இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஆணும் பெண்ணும் உறவாட தடைகள் எதற்கு?

Related image இன்று ஆண்களும் பெண்களும் – குறிப்பாக இளைஞர்கள் -சுதந்திரம்விடுதலைபெண் விடுதலை மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிரச்சாரங்களால் கவரப்படுகிறார்கள். ஆடைக்குறைப்பே பெண் விடுதலைக்கும் முற்போக்குக்கும்  அளவுகோலாக பார்க்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘ஆணும் பெண்ணும் காதலால் காமத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாமே! கட்டுப்பாடுகள் எதற்கு?’ என்று சிந்திப்போர் அதிகரித்து வருகிறார்கள்.
கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திரம் – அதாவது மனம்போன போக்கும் தான்தோன்றித்தனமும் - எந்த ஒன்றையும் பாழ்படுத்தவே செய்யும் என்பது திண்ணம். அது ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரியே. உதாரணமாக கால்பந்தாட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . வரையறுக்கப்பட்ட ஒரு விளையாட்டு எல்லையும் அதன் விதிகளும் இருந்தால்தான் அது ஒரு அர்த்தமுள்ள விளையாட்டாக அமையும். சற்று கற்பனை செய்து பாருங்கள்விளையாட்டுத் தளத்திற்கான எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை,  அதற்கான விதிகளும் வரையறுக்கப்படவில்லைஆட்டக்காரர்கள் அவரவர் நினைத்தமாதிரி ஆடலாம் என்ற நிலை இருந்தால் கால்பந்து விளையாட்டை ஆடத்தான் முடியுமாஇல்லைஇரசிக்கத்தான் முடியுமா?

கட்டுப்பாடுகளே மகிழ்ச்சிக்கு அடிப்படை
இவ்வாறிருக்க, வாழ்கையின் மிக முக்கியமான விடயங்களில் ஒழுங்கையும் வரையறைகளையும் கட்டுப்பாட்டையும் பேணாமல் இருக்க முடியுமா? அந்த ஒழுங்கைப் பேணுவதற்கான வழிகாட்டுதல்தான் இஸ்லாம் என்ற இறை தந்த வாழ்வியல் கொள்கை. மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் பேணவேண்டிய கட்டுப்பாடுகளை இஸ்லாம் கற்றுத் தருவதை நீங்கள் காணலாம். அந்த வகையில் இஸ்லாம் வாழ்க்கையில் பல விஷயங்களை தடை செய்கிறது. இந்த தடைகள்தான் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குகின்றன என்பதை ஆராய்வோர் அறியலாம்.
உண்மையில் இறைவன் இஸ்லாம் என்ற தன் வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியூட்டும் காரியங்களை அனுமதித்து மகிழ்ச்சியைக் கெடுக்கும் காரியங்களை தடை செய்கிறான்.  உதாரணமாக பொருளீட்டுவது என்பது வாழ்க்கையின் அத்தியாவசியமான பாகமாகும். நேர்மையான வியாபாரம் என்பது  அதன் ஆரோக்கியமான வடிவமாகும். வட்டி என்பது அதனைக் களங்கப்படுத்தும் கறையாகும். அடுத்தவரின் இரத்தத்தை குடித்து கொழுப்பது வட்டி. இஸ்லாம் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளது.
ஆண்-பெண் உறவுகளை ஆரோக்கியமாக்கும் கட்டுப்பாடுகள்  
பாலியல் மற்றும் காதலின் ஆரோக்கியமான வடிவமே திருமணம் என்பது. விபச்சாரமும் தகாத பாலுறவுத் தொடர்புகளும் அதன் களங்கம் நிறைந்த வடிவமாகும். இவற்றுக்குத் தடை விதித்து திருமணம் மூலம் பாலியல் மற்றும் காதல் தேவைகளை நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம்.   
 ஆண்-பெண் ஒருவரோடொருவர் பழகுவதற்கும்   உறவுகொள்வதற்கும்  உடை உடுப்பதற்கும் அவர்களுக்குக் கட்டுப்பாடற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் அங்கு என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். வேட்டைக்காரனாக விளங்கும் ஆண் அங்கு தன் நாட்டத்தைத் தீர்த்துக்கொள்ளவும் நழுவிச் செல்லவுமே முயலுவான். எனவே அந்த சுதந்திரத்தை வரம்பிட்டு கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.  அப்போதுதான் அந்த சுதந்திரம் தனிநபருக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் வண்ணம் அமையும்.  அதைத்தான் இஸ்லாம் திருமணம் என்ற புனித ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள அனுமதித்து, அதற்கப்பாற்பட்ட அனைத்து விதமான பாலியல் அத்துமீறல்களையும் தடை செய்கிறது. மட்டுமல்ல அப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கு இட்டுச்செல்லும் வழிகளையும் முன்னெச்சரிக்கையோடு தடை செய்கிறது.
= மேலும்விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாகஅது மானங்கெட்ட செயலாகவும்மிகத் தீய வழியாகவும் இருக்கிறது.  (திருக்குர்ஆன் 17:32)

வரம்பில்லா சுதந்திரத்தின் விளைவுகள்:
ஆணும் பெண்ணும் வரம்புகளின்றி கலந்து பழகலாம் என்று கூறப்படும் 'சுதந்திரமானதுஆணுக்கு வழங்கப்படும் மோசடி செய்வதற்கான லைசென்ஸ் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆண் - பெண் உடற்கூறு மற்றும் இயற்கை அமைப்பு பின்னணிகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் இந்த சுதந்திரமானது முற்றிலும் இயற்கைக்கு எதிரானது. மீளமுடியாத விபரீதங்களுக்கு இட்டுச் செல்வது. மாறாக பாலியல் உறவு மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஆணையும் பெண்ணையும் பொறுப்பேற்கச் செய்யும் ஒப்பந்தமே திருமணம் என்பது. அப்படிப்பட்ட
ஒப்பந்தம் ஏதும் செய்யாமல் ஆணும் பெண்ணும் மனோ இச்சைக்கு உட்பட்டு உடலுறவில் ஈடுபடுவது அந்த இருவரையும்  அவர்களைச் சார்ந்தவர்களையும் எந்த நேரத்திலும் விபரீதங்களுக்கு உள்ளாக்கி விடும் என்பதை நாம் நன்கறிவோம்.  சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும்  சேர்ந்து அனுபவித்த உடலுறவு இன்பத்தின் விளைவுகளை இறுதியில் பெண் தன்னந்தனியாளாக சுமக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறாள். நிலைமை ஆணுக்கு எதிராகவும் மாற வாய்ப்புண்டு. இதன் மூலம் அவன் அந்தப் பெண்ணால் பிளாக்மெயில் செய்யப்படவும் அது வழிவகுக்கும்.  இதற்குக் காரணம் ஒப்பந்தம் செய்யாமல் உண்டான உடலுறவே!
பாலியல் விபரீதங்கள் நேராமல் இருக்க பார்வைகளைக் கட்டுபடுத்தி கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று முதலில் ஆண்களை நோக்கித்தான் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறான் இறைவன். பிறகுதான் பெண்களுக்கான கற்பைப் பேணும் கட்டளை என்பதை கவனியுங்கள்:
 (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம்அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவேஅவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாகஅல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும்தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்....
 (திருக்குர்ஆன் 24:30,31).

4 கருத்துகள்:

 1. தொடரட்டும் உங்கள் சீரிய மார்க்கப் பணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மக்கள் திருந்துவதற்கு ஒரு தூண்டுகோலாக இது அமையும் வண்ணம் அல்லாஹ் ஆக்குவானாக. ஆமீன்.

   நீக்கு
  2. ஆமீன் இறையச்சம் உள்ளவர்களுக்கு இப்பதிவின்
   உபதேசம் பயனளிக்கட்டும்
   மிகத்தெளிவான உபதேசம்
   (ஜஸாக்கல்லாஹு ஹைரன்)

   நீக்கு
 2. தொடரட்டும் உங்கள் சீரிய மார்க்கப் பணி

  பதிலளிநீக்கு