமட்டுமல்ல அதற்க்கு வலியை உணரும் தன்மை கிடையாது. ஒரு மரத்தை வெட்டினால் அது துடி துடித்து அழுவதில்லை !

    மேலும், ஒருவன் உயிர்வாழ ஒரு உணவை உட்கொண்டு ஆகவேண்டும்,. இயக்கையாகவே மனிதனது உடலமைப்பு சைவ உணவை உட்கொள்ளகிறமாதிரியாக தான் படைக்கப்பட்டுள்ளான்

    மேலும், இந்த காய்கனிகளை சமைத்து இறைவனுக்கு நெவேத்தியம் செய்து அது பிரசாதமாக மாற்றுவதன் மூலம் அதிலுள்ள சிறிய அளவில் உள்ள பாவங்களும் நீக்கப்பட்டு முழுமையான ஆன்மீக உணவாக மாறுகிறது !

    இதையே வேதங்கள் சிபாரிசு செய்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா "சைவமே சரி என்பது சரியா?" என்ற கட்டுரையும் இணைத்து வாசியுங்கள்.

      நீக்கு
    2. தாவரங்கள் நகர்வதில்லை என்றாலும் அவைகளும் வலியை உனரக்கூடியவை.

      நீக்கு
  2. ஒரு சமயம், இப்ராஹிம்) கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக கனவு கண்டேன்.

    இவ்வாறு அவர் தனது மகனை பலியிடும் சமயத்தில், அல்லாஹ், நீங்கள் உன் மகனுக்கு பதில் ஒரு ஆட்டு குட்டியை பலியிடுமாறு கூறினார். இவ்வாறு அவரின் தியாகம் இருந்தது.

    இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவெனில், நாமும் கடவுளுக்காக எதையும் தியாகம் செய்ய வேண்டும் என்பதே. அதற்காக ஒவ்வெருவரும் ஒரு ஆட்டுக்குட்டியை பலியிடவேண்டும் என்பதல்ல. ஒருவேளை அவர் தன் மகனை பலியிட்டார் என்றால், நிங்களும் பலியிட தயார? முடியாது.

    ஹிந்து சமயத்திலும், ஒரு சிவ பக்தர், சிவனுக்காக தனது கண்ணை தோண்டி அவருக்கு கொடுத்தார், அது அவரின் பக்திக்கு அடையலாம், அது போல் எல்லோரும் செய்யமுடியாது. ஏனெனில் அவர் அந்தளவுக்கு பக்தியோட இருந்தார்.

    இது போலவே தான் இதுவும், பெரியவர்களின் செய்கைகளை நாமும் காப்பியடிக்க கூடாது. அதன் தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது 'தியாகம்' என்கிற தந்துவதை நாமும் கடைபிடிக்கவேண்டும்..

    “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
    ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகர மாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்த வருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். “நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:100 – 111)

    இந்த நாளிலிருந்துதான் ‘தியாகம் நாள்’ நடைமுறையில் வந்தது. ஆனால் இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகிய இவர்களின் பக்தியை ஆய்வு செய்யவே இறைவன் அவர்கள் இருவருடைய பக்தியை சோதித்தார்.

    மேலும் இப்ராகிம் மகன் காப்பாற்றவும் இந்த தியாகம் முறை உத்தரவிட்டிருந்தார், இதை புனித குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகிறார்:

    குரான் 22:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்;

    உண்மையிலேயே, குர்பா சொல்வது நாம் கடவுளின் பக்தியை உயர்த்தவும், நம்முடைய தியாக உணர்வை பெருக்கவும் தான் உள்ளன.

    பதிலளிநீக்கு
  3. இது தவிர, அது சூரா "Al-Ma'ida" குறிப்பிடப்பட்டுள்ளது மெக்கா எல்லைக்குள், மிகவும் புனிதமான இடத்தில், விலங்குகளின் கொன்றது தடை செய்யப்பட்டுள்ளது என்று:

    5:1. முஃமின்களே! உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.

    புனித வட்டாரங்களில் உள்ள புனிதமான இடத்தில், விலங்குகளின் கொன்றது தடை செய்யப்பட்டுள்ளது . அவைகள்

    1. புனித வட்டாரங்களில் உள்ள மெக்கா
    2. சிறப்பு யாத்திரை ஆடையில் (இஹ்ராம்)


    இது சூரா "Al-Ma'ida" என்று விளக்கினார்

    5:95. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்.


    இவ்வாறு மிருக வதையை ஒரு பாவம் எனவே, அதை மெக்கா போன்ற பரிசுத்த இடத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. குர்ஆன் – 2 விதமான மக்களை பத்தி சொல்கிறது. அவை :
    :
    1. பௌதீக உலக சுக பொருள்களில் நாட்டம் உள்ள மக்கள்

    2. எல்லாம் கைவிட்டு கடவுளின் அன்பைக் பெரும் மக்கள்

    குரான் வசனங்கள் சொல்கிறது..

    குரான் 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்"

    குரான் 3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு;

    குரான் 3:152 சொல்கிறது....
    ' உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;"

    .இப்படி உலக சுக- பொருள் மற்றும் பக்தி ஆகிய இரண்டையுமே கூறுகிறார்.

    இதில் எது வேண்டுமென தீர்மாணிப்பது நீங்களே தான். அவர் இந்த வசனங்களில் இரண்டையுமே எடுக்க சொல்லவில்லை.

    அடுத்து வசனம் 22:37 பார்த்தால் நீங்கள் கொடுக்கும் மாமிசம் என்னை அடையாது என தெளிவாக கூறிவிட்டார்.

    அப்புறம் எதற்க்கு அல்லாஹ்வின் பெயரால் குர்பானி செய்து பலியிடுறீங்க!

    எனவே உங்களுக்கு எதுவேணுமென நீங்களே முடிவு செய்யுங்கள், இதில் எது வேனுமானாலும் தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பமே!

    அல்லாஹவின் பக்தி வேண்டுமா?
    புலனின்பம் வேண்டுமா ?

    என்பதை உங்கள் விருப்பம்!

    நீங்கள் இப்படி தான் இருக்கவேண்டுமென கண்டிப்பாக கூறவில்லை. அவர் நமது சுதந்திரத்திலேயே இதை விட்டு விட்டார்...

    எனவே முடிவு உங்கள் கையில் தான்

    பதிலளிநீக்கு
  5. குரானில் மக்களை சாப்பிட அனுமதிக்கிறது, ஆனால் அவைகள் மனிதனை படிப்படியாக புலன் அசைகளிலிருந்து விடுவிக்கத்தான் இனத்தை நான் மேலே கூறுயதிலிருந்து அறியலாம்..

    எனவே, அவர் இருந்த காலகட்ட மக்கள் அப்படி, உடனே நீங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறினால் கஷ்டம். அதனால் தான் இப்படி படிப்படியாக சொல்கிறார்..

    இப்படி தான் இந்து மதத்திலும் சொல்கிறது ..

    தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை தேவர்களுக்கு பலியிட்டு பின்பு சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனுது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதே நல்லது.


    எனவே, முடிவு நீங்கள் தான் எடுக்கவேண்டும்.. இந்த மாமிசங்களை என்னை அடையாது என்று இறைவன் சொல்கிறார்... அப்புறம் ?


    அது தானே நான் மேலே இரண்டுவித பக்தி நிலைகளை பற்றி கூறினேன். இதில் எது வேனுமானாலும் தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பமே!

    அல்லாஹவின் பக்தி வேண்டுமா?
    புலனின்பம் வேண்டுமா ?

    பதிலளிநீக்கு