இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2025

ஆயுத விற்பனையாளர்களின் அதிபயங்கவாதம்!

 


ஆயுத விற்பனையாளர்களின் அதிபயங்கவாதம்!

நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள் .. ஒரு ஸ்கூட்டர் அல்லது  ஏதேனும் ஒரு வாகனத் தொழிற்சாலை தனது தயாரிப்பை மார்கெட்டில் விற்றோழித்தால்தான் அதனால் தனது பிழைப்பை நடத்தமுடியும். அதற்காக என்ன செய்யும்? பைனான்ஸ் கம்பெனிகள் மூலம் தவணைமுறைகுறைந்த EMI போன்றவை அறிமுகப்படுத்தி அந்தத் தயாரிப்பை மக்கள் வாங்க வழிவகை செய்து மார்கெட்டிங் செய்யும். அதாவது மக்களை தங்கள் தயாரிப்பை எப்படியாவது வாங்க வைக்கும் தந்திரங்களைக் கையாளும்.  ஆனால் அவர்களையெல்லாம் பலமடங்கு மீறும் வண்ணம் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைகளை சற்று யோசித்துப்பாருங்கள். அவர்களின் தயாரிப்புகளை நீங்களும் நானுமா வாங்க முடியும்வேறு யார்அருகருகே உள்ள நாடுகள்தான் இவற்றை வாங்க முடியும். வாங்கியாக வேண்டும்! ஆம்வாங்காவிட்டால் அவற்றை ஆள்வோர் ஆட்சியில் தொடர முடியாது என்பதுதான் உண்மை! பலவந்தமாகவும் தந்திரமாகவும் ஆயுதங்கள் அந்நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. வேறு வழியின்றி அந்நாடுகள் போர் செய்யும் நிர்பந்ததுக்கு ஆளாகின்றன.  
ஆம் அன்பர்களேஅதற்கேற்றவாறு உலகளாவிய மட்டத்தில் காய்கள் நகர்த்தப் படுகின்றன. எங்கெல்லாம் எப்படியெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் மக்களுக்கு இடையே இனம், மதம், நிறம் இவற்றின் பெயரால் வெறுப்பு விதைக்கப்படுகிறது. சண்டைகள் மூட்டப்படுகின்றன. மீடியாக்களும் கைக்கூலிகளும் பெரிய அளவில் சம்பளம் கொடுத்து முடுக்கி விடப்படுகிறார்கள். பாமர மக்களை ஏமாற்றும் பெரும்பெரும் நாடகங்கள் அரங்கேறுகின்றன! பாமரர்களின் அப்பாவி உயிர்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! என்றுதான் உலகம் உணருமோ இந்தக் கொடூரத்தை?

போர்கள் என்பவை சாதாரண மக்களின் வாழ்வை கலவரத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கி அவர்களை பீடிக்கும் ஒரு பேரழிவாகும். போருக்கு உள்ளாகும் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அந்நாட்டு வளங்களையும் குறுகிய காலத்தில் கறந்து அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கும் கொடூர செயலாகும்.

பணமுதலைகளுக்கு தீனி 
ஆனால் அதே போர், உலகில் சில பணமுதலைகளுக்கு லட்சக்கணக்கில் டாலர்கள் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு பெருவணிகமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதில் மிக முக்கிய பங்கு வகிப்பவைதான் ஆயுதத் தொழில்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுரண்டல் மாபியாக்கள்!
இப்படியும் 
ஆயுத வணிகம் உலகின் மாபெரும் தொழில்!
உலகில் ஒவ்வொரு வருடமும் ஆயுதங்களுக்காக சுமார் $2 trillion (இரண்டு டிரில்லியன் டாலர்கள்) செலவாகின்றன. இது கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்ற துறைகள் சேர்த்துச் செய்தாலும் குறைவாகவே இருக்கும்.
பெரும் ஆயுத நிறுவனங்கள்:
- Lockheed Martin (USA)
- Raytheon Technologies (USA)
- BAE Systems (UK)
- Northrop Grumman (USA)
- Thales Group (France)
இந்த நிறுவனங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாகும் போர்கள், கலவரங்கள், உள்நாட்டு மோதல்கள் போன்றவற்றிலிருந்து லாபம் தேடும் கம்பெனிகளாக உள்ளன.


அரசியல்வாதிகள்
ஆயுத விற்பனை முதலீட்டாளர்கள்

இந்த தொழில்கள், அரசியல்வாதிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளன. பல முக்கிய நாட்டு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், இந்த கம்பெனிகளில் உத்தியோகபூர்வமாக பணிபுரிகின்றனர்.
உதாரணமாக:
- Dick Cheney–
அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி, ஹலிபர்டன் என்ற ஆயுத, எண்ணெய் ஒப்பந்த நிறுவனத்தின் CEO.
-
பல அமெரிக்க காங்கிரஸ்காரர்கள் – Lockheed Martin மற்றும் Raytheon-இல் முதலீடு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், போர்கள் நடக்க வேண்டும், இடையூறுகள் ஏற்பட வேண்டும் என்பதற்கே திட்டமிட்டு சூழ்ச்சிகள் நடக்கின்றன.
போர் என்பது மெகா வியாபாரம்!
Iraq War (2003):
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் (mass destruction weapons) இருப்பதாக கூறி போர் ஆரம்பித்தது. ஆயுத உற்பத்தியாளர்களுக்கு அதனால் **$138 billion** வருமானம் ஏற்பட்டது.
-Afghanistan War (2001–2021):** 20
ஆண்டுகள் நீடித்த இந்த போரால் மட்டும், Lockheed Martin உள்ளிட்ட நிறுவனங்கள் **$2 trillion** மொத்த பில்லிங் செய்தன.
**
சிறிய நாடுகள் வாடிக்கையாளர்களாக மாறுதல்**
இஸ்ரேல் பஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடத்தி, அதை பாதுகாப்பு நடவடிக்கையென நியாயப்படுத்தி, நவீன ஆயுதங்களை சோதனை செய்து பிறகு விற்பனை செய்கிறது.
India–Pakistan:**
இரு நாடுகளும் ஆயுத ரேஸில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இருபக்கத்திலும் ஆயுதம் விற்று லாபம் சம்பாதிக்கின்றன.

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? என்பதற்கான விடையும் நீங்கள் இங்கே காணமுடியும்.
இஸ்லாம் அனைத்து மனிதகுலமும் ஒன்றே என்ற அடிப்படையில் உலகை ஒருங்கிணைத்து வருகிறது. ஆனால் உலக மக்களை பிரித்தாள நினைக்கும் இந்தக் கொடூரர்களுக்கு இஸ்லாம் பேரிடியாக உள்ளது!
இஸ்லாமில் அநியாயமான உயிர் அழிப்பு பாவம் என்பது மட்டுமல்ல, மனிதர்களை இடையூறு விளைவிக்கக்கூடிய எந்த ஒரு செயலும் இறைவனிடம் பாவமாகப் பதிவு செய்யப்படும்..
ஒரு உயிரைக் கொன்றவனது பாவம், மொத்த மனித குலத்தையே கொன்றதற்குச் சமம்.” (குர்ஆன் 5:32)


இவற்றுக்கான தீர்வுகள் என்ன?
கீழ்கண்டவை தீர்வுகளாக மொழியப்பட்டாலும் திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இவை.  எதுவும் நடைமுறைக்கு வராது என்பது உறுதி!
1. **
உலக அளவில் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாடுகள்:** ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் Arms Trade Treaty (ATT) போன்று, அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டு கடைபிடிக்க வேண்டும்.
2.
ஆயுத லாபத்தில் நேரடி நிதி முறைகள் தடையூட்டப்பட வேண்டும்: அரசியல்வாதிகள் மற்றும் ஆயுத நிறுவனங்களுக்கு இடையிலான நிதிச் சந்தைகளை வெளிப்படையாகச் செய்ய வேண்டும்.
3. **
மக்கள் விழிப்புணர்வு: மக்களின் பணம் போர்களுக்கு செலவாகாமல், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவாக வேண்டும் என்ற புரிதல் ஏற்பட வேண்டும்.

இஸ்லாம் ஒன்றே தீர்வு!

1.. அநீதிக்கு எதிரான உலகளாவிய மக்கள் இயக்கமாக இஸ்லாம் உருவெடுக்கும்போது அநீதியாளர்கள் அடையாளம் காணப்பட்டு மக்களால் ஒடுக்கப்படுவார்கள்.

2. அல்லது அநீதி செய்யும் மக்களின் மனமாற்றம் மூலமாகவும் இதற்கு ஒரு தீர்வு உண்டாகலாம்.

3. மேற்கண்டவை எதுவும் நடக்காவிட்டால் இறுதித்தீர்ப்பு நாள் அன்று அநீதியாளர்களுக்கும் அநீதிக்கு உள்ளானவர்களுக்கும் இடையே உண்டாகும் இறைவனின் நியாயத் தீர்ப்பு மூலம் கண்டிப்பாக முழுமையான தீர்வு உண்டாகும்!

=========================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக